யாருக்கு ஓட்டு -? மோடி .., பாஜக .., அல்லது ….? (பகுதி-1)

parliment

துவக்கத்திலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன்.
நான் ஏற்கெனவே பலமுறை இந்த தளத்தில் சொன்னது
போல் – நான் எந்த கட்சியையும் சேர்ந்தவனல்ல..
சார்ந்திருக்க எனக்கு விருப்பமும் இல்லை.

எந்த கட்சியையும் சாராதிருந்தால் தான் எந்த விஷயத்திலும்
சுதந்திரமாக கருத்து சொல்ல முடியும் என்பது என்
அபிப்பிராயம். இல்லையேல் சார்ந்திருக்கும் கட்சியின்
தவறான முடிவுகள், செயல்களுக்கெல்லாம் அநாவசியமாக
நாம் வக்காலத்து வாங்க வேண்டி இருக்கும்.

தேர்தல்கள் வரும்போது, எதாவது ஒரு கட்சியை,
அல்லது கட்சி சார்ந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க
வேண்டிய அவசியம் வருகிறது. அப்போது எதாவது
சார்பு நிலை எடுத்து தான் ஆக வேண்டும். ஆனால் –
என்னைப் பொருத்த வரை, அந்த சார்பு நிலை அந்த தேர்தலோடு
முடிந்து விடும்.

இப்போது நான் எழுதுவதும் அந்த நிலையில் தான்.
இன்னொரு விஷயம். இந்த ‘விமரிசனம்’வலைத்தளத்தின்
மூலமாக, எந்தக் கருத்தையும் யார் மீதும் நான்
திணிக்க விரும்பவில்லை. என் பார்வையில்,
என் கோணத்தில், எனக்கு சரியென்று தோன்றுவதை
இங்கு வெளிப்படையாகக் கூறுகிறேன். அவ்வளவு தான்.

ஒரு விதத்தில் நான் கொடுத்து வைத்தவன். இந்த வலைத்தள நண்பர்கள்
சுயேச்சையாக, அற்புதமாக சிந்திக்கத் தெரிந்தவர்கள். அதை நான்
நன்கு உணர்ந்துள்ளேன். இந்த தளத்தில் பல இடுகைகளுக்கு வரும்
பின்னூட்டங்களில் நீங்களும் அதைக் காணலாம். இங்கே நான் சும்மா
எதாவது கதை விட்டு விட்டு போக முடியாது. இங்கு பின்னூட்டம் எதுவும்  போடாமலே, தங்களுக்குள் ஒரு புன்முறுவலுடன் நகரும் பல அறிவாளிகளையும்
நான் உணர்கிறேன். இந்த தளத்தை – பல கோணங்களில் கருத்துக்களை
பரிமாறிக்கொள்ளும் ஒரு சிந்தனைக்களமாகவே நான் தொடர்ந்து பராமரிக்க விரும்புகிறேன்.

இந்த அறிமுகத்துடன் – வருகின்ற பாராளுமன்ற தேர்தல்களைப்
பற்றிய கருத்துப் பரிமாற்றங்களை -விவாதங்களை
மேற்கொள்ளும் விதமாக இந்த இடுகையைத் துவங்குகிறேன்.
நல்லதொரு விவாதக் களமாக இது உருவாக நண்பர்கள்
உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவையைப் பொருத்து, இந்த இடுகை
3-4 பகுதிகள் வரை தொடரலாம்.

முதலில் என் கருத்து –

இருப்பவற்றில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்ய –
முதலில் எது எதை ஒதுக்கலாம் என்று தீர்மானிப்பது ஒரு வழி.
முதல் பார்வையிலேயே, இவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை
என்று தோன்றுவதை ஒதுக்கி விடலாம்.

கடந்த 2 ஆண்டுகளாக, தொடர்ந்து இந்த தளத்தில் –
மத்தியில் ஆளும்/ஆண்ட காங்கிரஸ் மற்றும் திமுக சம்பந்தப்பட்ட
ஊழல்களைப் பற்றி பலதடவைகள், மிகத்தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.
காமன்வெல்த் விளையாட்டு,
ஆதர்ஷ் அடுக்குமாடி கட்டிடம்,
2ஜி ஸ்பெக்ட்ரம்,
நிலக்கரி சுரங்க ஏலம், ஹெலிகாப்டர்,
வாத்ரா நில விவகாரங்கள்
என்று எக்கச்சக்கமான ஊழல்கள் வெளி வந்திருக்கின்றன. இவற்றைக்
குறித்து, சம்பந்தப்பட்ட கட்சிகள் எந்த விதத்திலும் வெட்கப்பட்டதாகவோ,
வேதனைப்பட்ட்தாகவோ தெரியவில்லை. ஊழல் ராஜாக்களுக்கு
தாரை தம்பட்டைகளுடன் விமான நிலையத்தில் “ராஜ”வரவேற்பு கொடுத்த
சம்பவங்கள் தான் மிஞ்சின. மேலும், ஈழ்த்தமிழர்கள் விஷயத்தில்
இவர்கள் செய்த பாவத்திற்கு மன்னிப்பே இருக்க முடியாது.

எனவே – எந்தவித தயக்கமும் இன்றி -முதலிலேயே
ஒதுக்கப்பட வேண்டிய கட்சிகள் காங்கிரசும், திமுக வும்.

