“ஜுனியர் விகடனின்” வியாபாரம் …..

 

Junior-Vikatan

பத்திரிகை விற்பனையாக வேண்டும் என்பதற்காக பரபரப்பாக எதையாவது
தலைப்புச் செய்தியாகப் போட்டு காசு பண்ண வேண்டும் என்பதில்
வர வர தமிழக அரசியல் வார இதழ்கள் குறியாக இருக்கின்றன.

இன்று வெளியாகியுள்ள ஜூனியர் விகடனில் –
“ஜெ. ‘பிரதமர்’ – காங்கிரஸ் பச்சைக்கொடி” என்று பரபரப்பாகத்
தலைப்பிட்டு முடிந்த வரை காசு பண்ணப் பார்த்திருக்கிறார்கள்.

அந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள் –

————–

காங்கிரஸ், மற்றும் பிஜெபி க்கு வெளியில் இருக்கும் கட்சிகளில் இருந்து
மொத்தம் எத்தனை எம்.பி.க்கள் வருவார்கள் என்று இந்த (காங்கிரஸ் தலைமை)
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முலாயம் சிங் யாதவ், மாயாவதி,
நிதிஷ்குமார், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், ஜெகன் ரெட்டி,
சந்திரசேகர் ராவ் ஆகிய ஒன்பது பேர் எழுதப்பட்டு –
ஒவ்வொருவருக்கும் எத்தனை தொகுதிகள் கிடைக்குமென்று
தோராயக் கணக்கு போட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு, அவர்களின் பழைய
செல்வாக்கு ஓரளவு தக்க வைக்கப்பட்டாலே, மொத்தம் 120 தொகுதிகளை
கைப்பற்றுவார்கள் என்று சொல்லப்பட்டதாம்.” இதில் யாராவது ஒருவரை
முன்மொழிந்து அந்த ஆட்சிக்கு, காங்கிரஸ் கூட்டணி பின்னாலிருந்து
ஆதரித்தால் என்ன ? நமக்கு பிஜெபி வரக்கூடாது. மற்றபடி வேறு
யார் வந்தால் என்ன ?” என்று ஆலோசிக்கப்பட்டது.

இதில் முலாயம் சிங், ஜெயலலிதா ஆகிய இருவரும் பிரதமர் ஆசையை
அரசல்புரசலாக வெளிப்படுத்தியவர்கள். ஜெயலலிதா பிரதமர் ஆக,
மம்தா தன் விருப்பத்தைச் சொல்லி விட்டார்.
இதில், முலாயம் சிங்கை தடுக்க வேண்டுமானால், மாயாவதி –
ஜெயலலிதாவை ஆதரிக்கத் தயங்க மாட்டார்.
நவீன் பட்நாயக் எப்போதும் ஜெயலலிதாவின் விசிறி.
“தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக என்னுடைய ஆதரவு
உண்டு” என்று ஜெகன்மோகனும், சந்திரசேகர ராவும் முன்வரலாம்.

இப்படி பல்வேறு சூழ்நிலை ஜெயலலிதாவை நோக்கி கனிந்துகொண்டு
வந்ததை காங்கிரஸ் யோசித்தது. இதனைத் தொடர்ந்து தனது தூதர்
ஒருவரை கார்டனுக்கு அனுப்பியதாம் காங்கிரஸ்.

—————————
இதனைத் தொடர்ந்து ஜூனியர் விகடன் தனது கற்பனையை
மேலும் விரிவுபடுத்தி –

ராகுல்காந்தி ராமனாதபுரத்தில் ஜெயலலிதா ஆட்சி
குஜராத்தை விட பெட்டர் என்று ஒப்பிட்டு பேசியதையும்,

சல்மான் குர்ஷித் உத்திரப் பிரதேசத்தில் – தேவைப்பட்டால்
3வது அணி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஒத்துழைக்கும் என்று பேசியதையும்,

அபிஷேக் மனு சிங்க்வி, கல்கத்தாவில் இதே தோரணையில் பேசியதையும்,

மஹாராஷ்டிராவில் முதலமைச்சர் பிருத்விராஜ் சவுஹானும்
இதே வகையில் பேசியதையும் –

ஒன்றுசேர்த்து பின்னிப்பிசைந்து, இவர்கள் அனைவரும் சோனியா காந்தி
மற்றும் ராகுல் காந்தியின் கருத்தைத்தான் பிரதிபலிக்கிறார்கள் என்றும்,
காங்கிரஸ் தலைமை இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தத்
துவங்கி விட்டது என்றும் எழுதி இருக்கிறது.

—————-

காங்கிரஸ் 3வது அணியை பதவியில் அமர்த்த தன்னாலான
அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை. அதற்கான முயற்சிகளை அது ஏற்கெனவே
தொடங்கி விட்டது என்பதும் உண்மையே.

ஆனால் – கடந்த இரண்டு ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சிக்கு
சூடு, சொரணை இருந்தால், அது
தூக்கு போட்டுக்கொண்டு சாகக்கூடிய அளவிற்கு அதனைத்
தாக்கிப்பேசி இருக்கிறார் ஜெ.
மேலும், இந்த தேர்தலின்போது, அகில இந்திய அளவில்,
ஜெ. அளவிற்கு தீவிரமாக காங்கிரசை விமரிசித்தவர் வேறு யாருமில்லை.

இந்த நிலையில், என்ன தான் பிஜெபி யுடன் பிணக்கு இருந்தாலும்,
காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சியமைக்க
ஜெ. முன்வருவார் என்பது அபத்தத்தின் உச்சகட்டம்….!

