மோடி வேண்டுமா -வேண்டாமா ? கடைசிப் பகுதி-5 (யாருக்கு ஓட்டு ?)

நடந்துகொண்டிருந்த விவாதங்களின் இறுதிப்பகுதிக்கு
வந்திருக்கிறோம்.

மிக அதிக அளவில் பின்னூட்டங்கள் வந்திருந்தன.
இதில் அநேகம் பேர் தீவிரமான விவாதத்தில்
ஈடுபட்டார்கள். மிகவும் நாகரீகமான முறையில்,
தெளிவான வாதங்களை முன்வைத்த நண்பர்கள்
அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

நான் துவக்கத்திலேயே சொன்னது போல்
எந்த கட்சியையும் சாராதிருப்பதால், என்னால்
அனைத்து தரப்பிலும் உள்ள காரண, காரியங்களை
பாரபட்சம் இல்லாமல் பகுத்துப் பார்க்க முடிந்தது.
எந்த தரப்பையும் பாராட்டவோ,
குறை சொல்லவோ – எனக்கு எந்தவித தயக்கமும்
இல்லை.அதை நீங்கள் என் எழுத்திலும் பார்த்திருப்பீர்கள்.

விவாதங்களை முடித்து வைக்கும் விதமாக,
இனி இந்த பொருள் குறித்து என் கருத்து –

நரேந்திர மோடி குறித்து பலவிதமான கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டன. குஜராத் வளர்ச்சி குறித்த விவரங்கள்
ஓரளவு மிகைப்படுத்தப்பட்டவை என்பது உண்மையே.

மனித வளர்ச்சிக் குறியீடு,
குழந்தைகளின் மரணவிகிதம்,
பிரசவத்தின்போது தாய்மார்கள் மரணமடைவது,
உணவு உற்பத்தி,
தொழிலாளர்களிடையே உயர்கல்வித்தரம்
ஆகிய விஷயங்களில் குஜராத்தை விடவும் தமிழ்நாடு
மேம்பட்டு இருக்கிறது என்பது உண்மை தான்.
இந்த ஒப்பீடு இதுவரை செய்யப்படாதிருந்தது.
அண்மையில் தான் ஒப்பீடு செய்யப்பட்டு
புள்ளிவிவரங்கள் வெளியே தெரிகின்றன.

இருந்தாலும் –
குடிநீர் விநியோகம்,
எண்ணிக்கையில் லட்சத்தையும் தாண்டும் தடுப்பணைகள்,
சொட்டுநீர் பாசனம்,பெரிய அளவில் மின் உற்பத்தி,
சூரியசக்தி மின்சாரம், கட்டமைப்பு வசதிகள்,
உள்நாட்டு தொழில் முதலீடு, வர்த்தகம்
ஆகியவற்றில் குஜராத் மிக நல்ல, பிரமிக்கத்தக்க
அளவிற்கு வளர்ச்சி அடைந்திருப்பதும் உண்மை தான்.

பொதுவாக,மோடியைப் பற்றிய ஒரு எதிர்மறை கருத்து
உருவானதன் முக்கிய காரணம் கோத்ரா கலவரமும்,
அதன் பின்னால் மோடியைப் பற்றி அவர் சிறுபான்மை
சமூகத்திற்கு எதிரானவர் என்று தொடர்ந்து செய்யப்பட்ட
பிரச்சாரமும், காங்கிரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட
ஒரு நெகடிவ் இமேஜும் தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால்,கோத்ரா சம்பவத்திற்கு
பிறகு, கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவிலேயே
எந்தவித மதக்கலவரமும் ஏற்படாத ஒரே மாநிலம் குஜராத்
தான். தொடர்ந்து 11 ஆண்டுகளாக ஊரடங்கு சட்டம்
அமுல்படுத்தப்படாத ஒரு மாநிலம் குஜராத் என்கிற
உண்மை திட்டமிட்டு மறக்கடிக்கப்படுகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக மோடி குஜராத்தில் ஆட்சி
புரிந்துள்ள விதம் அவரை ஒரு நல்ல நிர்வாகி என்பதை
உறுதிப்படுத்தும் விதத்திலேயே உள்ளது.

ஆக மொத்தம் – மோடி சுப்பர்மேனும் அல்ல
-மோசமானவரும் அல்ல—–

அவர் ஒரு நல்ல நிர்வாகி…!

இந்த இடுகையின் மூலப்பொருள் –
அடுத்து மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே.

காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்பதில் நமக்கு எந்தவித
மாறுபட்ட கருத்தும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில்
காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணியான திமுகவும்
அடித்த கொள்ளைகளுக்கும், நடந்த ஊழல்களுக்கும் –
இன்னும் 10 வருடங்களுக்கு அவர்களை ஆட்சி
அதிகாரத்தின் பக்கத்திலேயே விடக்கூடாது என்பது
தான் பெரும்பாலான மக்களின் கருத்து.

காங்கிரஸ் இல்லையென்றால் –ஒரு மாற்றாக இருப்பது
3வது அல்லது 4வது அணி. இது நிலையான ஆட்சிக்கு
வழிகோலாது என்பதாலும், மறைமுகமாக மீண்டும்
காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே உதவியாக இருக்கும்
என்பதாலும் – இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

காங்கிரசும் வேண்டாம், 3வது 4வது அணிகளும்
வேண்டாம் என்றால் நமக்கு மீதி இருக்கும் ஒரே option –
பாஜக கூட்டணி தான்.

இதையும் வேண்டாம் என்று எதிர்ப்பது அர்த்தமில்லாத
எதிர்ப்பாகி விடும்.

முக்கியமாக யாருடன் ஒப்பீடு செய்யப்படுகிறார்கள் என்று
பார்க்கும்போது, பாஜக கூட்டணியும் சரி, நரேந்திர
மோடியும் சரி – நிராகரிக்கப்பட வேண்டியார்கள் அல்ல.

திருமதி சோனியா காந்தி, ராகுல் காந்தி,
மன்மோகன் சிங் (+ கருணாநிதி)
என்கிற மூவர் கூட்டணியை ஒரு பக்கமும் –

நரேந்திர மோடி + பாஜக கூட்டணி கட்சிகளை
மற்றொரு பக்கமும் நிறுத்தி வைத்து தேர்ந்தெடுக்க
வேண்டிய சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இதில் எந்த வித தயக்கமோ, சந்தேகமோ இல்லாமல்
மோடியையும், பாஜக கூட்டணியையும் தேர்ந்தெடுப்பது
தான் இந்த நாட்டிற்கும், நமக்கும் நல்லது.

சிறுபான்மை சமூகத்தினருக்கு இருக்கும் தயக்கமும்,
அச்ச உணர்வும் இன்னும் போகவில்லை. அவர்களுக்கு
நான் கூற விரும்புவது – நாம் தேர்ந்தெடுக்கப்போவது
நரேந்திர மோடியையோ, பாஜக வையோ மட்டுமல்ல.
பாஜக நிச்சயமாக தனித்து ஆட்சி செய்யப்போவதில்லை.
எனவே, கூட்டணி கட்சிகள் கூட இருக்கும் வரை,
அவர்கள் எந்த வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

மேலும், அனைவரையும் அணைத்து, அரவணைத்து
செல்ல வேண்டியதன் அவசியத்தை மோடி உணர்ந்து
இருக்கிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது. அது
அவருக்கு ஏற்பட்டுள்ள ஒரு கட்டாயமும் கூட.

அடுத்து – தமிழ்நாட்டில் யாருக்கு ஓட்டு ….?

நான் இந்த இடுகையின் 3வது மற்றும் 4வது பகுதிகளில்
விவரமாக எழுதி இருந்தேன். தேசிய கட்சிகளால்,
தமிழ் நாட்டிற்குள்ள பிரத்தியேக பிரச்சினைகளைத்
தீர்க்க முடியாது. நமக்கே நமக்கான – பிரச்சினைகளை
தீர்வு செய்து கொள்ள ஒரே வழி – மாநிலக் கட்சியைத்
தேர்ந்தெடுத்து அனுப்புவது தான்.

மாநிலக் கட்சி என்று வரும்போது –
திமுக – இல்லை.
பாமக – இல்லை (ஜாதிக்கட்சி)

விஜய்காந்தின் தேமுதிக – இல்லை (லட்சியமோ, கொள்கையோ,
ஒழுக்கமோ எதுவுமே இல்லாத கட்சி )

மீதம் இருப்பவை – வைகோவின் மதிமுகவும்,
அம்மாவின் அதிமுகவும் தான்.

எனவே – இப்போதைக்கான தீர்வாக என் கண்ணுக்குப்
படுவது, தமிழ்நாட்டில் இயன்ற அளவு அதிகமான
எண்ணிக்கையில் -மதிமுக மற்றும் அதிமுக
வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து அனுப்புவதே.

