“கலைஞர் கருணாநிதி” என்றே பெயர் வைத்தாலும் கூட நாய் வாலை நிமிர்த்த முடியுமா …?

கீழே இருப்பது இன்று மாலை வெளியாகி இருக்கும்
ஒரு செய்தி –

(http://inneram.com/news/tamilnadu/5881-
three-judge-s.html)
வெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014
13:38

————————-

மூவர் விடுதலை குறித்த நீதிபதியின் அறிவிப்பு –
கருணாநிதி கருத்து!

Karunanidhi-election

சென்னை; ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்த
தீர்ப்பு குறித்து நீதிபதியின் அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு
உகந்ததா? என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கேள்வி
எழுப்பியுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்
பங்கேற்றுப் பேசிய கருணாநிதி தெரிவித்ததாவது;
“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்கை ரத்து
செய்யக்கோரும் வழக்கில் 25 ஆம் தேதிக்குள் தீர்ப்பு என
தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது, தமிழகத்தில்
அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என பலருக்கும் ஐயம்
ஏற்பட்டுள்ளது.

நீதிபதியின் அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா? என
அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். நீதிமன்ற
நெறிகளை காப்பாற்றும் வகையில் நீதிபதி முடிவு செய்ய
வேண்டும்.

—————————–

Chief Justice of India வருகிற
25ந்தேதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது
அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு
விளக்கம் அளிக்கும் வகையில்,
தான் பதவி ஓய்வு பெறுவதற்கு முன்பாக,
வாதங்கள் முடிவடைந்து,
தன் முன்பு தீர்ப்பு சொல்வதற்காக காத்திருக்கும்
வழக்குகளில் தீர்ப்பு சொல்லி முடிக்கப்பட்டு விடும் என்கிற
அர்த்தத்தில், 25ந்தேதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு
வெளியாகி விடும் என்று சொன்னார்.

லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது,
அந்த செய்தியை திசை திருப்ப –
மனைவி ஒருபக்கமும், துணைவி ஒரு பக்கமும்
துணை இருக்க 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த
ஒரு பெரிய மனிதர் தான் இப்போது
தீர்ப்பு வந்தால் தனக்கு பாதகமாக இருக்குமோ
என்கிற ஐயத்தில் –
நீதிமன்ற மரபுகளைக் காப்பாற்ற வேண்டும் என்று
வேண்டுகோள் விடுக்கிறார்.

நீதிமன்ற மரபுகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில்,
இந்தியாவின்
அதிக பட்ச உயர்ந்த நீதி மன்றமான,
உச்சநீதிமன்றத்தின்
தலைமை நீதிபதியை விட
திரு.கருணாநிதிக்கு அதிக அக்கரை இருக்கும் என்று
யாராலும் நம்புவார்களா…?

அப்படி யாராவது நம்பினால், அவர்கள் நாய் வாலை
நிமிர்த்த முடியும் என்றும் கூட நம்புவார்கள்…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to “கலைஞர் கருணாநிதி” என்றே பெயர் வைத்தாலும் கூட நாய் வாலை நிமிர்த்த முடியுமா …?

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும், இலங்கை தமிழர்கள் வாழ்வில்/இலங்கை தமிழர் எதிர்காலம் ஆகிய அனைத்திலும், திரு கருணாநிதி அவர்களின் பங்கு குறித்து முழு தமிழகம் அறியும். அக்கொடுமை அனைவரும் அறிந்ததே.

 2. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  பொட்டில் அடித்தாற்ப் போன்ற பதிவு.
  தாங்கள் கேட்ட கேள்விகள் போன்று பல விசயங்களில் பலரும் கேட்டுள்ளார்கள்.
  ஆனாலும் உரைக்க வேண்டுமே?
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

 3. பன்னீர்செல்வம் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார், நாய் வாலைக்கூட
  ஒருவேளை நிமிர்த்திடலாம். ஆனா இந்த ஆளை
  கடைசிவரை மாத்தவே முடியாது.

