‘ராஜபக்சே வெப்சைட்’ சொல்கிறது – மோடியுடன் பேசியதென்ன என்பதை….!!

 

தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு பல முறைகள்
வந்தபோதும், விவரமாக
எடுத்துச் சொல்லப்பட்டது -பிரச்சினை என்னவென்று.

பின்னர், ராஜபக்சேக்கு அழைப்பு அனுப்பப்படுவதாக
செய்தி வெளியானதும் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு
கிளம்பியதும் தெரியும்.

சந்திப்புக்கு முதல் நாள் வைகோ 35 நிமிடம் நேரில்
சந்தித்துப்பேசி,2 சி.டி.க்களைக் கொடுத்து, தமிழர்களுக்கு
செய்யப்பட்ட துரோகத்தையும், தொடர்ந்து தமிழக
மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் உணர்வு பூர்வமாக
விளக்கினார். இதுவரை 598 தமிழக மீனவர்கள்
இலங்கைப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதும்
அதிகாரபூர்வ செய்திகளின் மூலம் விளக்கப்பட்டது.

ஐக்கியநாடுகள் சபை பொது விசாரணை நடத்தச்
சொல்லி இருப்பது தெரியும். இலங்கையிலிருக்கும்
பாகிஸ்தான் தூதரகம் மூலம் தீவிரவாதிகள் தயார்
செய்யப்பட்டு இங்கு அனுப்பப்படுவதும் தெரியும்.

செவிடர் காதில் ஊதிய சங்கு என்பதா …
எருமை மாட்டின் மீது பெய்த எண்ணை மழை என்பதா …
வறட்டுப் பிடிவாதம் என்பதா …தெரியவில்லை…!

அத்தனையும் waste – criminal waste.

தமிழகத்தின் உணர்வுபூர்வமான எதிர்ப்பை யாரும்
கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.(தமிழகத்திலிருந்து
இரண்டே எம்.பி.க்கள் – அதில் ஒருவருக்கு மந்திரி பதவி
கொடுக்கப்பட்டாகி விட்டது. அடுத்தவர்
waiting list-ல் இருக்கிறார். எனவே அவர்கள்
வாய் முழுமையாக கொழுக்கட்டை வைத்து அடைக்கப்பட்டு
விட்டது.)

கொலக்காரனுக்கு சிவப்புக் கம்பளம்
விரிக்கப்பட்டது. ஆளில்லாத இடங்களிலும் கூட கை
அசைத்துக்கொண்டே போனான். விசேஷ விருந்தாக,
செட்டிநாட்டு பிரியாணி சாப்பிட்டான்…போட்டோவுக்கு
போஸ் கொடுத்து விட்டுப் போயே போய் விட்டான்…

பாகிஸ்தான் பிரதமருடன் பேசியது பற்றி விஸ்தாரமாக
செய்தி வெளியிடப்பட்டது. தொலைக்காட்சிகளிலும்
மணிக்கணக்கில் விவாதிக்கப்பட்டது.(அடுத்து சில
மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களுக்கு
உதவுமல்லவா ..?)

ராஜபக்சேயுடன் பேசியது என்ன என்பதைப்பற்றி,
அதிகாரிகள் மட்டத்தில் செய்தியாளர் கூட்டத்தில்
பெரிய மனதுடன் தாராளமாக நேரம் ஒதுக்கி – ஒன்றரை
நிமிடங்கள் விவரிக்கப்பட்டது.

—————
இலங்கை அதிமேதகு சனாதிபதியின்
பிரத்தியேக வலைத்தளத்தில் வந்திருக்கும்
செய்தி கீழே –

President_top_bannerPresident Rajapaksa and Prime Minister
Modi meet in New Delhi
Tuesday, May 27, 2014 – 9.41 GMT

President Mahinda Rajapaksa and new
Indian Prime Minister Narendra Modi met
for bilateral talks this morning at the
Hyderabad House in New Delhi, India,
where the President was warmly welcomed
by the Prime Minister.

n.m and rajapakse

The two leaders had an in-depth
discussion of issues of mutual concern.
President Rajapaksa described the
initiatives Sri Lanka has taken with
regard to rehabilitation, resettlement,
reconstruction and the ongoing
reconciliation process in the country.

