உண்மையான வெற்றி – திரு.நரேந்திர மோடிக்கா ….? செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கா …?…….?

16 மே, 2014 – அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த நாள்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. விவரமான புள்ளிவிவரங்கள்
தொலைக்காட்சிகளில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

1984-ல் இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு நடந்த தேர்தலில்
அனுதாப அலைகளால் ராஜீவ் காந்தி பெற்ற அதிக பட்ச எம்.பி.க்களைத்
தவிர, இதுவரை வேறு எந்த தேர்தலிலும் வேறு எந்த கட்சியும்
பெறாத அளவிற்கு அதிக அளவில் எம்.பி.க்களை பெற்றிருக்கிறார்
நரேந்திர மோடி. 5 லட்சத்து எழுபதாயிரம் ஓட்டுக்கள் அதிகமாகப்
பெற்று வடோதராவில் ஜெயித்திருக்கிறார் – கூடவே வாரணாசியிலும்..!

கிட்டத்தட்ட கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் சூறாவளி
சுற்றுப்பயணம் செய்து கோடிக்கணக்கான மக்களை நேரடியாகச்
சென்றடைந்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்த கொள்ளைகளாலும், லஞ்ச ஊழல்களாலும்
நொந்து போயிருந்த இந்நாட்டு மக்க்ளின் மனதில் நம்பிக்கை விதையை
ஊன்றி அதைத் தன் அனுபவம், நிரூபிக்கப்பட்ட நிர்வாகத்திறன்ஆகியவற்றால் வளர்த்து அதன் விளைவாக – மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார் நரேந்திர மோடி.

எந்தவித சந்தேகமும் இல்லாமல் – நரேந்திர மோடி அவர்களுக்கு
இது மிகப்பெரிய வெற்றி தான். இந்த நாட்டின் மக்களின் முன்
இன்றைய தினம் ஒரு மிகப்பெரிய எதிர்கால நம்பிக்கையாக,
உருவெடுத்திருக்கும் நரேந்திர மோடிக்கு நமது பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,

நான் அண்ணா திமுக கட்சிக்காரனல்ல – அனுதாபியும் அல்ல.
உண்மையைச் சொல்லப்போனால், அந்தக் கட்சி சம்பந்தப்பட்ட
பல விஷயங்களை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இருந்தாலும்,
உண்மைக்கு உள்ள மரியாதையை,
உழைப்புக்கு உள்ள மரியாதையை,
திறமைக்கு உள்ள மரியாதையை
கொடுப்பதில் எந்தவித தயக்கமும் காட்டக்கூடாது –
என்று நினைக்கிறேன் நான்.

கொள்ளைக்கார காங்கிரசை ஒழித்துக் கட்டுவேன் என்று உறுதிபூண்டு,
தன்னந்தனியாக களத்தில் இறங்கியவர் ஜெ.
எந்த வித கூட்டணியும் இன்றி எல்லாருக்கும் முன்னால்
களத்தில் இறங்கியதிலிருந்து,
அட்ரஸ் இல்லாத ஆட்களை எல்லாம் துணிந்து
வேட்பாளர்களாக நிறுத்தியதிலிருந்து,
பலரின் கிண்டல்களுக்கும், கேலிகளுக்குமிடையே தொடர்ந்து
நாற்பதும் நமதே என்று குரல் கொடுத்து,
தன் கட்சித்தொண்டர்களை அதை முழுமையாக நம்பவைத்ததிலிருந்து,
விளம்பரம், பிரச்சாரம், நிதி – அத்தனை பொறுப்புக்களையும்
தானே நிர்வகித்ததிலிருந்து, மற்ற அனைத்து அரசியல்வாதிகளிலிருந்தும் தனித்து வெளிப்படுகிறார் ஜெ.

இந்த தேர்தலில், மீடியாக்கள் ஜெ.வுக்கு எதிராகத்தான் செயல்பட்டன.
சில நேரடியாகவும், பல மறைமுகமாகவும்.
அதிக பட்சம் 25 சீட்டுக்கள் பெறக்கூடும் – அதுவும் சந்தேகம் என்கிற
நிலை தான் அனைத்து மீடியாக்களாலும் சொல்லப்பட்டது.

இன்று வெளிப்பட்டிருக்கும் முடிவுகள் பிரமிக்க வைக்கின்றன.
நாடு முழுவதும் மோடி அலை வீசும்போது தமிழ்நாட்டில் மட்டும்
“அம்மா” அலை – 39-ல் 37 இடங்களில் வெற்றி பெறுகிறது.
இத்தனைக்கும் இந்த முறை திமுகவால் மிக பலமான பிரச்சாரமும்,
பணபலமும் இறக்கப்பட்டன. அரசுக்கு எதிரான பல குறைபாடுகளும்
பலமாக வெளிப்படுத்தப்பட்டன. மத்தியில் ஆண்ட காங்கிரசை
எதிர்ப்பதற்கு பதிலாக மாநில அரசை நோக்கி கடுமையான
விமரிசனங்கள் செய்யப்பட்டன. அதேபோல், பாஜக கூட்டணியின்
தரப்பிலும் கடுமையான தாக்குதல்கள் இருந்தன. அவர்களும்
எந்தவித தயக்கமுமின்றி தமிழக அரசையும் ஜெ.வையும்
விமரிசனம் செய்தார்கள்.