எந்த கருத்துக் கணிப்புகளைப் பார்த்தாலும் –இறுதியில்,
பாஜக கூட்டணி 250 சீட்டுகளைத் தாண்டாது
என்பது தெரிவதால், முடிவுகள் வெளியான பிறகு,

பாஜக, அவசியம் காரணமாக, தானாகவே –
அதிமுகவை கூட்டணிக்கு அழைக்க
வேண்டிய கட்டாயம் ஏற்படும். தமிழ்நாட்டின் தேவைகளை
பட்டியலிட்டு, அவற்றை நிறைவேற்ற பாஜக
வாக்குறுதி கொடுக்கும் பட்சத்தில், அதிமுக வும்
மத்திய கூட்டணியில் சேரும் நிலை ஏற்படும்.

பின்குறிப்பு –
நான் எதிலும் expert அல்ல.
எனக்குத் தோன்றுவதை,
நாட்டிற்கு நல்லது என்று நான் கருதுவதை,
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல்
இங்கு எழுதுகிறேன். இந்த கருத்துக்கள் மட்டுமே
சரியானவை என்று நான் கூறப்போவதில்லை.
அவரவர் பார்வை அவரவர்க்கு….!

வழக்கம்போல், நண்பர்கள் இந்த இடுகையின் மீதும்
தங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில்
தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

28 Responses to மோடி வேண்டுமா -வேண்டாமா ? கடைசிப் பகுதி-5 (யாருக்கு ஓட்டு ?)

 1. Arun சொல்கிறார்:

  மதிமுக – இல்லை (லட்சியமோ, கொள்கையோ,
  ஒழுக்கமோ எதுவுமே இல்லாத கட்சி )

  மீதம் இருப்பவை – வைகோவின் மதிமுகவும்,
  அம்மாவின் அதிமுகவும் தான்.

  I think you wanted to mention DMDK. Please correct

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி அருண்.

   அவசரத்தில் தவறி விட்டேன்.
   இப்போது சரி செய்து விட்டேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. N.Paramasivam சொல்கிறார்:

  தே.மு.தி.க. என எழுதுவதிற்கு பதில், ம.தி.மு.க. என எழுதி உள்ளீர்கள் என எண்ணுகிறேன். மற்றபடி, நான் எண்ணி இருந்த படியே நீங்களும் எழுதி உள்ளீர்கள். இது தான் இப்பொதுதேர்தல் சமயம் நாம் எடுக்க வேண்டிய முடிவு.

 3. kinarruthavalai சொல்கிறார்:

  சூப்பர் ஸார், நானும் இந்த முடிவில்தான் இருக்கிறேன் ஆனால் வெளி நாட்டில் இருப்பதால் ஓட்டு போடுபவர்களை செய்திகளில் பார்த்துக் கொண்டு விரலை சூப்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். ஏதோ மக்களும் கொஞ்சம் புத்திசாலித் தனமாக நினைத்து இந்த முடிவுக்கு வந்தால் நாட்டை கொஞ்சம் நாள் கழித்து நல்ல நிலைமையில் பார்க்கலாம். சமீபத்தில் ஜெயாவின் போக்கு மாறியிருப்பது சிறுபான்மையினர்களை கவரக் கூடும்.. ஆனால் பின்னர் ஆட்சியில் பங்கு பெறுமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. ஆனால் என்னை பொறுத்தவரை காங்கிரஸை இந்த சிறுபான்மையினர் இந்த அளவிற்கு கண்மூடித் தனமாக ஆதரிக்க என்ன காரணம்? என்னதான் பா ஜ க ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று காங்கிரஸ் முட்டாள்தனமாக சொல்லும் வார்த்தைகளை அவர்கள் அப்படியே வா எடுத்துக் கொள்கிறார்கள்? அவ்வளவு முட்டாள்களா அவர்கள்? இல்லை இது வரை இந்தக் காங்கிறஸ், சிறுபான்மையினருக்கு என்னதான் செய்து கழட்டிவிட்டார்கள்? இதை யாரவது யோசிப்பார்களா? சுத்தம் சுத்தமாக கன்னியாகுமரி, நாகர்க்கோவிலில் கிருஸ்துவர்கள் தான் வேட்பாளராக நிறுத்தப் படுகிறார்கள். அங்கே மட்டும் தான் நமது அன்னை வந்து பிரசாரம் செய்து போனார். அவ்வளவு நம்பிக்கை. அங்கே இந்த முறை வென்ற காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் என்ன செய்து இருக்கிறார்கள்? மீனவர் பிரச்னையிலிருந்து அண்டை மாகாணப் பிரச்னை வரை எதர்க்குமே அவர்கள் வாய் திறக்கவில்லையே? இனியும் இவர்கள் அவர்களுக்கு என்ன செய்து விடப் போகிறார்கள்? சற்று அந்த பகுதி மக்கள் யோசித்து பார்ப்பது நல்லது.
  நீங்களும் ஊதுகிற சங்கை ஊதிவிட்டீர்கள். பார்க்கலாம். நன்றி