President Rajapaksa and Prime Minister
Modi also discussed the issue of
fishermen of both countries and measures
that can be taken to find a permanent
solution through a process in which the
views of fishermen from both countries
can be taken into consideration. Both
agreed that talks between the fishermen
and the meeting of the joint committee of
officials must continue.

———————–

பேச்சு வார்த்தையில், வைகோ எடுத்துக்கூறிய
செய்திகள் விவாதிக்கப்படவில்லை. இலங்கைத்
தமிழர்களை விடுங்கள். இந்தியத் தமிழர்கள்
துன்புறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கூட
வலியுறுத்தப்படவில்லை. மீனவர்களைச் சுட்டால்
கடும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட
சொல்லப்படவில்லை. (பாகிஸ்தான் கூட இந்திய
மீனவர்களை சுடுவதில்லை – துன்புறுத்துவதில்லை.
கைது செய்கிறார்கள். அடுத்த சந்திப்பில் இரண்டு
தரப்பிலுமிருந்தும் மீனவ கைதிகளை பரிமாறிக்
கொள்கிறார்கள்.)

மீனவர் பிரச்சினை என்பது இரண்டு நாடுகளுக்கும்
பொதுவான வாழ்வாதார பிரச்சினை. எனவே இரு
தரப்பிலிருந்தும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவிற்கு
வரவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு விட்டது….

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் – அதே அதிகாரிகள்..
அதே சலித்துப்போன விளக்கங்கள்.

மன்மோகன் சிங் ஆண்டாலென்ன …
நரேந்திர தாமோதர்தாஸ் மோதி ஆண்டாலென்ன …

அவர்களைப் பொறுத்த வரை தமிழகம் வெறெந்த
நாட்டிலோ இருப்பதாகத்தான் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள் ….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to ‘ராஜபக்சே வெப்சைட்’ சொல்கிறது – மோடியுடன் பேசியதென்ன என்பதை….!!

 1. Srini சொல்கிறார்:

  Dear Sir,

  I think we need to give time to the new govt. just one day got over and the expectations are totally on the higher end

  regards
  Srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Srini,

   I have given a detailed explanation.
   Hope you understand my stand.

   with best wishes,
   Kavirimainthan

 2. Aakuvan சொல்கிறார்:

  Dear Sir, can you give a constructive approach as how you would like this ( situation ) to be handled? Think from a neutral perspective and share. This is the right way to debate or help our Tamil brotherhood. Ranting issues and creating sensationalism will not help the cause. All people are playing the political game here. A visit to the refugee camp and the status of people living there will expose them all. Issue of fishermen is on both sides. You mean to say that we ( India) have not captured or killed Srilankan fishermen? How would you justify ? Please read what the union leader(fishermen union) had said about this. If you want India to declare war, capture Rajapakse and hang him through Intl court…it will not happen. Our priority ( in that order) should be to ensure Tamilians in Srilanka are rehabiliated and provided equal status/freedom, take care of refugees and relocate them, work for development with Govt in NE region directly with SL govt, resolve fishermen issue amicably – all by involving all key stakeholders ( which includes SL Govt, State Govt in SL, GOI, TN Representatives).

 3. bandhu சொல்கிறார்:

  சார்.. உண்மையிலேயே வைகோ சொன்னதைப் பற்றி பேசி இருந்தாலும், அதை வெளிப்படையாக நம் அரசு சொல்வது யாருக்குப் பலன் தரும்? இந்த விதத்தில் பொலிடிகல் மைலேஜ் எதுவும் எடுக்க வேண்டிய அவசியம் இதுவரை பி ஜே பி க்கு இல்லை. ராஜ பக்ஷே இதைப்பற்றி விவாதித்தோம் என்று கண்டிப்பாக சொல்ல மாட்டார். நல்லதையே நினைப்போம்.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  காமை சார், இதெல்லாம் “வரும் ஆனா வராது” தான்.தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போவதில்லை. அடுத்த தேர்தலிலும் “கடல் தாமரை” போராட்டம் தொடரும், தமிழன் ரொம்ப நல்லவன், சார்.

