Why it is “Modi” V/s “Lady” …? – Should it not be “Modi plus Lady.”…???

 

modi and jj
கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு
மோடியும், லேடியும் மோதிக் கொள்வதில் மகா சந்தோஷம்.
காரணம் – ஓட்டுக்கள் பிரியும், தேர்தலுக்குப் பின்
மோடியுடன் தாங்கள் ஜோடி சேரவும் இந்த சண்டை உதவும் …!

ப.சி. பேசாத பேச்சில்லை – முட்டாத சுவரில்லை –
இருவருக்கும் மோதலை உருவாக்க…! –
காரணம் – 25 வருடப் பகை…..!

விஜய்காந்த், அப்பா டாக்டர், பிள்ளை டாக்டர் –
ஆகியோர் மிகவும் வேண்டி விரும்பி,
எல்லா கோவில்களிலும் வேண்டுதலுடன் பிரார்த்தனை எல்லாம் கூடச்
செய்தனர் – மோடியும், லேடியும் மோதிக்கொள்ள வேண்டுமென்று.
காரணம் – மோடி ஆதரவு ஓட்டுக்கள் அம்மாவிற்குப் போய் விடக்கூடாது…!

இவற்றில் எல்லாம் அதிசயம் ஏதுமில்லை. அரசியல் எதிரிகள் –
அப்படித்தான் விரும்புவார்கள்.

ஆனால் – தமிழக பாஜக தலைமை……?
பொன்.ராதாகிருஷ்ணன் அட்வான்சாக திருப்பதி சென்று
மொட்டை போட்டுத் திரும்பி தான் பிரச்சாரத்தையே துவக்கினார்……..
தேர்தல் முடிந்தவுடன் போகக்காத்திருக்கிறார் –
இல.கணேசன் – திருப்பதி சென்று ..மொட்டை போட…!! –

மோடியும் லேடியும் மோதிக்கொள்வதில் இவர்களுக்கென்ன லாபம் …?

அவர்கள் இருவரும் சேர்ந்து விட்டால் –
முதல் பலி – இவர்களது மத்திய மந்திரி கனவு…!
2வது – அம்மா -மோடியுடன் சேர்ந்து விட்டால்,
இவர்களது செல்வாக்கு காலி. பாஜக தலைமையிலும் சரி – அம்மாவிடமும் சரி
– இவர்களுக்கு அஞ்சு காசுக்கு மதிப்பும் இருக்காது மரியாதையும் இருக்காது ..
இவர்கள் செய்த காரியத்திற்கு…!

இத்தனை பேரும் சேர்ந்து எடுத்த –
கடும் முயற்சி cum பிரார்த்தனை
cum மொட்டைகளின் விளைவு – இடையிலே இந்தப் பிளவு..!

இதனால் லாபம் அடையப்போவது –
திருவாளர்கள் –
கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம் கோஷ்டிகள் ஒரு பக்கம்…
விஜய்காந்த், அப்பா டாக்டர், பிள்ளை டாக்டர்,
கோடீஸ்வரக் கல்வித்தந்தைகள் – ஒரு பக்கம்….
தமிழக பாஜகவின் இன்றைய மற்றும் நாளைய
மொட்டைகள் – மற்றொரு பக்கம்….

நஷ்டம் அடையப்போவது …..?
தமிழ் மக்களும்….தமிழ் நாடும்….தமிழ்நாட்டின் முன்னேற்றமும்.
கூடுதல் விளைவு – போகப் போகத் தெரியும்…

கீழே கொடுக்கப்பட்டிருப்பது நேற்று இறுதிக்கட்டத்தில்
வெளியாகியிருக்கும்
பல்வேறு கருத்துக் கணிப்புகளின் சுருக்கம் –

குமுதம் ரிப்போர்ட்டர் –
அதிமுக -21, திமுக -7, பாஜக -3, பாமக-1, மதிமுக-3
ஊசலாடுபவை -4

ஜூனியர் விகடன் –
அதிமுக-20, திமுக-11, பாஜக-3, பாமக-2, மதிமுக-2 விசிக-1,

தினமலர் –
அதிமுக-23, திமுக-2, பாஜக-5, தேமுதிக-1, பாமக-1, மதிமுக-2, காங்கிரஸ்-1
ஊசலாடுபவை-4

பார்க்க மகா கேவலமாக இல்லை…?

