யாருக்கு ஓட்டு ..?(விஜய்காந்த்..? பாமக..?) (பகுதி-2)

(பகுதி-1ன் தொடர்ச்சி )

nda alliance in tn.2

துவக்கத்தில் பாஜக நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக
அறிவிக்க முயன்றபோது, கட்சிக்குள்ளும்,
வெளியிலும் (முக்கியமாக, அப்போதைய பாஜக
கூட்டணி கட்சியான ஜனதா தளத்திலிருந்தும்) எதிர்ப்புகள்
கிளம்பின. மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால்,
பாஜக தன் தற்போதைய கூட்டணி கட்சிகளை இழப்பதுடன்
எதிர்காலத்தில் வேறு எந்த கட்சியும் பாஜகவுடன்கூட்டணி
வைத்துக்கொள்ள முன்வராது என்று காரணம் கூறப்பட்டது.

மோடிக்கு எதிராக உருவாகியிருந்த அல்லது
உருவாக்கப்பட்டிருந்த – சிறுபான்மையினருக்கு எதிரானவர்
என்கிற தோற்றம் தான் அதற்கு காரணம்.

ஆனால், கடந்த 7-8 மாதங்களில் அந்த தோற்றம்
கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இதுவரை பிரதமர் பதவிக்கு வந்த அத்தனை பேரையும் விட
அதிகமாக, பதவிக்கு வரும் முன்னரே மோடி விமரிசிக்கப்
பட்டு விட்டார். ஒரு விதத்தில் இது நல்லதாகப் போனது.

மோடியின், நிஜமான உருவம் (positive+negative)
கிட்டத்தட்ட முழுவதுமாக விவாதிக்கப்பட்டு விட்டது.

இத்தனையையும் தாண்டித்தான் மோடி இன்று இறுதி
கட்டத்திற்கு (finals) வந்திருக்கிறார். எனவே இனியும்
மோடியின் தகுதிகளைப்பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை.

பிரதமர் பதவிக்கு தன்னை பொருத்தமானவராக்கிக்கொள்ள
வேண்டுமென்றால், அனைத்து தரப்பினரையும் அணைத்துச்
செல்ல வேண்டியது மிகவும் அவசியம் என்கிற உண்மையை
மோடி நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
அவரது பேச்சும், செயல்களும் அதை உறுதிப் படுத்துகின்றன.

அண்மையில் பாஜக வின் தேர்தல்
அறிக்கை வெளியிடப்பட்டபோது, சுருக்கமாகப் பேசிய
மோடி – தன் மனதாலும், செயலாலும் யாருக்கும்,
எந்த தரப்பினருக்கும் – எந்தவித கெடுதலையும் செய்ய
மாட்டேன் என்று கூறியது சிறுபான்மை மக்களிடையே
ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத்தில் கடந்த 11 வருடங்களாக எத்தகைய
மதக்கலவரங்களும் நிகழவில்லை. எந்த நகரத்திலும்
கடந்த 11 வருடங்களில் ஒருமுறை கூட 144 தடையுததரவு
போடப்படவில்லை.மோடி 3 முறை தொடர்ந்து குஜராத்
மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கக்ப்பட்டிருக்கிறார் என்பன
போன்ற விவரங்கள் சிறுபான்மை மக்களிடையே ஓரளவு
நம்பிக்கையை உருவாக்கி இருக்கின்றன என்று தோன்றுகிறது.

இருந்தாலும் -இஸ்லாமிய சமுதாயம் இன்னும் மோடியின்
மீது மனதார நம்பிக்கை வைக்கவில்லை என்று தான்
கள விவரங்கள் சொல்கின்றன.

தேர்தல்கள் முடிந்து, நரேந்திர மோடி பிரதமராகப்
பொறுப்பேற்று, ஒன்றிரண்டு வருடங்கள் ஆட்சி நடந்தபிறகு
தான் இஸ்லாமியருக்கு அவர் மீது நம்பிக்கை வரும் என்று
தோன்றுகிற்து.

