நரேந்திர மோடி + அர்னாப் கோஸ்வாமி …. ஜெயித்தது யார் ….?

தேர்தல் பரபரப்பு துவங்குவதற்கு முன் ராகுல் காந்தியை பேட்டி
கண்டார் அர்னாப் கோஸ்வாமி ( டைம்ஸ் நவ் தொலைக்காட்சி).

விளைவு – ராகுல் காந்தியின் எல்கேஜி பர்சனாலிடி பளீரென்று
வெளிவந்தது. ராகுல் காந்தி என்கிற மனிதருக்கு –
நேரு-காந்தி பரம்பரையில் வந்தவர் என்பதைத் தவிரவும்,
அன்னை சோனியா காந்தியாலும் –
அவர் தயவை நாடியிருக்கும் காங்கிரஸ் பெருந்தலைகளாலும்
செயற்கையாக பூஸ்ட் செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும் தவிர –
இந்த நாட்டை ஆளக்கூடிய தகுதியோ, திறமையோ
அவரிடம் சுத்தமாக இல்லை என்கிற உண்மையை
வெளிப்படுத்தியது அந்த பேட்டி.

modi-arnab.-2

நேற்றிரவு இன்னொரு சுவையான பேட்டி.
அர்னாப் கோஸ்வாமி – பாஜகவின் பிரதமர் வேட்பாளரான
நரேந்திர மோடியின் உண்மையான பர்சனாலிடியை
கண்டெடுக்க முயற்சித்த ஒரு பேட்டி …
அநேகமாக எல்லாருமே பார்த்திருப்பீர்கள்….

இதில் மோடி வென்றாரா அல்லது அர்னாப் வென்றாரா ?

இதற்கு உள்ளே போகும் முன்னர் –
இதற்கு முன்னர் அர்னாப் கோஸ்வாமி,
மும்பை MNS founder – ராஜ் தாக்கரேயை
(மறைந்த சிவசேனா தலைவர் – பால் தாக்கரேயின் தம்பி மகன்) எடுத்த
பேட்டியைப் பற்றிச் சொல்லவேண்டும்.
இதுவரை நான் பார்த்த அரசியல்வாதிகளிலேயே, ராஜ் தாக்கரே
அளவிற்கு சற்றும் ஒளிவு மறைவின்றி, தன் உணர்ச்சிகளையும்,
முகபாவங்களையும் மறைத்துக் கொள்ள எந்த வித முயற்சியும் இன்றி –
படார் படார் என்று பொட்டில் அறைந்தால் போல் பதில் சொல்வதும்,
தேவைப்படும்போது பேட்டி காண்பவரையே நேரிடையாக முறைத்துக்
கொள்வதுமாக – மிகவும் உணர்வு பூர்வமான, உண்மையான பேட்டியாக
இருந்தது அது.

நேற்றைய – மோடியுடனான பேட்டியும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய
அளவிற்கு வெளிப்படையாகவே இருந்தது. சில விஷயங்களில்
அர்னாப் எவ்வளவு குடைந்தாலும், மோடி பதில் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் – அதையும் மோடி வெளிப்படையாகவே சொல்லிக் காட்டினார்.
கேள்வி கேட்பது உங்கள் உரிமை – பதில் சொல்வது என் உரிமை.
நான் சொல்ல விரும்பாத விஷயங்களை நீங்கள் எவ்வளவு முயன்றாலும்
என்னிடமிருந்து வரவழைக்க முடியாது……..!
“நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று ஒருவர் பதில் கூறுவதே
ஒரு விதத்தில் அந்த குறிப்பிட்ட விஷயத்தில் அவரது நிலைபாட்டை
விளக்குவது தான்.

ஆனால் இதுவரை வெளிப்படையாக மோடியிடமிருந்து வெளிவராத
பல ஆணித்தரமான கருத்துக்கள் இந்த பேட்டியின் மூலம்
வெளி வந்தது….

