யார் யாருக்கு எவ்வளவு-எவ்வளவு பங்கு…? ரிடையராகும் நிதியமைச்சர் தான் விளக்க வேண்டும் ….

 

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எளிய குடும்பத்துப்
பெண்மணி – குடியிருக்க ஒரு சிறிய வீடு வாங்க ஆசைப்பட்டு,
தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் 7 லட்ச ரூபாய்
வீட்டுக்கடன் (ஹவுசிங் லோன்) வாங்குகிறார். கடன் கொடுக்கும்போதே,
வங்கி அவர் வாங்கும் அந்த வீட்டையே அடமானமாகப் பத்திரம்
எழுதிப் பெறுகிறது. மூன்று ஆண்டுகள் தவணைகளைக் கட்டி விட்டார்.

தவிர்க்க முடியாத குடும்பச் செலவுகள் காரணமாக – தொடர்ந்து
4-5 மாதங்கள் தவணையைக் கட்டவில்லை. அனைத்து தவணைகளையும்
மொத்தமாகச் சேர்த்து செலுத்தும்படி வங்கி வலியுறுத்துகிறது.
அந்த பெண்மணி கடனை அடைக்க அவகாசம் கேட்கிறார்.

அதனை ஏற்க மறுக்கும் வங்கி, நாளிதழ்களில் அந்தப் பெண்மணியின்
புகைப்படம், மற்றும் விலாசத்துடன் விளம்பரம் வெளியிடுகிறது.
வங்கிக்கடனை ஒழுங்காகச் செலுத்தாததால், அந்த வீடு குறிப்பிட்ட நாளில்  ஏலத்திற்கு விடப்படும் என்று.

கடனுக்கு அடமானமாக வங்கியிடம் வீடு இருக்கும்போதே, வங்கி
இத்தகைய எளிய மக்களின் விஷயத்தில் இவ்வளவு கெடுபிடி காட்டுகிறது.

ஆனால் –
இந்த விவரங்களையும் கொஞ்சம் படியுங்கள் –

பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு, வர்த்தக நிறுவனங்களுக்கு
கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒழுங்காகத் திருப்பிச்
செலுத்தப்படாத நிலையில் அவை “வாராக் கடன்கள்” (bad loans) என்று
கணக்கில் காட்டப்பட்டு, சில தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டும்,
மீதி தொகை, தவணைகள் மாற்றப்பட்டு, புதிய கடன்களாக
புதிய உருவமும் பெறுகின்றன.

மார்ச் 2008-ல் Rs 39,000- கோடியாக இருந்த இத்தகைய வாராக் கடன்கள்
மார்ச் 2013-ல் – Rs 1,64,000- கோடியாக உயர்ந்திருக்கிறது.
2008-க்கும் 2013-க்கும் இடைப்பட்ட காலத்தில் பொதுத்துறை வங்கிகளின்
மொத்த லாபமான Rs 3,58,893- கோடியில், இந்த ‘கெட்ட கடன்’களுக்காக
Rs 1,40,266- கழித்துக் கொள்ளப்பட்டு, நிகர லாபமாக Rs 2,18,627- கோடி
மட்டுமே காட்டப்பட்டுள்ளது.

இப்படி லாபத்தில் “கழித்துக் கொள்ளப்பட்ட” பணம், அந்த
தொழிலதிபர்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் மறைமுகமாகப்
போய்ச்சேருகிறது.

கொஞ்சம் யோசித்தால் – இந்த Rs 1,40,266- கோடி ரூபாய் யாருடைய
பணம் என்பது புரியும். பொதுத்துறை வங்கிகளின் லாபம் தான் இது.
இந்த வங்கிகளின் லாபம் யாரைப்போய்ச் சேர வேண்டும்..?
மத்திய அரசை – அதாவது இது அனைத்தும் இந்த நாட்டு மக்களின் பணம்.
இப்படி இந்த நாட்டு மக்களின் பணத்தை பெரும் தொழிலதிபர்களுக்கு
வாரி வாரி தானமாக மத்திய அரசு ஆண்டுதோறும் அள்ளி அள்ளிக்
கொடுப்பதேன்…?

காரணம் இல்லாமலா இருக்கும் …?

தகுந்த காரணம் இல்லாமல் நிதியமைச்சர் “தாராளம்” காட்டுவாரா..?
ஒன்று கடன் வாங்கிய தொழிலதிபர்கள் கட்சிக்காரர்களாக இருக்க
வேண்டும்…. அல்லது அந்த “கழித்துக்கொள்ளப்பட்ட ” கடன்களில்
ஆளும் கட்சி அமைச்சர்களுக்கோ, தலைமைக்கோ “உரிய பங்கு”
போய்ச்சேர்ந்திருக்க வேண்டும்.