இந்த நாட்டில் தங்களைத் தவிர வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும்
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்காது என்கிற ஒருவித
அச்ச உணர்வைத் தோற்றுவித்து, தொடர்ந்து அதை வளர்த்து
வரும் பணியை காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டுகளாக
வெற்றிகரமாக மேற்கொண்டதன் விளைவு இது.

இந்த நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களும் இந்தியர் தான்.
மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் மக்களிடையே
துவேஷ உணர்வையும், அச்சுருத்தலையும் உருவாக்க முயலும்
எந்த சக்தியையும் மக்கள் அடையாளம் கண்டுகொண்டு ஒதுக்க
வேண்டும்.

பெரும்பான்மையோ, சிறுபான்மையோ –
மதத்தின் பெயரால் எந்த கட்சியோ, கூட்டமோ – எத்தகைய
அரசியல் லாபமும் பெற முடியாத ஒரு சூழ்நிலை –
இனியாவது உருவாக்கப்பட வேண்டும்.

சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணரவும்,
அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழவும்,
அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து முன்னேறவும்,
வளம் காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மத்தியில் ஏற்படும் ஆட்சி மாற்றம் இத்தகைய ஒரு நிலை
ஏற்பட அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

அகில இந்திய அரசியல் இப்படி இருக்கையில் –
தமிழ் நாடு ….?

bjp koottani -1

தமிழ் நாட்டில் பாஜக வின் நிலை என்ன ?

என் கருத்து –

பிச்சைக்காரர் வாந்தி எடுத்தது போல்
வெவ்வேறு கலவையாக –எந்த விதத்திலும் பொருந்தாத
ஒரு கூட்டணி..
வானவில் (ரெயின்போ) கூட்டணி என்று இதில்
பெருமை வேறு…

அசிங்கமான, அர்த்தமே இல்லாத,
கடைந்தெடுத்த சுயநலவாத அரசியலை
மேற்கொள்ளும் கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணியை
தமிழ்நாட்டில் உருவாக்கிய பாவத்திற்காகவே –
தமிழக பாஜக தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

இன்று மோடி, மோடி என்று
“மோடி பஜனை” பாடும் விஜய்காந்தின் தேமுதிக வும்,
டாக்டர் ராம்தாஸ் -அன்புமணியின் பாமக வும் –
மார்ச் 20ந்தேதி வரை –
ராஜ்நாத் சிங்குடன் கூட்டணி உடன்படிக்கை
கையெழுத்தாகும் நாள் வரை – கொண்டிருந்த நிலை என்ன ?

முதலில் விஜய்காந்த் – தொண்டர்களிடம் கேட்டுத்தான்
முடிவு செய்வேன் என்றார். பிறகு உளுந்தூர்பேட்டை
மகாநாட்டில் – கூட்டணியே கிடையாது,
தனித்துப் போட்டி என்றார்.
பிறகு -தலைமை வேறு மாதிரி முடிவெடுத்தாலும்
கட்சியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.
MLAக்களுடன் டெல்லி சென்று மன்மோகன் சிங்கை
பார்த்து போட்டோ எடுத்துக் கொண்டார்.
சோனியா காந்தியை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார்…

பாஜக, திமுக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுடனும்
ஒரே நேரத்தில் பேரம் பேசினார்.
யார் அதிகம் தரத்தயாராக இருக்கிறார்களோ
(சீட்டும், நோட்டும் ) அவர்களுடன் தான் கூட்டு என்றார்.
சிங்கப்பூருக்கும், மலேசியாவிற்கும் சென்று ஒளிந்து
கொண்டார். பேரங்கள் பேசினார்.