மத்திய அரசை நிர்வாகம் செய்ய என்று பார்த்தால்,
நம் நாட்டைப் பொருத்தவரை 3 வித choice களை
நாம் ஏற்கெனவே அனுபவித்துப் பார்த்திருக்கிறோம்.

1)காங்கிரஸ் கூட்டணி (UPA),
2)பாஜக கூட்டணி (NDA),
3)இதர கட்சிகளின் -மூன்றாவது கூட்டணி(3rd front).

துவக்கத்திலேயே காங்கிரஸை வெளியேற்றி விட்டால்,
மீதி இருப்பது பாஜக கூட்டணியும், இதர கட்சிகளின் கூட்டணியும் தான்.

இந்த முறை, இதர கட்சிகள் ஒரே அணியில் இல்லை.
பிரிந்திருக்கின்றன.
எனவே மூன்றாவது மற்றும் நான்காவது கூட்டணிகள்
(3rd and 4th fronts) உருவாகின்றன.

(1) கம்யூனிஸ்டுகளும் – மம்தா பானர்ஜியின் த்ரினமூல் கட்சியும்,
(2) முலாயம் சிங்கின் சமாஜ்வாதியும் – மாயாவதியின் BSPயும்,
(3) YSR காங்கிரஸ் கட்சியும் – சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசமும்
ஒரே அணியில் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் இந்த நிலை.

காங்கிரஸ், பாஜக தவிர்த்த மற்ற கட்சிகள் இவ்வாறு
3வது மற்றும் 4வது அணியாகப் பிரிவதால் – இவற்றைக் கொண்டு
மத்திய அரசு அமைந்தால், அது மிக மிக பலவீனமாகவே
இருக்கும்.

அத்தகைய ஒரு அரசு அமையத்தகுந்த சூழலை வேண்டுமென்றே
உருவாக்கி விட்டு, அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு –
கூடிய விரைவில் அத்தகைய அரசை கவிழ்த்து விட்டு,
ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இன்னொரு
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே –
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் நிலை, முயற்சி –
எல்லாம்.

எனவே -3வது அல்லது 4வது கூட்டணிகளின்
ஆட்சி என்கிற யோசனை எந்தவித நம்பிக்கையையும் கொடுக்கவில்லை.

மிஞ்சி இருப்பது …?
பாஜக கூட்டணி ஒன்று தான்.
ஆனால், பாஜக அனைத்து மாநிலங்களிலும் பரவலாக இல்லை.
பல மாநிலங்களில் – அதன் வாசனையே இல்லை.
சில மாநிலங்களில் அது பெயரளவிற்கே இருக்கிறது.
சில மாநிலங்களில், அது கூட்டு சேர்ந்துள்ள கட்சிகளின் பலத்தால்,
ஓரளவு நம்பிக்கை தருகிறது.
சில மாநிலங்களில் மட்டும் நல்ல பலத்துடன் விளங்குகிறது.

இதற்குள்ளாகவே, தொலைக்காட்சிகளிலும்,
செய்தி ஊடகங்களிலும், ஏகப்பட்ட கருத்து கணிப்புகள் வந்து விட்டன.

அனைத்து கருத்து கணிப்புகளும், பாஜக கூட்டணி
முதலிடம் வகிக்கும் என்று சொல்கின்றனவே தவிர
பாஜக கூட்டணி – மத்தியில் ஆட்சியமைக்க தேவைப்படும்
குறைந்தபட்ச எண்ணிக்கையான 272-ஐ பெற வாய்ப்பில்லை
என்றே கூறுகின்றன.

உயர்ந்த பட்ச கணிப்பாக, பாஜக தனியே 210 இடங்கள் வரை
பெறக்கூடும் என்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து
(NDA ) சுமார் 250 இடங்கள் வரை பெறக்கூடும் என்றுமே
தெரிவிக்கின்றன.

(பகுதி-2-ல் மேற்கொண்டு தொடருகிறேன்.)

பின் குறிப்பு –
நண்பர்கள் தங்கள் கருத்துக்களையும், எதிர்பார்ப்புகளையும்
பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம். ஒரு சுவையான,
விருவிருப்பான, ஆரோக்கியமான விவாதத்தை இங்கு எதிர்பார்க்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to யாருக்கு ஓட்டு -? மோடி .., பாஜக .., அல்லது ….? (பகுதி-1)

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  முதலில் ஊழல் என்பதை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்பதே நாம் கடந்த பல ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருப்பது. ஏனெனில் யாரை மாற்றி ஆட்சி பொருப்பில் அமர்த்தினாலும் “தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என்ற பறந்த மனப்பான்மைதான்! மொத்த தேனையும் தானே எடுத்துக்கொண்டு வெறும் புறங்கையை மட்டும் நக்க நமக்கு கொடுத்தாலும் அடுத்த தேர்த்தலில் அவனுக்கே ஓட்டு போடும் பழக்கமுடையவர்கள் நாம்!

  இரண்டாவதாக, இலங்கையில் இனப்படுகொலை! இதில் காங்கிரஸை மட்டும் புறந்தள்ளுவதில் எந்த புண்ணியமும் இல்லை. ஏனெனில் அனைத்து அரசியல்வாதிகளும் இதில் ஒரே நிலையை தான் எடுக்கின்றனர்.