நரேந்திர மோடியின் மீதுள்ள பற்றினாலும், நம்பிக்கையினாலும்,
நாட்டிற்கு அவர் பெரிய சேவை செய்து விடப்போகிறாரென்றும் நினைத்தா –
விஜய்காந்தும் ராமதாசும் பாஜக கூட்டணிக்கு வந்தார்கள்…?
அப்படி எல்லாம் இருந்தால், வைகோவைப் போல் ஆரம்பத்திலேயே
வந்திருப்பார்களே.

விஜய்காந்தையும், அன்புமணி ராமதாசையும் இழு இழுவென்று இழுத்து,
அவர்கள் தாடையைப் பிடித்து கெஞ்சாத குறையாக கெஞ்சி, கொஞ்சி
மன்மோகன் சிங்க்கையும், சோனியா காந்தியையும் பார்க்கப் போனவரை –
மலேசியா சிங்கப்பூரெல்லாம் துரத்தி துரத்தி ஓடிப்பிடித்து –
இறுதியில் ஒருவழியாக கூட்டணியில் சேர ராஜ்நாத் சிங் முன் கொண்டு
வந்து சேர்த்து — இதெல்லாம் “பொன்ரா”வும், இல.கணேசனும் எப்போதோ
செய்த பாவத்தின் விளைவுகள்.
(இப்போது செய்திருக்கும் பாவத்தின் விளைவுகளை
தேர்தல் முடிவுகளுக்குப் பின்
தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்…)

அருமையான பின்னூட்டங்களுக்குச் சொந்தக்காரர் –
நண்பர் கண்பத் அவர்களின் மதிப்பீடுகளின் மீது
நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
இருந்தாலும், ஒரு விஷயத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
நரேந்திர மோடி டெல்லியில் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்று
அவர் கூறுவது – பொறுப்பான கருத்து – நானும் ஏற்கிறேன்.

ஆனால் – அதற்காக விஜய்காந்தையும், டாக்டர் அன்புமணி ராம்தாசையும்,
மற்ற கோடீஸ்வர கல்வித்தந்தைகளையும் பாஜக எதற்காக ஊக்குவிக்க
வேண்டும்..?
நாமும் அதை ஏன் ஏற்க வேண்டும் ..?
2ஜி ஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு ஊட்டி ‘சீட்’டை விற்ற தமிழக பாஜகவின்
அயோக்கியத்தனத்தை நாம் ஏன் கண்டுகொள்ளாமல் விட வேண்டும்…?

காவிரி நீருக்கு வாக்குறுதி கொடுப்பீர்களா என்று கேட்டால் –
இதோ – நதிகளை இணைத்து விட்டால் – காவிரியில்
தண்ணீர் தானாகவே வந்து விடும் என்று –
மோடி அலை வீசுகிறது என்கிற திமிரில் – பதில்
கூறும் தமிழக பாஜகவை நாம் எதற்காக ஆதரிக்க வேண்டும் ..?

மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு மீட்பு, இலங்கைத்தமிழர் பிரச்சினை,
முல்லைப்பெரியாறு – என்று எதைக்கேட்டாலும்
கண்டு கொள்ளாமல், குஜராத்தில் பாலாறு ஓடுகிறது, தேனாக சொட்டுகிறது
என்றால் என்ன அர்த்தம் …?

குஜராத்தில் 24 மணிநேரமும் மின்சாரம்….. இங்கே …?
என்று இல.கணேசன் கிண்டலாகக் கேள்வி கேட்கிறாரே –
அங்கு மின்சாரம் யுனிட் விலை என்ன தெரியுமா ?
ஒரு யுனிட் மின்சாரம் 7ரூபாய், 9 ரூபாய் என்றால் தமிழகம்
என்ன ஆகும் …? நமக்குத் தாங்குமா …?

