காவிரியில் தண்ணீரா.. ? என்ன அவசரம்.. ? 15-20 ஆண்டுகளில் வந்துவிடும் -இல.கணேசன்…!!!

 

ila.ganesan bjp

தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்கு அகில இந்திய கட்சிகளை
நம்பி பயனில்லை எ
ன்று முந்திய இடுகையில் நான் எழுதி
இருந்தேன். உடனே அதை உறுதி செய்கிறார் பாஜக வின்
தென் சென்னை வேட்பாளர் இல.கணேசன் அவர்கள்.

ஒரு பேட்டியில் “காவிரி பிரச்சினையில் பிஜெபியை
விமரிசித்துள்ளாரே ஜெயலலிதா?” என்று கேள்வி
எழுப்பப்பட்டிருக்கிறது.( தர்மபுரியில் நடந்த கூட்டத்தில்
“காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீதிமன்ற தீர்ப்பின்படியாவது
தண்ணீர் வர உதவுவோம் என்று பாஜகவால் வாக்குறுதி
அளிக்க முடியுமா?” என்று கேட்டிருந்தார் முதலவர். )

அதற்கு இல.கணேசன் என்ன பதில் அளித்திருக்கிறார்
பாருங்கள் –

“காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்பது தென்னக
நதிகளை இணைப்பது மட்டுமே.மோடி பிரதமரான பிறகு,
நதிகள் இணைப்பு திட்டத்தை நாங்கள் அமல்படுத்துவோம்.
மகாநதி, கோதாவரி,கிருஷ்ணா நதிகள் இணைக்கப்பட்டு
காவிரியில் பாயத் தொடங்கி விடும். எனவே,
ஜெயலலிதா அவசரப்பட வேண்டாம்…!!”

கர்னாடகாவை சட்டத்தை மதித்து, நீதிமன்ற உத்திரவின்படி
காவிரியில் தண்ணீர் விடச்செய்ய பாஜக வாக்குறுதி
அளிக்குமா என்கிற கேள்விக்கு இதுவா பதில் ?

நதி நீர் என்பது மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.
முதலில் இந்த நதிகள் பாயும் ஒடிஷா(மகாநதி),
சீமாந்திரா(கோதாவரி), தெலங்கானா(கிருஷ்ணா)
காவிரி(கர்னாடகா) ஆகிய மாநிலங்களுடன் தகுந்த
முறையில் பேசி, அவர்களை கொள்கையளவில்
ஒப்புக்கொள்ள வைத்து, அதன் பிறகு வரைபடம்
(blue print)தயாரித்து,அதற்கு ஒப்புதல் வாங்கி,
பின்னர் திட்டச்செலவுகளையும்(budget estimates),
எந்தெந்த மாநிலம் எவ்வளவு செலவழிப்பது என்கிற
மதிப்பீட்டைத் தயாரித்து, அனைவரின் ஒப்புதல்களையும்
பெற்று –
பின்னர் – நாளையே வேலையைத் துவங்குவதாக
வைத்துக் கொண்டாலும் கூட குறைந்த பட்சம் 15
ஆண்டுகள் பிடிக்கும் முடிக்க.

இத்தனையும் எந்தவித சிக்கலும் இல்லாமல் முடிந்தால்
தான், கணேசனார் கூறுகிறபடி காவிரியில் நீர் பாயும்.

இப்போது நீதிமன்ற உத்திரவுப்படி கர்னாடகாவை
தண்ணீர் விடச்செய்ய முடியுமா என்று கேட்டால் –
15-20 ஆண்டுகளுக்கு பின்னால் என்ன நடக்குமென்று
ஆருடம் கூறும் கணேசனுக்கு –

நான் வசிக்கும் தென்சென்னை தொகுதி வாக்காளர்களின்
சார்பாகச் சொல்லிக்கொள்ள விரும்புவது –

“காவிரி நீருக்கு நீங்கள் கூறுவது போல் ஒரு அவசரமும்
இல்லை கணேசன் அவர்களே. அதே போல் –
நீங்கள் பாராளுமன்றத்திற்கு இப்போதே போக வேண்டும்
என்றும் ஒரு அவசரமும் இல்லை. 15-20 ஆண்டுகளில்
எப்படியும் தென்னக நதிகள் இணைக்கப்பட்டு காவிரியில்
தண்ணீர் வந்து விடும். அந்த தண்ணீரைப் பார்த்த உடனே,
தவறாமல், நிச்சயம் நீங்கள் பாராளுமன்றத்தைப் பார்க்க
உதவுவோம்..!”

“அதுவரை, இப்போது போல் நீங்கள் மாம்பலத்திலேயே
தங்கியிருந்து, மாம்பலவாசிகளுக்கு, உங்களாலான
சேவையை செய்து கொண்டிருங்கள்.”

“அல்லது கையேந்திபவனில் இட்லி வடை சாப்பிட்டு,
போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருங்கள்…
(மேலே புகைப்படம்)”

துணை (supplement) –

பேட்டியாளர் கேள்வி –
அண்மையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டபோது, இந்தியா ஓட்டுப்போடுவதை
தவிர்த்திருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன..?

திரு இல.கணேசன் பதில் –
அந்த தீர்மானம் குறித்து எங்கள் மத்திய தலைமையின்
கருத்து என்ன என்பதை நான் இன்னும் தெரிந்து
கொள்ளவில்லை. இந்த நிலையில், நான் என்னுடைய
கருத்தைச் சொன்னால், பாஜக தலைவர்களுக்கு இடையே
கருத்து முரண்பாடு என்று நீங்கள் சொல்வீர்கள்.அதனால்,
நான் பதில் சொல்லாமல் அமைதி காக்கிறேன்…!!

