வைகோவுக்கு ஓட்டா …? (பாஜக கூட்டணியில் …பகுதி-3)

 

வைகோ வுக்கு என் இதயத்தில் எப்போதும்
தனியிடம் உண்டு. நன்கு படித்தவர்.
பண்பாளர். ஒழுக்கம் மிகுந்தவர்.
அனைவரிடத்தும் நன்கு பழகக்கூடியவர்.
அவர் இலக்கியம் பேசினால்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
எப்போதும் தமிழ் மக்களின் நலன்களுக்காக போராடக்கூடியவர்.
போகக்கூடிய தூரத்தில் எங்கு வைகோ நிகழ்ச்சி இருந்தாலும் தவறாமல் கலந்துக்கொள்ளக்கூடியவன் நான்.
இத்தனை ஆண்டுக் காலமாக
அரசியலில் இருந்தாலும் – பணம் சம்பாதிக்காதவர்..!
நிறைய நண்பர்களைச் சம்பாதித்திருப்பவர்..!!

இத்தனை பெருமைகளுக்குரிய வைகோ கடந்த
சில நாட்களாக நடந்து கொள்ளும் விதம் –
அவரைப்பற்றிய அத்தனை இமேஜையும் சுக்குநூறாக
உடைத்தெரியக்கூடியதாக இருக்கிறது.

பாஜக கூட்டணியில் சேருவது என்கிற முடிவை,
எந்தவித தயக்கமும் இல்லாமல் முதல் முதலில்
அறிவித்தவர் வைகோ – பின்னர் எந்த சந்தர்ப்பத்திலும்
அதில் எத்தகைய சந்தேகங்களும் ஏற்பட அவர் இடம்
கொடுத்ததே இல்லை. அதிகம் பேரம் பேசாமல்,
வெகு கௌரவமான முறையில் மதிமுகவுக்கு
ஒதுக்கப்பட்ட சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் – விஜய்காந்தின் பேரம் காரணமாக
பாஜக கூட்டணி ஒரு முடிவுக்கும் வராமல் –
இழுத்தடித்து கொண்டே போனபோது,
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து,
அவரும் தமிழருவி மணியனும் விஜய்காந்தைப் பற்றி,
ஒரே சமயத்தில் எல்லா கட்சிகளிடம் பேச்சு வார்த்தைகள்
நடத்துகிறார்; மாட்டுத்தரகர் போல் பேரம் பேசுகிறார்
என்று கடுப்படித்ததும் உண்டு. விஜய்காந்த் கட்சி குறித்து
அவருக்கு மதிப்பு கிடையாது என்பதும் வெளிப்படை.

பிறகு பேரங்கள் எல்லாம் முடிவடைந்து, ராஜ்நாத் சிங் தலைமையில்
பாஜக கூட்டணி உடன்பாடு கையெழுத்தான பிறகு –
வைகோ நடந்துகொண்ட விதம் தான் எதிர்பாராத
அதிர்ச்சியை அளித்தது. தான் விருதுநகர் தொகுதியில்
வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்
எடுத்துக்கொண்ட முயற்சிகள் இவ்வளவு காலமாக அவர்
சேர்த்து வைத்திருந்த நற்பெயரை நாசமாக்கி விட்டது.

திமுக குடும்பத்தில் அண்ணன்-தம்பி சொத்து தகராறை
பயன்படுத்திக் கொண்டு, அழகிரியை அவர் வீட்டிற்கு
சென்று, சந்தித்து ஆதரவு கேட்டது வைகோ விற்கு
எந்தவிதத்திலும் நன்மை பயக்கக்கூடியது அல்ல.

azhagiri and vaiko

தா.கிருட்டினன் கொலை,
தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு –
அதைத்தொடர்ந்து 3 அப்பாவிகள்
உயிருடன் எரிக்கப்பட்டு சாவு,
திருமங்கலம் தேர்தலில் கையாளப்பட்ட
அகில இந்தியாவிலும் பேசப்பட்ட ‘திருமங்கலம் பார்முலா’
-இத்தனையையும் வைகோ எப்படி புறக்கணிக்கத்
துணிந்தார் ? இப்படிப்பட்ட ஆசாமி மூலம் கிடைக்கக்கூடிய
வெறும் 3 அல்லது 4 ஆயிரம் ஓட்டுகளுக்காகவா …?

