தமிழக பாஜக வுக்கு ஓட்டா …? (யாருக்கு ஓட்டு – பகுதி-4)

 

தமிழக பாஜக கூட்டணியில் உள்ள இதர கட்சிகளைப்
பார்த்தோம். இனி தமிழ் நாடு பாஜக வை கொஞ்சம்
அலசுவோமே…(இங்கு நான் பாஜக என்று சொல்லும்
போதெல்லாம் தமிழக பாஜக என்றே எடுத்துக் கொள்ள
வேண்டும். ஏனெனில் இந்த கூட்டணிக்கு முழுக்க முழுக்க
தமிழக பாஜக தான் பொறுப்பு..! மேலிடம் அல்ல…!!!)

BJP

39 இடங்கள் உள்ள தமிழ்நாடு பாராளுமன்ற தொகுதிகளை
அள்ளிக் கொடுப்பதில் கர்ணனாக இருந்திருக்கிறது பாஜக
தமிழகப் பிரிவு.

எந்த அடிப்படையில் கட்சிகளைக் கூட்டு சேர்த்தது …?
கொள்கை, லட்சியம் என்றெல்லாம் எதுவும் வேண்டாம். 
நரேந்திர மோடியை பிரதமராக ஏற்றுக்கொண்டால்
போதும் – கூட்டணியில் இடம் உண்டு என்று
தீர்மானிக்கப்பட்டு விட்டது. இன்னொரு தகுதி –
தேர்தல் செலவுகளைச் சந்திக்க, கட்சிக்கு தாராளமாக நிதி
கொடுக்க வேண்டும்.

ஆக “நரேந்திர மோடி”க்கு “ஜே” சொன்ன
கோடீஸ்வரர்கள்  ஆர்.கே.பச்சமுத்து,ஏ.கே.ஷண்முகம்,
கொங்கு ஈஸ்வரர்… என்று பட்டியல் உருவாகியது.

39 இடங்களில் – தேமுதிக -14, பாமக-8,
மதிமுக-7 போக மீதி 10ல் மேலேயுள்ள கோடீஸ்வரர்கள்
3 பேர் போக மீதி -7 பேர் தான் உண்மையில் பாஜகவினர்.

இந்த 7ல் ஒன்றை நீலகிரி ஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு
விற்றாகி விட்டது. ஆக மீதி பாஜக வேட்பாளர்கள் என்று
சொல்லக்கூடியவர்கள் -6 பேர் மட்டுமே.

இப்படி மரியாதையில்லாத கூட்டணி ஒன்றை இவ்வளவு
மெனக்கெட்டு அமைத்ததை விட, பேசாமல் வைகோவின்
மதிமுக வை மட்டும் சேர்த்துக் கொண்டு தேர்தலில்
இறங்கி இருக்கலாம். சீட்டுக்கள் ஒன்றிரண்டு மட்டுமே
கிடைத்தாலும் மரியாதையும், கௌரவமும் மட்டுமாவது
மொத்தமாக மிஞ்சி இருக்கும்.

முன் பத்தியில் கூறியுள்ள விதத்தில் சீட்டுகளை கூறு
போட்டமைக்காகவும், பாஜக லட்சியங்களுக்கு
எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாத, கூட்டணிக்கு
எந்தவிதத்திலும் மரியாதையோ, கௌரவமோ சேர்க்காத
கட்சிகளை கூட்டணியில் சேர்த்ததற்காகவும் –

கங்கை பிறக்கும் கங்கோத்ரியிலேயே சென்று
“ஸ்நானம்” செய்தால் கூட –
தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு விமோசனம் கிடைக்காது.

இதை ஒரு பக்கம் விடுங்கள் …

மத்திய அரசின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய –
தமிழ் நாட்டிற்கே உரிய –
சில தீவிரமான பிரச்சினைகள்.

–  கர்னாடகாவிடமிருந்து நியாயமான முறையில் நமக்கு
வந்து சேரவேண்டிய காவிரி நீர்,
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி அதற்கென உருவாக்கப்பட
வேண்டிய கட்டுப்பாட்டு ஆணையங்கள் உடனடியாக
அமைக்கப்பட வேண்டியது….

–  கேரள அரசு – முல்லைப் பெரியாறு விவகாரத்தில்
உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட குப்பைக்கூடையில் போட்ட
அக்கிரமத்திற்கு உரிய முறையில் உடனடியான தீர்வு….