வீட்டில் குழாயைத்திறந்தால் தண்ணீர் கொட்டும் …… இங்கு ..?
என்று மீண்டும் மேடைக்கு மேடை கேட்கிறாரே கணேசனார்…..
அங்கு குழாய்த்தண்ணீருக்கும்
ஒரு நாளைக்கு, ஒரு ஆளுக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் தான்
என்று ரேஷன் உண்டு என்பது தெரியாதா ?
அந்த தண்ணீருக்கும் மீட்டர் உண்டு – ஒவ்வொரு சொட்டுத் தண்ணீருக்கும்
விலையும் உண்டென்று கணேசனுக்கு தெரியும் தானே ?
அதெல்லாம் இங்கு யாருக்கும் தெரியாது என்கிற
நினைப்பு தானே மேடைக்கு மேடை கேள்வி கேட்கச்சொல்கிறது ?

அங்கு இன்று இலகுவாகக் கிடைக்கும் நர்மதை தண்ணீருக்கான வேலை
40 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது, அதில் 50 சதவீத வேலை
மோடி வருவதற்கு முன்பே முடித்தாகி விட்டது என்கிற உண்மையும்
இங்கு யாருக்கும் தெரியாது என்கிற தைரியம் தானே …?

12 ஆண்டுகளாக ஒரே நபர் முதல் அமைச்சர் பதவியில் இருந்திருந்தால் –
ஒரு வேளை இங்கும் கூடத்தான் அதெல்லாம் சாத்தியப்பட்டிருக்கலாம்.!
ஏன் – முதலமைச்சராக தமிழ்நாட்டில் காமராஜர் சாதிக்காததா ?

இதையெல்லாம் சௌகரியமாக மறைத்துவிட்டு –
இல.கணேசனார் மோடியா -லேடியா என்று கேட்டதன் விளைவு தான்
இன்று முட்டலிலும் மோதலிலும் வந்து நிற்கிறது. இந்த அளவிற்கு
லோக்கல் பாஜகவை பேச விட்டதன் பலனை தேர்தல் முடிவுகளுக்குப் பின்
பாஜக தலைமை உணரும்….

மோடியா – லேடியா என்கிற கேள்வியே இங்கு அநாவசியம்.
தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளின்
அப்பட்டமான சுயநலத்தின் விளைவு தான் இந்தக் கேள்வி….

நரேந்திர மோடி ஒரு நல்ல நிர்வாகி.
ஊழலுக்கு இடம் கொடுக்க மாட்டார்.
தேசப்பற்று உள்ளவர். நம் நாட்டை அமெரிக்காவுக்கோ,
இத்தாலிக்கோ அடகு வைக்க மாட்டார்.
‘கோமா’வில் கிடக்கும் இந்த நாட்டை எழுந்து நின்று,
நடந்து, பின்னர் உலக அரங்கில் ஓடச் செய்வார் என்று
நம்புவோம் – அவர் அனைத்து பிரிவினரையும் அணைத்துச் செல்வார்
என்று நம்புவோம்.

அதே சமயம், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி அடிப்படையிலேயே
தவறான விஷயம் என்பதை பாஜக தலைமை உணர வேண்டும்.
அடுத்து 2016 சட்டமன்ற தேர்தலில், விஜய்காந்த் தலைமையில்
(அவர் தானே மேஜர் பார்ட்னர் ..?) டாக்டர் ராமதாசும்,
வைகோவும் கூட்டணி அமைக்க முன்வருவார்களா ?
இவர்கள் இருவரும் ஒரு குடிகாரரை முதல்வர் பதவிக்கு முன்மொழிந்து
தேர்தலைச் சந்திப்பார்களா ..? அவர் மனைவியை தமிழ்நாட்டின்
நிதியமைச்சராகவும், மைத்துனரை உள்துறை அமைச்சராகவும்
ஏற்றுக் கொள்வார்களா …?