 4. எழில் சொல்கிறார்:

  //”எந்தத் தவறும் செய்யாத என் மகன் 23 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவிக்கிறார். அவர் இந்த வாரத்தில் விடுதலையாகி விடுவார் என்று நம்பிக்கையோடு, இருக்கும் வேளையில், திமுக தலைவர் கருணாநிதி இப்படியொரு கருத்தை கூறியிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஓட்டு அரசியல் எப்போதும் வரும். அதற்காக என் மகனின் வாழ்க்கைப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள். தீர்ப்பு வழங்குவேன் என்று நீதிபதி சதாசிவம் கூறியதில் எந்த அரசியலும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்குள் இப்படியொரு கருத்தை கருணாநிதி வெளியிடப்பட்டிருப்பது, என் மகனின் விடுதலையை தாமதமாக்குமோ என்று பயமாக உள்ளது.

  மறுக்கப்பட்ட நீதி கிடைக்கும்வரை அதை பாதிக்கும் எந்தவித அரசியல் கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்”” என இன்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.//

  இந்த மனிதன் போன்ற சுயநல பேயை இந்த உலகத்திலேயே நான் பார்த்ததில்லை. அன்று நோய் வாய்பட்டு படுக்கையில் இருந்த பார்வதி அம்மாவை ஈவிரக்கமின்றி 3 மணி நேரம் விமான நிலையத்திலேயே வைத்திருந்து திருப்பி அனுப்பினார். இன்று 23 வருடங்களாக நீதி கேட்டு தனி ஒரு பெண்மணியாக எத்தனை படிகள் ஏறி முடிந்தவரை யார் யாரையோ எல்லாம் பார்த்து இறுதியில் ஒரு நல்லது நடக்கும் என எதிர் பார்க்கையில் இந்த அற்ப மனிதன் தனது ‘திரு’ வாயை திறந்தாரே…

  • srinivasanmurugesan சொல்கிறார்:

   திரு.எழில் தங்களுடைய கருத்து மிக சரியானது. சர்க்காரியா விசாரணையின் போதே இவர் தண்டிக்கப்பட்டு இருந்தால் இன்று இத்தனை துயரங்களும் நடைபெற்றிருக்காது.

  • BC சொல்கிறார்:

   //அன்று நோய் வாய்பட்டு படுக்கையில் இருந்த பார்வதி அம்மாவை ஈவிரக்கமின்றி 3 மணி நேரம் விமான நிலையத்திலேயே வைத்திருந்து திருப்பி அனுப்பினார்.//
   எழில் என்பவருக்கு பிரபாகரனின் அம்மாவை திருப்பி அனுப்பியதால் அது ஒரு ஈவிரக்கம் அற்ற செயலாக போய்விட்டது. பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பியதால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இலங்கையில் முழுமையான மருத்துவ வசதி பெற்று கொண்டார்.

   • எழில் சொல்கிறார்:

    மலேசியாவில் இருந்து முறைப்படி விசா எடுத்து படுத்த படுக்கையாக (3 சீட்) புக் பண்ணி விமானத்தில் பார்வதி அம்மா சென்னை வந்த போது, இங்கு நெடுமாறன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குகளின் படி வைத்திய வசதிகளை பெற்று கொள்ள போகிறார் என்று கடைசி நேரத்தில் தெரியவந்தவுடன், எங்கே அனுதாபம் முழுவதையும் அவர்களே பெற்று விட்டால் எப்படி தான் அரசியல் ஆதாயம் தேடுவது எனும் ஒரே காரணத்துக்காக காங்கிரஸ் துணையுடன் கருணாநிதி திருப்பி அனுப்பியதை சொல்ல வந்தால் இங்கு BC என்பவர் வழக்கம் போல இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்குகிறார்.

    உண்மையில் பிரபாகரனின் தந்தையாரும் தாயாரும் இலங்கையின் 4 ஆம் மாடி என்று அழைக்கப்படும் சிஐடி யின் சித்திரவதை கூடத்தில் அடைத்து விசாரிக்கப்பட்டு சில மாதங்களில் வேலுப்பிள்ளை அவர்களும் ஒரு வருடத்துக்குள்ளாக பார்வதி அம்மாவும் இறந்து விட்டார்கள். இதை இந்த BC மறுக்க முடியுமா?

    • BC சொல்கிறார்:

     நீண்ட காலம் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிரபாகரனின் தகப்பனார் இராணுவ காவலில் இருந்த போது இயற்கையாக தனது 86 வயதில் உயிர் இழந்தது உண்மை. (சித்திரவதை கூடத்தில் இல்லை )
     ஒரு வருடத்தின் பின் நோய்வாய்பட்டு வல்வெட்டிதுறை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பார்வதி அம்மாளும் 81 வயதில் காலமானார்.
     இடையில் தான் நெடுமாறன் பார்வதியம்மாளை தனது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த முயற்சித்தார்.