தமிழக மீனவர்களை மீண்டும் மீண்டும் வதைக்கும்
இலங்கையை உடனடியாக வழிக்குக் கொண்டு வருதல் …

இதற்கு அடிப்படையாக- திருமதி இந்திரா காந்தியால்
இலங்கைக்கு (சிரிமாவோ பண்டாரநாயகாவுக்கு)
தத்தம் செய்யப்பட்ட கச்சத்தீவு உடன்படிக்கையை
ரத்து செய்து, கச்சத்தீவை இந்திய ராணுவம்/கடற்படையின்
கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வருதல் ….
(இதை இந்தியா ஒருதலைப்பட்சமாக இந்த ஒப்பந்தத்தை
ரத்து செய்யக்கூடிய  உரிமையை ஐ.நா.விதிகள்
கொடுக்கின்றன.
தேவை -மன வலிமையும், செய்ய வேண்டும் என்கிற
எண்ணமும் மட்டுமே)

நெய்வேலி, கல்பாக்கம், கூடங்குளம் மின்நிலையங்களில்
ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள பங்கீட்டு முறையைத்
தாண்டி, மீதி இருக்கும் உபரி மின்சாரத்தை தமிழ் நாட்டிற்கு
இரண்டு வருட காலத்திற்கு ஒதுக்குதல் …

தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கெனவே குஜராத்தில் உள்ள
தனியார் மின் உற்பத்தி நிலையத்துடன் கொள்முதல் செய்ய
செய்துள்ள ஒப்பந்தத்தின்படி  3300 மெகாவாட் 
மின்சக்தியை மத்திய Grid வழியாக தமிழ்நாட்டிற்கு 
கொண்டு வர உடனடி உதவி.

மேலே கூறியன எல்லாம் இதர மாநிலங்களும்
(இலங்கையும்) சம்பந்தப்பட்டவை.

இதைத்தவிர,மத்திய காங்கிரஸ் அரசால் கடந்த
காலங்களில் வேண்டுமென்றே குறைக்கப்பட்ட  
ரேஷன் மண்ணெண்ணை, சர்க்கரை,
அரிசி ஆகியவற்றின் அளவை மீண்டும் நியாயமான
அளவிற்கு உயர்த்துதல் …

தமிழ் நாட்டில் நீண்ட காலமாக வெறும் அறிவிப்போடு
நின்றுவிட்ட அகல ரெயில்பாதைகள், நெடுஞ்சாலைகள்
மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு …

இவை அனைத்தையும் – மத்தியில் புதிதாகப்
பதவியேற்கவிருக்கும் அரசிடமிருந்து,
செல்வாக்கை பயன்படுத்தியோ –
அழுத்தம் கொடுத்தோ,
போராடியோ –
பெறக்கூடிய அளவிற்கு தமிழ்நாட்டிலிருந்து
தேர்ந்தெடுக்கப்படப்போகும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
மற்றும் கட்சிகளுக்கு பலமும் வேண்டும்…
“தில்”லும் வேண்டும்…!!

தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படக்கூடிய பாஜக
MPக்களால் இதைச் செய்ய முடியுமா ?
கர்னாடகா பாஜகவையும், கேரளா பாஜகவையும் மீறி
தமிழக பாஜக  உறுப்பினர்கள் சொல்வதை நிறைவேற்றும்
அளவிற்கு மத்திய பாஜக அரசு இணங்கி வருமா ?

அகில இந்திய கட்சிகள் எல்லாவற்றிற்கும் உள்ள பொதுவான
ஒரு நிலை இது.அவற்றின் மாநில பிரிவுகள் சொல்வதை –
விஷயம் இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தால்
அகில் இந்தியத் தலைமை காதிலேயே போட்டுக்கொள்ளாது.
ஒரு மாநிலப் பிரிவை விரோதித்துக் கொண்டு
அல்லது அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டு –
அடுத்த மாநிலத்திற்கு உதவ அது முன்வராது.

எட்டியூரப்பா முன்பு கர்னாடகாவில் எதிர்க்கட்சித்தலைவராக
இருந்தபோது (அப்போது குமாரசாமி ஆண்டு
கொண்டிருந்தார்), ஹொகனேக்கல் கூட்டுக்குடிநீர்
திட்டத்தை எதிர்த்து, 50 படகுகளுடன் ஹொகனேக்கல்
ஏரியாவில் படையெடுத்து வந்தது நினைவிருக்கிறதா ?
பின்னர் அவரே முதலமைச்சராக இருந்தபோது,
இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்று
சொன்னது நினைவிருக்கிறதா ?
இந்த எடியூரப்பா இன்னும் கர்னாடகா பாஜகவில் இருக்கும்
வரை நம் காவிரி சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை
மத்திய (பாஜக ..?)அரசு நிறைவேற்றுமா …?

கேரளாவில் இப்போது தான் பாஜக, மாநிலத் தலைவர்
ராஜகோபாலின் அதிரடிகளால், கம்யூனிஸ்ட் மற்றும்
காங்கிரசுக்கு மாற்றாக கொஞ்சம் கொஞ்சமாக
உருவெடுக்கிறது. கேரள பாஜக எதிர்ப்பை மீறி,
மத்திய (பாஜக)அரசு, முல்லிப்பெரியாறு விவகாரத்தில்
செயல்பட முடியுமா ?