பின் ஏன் தமிழ்நாட்டில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும்,
இது சட்டமன்ற தேர்தலுக்கும் தொடரும் என்றும் –
தெரிந்தே பொய் சொல்ல வேண்டும் …?
பாஜக தலைமை – தவறுகளை உணர்ந்து அவற்றை சரி செய்ய
உடனடியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தலுக்குப் பிறகு –
மத்திய அரசு நரேந்திர மோடியின் தலைமையில் அமையட்டும்.
பொறுப்பேற்கும் பாஜக கூட்டணியில் அண்ணா திமுகவும் இடம் பெறட்டும்.
தவறுகள் சரி செய்யப்பட வேண்டும் –
இவ்வளவு நாட்களாகப் பட்ட துன்பங்கள் போதும்.
இனியாவது தமிழகத்தின் நலன்களும்,
தமிழரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதற்கு தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் –
அம்மாவின் அண்ணா திமுக
மற்றும் வைகோவின் மதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் எனக்குத் தோன்றியதை
எழுதி விட்டேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே ….?

 

 

 

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to Why it is “Modi” V/s “Lady” …? – Should it not be “Modi plus Lady.”…???

 1. பாலு மகேந்திரன் சொல்கிறார்:

  அடப் போங்க சார்.
  ஜெயலலிதாவும் மோடியும் ஒருவருக்கொருவர் தாக்கிப் பேசுவதை எல்லாம் உண்மை என்று நம்பிட்டீங்களா?
  தேர்தலுக்கு அப்புறம் பா.ஜ.கா. வுக்கு ( கண்டிப்பாக தேவைப்படும் )மெஜாரிட்டி தேவை என்றால் அ.தி.மு.க.விடம் (நிறைய எம்.பி.க்கள் இருக்கும் பட்சத்தில்) கேட்காமலா இருப்பாங்க? அல்லது இவுங்கதான் கொடுக்காமலா இருக்கப் போறாங்க.

  ///நஷ்டம் அடையப்போவது …..?
  தமிழ் மக்களும்….தமிழ் நாடும்….தமிழ்நாட்டின் முன்னேற்றமும்.
  கூடுதல் விளைவு – போகப் போகத் தெரியும்…/ Can you elaborate on this?

  //நரேந்திர மோடியின் மீதுள்ள பற்றினாலும், நம்பிக்கையினாலும்,
  நாட்டிற்கு அவர் பெரிய சேவை செய்து விடப்போகிறாரென்றும் நினைத்தா –
  விஜய்காந்தும் ராமதாசும் பாஜக கூட்டணிக்கு வந்தார்கள்…?//
  இவர்களுக்கு காங். & திராவிட கட்சிகள் அல்லாத கட்சியும் அவர்களுக்கு ஒரு பெரிய வாக்கு வங்கியும் தேவை.
  அதனால் இனைந்து கொண்டார்கள். இதில் தவறு ஏதும் இல்லையே.

  //ஆனால் – அதற்காக விஜய்காந்தையும், டாக்டர் அன்புமணி ராம்தாசையும்,
  மற்ற கோடீஸ்வர கல்வித்தந்தைகளையும் பாஜக எதற்காக ஊக்குவிக்க
  வேண்டும்..?//
  தமிழக பா.ஜ.க.விற்கு பசையான வேட்பாளர்களும் வாக்கு வங்கியும் இருந்தால் இவர்களை ஏன் ஊக்குவிக்கப் போகிறார்கள்?

  அது சரி. தமிழக பா.ஜ.கா.வை எதிர்க்கிறீர்கள். அனால் மோடி பிரதமராக வரவேண்டும் என்றும் விரும்புகிறீர்கள்.? இஃது என்ன நிலைப்பாடு?