     • எழில் சொல்கிறார்:

      இபோதெல்லாம் இயற்கை மரணத்துக்கு ஒரு ஊசி, கான்சருக்கு ஒரு ஊசி , பக்கவாதத்துக்கு ஒரு ஊசி என புலனாய்வு குழுக்களிடம் இருப்பது உங்களுக்கு தெரியாதா? யாசீர் அரபாத் முதல் அமெரிக்க எதிர்ப்பு தென் அமெரிக்க தலைவர்கள் அனைவரும் இதய கோளாறு, கான்சர் போன்றவற்றால் தான் இறந்தார்கள். இதை நான் சொல்லவில்லை. இறப்பதற்கு முன் வெனிசுவேலா தலைவர் ஹியூகோ சாவேஸ் தான் சொல்லியிருந்தார். இறுதி காலங்களில் வேலுப்பிள்ளையும் பார்வதியும் ராணுவ காவலிலேயே இருந்தார்கள் அவர்கள் இராணுவத்தால் பிடிபட்ட போது 4ஆம் மாடியில் விசாரிக்கப் பட்டார்கள். வேலுப்பிள்ளை இறந்த போது ராணுவம் வெளியிட்ட குறிப்பு ” Thiruvekkadam Velupillai, the father of slain LTTE supremo Velupillai Prabhakaran, died on Wednesday night following a brief illness, ” இவ்வளவு தான். மேற்கொண்டு விபரம் எதுவும் கூறவில்லை. பார்வதியமா ஏறக்குறைய சுயநினைவு இழந்த நிலையில் உணவு உட்கொள்ள முடியாத நிலையில் தான் ராணுவ கண்காணிப்பு முகாமில் இருந்து அரச மருத்துவ மனைக்கு மாற்றப் பட்டார்.

 5. suresh சொல்கிறார்:

  jeyalalitha ennru nayukku peru vaiththalum vaalai nimirtha mudiyathu.

 6. suresh சொல்கிறார்:

  இப்படி ஈழம் தொடர்பாக எழுதி, எழுதியே இறுதியில் இலை மலர்ந்தது ஆனால் ஈழம் மலரவில்லை. அதே போல் இப்பொழுது அம்மாவுக்கு M P க்கள் கிடைப்பார்கள் ஆனால் அற்புதாம்மளுக்கு மகன் கிடைக்கமாட்டார் அது தான் jeya.

 7. Siva சொல்கிறார்:

  This stupid fox in politics is a sin for Tamil people and their history. He will get his share before he dies

 8. Ganpat சொல்கிறார்:

  நண்பர்களின் மனக்கொதிப்பு புரிகிறது நியாயமானதும் கூட.நான் முன்னமே சொன்ன ஒன்றை மீண்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.
  “இறைவன்,
  தான் இருப்பதை நிரூபிக்க பிரபஞ்சத்தை படைத்தார்
  தான் இல்லாததை நிரூபிக்க கருணாநிதியை படைத்தார்.

  • M Nithil சொல்கிறார்:

   Mr Ganpat,

   I guess your comment is not against MK but against every atheist. So sad….

   • Ganpat சொல்கிறார்:

    No Mr.Nithil.An Atheist is one who does not believe in God but loves people and be truthful to them.That way most of the DK and DMK members do not qualify.They abuse God while their family members pray and they cheat poor people.They are anti socials and merchants of hatred.They have to be weeded out.So rest assured I meant Karuna only.HE tests theists thro Karuna.

