நரேந்திர மோடி – தாவூத் இப்ராஹீம் பெயரைச் சொன்னால், திரு.ப.சிதம்பரத்திற்கு கோபம் வருவானேன்…..?

daawood-2 250 -க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் பரிதாபச்சாவுக்குக் காரணமாக இருந்த 1993 மும்பை குண்டுவெடிப்புக்களை நிகழ்த்திய கொலைகாரன் … இந்தியாவுக்குள் பெரிய அளவில் போதைப்பொருட்கள் இன்னமும் கடத்திக்கொண்டு வரப்பட முக்கிய காரணகர்த்தா – மும்பை பாலிவுட் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் இன்னமும் தன் மறைமுக கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் – (இவன் உத்திரவு காரணமாக, சினிமாமோகியான, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூட அண்மையில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதபடி திரும்ப வேண்டிய அவமானமும் நேர்ந்தது…) பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு, நேபாளம் வழியாகவும், பங்களாதேஷ் வழியாகவும், கோடிக்கணக்கில் கள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இந்தியாவில் புழங்க விட்டு, இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைய 2வது காரணமாக இருப்பவன் …. (முதல் காரணம் …..? !!!! ) பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஜாவேத் மியான்தா குடும்பத்துடன் திருமண சம்பந்தம் வைத்து, உலகம் அறிய, படாடோபமாக துபாயில், மியான்தா மகனுக்கும், தன் மகளுக்குமான தன் இல்லத் திருமணத்தை, விஐபி க்கள் புடைசூழ வெளிப்படையாக நடத்தியவன் … இன்னமும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கடத்துபவன் … பல குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உதவியாக தன் நெட்வொர்க்கை இப்போதும் இந்தியாவில் வைத்திருப்பவன் ….. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடக்கும் சூதாட்டங்களின் சூத்ரதாரி …. இன்டர்போல் நிறுவனத்தால் – அகில உலக அளவில் தேடப்படும் ஒரு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவன் … இவன் பிடிக்கப்படாமல், ஒழிக்கப்படாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும், நம் நாட்டுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படும் இழப்புகள் ஏராளம்.. இப்பேற்பட்ட – கொலைகாரனை, கடத்தல்காரனை, தீவிரவாதியை – பிடிக்க இந்திய அரசும் இத்தனை ஆண்டுகளாக முயன்றுறுறுறுறு கொண்டே இருக்கிறது. தாவூத் இப்ராஹீம் – பாகிஸ்தானில், கராச்சியில் தான் வசிக்கிறான் – அவனைப்பிடித்துக்கொடுங்கள் என்று இந்திய அரசும் குறைந்த பட்சம் ஒரு டஜன் தடவையாவது பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுத்தது. கராச்சியில் அவன் இருப்பதாகக் கூறும் விலாசத்தைக் கூட கொடுத்தது. பதிலுக்கு பாகிஸ்தானும் அப்படிப்பட்ட ஆள் யாரும் பாகிஸ்தானில் இல்லை என்று முக்கால் டஜன் முறை பதில் சொல்லி விட்டது. பல ஆண்டுகளாக – இந்தியாவும் விடாமல் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறது….. பாகிஸ்தானும் திரும்ப திரும்ப அதே பதிலைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளியும், தற்போதைய எதிரியுமான, மும்பையைச் சேர்ந்த தாதா சோட்டா ராஜன், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இரண்டு மாதங்க்ளுக்கு முன்னர் அளித்துள்ள பேட்டியில், தாவூத் தற்போது பாகிஸ்தானில் இல்லை. ஐக்கிய