டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜெயித்தது எப்படி… …?

தமிழ்நாட்டில் மொத்தம் 39 பாராளுமன்ற தொகுதிகள்.

காங்கிரஸ் – 39-லும் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்று –
38 -ல் டெபாசிட்டையும் இழந்தது.

திமுக – 35-ல் போட்டியிட்டு, அனைத்திலும் தோற்று –
ஒரு தொகுதியில் மட்டும் (கன்யாகுமரி) டெபாசிட்டை இழந்தது.

பாஜக கூட்டணியில் –

தேமுதிக – 14 தொகுதிகளில் போட்டியிட்டு,
அனைத்திலும் தோற்று,
10-ல் டெபாசிட் இழந்தது.

பாஜக – 7 தொகுதிகளில் போட்டியிட்டு –
ஒரு தொகுதியில்
(கன்யாகுமரி) வென்றது.

மதிமுக -7 தொகுதிகளில் போட்டியிட்டு
அனைத்திலும் தோற்றது.

பாமக – 8 தொகுதிகளில் போட்டியிட்டு,
ஒரு தொகுதியில்
(தர்மபுரி) மட்டும் வென்றது. 2 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.

?????????????????????

தர்மபுரி வாக்கு விவரம் –
பதிவானவை -11,00,385

பாமக (அன்புமணி) – 4,67,775
அதிமுக – 3,90,718
திமுக – 1,80,110
மற்றவர்கள் …………..

பாமக சார்பில் தர்மபுரியில் நின்று, வென்ற டாக்டர் அன்புமணி –
பாஜக கூட்டணியில் (பொன்.ரா.வைத்தவிர ) மீதி அத்தனை பேரும்
தோற்றிருக்கும்போது, தான் மட்டும் வென்றது எப்படி என்பதை
செய்தியாளரிடம் விளக்கி இருக்கிறார்.

நரேந்திர மோடி அலை தமிழ்நாட்டில் தோல்வியடைந்தது எப்படி
என்கிற கேள்விக்கு – இது தனக்கும் புரியவில்லை, ஆராயப்பட வேண்டிய
விஷயம் என்று பதில் கூறி இருக்கிறார்…!

அடுத்து – ஜாதி ஓட்டுக்கள் ஒருங்கிணைந்தது தான் தர்மபுரியில்
அன்புமணியின் வெற்றிக்கு காரணமா என்று கேட்கப்பட்டதற்கு –

தான் ஜெயித்ததற்கு ஜாதி ஓட்டுக்கள் தான் காரணம் என்று
கூறப்படுவது மகா அபத்தம்.
ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு,
அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு,
மத்திய சுகாதார அமைச்சராக தான் சாதனைகள் நிகழ்த்தி
செயல்பட்டதை மக்கள் இன்னமும் மறக்கவில்லை என்பது தான்,
தான் மட்டும் ஜெயிக்கக் காரணம் …. என்கிறார்..!!

(வேட்பாளரின் தகுதியையும், பண்பையும், நல்லெண்ணங்களையும்,
செய்திருக்கும் சேவைகளையும் ஓட்டுப்போடும்போது மக்கள் கருத்தில்
கொண்டிருப்பார்களேயானால் – இத்தனை பேருக்கும் முன்னதாக
“வைகோ” அல்லவா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் ….?)

புகையிலை, சிகரெட்டை ஒழிக்கும் முயற்சியில் அன்புமணி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ,
முழுமூச்சுடன் தீவிரமாக இறங்கினார் என்பது உண்மையே…

அதனால் – டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுவது
உண்மையாகவே இருக்குமோ….?

ஆனால் – வட மாநிலம் ஒன்றில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத்
துவங்க அனுமதி அளிப்பது குறித்த விவகாரத்தில் லஞ்சம் வாங்கியதாக
அன்புமணி மீது ஒரு வழக்கு பதியப்பட்டதும், சிபிஐ அது தொடர்பாக
விசாரணை நடத்தியதும், அந்த வழக்கு இன்னமும் நிலுவையில்
இருப்பதையும் கூட மக்கள் மறந்திருக்க மாட்டார்களே…?

ஒரே குழப்பமாக இருக்கிறது……!!
ஒருவேளை தர்மபுரி மக்கள் ‘செலக்டிவ் அம்னீசியா’
நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ …?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே ……. ???

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜெயித்தது எப்படி… …?