 4. kuttipisasu சொல்கிறார்:

  இதுவரை செய்த ஊழலை மறைக்க, மதவாத பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறது காங்கிரஸும் திமுகவும். மதசார்பற்ற கூட்டணி என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பம் அடித்த கொள்ளை, தமிழ்மண்ணிற்கு இழைத்த துரோகங்கள் என்று பட்டியலிட்டால் சொல்லி மாளாது.ஊழல் காங்கிரஸுடன் தேர்தலில் கூட்டணி இல்லை, ஆனால் தேர்தலுக்கு பிறகு மதசார்பற்ற அரசுக்கு ‘கை’ கொடுப்போம் என கருணா தன் வழக்கமான பாணியில் அறிவித்தும்விட்டார். சிறுபான்மையினர் காங்கிரஸும் கருணாவும் கிண்டி கொடுக்கப்போகும் அல்வாவிற்கு தயாராகிவிட்டார்கள். மதவாத அரசு வந்துவிடும் என்று எண்ணி ஊழலுக்கு துணைபோகப் போகிறார்கள்.

  மூன்றாவது அணி என்று ஒன்று அமைந்தால் கூட்டணியில் உள்ள எல்லோருக்கும் பிரதமர் ஆசை வந்துவிடும். இதற்கு ஜெயலலிதா, மம்தா, முலாயம், நிதிஷ், லாலு, மாயாவதி என ஒரு பெரிய கூட்டமே கிளம்பி இருக்கு. இதுவும் சரிபட்டு வராது.

  பாஜக கூட்டணி அமைந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் சிலர் பாஜக வந்தால் மட்டும் ஊழல் இல்லாமல் ஆட்சி நடக்குமா? என்று முழுபூசனிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறார்கள்.

  எது எப்படியோ வைகோ கட்டாயம் பாரளுமன்றம் செல்ல வேண்டும்.

 5. Raj சொல்கிறார்:

  ஆக மொத்தம் – மோடி சுப்பர்மேனும் அல்ல
  -மோசமானவரும் அல்ல—–

  அவர் ஒரு நல்ல நிர்வாகி…!

 6. Ganpat சொல்கிறார்:

  அப்படியே வழிமொழிகிறேன்..

  தவறாமல் ஒட்டு போடுங்கள்
  NOTA வேண்டாம்
  சுயேச்சைகள வேண்டாம்.
  நாம் தேர்ந்தெடுப்பது மோடி அல்லது AK.அந்தோனி /ராகுல் என்பதில் கவனம்

  தமிழகத்தில் நீங்கள் ..
  பாஜ.க.கூட்டணிக்கு போடும் ஒட்டு..மோடிக்கு ஒரு ஒட்டு
  அ.தி.மு.க..விற்கு போடும் ஒட்டு…….மோடிக்கு அரை ஒட்டு,,
  காங்/தி.மு.க/.கம்யூனிஸ்ட்.க்குப்போடும் ஒட்டு.அந்தோனி/ராகுலுக்கு ஒரு ஒட்டு.
  ஆப்பிற்கு போடும் ஒட்டு….அந்தோனி/ராகுலுக்கு அரை ஒட்டு.-அல்லது கெஜ்ரிவால் ஒரு மாதம் பிரதமராக இருந்து மீண்டும் தேர்தல் வர வழிக்கும் ஒரு ஒட்டு.
  Jai Hind.

 7. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  http://www.Nikandu.com
  நிகண்டு.காம்

 8. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //பாஜக நிச்சயமாக தனித்து ஆட்சி செய்யப்போவதில்லை.// அப்படி ஒருவேளை நடந்துவிட்டால் அவர்களின் RSS முகம் வெளிவரும் என்ற ஒரு பயம் (உங்களுக்கும் ஏற்பட்டுள்ளது) எனக்குள்ளது!

  //அது அவருக்கு ஏற்பட்டுள்ள ஒரு கட்டாயமும் கூட.//
  அதான் கிளியரா சொல்லிட்டாரே “பப்பி கார் சக்கரத்தில் சிக்கினால் ஏற்படும் கவலை” அப்படீன்னு!

  //மீதம் இருப்பவை – வைகோவின் மதிமுகவும்,
  அம்மாவின் அதிமுகவும் தான்.// இருவர்களின் கொள்கைகளையும் அப்படியே விளக்கீட்டிங்கன்ன நல்லா இருக்கும்.