கடவுளே …. கடவுளே….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to காவிரியில் தண்ணீரா.. ? என்ன அவசரம்.. ? 15-20 ஆண்டுகளில் வந்துவிடும் -இல.கணேசன்…!!!

 1. kinarruthavalai சொல்கிறார்:

  இல கணேசன் முழுக்க முழுக்க ஒரு தி மு க அனுதாபி. யாராவது இல்லை என சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். நாளை பி ஜே பி ஆட்சியமைத்தால் இவர்தான் தி மு கவை அமைச்சரவையில் சேர்ப்பதில் முதல் ஆளாக இருப்பார். தென் சென்னையில் இவர் கரையேறுவது சிரமம்தான்.

 2. Prakash சொல்கிறார்:

  we should ask the same questions to all TN BJP candidates, appo teriyum ivarkaludaya unmayana mugam. tamilnadu ku entha pakki yum thanni thara porathu illa. athu than unmai. Kadavula paathu Karnataka la mazhai kodutha than, namakku thanni inga.

 3. பன்னீர்செல்வம் சொல்கிறார்:

  பிச்சு ஒதறிட்டீங்க காவிரி சார்.
  ஆனா ரொம்ப ஜென்டிலா சொல்லிட்டு விட்டுட்டீங்க.
  இந்த மனிதருக்கு இன்னும் கூட கொடுத்திருக்கலாம்.
  என்ன தெனாவட்டு இருந்தால் இல.கணேசன்
  என்ன அவசரம் என்று கேட்பார். கேட்பவர்கள்
  கேணையர்கள் என்று நினைத்தார் போலிருக்கிறது.
  மோடி பேரைச் சொல்லியே மந்திரிஆகிவிடலாம் என்று
  ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் அலைகிறது. தமிழ்நாட்டுலேந்து
  வைகோ மற்றும் அவரது கட்சியினர் தவிர வேறு
  ஒரு பாஜக கூட்டணி ஆளு கூட MPயா போகக்கூடாது.
  நீங்க இதுபத்தி இன்னும் எழுதுங்க காவிரி சார்.

  • todayandme சொல்கிறார்:

   பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று தேசியக் கட்சியின் பெயரைச் சொல்லி ஓட்டுக்கேட்காமல் மோடிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று தான் இந்தியா முழுவதுமே பிரச்சாரம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல என்பது தாழ்மையான கருத்து.

  • Andi Chamy சொல்கிறார்:

   I fully agree with you.TN BJP is a drag and a liability to TN and central BJP which should come to power with the support of AIADMK.We had enough of INC and DMK.

 4. Ganpat சொல்கிறார்:

  மன்னிக்கவும்.இனிமேல் காங்.ஆண்டாலும்,பா,ஜ.க ஆண்டாலும்,நமக்கு காவிரி நீர் கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு.அந்த அளவிற்கு இந்த பிரச்சினையை சிக்கலாக்கி விட்டனர் இரண்டு கட்சிகளும்.மேலும் கர்நாடகாவில் இந்த இரண்டு கட்சிகளைத்தவிர யாரும் ஆட்சிக்கு வரமுடியாது.ஆனால் தமிழகத்திலோ இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வர முடியாது.இது நமக்கு ஒரு பெரிய பின்னடைவு.ஒரு வேளை மோடி, ஜெயா ஆதரவுடன் பிரதமராகி, “உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல் செய்யாவிட்டால் நான் என் ஆதரவை விலக்கிக்கொண்டு ஆட்சியை கவிழ்ப்பேன்!” என ஜெயா பகிரங்கமாக மிரட்டினால் ஒருவேளை அது நடக்கலாம்.அதற்கு ஜெயா இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்.நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.இதனை டும் டும் களை எதிர்பார்ப்பதே பேராசை.

  • todayandme சொல்கிறார்:

   சாம பேத தானத்தை அடுத்து தண்டத்தை எடுத்தால்தான் வேலைக்கு ஆகுமென்றால் எடுக்கவேண்டியதுதான். என்ன? தண்டத்தை உபயோகிக்க ஒரு தைரியமும், பாதகமான பின்விளைவுகளை சந்திக்க தன்னைத்தவிர தன்னைச்சார்ந்தவர்கள் யாரும் இல்லாத தனிமையும் வேண்டும். அது முதல்வருக்கு இருக்கிறது. ஆனால் தமிழக மக்கள் தண்டத்தை எடுக்க முதல்வரை அனுமதிப்பார்களா? தமிழகத்துக்கு மத்தியில் இருந்து இந்த 60 வருடங்களில் வரவேண்டிய பெறவேண்டிய காரியங்களை சாதிக்கவேண்டுமானால் மத்திய அரசில் மெஜாரிட்டியோடு தமிழ்நாடு இருக்கவேண்டும். மக்கள் தான் short memory POWER உடையவர் ஆயிற்றே.

 5. Sundar சொல்கிறார்:

  இந்த மாதிரி ஒன்னும் தெரியாத k9 -கள் வேட்பாளராக, (அதுவும் தென் சென்னை போன்ற படித்தவர்கள் இருக்கும் தொகுதியில்) நிற்கும் அளவுக்கு தைரியம் இருக்கிறதென்றால், கண்டிப்பாக இவர், மக்களை மறதி மாக்கான்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். தென் சென்னை வாசிகள் “கேனை”-யர்களா இல்லை “ஆணை”-யர்களா என்று இவருக்கு சீக்கிரம் தெரியவரும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.