“மோடி”க்கு – ஒரு “கும்மாங்குத்து”(knock out) வாங்கிக் கொண்டார் “அம்மா”விடம்…!!!

modi and jj photo-2

நேற்று மாலை சேலத்திலும், தர்மபுரியிலும் –
மோடி பேசும்போதே நினைத்தேன்.தப்பான
விஷயங்களை தேவையில்லாமல் பேசுகிறார் மோடி.
வீணாக வம்பில் சிக்கப் போகிறாரென்று.
இன்று அது நடந்தே விட்டது.

“குஜராத்தில் நான் 24 மணி நேரமும் மின்சாரம்
கொடுக்கிறேன். அத்தனை வீடுகளுக்கும் குழாய்களின்
மூலம் சுத்தமான தண்ணீர் கொடுக்கிறேன்….”

(வற்றாத ஜீவநதி நர்மதையை வைத்துக் கொண்டு அவர்
செய்ததை ஆண்டில் 10 மாதங்கள் வறண்டு கிடக்கும்
காவிரியையும், பாலாற்றையும் வைத்து கொண்டு நாம்
செய்ய முடியுமா ?)

…என்றெல்லாம் சொன்னவர் அத்தோடு விட்டிருக்க
வேண்டும்.விதி -யாரை விட்டது..! “குத்து” வாங்க
வேண்டுமென்று அவர் தலையில் எழுதி இருக்கிறதே…!

“தமிழ்நாட்டில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் எந்த
வித்தியாசமும் இல்லை. இரண்டும் மாறி மாறி 5
ஆண்டுகள் ஆட்சிக்கு வந்து ஒன்றை ஒன்று அடித்துக்
கொள்கின்றன.இதில் தமிழக அரசு மக்களின்
நல்வாழ்வைப்பற்றி சுத்தமாக மறந்து விட்டது”

அவர் செய்த மிகப்பெரிய தவறுகள் இரண்டு –

(1) திமுக வுடன் அண்ணா திமுகவை ஒப்பிட்டது.
-ஊழலிலும், கொள்ளை அடிப்பதிலும் இந்தியாவில்
திமுகவும், காங்கிரசும் ஒலிம்பிக் சாதனையாளர்கள்.
அவர்களோடு வேறு எந்த கட்சியையுமே ஒப்பிட முடியாது.

(2) அதிமுக அரசு தமிழக மக்களுக்கு எதுவும்
செய்யவில்லை என்று சொன்னது.

-முந்தைய ஆட்சிகளையெல்லாம் மறந்து விட்டு,
தற்போதைய 3 ஆண்டுகளை மட்டும் வைத்துப்பார்த்தால்
தமிழக அரசு பொதுவாக மிக நன்றாகச் செயல்பட்டு
வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
(சில விதிவிலக்குகளும் உண்டு … )
மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் பல அதிமுக அரசால்
கொண்டு வரப்பட்டு, வாழ்க்கையின் அடித்தட்டு மக்களுக்கு
அவை சென்று சேர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர்கள் கொடுத்த
feedbackஐ நம்பி மோடி பேசியது மிகப்பெரிய தவறு.
கடந்த சில தினங்களாக, தவறுக்கு மேல் தவறாகச்
செய்து வருகிறது தமிழக பாஜக தலைமை.

அதுவும் கடந்த சில தினங்களாக, குஜராத் பற்றிய
பிம்பம், மாயை – கலைக்கப்பட்டு, பல உண்மையான
புள்ளிவிவரங்கள் வெளி வரத் துவங்கி விட்ட பிறகு
பாஜக வினர் மிக ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்.

———–
நாளைய இடுகையில் (யாருக்கு ஓட்டு-பகுதி-5) எழுதுவதற்காக நான் சேகரித்து வைத்திருந்த
சில புள்ளி விவரங்கள் – கீழே.

Human Development index –
tamilnadu -8 – gujarat -12

GDP – t.nadu-3 – gujarat-5

infant mortality –
tnadu- 22 (2nd best) -gujarat -41 (11th )

literacy –
tnadu-80%(4th rank)-gujarat-78%(6th rank)

per capita income –
t.nadu-89,000(5th)- gujarat -90,000(4th)

men-women population rate –
for every 1000 men –
tnadu – 998(2nd rank)-gujarat-919(14th )

——–

இது முதல்வர் ஜெயலலிதாவை எரிச்சலுறச்செய்ததில்
எந்த ஆச்சரியமும் இல்லை. உடனடி ரீ-ஆக் ஷன்.
இன்று அதே தர்மபுரியில் நடந்த தேர்தல்
பிரச்சாரக்கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு நேரடியான
சவாலில் முடிந்தது.