இத்தனையையும் மீறி, அண்ணா திமுக இத்தகைய ஒரு
வெற்றியை பெற்றிருக்கிறது என்றால் – அதற்கான முழு காரணமும்
அதன் தலைமை மட்டும் தான் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும் ?

குறைகளைக் காணும்போது, அதை விமரிசனம் செய்யும் நாம்,
நிறைகளைக் காணும்போது, பாராட்டவும் வேண்டும் என்பது
தானே நியாயமாக இருக்க முடியும் ….?

ஜெ. அவர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும்,
திட்டமிடலும், விடாமுயற்சியும் பிரமிக்க வைக்கின்றன.
ஒரு பெண்ணாக இருப்பதால் அரசியல் உலகில் இயற்கையாக
ஏற்படக்கூடிய தடங்கல்களையும் தாண்டி இத்தகைய ஒரு வெற்றியை
பெற்றிருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு நமது உளம் நிறைந்த
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

 

modi and jj photo-2

ஆனால் – இரண்டு பேரும் வெற்றி பெற்றிருந்தாலும்,
இரண்டு பேரையும் நாம் பாராட்ட விழைந்தாலும் –

முழுமனதோடு பாராட்ட முடியவில்லை.
காரணம் இரண்டு வெற்றிகளும் தனித்தனியே நிற்கின்றன.
இரண்டும் ஒன்று சேர்ந்தால் தான் – தமிழ்நாட்டிற்கும்,
தமிழ் மக்களுக்கும் உண்மையான வெற்றி கிடைக்கும்.
தமிழ் நாட்டின் தனிப்பட்ட பல பிரச்சினைகள் தீர
இந்த ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

அமையப்போகும் மத்திய அரசில் அண்ணா திமுகவும் சேர்வது
தான் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

43 Responses to உண்மையான வெற்றி – திரு.நரேந்திர மோடிக்கா ….? செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கா …?…….?

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  அமைய போகும் ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு முல்லை பெரியாரும், காவிரியும் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் வரவேண்டும், தஞ்சை டெல்டாவில் மீத்தேன் எரிவாயு திட்டம் நிறுத்தப்பட வேண்டும். தமிழகமும், இந்திய நாடும் வீறு கொண்டு வெற்றி நடை போட வேண்டும். நிறைய ஆசைகள் உண்டு, மக்கள் நன்றாக மன அமைதியுடன் வாழ வேண்டும்.

 2. காசிம் சொல்கிறார்:

  காவேரி மைந்தன் சார், மன்சில் பட்டதை சொல்றேன். வர வர நீங்க ஜெ விற்கு ரொம்பத்தான் சொம்படிக்கிறீங்க. போற போக்கை பார்த்தால் சோவை மிஞ்சிடுவீங்க போல 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் காசிம்,

   ஒருக்கணம் உங்கள் பின்னூட்டத்தை நீங்களே படித்துப் பாருங்கள்.
   உங்களுக்கே சரியென்று தோன்றுகிறதா …?

   என்னால் முடிந்த வரை என் மனசாட்சிக்கு சரி என்று தோன்றுவதை நான் எழுதுகிறேன்.
   அதற்கான நியாயங்களையும் தெரிவிக்கிறேன்.

   உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றால், அதற்கான காரணங்கள்
   இருந்தால், தாராளமாக அதை கவுரவமான வார்த்தைகளில் எழுதலாம்.

   அண்ணா திமுகவில் பல விஷயங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லையென்று
   கூட நானே எழுதியிருக்கிறேன்.

   ஜெ.யிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால் –
   இன்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளில், ஜெ.யை விட
   தைரியசாலியான, திறமையான ஒரு நிர்வாகியை என்னால் காண முடியவில்லை.

   மனதில் படுவதை வெளிப்படையாக எழுதுவது தான் நேர்மை என்று நான் நினைக்கிறேன்.
   குறைகளைச் சொல்வது போல் நிறைகளையும் சொல்வது தான் நியாயமென்று நினைக்கிறென்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • காசிம் சொல்கிறார்:

    கா.மை சார். தங்கள் மனம் கோணும்படி என் பின்னோட்டம் இருந்தால் மன்னிக்கவும். என் நோக்கம் அதுவல்ல ஆனாலும் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை
    புரிந்து கொள்வீர்கள் என் நம்புகிறேன்

   • k.gopaalan சொல்கிறார்:

    //இன்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளில், ஜெ.யை விட
    தைரியசாலியான, திறமையான ஒரு நிர்வாகியை என்னால் காண முடியவில்லை.//

    ஏன், மத்திய அமைச்சராக இருந்து புகையிலையை அகற்றிய அன்புமணி ராமதாஸ் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா.