 9. Ganpat சொல்கிறார்:

  நாடு முழுவதும் கபடம் விரவியிருக்கும் இக்காலத்தில் கருணாநிதியை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்?நேற்றைய ஹிந்து நாளிதழில் குத்புதீன் என்ற குஜராத் வாழ் இஸ்லாமியரின் பேட்டி வெளிவந்துள்ளது.இவர் 2002 ஆம்ஆண்டு குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்.12ஆண்டுகளுக்குப்பிறகு இவர்கள் இதை தூசு தட்டும் நோக்கம் நாம் அறிந்தது தானே! அதே போல நெல்லைக்கண்ணன் எனும் மேடை பேச்சாளர் கடந்த பல நாட்களாக முகநூலில் மோடிக்கு எதிரான சிறிய செய்திகளையும் துணுக்குகளையும் தொடர்ந்து பதிந்து வருகிறார்.காங்கிரஸ்(சிதம்பரம்),கெஜ்ரிவால் ஞாநி போன்றோரின் கபடமும் நாம் அறிந்ததே.எல்லாருடைய ஒரே நோக்கம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் அதை கபடமாக மறைத்து மோடியை தூற்றி அவருக்கு ஒட்டு வராமல் பார்த்துக்கொள்வதே.மேலும் 25சதவிகித வாக்காளர்கள் இன்னும் கருணாவின் பக்கமே என்பதையும் நாம் மறந்து விட வேண்டாம்.

  • புது வசந்தம் சொல்கிறார்:

   தன் சக விளிம்பு நிலை இந்தியனின் நிலை குறித்தும் அவர் கவலைதெரிவிக்கிறார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட அவர் குறித்து நீங்கள் கவலை படவில்லையே. அந்த வலியை கொஞ்சமாவது உணர்ந்தீர்களா ?. உங்களுக்கு மின்சாரம் இல்லையே என்ற கவலை ?,எப்படியாவது மோடி பிரதமர் ஆனால் போதும் என்ற கவலை தான் உள்ளது. அரசியல்வியாதி தான் எல்லாவற்றையும் அரசியல் ஆக்குகிறான் என்றால் நீங்களுமா ?
   இந்த நாட்டில் மலையாளிகள் மட்டுமே சக மலையாளிகளுக்காக முதலில் கவலைப்படுபவன். மனிதனை மனிதனாய் பாரும் மதங்களும் கண்காணாது ஓடும்…(ஹே ராம் பட பாடல் வரிகள்).

 10. Saravana சொல்கிறார்:

  jayalalitha nicely using eelam and this case for her election..

 11. saamaaniyan சொல்கிறார்:

  கருணாநிதி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஈழம் ஓட்டுபிச்சை கேட்க பயன்படும் திருவோடு மட்டுமே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களின் ஈழம் பற்றிய நீலிக்கண்ணீரெல்லாம் மழையில் நனைந்த ஆட்டுக்காக அழுத ஓநாயின் கதைதான் !

  இவர்களெல்லாம் தமிழ்நாட்டிலேயே பல்லாண்டு காலமாக, அகதிகள் முகாமில் முடங்கி, சரியான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் ஈழ அகதிகளுக்கு என்ன செய்தார்கள் ? ஒன்றும் செய்ய மாட்டார்கள் ! ஏனென்றால் அகதிகளுக்குதான் ஓட்டுரிமை கிடையாதே !!!

  எனது புதிய கட்டுரை ” தேர்தல் திருவிழா ! ”
  http://saamaaniyan.blogspot.fr/2014/04/blog-post_18.html

  • BC சொல்கிறார்:

   //இவர்களெல்லாம் தமிழ்நாட்டிலேயே பல்லாண்டு காலமாக, அகதிகள் முகாமில் முடங்கி, சரியான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் ஈழ அகதிகளுக்கு என்ன செய்தார்கள் ?//
   நன்றி. தங்களை மாதிரி உண்மை நிலமையை அறிந்தோரும் உள்ளனர்.

   • எழில் சொல்கிறார்:

    //நன்றி. தங்களை மாதிரி உண்மை நிலமையை அறிந்தோரும் உள்ளனர்.//

    தமிழ் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறலை பாராட்டும் BC என்பவர் கீழ் உள்ள உண்மையை சொன்னால் பாராட்டுவாரா ??

    1800 களில் தேயிலை தோட்டத்துக்கு அடிமைகள் போல் கொண்டு செல்லப்பட்ட நமது உடன் பிறப்புகள் 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னும் மூன்றாம் தர குடிமக்களாக ஓட்டுரிமை இன்றி ஆடு மாடுகளை விட கேவலமாக ‘லயம்; என்றும் பொந்துகளில் அடை பட்டு வாழ்கிறார்களே அந்த உண்மை உங்களுக்கு தெரியாதா?
    70 களில் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் போடப்பட்டு அதில் ஒரு பகுதியினர் பயனடைந்து தாய்நாடு திரும்பினர். அதில் ஒருவர் தான் ஸ்பெக்ட்ரம் ராசாவின் தந்தையார். இன்னும் பலர் மலையகத்தில் ஓட்டுரிமை இன்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தால் சிங்களவனுக்கு சரிக்கு சரி வாக்குகள் அளவில் வந்து விடுவார்கள் என்று இன்னும் அடக்கியே வைக்கப்படிருக்கிரார்கள்.