அரபுக் குடியரசில் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்துகொண்டு தன் கடத்தல் வேலைகளையும், வியாபாரங்களையும் தொடர்கிறான் என்று தெரிவித்திருக்கிறான். தாவூத், பாகிஸ்தானிய உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ -ன் பாதுகாப்பில் இருக்கிறான் என்று இந்தியாவும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆண்டுகள் பல ஆகி விட்டன. எந்தவித உருப்படியான நடவடிக்கையும் இல்லை. அண்மையில், உள்துறை அமைச்சர் ஷிண்டே ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, விட மாட்டோம் தாவூதை- எப்படியும் பிடித்து விடுவோம். அமெரிக்க அரசு கூட தாவூதை பிடிக்க உதவுவதாகக் கூறி இருககிறது. எனவே விரைவில் வியூகம் அமைத்து, அவனைப் பிடித்து விடுவோம் என்று கூறினார். அண்மையில் ஓய்வுபெற்ற உள்துறை செயலாளர் (சுஷில் குமார் ஷிண்டேயுடன் நேரடியாகப் பணியாற்றியவர்) அளித்த ஒரு பேட்டியில், இது ஒரு அப்பட்டமான பொய் என்றும், அமெரிக்க அரசு அப்படியெல்லாம் ஒன்றும் உறுதிமொழி கொடுக்கவில்லை யென்றும் சொல்லி இருக்கிறார். அத்தோடு நிற்காமல், உள்துறை அமைச்சராக இருந்தும், ஷிண்டே தாவூத் இப்ராஹிமின் நண்பர் ஒருவருக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப உதவிய ஒரு சம்பவத்தையும் கூறினார். இது தான் ஷிண்டேயின் லட்சணம்… இந்திய அரசின் ஆளும் வர்க்கத்தில் இவன் யார் யாருக்கு பங்காளி என்பது யாருக்குத் தெரியும் …! இவ்வளவு பிரபலமான ஒரு ஆளை – இன்னமும் தன் போதை மருந்து கடத்தல் தொழிலையும், கள்ள நோட்டு அச்சடித்தல், அவற்றை இந்தியாவுக்குள் கடத்தல், குண்டு வெடிப்புகளுக்கு உதவுதல் ஆகியவற்றையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் ஒரு இண்டர்நேஷனல் கிரிமினலை – அவனது இருப்பிடம், நடவடிக்கை, அடையாளம் போன்ற சகலவற்றையும் கையில் வைத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த அரசு – (இந்திய அரசைத் தான் சொல்கிறேன் …!) அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை….. பிடித்து இந்தியாவுக்கும் கொண்டு வர முடியவில்லை … தீர்த்துக் கட்டவும் முடியவில்லை….. சர்வதேச போலீசின் முன் பிடித்துக் கொடுக்கவும் முடியவில்லை யென்றால் .. அது அரசின் கையாலாகத் தனமா …? விருப்பமின்மையா ….? அல்லது முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அவனுடன் உள்ள பங்கு வர்த்தக தொடர்பு …. அல்லது நட்பு காரணமா …? முந்தாநாள் – சனிக்கிழமை ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி – “தாவூத் இப்ராஹீம் போன்ற கொடியவர்களைப் பிடிப்பதாக திரும்பத் திரும்ப செய்தியாளர் கூட்டங்களின் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா …? அமெரிக்கா பின் லாடனைப் பிடிக்கப்போவதாக ஒவ்வொரு மீட்டிங்கிலும் சொல்லிக்கொண்டா இருந்தது …? மன உறுதியுடன், தொடர்ந்து தேடி, விடாமுயற்சியுடன் அவனைக் கண்டுபிடித்து தீர்த்துக்கட்டவில்லையா ? இந்திய அரசுக்கு ஏன் அந்த மனோ வலிமையோ, தீவிரமோ இல்லை ….? என்று கேட்டார்.. பற்றிக்கொண்டது திருவாளர் ப.சிதம்பரத்திற்கு ….? முதலில் நிதியமைச்சர் பதிலளிக்க வேண்டிய விஷயமில்லை இது … இருந்தாலும் முந்திக்கொண்டு – ப.