  ஸோ, உங்களின் பகுதி 1-ல் உள்ள விஷயங்களுக்காக கட்சிகளை ஒதுக்க வேண்டுமென்றால் என்னுடைய ஓட்டு ஏதாவது ஒரு சுயேச்சைக்கு அல்லது “நாடோ”-வுக்கு போட்டு நாசமாக்கவேண்டியதுதான்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அஜீஸ்,

   அப்படியானால் காங்கிரஸ் மற்றும் திமுக வை
   ஒதுக்க வேண்டாம் –

   பாஜக கூட்டணியை ஏற்பதை விட –

   காங்கிரஸ், திமுக போன்றவற்றிற்கே
   மீண்டும் ஒரு சான்ஸ் கொடுக்கலாம் என்பது தான்
   நீங்கள் முன் வைக்கும் கருத்தா …?

   இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன் …

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • சைதை அஜீஸ் சொல்கிறார்:

    …/என்னுடைய ஓட்டு ஏதாவது ஒரு சுயேச்சைக்கு அல்லது “நாடோ”-வுக்கு போட்டு//… என்றுதானே மேலே போட்டுள்ளேன். பிறகு எங்கிறுந்து வந்தது காங்கிரஸும் திமுகவும்!
    அடுத்தபடியாக, இந்த பகுதியில் நீங்கள் எடுத்துக்கொண்ட இரு விஷயங்கள், ஊழல் மற்றும் தமிழின அழிப்பு! இந்த இரு விஷயங்களிலும் யாருக்கும் அதிகளவில் வித்தியாசமில்லை என்பதே என்னுடைய கருத்து.

 2. R.Puratchimani சொல்கிறார்:

  உங்கள் கருத்துதான் என்னுடைய கருத்தும்…என்னுடைய கருத்துதான் உங்கள் கருத்தும்

 3. D. Chandramouli சொல்கிறார்:

  So, BJP front automatically gets a photo-finish, thanks to they being ‘the best of the worst’?

 4. GOPALASAMY சொல்கிறார்:

  Congress should be thrown out. Back seat driver should not be allowed to control.
  Again one Nandan or some other scapegoat should rule our country.
  Corruption is a common issue. We accept. But, there is difference between looting and bribe.
  our country and it’s resources were looted by congress govt.
  Third front is a mirage. It can survive only with congress support.
  Charan singh, Chandra sekar, Deva gowda and IK kujral govts fate everybody knew.
  If indian voters are fools, they will select third front.
  We have to give one chance to Mr. Modi . i want to say it in unequivocal terms.
  otherwise let UP defacto CM, Mr. azamkhan rule the country!

 5. k. gopaalan சொல்கிறார்:

  மோடி, பி ஜே பி என்கிற பலூனை ஊதி ஊதிப் பெரிசாக்கிய பெருமை மதச்சார்பற்றவர்கள்(?)உக்கே சேரும். கூட்டம் கூட்டமாக இன்னும் ஊதிக் கோண்டே இருக்கிறார்கள். அதுவும் உயர்ந்துகொண்டே போகிறது.

  கோபாலன்

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  ஊத ஊத பலூன் வெடிக்கலாம். தற்போது கிடைத்திருக்கும் ஒரு வரம் “நாடோ”. எல்லோரும் அதனை தேர்வு செய்து தேர்தல் சீர்திருத்தம் (மாற்றம்) ஏற்பட வழி செய்யலாம்.அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம். ஆனாலும் திருந்துவார்களா ? தெரியவில்லை. அரசியல் கட்சிகள் எல்லாம் எந்த கோணத்தில் பார்த்தாலும் ஒரே மாதிரிதான் தெரிகிறது. சில விழுக்காடுகள் மட்டுமே வித்தியாசம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   நோட்டா என்பது தீர்வு அல்லவே.
   நம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரு வழி – அவ்வளவு தான்.

   நம் முன்னர் தேர்தல் வந்து நிற்கிறது.
   543 தொகுதிகளில் பல்வேறு கட்சிகளின்
   சார்பில் வேட்பாளர்கள் நிற்கிறார்கள்.

   நாம் விரும்புவது நடக்கிறதோ இல்லையோ -அது வேறு விஷயம்.
   நம்மைப் போல் பெரும்பான்மை மக்கள் விரும்பினால்
   தானே அது நடக்கும்.

   நம் விருப்பம் என்ன ? (what is our choice ?)
   நம் விருப்பத்தின் காரணம் – அடிப்படை என்ன ?
   ஏன் இதை விரும்புகிறோம் (why do we prefer this choice ?)

   -என்பனவற்றை விவாதிப்பது தான் இந்த இடுகையின் நோக்கம்.
   அந்த அடிப்படையில் விவாதத்தை முன்னெடுத்துச் செல்லலாமே ..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. Ganpat சொல்கிறார்:

  இப்படி ஒரு மிக அவசியமான முக்கியமான விவாத களத்தை தொடங்கி வைத்திருப்பதற்கு.முதலில் நண்பர் கா.மைக்கு வாழ்த்துக்கள் ..பாராட்டுக்கள்.
  ஆரம்பமே மிக தெளிவாக இருக்கிறது.இன்னும் ஒரு முக்கியமான கட்சியை
  அவரை “விளக்குமாறு” கேட்டுக்கொள்கிறேன்.பிறகு நம் கருத்தை சொல்ல எளிதாக இருக்கும்.வணக்கம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத் – மற்றும் இதர நண்பர்களுக்கு,
   நன்றி.

