“நான் ஒரு ‘அனார்கிஸ்ட் “- என்றால் என்ன ஆகும் ..?

“நான் ஒரு ‘அனார்கிஸ்ட்’ தான் – நான் ஒரு அராஜகவாதி என்று அழைக்கப்படுவதை ஏற்கிறேன்” என்று ஒரு அரசியல்வாதி, அதுவும் முதலமைச்சர் பதவியில் இருப்பவர் சொன்னால் என்ன விளைவு ஏற்படும் ..? auto driver who slapped   இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நமக்குப் பெற்றுத்தர எத்தனை எத்தனை பேர் அடி பட்டார்கள், உதை பட்டார்கள், செக்கிழுத்தார்கள், வெஞ்சிறையில் அடைக்கப்பட்டார்கள், அந்தமானுக்கு அனுப்பப்பட்டார்கள், தூக்கில் தொங்க விடப்பட்டார்கள் …? பிரிந்த குடும்பங்கள் எத்தனை ? தகப்பனை இழந்து வாடிய குழந்தைகள், கணவனை இழந்து தவித்த பெண்கள், பிள்ளைகளை இழந்து தவித்த பெற்றோர்கள் – சுதந்திரப் போராட்டத்தின் அவலங்களை இருந்து பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள் இன்று இன்னும் மிகச்சிலரே மிச்சம் இருக்கிறார்கள். அதில் என் குடும்பமும் ஒன்று என்கிற உரிமையோடு இதை எழுதுகிறேன். “கண்ணீர் விட்டோ வளர்த்தோம் -சர்வேசா இப்பயிரை, கருகத் திருவுளமோ…?” என்று கதறி அழுதவர் சுதந்திரத்தைப் பார்க்காமலே அற்ப ஆயுளில் போய் விட்டார். அளப்பரிய இழப்புகளுக்குப் பிறகு பெற்ற இந்த சுதந்திரத்தை கேலி செய்து, மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதிகள் தந்து, ஊழலுக்கு எதிராக 74 வயதில் புறப்பட்ட ஒரு காந்தீயவாதியின் அஹிம்சை போராட்டத்திற்கு கிடைத்த மக்களின் பேராதரவை தன் பக்கம் திருடிக்கொண்டு – சத்தியசந்தனாக, அரிச்சந்திரனாக, காந்தீயவாதியாக நாடகமாடி அதிகாரத்திற்கு வந்ததும் “நான் ஒரு அராஜகவாதி தான்” என்று கூறிய வேடதாரி மீது – தன் கோபத்தை வெளிப்படுத்த – தனக்குத் தெரிந்த ஒரே வழியாக – தெரிந்ததைச் செய்த ஒரு கோபக்கார ஆட்டோ ஓட்டுநர் .. “ஏமாற்றப்பட்டு விட்டோமே” என்கிற விரக்தி அவர் முகத்தில் அப்படியே தெரிகிறது… அறைந்தவர் மீது கொலைமுயற்சி வழக்கு போட முடியாது. வேறு என்ன செய்வார்கள் அவரை…? “ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாமல், சாதாரண காயம் விளைவிப்பவருக்கு” இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code)கூறும் தண்டனை – Section 323 in the Indian Penal Code, 1860 – 323. Punishment for voluntarily causing hurt- whoever, except in the case provided for by section 334, voluntarily causes hurt, shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine which may extend to one thousand rupees,  or with both. ஊரை ஏய்க்கும் அயோக்கிய அரசியல்வாதிகள் டெல்லியில் மட்டுமல்ல – விஷக்கிருமிகளாக நம் நாடு முழுவதும் பரவி இருக்கிறார்கள். இன்றைய சம்பவத்தைப் பார்த்தாவது அவர்கள் திருந்துவது – அவர்களுக்கும், இந்த நாட்டுக்கும் – நல்லது… பெயர் தெரியாத அந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். பின்குறிப்பு – வீண் ஆசை...இதுவெல்லாம் அவர்களுக்கு எங்கே உறைக்கப்போகிறது ..? மீண்டும் நாடகமாடுவார்கள் – வெட்கங்கெட்டவர்கள். “இன்னொரு கன்னத்தையும் காட்டுகிறேன் -அறை” என்பார்கள்....இதை வைத்து இன்னும் நாலு ஓட்டு கிடைக்குமா என்று பார்ப்பார்கள்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to “நான் ஒரு ‘அனார்கிஸ்ட் “- என்றால் என்ன ஆகும் ..?

