இந்த விஷயத்தில் இது பொருந்துமா …? -Justice delayed is Justice denied ….

 

Justice delayed is Justice denied – இந்த விஷயத்தில் இது பொருந்துமா …?

இறுதியாக முல்லைப்பெரியாறு விவகாரத்தில், உச்சநீதிமன்றம்
5 உறுப்பினர் கொண்ட அரசியல் சாசன பென்ச் மூலம்
தன் தீர்ப்பை இன்று காலை வழங்கி விட்டது.

அணையில் 142 அடி உயரம் வரை நீரைத்
தேக்கிக்கொள்ளலாம் என்றும்,

அணையின் பராமரிப்பு பற்றிய பொறுப்பை 3 பேர் கொண்ட
ஒரு கமிட்டி மேற்கொள்ளும் என்றும்,

இந்த கமிட்டிக்கு மத்திய அரசின் நீர்வளத்துறை செயலர்
தலைமை வகிப்பார் என்றும், தமிழ்நாடும், கேரளாவும் –
தங்கள் தரப்பிலிருந்து ஆளுக்கு ஒரு உறுப்பினரை இந்த கமிட்டிக்கு

பரிந்துரை செய்யலாம் என்றும்-
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முழு தீர்ப்பும் வெளிவந்த பிறகு தான் மற்ற விவரங்கள்
தெரிய வரும்.

மற்ற விவரங்கள் எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டின் முக்கிய
கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது என்பது மிகப்பெரிய ஆறுதல்.
136 லிருந்து 142 அடி என்பதே நமக்கு பெரிய அளவில் உதவியாக
இருக்கும்.

பொதுவாக Justice delayed is Justice denied –
அதாவது – ‘தாமதிக்கப்பட்ட தீர்ப்பு, மறுக்கப்பட்ட தீர்ப்பு’ என்று
ஆங்கிலத்தில் சொல்லப்பட்டாலும், தமிழகத்தைப் பொறுத்த வரை
இப்போதாவது,
ஓரளவாவது,
நியாயம் கிடைத்ததே ….என்று மகிழ்ச்சி கொள்வோம்….!!

இதே போல் இன்னும் சில மிக முக்கிய விஷயங்களுக்கும்
உச்சநீதிமன்றம் தான் நமக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்….
நம்பிக்கையோடு காத்திருப்போம்…….

முல்லைப் பெரியாறு விஷயமாக, முன்பு இந்த
விமரிசனம் வலைத்தளத்தில் முழு விவரங்களுடன் ஒரு
கட்டுரை எழுதி இருந்தேன். இப்போது தீர்ப்பு வந்த நிலையில் –
நாம் எப்பேற்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தோம் –
நமக்கு இப்போது கிடைத்துள்ள தீர்ப்பு எந்த அளவிற்கு உதவியாக
இருக்கும் என்பது போன்ற விவரங்களை உணர வசதியாக
அதே இடுகையை மீண்டும் கீழே கொடுத்திருக்கிறேன் ……

———————————————————–
பழைய இடுகை –

முல்லைப் பெரியாறு -தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது – உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்

mullai oerutaru dam

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் ! “116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே – தங்கள் செலவிலேயே – புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் – இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக – நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் – 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது) எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.

இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ? கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும். பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .) ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் – பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு ! புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?

மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும். சரி நிரம்பட்டுமே. நல்லது தானே ! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது. புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.

நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள – மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது. அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது.

மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை – புரிகிறது. ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை – எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே – பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம். வடிகட்டிய அயோக்கியத்தனம். முதலாவதாக – பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் – மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து – நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் ! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக – 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது. 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு – நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி – லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக – ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது. கீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.

 

516px-mullapperiyaar_cross_section-svg-copy

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு – 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது. விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?

மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள். வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான். மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே – தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் – மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள்.

அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும். உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல். தமிழகம் முழுவதும் சேர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும். ஒரே குரலில் பேச வேண்டும். உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். அகில இந்தியாவிற்கும் தெரியும்படி சொல்ல வேண்டும். நம் தரப்பு நியாயம் அனைவருக்கும் புரியும்படி – சுப்ரீம் கோர்ட்டுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் ! நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

கேரளாவிற்கு – எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும். எப்படிச் சொன்னால் புரியுமோ – அப்படிச் சொல்ல வேண்டும். நாடகமாடினால் இனியும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இந்த விஷயத்தில் இது பொருந்துமா …? -Justice delayed is Justice denied ….

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  நடுவில் ஒரு பெட்டியை (பின்னூட்ட பெட்டி) – காணோமே என்று
  என்னென்னவோ செய்து பார்த்தேன்.

  இறுதியாக, சிறிய அளவில் மாற்றம் செய்து ரீ-பப்ளிஷ்
  பண்ணிப் பார்த்தேன்….
  இந்த முறையில் பெட்டி கிடைத்து விட்டது …..!!!
  (என்னைப் போன்ற கணிணி அறிவு இல்லாத ஆசாமி எல்லாம்
  வலைப்பதிவு போட நினைத்தால் …இந்த கதி தான் …என்ன செய்வது..!
  தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள்….)

  இதற்கு முந்திய இடுகையிலேயே பின்னூட்டம் போட்டவர்களின்
  எழுத்தை எல்லாம் கீழே காப்பி-பேஸ்ட் செய்து விட்டேன்…

  இனி இங்கேயே பின்னூட்டங்களைத் தொடரலாம்.
  நண்பர் அஜீஸும், ரிஷியும் மீண்டும் வருக …..

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  —————————————————————————————————————————

  சைதை அஜீஸ்
  Submitted on 2014/05/07 at 9:24 முப

  //Justice delayed is Justice denied – இந்த விஷயத்தில் இது பொருந்துமா …?// – விற்கு பின்னூட்டம் இட முடியவில்லை. சற்று சரிபார்க்கவும் ஐயா!

  ————————————————

  vimarisanam – kavirimainthan
  Submitted on 2014/05/07 at 9:44 முப

  நண்பர் அஜீஸ்,

  எங்கே பிரச்சினை என்று தெரியவில்லை. சரி செய்ய முயற்சிக்கிறென்.
  அதுவரை நண்பர்கள் எல்லாரும் இந்த இடத்திலேயே பின்னூட்டங்கள்
  இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  ——————————————–

  ரிஷி
  Submitted on 2014/05/07 at 10:02 முப

  கா.மை அவர்களே
  முல்லைப் பெரியாறு பதிவில் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. அங்கே அந்தப் பெட்டியையே காணோம். கேரளத்தவர் சதி செய்துவிட்டது போலத் தெரிகிறது. உடனே ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் 🙂

  —————————————

  Sanmath
  Submitted on 2014/05/07 at 1:10 பிப

  For “Justice delayed is justice denied”…………….

  I am writing this from Cochin. As soon as Supreme court passed the order, hartal(strike) announced for tomorrow in Kerala. We have to note many things here. The most important thing is the “malayalam spirit” the people have. Do you think our Tamil people have this? I feel people like MuKa have blunted it – I will not blame anybody. The role of media is also very important here.

  Presently all english media, Indian bureaucracy are dominated by mallus. In this scenario how do you think they will write for us(Their spirit cant be matched with us, even if they are NOT born/brought in Kerala – this can be matched with Jews’ spirit). (Since speaking about Tamil spirit dont think I am Shouter Seeman’s follower). All our Tamil media are fighting hard to save and expand their businesses in various means.

  Now the last one who can speak for us is – Our politicians, especially MPs. JDMK and MuKaDMK fought this parliament election very hard not to reflect the issues of Mullai Periyar or Cauvery or TN fishermen being shot or proper allocation of funs and resources for TN. MuKa has got a new headache recently and JJ wants to come out of disproportionate asset case and another case. What right do you think you and me have got so that to question these guys to speak for us or represent our issues ? Can you compare the way the Kerala politicians work for their people and our people ? Dr.Maitreyan or Thambidurai have to get permission from JJ even before coughing while in Delhi. Which ever brilliant and trust-worthy guy(other than Maran) from TN wins, he has a right job already assigned – to help Kanimozhi and Dhayalu form the new charge sheet.