   நண்பர் “ஞாநி” பற்றிய இடுகைகளிலும்,
   “அனார்கிஸ்ட்” இடுகையிலும் எழுதியது போதுமே
   என்று தான் ‘ஆப்’ பற்றி மேலே சுருக்கமாக
   முடித்துக் கொண்டேன்.

   ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் ( ஏன் திமுக கூட )
   ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் தாங்கள் நல்ல இடத்திற்கு
   வர முடியாது என்பதை புரிந்து கொண்டிருப்பதால்,

   மத்தியில் பாஜக அல்லாத –
   ஒரு பலவீனமான 3வது
   அல்லது 4வது கூட்டணி அரசு ஏற்பட துணை புரிந்து,
   கூடிய விரைவில் அதைக் கவிழ்த்து,
   ஒன்றிரண்டு வருடங்களுக்குள்
   மீண்டும் இன்னொரு தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதே
   இந்த தேர்தலைப் பொருத்த வரையில் அவர்களது லட்சியம்…

   -“ஆப்” பற்றி இதற்கு மேல் கண்பத் அவர்களே
   “விளக்குமாறு” கேட்டுக்கொள்கிறேன்….!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. Srinivasanmurugesan சொல்கிறார்:

  இந்திய அளவில் காங்கிரஸ் தூக்கி எறியப்பட வேண்டும். காங்கிரசுக்கு மாற்று பிஜெபி யை தவிர வேறு இல்லை. மூன்றாவது அணி என்பது நிலைக்காது மட்டுமல்ல ஆறு மாதத்தில் புதிய தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். தவிர தற்போது இந்தியாவின் தேவை உறுதி மிக்க தலைமை.அதற்கு மோடி தான் பொறுத்தமானவர்.அவரிடம் சில குறைகள் இருந்தாலும் அவர் தலையாட்டி பொம்மை இல்லை. உறுதியான முடிவுகள் எடுத்து செயல் படுத்த கூடியவர்.
  தமிழ்நாட்டில் பிஜெபி கிடையாது. ஓர் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அது கூட்டணிகளின் தயவில் தான் இருக்கும்.திமுக விற்கு வாய்ப்பு கொடுத்தும் தனது தலைவரின் குடும்பத்திற்கும் தங்களின் வளமைக்கும் மட்டில் பாடுபட்ட கட்சி .தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்தவர்கள் திமுக வினர்.காவிரி மற்றும் முல்லை பெரியார் விவகாரத்தில் நீதி மன்றம் தீர்ப்பளித்த பின்னரும் தமிழ் நாட்டின் நலனை காக்க தவறியவர்கள்.ஆகவே திமுகவும் தூக்கி எறியப்பட வேண்டும். அடுத்து அண்ணா திமுக மட்டும் தான் தமிழ் நாட்டின் விடிவுகாலம். அம்மா இந்திய பிரதமராவதற்கு அனைத்து தகுதிகளும் உடையவர்.ஆனால் வட நாட்டு கட்சிகள் அவரை பிரதமராக விட மாட்டார்கள். தமிழ் நாட்டிலிருந்து பெறுவாரியான எம் பி கள் அஇஅதிமுக மூலம் பாராளுமன்றம் சென்றால் தமிழ் நாட்டின் நலன்கள் முன்னெடுக்கப்படும்.அம்மாவும் மோடியும் நல்ல நண்பர்கள். தமிழகத்திற்குறிய நிதி,மின்சாரம், நதி நீர் விவகாரங்களில் தமிழகத்தின் நலன்கள் காக்க உறுதுணையாக இருக்கும்.மது விலக்கு அமுல் படுத்தவும் முடியும்.ஜெவுக்கென்று தனி குடும்பம் இல்லை. தமிழ்நாடே அவரின் குடும்பம். தமிழ் மக்களே அவரின் உறவுகள்.தமிழ்நாட்டின் நலன்கள் முன்னெடுக்கப்பட அஇஅதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

 9. புது வசந்தம் சொல்கிறார்:

  நண்பர்களுக்கு, இன்று பார்த்தது, படித்தது.இந்த இடுகையின் ஓரங்களில் சில தகவல்கள் உள்ளன.
  http://greatgameindia.wordpress.com/2013/04/16/mechanics-of-narendra-modis-pr-agency-apco-worldwide-orchestrating-our-future/
  உங்களில் ஒரு சிலர் முன்னரே படித்திருக்கலாம்…

 10. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும் மோடியை முன் நிறுத்தி உள்ளதால் குஜராத் போல் இந்தியாவுக்கு ஒரு விமோசனம் கிடைக்கலாம் என்ற ஒரு நப்பாசைதான்.உங்கள் விவாதம் தொடரட்டும்,நன்றி.

 11. விவேகாநந்தன் சொல்கிறார்:

  காவிரி சார் என்னால் இதை இங்கு எழுதுவதை
  தவிர்க்க முடியவில்லை. தவறாக இருந்தால்
  தயவு செய்து மன்னிக்கவும்.நான் ஒரு அநாதை. சிறு வயதிலிருந்தே ஒரு சிறுவர் வளர்ப்பு இல்லத்தில் நல்ல உள்ளம் கொண்ட ஒரு சாமியாரால் வளர்க்கப்பட்டு இன்று படித்து,ஆளாகி ஒரு வேலையிலும் இருக்கிறென்.
  நேற்றிரவு சிதம்பரத்தில் திரு.கருணாநிதி மீட்டிங் லைவாக கலைஞர் டிவியில் காட்டினார்கள். அவர் பேசியதைக்கேட்க கேட்க அடக்க முடியாத அளவிற்கு எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.எதிரில் இருந்திருந்தால் ஸ்டேஜில் ஏறியே அவரை எதாவது சூடாகக் கேட்டிருப்பேன்.