சிதம்பரம் கேட்கிறார் … “அந்நிய நாட்டின் பாதுகாப்பில் உள்ள ஒரு நபரை எப்படிப் பிடிக்க முடியும்..? நாங்கள் திருட்டுத்தனமாக அந்த நாட்டிற்குள் நுழைந்து சட்டவிரோதமாக அவனைச் சிறை பிடிக்க முடியுமா ? ( அமெரிக்கா செய்தது திருட்டுத்தனம் என்று தான் சொல்ல முடியும் இவருக்கு ! அல்லாமல், அமெரிக்காவிற்கு உள்ள மன வலிமையும், தைரியமும் எங்களுக்கு இல்லை என்றா சொல்ல முடியும்.) இவ்வளவு பேசும் நரேந்திர மோடி -தாவூத் இப்ராஹிமைப் பிடிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை முதலில் சொல்லட்டும் பார்க்கலாம் ..”” அடேயப்பா ….எப்பேற்பட்ட கேள்வி ….! உலக மேதாவிகளில் ஒருவர் என்று நாம் கருதிக்கொண்டிருப்பவரிடம் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை…! விட்டால் … சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தவே அழைப்பு விடுவார் போலிருக்கிறது…! பின் லாடன் ஒளிந்து கொண்டிருந்தான். தன்னை சுத்தமாக மறைத்துக் கொண்டிருந்தான். எனவெ அமெரிக்கா அவனைப் பிடிக்க வேறு விதமாக திட்டமிட வேண்டியிருந்தது. தாவூத் இப்ராஹிம் அப்படி அல்ல. அவன் இருக்கும் இடம் தெரியும். அவனது தொடர்புகளும் தெரியும். அவனது போக்குவரத்துகளும் தெரியும். அவனது நடவடிக்கைகள் வெளிப்படையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒன்று கைது செய்து, கொண்டுவர வேண்டும். அல்லது தீர்த்துக் கட்ட வேண்டும். அந்நிய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் கைது செய்து கொண்டு வர முடியவில்லை. சரி – தீர்த்துக் கட்ட முடியுமா ? 253 அப்பாவி இந்தியர்களைக் கொன்றவன். போதை மருந்துகளால் நமது இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருப்பவன். கோடிக்கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து, உலவ விடுபவன். இவனைக் கொல்ல சட்டம் பேசுகிறார் – சட்டம் ரொம்பத் தெரிந்த மந்திரி. இந்த நாட்டின் நம்பர் ஒன் துரோகியான, எதிரியான – இவனை ஒழித்துக்கட்ட இந்திய அரசு எந்த சட்டத்தின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டும் …? நம்மிடம் கமாண்டோக்கள் இல்லையா, ஷார்ப் ஷூட்டர்கள் இல்லையா ? அவன் இருக்கும் நாட்டின் இந்திய தூதரகத்தில், எதாவது ஒரு போஸ்டில், மறைமுகமாக, இவர்களில் இரண்டு பேரை அமர்த்த முடியாதா ? அவர்கள் முனைந்தால், இவனைக் குறி வைத்து செயல்பட்டால், இரண்டே மாதங்களில் இவனை ஓழித்துக்கட்ட முடியாதா ? இது என்ன உலகில் நடக்காத விஷயமா ? அமெரிக்கா செய்யவில்லையா ?ரஷ்யா செய்யவில்லையா ? ஏன் பிரிட்டனே செய்கிறதே …. எல்லாரையும் விடுங்கள். அண்மையில், ஈரான் செய்ததே …இஸ்ரேல் உளவாளியை போட்டுத்தள்ளியதே….! அய்யா மந்திரியாரே – உங்களுக்கு வேறு ஆள் யாரும் கிடைக்கா விட்டால், எனக்கு வயதாகி விட்டாலும் – நெஞ்சில் உரம் இருக்கிறது, என் நாட்டின் மீது, என் நாட்டு மக்களின் மீது – பற்று இருக்கிறது. என்ன அனுப்புங்கள். இந்திய தூதரகத்தில் எதாவது ஒரு பெயரில் போஸ்டிங்கும், லீகல் இம்யூனிடியும் கொடுங்கள் போதும். நான் செய்கிறேன் இந்த காரியத்தை. கேள்விக்கு பதில் கேள்வி என்று கேட்டுக்கொண்டே இருப்பதை விட, செயலில் இறங்குங்கள் மந்திரியாரே …. (பதவியை விட்டு) போகும்முன்னராவது இந்த நாட்டுக்கு எதாவது நல்லது செய்து விட்டுப்போங்கள்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to நரேந்திர மோடி – தாவூத் இப்ராஹீம் பெயரைச் சொன்னால், திரு.ப.சிதம்பரத்திற்கு கோபம் வருவானேன்…..?