  கடைசியாக, திமுக-வின் ஆதரவை பாஜக கோறாது என்றோ, திமுக டி ஆர் பாலுவின் அமைச்சர் பதவிக்காக பாஜகவை ஆதரிக்காது என்றோ கூறிவிட முடியுமா? அப்படியே நடக்கும்பட்சத்தில் ஆம் ஆத்மி போல ராஜினாமாதான் பண்ணுவாங்களா?
  பழ குடியரசும் மாங்கா மக்களும் இருக்கும் வரை எதுவேண்டுமானாலும் நடக்கும்!

  • kuttipisasu சொல்கிறார்:

   //அதான் கிளியரா சொல்லிட்டாரே “பப்பி கார் சக்கரத்தில் சிக்கினால் ஏற்படும் கவலை” அப்படீன்னு!//

   மோடி மீது தங்களுக்கு உள்ள கோபம் நன்றாகவே புரிகிறது.
   மோடி சொன்னது “Even If I am in the back seat of a car and a puppy comes under the wheels, isn’t it painful? It is. Whether I am a chief minister or not, I am a human being – I will be sad if something bad happens anywhere.”
   நானே கார் ஓட்டிக் கொல்லாவிடினும், ஒரு நாய் படும் துன்பத்தையும் காணச்சகியாதவன் என்று சொல்ல வருகிறார்.

   யாராவது நீங்கள் கொன்றீர்களா என்று கேட்டால், “நான் ஒரு ஈ எறும்புக்கும் துரோகம் இழைக்காதவன்” என்கிறோம். உடனே “அப்போது மத்தவனெல்லாம் உனக்கு ஈ எறும்பாக போய்விட்டார்களா?” என்றா கேட்கமுடியும். நான் அப்படித்தான் புரிந்துகொள்வேன் என்றால், அது அவர்கள் விருப்பம். காங்கிரஸும் அதைத்தான் எதிர்பார்க்கிறது.

   //திமுக டி ஆர் பாலுவின் அமைச்சர் பதவிக்காக பாஜகவை ஆதரிக்காது என்றோ கூறிவிட முடியுமா? //

   டி.ஆர் பாலுவுக்கு இடம் கிடைக்குமோ இலையோ! கட்டாயம் ஏற்கனவே செய்த ஊழல்களை மறைக்க அல்லது அதிலிருந்து தன் மகளைக் காப்பாற்ற
   கருணாநிதி ஆளப்போகும் கட்சியில் இடம்பெற முனைவார். அது பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி.

   //இருவர்களின் கொள்கைகளையும் அப்படியே விளக்கீட்டிங்கன்ன நல்லா இருக்கும்.//

   விஜயகாந்த், கருணா, ராமதாசுக்கு இவங்க எவ்வளவோ பரவாயில்லை. ராமதாசு இப்போதே மகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். சினிமாகாரர்களை திட்டியவர் விஜயகாந்தோடு சமரசம் செய்துகொண்டார்.

   ஆட்சி பிடிக்கும் முன்பே குடும்ப அரசியல் நடத்துகிறார் விஜயகாந்த். இருக்கும் பிரச்சனைகளில் இவர் நிலைப்பாட்டை என்றாவது சொல்லி இருக்கிறாரா? தற்போது மோடி வந்தால் ஊழல் அடியோடு ஒழிந்துவிடும், விலைவாசி குறைந்துவிடும், மின்சாரம் வந்துவிடும் என்று பிரசாரம் செய்கிறார். இதெல்லாம் நடக்குமா? அல்லது நடக்க வாய்ப்பிருக்கிறதா?

   இனி பாஜக ஆட்சிக்கு வருவதை காங்கிரஸுக்கான தண்டனையாகவே நான் பார்க்கிறேன். இல்லாவிடில் காங்கிரஸை கட்டுபடுத்தவே முடியாது. மதச்சார்பின்மை என்ற ஒற்றை வார்த்தையே வாக்குறுதியாக கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்.

   //பாஜக நிச்சயமாக தனித்து ஆட்சி செய்யப்போவதில்லை.//
   தேசியக் கட்சிகள் தனித்து ஆட்சிக்கு வருவது சிறிபான்மையினருக்கு மட்டுமல்ல. தமிழகத்திற்கும் நல்லதில்லை.

   • kuttipisasu சொல்கிறார்:

    🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் …தெய்வம் ஏதுமில்லை..!
     நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…!

     குறும்பாளர் குட்டிப்பிசாசு அவர்களுக்கு,
     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 9. எழில் சொல்கிறார்:

  இது என்னுடைய பார்வை…

  கடந்த 10 ஆண்டில் மத்திய அரசோ மாநில அரசோ எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நேரடியாக எவ்வித நன்மையையும் செய்யவில்லை. கட்டும் வரிக்கு அவர்கள் வஞ்சனை இல்லாமல் சேவை செய்கிறார்களா என்றால் திருப்தி இல்லை.