  மோடி அவர்களுக்கு 40-45 வருடங்களுக்கு முன்னர்
  சிறு வயதிலேயே அவர் பெற்றொர்களால் பால்யவிவாகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு இல்லற
  வாழ்வில் நாட்டம் இல்லை. அப்போதே வீட்டை விட்டே வெளியேறி விட்டார். மனைவியுடன் சேர்ந்து குடும்பம்
  நடத்தியதே இல்லை. பல இடங்களில் சாமியார் போல் திரிந்தலைந்து கடைசியில் RSSல் சேர்ந்து பக்குவம் பெற்று, பலகாலம் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கிறார். அவர் நேரடி
  அரசியலுக்கு வந்ததே, 12 வருடங்களுக்கு முன் தான்.
  அதுவரை RSS பிரச்சாரக்காக சமூக சேவை தான் செய்து
  கொண்டிருந்தார். பெண் சுகத்தை நாடாமல்,குடும்ப வாழ்வை
  துறந்து பொது வாழ்வில் ஈடுபட்ட ஒரு மனிதரைப் பார்த்து,
  பொது வாழ்வில் இருந்துகொண்டே ஒன்ரு, இரண்டு, மூன்று என்று வரிசையாக பெண்களைச் சேர்த்துக் கொண்ட ஒரு மனிதர், பக்கத்தில் 3வது பெண்டாட்டியை வைத்துகொண்டெ
  வெட்கமில்லாமல் சொல்கிறார். கட்டிய பெண்டாட்டியை விட்டு ஓடிய மோடி பிரதமராக வந்து இந்த நாட்டை எப்படி காப்பாத்துவாரென்று.
  வயிறெரிந்து சொல்கிறேன்
  இந்த மனிதர் நிச்சயம் நிம்மதியாக இருக்க முடியாது.
  இவர் பெண்டாட்டிகளும், பிள்ளை பெண்களும் தான் இவர்
  நிம்மதியை கடைசி வரை குலைக்கப்போகிறார்கள்.
  மனசாட்சி இல்லாமல் பேசும் இந்த மனிதரைநினைத்தாலே
  வெறுப்பாக இருக்கிறது. இதை இங்கு தான் எழுத முடியும்
  என்று நினைத்து எழுதிவிட்டென். தவறாக இருந்தால்
  தயவுசெய்து மன்னிக்கவும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் விவேகாநந்தரே,

   உங்கள் பெயருக்கு ஒரு சலாம்…!

   நீங்கள் எழுதியதில் தவறேதும் இருப்பதாக எனக்குத்
   தோன்றவில்லை. “சிறுமை கண்டு பொங்குவது”
   நல்ல குணம் தான்.

   91 வயதில், நிம்மதியாக, அமைதியான சூழ்நிலையில்,
   நல்ல நினைவுகளுடன் வாழ வேண்டிய ஒருவர் –
   தன்னலம் காரணமாக, தன் குடும்ப நலன் காரணமாக,
   ஊர் ஊராகப் போய் மற்றவர் குறித்து “புறம்”
   பேசிக்கொண்டிருக்கிறார். எத்தனை வயதானாலும்,
   இவரைப் போன்றவர்கள் “முதிர்வு” பெற மாட்டார்கள்.

   எனக்கு பழைய சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது.
   சர்க்காரியா கமிஷன் விசாரணையின்போது என்று
   நினைக்கிறேன்.
   இவரது 3வது மனைவியைச் சுட்டிக்காட்டி
   “அவர் உங்களுக்கு என்ன உறவு” என்று கேட்கப்படுகிறது.
   ஆண்டுகள் பல கூடி வாழ்ந்து,
   சேர்ந்து குடித்தனம் நடத்தி,
   பெண் மகவு ஒன்றைப் பெற்ற பின்பும் –
   “இவர் என் மனைவி” என்று கூறும் துணிவு இன்றி –
   அந்த பெண்மணிக்கும் உரிய கௌரவத்தை கொடுக்காமல்,
   “என் மகள் கனிமொழியின் தாயார் இவர்” என்று
   கூறிய சுயநலம் என்கிற தடித்த போர்வையால்
   வடிகட்டிய கோழை தான் இந்த மனிதர்.

   இவரைப் போன்றவர்கள் மாறவே மாட்டார்கள்.
   நம்புபவர்களுக்கு “இறைவன்”
   நம்பாதவர்களுக்கு” இயற்கை”
   ஏதோ ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது.
   “தப்பு செய்பவர்கள் -தண்டனையிலிருந்து தப்பவே

   முடியாது”. இன்றில்லையேல் நாளை. இல்லையேல்
   அதற்கடுத்த நாள். எல்லாவற்றையும் தாண்டினாலும்
   அடுத்த பிறவியிலாவது -இவர்கள் தண்டனையை

   அனுபவித்தே தீர வேண்டும்.

   – இது கிடக்கிறது விடுங்கள். உங்களை யாரோ
   ஒரு நல்ல மனிதர் எடுத்து வளர்த்து கரை சேர்த்திருக்கிறார்.
   அதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு,
   நீங்களும், உங்கள் பங்கிற்கு 4 பேரையாவது கரை சேர்க்க

   வேண்டும்.