அடுத்து, விஜய்காந்தை தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று
வடையும் அல்வாவும் கொடுத்தது ;
தன் சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில்,
தன் வீட்டு வாசலிலேயே கூட்டப்பட்ட கூட்டத்தில்,
விஜய்காந்தை “புரட்சிக் கலைஞர்”,
“கேப்டன்” “தலவர் விஜய்காந்த் அவர்கள்”
என்றெல்லாம் விளித்து,
“வைகோவுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று
விஜய்காந்தை விட்டு தனக்கு recommendation செய்ய
வைக்கிற அளவுக்கு எப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை …?

vaiko and vijaykanth-1

வைகோவின் தகுதி என்ன ? அனுபவம் என்ன ?
தன்மைகள் என்ன ? தியாகங்கள் என்ன ?
விஜய்காந்தை தலைவராக ஏற்று,
அடுத்த 2016 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து
போட்டியிடும் நிலைக்கு வைகோ இறங்கி விட்டாரா ?

தமிழகத்திற்கான பிரச்சினைகள் எதைப்பற்றியும்,
பாஜகவுடன் கூட்டணி அமைக்கும்போது பேசவில்லை வைகோ.
மதிமுக தேர்தல் அறிக்கையில்
கூறப்பட்டிருந்த எந்த விஷயத்தையும் பாஜக ஏற்பதாகச்
சொல்லவில்லை. இந்த நிலையில்,
தேர்தல் முடிந்தபிறகு, முடிவுகள் வந்த பிறகு
(ஒன்றோ இரண்டோ தொகுதிகளில் மதிமுக
வெல்கிறது என்றே வைத்துக் கொண்டாலும்,)
வைகோ சொல்லும் எதையும் பாஜக தலைமை ஏற்றுக்
கொள்ளும் என்பதற்கான நம்பிக்கை எதையும் கண்ணில்
காணோமே..

வைகோவைப் பொறுத்த வரையில்,
காங்கிரசை ஒழிக்க வேறு வழி ஏதும் இல்லாத நிலையில்
பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவிர்க்க இயலாத விஷயம்.
ஆனால், ஜாதிவெறி முற்றிப் போன பாமக வையும்,
தனிமனித ஒழுக்கமே இல்லாத,
ஓட்டுக்களை வைத்து வெளிப்படையாக பண பேரம் நடத்திய
விஜய்காந்த்தின் தேமுதிக வையும் -வைகோ
தலைமேல் வைத்துக் கொண்டாடுவது –
அவர் மீதுள்ள அத்தனை மதிப்பையும்
மரியாதையையும் நாசமாக்கி விட்டது.

நேற்றிரவு அட்ரஸ் இல்லாத திமுக பேச்சாளர் ஒருவர்
பேசுவதை கலைஞர் டிவியில்,
திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள்.
“என் கூட்டத்திற்கு குடிப்பழக்கம் உள்ளவர்கள்
யாரும் வரக்கூடாது என்று சொல்லும் வைகோவுக்கு –
விஜய்காந்தை பக்கத்தில்வைத்துக்கொண்டு இதைச் சொல்ல
தைரியம் உண்டா ?” என்று அவர் கேட்கிறார்…
வைகோ விற்கு இது தேவையா ?

இத்தனையும் இருந்தாலும் –
வைகோவின் குணங்கள், பின்னணி, பண்பாடு,
செயல்பாடு ஆகியவை இன்னும்
மனதின் அடிப்பகுதியில் அழியாமல் இருப்பதாலும்,

எங்கே இருந்தாலும்,
யாருடன் கூட இருந்தாலும்,
தமிழருக்காகவும், தமிழகத்திற்காகவும் குரல் கொடுக்க
வைகோ என்றும் தயங்க மாட்டார் என்பதாலும் –
வைகோவின் குரல் பாராளுமன்றத்தில்
மீண்டும் ஒலிக்க வேண்டும் என்கிற ஆசையினாலும்
இப்போதும் சொல்லத் தோன்றுகிறது-

“வைகோ இந்த தேர்தலில் –
அவசியம் வெற்றி பெற வேண்டும்”.