பங்களா தேஷிலிருந்து வரும் மக்களிடையே
அகதிகளுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் உள்ள வேறுபாடு பற்றி ….
மம்தாவுடன் ஏற்பட்ட நெருக்கடி பற்றி
அன்னை-மகன் அரசாட்சி பற்றி –
அதானிக்கு சலுகை அளித்தாரா என்பது பற்றி ….
ப்ரியங்கா வாத்ராவுக்கு ஜாதி குறித்து பதிலளித்தது பற்றி …
தூர்தர்ஷன் பேட்டி – சென்சார் செய்யப்பட்டது பற்றி ….
பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை குறித்து
(பாகிஸ்தானுடன் மோதல் போக்கை மேற்கொள்வாரா என்று
அர்னாப் திரும்ப திரும்ப கேட்டதற்கு – ஒரு ஸ்பின் பதிலாக,
டில்லியில் வலுவான ஒரு அரசு அமைந்தால், பக்கத்து நாடுகளின்
போக்கில் தானாகவே ஒரு மாறுதல் உருவாகும் என்று கூறியது ..)
பாஜக கட்சியில் உள்ள சில அதீத ஆர்வலர்களை
தான் உடனே கட்டுப்படுத்தியது பற்றி ….

முக்கியமாக – கட்சி அரசியல் வேறு –
அனைவரையும் அணைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில்
அழைத்துச் செல்வது வேறு என்றும்,
தேர்தலுக்குப் பின்னர் தனக்கு யாரும் விரோதி இல்லை,
நாட்டில் உள்ள அனைத்து மக்களையும்,
அனைத்து அரசியல் கட்சிகளையும் தான் அணைத்துச்செல்லவே
விரும்புகிறார் என்றும் விளக்கியது…..

பொதுவாக இந்த பேட்டியில் மோடி ஜெயித்தாரா அல்லது
அர்னாப் கோஸ்வாமி ஜெயித்தாரா என்பதை விட –

நரேந்திர மோடி என்கிற ஒரு தலைவரின் உண்மையான பர்சனாலிடி
கிட்டத்தட்ட எப்படி இருக்கும் என்பதை இந்த பேட்டியின் மூலம்
வெளிப்படுத்திய அர்னாப் மீண்டும் இந்த நாட்டுக்கு ஒரு நல்ல பணி
ஆற்றி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

நம்மைப் பொருத்த வரை-

வாய் இருப்பது சாப்பிடுவதற்கு மட்டும் தான் என்றிருந்த
ஒரு முன்னாள் பொருளாதார மேதையோ,

எங்கிருந்தோ வந்து, இந்த நாட்டை கொள்ளையடித்த
கொள்ளைக்கார கும்பலின் இன்னுமொரு ஒரு அடிமையோ,

இந்த நாட்டை 60 ஆண்டுகளாக ஆண்ட ஒரு பரம்பரையில்
பிறந்தவர் என்பதைத்தவிர வேறொரு தகுதியும் இல்லாத –ஒரு எல்கேஜி மாணவரோ,  வருவதை விட   –

இந்த நாட்டின் அடுத்த பிரதமராக

தகுதியும் திறமையும் உள்ள, நாட்டுப்பற்று மிக்க,
இந்த நாடு முன்னேற வேண்டும்,
இந்த நாட்டு மக்கள் எல்லா வளங்களையும் பெற்று,
உலக அரங்கில் உயர்ந்த இடத்தில் பெருமையுடன் வீற்றிருக்க வேண்டும்
என்று உளமாற விரும்புகின்ற,
ஒரு திறமையான நிர்வாகியை பிரதமராகப் பெற
நாம் நிச்சயம் விரும்புவோம்.

ஒன்றிரண்டு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.
இந்த குறைகளும் அகன்று விடும் என்று நம்புவோம்.
நாட்டின் மிக உயர்ந்த இடத்தில் பொறுப்பேற்ற பின்னர்,
சிறுபான்மையினர் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் –
ஆட்சி அமைய வேண்டும் என்பது மிக முக்கியம்.

