ரஜினிகாந்த் -மோடி – “டீ” சந்திப்பு …. தயாரிப்பு,டைரக்சன் எல்லாமே சொதப்பல் …!!

 

 

நேற்று இரவு திடுமென்று அறிவிக்கப்பட்டது.
இன்று காலை செய்தித்தாள்களில் வந்தது.
மாலையில் நிகழ்ந்து விட்டது.

எக்கச்சக்கமான ஸஸ்பென்ஸ். என்ன நடக்கும் …?
திக் திக் சிலருக்கு..
அவசரமாக செய்தி தர வேண்டுமே – கவலை சிலருக்கு..
இதை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்…
தீவிர யோசனை வேறு சிலருக்கு…!

rjini and modi-3

“வேட்டி சட்டையில் மோடி” – ஒரு தலைப்பு.
“தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து” தெரிவிக்க வந்தேன்
திருவாளர் நரேந்திர மோடி அறிவிப்பு.

“இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை”
“நான் தான் அவரைத் தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தேன்”
ரஜினி தரப்பில் அவசர சமாளிப்பு அறிவிப்பு…!

ரஜினிகாந்தின் வீட்டின் உள்ளே போன நரேந்திரமோடி
வீட்டை விட்டு வெளியே வருவதற்குள்,
மோடியின் facebook-ல்
இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகிறதுrjini and modi-1 rajini and modi- over a cup of tea
‘வித் ரஜினிகாந்த்ஜி’ என்கிற வாசகங்களுடன்…

ரஜினிகாந்தின் வீட்டின் வாசலில் இருவரும் நிற்கிறார்கள்.
செய்தியாளர்கள் கேள்விகளைக் கொட்டுகிறார்கள்.
அப்பட்டமான பரிதவிப்புடன் ரஜினிகாந்த் – யாருக்கும்
புரியாத விதத்தில் பதில் சொல்கிறார்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை…

.மீனம்பாக்கத்தில் மோடியின் மீட்டிங் முடிந்தபிறகு,

மோடியை வைத்துக் கொண்டே –
‘பொன்ரா’ துண்டுச்சீட்டிலிருந்து ரஜினிகாந்திடமிருந்து
வந்ததாக செய்தியைப் படிக்கிறார்.

” நான் மருத்துவமனையில் இருந்த போது
என்னை அவர் சந்தித்தார். நான் வீட்டிற்கு வருமாறு
அவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.
மோடி தலைசிறந்த நிர்வாகி… தலைவர்..
நரேந்திர மோடி என்னை சந்திக்க வந்ததில் மிகவும்
மகிழ்ச்சி. அவர் என் நலம் விரும்பி. நான் அவரோட
நலம் விரும்பி.. தேர்தலில் அவர் விரும்பும் வெற்றி
அவருக்கு அவருக்கு கிடைக்க நான் என்னுடைய
வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.”

ரஜினி தரப்பிலிருந்து வெளியான –
“இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை”
என்கிற வார்த்தையை திருவாளர் “பொன்ரா”
அய்யோ பாவம் – எங்கோ தவற விட்டு விட்டார்…!!

.
எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்….
எவ்வளவு பெரிய பர்சனாலிடி –
இந்தியாவின் (அநேகமாக) அடுத்த பிரதமர் …

.
இரண்டு சூப்பர் பர்சனாலிடிகளுடன்
எவ்வளவு அற்புதமாக வந்திருக்க வேண்டிய நிகழ்ச்சி…
எப்படி எல்லாமோ சொதப்பி விட்டார்களே …

 

 

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to ரஜினிகாந்த் -மோடி – “டீ” சந்திப்பு …. தயாரிப்பு,டைரக்சன் எல்லாமே சொதப்பல் …!!

 1. Rajagopalan Rangarajan சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,
  திடீரென்று மோடி super flop
  ஆனது எப்படி ? ஒன்றும் புரியவில்லையே.

 2. Ganpat சொல்கிறார்:


  காவிரி மைந்தன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நாடும் நாமும் அனைத்து நலங்களைப்பெற்று
  சீரும் சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
  வணக்கம்.

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  இது ஒரு தேவையில்லாத சந்திப்பு. தமிழக பி.ஜ.பி செய்த குளறுபடி. அவர்களுக்கு எதாவது செய்து தமிழக சீட் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ரஜினி எதுவும் சொல்லப் போவதில்லை என்பது அறிந்ததே.மோடியை வைத்து காமெடி பண்ணி விட்டார்கள்.நிறைய எதிர்பார்ப்புடன் நடந்து புஸ ஆகிப் போனது.இதனை மோடி தவிர்த்திருக்க வேண்டும்.இது அரசியல் விளையாட்டு.