(யாருக்கு ஓட்டு ? இடுகை தொடர்கிறது -பகுதி-4ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to வைகோவுக்கு ஓட்டா …? (பாஜக கூட்டணியில் …பகுதி-3)

 1. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  சறுக்கல் இல்லாத மனிதன் இல்லை.தான் தனிமை படுத்த படுவோமா, என்ற அச்சம்தான் இதற்க்கு காரணம்..

 2. N.Paramasivam சொல்கிறார்:

  வை.கோ. வெற்றி பெற்றால் பாராளுமன்றத்தில் தமிழ் நாட்டிற்காக ஜாதி மத பேதமின்றி ஒரு குரல் கேட்கும்.

 3. Rajagopalan Rangarajan சொல்கிறார்:

  காவிரிமைந்தன்,

  பாதி படிக்கும்போது, வைகோ வேண்டாம் என்று
  சொல்லி விடுவீர்கள் என்று நினைத்தேன்.
  அருமையாக முடித்திருக்கிறீர்கள். நல்லது, கெட்டது
  இரண்டையும் சொல்லும் மிக நேர்மையான விமரிசனம். நீங்கள் சொல்வது போல், வைகோ அவசியம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

 4. GOPALASAMY சொல்கிறார்:

  what sri paramasivam told is correct.

 5. SEETHA சொல்கிறார்:

  எந்த அடிப்படையில் மோடிக்கு ஓட்டு போட வேண்டும் என்று சொல்கிறீகள்? குஜராத்தை மிக முன்னேறிய மாநிலமாக மாற்றியதற்கான ஆளுமைக்காகவா?கடந்த 20 நாட்களாக பத்திாிக்கைகளிள் வந்த இந்திய மாநிலங்களுக்கிடையான “Social மற்றும் Economic Index” புள்ளி விவரங்கள் அடிப்படையில் மிக முன்னேறிய மாநிலங்களாக முதல் மூன்று இடங்களில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டரா உள்ளன. உங்கள் மோடி ஆளும் குஜராத் 7 மற்றும் 10 இடங்களுள்தான் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் Frontline Monthly Magazineல் வந்த Human Index Serveyல் 1991 ல் வருமை கோட்டிற்கு உள்ளவர்களிகளின் எண்ணிக்கை அடிப்படையில் குஜராத்தை விட தமிழ்நாட்டில் மிக அதிகமானவர்கள் இருந்தனர். 2013ல் வருமை கோட்டிற்கு உள்ளவர்களிகளின் எண்ணிக்கை குஜராத்தை விட தமிழ்நாட்டில் மிக மிக குறைவாக உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக வேகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. குஜராதின் வளர்ச்சிக்கு மோடி காரணம் என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உங்களுக்கு எப்பொழுதும் என்றைக்கும் பிடிக்காத ஒத்துக்கொள்ள முடியாத “கருணாநிதியும் மற்றும் ஜெயலலிதாவும் தான் காரணம். Please refer today(15/4/14) The Hindu “LETTERS TO THE EDITOR” Pageல் J.F.Dawson writes under “Poliyical Culture” Statistics of Development indices such as GDP growth and human development over the past 20 years show that Tamilnadu is way ahead of Gujarat. Tamilnadu’s model of development is definitely better than the much-hyped Modi model in Gujarat. கடந்த 20 வருடங்களாக தமிழ்நாட்டை ஆண்டவர்கள் உங்களுக்கு எப்பொழுதும் என்றைக்கும் பிடிக்காத ஒத்துக்கொள்ள முடியாத “கருணாநிதியும் மற்றும் ஜெயலலிதாவும் தான்.

