இன்னும் அடங்கவில்லை காங்கிரஸ் …!!!

 

Exit poll விவரங்கள் நேற்று மாலை அநேகமாக அனைத்து
தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன. 100 சீட்டுகளுக்கும் கீழாகவே
காங்கிரஸ் கட்சி தனித்து பெறும் என்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து   அதிகபட்சம் 150 வரை பெறக்கூடும் என்றும் அனைத்து விவரங்களும்  அறுதியிட்டு கூறுகின்றன. மகிழ்ச்சியுடன் – “ஒழிந்தது காங்கிரஸ்” என்று  கொண்டாடலாம் என்று பார்த்தால்,

mother and son

புதுச்சேரி நாராயணசாமி சென்னையிலும், ஷகீல் அஹமது டெல்லியிலும்
தேர்தல் கணிப்புகள் எந்த விதத்திலும் நம்பத்தகுந்தவை அல்ல
என்று அடித்துக் கூறிக்கொள்கிறாரகள். எண்ணிக்கை குறைந்தால் –
3வது அணியுடன் சேர்ந்து காங்கிரஸ் நிச்சயம் 3வது முறை மத்தியில்
ஆட்சியமைக்கும் என்று வெட்கம் இல்லாமல் இன்னமும்
கூறுகிறார்கள்.

இதற்குள் – எகனாமிக் டைம்ஸ் – சோனியா காந்தி,
முலாயம் சிங், மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோருடன் தொடர்பு
கொண்டு புதிய கூட்டணிஅரசு அமைப்பது பற்றி இன்னமும்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறது..

ஒரே ஒரு கணிப்பு மட்டும் – காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் ஒரு சீட்டு
கிடைக்கும் என்று கூறுகிறது. மீதி அனைத்து கணிப்புகளும்
தமிழ்நாட்டில் பூஜ்ஜியம் தான் என்று அடித்துக் கூறுகின்றன.
சிவகங்கை மத்திய மந்திரி வேறு ஏற்கெனவே “தேர்தல் முடிவுகள்
முற்றிலும் எதிர்பாராத விதத்தில் இருக்கும்” என்று கூறி இருந்தார்….!!!

காங்கிரஸ் தலைமை, பதவியை தக்கவைத்துக்கொள்ள
எந்த அளவிற்கு வேண்டுமானாலும் போகும் என்பதை மீண்டும் மீண்டும்
உறுதி செய்கிறது.

கணிப்புகளின்படி, 3வது அணி என்று ஒன்று உருவெடுக்கும் வகையில்
முடிவுகள் அமையவில்லை. ஸ்திரமில்லாத ஒரு நிலை ஏற்படாத
வகையில் முடிவுகள் அமைவது மகிழ்ச்சியையே அளிக்கிறது.
இழுபறிக்கு வாய்ப்பு இல்லாத வகையில் தீர்ப்பு கூறி இருக்கிறார்கள்
மக்கள். காங்கிரஸ் கட்சியை அடித்து, துவைத்து, உலரப்போட்ட
மக்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை எண்ணிக்கையை
எட்டுவதில் சிறிய அளவில் குறை இருந்தாலும் –
தேர்தலுக்குப் பிந்தைய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்பதால்,
காங்கிரஸ் எதிர்பார்ப்புகள் பகல் கனவாகவே போகும்.

16ந்தேதி அதிகாரபூர்வமான முடிவுகள் வரும் வரையில்
காங்கிரஸ் இப்படித்தான் நப்பாசையுடன் நாடகம் ஆடிக்கொண்டிருக்கும்.
வேறு வழி இல்லை – நாம் இன்னும் 3 நாட்கள் இவற்றைப்
பொறுத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

modi plan-2 -everywhere
கடந்த 4-5 மாதங்களாக –
பிரமிக்கத்தக்க வகையில் நாடு முழுவதும்
அயராத பிரச்சாரத்தை மேற்கொண்டு,
மக்களுக்கு நம்பிக்கையூட்டி,
நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் பேசி,
முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கும்
நரேந்திர மோடியை வாழ்த்தி வரவேற்போம்.
மக்கள் அவர் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை அவர் நிச்சயம்
நிறைவேற்றுவார் என்று நம்புவோம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to இன்னும் அடங்கவில்லை காங்கிரஸ் …!!!