    • BC சொல்கிறார்:

     //தமிழ் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறலை பாராட்டும் BC என்பவர் கீழ் உள்ள உண்மையை சொன்னால் பாராட்டுவாரா ??//
     தமிழ் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறலை எங்கே பாராட்டினேன்?
     உண்மையை சொன்ன ஒரு நண்பரை பாராட்டினேன். தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் இலங்கை அகதிகளை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் மற்றும் சிலரும் கண்டு கொள்ளாமல் இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கும் போலி தனத்தை கண்டு கொண்டேன்.
     //இன்னும் பலர் மலையகத்தில் ஓட்டுரிமை இன்றி இருக்கிறார்கள்.//
     இலங்கையனான எனக்கே கதை சொல்கிறீர்களா?
     மலையகத்தில் குடியுரிமை ஓட்டுரிமை இல்லாத எந்த தமிழரும் இலங்கையில் இப்போது கிடையாது என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உங்களது விருப்பத்திற்கு ஏற்றால் போல் கற்பனைகளை அள்ளி விடாதீர்கள். வட கிழக்கு மாகாண தமிழர்கள்களின் நிலையை விட மலையக தமிழர்கள் வசதி குறைவாக ஆங்கிலேயர்களால் அறிமுகபடுத்தபட்ட லயன்களின் இன்னுமும் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை வைத்திருக்கபட்டிருக்கும் மோசமான நிலையை விட அவர்கள் நிலை எவ்வளவோ மேல்.

     • எழில் சொல்கிறார்:

      2000 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இலங்கையில் 14% வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தார்கள் அதில் மலையகத் தமிழர் 34%. மிகவும் கேவலமான வாழும் சூழ்நிலை, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளற்று இருந்தவர்களில் இவர்கள் தான் அதிகம். அன்றைய தேதிக்கு 168,141 மலையாக தமிழர் நாடற்றவர்கள். அதாவது ஓட்டுரிமை அற்றவர்கள். அதன் பின் எப்போது எப்படி எந்த அரசியல் அமைப்பு சட்டத்தின் படி அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் விளக்கினால் நான் ஏற்று கொள்கிறேன். நன்றி.

     • BC சொல்கிறார்:

      அமெரிக்க எதிர்ப்பு தென் அமெரிக்க தலைவர்களை அமெரிக்கா கொன்றதோடு எப்படி பிரபாகரன் பெற்றோர்களை ஒப்பிட முடியும்! பிரபாகரன் உங்கள் தலைவர் என்பதிற்காக அவர் இன்னமும் உயிருடன் வாழ்கிறார் என்று நீங்கள் நம்புவது போல், உங்கள் தலைவரின் பெற்றோர்களும் நிரந்தரமாக வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசைபட்டால் என்ன செய்வது? தமிழ்நாட்டில் பெற்றோர்கள் இறக்கும் வயது 100 வயதாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்கின்றதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இலங்கையில் 50, 60, 70 வயதில் நோய் வந்து இறக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அதே போல் குடியுரிமை ஓட்டுரிமை இல்லாத எந்த தமிழரும் இலங்கையில் இப்போது கிடையாது என்ற உண்மையை கூறினேன். ஆனால் இலங்கையை பற்றி விபரீதமாகவே கற்பனை பண்ணி இன்பம் அடையும் உங்களுக்கு இதை பற்றி மேலும் விளக்கம் அளிப்பதில் அர்த்தம் இல்லை.

 12. gopalasamy சொல்கிறார்:

  in all communities poor people are there. even n dalits ,heremostly poor peopl are rhere,some rich educated people are thee. in india, if anybody says particular section is not totally improved it is utter lie and divisive in nature.