இல்லையெனில், நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்…?
வீட்டுக்கடன் வாங்கி 4-5 தவணைகள் திரும்பச் செலுத்தாத எளிய
பெண்மணியிடம் அவ்வளவு “கறார்” காட்டும் வங்கிகள் –
இத்தகைய பெருந்தொழிலதிபர்களிடம் மட்டும் “தாராளம்” காட்டுவது
ஏன் …? எப்படி …?

சாதாரணமாக 7-8 லட்சங்கள் வீட்டுக்கடன் வாங்குபவர்களிடமே –
வீட்டை அடமானமாக பிடித்து வைத்துக் கொள்ளும் இந்த வங்கிகள்,
கோடிக்கணக்கில் கடன் கொடுக்கும் முன்பு, இந்த பெருந்தொழிலதிபர்களிடம்
உரிய “பிணை” வாங்கித்தானே இருக்க வேண்டும். அப்படியானால்,
அந்தப் “பிணையை” வராத கடன்களுக்காக “பணமாக்கும்” முயற்சிகளைத்தானே மேற்கொண்டிருக்க வேண்டும் …?

பலமுறை வற்புறுத்தப்பட்டும் –
இது வரை சம்பந்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளோ –
மத்திய அரசோ –
ரிசர்வ் வங்கியோ –
அந்த “கெட்ட கடன்”களுக்கு சொந்தக்காரர்களாகிய
“கடங்கார பெரிய மனிதர்களின்” பட்டியலை வெளியிட மறுக்கின்றன.

கிட்டத்தட்ட 400 கடன்கார பெருந்தொழிலதிபர்களைக் கொண்ட
இந்த பட்டியலில், முதல் ‘டாப் 30 கடன்காரர்கள்’ மட்டும் சேர்ந்தே –
Rs.70,300/- கோடி பாக்கி வைத்திருக்கிறார்களாம். இதில் ஒரு
பாராளுமன்ற உறுப்பினர், ஒரு மத்திய மந்திரி மற்றும் இரண்டு
“பத்மஸ்ரீ” பட்டம் பெற்றவர்களும் அடக்கம்….!

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

இந்த கடன்கார பெரிய மனிதர்கள் யார் யார் ?
இவர்களுக்கு எந்த அடிப்படையில், யார் சிபாரிசில்
இப்படி கோடிக்கணக்கில் கடன் கொடுக்கப்பட்டது…?
அவர்கள் கடனைத் திருப்பச் செலுத்தாதபோது –
சட்டப்படியான “ஏல முறைகளை” ஏன் மேற்கொள்ளவில்லை …?
அவர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டது ஏன் ? யார் காரணம் …?
இந்த முறைகேடுகளில் யார் யாருக்கு, எவ்வளவு பங்கு ….?
இந்த விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள இந்த நாட்டு மக்களுக்கு
அனைத்து உரிமைகளும் உண்டு –
ஏனென்றால், இது அவர்கள் பணம்…

இந்த விவரங்களை யாரால் தர முடியும் …?
பொதுத்துறை வங்கிகள் மத்திய நிதியமைச்சகத்தின்
கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
நாம் ஒரு இடத்தில் பொறுப்பான வேலையில் இருக்கிறோம்.
நிறைய கொடுக்கல், வாங்கல்கள் உள்ள இடம். வேலையை விட்டு

விலகும்போது, எல்லாவற்றிற்கும் உரிய கணக்குவழக்குகளைக்
கொடுத்து விட்டு தானே பொறுப்பிலிருந்து விலக முடியும் …?
சாதாரண பதவிகளுக்கே இப்படி என்றால் –
நிதியமைச்சர் பொறுப்பில் இருப்பவர் பதவியிலிருந்து “ரிடையர்”
ஆகும்போது மக்களுக்கு இந்த விவரங்களை எல்லாம் உரிய
முறையில் விளக்க வேண்டாமா ?

விளக்கி விட்டுச் செல்வாரா ….?

பின் குறிப்பு –

பல இடங்களில் தேடியதில் சில விவரங்கள் கிடைத்தன.
முதல் 25 (டாப் கடங்காரர்கள் …!) பெயர் கொண்ட பட்டியல் கீழே –
(சிலரின் அடையாளம் தெரிகிறது. பலர் எந்த மந்திரியின்
பினாமி என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை …..!!)