    கோபாலன்

    • todayandme சொல்கிறார்:

     கோபாலன் ஐயா,

     புகையிலை தமிழ்நாட்டில் சென்னையில் எந்த ஏரியாவில் இல்லை? சிறிது விளக்கினால் நல்லது.

 3. N.Rathna Vel சொல்கிறார்:

  முழுமனதோடு பாராட்ட முடியவில்லை.
  காரணம் இரண்டு வெற்றிகளும் தனித்தனியே நிற்கின்றன.
  இரண்டும் ஒன்று சேர்ந்தால் தான் – தமிழ்நாட்டிற்கும்,
  தமிழ் மக்களுக்கும் உண்மையான வெற்றி கிடைக்கும்.
  தமிழ் நாட்டின் தனிப்பட்ட பல பிரச்சினைகள் தீர
  இந்த ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

  அமையப்போகும் மத்திய அரசில் அண்ணா திமுகவும் சேர்வது
  தான் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது. = அருமையான பதிவு. நன்றி.

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  *முழுமனதோடு பாராட்ட முடியவில்லை.*
  *காரணம் இரண்டு வெற்றிகளும் தனித்தனியே நிற்கின்றன.*
  இரண்டும் ஒன்று சேர்ந்தால் தான் -* தமிழ்நாட்டிற்கும்,*
  *தமிழ் மக்களுக்கும் உண்மையான வெற்றி கிடைக்கும்.*
  *தமிழ் நாட்டின் தனிப்பட்ட பல பிரச்சினைகள் தீர*
  *இந்த ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.*

  *அமையப்போகும் மத்திய அரசில் அண்ணா திமுகவும் சேர்வது*
  *தான் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.*

  2014-05-16 21:58 GMT+05:30 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :

  > vimarisanam – kavirimainthan posted: “16 மே, 2014 – அனைவரும் ஆவலோடு
  > எதிர்பார்த்த நாள். தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. விவரமான
  > புள்ளிவிவரங்கள் தொலைக்காட்சிகளில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. 1984-ல்
  > இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு நடந்த தேர்தலில் அனுதாப அலைகளால் ராஜீவ்
  > காந்தி ப”

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  காவிரி மைந்தன் ஐயா
  உங்களின் எண்ணம் போலவே தேர்தல் முடிவுகள் வந்துள்ளதால் முதலில் வாழ்த்துகள் உங்களுக்கு.
  அடுத்ததாக மோடியே எதிர்பார்க்காத தனிப்பெரும்பான்மை பெற்று வென்றுள்ள பிஜேபி-க்கு அடுத்த வாழ்த்துகள்.
  அடுத்தபடியாக எதற்குமே அலட்டிக்கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்பதை இப்போதும் கூறிக்கொண்டு, மீண்டும் திமுக-வையும் கலைஞரையும் குறைகூறிக்கொண்டே வெற்றி பெற்றுள்ள ஜே-வுக்கும் வாழ்த்துகள்.
  கடைசியாக இந்தியமக்களுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் வாழ்த்துகள்.

  • காசிம் சொல்கிறார்:

   // கடைசியாக இந்தியமக்களுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் வாழ்த்துகள் //
   ஏன், தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொண்டதற்கா 🙂

   • சைதை அஜீஸ் சொல்கிறார்:

    என்ன நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
    நடப்பதும் நன்றாகவே நடக்கும்.
    நாம் என்ன கொண்டு வந்தோம் விட்டுச்செல்ல அல்லது கொண்டுசெல்ல!
    ஆ……ல் ஈ…..ஸ் வெல்!
    பீ…..ஹாப்பீ!

 6. todayandme சொல்கிறார்:

  கா.மை. சார்,
  தமிழ்நாட்டுக்கும் தமிழ்மக்களும் நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்பதைக்கூட கேவலமாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள், என்பதை தெரியப்படுத்தும் பின்னூட்டம் திரு காசிம் அவர்களது. அவர்களின் எண்ணமும் மொழியும் இப்படித்தான் இருக்கும், இருக்கமுடியும் என்பதை அவர்களே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இத்தகைய பின்னூட்டங்களை கண்ணியமானவர்கள் படித்து விவாதிக்கும் இந்த செய்திமேடையில் அனுமதிப்பது இத்தகைய பலரை இங்கே மேலும் ஊக்குவிப்பதாகும்.

  எனவே தயவுசெய்து மொழிநாகரிகம் காக்கவேண்டியும், கட்சிசார்பற்ற கருத்துக்களை தெரிவிக்கும் ஆணாதிக்க சிந்தனைகளை வெளிப்படுத்தும் முறையற்ற வழிகளைத் தவிர்க்கவேண்டியும் காசிம் அவர்களின் பின்னூட்டத்தை பதிவிலிருந்து நீக்கக் கோருகிறேன்.

 7. todayandme சொல்கிறார்:

  பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.வை மூன்றாவது பெரிய தேசியக் கட்சியாக உருவெடுக்கச்செய்து கவுரவப்படுத்திய தமிழக மக்களுக்கு பாராட்டுகள்.