   நீங்கள் வளமும், வெற்றியும் பெற வாழ்த்துக்கள்.

   அன்புடன்,
   -காவிரிமைந்தன்

  • Ganpat சொல்கிறார்:

   விடுங்கள் விவேகானந்தன்..கருணா பேசுவதற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டால் நாம்தான் மருந்திற்கு செலவழிக்க நேரிடும்.கொஞ்சம் பொறுங்கள்.தேர்தலுக்குப்பிறகு ஒருவேளை இவர் பா.ஜ.க.விற்கே ஆதரவு தெரிவிக்கலாம்.அப்போ என்ன சொல்வார் தெரியுமா?
   “திருமணம் செய்து மனைவியுடன் கூடி மகிழ்வர் பலர்..
   ஆனால் மாடி வீடு சீதனமாக த்தருகிறேன் என்று மாமனார் நாடியபோதும் அதை மறுத்து ஓடியவர் நம் மோடி!
   பொது வாழ்வில் தான் ஈடுபட தடையாக இருப்பது தாரம் என்றாலும் அவளையும் மறப்பேன் என்று உறுதியாக நின்றவர்.
   கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த இவரை
   அம்மையார் பழிப்பதில் ஒரு அதிசயமும் இல்லை.
   என்ன இருந்தாலும் மோடியும் என்னைப்போல
   ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் தானே?
   அதில் அவாளுக்கு எரிச்சல் வருவதில் என்ன வியப்பு?
   முடிவாக அவர் மேல் நான் எழுதியுள்ள கவிதை இதோ…
   வருக வருக மோடி
   உங்களை வரவேற்போம் ஆடிப்பாடி
   உம்மை எதிர்ப்பவர்களுக்கு நீர் கேடி
   அவர்கள் போவார்கள் ஓடி!
   நீரே இந்தியாவின் நாடி
   தமிழர்களுக்கு
   நான் தாத்தா நீரோ டாடி

   • Ganpat சொல்கிறார்:

    இன்று Facebook இல் இன்னொரு சுவையான காமென்ட்.
    ரஜினி (கருணாவிடம்):தலைவரே ஒருவேளை மோடி பிரதமர் ஆகிவிட்டால் என்ன செய்வீங்க?
    கருணா:கைவசம் இருக்கே! “மோடி என்றால் உதடுகள் ஓட்டும்.சோனியா ,ராகுல் என்றால் அவை ஒட்டா” என்று ஏதாவது சொல்லி ஓட்டிகிட வேண்டியதுதான்.கனிமொழி வழக்கு இருக்கே!

 12. saamaaniyan சொல்கிறார்:

  காவிரி மைந்தன் அவர்களுக்கு,

  நல்ல கட்டுரை. அதைவிட மகிழ்வான விசயம் இதன் மூலம் தொடங்கியுள்ள ஆரோக்யமான விவாதம் !

  நாம் முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் ( குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ) ஒரு தனிபெரும் தேசியகட்சி இந்தியாவில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது என்பது இயலாத காரியம். பிராந்திய கட்சிகளுடனான கூட்டனியின்றி ஆட்சி அமைப்பது குதிரைகொம்பு !

  தேசிய, மற்றும் தமிழ் நாட்டின் ஊடகங்கள் பாஜக பெரும் வெற்றி பெரும் என்ற தோற்றத்தை உருவாக்கினாலும் அவர்களின் கணிப்பின் மீது அவர்களுக்கே நம்பிக்கை கிடையாது என்பதுதான் உண்மை ! காரணம் இந்தியாவின் கடந்த கால கருத்துகணிப்புகளின் தோல்வி. யார் எப்படி கணித்தாலும் சாமானிய வாக்காளன் ஓட்டுப்பெட்டியுடன் தனித்திருக்கும் அந்த கடைசி தருணமே நிதர்சன உண்மையை எழுதும். இதுவே ஜனநாயகத்தின் வெற்றியும்கூட !

  பொருளாதார ரீதியாக தள்ளாடும் இன்றைய இந்தியாவுக்கு அடுத்த ஆறு மாதங்களில் கலையும் ஆட்சி ஆபத்து ! ஆகவே மூன்றாவது அணி அமையாமல் இருப்பதே நல்லது.

  இந்த தேர்தலின் பலரது நம்பிக்கை ஆம் ஆத்மி ! ஆனால் உண்மையோ கசப்பாக இருக்கிறது. முதலில் அவர்களின் நம்பகத்தன்மை. எது எப்படி இருந்தாலும் தலைநகரின் ஆட்சியை அவர்களாகவே முறித்துகொண்டது பெரும் அரசியல் பிழை. ( இதனை சமீபத்தில் அதன் தலைவரே ஒத்துகொண்டுவிட்டார். ) மேலும் இந்த தேர்தலில் அதிக இடங்களை பிடிக்கும் அளவுக்கு அவர்கள் வளரவும் இல்லை, அதற்கான உறுதியான உள்கட்டமைப்பும் கட்சியில் இல்லை என்பது என் கருத்து.

  மதசார்பின்மை, சிறுபான்மை போன்ற இந்திய ஜனநாயகத்துக்கு மட்டுமே உரிய ஜல்லியடி வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால் நீங்கள் கூறியது போல மிச்சமிருப்பது பாஜக மட்டுமே.