கடன்கார கம்பெனி பெயர் மற்றும் வரவேண்டிய கடன் தொகை –

கடன்காரர் பட்டியல் : 1 – முதல் 25 வரை –

Kingfisher Airlines – Loan not repaid: Rs. 2,673 crore
Winsome Diamond & Jewellery -Loan not repaid: Rs. 2660 crore
Electrotherm India Limited -Loan not repaid: Rs. 2,211 crore
Zoom Developers Private Limited -Loan not repaid: Rs. 1,810 crore
Sterling Biotech Limited -Loan not repaid: Rs. 1,732 crore

S. Kumars Nationwide Limited -Loan not repaid: Rs. 1,692 crore
Surya Vinayak Industries -Loan not repaid: Rs. 1,446 crore
Corporate Ispat Alloys -Loan not repaid: Rs. 1,360 crore
Forever Precious Jewellery & Diamonds -Loan not repaid: Rs. 1,254 crore
Sterling Oil Resources -Loan not repaid: Rs. 1,197 crore

Varun Industries Limited -Loan not repaid: Rs. 1,129 crore
Orchid Chemicals & Pharmaceutical -Loan not repaid: Rs. 938 crore
Kemrock Industries & Exports -Loan not repaid: Rs. 929 crore
Murli Industries & Exports Limited -Loan not repaid: Rs. 884 crore
National Agricultural Co-Operative – Loan not repaid: Rs. 862 crore

STCL Limited -Loan not repaid: Rs. 860 crore
Surya Pharma -Loan not repaid: Rs. 726 crore
Zylog Systems (India) Limited -Loan not repaid: Rs. 715 crore
Pixion Media Pvt. Limited -Loan not repaid: Rs. 712 crore
Deccan Chronicle Holdings Limited -Loan not repaid: Rs. 700 crore

K.S. Oil Resources -Loan not repaid: Rs. 678 crore
ICSA (India) Limited – Loan not repaid: Rs. 646 crore
Indian Technomac – Loan not repaid: Rs. 629 crore
Century Communication -Loan not repaid: Rs. 624 crore
Moser Baer India Ltd. & Group Companies -Loan not repaid: Rs. 581 crore

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to யார் யாருக்கு எவ்வளவு-எவ்வளவு பங்கு…? ரிடையராகும் நிதியமைச்சர் தான் விளக்க வேண்டும் ….

 1. tmnkin சொல்கிறார்:

  Winsome diamond is promoted by Jatin mehta, Son of Jatin mehta is married to daugher of adani (adani is close to Modi)

  http://articles.economictimes.indiatimes.com/2012-01-06/news/30597686_1_gautam-adani-adani-enterprises-adani-group

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தகவலுக்கு நன்றி நண்பரே.

   எனக்குத் தெரிந்து இந்த கடங்காரர்களில் யாரும்
   திரும்பக் கொடுக்க வக்கில்லாதவர்கள் இல்லை….

   ஏன் கடனை திரும்பக் கொடுக்க வேண்டும் ….

   ஈசியாக கடன் கிடைக்கிறது…..
   அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால்
   போகிறது …. என்கிற எண்ணம் தான் …
   விஜய் மால்யாவிடம் இல்லாத பணமா ….?

   இவர்களுக்கெல்லாம் ஒரு தனி பாலிஸி…
   ப்ளெயிங்க் வித் ஒபிஎம் …அதாவது –
   playing with Other People’s Money …!!!

   இந்த நாடு உருப்படாமல் போனதற்கு காரணம் இத்தகைய
   வியாபாரிகளும், இவர்களுக்கு துணை போகும் அரசியல்வாதிகளும் தான்.
   வெட்கக்கேடு.

   நான் மெனக்கெட்டு, தேடி எடுத்து, இந்த லிஸ்டை இங்கு போடுவதற்கு
   காரணம் – உங்களைப் போன்ற நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த
   கடங்காரர்களின் பின்னணியை இங்கு வெளிப்படுத்துவீர்கள் என்கிற
   நம்பிக்கையில் தான்.

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. visujjm சொல்கிறார்:

  Bagathsingh thoughts never die will broke again feenix birds……..

