மோடியின் style of functioning நமக்கு ஒத்து வருமா…?

 

first day of modi as pm

பிரதமர் நரேந்திர மோடியின் style of functioning,
அதாவது வேலை செய்யும் முறை குறித்து சில
விஷயங்களை சம்பந்தப்பட்ட இடங்களில் படித்துத் தெரிந்து
கொண்டேன். சில விஷயங்களை என் (வடோதராவில்
இருக்கும்) இரண்டு நண்பர்கள் மூலமும்,சில டெல்லி
நண்பர்கள் மூலமும் கேட்டு உறுதி செய்து கொண்டேன்.

முதலில், நான் தெரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன்.
பிறகு என்னுடைய அபிப்பிராயம்.

முதலாவது குஜராத் முதலமைச்சராக
அவர் பணியாற்றிய விதம் –

திறமையான, நேர்மையான அதிகாரிகளைத்
தேர்ந்தெடுத்து, அவர்களைத் தன் டீம்-ல் சேர்த்துக்
கொள்வார்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நிறைய
சுதந்திரம் கொடுப்பார்.
குறைந்தது 4-5 ஆண்டுகளுக்கு அவர்களை அந்த
இடத்திலிருந்து மாற்ற மாட்டார்.

தன் எதிர்பார்ப்பைச் சொல்லி, அதற்காக
திட்டங்களை(plan of estimates and
expenditure ) தயாரித்துக் கொடுக்கச் சொல்வார்.

அந்த திட்டத்தை நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம்
தேவை என்று கேட்டறிவார். ஒரு வருடம் என்று பதில்
வந்தால், சரி இதை 6 மாதங்களில் முடிக்க
வேண்டுமானால் உங்களுக்கு எத்தகைய கூடுதல் உதவி
தேவைப்படும் என்று கேட்பார். அந்த அதிகாரி கேட்கும்
உதவி பட்டியல் அப்படியே அனுமதிக்கப்படும்.

இல்லை 6 மாதங்களில் இதை முடிக்க முடியாது என்று
பதில் வந்தால், சரி நான் இந்த பொறுப்பிற்கு வேறு
ஆளைத் தேடிக்கொள்கிறேன்.
நீங்கள் எங்காவது உங்களுக்கு வசதியான இடத்திற்கு
டெபுடேஷனில் போகலாம் என்று சொல்லி விடுவார்.

ஒரு அதிகாரி, இதைச் சுலபமாக செய்து முடிக்க
வழி இருக்கிறது ஆனால் ஒரு வேளை
அது தோல்வியில் முடிந்தால், தணிக்கையாளர்கள்
வறுத்தெடுத்து விடுவார்கள், அரசின் பெயர் கெட்டு விடும்
என்று சொன்னால், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்
துணிந்து செய்யுங்கள் – விளைவுகளை நான் பார்த்துக்
கொள்கிறேன் என்பார்.

சாதாரண பொது மக்களாக இருந்தாலும் சரி,
தொழிலதிபர்களாகவோ, வர்த்தகர்களாகவோ
இருந்தாலும் சரி –
ஒருவர் எதாவது மனு கொடுத்தால், இரண்டாவது
முறையாக அவர்கள் அரசைதேடி வரக்கூடாது.
வேகமாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
கோப்புகள் தேங்கக்கூடாது. follow up குறிப்புகள்
சம்பந்தப்பட்டவருக்கு மொபைல் அல்லது ஈமெயில் மூலம்
உடனுக்குடன் தெரிவிக்கப்பட வேண்டும். தன் மனு
எந்த நிலையில் இருக்கிறது என்பது சம்பந்தப்பட்டவருக்கு
எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.

விதிகள் அனைவருக்கும் பொதுவானவை. யாருக்கும்
தனிப்பட விலக்கு அளிக்கப்படத் தேவையில்லை.
ஒருவேளை விலக்கு அளிக்கப்பட வேண்டிய அவசியம்
வந்தால், அது எல்லாருக்கும் பொருந்துவதாக இருக்க
வேண்டும் என்பது அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

அனைத்து தகவல் பரிமாற்றங்களும், மேலதிகாரிகள்
எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடிவதாக அப்டேட்
செய்யப்பட வேண்டும்.