  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

  • M.Mani சொல்கிறார்:

   ஆம். தேவையில்லாத சந்திப்பு. மற்ற கட்சியினரிடமிருந்து பா.ஜ.க வித்தியாசமான கட்சி என்ற எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டுவிட்டனர். ரஜனி ஒரு நடிகர். அதற்கு மேல் ஒன்றுமில்லை. அவரை நாளைய பிரதமர் சந்தித்து தன் மதிப்பைக் கெடுத்துக்கொண்டுள்ளார்.

 4. GOPALASAMY சொல்கிறார்:

  Rajani is not sure about his film’s success. I never heard Rajani doing anything good for social cause. We believe, his only aim is money. There is no meaning for “HIS VOICE”. Modi did a blunder by meeting him. Tamil nadu BJP unit is responsible for this farce.

 5. Srini சொல்கிறார்:

  rajini always makes semi-political statements whenever there is a new film getting released….

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையவில்லை என்பதை எல்லோருடைய வயிற்றெலிச்சலும்/ஆதங்கத்திலிருந்தும் புரிந்துக்கொள்ளப்படுகிறது!

 7. N.Paramasivam சொல்கிறார்:

  இந்த நிகழ்ச்சியின் வெற்றி May 16 அன்று NDAக்கு கிடைக்கும் அதிகப் படியான எண்ணிக்கையில் தெரிய வரும். நீங்கள் கூறியபடி சொதப்பி இருந்தாலும், NDA அனைத்து முயற்சிகளும் எடுக்கிறார்கள் என தெரிகிறது.

 8. M Nithil சொல்கிறார்:

  I pity for Modi…. The TN BJP had degraded BJP by aligning with PMK and DMDK, now they had insulted Modi by arranging this meeting. Also, I think, Rajni’s support to any party would not have any influence among TN voters.

 9. எழில் சொல்கிறார்:

  நாலு ஓட்டு வரும்னு பிஜேபி எதிர்பாத்திச்சு. ஆனா எனக்கு என் பட ரிலீசும், அது பண்ணும் பணமும் தான் முக்கியம்னு ரஜினி மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

  • புது வசந்தம் சொல்கிறார்:

   அரசியல் குறித்து ரஜினி எதுவும் செய்யப்போவதில்லை. ஓட்டுப் போடுவது மட்டுமே அவரது நிலைப்பாடு, ஓட்டு போட்ட பின்னர் தன் வழக்கமான பதிலை ஊடகத்தில் கூறுவார்.இது பிஜேபி செய்த குளறுபடி.எதாவது கிடைக்காத என்ற நப்பாசை தான். இதில் சந்திப்பிற்கு முன் இல. கணேசன், “சந்திப்பிற்கு பின் நடக்கப்போவது சஸ்பென்ஸ்” என்று பேட்டி எல்லாம் கொடுத்தார். இதற்கு மோடி ஒரு சாமானியனை சந்தித்து இருக்கலாம். அந்த நாலு ஓட்டு கிடைத்திருக்கும்.

 10. GOPALASAMY சொல்கிறார்:

  Modi should not have gone to a money minded film actor’s house. This is most of the people’s opinion.

 11. Ganpat சொல்கிறார்:

  நம் நாட்டில் தேர்தல் என்பதை, நம்மை போன்ற எண்ணிக்கையில் சிறுபான்மையினர் ஒரு linear format இலேயே பார்க்கிறோம்.அதாவது வேட்பாளர்கள் அனைவரும் தத்தம் தகுதி யோக்கியதாம்சங்களை, வாக்காளர்கள் முன் நேர்மையாக பட்டியலிட அவர்களும் அதில் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள் எனும் அப்பாவி மனப்பான்மை.துரதிருஷ்டவசமாக நடைமுறையில் அவ்வாறு இல்லை.பெரும்பான்மையான மக்கள்
  தம் வசம் இருக்கும் ஓட்டுக்களை எவ்வாறு போடப்போகிறார்கள் என்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை.ஆகவே பல கட்சிகளும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக பல செயல்களில் ஈடுபடுகின்றன.

  மோடி, ரஜினியை சென்று பார்த்து பேசியது, இதில் அடக்கம்.இன்றைக்கு மோடி ஒருவருக்குத்தான் இவ்வளவு எதிர்ப்பு இருக்கின்றது.இதில் வேடிக்கை என்னவென்றால் அவருக்கும் மாறாக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கும் அவரை எதிர்ப்பவர்களிடமிருந்து பதில் கிடையாது.