  ஆனால் கடந்த ஆண்டுகளில் என்னை பெரிதும் பாத்தித்து (இத்தளத்தில் என் பின்னூடங்களை படித்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்) ஈழ தமிழர் படு கொலை. அது என்னை போலவே பலரின் உணர்வுகளை பெரிதும் பாத்தித்தது. இருந்தும் இப்போது எங்களில் சிலர் மோடியை “சொந்த மாநிலத்து மக்களையே கொன்று குவித்ததற்கு உடந்தை. தடுக்க முடியாமல் போனதற்காக குறைந்த பட்ச வருத்தம் கூட தெரிவிக்காதவர்… ” என்ற ரீதியில் பேசுவதும் பிரசாரம் பண்ணுவதும் வியப்பளிக்கிறது. தமிழனத்தை வெறி கொண்டு அழித்த கேடு கெட்ட காங்கிரஸின் மீது வரவில்லை இவர்களுக்கு வன்மம். ஆட்சியில் பங்கெடுத்து குறைந்த பட்ச எதிர்ப்பைக் கூட தெரிவிக்காத திமுக (அமைச்சர்கள், எம்பிக்கள் ராஜினாமா) மீது வரவில்லை கோவம்.

  இறுதியாக சொல்ல வருவது என்னவென்றால் நானும், ஒத்த கருத்துடைய என் சக நண்பர்களும், உறவினர்களும் எடுத்திருக்கும் முடிவு நீங்கள் என்ன எழுதியிருப்பதோ அதே தான். ஆனால் எடுத்ததுக்கான காரணங்கள் தான் வேறு பட்டு நான் மேலே கூறியவை.

  ஆனால் பாஜாக ஆட்சிக்கு வந்தால் ஈழ தமிழர்களுக்கு நிவாரணம் கிடைத்து விடுமா என்றால் நிச்சயம் இல்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கை படி இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பதில் இருந்து நிச்சயமாக மாறாது. ஆனால் காங்கிரசையும் திமுகவையும் தோற்கடிப்பதன் மூலம் இனி ஒரு மாநில கட்சி சொந்த இனம் அழிக்கப் பட்டபோது பதவி பேரம் நடத்தி கொண்டு இருக்காது என்பதை உறுதி செய்யலாம்.

  எனவே நீங்கள் சொல்வது போல தமிழ்நாட்டில் இயன்ற அளவு அதிகமான எண்ணிக்கையில் -மதிமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து அனுப்புவதே நல்ல முடிவாக இருக்கும்

 10. Srinivasanmurugesan சொல்கிறார்:

  நல்ல முடிவுதான் ஆனால் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளான காவிரி, முல்லைபெரியார், தமிழகத்தற்கு உரிய நிதி உதவிகளை பெறுவது,தமிழக மின் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதி உதவி பெறுதல்,மீனவர் பிரச்சனை பேன்றவற்றை சமரசம் செய்து கொள்ளாமல் போராடி பெற்றுதரும் வல்லமை ஜெயலலித்தாவிற்கு மட்டுமே உண்டு.அவரிடம் சில குறைகள் இருந்தாலும் இன்றைய சூழலில் போர் குணம் படைத்த அவரின் கரத்தினை வலுப்படுத்துவது மிகவும் அவசியம். எனவே 40 தொகுதிகளிலும் அஇஅதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.மேலும் தமிழகத்திற்கு போதிய நிதி ஆதாரம் கிடைக்குமானால் மது விலக்கையும் அம்மையார் மீண்டும் கொண்டுவருவார் என திடமாக நம்புகின்றேன்.

 11. Siva சொல்கிறார்:

  I agree completely with your view. My opinion is similar with you. Good luck for competent parties!
  Siva

 12. Ganpat சொல்கிறார்:

  நண்பர்கள் kuttipisasu,srinivasamurugesan மற்றும் எழில் அவர்களின் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளன நன்றி.
  வாழ்த்துக்கள்.

 13. Ganpat சொல்கிறார்:

  மன்னிக்கவும் kinarruthavalai பெயர் விடுபட்டு விட்டமைக்கு…

 14. R.Puratchimani சொல்கிறார்:

  வைகோ ரொம்ப கொடுத்து வைத்தவர். அவருக்கு இவ்வளவு ஆதரவா?
  என்னைப்பொருத்தவரை விருதுநகரில் மட்டும் பம்பரத்திற்கு வாக்களிக்க வேண்டும். மற்ற இடங்களில் மக்கள்
  இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.