அத்தனை அசிங்க பேரங்களையும் நடத்தி விட்டு –
இன்று “மோடி சர்வரோக நிவாரணி. மோடி வந்தால்
தமிழ்நாட்டில் கரண்ட் வந்து விடும், தண்ணீர் வந்து விடும்,
சகல பிரச்சினைகளும் தீர்ந்து விடும்” என்று கதை
விடுகிறார். இவருக்கு சீட்டோ நோட்டோ வந்துவிட்டால்,
(“மக்களே -மக்களே”)எல்லாருக்கும் எல்லாமும்
வந்து விடும் என்று அர்த்தம் போலும்..!

விஜய்காந்துக்கும் – மோடிக்கும் எந்தவித பற்றோ, பாசமோ,
கொள்கை ஒற்றுமையோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.
நாளையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வந்தால்,
வேறு வழியில் போக விஜய்காந்த் சற்றும் தயங்க மாட்டார்.
அவருக்கு – அவரும், அவரது மனைவியும்,
மச்சானும் மட்டுமே முக்கியம்.

vijaykanth family party

அடுத்து டாக்டர் ராம்தாஸின் -(மன்னிக்கவும்.இப்போது
டாக்டர் அன்புமணியின் ) பாட்டாளி மக்கள் கட்சி.
திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும்
கூட்டு கிடையாது என்றார். ஜாதி சங்கங்களுடன் சேர்ந்து
சமுதாய முன்னணி அமைத்து தனியாக தேர்தலில்
போட்டியிடுவோம் என்றார். முதலில் 10 தொகுதிகளுக்கும்
பிறகு 14 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைக் அறிவித்தார்.

கடைசியில் –
தன் ஒரே மகன் அன்புமணி மத்திய அமைச்சர் ஆக
வேண்டும் என்கிற தன் குடும்பத்தின் ஒட்டுமொத்த
லட்சியத்திற்காக எல்லாவற்றையும் ‘காவு’ கொடுத்தார்.
முதல் நாளிரவு சேலத்தில் பொதுக்கூட்ட மேடையிலேயே –
“அருள் – நீ தான் சேலத்தில் நம் வேட்பாளர் ” என்று
அறிவித்த அதே ராம்தாஸ் தான் மறுநாள் மதியம்
விஜய்காந்தின் மச்சானுக்காக சேலம் அருளை ‘காவு’
கொடுத்து விட்டார்.

அன்புமணி மத்திய அமைச்சராக வேண்டும் என்பதை தவிர –
இவர்களுக்கும் பாஜக வுக்கும்,
இவர்களுக்கும் நரேந்திர மோடிக்கும்- என்ன சம்பந்தம் ..?
பச்சை சுயநலவாதக் கூட்டம்.

கொங்கு முன்னேற்றம் KMDK என்று ஒரு கட்சி,
IJK என்று ஒரு கட்சி,
முதலியார்களுக்கு என்று ஒரு கட்சி,
திருவாளர்கள் ஈஸ்வரன், டாக்டர் பச்சமுத்து,
ஏகே ஷண்முகம் –
தேர்தல் செலவுகளுக்காக பாஜக வுக்கு பணம் கொடுக்கத்
தயாரான ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாமரை சீட்டு..!
இவர்களும் பாஜக சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்..!

தாமரை சின்னத்தில் போட்டியிடும் இவர்களுக்கும்
பாஜக வுக்கும் என்ன சம்பந்தம் –
(கொடுக்கல் வாங்கல் தவிர..?)

(பகுதி-3ல் தொடருகிறேன்.)