வாய்மொழி உத்திரவுகளை யாரும் பிறப்பிக்கக்கூடாது.
அப்படி ஏதேனும் பிறப்பிக்கப்பட்டால், யாரும் அதை
ஏற்றுச் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.- இது
குஜராத்தில் அவர் செயல்பட்ட முறை.

அடுத்ததாக, அவர் டெல்லியில்
செய்ய உத்தேசித்திருப்பது –

பொறுப்பேற்ற கையோடு, மத்திய அரசின் அனைத்துத்
துறைகளின் செயலாளர்களையும் நேரில் சந்தித்துப் பேச
உள்ளார். வழக்கமாக புது அரசு அல்லது புது பிரதமர்
பொறுப்பேற்றவுடன், பிரதமர் அலுவலக செயலாளரும்,
மத்திய அமைச்சரவை செயலாளரும் தான் –
ஒவ்வொரு துறையைப் பற்றிய குறிப்புகளையும்
பிரதமருக்கு நேரில் சமர்ப்பிப்பார்கள்.

மோடி இந்த வழக்கத்தை மாற்றுகிறார்.
தான் அந்தந்த துறைகளின் செயலாளர்களிடம்
நேரிடையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்.

இந்த விஷயம் அமைச்சரவை செயலாளர் (cabinet
secretary ) மூலம் வாட்ஸ் அப்’பில்
போடப்பட்டிருக்கிறது. இதன் கூடவே
தெரிவிக்கப்பட்டிருக்கும் இன்னொரு விஷயம் தான்மிகவும்
வித்தியாசமானது.

பிரதமரை சந்திக்க வரும் செயலாளர்கள், தனது
உதவியாளர் யாரையும் கூட அழைத்து வரக்கூடாது.
அவரவர் துறையைப்பற்றி
அவரவரே பிரதமருக்கு விளக்க வேண்டும். பிரதமரின்
கேள்விகளுக்கும் அவர்களே பதில் தர வேண்டும்.

இந்த செய்தி வெளிவந்ததும், மத்திய அரசின் அனைத்து
துறைகளும் பரபரப்பாகி இருக்கின்றன.
துறைச்செயலாளர்கள் அத்தனை கோப்புகளையும்
மனப்பாடம் செய்யத் துவங்கி விட்டனர் – அனைத்து
துறைகளிலும் homework துவங்கி விட்டது என்று
தகவல் கிடைக்கிறது.

இனி எனது கருத்து –

சுமார் 40 ஆண்டுக்காலம் மத்திய அரசின் முக்கியமான
பிரிவு ஒன்றின், நிர்வாகத் துறையில் பணியாற்றக்கூடிய
வாய்ப்பும், அனுபவமும் எனக்கு கிடைத்திருந்தது.

அதிரடியாகச் செயல்படக்கூடிய, மிகவும் நேர்மையான
மூத்த அதிகாரிகள் சிலருடன் மிக நெருக்கமாகப் பணி
புரியும் சில சந்தர்ப்பங்களும் வாய்த்தன.

தலைமை நேர்மையாகவும், அக்கரையுடனும்,
வேகமாகவும் செயல்பட்டால் – அந்தத் தலைமையின்
கீழ் பணி புரியும் அத்தனை பேரும் (விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும் ), அதே வழியில்
பயணம் செய்ய நேரிடுகிறது என்பதை நான் பலமுறை
அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். மிக மந்தமாக
செயல்பட்ட பலரும் ஒரு மின் அதிர்ச்சி (shock
treatment ) கொடுத்தாற்போல் மாறிவிடுவதையும்
நான் பார்த்திருக்கிறேன்.

அரசு நிர்வாகத்தைப் பொருத்தவரை – நரேந்திர மோடி
அவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வந்திருப்பது
மிக நிச்சயமாகப் பெரிய மாறுதலையும்,
முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வரும்
என்று உறுதியாக நம்புகிறேன்.