 5. karuthaan சொல்கிறார்:

  அய்யா !தங்களது தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஓரிரு முறை பின்னூட்டம் இட்டுள்ளேன் தேர்தலுக்கு முன்பு தமிழர்கள் பிரச்னை களுக்கு கோங்க்றேசே காரணம் அதற்க்கு பா ஜ க தீர்வு என்பது போன்ற சார்புடன் எழுதினீர்கள் ஆனால் தற்பொழுது பா ஜ க துரோகம் செய்வது போல் எழுதுகிறீர்கள் இதற்கு வரும் பின்னூட்டங்களும் உங்களை பொறுத்திருக்கும் படி சொல்கின்றன ………. நிற்க பா ஜ க வின் தலைமை எப்போது தமிழர்களுக்கு ஆதரவாக நின்றது அல்லது தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் உடன் முரண்பட்டு கொண்டது அல்லது கருத்து வேறுபாடு கொண்டது இந்திய தேசியம் பேசும் கட்சிகள் எல்லாம் (சி பி அய்) (சி பி எம் )உட்பட தமிழர்களுக்கு துரோகம் செய்தே வந்துள்ளன …………..ராஜபக்சே அழைக்காமலா வந்தார் அதைகூட வை கோ தான் நடத்திய ஆர்பட்டதிலோ பேச்சிலோ ப ஜ க வை விமர்சிக்கவோ அல்லது முழக்கமிடவோஇல்லை…… தங்களது தற்போதைய பதிவுகளும் அதற்க்கு வரும் பின்னூட்டங்களும் பா ஜ க வின் நிலையையும் அது பற்றிய தமிழ் மக்களின் நிலையை நீர்த்து போக செய்வதாக உள்ளது பரிசீலியுங்கள் ஏன் என்றால் தமிழ் மக்களுக்கு இதற்க்கு மேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களுக்கு,

   சிலர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்
   என்பது அவர்களது பின்னூட்டங்களின் மூலம் தெரிய
   வருகிறது. அநேகமாக இவர்கள் பாஜகவின் அனுதாபிகள்
   என்றும் புரிகிறது.

   நான் ஏற்கெனவே பலமுறை இந்த வலைத்தளத்தில்
   தெளிவு படுத்தி விட்டேன். நான் எந்த கட்சியைச்
   சேர்ந்தவனும் அல்ல.எந்த கட்சியின் அனுதாபியும் அல்ல.

   அதே போல், பாஜகவுக்கோ, நரேந்திர மோடிக்கோ எதிரானவனும் அல்ல.
   நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டபோது இதே
   வலைத்தளத்தில் வரவேற்று வாழ்த்துக் கூறி இருந்தேனே.

   நான் எழுதும் ஒவ்வொரு இடுகையும், அந்த குறிப்பிட்ட
   விஷயத்தைக் குறித்தது மட்டும் தான்.
   என் மனதிற்கு சரி என்று தோன்றுவதை ஏற்றுக்கொள்கிறேன். தவறு என்று சொல்வதை கண்டித்து
   எழுதுகிறேன். என் நிலை, என் கருத்து தவறு என்று
   சிலருக்குத் தோன்றலாம். அது இயற்கை. ஆனால், என்னைப் பொருத்த வரை என் மனசாட்சி சொல்வதைத்தான் நான் செய்கிறேன். என் கருத்தை ஏற்காதவர்களை
   நான் எந்தவிதத்திலும் குறை காணவில்லை – அது
   அவர்கள் நிலை…அவ்வளவே.

   பாஜகவை ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
   அதே போல் எதிர்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை.

   நாளையோ, மறுநாளோ மோடி அவர்களைப் பாராட்டியும்
   நான் எழுதக்கூடிய சந்தர்ப்பம் வரும். அப்போது
   தயங்காமல் பாராட்டியும் எழுதுவேன். எனவே இதை
   யாருக்கும் எதிராக என்று எடுத்துக் கொள்ளாமல்,
   குறிப்பிட்ட நிகழ்வுக்காக என்று தான் எடுத்துக்கொள்ள
   வேண்டும்.