 13. Ganpat சொல்கிறார்:

  இதை முகநூலில் படித்தேன்.தெளிவாக இருக்கிறது..
  ===============================================================
  யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
  இதற்கான விடையை யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது என்று வரிசையாக பார்த்துவிட்டால் கிடைத்துவிடும்.
  யாருக்குமே வாக்களிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வருபவர்களுக்கு இந்தத் தேர்தலில் நோட்டா வசதி மூலம் ஒரு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை நாள் இப்படி எண்ணுபவர்கள் வாக்களிக்க வரமாட்டார்கள். ஆனால் அப்படியும் எண்ணுகிறார்களா, எத்தனை பேர் எண்ணுகிறார்கள் என்று இப்போது அறிந்துகொள்ள இந்த வசதி வாய்ப்பளிகிறது. இருந்தாலும் ஜனநாயகத்தின் கோட்பாடு அரசாள விரும்புபவர்களில் விருப்பமான ஒருவரை தேர்ந்தெடுப்பதுதான். ஓர் அரசு என்று நாட்டுக்கு அமைய வேண்டும் என்று எண்ணுபவர்கள் நிச்சயம் ஒருவரை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டும். அது எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்ற நிலை இருந்தாலும் கூட. ஆகவே நோட்டாவைக் கைவிடுவோம்.
  வாக்களிக்கவே கூடாத கட்சியென்று பார்த்தால் அதில் எல்லோரையும்விட முந்திக்கொண்டு நிற்பது எளிய மக்கள் கட்சி என்ற ஆம் ஆத்மி கட்சிதான். இவர்கள் எல்லாவற்றுக்கும் எதிரானவர்கள். வாக்களித்த மக்களுக்கு, அரசியலமைப்புக்கு, தேர்தல் என்ற ஜனநாயக நடைமுறைக்கு மற்றும் நடைமுறையில் இருக்கும் எல்லாவித சட்டங்களுக்கும் எதிரானவர்கள். மாற்றம் வேண்டும் என்று மதிப்போடும் மரியாதையோடும் மக்கள் அளித்த ஆதரவுக்கு அவர்கள் முகத்தில் மலம் பூசியது போல அரசாட்சியை புழுதியில் வீசிவிட்டு இப்போது எவ்வித அசிங்கத்தையும் உணராமல் தேசிய அரசியலில் எதிர்ப்பு அரசியல் செய்கிறது இந்தக் கட்சி. இக்கட்சி வேட்பாளர் மிக நல்லவராக இருந்தாலும் கூட இக்கட்சி செய்துவிடக் கூடிய மக்களுக்கான ஆபத்துகளைத் தவிர்க்க இக்கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது.
  வக்களிக்கவே கூடாத இன்னொரு கட்சி திமுக. கடந்த பத்தாண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்து உலகின் பலநாட்டு பணக்காரர்களையும் விட சொத்து சேர்த்திருப்பது இக்கட்சி ஆட்கள்தான். எல்லாவிதமான ஊழல்களையும் அதில் சாதனை படைக்கும் அளவுக்கு புதிய எல்லைகளை தொட்டது இக்கட்சிதான். கட்சித் தொண்டர்களும் மனம் வெதும்பிப் போகுமளவுக்கு தன் குடும்பத்தார் அனைவருக்கும் 21 தலைமுறைகளுக்கும் மேலாக சொத்து சேர்த்து வைத்திருப்பது இக்கட்சிதான். இலங்கைப் பிரச்சனையில் தம்ழர் நலன் என்று கூவிக்கொண்டே துரோகமிழைத்த இவர்கள் சுயநலத்தின் எல்லைக்கெ சென்று தம்மை ஆதரித்தவர்களுக்கே துரோகம் இழைப்பவர்கள். சிறுபான்மை நலன் என்று சொல்லிக்கொண்டே முரசொலி மாறன் அமைச்சர் ஆவதற்காகவே பாஜகவுடன் கூட்டு சேர்ந்தவர்கள். இவர்களை இன்றளவும் ஆதரிக்கும் சிறுபான்மையினரைக் கண்டால் வியப்பாக இருக்கிறது. இவர்கள் தமிழர் எதிரிகள். தேசிய நலனுக்கு எதிரிகள். பயங்கரவாதிகளுக்கு நண்பர்கள். இவர்கள் தமிழகத்தில் ஆடிய ஆட்டத்துக்கு சென்ற தேர்தலில் மரண அடி கொடுத்ததை இந்தத் தேர்தலில் மக்கள் உறுதி செய்ய வேண்டும்.