அண்மையில் வெளியான (மேற்கண்டவையும்,
இன்னும் சிலவும் )அத்தனை புள்ளி விவரங்களையும்,
தமிழகத்தின் கடந்த 3 ஆண்டுக்கால சாதனை
விவரங்களையும் அள்ளி வீசி, குஜராத் முன்னணியில்
இருப்பதாக இவ்வளவு நாட்களாக உருவாக்கப்பட்டது
வெறும் “தோற்றம்” pure marketing…!
உண்மையில் பல ஏரியாக்களில் தமிழகம் குஜராத்தை விட
பல மடங்கு முன்னணியில் இருக்கிறது என்பதை
புள்ளி விவரங்களுடன் நிரூபித்தார்.

கடைசியாக “அம்மா” விட்ட சவால் –

(1) நதிகளை இணைப்பது குறித்து இவ்வளவு பேசும்
மோடி, மஹாநதி, கோதாவரி, காவிரி ஆகிய நதிகளை
இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதாக
வாக்குறுதி கொடுக்க முடியுமா ?

(2) ஏற்கெனவே தமிழக நதிகளை இணைக்க தமிழக அரசு
தயாரித்து அனுப்பி, மத்திய காங்கிரஸ் அரசால்
நிராகரிக்கப்பட்ட 6,500 கோடி ரூபாய் திட்டத்தை
நிறைவேற்ற பாஜக உறுதிமொழி கொடுக்குமா ?

(3) குறைந்த பட்சம், தமிழகத்திற்கு நியாயமாக,
சட்டப்படி வந்து சேர வேண்டிய காவிரி நீரை
கர்னாடகாவிடமிருந்து பெற்றுத்தர உறுதிமொழி கொடுக்க
முடியுமா ?

என்னைக்கேட்டால்  முதல்வர் “ஜெ.” எடுத்துள்ள நிலை
மிகச்சரியானது – புத்திசாலித்தனமானது என்று தான்
சொல்வேன்.

நட்பின் காரணமாகவும், தாட்சண்யம் காரணமாகவும்,
தேர்தலுக்குப் பின் ஒன்றாகப் பணியாற்ற வேண்டியிருக்கும்
என்கிற எண்ணத்தினாலும் –
முதல் 20 நாட்கள் “ஜெ” பாஜகவைப் பற்றி எந்த
விமரிசனமும் செய்யாமல் தான் இருந்தார்.

இல.கணேசனிடமிருந்து, நேற்று முளைத்த வானதி
ஸ்ரீனிவாசன் வரை அனைவரும் இதை – அவரது
பலவீனமாகக் கருதி கிண்டல் செய்தனர். தேர்தலுக்குப் பின்
“ஜெ” மோடியுடன் சேர்ந்து விடக்கூடாது என்று
தீவிரமாக முயற்சி செய்தனர்.

அவர்கள் விரும்பியது தான்
இன்று நடந்துள்ளது…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to “மோடி”க்கு – ஒரு “கும்மாங்குத்து”(knock out) வாங்கிக் கொண்டார் “அம்மா”விடம்…!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //கடந்த சில தினங்களாக, குஜராத் பற்றிய பிம்பம், மாயை – கலைக்கப்பட்டு, பல உண்மையான புள்ளிவிவரங்கள் வெளி வரத் துவங்கி விட்ட பிறகு பாஜக வினர் மிக ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்.// மிகவும் உண்மை! அதாவது இத்தனை நாள் அண்டப்புழுகு ஆகாயப்புழுகுக்குத்தான் வரிந்துக்கட்டி கொண்டிருந்தோமா?

  முன்னாள் அதிமுக அமைச்சர்/இன்னாள் திமுக எம்பி செல்வகணபதி-க்கு இரண்டாண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டான்ஸி ஊழலில் தவறு நிரூபிக்கப்பட்டு, அபகரித்த சொத்தை திருப்பித்தர நீதிமன்றம் உத்தரவிட்டதும் ஞாபகம் வருது. இன்னும் சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ஊழலில் மழலையர் பள்ளி என்றால் திமுக பல்கலைக்கழகம்!

