தேர்தல் கமிஷனர் குரேஷியை மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி யார் தெரிகிறதா ….!!!

தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்றுள்ள
எஸ்.ஒய்.குரேஷி தன் பணிக்காலத்தில் நிகழ்ந்த சில சுவையான
சம்பவங்களைப் பற்றி அண்மையில் வெளியிடப்பட்ட அவரது
‘AN UNDOCUMENTED WONDER’ என்று தலைப்பிடப்பட்டுள்ள புத்தகத்தில்
எழுதியுள்ளார்.

book cover - quereshi

கடந்த மாதம் பெங்களூரில் இதன் வெளியீட்டு விழா நடந்தது.
அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளின் ஆதரவோடு,
மூத்த அரசு அதிகாரிகள் சிலர் கூட தன்னை பயமுறுத்திப்
பணிய வைக்க முயற்சித்திருக்கின்றனர் என்று கூறுகிறார்.

முழு புத்தகத்தையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும்
கிடைக்கவில்லை. சில விஷயங்கள் சுருக்கமாகப் படிக்க கிடைத்தன.

தமிழகத்தைச் சேர்ந்த டாப் போலீஸ் அதிகாரி ஒருவரைப் பற்றி
அவர் கூறி இருக்கும் விவரங்களைப் பாருங்கள் –
(குரேஷி – சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடவில்லை….!!)

——————————————

2011 தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் உளவுத்துறை
கூடுதல் டிஜிபி யாக இருந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரி,
பல விஷயங்களில் தலையிட்டு, அரசியல் விஷயங்களில் நுழைந்து,
அரசு அதிகாரிகளை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தார். அவரது
அரசியல் செல்வாக்கால் போலீஸ் அதிகாரிகள் மீது கட்டுப்பாடு
இருந்தது. இது அப்போதைய ஆளும்கட்சிக்கு உதவியாக இருந்தது.

இந்த தகவல் தேர்தல் கமிஷனுக்கு தெரிய வந்தது.
தேர்தல் சமயங்களில், நடுநில தவறி செயல்படும் அதிகாரிகளை
உடனடியாக இடமாற்றம் செய்வது தேர்தல் கமிஷனின் வழக்கம்.
இதனால், அவரை இடமாற்றம் செய்யத் தீர்மானித்தோம்.
சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தோம்.
முடிவில், மேற்கு வங்க தேர்தலுக்கு பார்வையாளராகப் போகும்படி
பணித்தோம்.

உடனே அவர், தமிழகத்தைத் தாக்கி தேர்தலை சீர்குலைக்க
எல்.டி.டி.ஈ. இயக்கம் திட்டமிட்டிருக்கிறது. அதோடு, தேசீயத் தலைவர்கள்   மூன்று பேரை கொலை செய்யவும் விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்திருக்கிறது.
எனவே, இந்த சமயத்தில், தான் தமிழகத்தை விட்டு வெளியேறினால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்று சொல்லி எங்களிடையே குழப்பத்தை
உண்டு பண்ணினார்..

அவர் மாற்றல் குறித்து முடிவெடுக்க முடியாதபடி தேர்தல் கமிஷனுக்கு
நெருக்கடியை ஏற்படுத்தினார். இறுதியில், தேர்தலில் ஏதேனும்
பிரச்சினைகள் ஏற்பட்டால் உங்களைத்தான் சந்தேகிப்போம் என்று
சொன்னேன். கடைசியில் அவரே லீவு எடுத்துக்கொண்டு மலேசியா
சென்று விட்டார்.

அதன் பிறகு, மத்திய உள்துறைச் செயலாளரை அழைத்து விசாரித்தபோது,  எல்.டி.டி.ஈ. மிரட்டல்கள் எல்லாம் பொய். விடுதலைப்புலிகளைப்பற்றி
அவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்றார்.

அதன் பிறகு, 3 பேர் லிஸ்டில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து.
தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபி யாக போஸ்டிங் கொடுத்தோம்.

————————————–

இது ஓரளவிற்கு ஏற்கெனவே சிலருக்குத் தெரிந்த விஷயம் தான்.
பலருக்கு மறந்து விட்டிருக்கலாம். தற்போது அந்த அதிகாரி
தற்காலிகப் பணிநீக்கம் (ஸஸ்பெண்ட்) செய்யப்பட்டு, அவர் மீது
வேறு ஒரு லஞ்ச ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அந்த உயர் போலீஸ் அதிகாரி
யார் என்று தெரிகிறதா …?

இந்த புகைப்படத்தைப் பார்த்தால் புரியலாம் ……!!!

karunanithi and jaffer sait

பின் குறிப்பு –
இது குறித்து இன்னொரு பதிவு போடக்கூடிய அளவு வேறு சில
விவகாரங்கள் இருக்கின்றன. சமயம் வரட்டும் -செய்யலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தேர்தல் கமிஷனர் குரேஷியை மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி யார் தெரிகிறதா ….!!!

 1. kinarruthavalai சொல்கிறார்:

  அய்யா கா. மை. ennai மன்னிக்க வேண்டும். உங்கள் பதிவை காண்பதற்கு முன் இரண்டு இஸ்லாமிய நண்பர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்ததின் விளைவே உடனடியாக இப்படி எழுத தோன்றியது. இதை நான் இங்கே பதிந்திருக்க கூடாதுதான். ஆனாலும் உண்மை உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா? உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் தயவு செய்து இந்தக் கருத்தை எடுத்துவிடுங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,
   (உங்களை கிணற்றுத்தவளை என்று அழைக்க எனக்கு விருப்பமில்லை..)