 

பின்குறிப்பு –
நண்பர்கள் தங்கள் கருத்துக்களை
பின்னூட்டங்களில் தொடரலாம்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to யாருக்கு ஓட்டு ..?(விஜய்காந்த்..? பாமக..?) (பகுதி-2)

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  கூட்டணி உருவாகுமுன் அலைபாய்ந்தாலும், அது உறுதி ஆன பின், விஜயகாந்த் மற்றும் அன்புமணி இருவரும் இணைந்தே செயல் படுகிறார்கள். 5 அல்லது 6 இடங்கள் இக்கூட்டணி பெறும் என தெரிகிறது.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கூட்டணி குறித்த உங்கள் கருத்து மிகவும் சரி. கடந்த 11 வருடங்களாக கலவரம் நடக்கவில்லை என்பது நல்லது. ஒரு தடவை நடந்ததே இரண்டாயிரத்து இருநூறு இந்திய உயிர்கள் பலியானது.இன்னமும் சிறுபான்மையினர்,பெரும்பான்மையினர் என்றே நாம் இருக்கிறோம்.இறந்து போனது இரண்டாயிரத்து இருநூறு இந்தியர் என்பதை நினைவில் கொள்வோம்.
  “இந்த நாட்டில் தங்களைத் தவிர … மேற்கொண்டதன் விளைவு இது.”, 1992 க்கு பிறகு தானே இந்த நிலை.”பிச்சைக்காரர் வாந்தி எடுத்தது போல்” – வேறு விதமாக குறிப்பிட்டு இருக்கலாம்.

 3. ரிஷி சொல்கிறார்:

  நான் யாருக்கும் ஓட்டுப் போடப்போவதில்லை. என்னால் இந்த அரசியல் கட்டமைப்பையே மாற்றியமைக்கும் வல்லமை வரும்வரை இந்தக் கேலிக்கூத்துகளில் பங்கெடுக்கப் போவதில்லை என இருக்கிறேன்.

  நான் உட்பட, இந்தியாவின் அனைத்து மக்களும் அரசியலில் என்றைக்கு இணைகிறார்களோ, என்றைக்கு முழுப்பங்காற்றுகிறார்களோ அன்றைக்குத்தான் ஓட்டுப் பாணி அரசியலை மாற்றியமைத்து முற்றிலும் மக்கள் நலனுக்கான அரசமைக்க முடியும். அதுவரை சீர்திருத்தங்களை செய்துகொண்டு ‘முன்னை விட இப்போப் பரவாயில்லை’ என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து வரலாம்.

  எதிராளியைத் தூற்றுவதன் மூலம் தன்னை உயர்த்தாமல் (ஒரு வார்த்தை கூட, ஒரு மணித்துளி கூட) , தன்னால் மாற்றத்திற்கான எவ்வகையான வித்தினை ஊன்ற முடியும் என யார் பரப்புரை செய்கிறார்களோ, அவர்கள் வரும்வரை, அல்லது அவர்களை உருவாக்கும்வரை ஓட்டரசியலில் இருந்து விலகி நின்று நடக்கும் கூத்துகளை மட்டும் மூன்றாம் நபராய் இருந்து கண்டுகளிப்போம்!

  • புது வசந்தம் சொல்கிறார்:

   நண்பரே, நீங்கள் எதிர்பார்க்கும் காலம்,களம் இனி உருவாகுமா ?. திரு.காமை அவர்களின் நம்பிக்கையை நம்புங்கள், மாற்றம்வரும் என்று.
   நேற்று இரவு எனது பத்து வயது மகளின் கேள்வி,” ஏன் தேர்தலில் ஒருவரை ஒருவர் குறை கூறுகின்றனர் ?” என்றாள். என்ன பதில் சொல்ல, சும்மா சிரித்து வைத்தேன்..ஒரு வேண்டுகோள் தயவு செய்து ஒட்டு போடுங்கள்.
   இல்லையெனில் வேறு யாராவது உங்கள் ஓட்டை போட்டு விடுவார்கள்.

   • Ganpat சொல்கிறார்:

    ” ஏன் தேர்தலில் ஒருவரை ஒருவர் குறை கூறுகின்றனர் ?”
    என்ன ஒரு அருமையான கேள்வி.!!வாழ்த்துக்கள்.
    தொண்ணூறுகள் இன்னும் அறிவு வராமல் நம்மை பயமுறுத்தும் போது
    பத்துக்கள் இம்மாதிரி பேசுவது நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது.
    இளைய பாரதத்தினாய் வா! வா!! வா.!!