  தைரியமும், தன்னம்பிக்கையும், திட்டமிடலும், விடாமுயற்சியும் கொண்டு
  ஒரு பெண்ணாக இருப்பதால் அரசியல் உலகில் இயற்கையாக
  ஏற்படக்கூடிய தடங்கல்களையும் தாண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தகைய ஒரு வெற்றியைப் பெற்றிருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு நமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   திருவாளர் இன்றுமற்றும்நான்(todayandme) ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களோடு ஒரு ஆலோஸனையையும் நான் கூற விரும்புகிறேன், அதாவது காங்கிரஸ் 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு 15 பேரை விலை பேசிவிட்டால் மிகப்பெரிய எதிர்கட்சியாகிவிடலாமே!
   இதற்கான அனுபவம்தான் தமிழகத்தில் நடைமுறைபடுத்தியுள்ளாரே!
   பிறகு தைரியமான பிரதமர்….
   மிகத்தைரியமான எதிர்கட்சி….
   இந்தியா வல்லரசேதான், 2014-லேயே!
   (காவிரி ஐயா, இது உங்களின் பதிவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு மறுமொழி. இருந்தாலும் இங்கு சொல்வது சரி என்று பட்டதால் சொல்லியுள்ளேன். தேவையில்லையெனில் நீக்கிவிடவும்)

   • todayandme சொல்கிறார்:

    சைதை அஜீஸ் ஐயா,

    தமிழ்நாட்டுக்கு இதனால் நன்மை கிடைக்குமென்றால் இதைச் செய்வதில் ஒரு தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

    • ரிஷி சொல்கிறார்:

     ஜெ.வை காவிரி மைந்தன் பாராட்டிப் பதிவிட்டிருப்பதால் அதனை சற்றே உடைக்க சைதை அஜீஸ் தேமுதிக எம் எல் ஏக்களை ஜெ. விலை பேசி வாங்கிய விஷயத்தை ஆயுதமாக எடுத்திருக்கிறார். நாட்டுக்கு நல்லதோ கெட்டதோ, மக்கள் நம்பி வாக்களித்த வேட்பாளர்கள் தாங்கள் எந்தக் கட்சி சார்ந்து நின்றார்களோ மறுதேர்தல் வரும் வரைக்கும் அதே கட்சியையே பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும். அல்லது ஆண்மை இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு, கட்சியை விட்டு வெளியேறி பிடித்த கட்சிக்கு மாறி, தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும்.

     மற்றபடி, கா.மை, கண்பத், மற்றும் பல நண்பர்களின் விருப்பங்கள் நிறைவேறியிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

     புதிய அரசு எடுக்கப்போகும் கொள்கை முடிவுகளின் வீரியங்களைப் பற்றி அடுத்தடுத்து பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் விமர்சிக்க ஆரம்பிப்போம்.

 8. srinivasanmurugesan சொல்கிறார்:

  திரு.கா.மை. அய்யா… தங்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நடைபெறும். அம்மா அவர்கள் முதலில் தமிழ்நாட்டினை மின்மிகை மாநிலமாக மாற்றுவார்கள். தமிழ்நாட்டின் பங்களிப்பு மத்தியில் நிச்சயம் இருக்கும்.நமக்குறிய நிதியை மத்தியிலிருந்து பெற்று தருவார்கள்.தமிழ்நாட்டில் நிச்சயம் மதுவிலக்கு அம்மா அவர்களால் கொண்டுவரப்படும்.அது இவர்களால் மட்டுமே முடியும்.பொறுத்திருப்போம்.தமிழ்நாட்டின் தேவைகள் பூத்தி செய்யப்படும்.

 9. Rangarajan Rajagopalan சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  பல பேர் போற்றுவார், சில பேர் தூற்றுவார்.
  நீங்கள் தொடர்ந்து உங்கள் பாணியிலேயெ எழுதுங்கள்.
  உங்களின் எழுத்தில் இருக்கும் உண்மைக்காகவே
  உங்களையும் உங்கள் எழுத்தையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
  இந்தக் காலத்தில் யார் சார் உங்களைப்போல கட்சி சார்பில்லாமல் எல்லா உண்மையையும் எழுதுகிறார்கள் ? உங்கள் எழுத்துக்காகவும்,
  உங்களுக்காகவும் நன்றிகள் பலப்பல.

 10. Balaji சொல்கிறார்:

  I’m really happy to see Congress thrown out of throne (should have happened last time). Positive results in TN as well not because of Admk won 37 seats but Dmk couldnt grab a single seat. Hope Congress and DMK will learn their lessons but I seriously doubt it.

  Having said that I felt really sorry for Mdmk. Vaiko is one of very few good people in todays politics but he himself couldnt win in Virudhunagar. Hope it gets better next time.

  Thanks for all your posts sir prior to the elections and all we can do now is to have hope for something better comes out of new government.

  Regards,
  Balaji

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   ரொம்ப நல்லவர்களாலும் நம் தேர்தல் முறையில் வெல்ல முடியாது என்பதை மீண்டும் வைகோ நிரூபித்து உள்ளார்.
   இங்கு தேர்தலில் வெல்ல வேறு ஏதோ தேவை என்பதை அவர் இன்றுவரை புரிந்துகொள்ளாமல் இருப்பது துரதரிஷ்டமே!