  • எழில் சொல்கிறார்:

   புள்ளி விபரம் என்பது, தேவைக்காக வளைத்து கொள்ள கூடிய ஒரு ஆயுதம். ஏன் GDP கூட ஒரு பக்க சார்புடைய கணிப்பு தான். உதாரணமாக ஒரு ஏரியை அழித்தோ அல்லது சாதாரண மக்களின் நிலத்தை வளைத்து போட்டு ஒரு தொழிற்சாலையோ இல்லை ஒரு ஷாபிங் மாலோ கட்டினால் GDP உயரும். அதன் பின்னணியில் உள்ள ஊழலையும், ரவுடி தனத்தையும், அப்பாவி மக்களின் வாழ்வுரிமை, சந்ததியினருக்கான நீராதாரத்தை அழித்தமையையும் எப்படி கணக்கிடுவீர்கள்? திமுக கடந்த முறை எதிர் கட்சி தலைமை கூட ஏற்க முடியாத அளவுக்கு நசிஞ்சு போனதுக்கு காரணம் என்ன? ‘Governance ‘ எனும் ‘ஆளுகை’ பற்றி ஏதேனும் கணக்கெடுப்பு உண்டா? உதாரணமாக ஒரு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று எந்த சலம்பலும் இல்லாமல் அரை மணி நேரத்தில் ஒரு சாதி சான்றிதழை பெற்று வர முடியுமா? அப்படியான ஒரு மாற்றத்தை தான் என்னை போன்ற அப்பாவி பொது மக்கள் வேண்டி நிற்கிறார்கள். அதை கடந்த 20 வருடத்தில் திமுக/அதிமுக ஆட்சி இதை செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

   • Seetha சொல்கிறார்:

    ஒரு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று எந்த சலம்பலும் இல்லாமல் அரை மணி நேரத்தில் ஒரு சாதி சான்றிதழை பெற்று வர வேண்டும் என்றால் கண்டிப்பாக லஞ்சம் கொடுத்துதான் வாங்க முடியும். ஒரு சாதி சான்றிதழ் பெற வேண்டும் என்றால் அதற்கு குறைந்த பட்சம் 5 நாட்கள் வேண்டும். அதற்குதான் நமக்கு பொறுமை கிடையாதே. நீங்கள் உங்களை பின்நோக்கி பாருங்கள். எத்தனை இடங்களில் பொறுமை இல்லாமல் லஞ்சம் கொடுத்து வாங்கினீர்கள். ஏன் மற்றவா்களை சொல்கிறீர்கள், நீ்ங்கள், நான் மற்றும் இந்தியாவில் உள்ள மக்களில் 99.999999999%ம் Corrupted. புள்ளி விபரம் என்பது, தேவைக்காக வளைத்து கொள்ள கூடிய ஒரு ஆயுதம், அப்படியென்றால் மோடிக்காக நீங்கள் கொடுக்கும் புள்ளி விபரங்கள்?

   • Seetha சொல்கிறார்:

    “திமுக கடந்த முறை எதிர் கட்சி தலைமை கூட ஏற்க முடியாத அளவுக்கு நசிஞ்சு போனதுக்கு காரணம் என்ன? ‘Governance ‘ எனும் ‘ஆளுகை’ பற்றி ஏதேனும் கணக்கெடுப்பு உண்டா? ” இந்த வரிகளை பற்றி எழுதும்போது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். இதிலிருந்து எனக்கு ஒன்று புரிகிறது, உங்களுக்கு இந்திய அரசியலைப்பற்றியும், மக்களைப்பற்றியும் ஒன்று தெரியவில்லை என்று. உங்களுக்கு சிறிது ஞாபகப்படுத்துகிறேன், 1996 தமிழக சட்டசபை தேர்தலில் தமாகவை சேர்ந்த SR பாலசுப்பிரமணியன் தான் எதிர்கட்சி தலைவர். ADMK வெறும் நான்கு இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. ஆனால் 2001 தமிழக சட்டசபை தேர்தலில் ADMK 140 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனி பெறும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அப்பொழுது தமாக என்ற கட்சியே இல்லை.