  • Ganpat சொல்கிறார்:

   Dear Rishi,
   தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து தவறாமல் வாக்களிக்கவும்.நண்பர் புது வசந்தம் சொன்னது போல “இல்லையெனில் வேறு யாராவது உங்கள் ஓட்டை போட்டு விடுவார்கள்.”
   இப்போதைக்கு மோடி ஒருவர்தான் சரியான தேர்வாக தெரிகிறார்.நீங்களும் யோசிக்கவும்.வரும் ஆண்டுகளில் காங்கிரஸ் எனும் கட்சியே காட்சியை விட்டு நீங்கினால் நாடு நலம் பெரும் என்பது என் கருத்து.

  • reader சொல்கிறார்:

   அலை ஓய்ந்தபின் நீராடலாம்.
   கரையில் காத்திருங்கள் ரிஷி.

  • reader சொல்கிறார்:

   NOTA – if you may wish so.

 4. GOPALASAMY சொல்கிறார்:

  ACtually I dont want to enter any arguement with anybody. But when some people suggestively saying something, some clarification is required.
  IN 1969, communal riots took place in Gujarath. Congress CM Hitendra Desai was ruling. At that time in news papers, it was suggestively said, Indira gandhi was behind it as she was not in good terms with CM. Because the riots took place for so many days. Nearly 5000 Indians were killed.
  Again in 1984 there was communal riots in Gujarath.
  In Bihar, bagalpur, nearly 5000 indians were killed during 1989 riots.
  Congress CM was ruling. His name now i dont remember.
  I dont want to talk about 1984 riots on Delhi. I think the people who were killed also Indians.
  Modi was trying to control the situation in 2002. But it was not high lighted.
  Before independace, in 1946 August, Calcutta riots took place. More than one lakh people were killed. ( IN Hey Ram picture also it was shown.) People can read thro internet , what happened during partition. Why nehru and Jinna were so much hurry to take over power without any proper settlement. Whom we have to blame for the killings during partition?
  Communal riots in India is not a new thing. Modi did not invent it.There was no proper powerful leader to control the situation in India. The number of riots in Akilesh’s state, is the living example. After independance, the word Secularism got a new dimension. Under the new defintion, anybody who supports BJP are not secularists.
  I wish Modi should come to to power so that all Indians will prosper.

  • Ganpat சொல்கிறார்:

   Very lucidly expressed and thanks to Sri.Gopalasamy.
   I once again request to all friends who are in favour of not voting or voting NOTA to reconsider.In the past 62 years of elections,Congress ruled for 50 years and opposition ruled for 12 years.So you can easily conclude who created the mess we are in now.We can always give BJP another chance to prove.The rich class of this country do not want them to come and so spread all sorts of bad images about them.As for Kejriwal ,he should prove himself in a state administration before aiming for central.So please think and vote.Anyone voting for AAP or NOTA or not voting are only indirectly helping Congress and they(congress) want tha tprecisely.So please reconsider and help to flush out Congress, “the Nation Destroyer”.The opposite of Pro is Con and opposite of Pro-gress is Con-gress.Thank You.

   • Ganpat சொல்கிறார்:

    இன்று சென்னையில் மோடி அவர்கள் பேசியதை கேட்டேன்.”நான் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன்” என்ற வழக்கமான பேச்சுத்தான்.சற்று சந்தேகமாகத்தான் இருந்தது.
    ஆனால் இதே போல சோனியா,சிதம்பரம் ,கருணா ஜெயா பேசும்போது சற்றும் சந்தேகம் வருவதில்லை இது முற்றிலும் பொய் என்று தெரிகிறது.ஒன்றா இரண்டா?எவ்வளவு ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார்கள்!.

 5. R.Puratchimani சொல்கிறார்:

  பாஜக கூட்டணிக்கு போடப்படும் ஒட்டு திமுகவுக்கு சாதகமாக அமையும்.ஒட்டுபோடுபவர்கள் இதை சிந்திக்க வேண்டும்.