   • ரிஷி சொல்கிறார்:

    நானும் விருதுநகரைச் சார்ந்தவன்தான். வைகோ சென்றமுறை வெற்றி வாய்ப்பை நெருங்கி வந்தும் வெல்ல முடியாததற்கு காரணம் தேமுதிக மாபா பாண்டியராஜன் பிரித்த ஒன்றரை லட்சம் ஓட்டுக்கள்தான். இம்முறை தோற்றதற்குக் காரணம் பணபலமும், ஜாதிபலமும்தான் எனக் கருதுகிறேன்.

    வைகோவுக்கு விருதுநகர் சிவகாசி வர்த்தகர்களிடம் வரவேற்பு கிடையாது. தங்களை மதிப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. மேலும் நாடார் இன மக்கள் பெரும்பாலும் தங்கள் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே வோட்டு போடுவதும் இங்கு நிகழ்கிறது. வைகோ நிற்பது பெரும்பாலும் சிவகாசி பகுதி நாயக்கர்களை நம்பித்தான்.

    மற்றபடி, இது ஒரு நாடாளுமன்ற தேர்தல்; வைகோ ஒரு சிறந்த பார்லிமென்டேரியன்; தொகுதிக்கும், முக்கிய பிரச்சினைகளைப் பற்றியும் உரையாற்றவும் வைகோ ஓர் அற்புதமான ஆள்.. என்றெல்லாம் பார்த்து கட்சி தாண்டி அந்த மனிதருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ‘அறிவெல்லாம்’ விருதை தொகுதி மக்களுக்கு கிடையாது.

    இலங்கை தமிழர் பிரச்சினையைப் பொருத்தவரை தமிழக மக்களுக்கு அதில் ஆர்வம் கிடையாது (ஒரு சில குழுக்களைத் தவிர) என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டபடியால் அந்த விஷயமெல்லாம் விருதை மக்களின் அஜென்டாவிலேயே கிடையாது.

    வைகோ அவர்களை அடுத்த முறை தொகுதி மாறி நின்று திருப்பூர் பகுதியிலோ அல்லது வேறு நல்ல பகுதியிலோ நின்று வெல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். விருதுநகர் மக்கள் காமராஜரையே தோற்கடித்தவர்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.

    (வைகோ அவர்கள் முத்துராமன்பட்டி ரயில்வே கேட் பாலத்தை தன் முன்முயற்சியால் கொண்டு வந்தவர். அது நியாயமாக ராஜலட்சுமி தியேட்டர் இருக்கும் பகுதியில் வர வேண்டியது. இருப்பினும் வைகோ தொடர்ந்து ஜெயித்து வந்திருப்பாரேயானால் இந்நேரம் அங்கும் பாலம் வந்திருக்கும். கேகே எஸ் எஸ்ஸாரின் அரசியலால் அது இன்னும் நடக்கவில்லை. தினமும் 45 ரயில்கள் கடந்து செல்லும் அப்பகுதியில் – பல முக்கிய பகுதிகளின் இணைப்பு ரோடாகவும், அரசு மருத்துவமனை போன்ற முக்கியமானவை அப்பகுதியில் இருந்தும் பாலம் இல்லாததால் லெவல் கிராசிங்கில் காத்துக் கிடந்து நொந்து போகும் மக்கள் தங்களுக்கு ஏற்றவரை ஏனோ தேர்ந்தெடுக்கவில்லை. வாழ்க அம்மக்கள்!)

 11. johan paris சொல்கிறார்:

  //ஜெ. அவர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும்,
  திட்டமிடலும், விடாமுயற்சியும் பிரமிக்க வைக்கின்றன.
  ஒரு பெண்ணாக இருப்பதால் அரசியல் உலகில் இயற்கையாக
  ஏற்படக்கூடிய தடங்கல்களையும் தாண்டி இத்தகைய ஒரு வெற்றியை
  பெற்றிருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு நமது உளம் நிறைந்த
  வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.//
  அதே!
  எனக்கும் முதல்வர் ஜெ யின் சில குணங்கள் பிடிக்காத போதும், இந்த தன்னம்பிக்கைக்காக பாராட்டவே வேண்டும்.
  நாயமான அலசலும் பாராட்டும்.

 12. Gopalasamy சொல்கிறார்:

  Happiest day for indian democracy. First time, a low middle class OBC comes to power.I hope ddynasty rule comes to an end. Modi is hard worker. He is thinking for india. Best wishes for Modi.
  I always see secularists are not thinking for country. Sriman Mani iyer’ statement proves this.
  Here also some people wish, some bad things would happen for india and tamilnadu. I hope, their wishful thinking will not materialise.
  Any information about Raul’s foreign tour during last week.