  ஆனால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்க்க கூட முடியவில்லை. ஏன் எனில் மக்களிடையே மத வெறியும், சாதி வெறியும், சினிமா மோகமும், ஊழலுக்கு உடந்தையும் அதிக அளவு உள்ளதே.

 15. nanjappan சொல்கிறார்:

  VOTE FOR MODI JI .LET US GIVE A CHANCE TO MODI JI TO SERVE US FOR FIVE YEARS.IF HE IS NOT OK 2019 ELECTION WE CHOSE SOME ONE ELSE

 16. maasianna சொல்கிறார்:

  vote for Namo. I agree with you.

 17. gopalasamy சொல்கிறார்:

  vote for modi. this is the last chance to free the country from soniaji. there are lot of reports about sonia’s property at dubai and italy. no proof.
  somebody talked about puppy. i want to ask whether this statement is valid for minorities who were killed or for all the people who were killed? even if modi feels sorry, people dont want to accept it..
  why minorities want sonia? i have lot of friends from them. they are are having a feeling indra married feroz khan and their descendents belong to muslims. i dont know whether this feeling exists with entire community. i am telling my friends’ opinion.

  • Andi Chamy சொல்கிறார்:

   இங்கிலாந்தில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம்.காவல் நிலையத்திர்க்கு,அவ்வூர் சீமாட்டியிடமிருந்து ஒரு அவசர அழைப்பு.விறைந்து சென்றவர்களிடம் ” இவ்வூர் பையன்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.வேளைகெட்ட வேளைகளிலெல்லாம்,என் தோட்டதுக்குப்பின்னாலுள்ள ஆற்றில் அரைநிர்வாணமாக குதித்து கும்மாளமடிக்கிறார்கள்.அவர்களை அப்புறப்படுத்துங்கள்”என்று கட்டளையிட்டார்.காவலர்களும் அப்படியே செய்தனர்.சில நாட்கள் சென்றபின்,மறுபடியும் ஒருஅவசர அழைப்பு.அதே சீமாட்டி சற்று கோபமாக”என்ன செய்தீர்கள்!நான் ஆற்றின் அருகில் சென்று பார்த்தால் அந்த பொடியன்கள் முன்பு போலவே அரை நிர்வாணமாக ஆற்றின் மேல்புறம் சுமார் 500 கஜ தூரத்தில் கும்மாளத்தை தொடர்கிறார்கள்.இதுதான் நீங்கள் வேளை செய்யும் லச்சனமா” என்றார்.காவலர்களும் சீமாட்டியின் விருப்பத்துக்கிணங்க அவர்களை அப்புறப்படித்தினார்கள்.பல நாட்கள் செனறன.மறுபடியும் ஒரு அவசர அழைப்பு,அதே சீமாட்டி.கோபத்தின் உச்ச கட்டம்.”உங்களை என்ன செய்வது.உருப்படியாக வேளை செய்வதென்பது உங்கள் அகராதியிலேயே கிடையாதா?நான் மாடிக்குகச்சென்றால்,தூரத்தில் அதே லீலைகள்தான்.அதுவும் பைனாகுலர்ஷ்மூலம் பார்த்தால்,கண்றாவி துள்ளியமாக அவர்களின் அரைநிர்வாணம் தெரிகிறது.என்ன செய்வதாக உத்தேசம்?”விளாசினார்.
   இதை எதிர்பார்த்தோ என்னவோ. அனுபவசாலியான காவலொருவர் மிகவும் பணிவுடன்”மதிப்புக்குறிய அமமையாரவர்களே,நாங்கள் பொடியன்களைத்தான் விரட்டமுடியும்.தங்கள் கண்களுக்கு கட்டுப்போடமுடியுமா?விரட்டி விரட்டிப்பார்ப்பது யார்? தாங்கள் அவர்களை நிர்வாணமாக பார்க்க விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறோம். மன்னிக்கவும்.வருகிறோம்” என்று கூறி விடைபெற்றார்.செக்குலரிஷ்ட் என்ற சீமாட்டிகள்.மோடியை இப்படித்தான்.வண்ண கண்ணாடிகளால்.துரத்தி துரத்தி யார் பார்த்து மகிழ்வார்கள் அவர்கள்ஆசை நிறைவேறினால் துரதிர்ஷ்டம்..காலந்தான் பதில் சொல்லவேண்டும்

 18. Aakuvan சொல்கிறார்:

  The Development indicators of Gujarat Govt. to be viewed as a trend for last 10 years – from where it was to where it is now. It cannot be seen in isolation for a single year. For eg: The Malnutrition was around 71% in 2006-07 which came down to 39% in 2010-11. Comparing this with other states for 2010-11 will be high. But, see the effectiveness and reduction. With this trend, it will come below 20% in next 3 years. However, other states who have less nos have brought down it only by 5%. Same, with other indicators like literacy rate, children leaving school etc. Hope, people see the true value and not just look at the top line data and get deceived.