 1. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  1947 ல் இருந்து 2014 வரை சுமார் 55 ஆண்டுகள் இந்தியாவை கோலோச்சி அதன் மூலம் பல கோடிகளை சுட்ட கட்சி அவ்வளவு சீக்கிரம் அதனுடைய பதவி ஆசை போகாது.
  வரும் காலங்களில் வருகின்ற தேர்தல்களில் நான்கைந்து முறை மரணஅடி விழுந்தால்தான் பல காங்கிரஸ்காரா்களின் சுயரூபம் தெரியவரும்.அனேகம் நபர்கள் கட்சியை விட்டே ஓடிவிடுவார்கள்.
  அதன்பின் காங்கிரஸ் தன்னை ஆத்ம பரிசோதனை செய்தால்தான் காமராஜர் கண்ட காங்கிரஸ்இந்தியாவில் மலரும்.மலரவேண்டும்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

 2. Ganpat சொல்கிறார்:

  தேர்தல் கணிப்புகள் மாறலாம்..
  வெள்ளி மாலை வரை பொறுத்திருப்போம்.
  I wish and pray that BJP gets the minimum majority requires all by itself.(272 seats) so that they need not tow people like jaya,Mamta karuna et al
  God Bless India

 3. kinarruthavalai சொல்கிறார்:

  முழுமையான வெற்றி கிடைத்தால் மோடி நம்பிக்கை ஊட்டுவார் என மலர் செண்டுடன் காத்திருக்கிறேன்.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  நோயாளிக்கு நம்பிக்கை கூறுவதில்லையா ? அது போலத்தான் இதுவும், மூன்று நாள் தானே ?
  இத்தனை கோடி செலவு செய்து, இந்த மக்கள் பதவியும் கொடுக்க தயார் ஆக்கிவிட்டார்கள். மக்களை தெருகோடியில் விடாமல் இருந்தால் சரி. மாற்றம் நன்மையாக இருக்கட்டும்.

 5. Gopalasamy சொல்கிறார்:

  Yesterday, sriman. Mani iyer (dubai famous) told that it was not Modi wave but Modi virus. I saw all congress spokes persons arrogant behaviour; but none matching Mani iyer. I suspect Mani can do any damage to our country with his Pakistan connection. God only can save our Barath from such venomous people.
  We pray god that NDA should get a working majority of it’s own.

 6. tmnkin சொல்கிறார்:

  I Hope bjp wins, some one other than modi should become pm, who is also experinced in gverning like shivraj singh chouhan, he is then best candidate for pm from bjp side.

 7. Sanmath சொல்கிறார்:

  Already NCP(Praful Patel) and BJD(Naveen Patnaik) have signaled their support to NDA. Whatever be the results, it is pretty sure NDA(not BJP) will stand anywhere between 220-260 seats. Other people like NCP/BJD would automatically support and next is going to be a better government than Mom-Son’s corrupt/idiotic/india-for-sale government.

  To Marmayogie – I too have not strongly denied the communal face of BJP. One thing is for sure – they will not involve in any communal activities at least for the next 5 years as they will not be in a position to loose power which they have got after enormous strain and strategies for years. So do not worry.

  But how do “the so-called secular” people still believe in Congress saying it is secular. In last 11years there has been NOT a single riot in either Gujarat or Madhya Pradesh where BJP is doing comparatively good. So the “secular” people let Congress to continue corruption and completely eradicate India out of the world map. This is sad.

  Why not give a chance to BJP (I think people have already given).

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Marmayogie’s comments have been removed as the language
   used by him was inappropriate.

   with best wishes,
   Kavirimainthan

  • Sanmath சொல்கிறார்:

   Latest news…….JDMK has also joined the fray to extend support to Modi……A statement has been released as if said by former MP Malaisamy.

 8. naren சொல்கிறார்:

  Exit poll will
  become true. Because, No benefit to Media , for giving wrong information to people.

 9. Gopalasamy சொல்கிறார்:

  A super NDA will evolve as Times Now predicted. It appears congress is talking with SP, BSP, TMC and others for third front formation. tomorrow evening situation will be clear.
  Where is Raul, Mrs &Mr. Vadra ? they did not turn up for PM’s farewell party. Busy in some foreign country?
  Today in Times of India article, it is written, “THIS HAS GENERATED MORE BLACK MONEY THAN ALL OTHERS COMBINED”

 10. Gopalasamy சொல்கிறார்:

  DYNASTY word missed. Please add.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.