 13. k.gopaalan சொல்கிறார்:

  தமிழர்களின் பெரிய பலவீனம் அகந்தையை துணிவாகக் கருதுவது. முதல்வர் அதை உபயோகிக்கிறார் என்பதைத் தவிர பெருமைப்பட எதுவும் இல்லை. இதுவரை அந்தக் கட்சிப் பிரமுகர் ஒருவர்கூட அவர் பெயரை உச்சரிக்கவில்லை. மதுவால் பல பல ஏழைத் தாய்மார்கள் படும் வேதனையைக் கண்டுகொள்ளாதவர்.

  குடும்ப அரசியலை உள்ளே நுழைத்து திரு அழகிரி பிஏ யை மத்திய அமைச்சராக்கிய கட்சியை மக்கள் ஓரங்கட்டிவிட்டார்கள்.

  இனியும் மத்திய அரசைத் தொடர்ந்து குறைகூறும் அவரது பணி தொடருமா.

  கோபாலன்

  • ரிஷி சொல்கிறார்:

   ‘நான்’, ‘நான்’.. ‘எனது’ என வார்த்தைக்கு வார்த்தை மருகும் ஜெ. வின் அகந்தை துணிச்சலாகத்தான் பார்க்கப் படுகிறது. “எனது அமைச்சரவை சகாக்களின் சிறப்பான பணிகளால் என்னால் அரசைத் திறம்பட நடத்த முடிகிறது” என்று ஒரு போதும் அவர் சொன்னதேயில்லை. தனிநபர் துதி பாடும் தமிழனுக்கு அவன் எதிர்பார்ப்பது போலத்தான் அமையும்.

   155 பேருடன் சேர்த்து இனி, கூடுதலாக ஒரு 37 பேர் காலில் விழப் போகிறார்கள். மிக நன்று 🙂

   // மதுவால் பல பல ஏழைத் தாய்மார்கள் படும் வேதனையைக் கண்டுகொள்ளாதவர். //

   தமிழக அரசு சப்ளை செய்யும் சாராயங்கள் பெரும்பாலும் சசிகலாவுக்குச் சொந்தமான சாராயம் தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து பெறப்படுபவைதான். ஆகவே ஜெ.வால் தமிழகத்தில் சாராயத்தினை தடை செய்ய முடியாது.

 14. kinarruthavalai சொல்கிறார்:

  இருவருக்குமே இது ஒரு சிறப்பான வெற்றியே. நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  ஆனாலும் முன்பே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் மத்தியில் பா ஜ கவும் இங்கே அதிமுகவும் வெற்றியடைவது நல்லது என்று.
  https://vimarisanam.wordpress.com/2014/04/23/why-it-is-modi-vs-lady-should-it-not-be-modi-plus-lady/
  அதற்கு நான் பின்னோட்டமிட விருப்பம் இல்லாமல் இருந்தேன். யார் மத்தியில் வந்தாலும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு யாரும் எந்த விதமான உதவியும் செய்வதில்லை. ஏனெனில் அவர்களை தட்டிக் கேட்க அவர்களின் உறுப்பினர்கள் யாரும் மத்திய அவையில் கிடையாது. தி மு க உறுப்பினர்கள் தங்கள் வாரிசு வளர்ச்சியிலும் அதிமுக உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர்களது தலைவியின் வாயை எதிர்ப்பார்த்து இருப்பதாலும் (திரு மலைசாமியின் கதியே இதற்கு நல்ல உதாரணம். ஒரு வேளை மத்தியில் பாஜக முழுமையான பெரும்பான்மை பெறாமல் இருந்திருந்தால்….அவர்கள் நிச்சியமாக அதிமுகவை அணுகியிருந்திருப்பார்கள். அப்போது மலைசாமி சொன்னது போலத்தான் நடந்திருக்கும். ஆகையால் அதை நீ சொல்லாதே நாந்தான் சொல்லனும் என்பது ;ஜெ’யின் மனக் கணக்கு. நல்ல வேளை, எல்லாம் மாறிப் போனது) தமிழக வளர்ச்சி என்பது இது வரை கனவாகவே இருந்து வருகிறது. இன்றைக்கும் மத்திய சபைக்கு செல்லும் அதிமுக உறுப்பினர்கள் எப்படி பட்டவர்கள்? தானாக முடிவெடுக்க கூடியவர்களா? அவ்வப் போது அவர்களுக்கு மலைசாமி கதி நினைவுக்கு வராதா?
  தங்களது உறுப்பினர்களே இல்லாத பகுதிக்கு மத்திய அரசிடம் இருந்து என்ன உதவி கிடைக்கும்? உறுப்பினர் இல்லாததற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்களுக்கு, மன்னார்குடி எனும் ஒரு சட்டசபை தொகுதி தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளது. அங்கு சென்ற தேர்தலில் திமுக பாலுவின், வழக்கமான முறையற்ற வாரிசு “எப்படியோ” சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். அதற்கு பழியாக தண்டனையாக இதுவரை அந்த தொகுதி மக்களுக்கு எந்த ஒரு இலவசங்களும் கொடுக்கப் படவில்லை எனக் கேள்விப்பட்டேன். இதுதான் நமக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு அது தக்காளிச் சட்டினி என்பது. மீண்டும் தமிழக வளர்ச்சிக்கு குறைந்த பட்சமாக 4/5 பேர் பா ஜ கவிருந்து போயிருக்கலாம் என்பது எனது எண்ணம். இன்று என்னைப் பொறுத்தவரை இந்த 37 பேரும் தண்டம்தான். மீண்டும் ஜே மத்திய அரசை குறை சொல்ல ஆரம்பிக்க ரொம்ப நாட்கள் ஆகாது. மற்றபடி காங்கிரஸ், தி மு க, தே மு தி கவும் பா ம கவும் துடைத்தெடுக்கப் பட்டது கண்டிப்பாக மனதளவில் மகிழ்ச்சியளிக்கிறது.