  -Aakuvan

  • nparamasivam1951 சொல்கிறார்:

   I agree. Relative figures are to be compared for the concerned state and then it has to be related to figures of other states. on this basis only, Rajiv Gandhi Foundation appreciated Gujarat Model and it also recommended other States to follow that Gujarat Model. Planning Commission also appreciated Gujarat based on the comparative improvement made by Gujarat over a period of time. But funny thing is, Chief Ministers of West Bengal, Bihar, Maharashtra, Tamil Nadu etc., are telling that the indicators of their states are better, knowing fully well that they are telling lie, telling as ELECTION TALK.

 19. Ganpat சொல்கிறார்:

  இந்தியாவில் தேர்தல்கள் மிக விநோதமாக நடந்தேறுகின்றன.மக்கள் அதை விட விநோதமானவர்கள்.

  இங்கு மட்டும்தான்……..

  = மக்கள் படும் கஷ்டங்களை அவர்களுக்கே விளக்கி சொல்லி ஆளுங்கட்சிக்கு ஓட்டளிக்காதீர்கள் என வேண்டவேண்டும்

  =காங்.,பா.ஜ.க. தி.மு.க., அதி.முக.,கம்யூனிஸ்ட் ஆகிய அனைத்து கட்சிகளும் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற ஒரே பாடலை தங்கள் பிரசாரத்திற்கு உபயோகித்துக்கொள்ள முடியும்.

  =சுமார் 35சதவிகித மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.பிறகு ஐந்து ஆண்டுகளும் ஆட்சியை குறை சொல்லியே காலம் தள்ளுவார்கள்.

  =பணம் வாங்கிகொண்டு வாக்களிப்பவர்கள், யார் ஆண்டாலும் எப்படி ஆண்டாலும் கவலைப்பட மாட்டார்கள்.

  =ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டு தேர்தலில் தோற்று எதிர்கட்சியாக ஆனவர்கள் முதல் நாளிலிருந்தே புதிய ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களை சொல்ல ஆரம்பிப்பார்கள்.இதில் “தண்ணீர் இல்லை” “சாலை வசதி இல்லை” “சட்டம் ஒழுங்கு சரியில்லை” போன்றவையும் அடங்கும்.மக்களும் இதை ரசித்து கேட்பார்கள்.

  =அதே போல புதிதாக ஆட்சி அமைத்தவர்கள் வந்த முதல் நாளே கஜானா காலி என சொல்வார்கள்.ஆனால் இலவசங்களை வாரி வழங்குவார்கள்.அரசு பணியாளர் ஊதியங்களை உயர்த்துவார்கள்.

  =மக்கள், ஒரு உதவாக்கரை ஆட்சியாளரை பல ஆண்டுகள் பொறுத்து கொளவார்கள்.ஆனால் அவர் போய் இன்னொருவர் வந்த முதல் நாளிலிருந்தே பலனை எதிர்பார்ப்பார்கள்.

  =இஸ்லாமியர்களும் கிருஸ்துவர்களும் அன்றாட வாழ்வில் என்னென்ன துன்பங்கள் அனுபவிக்கிறார்கள் என அவர்களை விட ஹிந்துக்களுக்குத்தான் அதிகமாக தெரியும்.

  =தனி ஒருவன் வாழும் வாழ்க்கை தரத்தை சமூகம் கண்ணில் எண்ணை விட்டுக்கொண்டு கண்காணிக்கும்.அவனே பொது வாழ்விற்கு வந்து விட்டால் அவன் எவ்வளவு ஒழுக்ககேடான வாழ்க்கை வாழ்ந்தாலும் லட்சியம் செய்யாது.

  =ஒரு அரசியல்வாதி தன் பெற்றோர்களை கொன்று விட்டு “நான் அனாதை! எனவே என் மேல் இரக்கம் காட்டி,எனக்கு வாக்களியுங்கள் ” எனத் துணிவாக சொல்ல முடியும்.

 20. Srinivasanmurugesan சொல்கிறார்:

  மாநிலத்தின் நன்மைகள் முன்னெடுக்க அஇஅதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.திரு. மோடி திறமையானவராக இருக்கலாம் ஆனால் அண்டை மாநிலங்களுடன் நதி நீர் பிரச்சனைகள் போன்றவை தோன்றும் போது தமிழ் நாட்டிற்கு சாதகமாக செயல் படுவார் என்று நம்ப முடியாது.அம்மாவினால் மட்டுமே முடியும். அதற்கு அஇஅதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.