லஞ்சமும், ஊழலும், சோம்பலும், ஆழ்ந்த உறக்கமும்
நிரம்பிக் கிடந்த மத்திய அரசின் நிர்வாகம் எழுந்து நிமிர்ந்து,
விரைந்து செயல்படத் துவங்கும் என்கிற நம்பிக்கை
பிறக்கிறது …இந்த நம்பிக்கை பலிக்க வேண்டும் என்று
உளமாற வேண்டுகிறேன்.

.
பின்குறிப்பு – எல்லாரும், எல்லா விஷயங்களிலும்
ஒரே கருத்தைக் கொண்டிருப்பதில்லை. அவரவர்
கருத்துக்குப் பின்னால், அதற்கென ஒரு நியாயமும்,
காரணமும் நிச்சயம் இருக்கும். சில நண்பர்கள்
என் கருத்தை ஏற்கவில்லையென்றால்,
அவர்களுக்குப் பிடித்தவர்களை நான் குறை காண்பதை
அவர்கள் விரும்பாதது அதற்கான காரணமாக இருக்கும்.
இதற்கு நான் என்ன செய்ய முடியும் …?
என் மனதில் சரி என்று தோன்றுவதைத்தானே
நான் எழுத முடியும் ?
.
அண்மைக் காலங்களில், என் அணுகுமுறையைப் பற்றி
கவலையோடு
பின்னூட்டங்களில் கருத்து தெரிவித்திருந்த
சில நண்பர்கள் – நான் எந்தவித பாரபட்சமும்
இன்றி என் மனம் சொல்வதைத்தான் எழுதுகிறேன்
என்பதை இப்போதாவது ஏற்பார்கள்
என்று நம்புகிறேன். நன்றி.

This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மோடியின் style of functioning நமக்கு ஒத்து வருமா…? க்கு 20 பதில்கள்

  1. Srini சொல்கிறார்:

    Dear Sir,
    your unbiased views on every topic is the only reason for the increase in your blog readers and people continuously visiting your site and exchanging views and ideas. GOD Bless you. May Good things happen for this country and we deserve also

    regards
    Srini

  2. சாமானியன் சொல்கிறார்:

    ” லஞ்சமும், ஊழலும், சோம்பலும், ஆழ்ந்த உறக்கமும்
    நிரம்பிக் கிடந்த… ”

    உண்மைதான் ! இந்த நிலை மாற வேண்டும் என தான் இந்திய மக்கள் மோடிக்கு பெரும்பாண்மை பலத்தினை அளித்துள்ளார்களே தவிர, மத விருப்பத்துக்காக அல்ல ! இதனை மட்டும் அவர் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் தேசம் முன்னேற்ற பாதையில் செல்லும் !

    உங்களின் பின்குறிப்புக்கு : மோடியின் நிர்வாக திறமையில் யாருக்கும் சந்தேகம் கிடையாது என்பதோடு அவருக்கு முன்னால் இயங்கவே இயங்காத அரசு இயந்திரத்தை அவர் கொஞ்சமேனும் நகர்த்தினாலும் அது நிச்சயம் பெரிதாகவே தெரியும் ! ( இருந்த இடத்திலிருந்து நகராத முயலைவிட மெல்ல நடக்கும் ஆமை ஜெயிக்கும்தானே ?! )

    பல‌ரும் மோடிக்கு பயந்தது மத கொள்கைகளில்தான் ! உண்மையோ அல்லது மாயையோ யான் அறியேன்… ஆனால் சிறுபான்மையினர் அவரை பயத்தோடு பார்க்கின்றனர் என்பதில் சந்தேகம் கிடையாது ! இந்த பயம் பொய் என்பதை அவ‌ரது செயல்பாடுகள் நிருபிக்குமானால், சுதந்திர இந்தியா கண்ட சிறந்த பிரதமர்களில் ஒருவராக மோடியும் திகழ்வார் என்பதில் ஐயம் இல்லை !