கடந்த மாதம், ராஜீவ் கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பு வந்தவுடன், தமிழக அரசு  சிறையில் வாடிய
7 பேரை  விடுவிக்க முயற்சி எடுத்தபோது, காங்கிரசுடன்
சேர்ந்து பாஜக தலைமையும் (முக்கியமாக
அருண் ஜெய்ட்லி )- அதை எதிர்த்தது.
நம் மாநில பாஜக தலைவர்கள் அது குறித்து
வாயைத் திறக்க முடிந்ததா ?

(இடுகை தொடர்கிறது – பகுதி 5ல் )

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to தமிழக பாஜக வுக்கு ஓட்டா …? (யாருக்கு ஓட்டு – பகுதி-4)

 1. Rajagopalan Rangarajan சொல்கிறார்:

  தமிழக பாஜகவை அகில இந்திய பாஜக விலிருந்து பிரித்து தனியே விமரிசனம் செய்கிறீர்கள்,சரி தானே?
  அது தான் உங்கள் நிலை என்றால் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி.எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே என்னென்னவோ செய்கிறார்கள். இது சரி இல்லை. ரஜினி ஆயிற்று.இன்று நடிகர் விஜய்யுடன் photo op.ஆயிற்று. நாளைக்கு ராமநாதபுரத்தில் அஞ்சாநெஞ்சன் அழகிரியுடன் சந்திப்பாம்.
  இன்று ஒரு தமிழக எழுத்தாளர் எழுதி இருக்கிறார்.

  //தன்னுடைய ‘தீண்டாமை’நிலையைப் போக்கிக்கொள்ளுவதில் பிஜேபிக்கு மகிழ்ச்சி. போட்டியிட எத்தனை இடங்கள் கேட்டாலும் கொடுக்கிறார்களே என்பதில்
  அந்த உடன்சேர்ந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி. பிஜேபி பழையகாலத்து ‘அறந்தங்கி பாசஞ்சர் ரயில்’ மாதிரி. கூட்டம் இருக்காது. கையைக் காலை நீட்டி வசதியாகப் படுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பாசஞ்சர் டெல்லி போக உதவாதே !//
  டெல்லி பாஜக தலைவர்களுக்கு தமிழக அரசியலைப்பற்றி
  ஒன்றுமே தெரியவில்லை. மாநிலத்தலைவர்களோ
  தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள். மோடியின் பெயரைச்
  சொன்னால் போதும் 40 சீட்டிலும் ஜெயித்து விடலாம்
  என்று நினைக்கிறார்கள்.
  நீங்கள் அடுத்த பகுதியில் என்ன எழுதப் போகிறீர்கள்
  என்றரிய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ராஜகோபாலன் ரங்கராஜன்.
   நீங்கள் கூறுவது சரி தான்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இது ஒரு நகைச்சுவை supplement மாதிரி ….

  விஜய்காந்த் அடிக்கும் கூத்து –

  சேலம் வந்த மோடியிடம் விஜய்காந்த் ஒரு
  கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்.அதில்
  கடைசி பத்தியில் அவர் கூறி இருப்பது –

  “இவைகள் மாநில நிர்வாகத்தின் கீழ் வந்தாலும், பிரச்சனைகளின் முக்கியத்துவத்தைக் கருதி,
  தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில்
  மத்திய அரசு, மாநில அரசு மற்றும் எதிர்க்கட்சிகள்
  கொண்ட கூட்டுக் குழுவை அமைத்து,
  தமிழக அரசின் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து
  வழி நடத்துதலை தங்கள் தலைமையில் அமையும் அரசு செய்ய வேண்டும்”

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 3. kuttipisasu சொல்கிறார்:

  மோடி தமிழக பாஜாகவின் பேச்சைக் கேட்டு தன்னுடைய குறைத்துக்கொள்கிறார்.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  ஐயோ பாவம் மோடி,நேற்று ரஜினி,இன்று விஜய், நாளை சந்தானம் என்று பார்த்துகிட்டே இருப்பார் போல…மோடி இத்தனை பலவீனமானவரா ?

 5. saamaaniyan சொல்கிறார்:

  தமிழ்நாட்டின் சூழ்நிலையை பொறுத்தவரை நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முந்தைய தேர்தல்களில் குறிப்பிட்ட இடங்களை வென்ற கட்சிகளுக்குதான் வெற்றியை தக்கவைத்துகொள்ள வேண்டிய பயமோ அல்லதுஅதிகம் வெல்ல வேண்டிய ஆசையோ இருக்கும். இதுவரையிலும் தமிழ்நாட்டில் இருந்த இடமே தெரியாத பாஜகவை பொறுத்தமட்டில் பெரியாரின் பூமியில் ஒரு இடத்தை வென்றால்கூட மாபெரும் ஜெயம்தான் !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.