  ஏதோ சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த ஒரே கலவரம் குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்தாற்போலவும் அதை நடத்தியவர் மோடி போலவும் இன்னும் பரப்புகிறார்கள்.இந்த நிலை காங்கிரசிற்க்கு மிகவும் சாதகமாக உள்ளது.இந்த தேர்தலில் காங்.தோற்பது அனேகமாக உறுதி.ஆனால் அவர்களுக்கு ஒரே நம்பிக்கை அடுத்த தேர்தல்.அதில் நம் முட்டாள் மக்கள் மீண்டும் நம்மையே கொண்டு வந்து விடுவார்கள் எனும் நம்பிக்கை.

  இத்தகைய சூழ்நிலையில் மோடி கடுமையாக போராடுகிறார்.தென்மாநில மக்களுக்கு அவர் கட்சியைப்பற்றியே சரியாக தெரியாத நிலை.எனவே அம்மக்களின் அன்பை பெற்ற சிலர் மூலமாக தன்னை நிலை நிறுத்த அவர் முயற்சி செய்ய வேண்டியுள்ளது.Since it has become an unwritten rule in India that one has to be popular to win elections,popularity is being outsourced as a commodity.

  இத்தனைக்கும் பிறகு மோடி பிரதமாராக வந்தால் அவர் என்ன செய்வார் என்பதை ஊகிப்பது கடினம்.ஏனெனில் இப்போ நாடு உள்ள நிலையில் அறுவை சிகிச்சை சில பிரச்சினைகளில் அவசியம்.அதை அவர் செய்ய முனையும் போது,அது அவரை இன்னும் unpopular ஆக்கலாம்.

  விதியைப்பாருங்கள்.இந்திய பிரதமர்களிலேயே மிக மோசமான மன்மோகன் சிங் தொடர்ந்து பத்தாண்டுகள் ஆள முடிந்தது.இவரை விஞ்சக்கூடிய “திறமை”யாளரும்,இதுவரை ஒரு குமாஸ்தா வேலை கூட பார்க்காத ராகுல் அடுத்த பிரதமராக வர ஆசைப்பட முடிகிறது.ஆனால் ஒரு பெரிய மாநிலத்தை 12 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக நிர்வாகம் செய்த மோடி அத்தனை எதிர்ப்பிற்கும் ஆளாக வேண்டியுள்ளது.

  இந்த தேர்தலில்,
  காங்/தி.மு.க,கட்சிக்கு ஒட்டு போடுபவர்கள்,
  சுயேச்சைகளுக்கு ஒட்டு போடுபவர்கள்,
  NOTA ஒட்டு போடுபவர்கள்,
  ஒட்டு போடவே போகாதவர்கள்
  ஆகிய அனைவரும்
  நேரடியாகவோ,மறைமுகமாகவோ,
  விரும்பியோ விரும்பாமலோ
  ராகுல் அல்லது AK அந்தோனி பிரதமராக வர உதவுகிறார்கள்.
  என்பதை நினைவில் நிறுத்தி முடிவெடுங்கள்.

 12. GOPALASAMY சொல்கிறார்:

  Thanks sri. ganpath. you mentioned about A.K. Antony. Everbody knows he was utter failure as defence minister.
  My qusetion is – what was his stand on MARAD massacre? Is it not a communal riot? Why he opposed CBI enquiry?
  There is systematic propaganda against Modi.
  Today in India, no political leader is having the guts to oppose Sonia except Modi. . Even Advani withdrew his statement about Sonia on Swiss a/c black money matter. All political parties are afraid of Sonia. This is not a good situation for our democracy and for our country.
  If this time congress not defeated, then we will become permanent slaves of sonia.
  a shameful situation.

  • Ganpat சொல்கிறார்:

   Thank you Sri.Gopalasamy..AK Antony would be preferred by Sonia as he would behave very similar to MMS and also he hails from a Southern State.Yes Sonia belongs to Italy which is notorious for Mafia.Who knows what is the under current!!.
   Today I read somewhere that the election Propaganda for Both BJP and Cong is the same now viz “If you vote for congress then Rahul will be the prime minister!”

 13. saamaaniyan சொல்கிறார்:

  சொதப்பலுக்கு காரணம் ” எத்தை தின்றால் பித்து தெளியும் ” என்ற நிலையில், ஓட்டுக்காக எதையாவது செய்து வைப்போம் என கட்சிகள் செயல்படுவதுதான் !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.