இதை ஜூனியர் விகடன் உணரவில்லையா ? அல்லது
பரபரப்புக்காகவும், காசு பண்ணவும் – எதை வேண்டுமானாலும்
எழுதலாம் என்கிற அதன் கொள்கையை மீண்டும் ஒருமுறை
நிரூபிக்கும் முயற்சியா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to “ஜுனியர் விகடனின்” வியாபாரம் …..

 1. Thiruvengadam சொல்கிறார்:

  அபத்தத்தின் உச்சகட்டம் – who can assure that Goundamani`s remark ” Arasiyalii ithallam sagazam appa” will not happen. More over there are many suitable already available to utter when needed

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  “ஆனால் – கடந்த இரண்டு ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சிக்கு
  சூடு, சொரணை இருந்தால், ..”, உங்களுக்கு பேராசை சார். அரசியல் பற்றியும், அரசியல்வியாதிகள் பற்றியும் மிக நல்ல அறிந்தும் உங்கள் கருத்து வியப்பாக உள்ளது. பதவி என்று வந்துவிட்டால் இங்கு ஒவ்வொருவரும் “அமைதிப்படை அமாவாசை” தான். அதிகாரம் ஒரு போதை…அனைத்திற்கும் ஆசைப்படுகிறவர்கள்…இவர்கள்.இங்கே உண்மை இதுதான் “வேட்பாளர் வெற்றி பெறுகிறான்..ஓட்டுபோட்டவன் தோற்று போகிறான்.”

 3. Prakash சொல்கிறார்:

  அது தூக்கு போட்டுக்கொண்டு சாகக்கூடிய அளவிற்கு அதனைத்
  தாக்கிப்பேசி இருக்கிறார் ஜெ.- kandippa election results apparam ithu than nadakkum.

 4. Srinivasanmurugesan சொல்கிறார்:

  இது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆனால் காங்கிரஸின் கைபாவையாக அம்மா இருக்கமாட்டார்கள். அதனால் ஆறு மாதங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது.தமிழகத்தை சேர்ந்த ‘அம்மா’ முதன்முதலில் பிரதமர் ஆனார் என்ற பெறுமையை தவிர வேறு ஒன்றும் மிஞ்சாது.

 5. bandhu சொல்கிறார்:

  ஜூனியர் விகடன் ஒரு டெஸ்க் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னல்.. தேவையான எல்லா செய்திகளையும் தமது மேஜயிலிருந்தே உருவாக்கிக் கொள்பவர்கள். என்ன… ‘இந்த புத்தகத்தில் இருப்பவை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையே’ என்ற வாசகம் மட்டும் இல்லை!

  அதே சமயம், அரசியல் வாதிகள் தேர்தல் முடிந்தவுடன் சொல்ல தயாராக ‘அரசியல் நீண்ட நாள் பகைவனும் இல்லை.. நீண்ட நாள் நண்பனும் இல்லை.’ ‘ஊழலை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்’ ‘மதவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்’ போன்ற வாதத்தை சொல்லி கூட்டணி அமைக்க ஜெயலலிதாவோ கருணாநிதியோ தயங்குவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

 6. k.gopaalan சொல்கிறார்:

  //‘அரசியல் நீண்ட நாள் பகைவனும் இல்லை.. நீண்ட நாள் நண்பனும் இல்லை.’ ‘ஊழலை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்’ ‘மதவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்’ //

  பேப்பரெல்லாம் ரெடி. 16ம் தேதி படிக்க வேண்டியதுதான் பாக்கி.

  கோபாலன்

 7. எழில் சொல்கிறார்:

  அம்மாவுக்கு குடைச்சல் கொடுக்கும் வழக்குகளை நீர்த்து போக செய்ய காங்கிரஸ் கூட்டு இருந்தால் தான் முடியும் என்று ஒரு நிலை வருமாயின் அவர் அதற்கு தயங்கமாட்டார் என்பதே என் கருத்து. கட்டு மரம் கூட வழக்குகளுக்கு பயந்து தான் ‘கை’ குலுக்குவோம், மத சார்பற்ற அரசு அமைய ‘எதையும்’ செய்வோம்ன்னு அப்பப்ப சிக்னல் கொடுத்து கொண்டிருக்கிறார்…. சுவர் இருந்தால் தான் சித்திரம்!

 8. saamaaniyan சொல்கிறார்:

  ” தனது கற்பனையை மேலும் விரிவுபடுத்தி… ”

  இது ஒன்றும் புதிதில்லையே ! இன்றைய பத்திரிக்கை தர்மம் சர்குலேசன் மட்டும்தான் ! இதற்கு எந்த தமிழ் பத்திரிக்கையும் விதிவிலக்காக இருப்பது போல தோன்றவில்லை !

  ஒரே ஒரு உதாரணம்…

  கட்சிகளின் செயல்குழு கூட்டம் பற்றி எழுதுவார்கள்… பத்திரிக்கை டிவி அனைத்துக்கும் தடை என்று ஆரம்பிக்கும் கட்டுரையில் ஏதோ தலைவருக்கு அருகில் இருந்து பார்த்தது போல எழுதியிருப்பார்கள் ! இடையே மானே, தேனே என போட்டுகொள்வதுபோல நம்பதகுந்த வட்டாரம் சொல்லியது என குறிப்பிட்டு, கழுகோ, சாமியாரோ, மாமியாரோ யாரோ ஒருவர் எழுதியதாக போட்டுவிட்டால் முடிந்தது வேலை ! விற்றது பத்திரிக்கை !!

  எந்த வாசகர் இதையெல்லாம் நினைவில் வைத்துகொண்டு அப்படி சொன்னீர்களே இப்படி நடந்துவிட்டதே என கேட்டுகொண்டிருக்கிறார் ?!

 9. gopalasamy சொல்கிறார்:

  it might be a paid news.
  jaya is not such a fool to accept pm post under these conditions.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.