   மன்னிக்கவும். உங்களது இன்னொரு பின்னூட்டத்தை எடுத்து விட்டேன்.

   நரேந்திர மோடி முதல் இரண்டு வருடங்கள்
   இத்தகைய விமரிசனங்களை
   எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கும்.

   முன்னோர் செய்த பாவம் பின்னால் வருபவர்கள் மேல் விடிவதில்லையா…?
   அதைப் போல், இது 60 வருடங்கள் ஆண்ட செகுலர் காங்கிரஸ் கட்சி
   ஏற்படுத்திக் கொடுத்து விட்டுப் போயிருக்கும் பின்னணி. அவர்களைத் தவிர
   வேறு யார் அதிகாரத்திற்கு வந்தாலும் சிறுபான்மையினருக்கு ஆபத்து
   என்கிற மிகத்தீவிரமான உணர்வை ஏற்படுத்தி விட்டுப் போயிருக்கிறார்கள்.
   இந்த உணர்வு நீங்குவதற்கு சில காலம் பிடிக்கும்.

   இரண்டு வருடங்களில் – இஸ்லாமியர்களும்
   விரும்பும் வண்ணம் மோடியின் ஆட்சி – அமைய வேண்டும்
   என்று ஆசைப்படுவோம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. M Nithil சொல்கிறார்:

  The SAVUKKU blog had written so many articles about this officer. MK had lot of confidence on this guy and ultimately he was thrown out from his position and sent to oversee some ‘refugee camp’ by JJ. But this is not enough for him. He deserves more than this.

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //இது குறித்து இன்னொரு பதிவு போடக்கூடிய அளவு வேறு சில
  விவகாரங்கள் இருக்கின்றன. சமயம் வரட்டும் -செய்யலாம்.//
  ரொம்ப லேட் பண்ணிவிடாதீர்கள் காவிரி ஐயா. மிக விரைவில் பதிவிட்டு மேலும் உண்மைகளை போட்டுடையுங்கள்.

  கிணற்றுத்தவளை அண்ணே! (பாய் என்றால் கோச்சிப்பீங்களோ?)
  பதிவு முன்னாள் தேர்த்தல் ஆணையர் குரேஷி (இவரும் இஸ்லாமியர்தான்)-யை பற்றியது. அதில் ஒரு தருதலை அவரை குழப்பி வெற்றிபெற முயன்றுள்ளான். ஆனாலும் அது கடைசியில் அவனால் முடியவில்லை என்பது ஊரறிந்த உண்மை. அதற்காக, அவன் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களை, நாடு கடத்த சொல்வது ரொம்ப ஓவரண்ணே!

  • kinarruthavalai சொல்கிறார்:

   சைதை அஜீஸ் அண்ணே! இதுதான் இங்கே பிரச்னையே. எனது எழுத்தை நன்றாக கவனியுங்கள். நான் எல்லா இஸ்லாமிய நண்பர்களையும் அப்படி குறிப்பிடவில்லை. மேலும், யாரையும் நாடு கடத்தவும் சொல்லவில்லை. இங்கே ஒரு கட்சி ஆட்சியை ஏற்கும்முன்னே கருத்துக் கூற வேண்டாம் என்பதுதான் எனது எண்ணம். ஒருவரை நாம் பார்க்கும் முன் எப்படி அவரை பற்றி கற்பனை செய்து வைத்திருக்கிறோமோ அப்படித்தான் நாம் அவரை பார்ப்போம். ஒருவேளை அவரை தவறானவராக நினைத்திருந்தால் அவர் நல்லவராகவே இருந்தாலும் நாம் நமது எண்ண்த்தை மாற்றிக் கொள்ளமாட்டோம். இது நம் எல்லோருக்கும் இருக்கும் ஈகோ. என்னை இவ்வளவு எழுத தூண்டிய அண்ணனுக்கு ஜே. நன்றி.

 4. Gopalasamy சொல்கிறார்:

  It is a hard truth that most of the moslems are always in denial mode. When 26/11 happened, i got so many e mails from that friends, stating that it was BJP’s act. One time sri A.N sivaraman also quoted, there was no letters to Editor,condemning Bombay blasts from them. Savukku published so many articles about Janab, Jaber. But i did not see any letters from them condemning him. It is high time, that people should not see every incident through the glasses of religion..

 5. Ganpat சொல்கிறார்:

  நண்பர்களே,
  இந்த மதம் சார்ந்த பாரபட்சம் ஆங்கிலேய ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சி.இதை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சி 1969ஆண்டு உடைய, இன்னொரு கபடரான இந்திரா காந்தி இதை தூசு தட்டி செகுலர் என்று பெயரிட்டு பரப்ப தொடங்கினார்.அதை இங்கு கருணா போன்ற உத்தமர்களும் செவ்வனே தொடர்ந்தனர்.
  இனியாவது நாம் மக்களை குற்றவாளி நிரபராதி என்ற பிரிவுடன் நிறுத்திக்கொண்டு அவர்களின் மதம் குலம் கோத்திரம் பாராமல் களை எடுத்து நாட்டை காப்போம்.
  நன்றி.

  • காசிம் சொல்கிறார்:

   மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பர் கண்பத் அவர்களே.
   அநியாய காரர்களையும் சமுதாய விரோதிகளையும் ஒதுக்கி தள்ள, அவர்களின் சாதி மதம் பார்க்காது அனைவரும் முன் வர வேண்டும்

 6. SENTHILKUMAR சொல்கிறார்:

  Already his paint removed by savkku

 7. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  ஐயா ஜாபர் ஷெரிப் பத்தி எழுத இன்னொரு பதிவு மட்டுமே போதாது.அது நீண்ட நெடுங்கதையாச்சே…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.