  Present Tamil guys’ voice – ” I cannot question my representative as I have got money to vote for him. Also I am worried about new movie released this weekend or Namitha’s increasing weight issue or the money to drink today. Also I am very much worried about the “likes and comments” I would get for the new photo which I posted in FB or Twitter. Sorry Sir NO TIME for all these time-wasting things ”

  போங்க சார், போய் மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன், office பாதிட்டு தூங்குங்க.

  வயிறு எறியுது, ஒன்னும் பண்ணமுடியலயே!!!!

  —————————————

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சன்மத்,

   முதன் முறையாக உங்களை பின்னூட்டத்தில் பார்க்கிறேன். வருக.

   உங்கள் வயிற்றேரிச்சலை நான் அப்படியே வழிமொழிகிறேன்.

   நான் மத்திய அரசுப்பணியில் இருந்ததால் நிறைய இடங்களில் மலையாள
   நண்பர்களுடன் பணிபுரிந்திருக்கிறென். அவர்களுடன் நிறைய
   பழகி இருக்கிறேன்.இன உணர்வில் அவர்களை மிஞ்சியவர்கள் இந்தியாவில் யாருமில்லை..!
   நான் இதை நேரடியாக அவர்களிடமே கூறுவது வழக்கம்…
   அவர்களுக்கு அடுத்ததாக, வங்காளிகளைச் சொல்லலாம்.

   நம் ஆசாமிகள் எல்லாம் உரக்கப் பேச மட்டுமே லாயக்கு….

   இந்த வலைத்தளத்திற்கு வரும் நிறைய நண்பர்கள் இதை நன்கு உணரந்தவர்கள் தான்.
   என்ன செய்வது ….? நம்மால் முடிந்தது உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வது மட்டுமே.

   – நீங்கள் உங்கள் கருத்துக்களை இந்த தளத்தில் தாராளமாக வெளியிடலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Sanmath சொல்கிறார்:

    /////////இதே போல் இன்னும் சில மிக முக்கிய விஷயங்களுக்கும்
    உச்சநீதிமன்றம் தான் நமக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்….
    நம்பிக்கையோடு காத்திருப்போம்…….////////// Sir, by this time you might have seen the judgement in Kudangulam case. SC has still not clarified the doubts of Poovulagin Nanbargal and Mr.Udhayakumar. You might have read the articles on judiciary in Savukku. I feel, only because of very few sincere, spirited and honest people our government is functioning in a way to give at least minimal good things to people.

    (I have been reading your informative articles for a long time. I felt important to comment about the present scenario comparing us and our neighbor)

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், இருப்பதை பகிர்ந்துகொள்வதற்கே நாம் சட்டத்தை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதற்கு யார் காரணம் என்று அடுத்தவரை நோக்கி விரலை நீட்டும் முன் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு திறந்த மனத்துடன் தீர்வு காண்பதே முக்கியம்.

  நாளை நடக்கும் பந்த் என்பது ஒரு தீர்ப்பை எதிர்த்து நடத்தப்படும் போராட்டம். தேவையெனில் மத்திய படையை அனுப்பி இப்போராட்டத்தை தடுக்கலாம். அல்லது போராட்டம் கட்டுக்கடங்காமல் போனால் ஆட்சியையும் கலைத்துவிடலாம். ஆனால் அதற்கு முதலில் ஒரு “இயங்கும்” அரசு தேவை!

  பொதுவாக சன்மத்-ன் கருத்துதான் அனைவருடையதும்.
  இருந்தாலும் “இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறலாமே” என்ற ஒரு நப்பாசையில்….