    • எழில் சொல்கிறார்:

     சீதா அவர்களே நான் எழுதியவற்றை மீண்டும் ஒரு முறை படியுங்கள். புள்ளி விபரங்கள் ஒரு பக்க சார்பானவை என்று எனது பின்னூட்டத்தில் நிறுவ முயற்சித்திருக்கிறேன். ஆனால் நீங்களோ என்னிடமே புள்ளி விபரங்கள் கேட்கிறீர்கள்?! (please get to the core)

     சாதி சான்றிதழ் பற்றி நான் எழுதியது ஒரு ஆளுகை எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கான ஒரு எடுத்துகாட்டு. நல்ல ஆளுகை என்பது GDP உயர்வில் இருப்பதை விட ஒரு சாதாரண குடிமகன் தன்னுடைய உரிமைகளை எவ்வளவு எளிதாக தன்மானத்துடன் பெற்று கொள்வதில் தான் இருக்கிறது என்பதை புரிய வைக்க.

     என் பதிவில் எங்காவது மோடிக்கு ஓட்டு போடுங்கள் இல்லை ஆதரவு அளியுங்கள் என்று சொல்லி இருக்கிறேனா? பின் எப்படி நீங்கள் என்னை மோடி ஆதரவாளனாக கொள்ளலாம்?! (Don’t build roadblocks out of assumptions)

     1996 இல் அதிமுக 4 இடங்கள் என்பது உலகுக்கே தெரியும். ஆனால் நான் அண்மையில் நடந்த தேர்தலை, பலருக்கு நினைவில் இருக்கும் என்பதால் ஒரு எடுத்துகாட்டாக தான் எழுதியிருக்கிறேன். எனது பதிவின் கடைசி வரியை மீண்டும் படியுங்கள். எம்ஜிஆர் மறைவுக்கு பின் திமுக / அதிமுக இரு கட்சிகளும் 5 வருடத்திற்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாமல் போனதிற்கு காரணம் என்ன என்பதை மட்டும் முடிந்தால் சற்று விளக்குங்கள் மேற்கொண்டு தொடர்ந்து பேசலாம்.

     தயவு செய்து பதிவை சரியாக படிக்காமல், உங்கள் எண்ணத்திற்கு எதையும் கற்பனை செய்து கொண்டு பின்னூடம் இடாதீர்கள். நேரம் எல்லாருக்கும் பொன்னானது.

     • Seetha சொல்கிறார்:

      “எம்ஜிஆர் மறைவுக்கு பின் திமுக / அதிமுக இரு கட்சிகளும் 5 வருடத்திற்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாமல் போனதிற்கு காரணம் என்ன என்பதை மட்டும் முடிந்தால் சற்று விளக்குங்கள் மேற்கொண்டு தொடர்ந்து பேசலாம்.” இது ஒரு வகையான மக்களின் ஆளுமை. இதே முறையில் தான் கேரளாவில் சுதந்நிரம் அடைந்திலிருந்து கம்யூனிஸ்களும், காங்கிரஸும் ஓவ்வொரு ஐந்து ஆண்டும் அடுத்து அடுத்து மாறி மாறி மக்களால் ஆட்சி கட்டிலில் ஏற்ற படுகிறார்கள். அதனால் தான் கேரளா மிகவும் முன்னேறிய மாநிலமாக கருதபடுகிறது. இது ஒரு வகையான மக்களின் “Check and Balance” ஆளுமை. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்கள் தொடர்ந்து 40 வருடங்கள் ஆட்சி செய்தார்கள். கம்யூனிஸ்களின் ஆளுமையால் மேற்கு வங்காளம் அடைந்த பயன் என்ன? மோடியின் குஜராத்தை விட தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறேன். என்னுடைய பின்னுட்டத்தில் எங்கும் நீங்கள் மோடியின் ஆதரவாளன் என்று சொல்லவில்லை. நான் மோடியின் குஜராத்தை பற்றி பொதுவான என்னுடைய கருத்தை சொன்னேன்.