  எனது வலைப்பூ : saamaaniyan.blogspot.fr

 13. Ganpat சொல்கிறார்:

  வணக்கம்!
  இந்தியா ஒரு முக்கியமான தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது.வாழ்வா சாவா என்ற அளவில் நாட்டை நோக்கி கேள்வி எழுப்பட்டுள்ளது.நம் நாட்டின் முதல் தேர்தல் 1952ஆம் ஆண்டு நடந்தது.அன்று மக்களுக்கு இருந்த அதே அளவு சிக்கலும் குழப்பமும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் இப்பொழுதும் உள்ளது.ஒரே வித்தியாசம்..அன்று மக்களுக்கு “அத்தனை வேட்பாளர்களும் நல்லவர்கள்; தேசபக்தர்கள். இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது?” என்ற குழப்பம்.இன்றோ “அனைத்து வேட்பாளர்களும் கயவர்கள் கொள்ளையர்கள் இவர்களில் யார் வந்தால் என்ன?” என்ற விரக்தி.ஆகவே இம்மாதிரியான கூட்டுசிந்தனைகள் கலந்தாலோசித்தல் அவசியமாகிறது.

  முதல் வேண்டுகோள்: அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.”நம் ஒரு ஓட்டா முடிவை மாற்றும்?” “இன்று ரொம்ப வெய்யில்.எனவே நான் ஓட்டளிக்க போகவில்லை” போன்ற நொண்டிசாக்குகள் நீக்கி அனைவரும் ஓட்டளிப்பது நம் கடமையாகும்.

  சரி “எனக்கு எந்த வேட்பாளர்களையும் பிடிக்கவில்லை.None of the above (NOTA) பட்டனை தட்டிவிடட்டுமா?”என்று சிலர் கேட்கலாம்..கூடவே கூடாது.இதனால் ஒரு பயனும் இல்லை ஒரு வேட்பாளர் நூறு ஓட்டுகள் வாங்கி அதற்கு அடுத்து நோட்டா ஓட்டுக்கள் 99 பதிவாகி இருந்தாலும் அந்த வேட்பாளரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.என்னைக்கேட்டால் தேர்தலில் ஓட்டளிக்காத அனைவரும் நோட்டா விற்கே வாக்களித்தனர் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.So no to NOTA please

  அடுத்து சுயேச்சைகள்.:எந்த காரணத்தைக்கொண்டும் இவர்களுக்கு ஓட்டளிக்கவேண்டாம்.காரணம் எந்த பயனும் இல்லை.நம் அரசியல் அமைப்பு அந்த மாதிரி.தனிப்பட்ட MP or MLA ஒன்றும் செய்ய முடியாது.
  எனவே நாம் கட்சிகளை எடைபோட்டு நம் வாக்கை அளிக்க வேண்டும்.இந்தத் தேர்தலில் நம் மாநிலத்தை பொறுத்தவரை கீழ்கண்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

  காங்கிரஸ் (ஆளும் கட்சி) :நீங்கள் 1.6.2004 அன்று இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடியேறி 24/4/2014 அன்றுதான் மீண்டும் திரும்ப வரப்போகிறீர்கள்.இத்தனை காலமும் நம் நாட்டில் என்ன நடந்தது என தெரியாது என்று வைத்துக்கொண்டால் நீங்கள் காங்கிரசிற்கு ஓட்டளிக்கலாம்.அனால் நடுவில் ஒரு நாள் வந்திருந்தாலும் இவர்களுக்கு ஒட்டு போடக்கூடாது.சுருக்கமாக சொன்னால் “கழுதைக்குப்போட்டாலும் காங்கிரசிற்கு போடாதீர்”.இன்னும் ஒரு வேண்டுகோள்.அடுத்த தேர்தலிலும் (2019)இவர்களுக்கு ஓட்டளிக்கவேண்டாம்.இத்தாலியில் பிட்ஸா கடையில் ஒரு மேற்பார்வையாளராக இருந்திருக்க வேண்டிய ஒரு பெண்மணியை, அவர் இந்தியத்தாலி அணிந்த ஒரே செயலுக்காக நாட்டையே பத்தாண்டு ஒப்படைத்து சீரழிந்தது போதும்.சிவலிங்கன் என்ற ஒரு இந்தியர் அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஆக முடியுமா?(அவர் பெயரில் லிங்கன் என்று இருப்பதால்!) ஆனால் அது சோனியா “காந்தி”யால் நம் நாட்டில் முடிந்தது..Send her out of office FOREVER.

  தி.மு.க.: (திரு.மு.கருணாநிதி) மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் வல்லவர்.ஊழலுக்கு இலக்கணம் வகுத்தவர்.இவருக்கு போடும் ஒட்டு சூட்கேஸ் வழியோடி புல்லுக்கும் (காங்கிரஸ்) ஆங்கே பொசியுமாம்.எனவே இவருக்கும் ஓட்டளிக்க கூடாது.

  அம்மா தி.மு.க.: 0.பன்னீர் செல்வம் இந்தியாவின் நிதி அமைச்சராக வரும் ஒரே ஆபத்தை தவிர இவர்களுக்கு ஓட்டளிப்பதால் வேறு எந்த ஆபத்தும் இல்லை.மேலும் அம்மா தேவையெனில் பா.ஜ.க ஆட்சி அமைக்கவும் எதுவாக இருப்பார்.இவர் காங்.காட்சியை ஆதரிக்கும் வாய்ப்புக்கள் மிக குறைவு.