  தேர்த்தல் முடிவை முங்கூட்டியே தெள்ளத்தெளிவாக சொல்லியுள்ளீர்கள் காவிரி சார்….
  //அவர்கள் விரும்பியது தான் இன்று நடந்துள்ளது…!//

 2. kuttipisasu சொல்கிறார்:

  யானை மண்வாரி தலையில் போட்டுக்கொள்வது போல ஆகிவிட்டது. அதிமுக தனித்து நின்றதற்கு, தோழர்களை கழட்டிவிட்டதற்குக் காரணமே பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கத்தான். ஆனால் இப்போது அதே பாஜக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை உருவாக்கி அதிமுக ஓட்டை பிளக்கப்போகிறது. இது திமுகவை நிச்சயம் பலப்படுத்தும். தேர்தல் நெருங்க நெருங்க திமுக அதிக இடங்கள் வாங்கும் வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

  • vijay சொல்கிறார்:

   mannikkavum. athimuga kamyunistugalai kalattivittatharkku bijebi kaaraNam alla. therthalukku pinthaiya KUttaNI athavathu. kamyunistugalukku aagaatha mamthaa, navin patnaik maRRum palar inainthu uruvaakka thittamittirukkum mUndraavathu aNiyE karaNam. maRRabadi therthalukku piragu bijebi thayakkamindri thimugavin aatharavai KUda peRRu aatchi amaikka muyalum therthal mudivugal saathagamaanal.

 3. Saravana சொல்கிறார்:

  முந்தைய ஆட்சிகளையெல்லாம் மறந்து விட்டு,
  தற்போதைய 3 ஆண்டுகளை மட்டும் வைத்துப்பார்த்தால்
  தமிழக அரசு பொதுவாக மிக நன்றாகச் செயல்பட்டு
  வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
  (சில விதிவிலக்குகளும் உண்டு … )
  மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் பல அதிமுக அரசால்
  கொண்டு வரப்பட்டு, வாழ்க்கையின் அடித்தட்டு மக்களுக்கு
  அவை சென்று சேர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது

  —– Thamashuuuuuuuuuuuuuuuuuuuuu —-

 4. Saravana சொல்கிறார்:

  என்னைக்கேட்டால் முதல்வர் “ஜெ.” எடுத்துள்ள நிலை
  மிகச்சரியானது – புத்திசாலித்தனமானது என்று தான்
  சொல்வேன்.

  This is a play neatly done by Stalin is what i guess.. they know if ADMK doesnt talk about modi, the votes will not split and BJP vote will go to Jaya ADMK in areas where BJP doesnt contest.. (as CHO too said).. that is dangerous for DMK . so he wantedly made a remark in all his campaign to get Jaya talk on BJP tooo.. now BJP supporters will think not to vote for ADMK and they will cast their vote to MDMK/PMK/DMDK.. this wil get the vote spile and ADMKs vote bank will not go up. gain for DMK..
  so only all the oppositions too tried to annoy Jayalalitha . and she caught in the trap ..
  net result is she lost the one and only muslim party too fro her group and they went to DMK..

  I woudl see this as Planned move to trap Jaya and they succeedded

  • kuttipisasu சொல்கிறார்:

   சரவணன்,

   இது திமுக விரித்த வலை என்று நான் நினைக்கவில்லை.அது தானாகவே நடந்தது. ஜே பொறுமை காத்ததின் பின்னணி பாஜக ஆதரவுடன் பிரதமர் பதவி. முஸ்லீம் ஓட்டிற்கு ஜே எதிர்பார்த்திருந்தால் கம்யுனிஸ்ட், சில முஸ்லீம் அமைப்புகளை உடன் சேர்த்திருப்பார். ஆனால் அவர் அவ்வாறு சேர்க்கவில்லை. ஒருபக்கம் தமிழக பாஜக முட்டிமோதி ஒரு கூட்டணி அமைத்து, கூட்டணியினர் அதிமுகவை சாடத்துவங்கியதும் உரசல் ஆரம்பமாயிற்று. மோடி திருவாய் மலர்ந்ததும், எல்லாம் போயே போச்சு. “பிரதமர்” ஆசை போய், கூட்டாட்சி ஆசை போய்… ஒரு 20 சீட்டு ஜெயித்தால் போதும் என்ற அளவிற்கு ஜே வந்துவிட்டார்.

  • எழில் சொல்கிறார்:

   This is a play neatly done by Stalin is what i guess..