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  யார் யாருக்கு எவ்வளவு-எவ்வளவு பங்கு…? ரிடையராகும் நிதியமைச்சர் தான் விளக்க வேண்டும் = திரு காவிரி மைந்தன் அவர்களின், அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  நன்றி திரு காவிரி மைந்தன்

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  யார் யாருக்கு எவ்வளவு-எவ்வளவு பங்கு…? ரிடையராகும் நிதியமைச்சர் தான் விளக்க
  வேண்டும் = திரு காவிரி மைந்தன் அவர்களின், அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.
  எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  நன்றி திரு காவிரி மைந்தன்

 5. Gopalasamy சொல்கிறார்:

  We are putting our money for very low interest. But the money is freely given to well wishers of politicians. Every information proves PASI is against India, against middle and poor class people.
  PASI is shame for India and Tamilnadu, I hope people like TMNKIN can give more information.

 6. tmnkin சொல்கிறார்:

  most of the companies listed above are penny stocks, manipulated in trading, swidinling money from investors by giving them false information abt companies growth, for those tried stock trading tips, might know these companies, and lost heaviliy bcs of insider trading in companies like moserbear,ks oil, skumars nation wide, kingfisher waht abt those money, will will add another time for money alrea
  dy swindled

 7. tmnkin சொல்கிறார்:

  corporate ispat alloys is part of abhijeet group,

  Abhijeet Group company, has bad loans worth over Rs4,400 crore, of which Rs 2,000 have been declared non-performing assets (NPA) by the State Bank of India (SBI) alone.

  http://timesofindia.indiatimes.com/city/nagpur/Two-Abhijeet-Group-companies-in-list-of-nations-top-50-loan-defaulters/articleshow/29685649.cms

 8. tmnkin சொல்கிறார்:

  we cannot call all these are loans, its a cirminal offense they swindle and siphon out public money to private parties, but here we are hoping our 8.5% int rate will give us safe post retirement life.

 9. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //Justice delayed is Justice denied – இந்த விஷயத்தில் இது பொருந்துமா …?// – விற்கு பின்னூட்டம் இட முடியவில்லை. சற்று சரிபார்க்கவும் ஐயா!

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் அஜீஸ்,

  எங்கே பிரச்சினை என்று தெரியவில்லை. சரி செய்ய முயற்சிக்கிறென்.
  அதுவரை நண்பர்கள் எல்லாரும் இந்த இடத்திலேயே பின்னூட்டங்கள்
  இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 11. ரிஷி சொல்கிறார்:

  கா.மை அவர்களே
  முல்லைப் பெரியாறு பதிவில் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. அங்கே அந்தப் பெட்டியையே காணோம். கேரளத்தவர் சதி செய்துவிட்டது போலத் தெரிகிறது. உடனே ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் 🙂

 12. Sanmath சொல்கிறார்:

  For “Justice delayed is justice denied”…………….

  I am writing this from Cochin. As soon as Supreme court passed the order, hartal(strike) announced for tomorrow in Kerala. We have to note many things here. The most important thing is the “malayalam spirit” the people have. Do you think our Tamil people have this? I feel people like MuKa have blunted it – I will not blame anybody. The role of media is also very important here.

  Presently all english media, Indian bureaucracy are dominated by mallus. In this scenario how do you think they will write for us(Their spirit cant be matched with us, even if they are NOT born/brought in Kerala – this can be matched with Jews’ spirit). (Since speaking about Tamil spirit dont think I am Shouter Seeman’s follower). All our Tamil media are fighting hard to save and expand their businesses in various means.

  Now the last one who can speak for us is – Our politicians, especially MPs. JDMK and MuKaDMK fought this parliament election very hard not to reflect the issues of Mullai Periyar or Cauvery or TN fishermen being shot or proper allocation of funs and resources for TN. MuKa has got a new headache recently and JJ wants to come out of disproportionate asset case and another case. What right do you think you and me have got so that to question these guys to speak for us or represent our issues ? Can you compare the way the Kerala politicians work for their people and our people ? Dr.Maitreyan or Thambidurai have to get permission from JJ even before coughing while in Delhi. Which ever brilliant and trust-worthy guy(other than Maran) from TN wins, he has a right job already assigned – to help Kanimozhi and Dhayalu form the new charge sheet.

  Present Tamil guys’ voice – ” I cannot question my representative as I have got money to vote for him. Also I am worried about new movie released this weekend or Namitha’s increasing weight issue or the money to drink today. Also I am very much worried about the “likes and comments” I would get for the new photo which I posted in FB or Twitter. Sorry Sir NO TIME for all these time-wasting things ”

  போங்க சார், போய் மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன், office பாதிட்டு தூங்குங்க.

  வயிறு எறியுது, ஒன்னும் பண்ணமுடியலயே!!!!

 13. kalakarthik சொல்கிறார்:

  naan intha pathivai en blog l podalaamaa

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.