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஒருத்தர் ஊத்திக்கிட்டு உளருவார் என்றால், இவரோ ஊத்திக்கொள்ளாமலேயே உளற முடியும் என்பதை ‘தெளிவு’படுத்துகிறார்.
  உலகம் தோற்றவர் பேச்சை கேட்பதில்லை என்பதால் வென்றவர்கள் உளறுகின்றனர்.

 2. k.gopaalan சொல்கிறார்:

  அன்புமணியின் வெற்றிக்கு சாதியும் ஒரு காரணம். அது வெற்றி பெற்ற எல்லோருக்கும் பொருந்தும். கேஸ் விசாரணையில் இருக்கும் வேட்பாளர் வெற்றி பெற்றது எப்படி என்பது உங்க்ள் கருத்தாக இருந்தால் வருசக் கணக்கில் கேசில் அல்லாடிக் கொண்டிருப்பவர் கட்சி பெரும் வெற்றி பெற்றது எப்படி. படித்த, பண்புள்ள, சாதித்துக் காட்டிய, முதல்வராகும் எல்லாத் தகுதியும் உள்ள இளைஞரை அவர் சார்ந்துள்ள சாதியை வைத்து எடைபோடுவது சரியாகாது.

  கோபாலன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கோபாலன் மற்றும் விஜயன்,

   பாமக சார்பில் மத்திய அமைச்சர்களாக பணியாற்றிய
   திருவாளர்கள் ஏகே மூர்த்தி, வேலு ஆகியோர் தமிழ்நாட்டுக்கு
   ஆற்றிய பணி நிச்சயம் பாராட்டத்தக்கது.

   ஆனால் இந்த பாராட்டு திரு அன்புமணிக்கு பொருந்தாது என்பது
   என் கருத்து. அன்புமணி அவர்கள் இன்று அனுபவித்து வரும்
   வளமான வாழ்வுக்கு எது அடிப்படை ….?

   பாராளுமன்றத்தையே பார்த்திராத ஒருவர் நேரடியாக
   மத்திய கேபினட் அமைச்சராக நியமனம் பெற்றது
   எதன் அடிப்படையில் …? எந்த தகுதியின் அடிப்படையில் …?
   மற்றவர்களின் பலவீனம் தான் அவருக்கு பலமாகவும்,
   தகுதியாகவும் அமைந்தது.

   30 வருடங்களுக்கு முன் பெரிய அய்யாவின் சொத்து வளம் எப்படி
   இருந்தது – இன்று அந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு எப்படி
   இருக்கிறது …? இந்த சொத்தைச் சேர்க்க அவர்கள் என்ன
   வியாபாரம் அல்லது தொழில் செய்தார்கள் …?

   இவை அனைத்தையும் தவிர, முக்கியமாக,
   ஜாதியை அடிப்படையாக வைத்து அரசியல்
   செய்யும் யாரையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

   என் கருத்தை நீங்க்ள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற
   அவசியம் இல்லை. என் நிலையை தெளிவு படுத்த
   விரும்பினேன் – அவ்வளவு தான்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. knvijayan, சொல்கிறார்:

  சாதி கட்சி என்று பொத்தாம் பொதுவாக எல்லோரும் PMK வை சொல்கிறார்கள் ஆனால் அக்கட்சியின் சார்பில் மத்தியில் அமைச்சர்களாக பணியாற்றிய வேலு,மூர்த்தி மற்றும் அன்புமணி ஆகியோர் ஆற்றிய பணியை எந்த திராவிட துண்டு மந்திரியும் செய்யவில்லை.

 4. todayandme சொல்கிறார்:

  தருமபுரியைத் தவிர வேறு எங்கு நின்றிருந்தாலும் சின்ன ஐயா 100க்கு 200 சதவீதம் தோற்றுப்போய்த்தான் இருந்திருப்பார்.

  ஜெயித்ததற்கு முழுமுதற் காரணம் ஜாதீ என்னும் அணையா பெரு நெருப்பு தான். அது சிறிதுநாட்களுக்கு முன்புதான் இளவரசன்-திவ்யா ஜோடியில் கொழுந்துவிட்டெரிந்தது மட்டுமல்லாமல், திவ்யாவின் பக்கத்தில் அவர் தந்தையையும், இளவரசனின் பக்கத்தில் இளவரசனையும், இவர்கள் தவிர இன்னும் பலரையும் காவுவாங்கியது. இந்தத் தீயின் சூட்டை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு பாராளுமன்றக் குளிரைப் போக்கிக்கொண்டார் அன்புமணி என்பதுதான் உண்மை.