  • todayandme சொல்கிறார்:

   கிணற்றுத்தவளை,

   கட்டுப்பட்டால்தான் தொண்டன், கட்டுப்படுத்தமுடியுமென்றால்தான் அது தலைமை. இவ்விரண்டுமே இல்லாத கழகமும் கட்சியும் இந்தத் தேர்தல் முடிவுகளில் இல்லை.

   தலைக்குக் கட்டுப்படாத வாலாகத்தான் துள்ளுவேன் என்றால் தொண்டனாக ஏன் உறுப்பினர்சீட்டு பெறவேண்டும்?

   மக்களுக்கு நற்பணி செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன் என்றால் சுயேச்சையாக இருக்கலாமே? அல்லது சமூகசேவகனாகவே பணிபுரியலாமே?

   ஏதோ பலனை எதிர்பார்த்து கட்சிஅமைப்புக்குள் வருகிறார்கள் என்றால் அந்த அமைப்புக்குக் கட்டுப்பட்டவர்கள்தான் அவர்கள்.

   எதுவுமே முடியவில்லையென்றால் உங்களைப் போலவும் என்னைப்போலவும் வாய்ப்புக்கிடைக்கும் இடத்தில் சுதந்திரமாகத் தமது கருத்துகளை பகிர்ந்துகொண்டு, வெந்ததைத் தின்று விதியே என்று கிடந்து, நாளை ஒருநாள் தானாக மாறும் எல்லாம் என்று நம்பிக்கையோடு இருந்துவிடலாமே?

   ஏன் இப்படி பணம், பொருள், பதவி சுகம் இவற்றுக்கிடையில் மலைச்சாமி போன்றோர் அல்லாடவேண்டும்.

   • ரிஷி சொல்கிறார்:

    கட்சி என்பது வேறு, மக்கள் வேறு என்பதை தெளிவுபட உரைத்தமைக்கு மிக்க நன்றி.

 15. Ganpat சொல்கிறார்:

  நண்பர்கள் எல்லாவற்றையும் எழுதி விட்டார்கள்.இனி சொல்வதற்கு அதிகம் இல்லை.என் பிரார்த்தனை எல்லாம்..
  1.ஜெயா மாறப்போவதில்லை.மோடியாவது மாறாமல் இருக்க வேண்டும்.
  2.பா.ஜ.க.தமிழகத்தில் காலூன்ற வேண்டுமெனில் அது இம்மாநிலத்தில் எந்த கட்சியுடனும் கூட்டு வைத்துக்கொள்ளக்கூடாது.அடுத்த இரண்டு ஆண்டுகள் மத்திய அரசை திறம்பட ஆட்சி செய்து மக்களிடம் நன்மைதிப்பைப்பெற்று, 2016 சட்டமன்ற தேர்தலில் 240 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டால்,ஒரு அறுபது எழுபது இடங்களிலாவது வெற்றி பெற்று கணக்கை துவக்கலாம்.
  3.கருணா எப்படியாவது மோடியின் நட்பை பெற விரும்புவார்.ஜெயாவின் பொறுப்பற்ற அகந்தை அதற்கு பேருதவி புரியும் இதில் மோடி மயங்காமல் இருக்க வேண்டும்.
  எப்படி பார்த்தாலும் மோடி முன் இருக்கும் பொறுப்புகள் இமயமலை அளவு.
  அதில் அவர் வெற்றி பெற இறை அருள் கிட்டட்டும்.

 16. kumar சொல்கிறார்:

  Sir,Why you have not mentioned about Rs.300 for each votes meticulously planned and executed by Jayalaitha with the help of Government machinery.Really in that aspect she should be congratulated.

 17. Gopalasamy சொல்கிறார்:

  Jaya is a shrewd politician. she will support Modi. Then only, she can also get some benefits from tamilnadu. If she could not improve power situation, she can not win in assembly election.

 18. Sanmath சொல்கிறார்:

  First of all, sorry for being so late……

  Big Congratulations to Modi and JJ……. Our TN people have done the right thing in fact…….BJP’s rule at centre with JJ’s presence in it, so that TN may be benefitted………..But our brothers in North have done a tremendous thing, which is so good for India……. Compared to Congress BJP is more national spirited…….. We can expect some strong stands in external affairs, jobs, exports etc……. Its pretty sure that this government will focus more on these things….

  To Christian and Muslim brothers – Pls dont worry abt anything bad wud happen……BJP has got such a victory after 10years and they will try to take it forward and not loose it……..