 3. nparamasivam1951 சொல்கிறார்:

  திரு அவை.கோ. தேர்ந்து எடுக்கப்பட்டால், பார்லிமென்ட்டில் ஒரு குரல் நிச்சயம் உண்டு. அவர் சார்ந்துள்ள NDA ஆட்சி அமைத்தால், அவர் குரலுக்கு இன்னும் மதிப்பு அதிகமாகும். நல்லதே எதிர்பார்ப்போம்.

 4. M.Mani சொல்கிறார்:

  இந்தப் பிரச்சினையின் ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்தால் 1979 ல் தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.யார்- மலையாளி. கேரளாவில் உடைந்துவிடும் என்ற குரல் கேட்டவுடன் நீர் மட்டத்தை 136 அடியாக குறைத்துவிட ஆணையிட்டார். இந்த பிரச்சினையின் முதல் துரோகம் செய்தவர் அவர்தான்.
  ஆனால் தமிழ் மக்களின் நிரந்தரத் தலைவர் அவர்தான். வாழ்க தமிழினம்.

 5. Ganpat சொல்கிறார்:

  கா.மை.உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
  ===================================================================
  எந்தா சாரே! வந்திருப்பது ஒரு தீர்ப்புதானே? அதற்குள் எதற்கு இத்தனை கொண்டாட்டம்/ சர்ச்சைகள்?

  நாம் பார்க்காத உச்ச நீதி மன்ற தீர்ப்புகளா?
  காவிரி தீர்ர்ர்ப்பு என்ன சாரே ஆச்சு?
  இன்னிக்கே நாங்க இந்த தீர்ப்பை எதிர்த்து ஒரு வழக்கு போடப்போறோம்.
  அப்புறம் அதற்கு தீர்ப்பு 2020லில்தான்..

  அப்போ உண்மையான தீர்வு?
  சத்யாக்கிரகம்தான்..
  தமிழ்நாட்டு எல்லைய தாண்டி
  ஒரு சரக்கு லாரி கேரளாவில் நுழையாதுன்னு
  தமிழங்க தானாக முடிவெடுக்கட்டும்..
  அப்புறம் பாருங்க நெலமய!

  நண்பர் சந்மத் சொன்னால் போல
  முதலில் நாம ஒத்துமையாகனும்
  அதுக்கப்புறம்தான் எல்லாம்..

  எந்தா சாரே வரட்டுமா?
  எனிக்கு என் ஜோலி முக்கியம்..
  உமக்கு ஒங்க ஜோதிகா-சூர்யா முக்கியம்.

  எங்க மாநில பிரச்சனைனா நாங்க விஸ்வரூபம் எடுப்போம்..
  ஒங்களுக்கு “விஸ்வரூபம்”தான் ஒங்க மாநில பிரச்னையே!..
  .
  எங்களுக்கு கோர்ட்டு தீர்ப்பு பற்றிய கவலை..
  உமக்கு கோச்சடையான் ரிலீஸ் பற்றிய கவலை

  போங்க போயி ஒங்க சூபர ஸ்டாருக்கு ட்விட்டர்ல லைக் போடுங்க..
  காவிரி, முல்லைபெரியாறு, இலங்கைதமிழினம்,
  எல்லாவற்றையும்
  நாங்க “பார்த்து”க்கிறோம்..

 6. Sanmath சொல்கிறார்:

  Another important thing which we missed in recent years is the people’s fighting/questioning attitude. Our people have become a machine to digest anything. They do not form automatically to question anybody. In a local town before questioning someone or to gather against someone, even he/she has done anything wrong, people gather against after seeing caste etc. But they gather under a party. Also our media is not blowing whistle.

  Here in Kerala, if you are parking a vehicle and if it is hindering traffic or blocking a shop some “X” or “Y” questions that and people join the questioner. This is presently becoming rare in TN. People have become very much selfish and also an attitude of “why to get in to trouble”.

  Take even my case. I am spirited. I can come out and fight. But the question in front of me is – who will take care of my family. Is the situation in our country or state is in a shape that the country/state take care of my family?……..I am definitely selfish here. What can be done ?

  Every problem definitely has solution/s. Lets discuss more about that too.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.