 6. எழில் சொல்கிறார்:

  ஐயா வைகோ பற்றிய உங்கள் பார்வை நூற்றுக்கு நூறு ஏற்று கொள்ள கூடியதே. தமிழ்நாட்டின் 39 ,புதுவையின் ஒன்று என இவை அனைத்தையும் ஆராய்ந்தால் நாடாளு மன்றத்துக்கு செல்ல தகுதி அடிப்படையில் முதன்மையானவர் வைகோ. அவருக்கு எதிராக ராஜபக்சேவின் கை கூலிகளும், கேரளா ரிசார்ட் முதலைகளும், தூத்துக்குடி தொழிலதிபரும் பணத்தை தண்ணியாக விருதுநகரில் இறைப்பதாக அங்கிருந்து வந்த ஒருவர் கூறினார். கேரளா பதிவிலக்கம் கொண்ட ஜீப்கள் காங்கிரஸ் கொடியுடன் விருது நகரில் வலம் வருவதாகவும் சொன்னார். இவற்றை எல்லாம் தாண்டி வைகோ நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.

 7. Sudhagar சொல்கிறார்:

  Vaiko is a perfect example of how a good man is destroyed of his qualities because of bad society he is living in. You yourself have stated Vaiko’s good qualities but at the same time, we also need to think about why he was not recognized by general public and as a result made him to bend towards other less qualified people like you mentioned.

 8. Pandian சொல்கிறார்:

  சார், தற்கால அரசியல் சூழலில் நீங்கள் நிலை நிறுத்த விரும்புவது என்ன என்பதில் தெளிவடைய வேண்டும். வைகோ பிம்பத்தையா, மதிமுக என்னும் கட்சியையா. வைகோ அதில் தெளிவாக இருக்கிறார். அது தேவையும் கூட. அதிலும் ஒரு பேலன்ஸ் உடன் அவர் இயங்குவதாகவே படுகிறது. நல்ல பாட்டு என்பது வேறு. பரிசுக்குள்ள பாட்டு என்பது வேறு. வைகோ இன்னும் திடமான தொண்டர்களைச் சேர்க்க வேண்டும்.

 9. Ganpat சொல்கிறார்:

  Seetha ji,
  I do not know whether you live in TN state or not but as a person residing in this state for 20 years,I can vouch that the only thing that grew under the kazhakam rule is CORRUPTION.
  As for statistics there are three lies..Lie.Damn Lie and statistics..
  Thank you

  • Seetha சொல்கிறார்:

   As for statistics there are three lies..Lie.Damn Lie and statistics..அப்படியென்றால் மோடிக்காக நீங்கள் கொடுக்கும் புள்ளி விபரங்கள்?

  • Seetha சொல்கிறார்:

   ராகுல் காந்தி ஒரு இடத்தில் மோடியை ஹிட்லர்வுடன் ஒப்பீட்டு இருப்பார். ஹிட்லர் ஒரு வகையில் ஏற்று கொள்ள கூடிய சர்வாதிகாரி. ஏனென்றால் அவர் தன்னுடைய இனமான ஜெர்மானியர்கள் மற்றும் தன் நாடான ஜெர்மனியும் உலகை ஆள வேண்டும் பேராசை காரணமாக சர்வாதிகாரத்தை பயன்படுத்தினார், தனக்காக அல்ல. அதே காலகட்டத்தில் ஒரு சர்வாதிகாரி இருந்தார். அவா் தன் அருகில் இருந்வா்களையும், தன் இனத்தவர்யும் தனக்காக கொன்று குவித்த, வினவுகளால் ஒப்பற்ற தலைவன் என்று போற்றப்படும் ஜோசப் ஸ்டாலின். நான் மோடியை ஹிட்லர்வுடன் ஒப்பீட மாட்டேன் ஆனால் ஜோசப் ஸ்டாலினுன் ஒப்பீடுவேன். மோடி, அரசிலுக்கு வருவதற்காக தன் மனைவியை அழித்தார். முதலமைச்சர் பதவிக்காக சங்கர் சிங் வகேலா மற்றும் கேசுப்பாய் பட்டேல் ஆகிய இருவரையும் அரசியலில் இருந்தே காவு வாங்கினார். முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொள்ளவதற்காக 2002ல் 2000ம் முஸ்லிம் மக்கள் கொல்லப்படுவதற்கு உறுதுனையாக இருந்தார். தற்பொழுது பிரதமர் பதவிக்காக BJPயின் ஆலமரமான LK அத்வானி மற்றும் அதன் விழுதுகளான முரளி மனோனர் ஜோஷி, ஜஸ்வந்சிங் மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியவா்களை வெட்டி சாய்த்தாா். கருணாநிதி போன்ற ஊழல்வாதிகள் மக்களின் பணத்தைத்தான் கொள்ளையடிப்பார்கள். மோடி மற்றும் ஜோசப் ஸ்டாலின் போன்ற சர்வாதிகாரிகள் மக்களையே கொள்ளையடிப்பார்கள்.