  When we speak about BJP everyone speaks about Muslims…….People forget about christians……think of the states where Christians are considerable in nbrs – Kerala BJP-0, TN BJP-1, Andra BJP -1(YSR family are converted christian), West Bengal BJP-2…….also in Orissa they have 1 seat……….When people who vote for a party based on religion is called communalism or whatever, what do we need to call when people who do not vote for a party because of religion……..I do not know Sir, someone here pls teach me what is India’s secularism and religions/minorities……

  Coming to benefits for TN, not sure how this lady is going to be courteous to Central government and get benefits for us…….her past activities show us that getting benefits are remote……..

  But BJP may try to establish themselves in these states…….There is also a possibility BJP may team-up with JJ for next assembly elections and try to win min 10 LS members…….BJP may work this out as the people of TN are so attracted towards the “good governance” of JJ (I m not saying this, mandate says this) and their central rule will also help this………They may make JJ bend for this, as like Congress did to DMK in last elections……..JJ has got two critical cases to be given results……..

  Anyway as a whole, for India, it is good and in next parliament elections BJP can literally mean their past slogan “INDIA SHINING”………What will happen to TN, only GOD knows ????

  (Really sad and frustrated to see Vaiko losing…….)

 19. Vicky சொல்கிறார்:

  Sir,

  I have been following your blog for years and did not miss any single article. Salute to you for your honesty and hard work.

  There was a discussion in Thanthi TV today (Mei Porul Kaanbathu Arivu). The summary is….
  To pass any bill and to legalize it, especially to amend Constiutional Law, any government should get it approved both in the Lok Sabha and Rajya Sabha. BJP can easily pass it in the Lok Sabha, having majoriy. When it comes to Rajya Sabha, as they have only around 60 seats, thay definetily require the support of AIADMK and TMC and Naveen Patnayak. The minimum support requires in Rajya Sabha is (around) 120 votes. Otherwise, they will have join hands with Congress, who has 62 seats, to pass the bill.

  Until they win many state elections in the coming years, they will have to depend on the regional parties.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் விக்கி – என் மீது உங்களுக்கு இருக்கும் நல்லெண்ணங்களுக்கும், உங்கள் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி.

   மத்திய ஆட்சியில், அண்ணா தேமுக சேர்ந்தால் அது மிக நல்லது.

   சேராவிட்டாலும் கூட, நல்லுறவு கொண்டு நட்புடன் ஒத்துழைத்தால்,
   அந்த துணை ராஜ்யசபாவில் பாஜக ஆட்சிக்கு உதவியாக இருக்கும். அதற்கு பிரதிபலனாக, தமிழக நலன்களுக்கு தேவையான விஷயங்களில்
   மத்திய அரசின் உதவி தாராளமாக கிடைக்க வழி பிறக்கும்.

   கூட்டணிகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும். நமக்குத் தேவை
   நாட்டின் – முக்கியமாக, தமிழ்நாட்டின் நலன்.
   பாஜக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நட்பும், நல்லுறவும்
   நிலவுமாறு பார்த்துக் கொள்வது தமிழக முதல்வரின் தலையாய
   எண்ணமாக இருக்க வேண்டும்.

   நல்லதையே நினைப்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 20. D. Chandramouli சொல்கிறார்:

  1. Modi must see that Vaiko is entrusted with some decent post at the center so that the latter’s expertise and experience are utilized for the benefit of the masses. Can Vaiko be brought into Rajya Sabha?
  2. DMK got wiped out in this election – but they will bounce back with Stalin in command. DMK will change for the better under Stalin.
  3. I guess that Modi or no Modi, JJ wouldn’t change her style of approach as regards TN needs.
  4. For India, BJP under Modi can only perform better than Congress. Modi has proved to be a go-getter and such dynamism is the need of the hour to kick start the Indian economy.
  5. By the way, Congress leadership is not likely to change – even Congressmen wouldn’t entertain the idea of the party without Sonia or Rahul at the helm. They would feel “what is left of Congress without Indira family”! I wish for a change, they should get someone like say Chidambaram to head the organization so that a non-Indira family person could be developed for long term.

  • Ganpat சொல்கிறார்:

   You are right in all the points.
   Congress+4 members of Nehru family=40 seats
   whereas
   Congress-4 members of Nehru family=0 seat
   So Congress members would never risk that.
   Even if Rahul refuses to marry,they would arrange for artificial insemination upon a foreign national.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    O – Ganpat,

    What an imagination ,,,!
    Fantastic idea –
    for the future leadership of Great Grand Old Congress Party.

    with all best wishes,
    Kavirimainthan

 21. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Dear Mr.Chandramouli,

  Seeing you after a long gap….! welcome.

  In my opinion – Congress Party as a whole – lock stock and barrel
  should be totally ignored and
  isolated atleast for the next 10 years.
  Then only it will come out from
  the clutches of all existing evils in the party.
  Present leadership as well as the big and senior leaders – all are selfish and
  looters of the nation, fit to go only to prison after a thorough
  accountability enquiry.

  With all best wishes,
  Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.