   இலங்கைத் தமிழர்களுக்கு, திருமதி சோனியா
   காந்தி அவர்களின் தனிப்பட்ட விரோதம் காரணமாக
   மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு மூலமாக
   பெருத்த துரோகமும், கொடுமையும் இழைக்கப்பட்டது.
   அவர்களுக்கு ஏற்பட்டது ஈடு செய்ய முடியாத இழப்பு.
   ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தனர். லட்சக்கணக்கானவர்கள் வீடிழந்தனர். பிழைப்பு இழந்தனர்.
   கணவர்களை, மனைவிகளை, குழந்தைகளை
   இழந்தனர். சொல்லொணாத்துயர்களுக்கு உள்ளாகினர்.

   இனியாவது அவர்கள் நிம்மதியாகவும், கௌரவமாகவும்,
   சுதந்திரமாகவும் வாழ வேண்டும்.
   ராஜபக்சே ஒரு கொலைகாரன். அவன் ஆட்சியில்
   தமிழர்களுக்கு நிம்மதியோ, நியாயமோ கிடைக்காது.

   ஐ.நா.சபையில் ஏற்கெனவே பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை நடத்துவது குறித்து
   தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

   இந்த விசாரணை உருப்படியாக நடைபெற
   இந்திய அரசு துணை புரிய வேண்டும். வடக்கே மக்களால்
   தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாக செயல்பட,
   அதற்கு உண்மையான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

   இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும் என்றும்
   ராஜபக்சேயை இந்திய அரசு கைது செய்ய வேண்டும்
   என்றும் விரும்புகிறீர்களா என்று ஒரு நண்பர் தனது
   பின்னூட்டத்தில் வினவியுள்ளார். செய்தியை ஊன்றிப்
   படிக்காமல், வரலாற்றுப் பின்னணியை அறியாமல் கேட்கப்படும் கேள்வி இது.

   இந்திய அரசு எது நியாயம் என்று பாரபட்சமின்றி யோசித்து,
   நியாயத்திற்கு துணை நின்றால் போதும். மற்றவை
   எது நடக்கவேண்டுமோ அது தானாகவே நடக்கும்.
   இலங்கை விஷயத்தில், காங்கிரஸ் அரசு பின்பற்றிய
   அதே கொள்கையை பாஜக அரசும் பின்பற்ற வேண்டிய
   அவசியம் ஏதும் இல்லை.

   இந்த குறிப்பிட்ட இடுகைக்கான காரணம் –
   ராஜபக்சேவை இந்திய அரசு பதவியேற்பு விழாவிற்கு அழைத்தது ஒரு தவறான முடிவு என்பதை வலியுறுத்தவே.

   நான் எதிர்பார்ப்பது, இனியாவது பாஜக அரசு –
   இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் அரசு சென்ற
   அதே வழியில் செல்லாமல், நியாயத்தின் பக்கம்
   நிற்க வேண்டும். பாரதத்தின் இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையில் தேவையான மாற்றங்களை
   மேற்கொள்ள வேண்டும்.

   கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யத் தேவையான
   சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
   இதற்கு பன்னாட்டு சட்டங்களில் வழி இருக்கிறது.

   இது இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக மட்டுமின்றி,
   தமிழக மீனவர்களின் நலன்களுக்காகவும்,
   இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காகவும் அவசியமான
   ஒன்று.

   கூடுமான வரை எனக்கான நியாயங்களை, காரணங்களை –
   விளக்கி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

   இதன் மீதும் உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள
   விரும்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. ரிஷி சொல்கிறார்:

  அரசியல்வாதிகளிடம் எல்லாத் தீர்வும் இருக்கிறது என்கிறீர்கள் நீங்கள் அனைவரும். அது மக்களிடமே இருக்கிறது என்கிறேன் நான் 🙂

  நம்மைப் போலவே மக்களும் தங்களுக்குள் அரசியல் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இது இப்படித்தான் இருக்கும் 🙂

 7. Ganpat சொல்கிறார்:

  பொறுமை பொறுமை..கா.மை.ஜி..முதலில் கூரை ஏறி கோழி பிடிக்கிறாரா என பார்ப்போம்..(காவிரி பிரச்சினை)பிறகு வானம் ஏறி வைகுண்டம் போவதை பற்றி சிந்திப்போம்.

 8. M.Sekhar சொல்கிறார்:

  pl see: http://lankawoods.blogspot.in/2014/05/blog-post_8228.html
  மகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி – இலங்கைத் தமிழர்களுக்காக கூறியவை என்ன? இதோ தகவல்கள்

  Wednesday, 28 May 2014

  இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது.

  * தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் படையினரை இயன்றளவு விரைவில் வெளியேற்றி, உடனடியாக அந்தப் பொறுப்புக்களை பொலிஸாரிடம் கையளிக்க வேண்டும்.

  * பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபையிடம் கையளிக்கும் பணிகளை உடன் ஆரம்பிக்கவேண்டும்.

  * ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். – இந்த நான்கு விடயங்களையுமே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, திட்டவட்டமாகவும் தெளிவாகவும், நேரடியாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷவிடம் எடுத்துக் கூறினார் என புதுடில்லி ராஜதந்திர வட்டாரங்கள் தகவல் தந்தன.

  நேற்று இந்தியப் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி நேரடிச் சந்திப்பு சுமார் 20 நிமிட நேரமே நீடித்தது. எனினும், எந்த இழுபறியுமின்றி எடுத்த எடுப்பிலேயே நேரடியாக விடயத்தைக் கையாளும் ஓர் இறுக்க நிலையே அந்த இருபது நிமிட நேரமும் நீடித்தது என நம்பகரமாக அறியவந்தது.

 9. M.Sekhar சொல்கிறார்:

  In the light of the blog-post reproduced above, may we expect Sri.Kaa.Mai. revise his post? ( I am a fan of his blog. Sad that in this one issue, our views are not converging. Perhaps, Ganpat is with me.)
  B.t.w., (i)we have to give some time to the new Government.
  (ii) The Tamils focus on Eelam, whereas the Govt of India has to consider Sri Lanka as a whole and not one of its parts focussedly.
  (iii) There must be some effort to understand holistically the SriLankan Tamils issue, coming out of Vaiko/Seeman/Nedumaran.
  (iv) I have independent views on Eelam/SriLanka/Tamils, nothing to do with N.Ram/Cho/Su.Swamy.
  I have problem in typing Tamil with the revised Indic Transliteration Website. Pardon me for the English comment.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Sekar,

   Thank you for your comments.

   Hope – You are convinced and
   happy with the latest article …!

   with all best wishes,
   Kavirimainthan

  • reader சொல்கிறார்:

   Mr. Sekhar,
   in order to Mr. K.M to revise the post, are you vouching for the authenticity for the aforementioned information?

   No, it is not my intention to rub you the wrong way. But, the point is, there could/will be many stories generated in media for public *consumption* where as fact will be far away from the news.

   Pls do not get carried away. This applies to Mr K.M as well.

   As I stated earlier, in my opinion, BJP can’t be very different from Congress based on their ideological inclination. However, if they really intend to exercise an assertive south Asian policy and keen on implementing it is something we all need to wait for sometime to make any comment,

   Until then, swaying this or that way is only going to muddle the water much more.

   • M.Sekhar சொல்கிறார்:

    Sir, I can not and shall not vouch for the lankawoods post: but at the same time, the Kaa.Mai. post relied totally on Rajapaksa blog post and taking it to be 100% correct. I was upset about that only; the degree of scepticism, almost a preclosed-mind on Modi was what made me feel bad.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Mr.Sekhar,

     If you regularly read all my articles, you will
     definitely understand that I am not at all against Mr.Modi….

     I do have my own views on some of the issues,
     and I express it openly on those specific issues – that’s all.
     Even if you see the latest article – you will realise it.

     Please see my “pin kurippu” in the latest article –
     ‘Modiyin style of functioning namakku oththu varumaa…?”

     with all best wishes,
     Kavirimainthan

     • M.Sekhar சொல்கிறார்:

      I am a regular reader/follower. You post the intense feelings of several of your followers. Hats off to you.
      I have not published comments like these for any post. No intent to hurt you, Sir. I am not a great Modi-lover either. Lankawoods post told the other (^180-degree) perception of the Modi-R’paksa meeting; hence, the comment. No more comments on this, please. Sorry again.

 10. ரிஷி சொல்கிறார்:

  எனக்கென்னவோ இந்த விஷயத்தைப் பின்னால் இருந்து அணுகுவது சரியாக இருக்குமோ எனத் தோன்றுகிறது.

  அதில் முதன்முதல் கேள்வி :

  இலங்கை ஏன் தமிழர்களை ஒழிக்க நினைக்க வேண்டும்?