 6. GOPALASAMY சொல்கிறார்:

  Why we have to vote for BJP? AIDMK was not a reliable allaince. during 1998, on what ground they withdrew the support to BJP? How many people came to pacify Jaya? Reason for withdrawal was navy’s vice admiral !! Jaya is not having the political maturity to run the country. comparatively in congress, BJP and comunist parties internal discussions are taking place,
  in AIDMK and DMK nothing that sort of things happening. No intelluctual discussions at all.
  less to be told about mulayam and others. In this election, tamilnadu people should vote for Modi to get simple majority in parliment.
  Before i mentioned “back seat driver”. Now it is told, dummy steering only in front; actual control from back seat!!

 7. saamaaniyan சொல்கிறார்:

  பாஜகவின் தமிழ் நாட்டு கூட்டணி பற்றிய உங்களின் கண்ணோட்டம் மிகவும் சரியானது. சந்தர்ப்பவாத அரசியலில் டாக்டருக்கு சறூம் சளைத்தவரல்ல கேப்டன் ! இவர்களின் பலம் பற்றிய மாயையை உருவாக்கியதில் தமிழின் பத்திரிக்கைகளும் பங்குண்டு !!

 8. ரிஷி சொல்கிறார்:

  இங்கு எனக்கு மறுமொழியிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இருப்பினும் எவற்றையும் ஏற்க அறிவு மறுக்கிறது. காங்கிரஸின் மெகா சைஸ் ஊழல்களுக்கு முன் பிஜேபியின் ஊழல் பெருச்சாளிகள் சிறிதாகத் தெரிகிறார்கள் போலிருக்கிறது.

  பவரைப் பிடிக்க எந்த லெவெலுக்கும் பிஜெபி இறங்கத் துணிந்திருப்பது ஆச்சரியமாகவும், சற்று அருவருப்பாகவும் உள்ளது. நாளை பிரதமராவார் என்று குறிப்பிடப்படும் நபர் இந்தியாவின் தலைசிறந்த எண்டர்டெயினரை நம்பி, அவருக்குப் பின்னால் இருக்கும் ரசிகப் பட்டாளத்தைக் குறி வைத்து இறங்கி, கடைசியில் முகத்தில் கரி பூசிக்கொண்டது நகைப்பூட்டுகிறது.

  நன்றாக சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே! வெறும் அரசியல்வாதிகள் மட்டும் இங்கு நம்மை ஆளவில்லை. அரசாங்கத்தை பின்னிருந்து இயக்கும் அதிகார வர்க்கத்தைப் பற்றி நாம் நினைத்தேப் பார்ப்பதேயில்லை. ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், சுரங்க ஊழல், மாட்டுத் தீவன ஊழல் என எத்தனை ஊழல் பூதங்கள் வெளிவந்தாலும் இவற்றின் அடிநாதமாய் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் இப்படி இவர்களின் நெட்வொர்க் அபாயகரமானது. யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, இவர்களின் குணநலன்கள் மாறவே முடியாது.

  ஆளும் வர்க்கத்தை அதிகார வர்க்கம் ஆட்டி வைப்பதும், அதிகார வர்க்கத்தை, ஆளும் வர்க்கம் தன் நலனுக்கேற்ப வளைத்துக் கொள்ள நினைப்பதும் ஒருசேர நடக்கிறது. இதற்குமேல் ஓட்டுப் போடுவது பற்றி சிந்தித்துக் கொள்வது அவரவர் இஷ்டம். ஒரு அசுரன் சோற்றுக் கவளத்தை அள்ளிச் சாப்பிடும்போது கீழே சிந்தும் பருக்கைகளை சாப்பிடுவதே நம் வயிற்றுக்கு நிறைவளிப்பதாகக் கருதினால் தாராளமாக ஓட்டுப் போடுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.