பொதுவாக, இந்த நாட்டு மக்கள் இந்த தேர்தலில் –
தவறு செய்யவில்லை –
ஜெயித்தது / ஜெயிக்கப்போவது   இந்த நாட்டு மக்கள் தான் –
என்கிற நம்பிக்கையூட்டக்கூடிய   ஒரு பேட்டி …

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே – ?
உங்கள் கருத்துக்களையும் கூறுங்களேன்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to நரேந்திர மோடி + அர்னாப் கோஸ்வாமி …. ஜெயித்தது யார் ….?

 1. Ganpat சொல்கிறார்:

  ஆர்னாப் கோஸ்வாமிக்கு நன்றி..
  உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு தலைமை ஏற்கப்போட்டியிடும் ஒரு பிரதமமந்திரி வேட்பாளர்,,,

  எப்படி இருக்க கூடாது என போன மாதம் எங்களுக்கு புரிய வைத்தீர்கள்.

  எப்படி இருக்க வேண்டும் என நேற்று எங்களுக்கு புரிய வைத்தீர்கள்.

  ஆனால் எங்கள் துரதிருஷ்டம்,,,

  90%க்கும் அதிகமான வாக்காளர்கள் வீட்டில் தொலைகாட்சிப்பெட்டியே கிடையாது.

  மீதி 10% பேர்களில் 90% ஓட்டளிக்க வரமாட்டார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கண்பத்,

   16ந்தேதி நீங்கள் என்ன எழுதப்போகிறீர்கள் என்று பார்க்க
   ஆவலாக இருக்கிறேன் ….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    கா.மை.ஜி.
    “அவர்” என்ன எழுதியிருக்கிறாரோ என்று அறிய நானும் பிரார்த்தனையுடன் காத்திருக்கிறேன்!
    அன்புடன்,
    Ganpat.

 2. Sanmath சொல்கிறார்:

  I am from Trade & Logistics sector. I know the importance of Port. The only big private Port in TN region is Karaikkal MARG(under Pondichery supporting the hinterland in TN). To commission the Port and to run it profitably the MARG management struggles like a hell. Gujarat has many private Ports. A private Port functioning profitably means plenty of cargo moves in/out and there is good business going around. Also for our country we require many entrepreneurs. Modi is a person who understands this very well and will definitely take steps to improve such things nationally.

  Also BJP wants to expand their wings. If BJP tries to show its communal face, they know very well that they could not rise back next time. Also in coalition govt the coalition partners might not allow a Gujarat-like riots again(I guess).

  Fyi Raj is Bal Thackrey’s younger brother’s son.

  • reader சொல்கிறார்:

   தென் தமிழகம் முன்னேற வேண்டுமா?

   குமரி மாவட்டம் குளச்சலில் துறைமுகம் கட்ட ஏதுவான இயற்கையான பூகோள அமைப்பு உள்ளது.

   மலாக்கா ஸ்ட்ரெயிட் வழி செல்லும் கப்பல்களை குளச்சல் துறைமுகத்துக்கு இழுத்துவிட்டால் வல்லார்படத்துக்கும் பெப்பே, ஹம்பன்டோட்டாவுக்கும் பெப்பே.

   முரசொலி மாறன் இருந்தபோது பேசிய விசயம். பொன்னார் வென்றால் ஏதாவது செய்யலாம்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நிறைய ….நிறைய்ய்ய்ய்ய்ய்ய செய்யலாம்.
    எல்லாரும், எல்லாமும் – ஒத்து வர வேண்டும்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Yes Sanmath…. you are right.
   A good leader is required to have a right mixture of various qualities
   and capabilities. Ofcourse – we still have a long way to go. Let us hope for the best.

   (reg. raj – I have now made necessary corrections – thank you ..)

   with all best wishes,
   Kavirimainthan

 3. k.gopaalan சொல்கிறார்:

  நாட்டை வழி நடத்திச்செல்வது ஒருபுறம் இருந்தாலும், சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்வதுதான் அவருக்கு முன்னே இருக்கும் பெரிய சவால். இதைச் சமாளிப்பது கடினம் என்றாலும் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களை ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறோம்.