  ஒவ்வொரு கேள்வியாக கேட்டுக்கொண்டே இருந்தோமானால் நமக்கே பதில் கிடைக்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரிஷி,

   நான் ஏன் வலைத்தளம் தொடர வேண்டும்
   என்கிற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க
   முயற்சி செய்யலாமா …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • reader சொல்கிறார்:

   How about a 5-why analysis?

  • reader சொல்கிறார்:

   Q1. இலங்கை ஏன் தமிழர்களை ஒழிக்க நினைக்க வேண்டும்?

   A1: வரலாற்று ரீதியான *தமிழ் அரசர்களுடனான போர் தொடர்பான* வெறுப்பு, புத்த மத வரலாறு குறித்த பெறுமிதம், 1930/40களில் இலங்கை அரசு பதவிகளில் ஈழ வெள்ளாளர்களின் ஆதிக்கம் பற்றிய சிங்களவர்களின் எண்ணம். அதை 1950களில் தூண்டி விட்ட சில சிங்கள அரசியல்வாதிகளின் தன்னல அரசியல்.

   மலையகத் தமிழர்கள் வேண்டாதவர்கள், 150 ஆண்டுகள் இலங்கையில் இருந்தாலும் அவர்கள் இந்தியர்கள் என்ற எண்ணம். முட்டாள்தனமாக லால்பகதூர் சாஸ்திரி அவர்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொள்ள ஏற்றுக் கொண்ட ஒப்பந்தம்.

   ஈழத்தமிழர் மற்றும் மலையகத் தமிழரிடையே தோன்றாத ஒற்றுமை.

   தமிழ் பேசும் முஸ்லீம்கள் தங்களை மதம் சார்ந்து தனி இனமாக அடையாளப் படுத்திக்கொண்டது.

 11. Gopalasamy சொல்கிறார்:

  I am sorry to say , that your stand on this issue does not reflect practical thinking.
  You did not tell, what to be done to solve the issue.
  Did you expect that within 30 minutes talk. all issues would be sorted out?
  Vaiko is approaching this emotionally and it appears you subscribe his theory.
  Can you give a clear picture of refugees in the camps?
  India also released srilankan fisherman on this context. But you did not tell anything about it.
  there should be a permanent mechanism to address the issues.
  Bypassing the elected leader, we can not achieve anything.

 12. reader சொல்கிறார்:

  என்ன காவிரிமைந்தன் சார்,

  பாஜக அபிமானிகளுக்கு உங்கள் கருத்து உவப்பானதாக இல்லை போல!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே, (ரீடர்..)

   சிலர் சிரிப்பார் -சிலர் அழுவார்…
   நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்….

   உங்களுக்கு இது திருப்தியா நணபரே…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 13. reader சொல்கிறார்:

  “டில்லியின் பா.ஜ.க.-வின் புதிய மத்திய அரசு பதவியேற்ற உடனேயே, நாட்டின் பாதுகாப்பு துறை தொடர்பான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது. முன்பு இழுபறி நிலையில் இருந்த சில ப்ரோசசிங்குகள், மின்னல் வேகத்தில் நடக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

  முக்கியமாக, இந்திய கடல் எல்லைகளை பாதுகாக்கும் நடைமுறைகள், மற்றும் இந்திய கடற்படை இந்திய கடல் எல்லையையும் கடந்து, இந்திய கடல் பகுதியில் (Indian Ocean Region – IOR) ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே, பா.ஜ.க. அரசின் பிரையோரிட்டி என்பது, தெரிகிறது.”

  Read more: http://viruvirupu.com/2014/05/29/70419

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரீடர்,

   நாம் – இவ்வளவு சீக்கிரம் தீவிரம் காட்டுவர்கள்
   என்று எதிர்பார்க்காத சில விஷயங்கள் பாஜக
   அதிகார மையத்தால் அணுகப்பட்டுள்ளன
   என்பது சிறிது வியப்பாகவே இருக்கிறது….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • reader சொல்கிறார்:

    கா.மை சார்,

    புலியின் வேகத்தில் ஓடுவது நன்றே.
    புலி வாலைப் பிடித்துக் கொண்டு ஓடினால்…, பிடி நழுவினால்… புலிக்கு இரை யாமே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.