   • N.Paramasivam சொல்கிறார்:

    ஹிட்லருக்காக வாதாடவும் ஒருவர் இருப்பது ஆச்சர்யம். அதே போல், கருணாநிதி அவர்கள் ஸ்டாலினின் பால் ஈர்க்கப்பட்டு, தனது மகனுக்கே ஸ்டாலின் என பெயரிட்டார என படித்து இருக்கிறேன். இப்போது வேறு மாதிரி படிக்கிறேன். எதை ஏற்பது? அதே போல் இப்போது திடீரென அத்வானி, ஜோஷி, ஜஸ்வந்த் மற்றும் சுஷ்மா ஆகியோருக்கு பலப் பல புது அபிமானிகளை பெற்று தந்திருப்பது, மோடியின் சாதனை. இந்த புது அபிமானிகள் நேற்று வரை அவர்களை சாடி வந்தவர்கள். ஆச்சர்யமாக உள்ளது. வேறு ஒரு ஆச்சர்யம் என்ன எனில், கேரளா மிக முன்னேறிய மாநிலம் என்பது. மின்சார தட்டுபாடு, வேலை வாய்ப்பு இல்லாத வாலிபர்கள், தொழில் வளர்ச்சி இல்லாத குறை கொண்ட கேரள மக்கள் இதை படித்தால் ……..

   • எழில் சொல்கிறார்:

    சீதா அவர்களுக்கு,
    நீங்கள் கூறும் தமிழ் மக்களின் மக்களின் “Check and Balance” ஆளுமை எம் ஜி ஆர் ஆட்சியின் போது எங்கு போனது? கேரளாவில் அடிப்படை கல்வியறிவுள்ளவர்கள் தமிழ் நாட்டை விட அதிகம் இருப்பதாலோ, 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படுவதாலோ அது முன்னேறிய மாநிலம் ஆகி விடாது. கேரளாவில் எவரும் முதலீடு செய்ய தாயரில்லை. வேலை வாய்ப்புகளுக்கு இன்னும் மத்திய கிழக்கையே நம்பி இளைஞர்கள் இருக்கிறார்கள். மேற்கொண்டு உங்கள் கருத்துகள் ஏற்கனவே இங்கு நன்கு அறிமுகமான ஒருவரின் பாணியில் இருப்பதால் மேற்கொண்டு உங்கள் கருத்துக்களுக்கு பதில் எழுதுவதை தவிர்க்கிறேன். Your call mate..

 10. D. Chandramouli சொல்கிறார்:

  I fully echo your sentiments about Vaiko. Pity that he, long considered to be a man of principles, has to bend to situational factors. If and when a strong third front (outside of DMK, AIADMK & Congress) emerges in TN (hopefully headed by BJP) in future, Vaiko’s role would be significant. Hopefully, Ramadass, Vijaykant and the like wouldn’t be part of the future third front then. To start with, BJP needs numbers in the Parliament for that to happen and to lay a good foundation in TN later.

 11. reader சொல்கிறார்:

  “வைகோ இந்த தேர்தலில் –
  அவசியம் வெற்றி பெற வேண்டும்”

  அதற்காகத்தானே அவரும் அல்லாடுகிறார்.

  இந்த சமரங்களும் இல்லாவிட்டால் மொத்தமாகக் கடையை மூடி விடவேண்டியதுதான். பின்னர் இவரும், மல்லை சத்யாவும், ஜோயலும் மட்டுமே தாய்க்கழகம் திரும்ப வேண்டியிருக்கும்.