  கோபாலன்

 4. Dr.K.Elangovan சொல்கிறார்:

  இப்போதைக்கு கண்ணில்படும் தலைவர்கள் அனைவரிலும்
  நரேந்திர மோடி தான் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்
  என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

  தேசபக்தி, மக்கள் நலனில் அக்கரை, ஊழலுக்கு எதிரான தீவிரம்,
  மன உறுதி, குடும்பச்சுமை இல்லாமை, கடந்த 12 ஆண்டுகளாக
  அரசு நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் எல்லாம் சேர்ந்து மோடி மீது
  நிறைய நம்பிக்கையை அளிக்கின்றன.

  மத விஷயங்களில் தலையிடாமல், வளர்ச்சி, திறமையான நிர்வாகம்,
  அனைவரையும் அனுசரித்துப் போதல் ஆகியவற்றில் மட்டும்
  மோடி தீவிரம் காட்டினால் – அது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும்,
  மிகப்பெரிய விமோசனமாக இருக்கும்.

  மத விஷயங்களில் தலையிடாமல், வளர்ச்சிப் பணிகளை
  பாரபட்சம் இல்லாமல் மேற்கொண்டால், சிறுபான்மை மக்களுக்கு
  தானாகவே நம்பிக்கை பிறக்கும்.

  காவிரிமைந்தன் – உங்கள் தளத்துக்கு சரியான நேரத்தில், சரியான விஷயத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள். சமூகப் பொறுப்புடன்
  வலைத்தளத்தை கொண்டு செல்லும் உங்களுக்கு பாராட்டுகள்.

 5. gopalasamy சொல்கிறார்:

  In first two years, secularists will try to destabilize modi,s govt in all possible ways. If Modi could withstand that, next ten years will be golden period for india.

  • M Nithil சொல்கிறார்:

   I guess in the initial years, managing the SANGH Parivars / RSS / Senas will be the biggest challenge for Mr. Modi. In our system (in the recent 10 or 15 years), the opposition had never behaved like real opposition parties. They oppose whatever the ruling party did. This is both in the union and state level.

   M Nithil

   • agathaaivan சொல்கிறார்:

    what will happen, if the hindu patriotic leader goes in the path of demising tamil to establish hindi as one common language for whole india and by the way transformation to sanskrit. this will lead to destroying the diversities(many cultures and languages).
    try to read the base of a guy and for see his actions and its results.

 6. Srini சொல்கிறார்:

  in trying to win this election, modi has gone to the moon. can you believe this…. yes.. he has travelled 3 lakh kilo meters…. see the efforts this man has put to reach the top post. no leader has ever tried this way…. the Gandhi dynasty rulers won all previous election only by the name..

  http://indiatoday.intoday.in/story/narendra-modi-bjp-campaign-indian-electoral-history-lok-sabha-elections-2014/1/359920.html

  god bless him and god bless india

 7. Gopalasamy சொல்கிறார்:

  Terrorism sponsored by neighbouring countries s is a major concern. Modi knows how to tackle RSS. He is having 12 years experience in effective ruling. The people who dont like Modi can make any wild allegations. I never saw anybody appreciating his work after earth quake and rebuilt Gujarath. That sort of work, no other CM had done. .In TN, principal opposition leader got admitted in hospital, when Tsunami came! .

 8. maasianna சொல்கிறார்:

  soniya endra arakkiyai gongres endra kollaikaararkalai azhikka tharpothu bjp mattume saathiyam. Modi is one man army.

 9. Gopalasamy சொல்கிறார்:

  It appears, there is fresh air, when we heard about exit poll result. I request Sri KM to write about that.

 10. nparamasivam1951 சொல்கிறார்:

  வளமான எதிர்காலம் நம்மை எதிர் நோக்கி உள்ளது என்பது தெரிகிறது. 16ம் தேதி முடிவுகளுக்குப் பின் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.