 1. maasianna சொல்கிறார்:

  weldon. I am ready for the second person.

 2. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  இந்தப் பதிவுக்கு எனது ராயல் சல்யுட்
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

 3. Ganpat. சொல்கிறார்:

  பிய்த்து விட்டீர்கள் கா.மை ஜி..
  ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.
  1825நாட்களில் (அதாவது ஐந்து ஆண்டுகள்) முதல் 1800நாட்கள் ஒரு வேலையும் செய்யாமல் இருந்த ஒருவர் கடைசி 25 நாட்களில் வேலை செய்வார் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
  அதே சமயம் அடுத்த 1825நாட்களில் மோடி கீழ்கண்ட வேலைகளை செய்வார் என்பதும் எனக்கு சந்தேகமே.
  =மேற்கண்ட தீவிர வாதியை கைது செய்தல்/அழித்தல்
  =வெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல்
  =ராபர்ட் வாத்ரா வை கைது செய்தல்.
  =இந்திய நதிகள் இணைப்பு.
  =ராமர் கோயில் பற்றி பேசாமல் இருத்தல்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்ஜீ,

   16-ந்தேதி வரையாவது பாசிடிவ் ஆக இருக்கக்கூடாதா ?
   அதற்குள் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டீர்களே !

   மோடியை வர விடாமல் தடுக்க இப்போதே காங்கிரஸ்
   3வது அணிக்கு உள்ளேயிருந்து, வெளியேயிருந்து,
   மெலேயிருந்து, கீழேயிருந்து என்று எல்லா பக்கத்திலிருந்தும்
   ஆதரவு கொடுப்பதாக அறிவித்து விட்டது….

   பற்றாக்குறைக்கு மம்தா வேறு பயங்கரமாக
   முறைத்துக் கொண்டு விட்டார். …

   முதலில் நரேந்திர மோடி பதவிக்கு வரட்டும் ….
   அப்புறம் ஆரம்பியுங்களேன் உங்கள் சந்தேகங்களை எல்லாம் …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Srinivasanmurugesan சொல்கிறார்:

    மேலே கண்டவற்றில் எதை விட்டாலும் நதி நீர் இணைப்பை மட்டும் மோடி சாத்தியமாக்கி விட்டால் அவரை இந்தியா என்றென்றும் போற்றும்.

   • Ganpat சொல்கிறார்:

    கா.மை.ஜி.
    இத்தனை நாட்கள் மோடியை கரித்துக்கொட்டி விமரிசித்து வந்த பலரும் அவர் பிரதமர் ஆன அடுத்த நொடியிலிருந்து அவர் இன்னும் ஒண்ணும் செய்யலையே என குறை சொல்ல தொடங்குவார்கள்.இவர்கள் அறுபது ஆண்டுகள் கொட்டிய குப்பையை அவர் என்ன அறுபது நாட்களிலா நீக்க முடியும்.எனவே தான் இப்படி ஒரு கருத்தை எழுதினேன்.ஆனால் ஒன்று .அவர் மத சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையும் முதலில் எடுத்தால் 2019இல் சோனியா நிச்சயம் வெற்றி பெறுவார்.அவர் இந்த ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய ஒரே வேலை.நாட்டில் ஊழல் அளவை கட்சி பாகுபாடின்றி கணிசமாக குறைக்க வேண்டியதுமற்றும் பெரிய அளவில் ஊழல் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுத்து அவர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்வது.

 4. k.goopaalan சொல்கிறார்:

  சிதம்பரம் என்ன ஒன்றும் தெரியாம்ல் பேசுபவரா.

  முதலில் தாவூதை இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும். பிறகு சட்டபூர்வமாக நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கவேண்டும். நமது நாட்டின் அறிவுஜீவிகள், அதாவது தனது குடும்பத்தில் ஒருவரைப் பறிகொடுக்காத வக்கீல்கள், மனித உரிமை பற்றிப் பேசுபவர்கள் போன்றவர்களுக்குப் பதில் சொல்லவேண்டும். பிறகு அதில் மதத்தை நுழைக்கத் துடிக்கும் கட்சியினர். மோடி பாடு திண்டாட்டம்தான்.

  கோபாலன்

 5. sella சொல்கிறார்:

  “எனக்கு வயதாகி விட்டாலும் – நெஞ்சில் உரம் இருக்கிறது, என் நாட்டின் மீது,
  என் நாட்டு மக்களின் மீது – பற்று இருக்கிறது. என்ன அனுப்புங்கள்.
  இந்திய தூதரகத்தில் எதாவது ஒரு பெயரில் போஸ்டிங்கும்,
  லீகல் இம்யூனிடியும் கொடுங்கள் போதும்.
  நான் செய்கிறேன் இந்த காரியத்தை.”
  – இதயத் தின் துடிப்பை உணர முடிகிறது .

  அதெல்லாம் என்ன நினைக்கும் என்றால் ‘இவனுங்க எப்பவுமே இப்படிதான் – இத பார்த்தா தொழில் பண்ண முடியுமா .

 6. M Nithil சொல்கிறார்:

  Inhuman act by a handful of hardcore people lead by Dawood. The blasts were intended to derail Indian economy thereby punishing the whole nation. I still remember those dark days and at the same time I can not ignore some people’s claim that these blasts were retaliation to the mass killings of innocent women, children and old people after the demolition of Babri Masjid.

  Please also write about the communal violence that took placeafter the demolition of Babri Masjid on 6th Dec. Also many claim that demolition of Babri Masjid was scheduled on 6th Dec to coincide with Dr Ambedkar’s birthday. I couldn’t ignore this claim as well.

 7. Gopalasamy சொல்கிறார்:

  I personally feel, following are the four factors which decides PM of India:
  CIA, ISI Dawood and World bank.
  Modi is not enjoying the support of any one. Modi’s PM dream will be a mirage.
  ON secular veil, DMK/AIDMK, SP/BSP, RJD/JDU, TMC/CPM TRS/YSR all will join together; Unbelievable Nth front may emerge. I lost hope.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.