  அவரின் தேர்தல் அறிக்கைகள் எல்லாம் அவர் கட்சியின் விருப்புகள் என்ற அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 12. Ganpat சொல்கிறார்:

  வைகோ ஒரு நல்ல மனிதர்.அவர் 2004ஆண்டு செய்த இமாலய த்தவறு அவரை இன்னும் தலைதூக்க விடாமல் செய்கிறது.நண்பர்கள் சொல்வது போல இப்போ அவர் இருப்பது ஒரு நல்ல கூட்டணி.(அதாவது எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி)..பார்க்கலாம்!

 13. Sanmath சொல்கிறார்:

  Whether BJP’s alliance in Tamil Nadu wins or not, Vaiko should enter parliament. His convincing and justifying nature of putting arguments will give TN a better stand. Also he has a good image in North Indian media too. When he speaks the so-called leaders of our country are ready to listen. People of TN can very strongly say that there is someone who is there to speak for the state. Let it be cauvery issue or TN fisherman being shot or Mullai Periyar or Kerala’s dominance in getting certain powers of us in railways, whatever it is, this man will definitely speak out. I am not very sure about the positive reactions for what he speaks, but definitely it will be listened. (I can very strongly say that there is none to speak for our state presently-they just shout, thats all)

 14. Seetha சொல்கிறார்:

  வைகோ ஒரு நல்ல மனிதர். ஆனால் அவர் எடுத்த பல தவறான முடிவுகளால் அவரும் மதிமுகவும் ஒரு சாதீய கூண்டுக்குள் அடைப்பட்டுவிட்டது என்பதை வைகோவிற்காக 1989, 1998, 1999 ஓட்டு போட்டவன் என்கிறமுறையில் சொல்லுகிறேன். எங்கள் பகுதிகளில் மதிமுக ஒரு சாதீய கட்சியாகத்தான் மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒரளவிற்கு வைகோ விளம்பர விரும்பி. 1999 பிஜேபி ஆட்சில் அவா் கேபினட் அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவியை பெற்றிருக்கவேண்டும். அதை விடுத்து நான் மிகப்பெரிய தியாகி என்று போற்றுவதற்காக அந்த பதவியை தவற விட்டார். மீண்டும் அதே மாதிரியான தவறை இப்பொழுது செய்யாமல் இருந்தால் அவருக்கும் மதிமுகவிற்கும் மற்றும் தமிழக மக்களுக்கும் ஒரு வரபிரசாதம் என்று நினைக்கிறேன்.

 15. Ganpat சொல்கிறார்:

  seetha ji,
  உங்கள் அனைத்து பின்னூட்டங்களும் கீழ்கண்டவற்றை தெளிவாக்குகின்றன.
  >நீங்கள் மோடியை வெறுக்கிறீர்கள்.அவர் கருணா, ஜெயா, சோனியா மற்றும் ஹிட்லரை விடமோசமானவர் என நம்புகிறீர்கள்.
  >>அவரைத்தவிர வேறு யார் பிரதமராக வருவதிலும் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
  >>>தமிழகம் கேரளா போன்ற மாநிலங்கள் குஜராத்தை விட முன்னேறிய மாநிலங்கள் என நம்புகிறீர்கள்.
  >>>>நான் அறிவுபூர்வமாக அணுகும் பிரச்சினையை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகுகிறீர்கள்.
  உங்கள் கருத்திலிருந்து மாறு பட்டாலும் உங்கள் கருத்து சொல்லும் உரிமையை மதித்து விடை பெறுகிறேன்.

 16. sundar kannan சொல்கிறார்:

  திரு கா.மை. அவர்களின் இந்த வலைப்பூ பதிவுதான் அதிகமான பின்னூட்டங்கள் பெற்றுள்ளதாக நினைக்கிறேன்.
  திரு வை.கோ. அவர்களின் மீது மக்கள் கொண்டுள்ள நன்-நம்பிக்கையைத்தான் இந்த பின்னூட்டங்கள் காட்டுகின்றன.
  நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.