   —– Thamashuuuuuuuuuuuuuuuuuuuuu —-

 5. புது வசந்தம் சொல்கிறார்:

  கொஞ்சம் கொஞ்சமாக சாயம் வெளுக்கிறது. இந்த தேர்தலில் ஒரு நன்மை நடந்துள்ளது, தமிழ்நாட்டில், யாருக்கு என்ன பலம் என்று தெளிவாக தெரிந்துவிடும்.
  இப்போது தான் அம்மாவின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
  இன்றைய நகைச்சுவை காட்சி : திருவாளர் பச்சைமுத்துவை வைத்துக் கொண்டு, ஏழைகளுக்காக பாடுபடுவேன் என்று மோடி சொன்னது தான். இந்த மாதிரி கைப்பிள்ளைகளை இந்த சமுகம் இன்னமும் நம்புகிறது. வாழ்க சனநாயகம்.

 6. Ganpat சொல்கிறார்:

  வணக்கம்.தேர்தலுக்கு இன்னும் ஒரே வாரம் இருக்கும் நிலையில் நாம் நம் பிறவிகுணமான வேடிக்கை பார்க்கும் வேலையை தொடங்கி விட்டோம்.இங்கு பதிவாகியிருக்கும் பல பதிவுகள் மோடியை எதிர்ப்பதாகவே உள்ளன.ஆனால் யார் வரவேண்டும் என்பதை சொல்லாமல்.!!மீண்டும் சொல்கிறேன்.மோடி நல்லவரோ கெட்டவரோ நான் அறியேன்.ஆனால் காங்கிரஸ் வரக்கூடாது.and every vote against Modi is a vote for Congress only.அதை கவனத்தில் கொண்டு முடிவெடுக்கவும்.
  மேலும் இதுவரை முடிந்த வாக்கு பதிவுகளில் சராசரியாக 65%ஐத்தாண்டவில்லை.அதாவது நாட்டில் 35%வாக்காளர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.God save our nation.

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   //மோடி நல்லவரோ கெட்டவரோ நான் அறியேன். ஆனால் காங்கிரஸ் வரக்கூடாது// அடுத்த சப்பகட்டு!
   பாண்டிச்சேரியில் யாரோடு கூட்டு என்று கூறவக்கில்லாத, தமிழகத்தில் எந்த காரணத்திற்காக யாரோடு கூட்டு என்று வர்ணிக்க முடியாத ஒரு பிச்சைக்கார வாந்தி போல ஒரு கூட்டு!
   மோடி அலை என்று சொன்னவர்கள் இப்போது ரஜினியையும் விஜய்யையும் குடையாக்குகிறார்கள். அடுத்து அழகிரியையும் சந்தித்துவிடுவார் என்று நினைக்கிறேன்.
   காங்கிரஸுக்கு பிரதம வேட்பாளரும் இல்லை… பிரமாத வேட்பாளரும் இல்லை! ஆனால் பிஜேபிக்கோ மோடியை விட்டால் கட்சியே இல்லை!
   அய்யோ பாவத்தில் இந்தியா என்பது மட்டும் உண்மை!

   • Ganpat சொல்கிறார்:

    நண்பரே, எதற்காக சுற்றி வளைத்து பேசவேண்டும்?.காங்கிரசிற்கு ஒட்டு போடுங்கள் என சொல்லி விடுங்களேன்.ஒரு ஜனநாயக நாட்டில் அந்த உரிமை கூடவா நமக்கு இல்லை?

 7. saravanan சொல்கிறார்:

  This is a play neatly done by Stalin is what i guess..

  —– Thamashuuuuuuuuuuuuuuuuuuuuu —-

  people who is watching the election campaign will know very well why and from when jaya started talking abt BJP

  • Rajagopalan Rangarajan சொல்கிறார்:

   திரு சரவணன்,

   நீங்கள் ஸ்டாலினுக்கு மகுடம் சூட்ட நினைப்பது தான்-

   உண்மையிலேயே தமாஆஆஆஆஆசு ..!

   அழகிரி வைத்த ‘ஆப்பு’விலிருந்தே ஸ்டாலினால்
   வெளிவர முடியவில்லை. அண்ணன் விளையாட்டில் கதிகலங்கி இருக்கும் இவர் அம்மாவுக்கு விளையாட்டு காட்டுகிறாரா ? கட்சி பாசம் இல்லாம கொஞ்சம் யோசிச்சு பாருங்க சரவணன்.

 8. gopalasamy சொல்கிறார்:

  tasmak is not giving remuneration in gujarath. no freebies in gujarath. the important thing is availalbility of power. since 2002, there is no communal riots in a state which is very famous for riots in the last five hundred years. ( for some people, they could not digest this fact.)
  absolutely no corruption by modi.modi cannot change everything in overnight. but he has the ambition about our conutry.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.