 1. Rajagopalan Rangarajan சொல்கிறார்:

  என்ன இருந்தாலும் ஆட்டோக்காரர் செய்தது தவறு தான்.
  அவர் தன் கையை ஏன் உபயோகித்தார் ?
  ஆப் “சின்னத்தை” அல்லவா பயன்படுத்தி இருக்க வேண்டும் !!!

  • bandhu சொல்கிறார்:

   அட.. அட.. என்ன அருமையான கமெண்ட்! அதில்தான் அடித்திருக்கணும் அவரை!

  • Ganpat சொல்கிறார்:

   நான் செய்ய நினைத்ததை “அவர்” செய்துவிட்டார்.!
   நான் சொல்ல நினைத்ததை “இவர்” சொல்லிவிட்டார்.!!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கண்பத்,

    ஆக மொத்தம் – நிறைய பேர் செயலில் இறங்க
    துடித்துக் கொண்டிருக்கிறீர்கள் …..!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 2. reader சொல்கிறார்:

  சார் நீங்க நடுநிலைமையா இல்ல மோதி ஆதரவாளரா?

  • Ganpat சொல்கிறார்:

   நண்பரே!நாமே தேர்வாளராக இருக்கும் ஒரு போட்டியில் “நடுநிலைமை” என்பதின் பொருள் என்ன?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே, (Reader)_

   நீங்களும் என் இடுகைகளை இவ்வளவு
   நாட்களாகப் படிக்கிறீர்களே – நீங்களே தான்
   சொல்லுங்களேன்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. nparamasivam1951 சொல்கிறார்:

  பதிவு அதற்கான கமென்ட், இரண்டும் அருமை.

 4. maasianna சொல்கிறார்:

  very good and correct article

 5. GOPALASAMY சொல்கிறார்:

  What Sri. Ganpath said about neutrality is 100 % correct. Kejri Vaal is having hidden agenda.
  We have to wait and see whether this time it work out or not. If somebody beats him, he ios immediately blaming Modi. Funny.

 6. Bagawanjee KA சொல்கிறார்:

  கேஜ்ரிவாலை விட மோசமான அரசியல்வாதிகள் இந்த அறைக்கூட வாங்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் ,அவர்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க !
  த ம +1

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பகவான் ஜி,

   அடையாளம் காட்டுங்களேன்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. Srini சொல்கிறார்:

  SLAP GATE tweets…. yesterday immediately after AK got the SLAP, tweeter was flooded on a handle name #SLAP GATE. some funny comments by people are collected for this blog readers to enjoy.

  Seems AK has a long running slap bet 🙂

  Dear #AAPtards I know media is no more interested in @ArvindKejriwal . But that does not give you the right to slap him again and again.

  The slap to Kejriwal now has become more imp than news about video of CRPF jawan video pleading for help

  Modi, Ambani, and Obama combindly hired a Auto driver to slap

  Any political party can now use the opportunity to get their worker to slap Kejriwal. Kejriwal will blame only one party.

  Whenever Kejri is short of media coverage, publicity he enacts the slap or ink dramas.100% MATCH FIXING!

  No publicity for #Keju, so New technique slap me so that I cn get some Tv Space.

  Is there any Android game where people can slap Kejriwal and earn points?

  Dear @khAAPYogendra ji, from next time let’s have two people slap Arvind ji simultaneously.
  These single slaps and punches have lost sheen.

  Arvind Kejriwal is leading Sharad Pawar by 1 slap.” 2-1

  Volunteers, please do not panic. Kejriwalji’s slappers will quit after the 49th slap.

  If you take a Autowallah for a ride and refuse to pay, what will he do? He will slap.

  I hate “two-faced” people. It’s so hard to decide which face to slap first.

  Every time Kejriwal thinks he needs media attention he gets himself slapped; slap him out in the polls!

  2 to 3 lies and a slap a day keeps our Kejri happy & healthy

  Looks like Nirmal Baba has told Kejriwal he’ll win one LS seat per slap.” Bwaahh 🙂

  what better way to gain TV coverage, than get a friendly slap on the cheek! Wah, #AAP wah! Maan gaye Kejri natak!

  ENJOOOOOOOY !!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Srini,

   Excellent collections….
   This gives a very good comic effect …
   Somehow … many urbanites still take AK seriously –
   to be specific youngsters from Bangalore…

   Thank you.

   -with best wishes,
   Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.