  ஆம் ஆத்மி.:இவர்கள் காங்.கட்சியின் பினாமி.பா.ஜ.க ஓட்டுக்களை பிரிப்பதே இவர்கள் நோக்கம்.இவர்கள் முதலில் கூரை ஏறி கோழி பிடிக்கட்டும் (ஒரு மாநில ஆட்சி)பிறகு வானம் ஏறி வைகுண்டம் (மத்திய ஆட்சி) அனுப்பலாம்.

  ஆகவே எப்படி முட்டி மோதி பார்த்தாலும் மீதி இருப்பது மோடி ஒருவரே! இவரை விட அப்துல் கலாம் ,நாராயணமூர்த்தி,லீக்வான்யூ,நெல்சன் மாண்டேலா,வல்லப பாய் படேல் போன்றோர்கள் திறமைசாலிகள் என்றாலும் அவர்களை பிரதமர்களாக்க வழியில்லை.எனவே இறைவனை வேண்டிக்கொண்டு இவருக்கு வாக்களிப்பதே இப்போழுது நமக்கு இருக்கும் ஒரே தேர்வு.

  மோடியை பொறுத்தவரை ஒரே பிரச்சினை இவர் முல்லைப்பெரியார்,காவிரி,இலங்கை போன்ற பிரச்சினைகளில் நமக்கு (தமிழர்களுக்கு) சாதகமான முடிவெடுப்பாரா என்பது சந்தேகமே.ஆனால் காங்.ஆட்சியும் இவ்விஷயங்களில் ஒன்றும் கிழிக்கவில்லை.மேலும் அம்மா மூலமாக நாம் மோடியை ஆதரித்தால் அது அம்மாவின் குணாதிசயங்களால் நமக்கு விரோதமாகவே முடியும் வாய்ப்பு அதிகம்.மற்றபடி மோடியை ஒரு அரக்கனாக சித்தரிக்கும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம்.பத்தாண்டுகள் ஒரு பல்லில்லாத ஊமை நாய் வாலை மட்டும் ஆட்டிக்கொண்டு நம் நாட்டை காத்த லட்சணம் போதும் ..இந்த நாய் கடிக்காது வாலையும் ஆட்டாது; ஆனால் நிச்சயமாக குரைக்கும்.மற்றவர்களை வாலாட்ட விடாது.கொஞ்சம் அதையும் தான் அனுபவிப்போமே!

  Jai Hind.வந்தே மாதரம்.

  • Andi Chamy சொல்கிறார்:

   Well said

  • Sundar சொல்கிறார்:

   பின்னிட்டீங்க கண்பத்.
   யாருக்கு ஒட்டு போடலாம்னு குழப்பத்தில் இருக்கும் என் போன்றோருக்கு, உங்களின் பின்னூட்டம் கலங்கரை “விளக்கம்”.
   பணி தொடர வாழ்த்துக்கள் !!!

   சுந்தர் கண்ணன்

 14. maasianna சொல்கிறார்:

  Absaloutly correct mr Ganpat. very thanks mr Kavery maindan. Very good strating.

 15. GOPALASAMY சொல்கிறார்:

  I fully endorse what SRi. Ganpath said.
  Modi is the only choice.
  Dear KM, pl. write about Sanjay Baru”s book Accidental PM. It is the height of the arrogance of Rajiv Gandhi’s family.

 16. k. gopaalan சொல்கிறார்:

  மோடி தமிழகத்துக்கு வரும்போது ரஜனிகாந்த் என்கிற ஒரு நடிகரைச் சந்திக்கப்போவதகச் செய்தி வெளிவந்திருக்கிறது. சிந்திக்கும் எந்த மனிதனும் இந்த ஒரு காரணத்திற்காகவே மோடிக்கு வாக்களிக்கமாட்டான்.

  தன் தலைவியின் பெயரையே உச்சரிக்கத் தயங்கும் உறுப்பினர்கள் உள்ள ஒரு கட்சித் தலைவி சர்வாதிகாரி என்பதைத் தவிற கூற எதுவும் இல்லை.

  அணுசக்திக்கு எதிராகச் செயல்படும் பலர் இருக்கும் ஆம் ஆத்மி பார்டிக்கு நாட்டின் முன்னேற்றம் பற்றி எதுவும் தெரிந்திருக்குமா என்கிற கேள்வி எழுகிறது.

  மற்ற மதச்சார்பற்ற வேசம் போடும் கட்சிகளைப் பற்றிக் கூற எதுவும் இல்லை.

  இறுதியில் நோட்டாதான் தீர்வு.

  கோபாலன்

 17. Sanmath சொல்கிறார்:

  Very nice discussion has been started by you. Such constructive discussions to be made and only then people will get a good political insight. Many are still having no clue about politics but still they are voting. Such discussions will educate people.

  Coming to the alliance, I guess this alliance would get 3 seats in TN – Kanyakumari, Virudhunagar and Dharmapuri. Virudhunagar is also doubtful as many non-political teams are working to defeat Vaiko. Coming to whole Indian scenario, BJP has not foothold in TN, Kerala, Andra, West Bengal, North East and Kashmir. BJP could be a single largest party. They will be requiring DMK/ADMK, BSP/SP, RJD/JD(U) and if reqd Mamta too to form the governement.

  Please dont waste your vote by casting to NOTA, it carries NO powers and in fact will double the chance for your most non-fav candidate to win.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.