  காங்கிரஸ் கட்சி தாங்களாகவே முன்வந்து ஆட்சிப் பொறுப்புக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். நிர்வாகத்தின் எல்லாதுறைகளிலும் ஊழலை நிரப்பி நிர்வாகத் திறனை நீக்கிவிட்ட இக்கட்சிக்கு வாக்களிப்பது விலகிச் செல்கிற தீமையை வலியச் சென்று அழைப்பது போன்றதாகும்.
  கம்யூனிஸ்ட் கட்சிகளை யாருமே பொருட்படுத்தாத நிலையில், அவர்களே சுய மதிப்பளித்துக் கொள்ளாமல் அதிமுகவின் அடிமைகளாக சற்றுமுன்பு வரை நடந்து கொண்டவர்களை நாமும் பொருட்படுத்த வேண்டாம்.
  அதிமுக என்ற கட்சி ஒற்றை மனிதர் ஒருவரும் அவருக்கு தாள்பணியும் மற்றவர்களையும் கொண்ட கட்சி. சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக செய்த அராஜக ஆட்சியினால மக்கள் அதிமுகவுக்கு அமோக ஆதரவு அளித்த நிலைப்பாடு மிகச் சரியானது. ஆனால் இப்போது நடைபெறுவது மத்திய அரசுக்கான தேர்தல். அதிமுகவின் மத்திய அரசு சார்ந்த செயல்பாடுகள் எதுவும் மெச்சத்தகுந்தவை அல்ல. அதிலும் சற்றும் பொறுப்பில்லாமல் ஒரு ஆட்சியைக் கவிழ்த்த பெரும் தீமையை இவர்கள் செய்திருக்கிறார்கள். இக்கட்சிக்கு அளிக்கும் வாக்கு எந்த அளவிலும் மத்திய அரசினால் நாம் நன்மை பெற வாய்ப்பளிக்கப் போவதில்லை. ஊழலிலும் சந்தர்ப்பவாத மற்றும் சாதி அரசியலிலும் திமுகவோடு போட்டி போடுவது மட்டுமல்லாமல், சர்வாதிகாரமான அடிமைக் கலாச்சாரத்தையும் வளர்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மிகவும் பொற்ப்பற்ற தேசிய அரசியலை நிகழ்த்திவிட்ட இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். திமுக என்ற கொடும் தீமைக்கு மாற்றாக இவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று எண்ணினாலும் அதற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தல் வரை பொருத்திருப்போம்.
  இப்போது நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவுக்கு வந்திருக்கிறோம். அமைந்திருக்கும் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பதே நமக்கிருக்கும் ஒரே வழியாக இருக்கிறது. பலவிதமான குற்றச்சாட்டுகள் பாஜக மீது கூறப்பட்டாலும் அவற்றில் பலவற்றில் சாரமில்லை. பாஜகவின் சென்ற ஆட்சியிலும் சரி, இப்போது பாஜக ஆளுகின்ற மாநில ஆட்சிகளிலும் சரி பாஜக மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தாமல் அவர்களுக்கே ஆதரவு அளிக்க வேண்டுமளவுக்கு நல்ல விஷயங்கள் பளிச்சென்று தென்படுகின்றன. தற்போதைய நிலையில் ஒரு நிலையான நல்லாட்சியை தரத்தக்க அளவில் இருக்கும் கட்சி பாஜகதான். மேலும் பாஜக ஒரு வலுவான பலதரப்புக் கட்சிகளைச் சேர்த்த கூட்டணியாகவே இந்தத் தேர்தலை சந்திக்கிறது.
  பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எவ்வித தயக்கமும் இல்லாமல் தெளிவுடனும் நம்பிக்கையுடனும் வாக்களிப்போம்.
  ========================================================================

  • nparamasivam1951 சொல்கிறார்:

   மிக மிகத் தெளிவாக விளக்கி உள்ளீர்கள். சரியான நேரத்தில் நான் படிக்க நேர்ந்தது. நன்றி

 14. Varadhan சொல்கிறார்:

  PM was brutally assisinated along with 12 other tamil people in sriperumbudhur..and now we are showing grace to people who helped this assisination… what to do..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.