  • சுந்தர்ராசன் சொல்கிறார்:

   லோக்கலில் அம்மாவுக்கும் சொம்படிக்க வேண்டும், அதே சமயம் மத்தியில் ஹிந்துத்வ தீவிரவாத ஆட்சி வேண்டும் என்கிற தினமலர் நிலைப்பாடு தான் இது. மத்தியிலும் மாநிலத்திலும் ‘அவா’ ஆட்சி அமைய, கணக்கில்லாமல் பொய்களை மட்டும் பேசும் நடுநிலைவாதி இவர்.

 2. Ganpat சொல்கிறார்:

  கா.மை.ஜி.
  உங்கள் அன்பிற்கு நன்றி.
  நம் மாநிலத்தில்…
  மொத்த வாக்காளர்கள் 100பேர்
  ஒட்டு போடுவது 70பேர்
  திமு.க.அனுதாபிகள்..15பேர்
  அ.தி.மு.க அனுதாபிகள்.17பேர்
  விஜயகாந்த் அனுதாபிகள்.3பேர்
  ராமதாஸ் வை.கோ அனுதாபிகள் 3பேர்
  ஆக மொத்தம்…38பேர்கள்.
  மேற்கண்ட 38பேர்கள் தங்கள் நிலை மாறப்போவதில்லை.
  எனவே மீதம் உள்ள 32பேர்கள்தான் நம் இலக்கு
  இவர்களைத்தான் நான் கேட்டுக்கொண்டது..
  காங்கிரஸ்,தி.முக,ஆப்,சுயேச்சை NOTA தவிர
  யாருக்கு வேண்டுமென்றாலும் வாக்களியுங்கள்
  என்பதே,
  இன்னும் 18மணிநேரத்தில் பரீட்சை ஆரம்பம்
  இன்னும் படித்தால் ஏற்கனவே படித்ததும் மறந்து விடும்.
  மற்றபடி உங்கள் கருத்தும்தான் என் கருத்தும்
  JAIHIND

 3. gopalasamy சொல்கிறார்:

  I also feel, what you have told is correct.
  Finally, it appears, we have to support AIDMK. One way it is correct.

 4. rajkumar சொல்கிறார்:

  நக்கீரன் கருத்துகணிப்பையும் இணைத்திருக்கலாம்.
  அ.தி.மு.க -14
  தி.மு.க -21
  பிற கட்சிகள் -5

 5. பன்னீர்செல்வம். சொல்கிறார்:

  கண்பத் சார் சொல்வதில் சிறு திருத்தம்.
  ஓட்டுப் போடக்கூடாதவர்கள் பட்டியலில் காங்க்கிரஸ், திமுக, சுயேச்சை,
  ஆப், நோடா அகியவற்றுடன் –

  பாமக, மதிமுக, கொங்கு ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டு விட்டால்
  சரியாக இருக்கும்.

  ஆக மொத்தம் தமிழ்நாட்டில் நம் ஓட்டு –
  மதிமுக, அதிமுக ஆகியோருக்கு மட்டுமே என்றாகி விட்டால் ?
  நன்றி காவிரிமைந்தன் சார்.

  பன்னீர்செல்வம்.

  • sundar சொல்கிறார்:

   பாமக, மதிமுக, கொங்கு ??
   நீங்கள் விஜயகாந்தின் தேமுதிக -வை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறன்

 6. ravikumar சொல்கிறார்:

  well said sir good analysis

 7. kvln சொல்கிறார்:

  All is well said… But don’t praise too much about J. She has done a lot in her 2001-2006 period.
  But her performance has been much below the expectations for the past 3 years….

  Whats wrong in metering and giving good quality of water? Have u ever waited for a week for 2 cans of water? have u ever woken up at midnight, stood in “Q” to get drinking water… TN has a long way to go in terms of giving good quality of water, a clean environment,POWER… don b too proud of our Tamilnadu..

  I Agree that what TN BJP has done is wrong… But y d hell J didn support BJP and accepted for an alliance.. that could have been a natural alliance… Don’t blame only BJP.. its as usual J’s ego and dream to become PM that spoilt a good alliance both for the parties and the country….