  மக்கள் அம்னீசியாவால் இந்த காதல்பிரச்சினையை மறந்துபோயிருந்தால் ஓட்டுக்கு என்ன வழி? நினைவுபடுத்தவேண்டிய கட்டாயம் டாக்டர் ஐயாவுக்கு. எனவே திவ்யாவின் அம்மாதான் தேர்தல் பிரச்சாரத்துக்கு தர்மபுரி வந்த டாக்டர் ஐயாவுக்கு ஆரத்தி, வெற்றித் திலகம் எல்லாம். ஏற்பாட்டுக்கு முன்மொழிந்தவர் சின்ன ஐயா, வழிமொழிந்தவர்களும் நடத்திவைத்தவர்களும் உள்ளுர் கட்சி (ஜாதி)ப் பிரமுகர்கள்.

  புகைப்பட உதவி பா.ம.க. அதிகாரபூர்வ வலைத்தளம். ஒருவேளை இந்தப் பின்னூட்டத்திற்குப்பின் புகைப்படம் நீக்கப்பட்டாலும் நீக்கப்படலாம். எனவே பார்க்கவிரும்புபவர்கள் உடன் சென்று பார்த்துக்கொள்ளவும். பின்னர் பொய்யாக இங்கு பின்னூட்டமிடப்பட்டது என்று குறைகூறக்கூடாது.
  http://www.pmk4change.org/gallery/

  மற்றபடி படித்தவர் (இவர் கல்விச்சான்றிதழில் சாதிப் பெயர் இல்லை என்று உறுதிபடக் கூற இயலுமா), இளைஞர் (முதிய மருத்துவர் ஜாதியை ஒப்புக்கொள்கிறாரா?) என்பதெல்லாம் ஜாதிக்குமுன்-அதுதரும் வரவுக்கு(பணம், புகழ், அதிகாரம்)முன் சும்மா.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   பாமக வலைத்தளத்திற்கு அநியாயத்திற்கு விளம்பரம் கொடுத்து விட்டீர்களே..!
   இரவு 11 மணிக்கு இதை எழுதுகிறேன்.
   இதுவரை 49 பேர் இந்த வலைத்தளத்திலிருந்து அந்த வலைத்தளத்திற்கு
   சுட்டி இருக்கிறார்கள்…..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • todayandme சொல்கிறார்:

    மன்னிக்கவும் ஐயா. புகைப்படமாகவே இணைத்துவிடலாம் என்று பார்த்தேன். முடியவில்லை. பின்னூட்டத்தில் இணைக்கமுடியுமா என்று கற்றுக்கொண்டிருக்கிறேன். அடுத்தமுறை புகைப்பட இணைப்புத்தேவையின்போது சரிசெய்துவிடுவேன் என நினைக்கிறேன்.

    நன்றி.

 5. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  todayandme இந்த அன்பருடைய கருத்தை 100 சதவிகிதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகும்.
  அதை அப்படியே வழிமொழிகிறேன்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

 6. Sanmath சொல்கிறார்:

  In India there is no politics without caste and religion………Consolidating those in one side matters a lot………..Only in rare scenario something could happen…….those are just exceptions which cannot become examples……..In TN caste plays a major role is electing people compared to North……..

  Only Christians and Muslims follow religion pattern in TN in voting and Hindus do not follow and thats why BJP is not able to make its foothold in TN……..I have personally witnessed in south TN, church priests speaking against a party because of alliance…….This has made Joel to lose in Tuticorin……..

  In few years a new entrant has also come named “money for vote”……..JDMK distributed enormous money in the range Rs200 to Rs300 in many constituencies where they believe money could have its effect…….. But even then 37/39 is something that JJ might not have expected……..

 7. Gopalasamy சொல்கிறார்:

  chinna iyya should say thanks to ilavarasan-divya! chinna iyya got help from vijaya kanth but in turn they did not help him.If chinna iyya contested in south, he could not get his deposit also.
  what MR. todayandme told is absolutely correct.

 8. saamaaniyan சொல்கிறார்:

  ஒரு நாளைக்கு ஒரு வீடு என தங்கி ” ஓட்டு தர்மம் ” கேட்டார் அப்பா ! பகையாளியே என்றாலும் ” பங்காளி ” வீடு தேடிவந்துவிட்டால் பழையதை மறந்து உதவுவது தமிழக ஜாதீய தர்மம் !

  புரிந்திருக்கும் என நம்புகிறேன் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.