ராஜீவ் கொலை வழக்கு – கலைஞரால் தீர்ப்பை ஒத்திவைக்கத்தானே முடியும் ? மாற்றி விடவும் கூடுமோ …?

நேற்றே வருமென்று எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு. கலைஞர்
காரணமாகவோ என்னவோ – நேற்றும் வரவில்லை – இன்றும் வரவில்லை.
நாளை தலைமை நீதிபதி ஓய்வு பெறுகிறார் என்பதால் நாளை நிச்சயம்
வெளிவந்து விடும். இனியும் தாமதமாக வாய்ப்பில்லை…

தேர்தல் சமயத்தில் இந்த தீர்ப்பு வெளிவந்தால், அது திமுக வுக்கு
பாதகமாகி விடுமென்று நினத்ததால் தானே கலைஞர் எதிர்த்தார் …?
அப்படியானால் வரப்போகிற தீர்ப்பை கலைஞர் விரும்பவில்லை
என்று தானே ஆகிறது …?

வழக்கு இப்போது எந்த நிலையில் இருக்கிறது…?

தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம்
முன்னதாக அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்
அப்பீல் செய்தது.

உச்சநீதிமன்றம் முன்பாக மத்திய அரசு சமர்ப்பித்த அப்பீல்களில் இரண்டு
விஷயங்கள் முடிவு செய்யப்பட காத்திருந்தன –

1) தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதி மன்றம்
அளித்த தீர்ப்பு செல்லத்தக்கதல்ல. வழக்கை மீண்டும் 5 நீதிபதிகளைக் கொண்ட
உயர் மட்ட அரசியல் சாசன பெஞ்ச் புதிதாக விசாரிக்க வேண்டும்.

– இந்த கோரிக்கை விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என்று கூறி
இது குறித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
(எனவே தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதில்
எந்தவித மாற்றத்திற்கும் இடமே இல்லை ..)

2) தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டாலும்,
சம்பந்தப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு
அதிகாரம் இல்லை. இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கும் அதிகாரம்
சட்டப்படி மத்திய அரசுக்கு தான் உண்டு. எனவே தமிழக அரசு
அவர்களை விடுதலை செய்வது குறித்து எந்தவித முடிவும் எடுக்க முடியாது..!
தமிழக அரசு இதுகுறித்து எடுத்துள்ள நடவடிக்கைகளை செல்லாதென்று
அறிவிக்க வேண்டும்…!

– இந்த விஷயம் தான் இப்போது தீர்ப்புக்காக காத்திருக்கிறது.

இதில் 2 விதங்களில், எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம்…!

இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான்
உண்டு – தமிழ்நாடு இதில் தலையிட முடியாது என்றும் வரலாம். அல்லது –

இது குறித்து மாநில அரசு – மத்திய அரசுடன் தகுந்த முறையில்
கலந்து ஆலோசனை செய்த பிறகு முடிவெடுக்கலாம். முடிவெடுக்கும்
அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும் வரலாம்.
அப்படி தீர்ப்பு வரும் பட்சத்தில் –
மாநில அரசு, மத்திய அரசை கலந்து ஆலோசிப்பது குறித்த சில
வழிமுறைகளை நீதிமன்றம் வகுத்துக் கூறலாம்.

இந்த இரண்டில் எது தன்னை பாதிக்குமென்று கலைஞர் அஞ்சுகிறார் …?

தேர்தல் நேரத்தில் தீர்ப்பை வெளியிடுவது முறையாக இருக்குமா
என்று உச்சநீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்றும், “நீதிபதி
சதாசிவம் அவர்கள் எனக்கும் வேண்டப்பட்டவர் தான்” என்றும்
கலைஞர் பகிரங்கமாகப் பொதுக்கூட்டத்தில் பேசியது பாதிக்கப்பட்டவர்கள்
மனதில் வருத்தத்தையும் அச்சத்தையும் தோற்றுவிக்காதா ?

என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும்,
தன் குதர்க்கமான, சாதுரியமான பேச்சால் தீர்ப்பை ஒத்திவைக்க
முடியுமென்று நினைத்தாலும் – வரக்கூடிய நல்ல தீர்ப்பை
மாற்றி விட முடியுமென்று அவர் நினைத்தால் அதைவிட
மடத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

இதற்கெல்லாம் இந்த முதியவர் நிச்சயம் ஒரு நாள்
“ஒருவர்” முன்னால் பதில் சொல்ல வேண்டியிருக்கும்…
அப்போது இவருடன் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்…
இவர் செய்த வினைகள் தான் துணை இருக்கும்…

முடிந்தால், கலைஞர் அங்கு தனக்கு கிடைக்கக்கூடிய
தீர்ப்பை மாற்ற முயற்சிப்பது நல்லது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ராஜீவ் கொலை வழக்கு – கலைஞரால் தீர்ப்பை ஒத்திவைக்கத்தானே முடியும் ? மாற்றி விடவும் கூடுமோ …?

 1. paramasivam சொல்கிறார்:

  நாளை தீர்ப்பு எப்படி இருக்கும் என நீதிபதி கோடி காட்டிவிட்டார். நல்ல முடிவாகவே இருக்கும். இரண்டு நாட்கள் ஒத்திவைத்த புண்ணியம் நமது அரசியல்வாதிகளுக்கே.

 2. Srinivasanmurugesan சொல்கிறார்:

  இந்த முதியவரை திருத்தவே முடியாது. இவர் இன்னும் பத்தாண்டுகள் நல்ல மன நலத்துடன் வாழ்ந்து தன் மீதும் தன் குடும்பத்தார் மீதும் உள்ள வழக்குகளை சந்தித்து அதற்கான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும். இவரின், இவர் குடும்பத்தாரின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

 3. gopalasamy சொல்கிறார்:

  Karuna is the only leader of eight crore Tamil people! So, whatever he does, tells, that is only for the uplift of Tamil society!!.

 4. S.Mohan சொல்கிறார்:

  whomsoever it may be who were in the place of the accusts regarding the HONORABLE EX- PM> Rajiv Gandhi must be hanged to death is the omly judgement as to keep others in a terror to not to act as they did in uor motherland who killed in our earth our own father of nation PM whomsoever may be the PM – is our (brothers and sistrers of india) heriditor’s father.
  On the name of languages or any relationships terrorists must not be left to live. we shouldnot give chance to kill other political leader by taking coorect decision making. should be courageous to take a right decisions in various aspects,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.