  But still I hope ADMK n BJP will come together….

 8. nparamasivam1951 சொல்கிறார்:

  தமிழக ப.ஜ.வை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை என எண்ணுகிறேன். முதல்வர் ஜெ அவர்கள் தான் பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை என ஆரம்பத்திலேயே அறிவித்தது. பின் பா.ஜ. மற்றும் வைகோ மட்டும் கூட்டணி சேர்ந்தால் கிடைக்கும் இடங்களைவிட இப்போது கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆட்சி அமைக்க ஜெ அவர்கள் உதவி கிடைக்கும். என்ன ஒன்று. வாஜ்பாய் க்கு செய்தது போல் செய்யாமல் இருந்தால் சரி. ஏற்க்கனவே நீங்கள் கூறியபடி, பா.ஜ. மற்றும் வை.கோ. இடங்களில் அவர்களுக்கும் மற்ற இடங்களில் ஜெ க்கும் வாக்களித்தால் போதுமானது. இவை எனது என்ன ஓட்டம்.

 9. maasianna சொல்கிறார்:

  neenda naatkalaga ungal pathivukalai patithuvarukiren tharamaaga irukkum. enekku migavum pitikkum. aanaal indru admk virkku vottu podasolli ?………

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் மாசியண்ணா,

   மன்னிக்கவும். நான் அண்ணா திமுக மட்டும் சொல்லவில்லை.
   வைகோவின் மதிமுக வையும் அதிக அளவில் தேர்ந்தெடுத்தால்
   நல்லது என்று தானே சொல்லி இருக்கிறேன்.

   என்னைப் பொறுத்தவரை, முதலில் தமிழர் மற்றும் தமிழ்நாட்டின்
   நலன்கள் முக்கியமானவை. அதன் பிறகு தான் அகில இந்திய நிலை.
   நீண்ட நாட்களாக தொங்கலில் இருக்கும் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் வித்தியாசமானவை. இவற்றை ஒரு
   மாநிலக் கட்சியால் தான் அழுத்தம் கொடுத்து முடிவிற்கு
   கொண்டுவரச்செய்ய முடியும். எனவே தான் அப்படிச் சொன்னேன்.

   மதிமுக பாஜக கூட்டணியில் தானே இருக்கிறது. அதையும் தானே
   தேர்ந்தெடுக்க வேண்டுமென்று சொன்னேன்.

   என் மீது நீங்கள் கொண்டுள்ள அபிமானத்திற்கு நன்றி.
   என்னைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. ரா. சிவானந்தம் சொல்கிறார்:

  ///அங்கு மின்சாரம் யுனிட் விலை என்ன தெரியுமா ?
  ஒரு யுனிட் மின்சாரம் 7ரூபாய், 9 ரூபாய் என்றால் தமிழகம்
  என்ன ஆகும் …? நமக்குத் தாங்குமா …?

  அங்கு குழாய்த்தண்ணீருக்கும்
  ஒரு நாளைக்கு, ஒரு ஆளுக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் தான்
  என்று ரேஷன் உண்டு என்பது தெரியாதா ? ///

  மிஸ்டர் காவிரி மைந்தன்,

  நான் அகமதாபாத்துல இருக்கேன், நீங்க எங்க இருக்கீங்க? இங்க நிலைமை அவ்வளவு மோசமாவா இருக்கு?

  எந்த ஏரியான்னு சொல்லுங்க, அங்க போய் ரவுண்ட் அடிச்சிட்டு நானும் விளக்கமா ஒரு பதிவு போடறேன்.

  • paramasivam சொல்கிறார்:

   சபாஷ். சரியான கேள்வி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   துக்ளக் இதழில் சில மாதங்களுக்கு முன்னதாக, சத்யா அவர்கள்
   குஜராத் சென்று வந்து எழுதிய கட்டுரைகளும், ஜூனியர் விகடன் டீம்
   குஜராத் சென்று வந்து 5 வாரங்களுக்கு எழுதிய தொடர் கட்டுரைகளும்,
   தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களின் அறிக்கைகளும் தான்
   நான் கொடுத்த புள்ளி விவரங்களுக்கான அடிப்படை ஆதாரங்கள்.

   இவற்றை தவறு என்று நீங்கள் சொல்வதானால், எனக்கு சொல்வதற்கு
   ஏதுமில்லை.

   ஆனால் ஒன்று செய்யலாம். உங்கள் வீட்டிற்கு நீங்கள் தண்ணீருக்கு
   விலை/வரி கொடுக்கிறீர்களா இல்லையா ? எந்த அடிப்படையில் ?
   எவ்வளவு ? மீட்டர் வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதையும்,

   மின்சாரத்திற்கு – யுனிட் ஒன்றுக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள்
   என்பதையும் தெரிவித்தால் அனைவரும் தெரிந்து கொள்ள் உதவியாக
   இருக்கும்.

   மற்றுமொரு விஷயம் – நீங்கள் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக
   இருக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை யாராக இருந்தாலும்
   உண்மை உண்மை தான்.

   நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு
   விஷயம் – நான் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளன் அல்ல.
   மோடி அடுத்த பிரதமராக பொறுப்பேற்று நாட்டை முன்னேற்றிச் செல்ல
   வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.

 12. ரா.சிவானந்தம் சொல்கிறார்:

  வணக்கம் நண்பரே,

  நானும் மோடியின் தீவிர ஆதரவாளர் அல்ல. அதேசமயம் அவரை தீண்டத்தகாதவராகவும் நினைக்கவில்லை. மற்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்ற வகை.

  பத்திரிகைகளில் வரும் தகவல்களும் தற்போது சொல்லப்படும் கருத்துக் கணிப்புகளும் ஒன்றுதான். ஓரளவுதான் உண்மை வரும். இவர்கள் திட்டமிட்டு பொய் சொல்லாவிட்டாலும், சில விஷயங்களை ஆழமாக அணுக முடியாது. அதேபோல் நானும் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இருந்து கொண்டு இதுதான் குஜராத்தின் நிலவரம் என்றும் சொல்லமுடியாது.

  ஆனால் நான் கவனித்த/கேள்விப்பட்ட வரையில் தண்ணீருக்கு மீட்டரோ அல்லது ரேஷன் என்பதோ எங்கும் கிடையாது. ஏதாவது சில ஏரியாக்களில் அதும் லாரிகளில் சப்ளை பண்ணும் இடங்களில் இப்படி ஏதாவது நடந்திருக்கலாம். நான் படித்ததில்லை. `ஒவ்வொரு சொட்டுத் தண்ணீருக்கும் விலை என்பது` இங்கே எதார்த்தத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள்.

  வருடத்துக்கு 3 0 0 -1 0 0 0 என வீட்டை பொறுத்து வரி வருமாம். இது அனைத்து (சொத்து, தண்ணீர்) வரிகளும் உட்பட்டது. இதுதான் நான் கேள்விபட்டது. நானும் இங்கே வந்து 2 வருடம்தான் ஆகிறது. மற்றபடி நானும் இங்கே கெஸ்ட்தான்.

  மின்சாரத்தை பொறுத்தவரையில், இந்த முறை வந்த பில் 1 6 7 யூனிட்டுக்கு ரூ. 1 0 3 3 வந்திருக்கிறது. இது ரூ. 6 என்ற அளவில் இருக்கிறது. கீழ்மட்ட மக்களுக்கு கட்டணம் இன்னும் குறைவு.

  இங்கே வருத்தப்படும் விஷயம் தலைவர்களின் குறைகளை சொல்வதை அல்ல, சொல்லப்படும் தகவல்கள் ஓரளவாவது நம்பகத்தன்மை உள்ளதாக இருக்க வேண்டும் என்பதால்தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.