    எனது புதிய பதிவு : முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

  3. Ganpat சொல்கிறார்:

    நன்றி கா.மை.ஜி..
    இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம்..
    நானும் உங்களைப்போல எந்த கட்சி அனுதாபியும் இல்லை.இந்தியா இப்போ இருக்கும் நிலை பார்த்த அனுதாபி!இதை மாற்ற மோடியால் முடியும் என நம்புகிறவன்.ஆகவே தான் ஒரு ஆறு மாதமாவது காத்திருக்கலாம் என நினைக்கிறேன்.மேலும் அவர் உள்நாட்டு பிரச்சினைகளை அதாவது மாநிலங்களுக்கு இடையே ஆன பிரச்சினைகளை எப்படி அணுகுகிறார் என்றும் பார்க்க ஆவலாக உள்ளேன்.ஆனால் ஒன்று நிச்சயம் ..மோடி தோற்றால் நாமும் தோற்போம்..ஏனெனில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேறு எந்த நல்ல இல்லை.அதே சமயம் இப்பொழுது இருக்கும் Constitution & Penalcode மாறாமல் நாட்டை நல்வழிப்படுத்துதலும் கடினம் என்றே கருதுகிறேன்.
    JAIHIND

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி கண்பத்.

      நம் முன்னே இரண்டு choices இருந்தன.

      ஒன்று – சுரண்டல் கூட்டத்தின்
      அரைவேக்காட்டு பரம்பரை வாரிசு.
      இரண்டாவது – நிர்வாகத் திறமைமிக்க,
      நாட்டுப்பற்றுள்ள – சர்வாதிகாரி.

      எக்காரணம் கொண்டும் நாம் மீண்டும் அந்த
      ஊழல் பரம்பரையை அனுமதிப்பதற்கில்லை.

      இரண்டாவது சாய்ஸை விரும்பித்தான்
      ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
      நல்லது நடக்க வேண்டுவோம்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Mani Rajendran சொல்கிறார்:

        Dear KM,

        By the way of your thinking and writing, you have gathered an excellent group of people. I really admire you and respect the people in the blog for their attitude and the way they respond.

        As millions of people (both in and out of India), I have tremendous faith and confidence that Thiru. Modi, will perform (given the time), in both domestic as well as foreign affairs (including Sri Lanka). In the last few days from what I read, the way he handed over the CM post and left Gujarat, the way he formed the ministry, all these shows the quality of the person and the way of governance. Apart from all those, he seems to be a very simple person focused on being a good, honest Prime Minister – hence he will succeed. God bless India.

        Best regards,

        Mani Rajendran

      • Ganpat சொல்கிறார்:

        என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்..அறுபத்தேழு ஆண்டுகள் பொறுத்த நமக்கு ஒரு ஆறேழு மாசம் பொறுப்பது என்ன கஷ்டமா?பொறுத்திருப்போம்.

  4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //…என் மனம் சொல்வதைத்தான் எழுதுகிறேன்
    என்பதை இப்போதாவது ஏற்பார்கள்
    என்று நம்புகிறேன்…//
    ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஆம் அஜீஸ் – எதாவது ஒரு கட்சி சார்புள்ளவராக
      இருந்தால், மனம் சொல்வதை எல்லாம்
      எழுத முடியாது.

      சார்ந்துள்ள கட்சிக்கு ஆதரவாக மட்டும் தான்
      எழுத முடியும். எனவே தான் அந்த வார்த்தைகள்…

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. Gopalasamy சொல்கிறார்:

    A dynamic, well informed leader changes everything. This is what i observed in my forty years of experience in Power sector. As sri. Ganpath wrote, if Modi, fails, India will fail, as there is no alternative at present.We hope, Modi will deliver.

  6. D. Chandramouli சொல்கிறார்:

    Yes, Modi has begun well. In any case, at this juncture, any government could only be better than the one led by Congress. Better days are ahead. Let’s keep our fingers crossed.

  7. Sanmath சொல்கிறார்:

    Dear KM,
    It is not that easy to be unbiased. Good that you are going in the same line. Hats-off to you.

    I am bit worried about Modi depending too much on Officials. It is our bad time that many Mallu officials are in key positions. In fact one of Modi’s imp official is also a Mallu. I am doubtful how will these guys react when it is TN in picture. Lets hope the best.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Dear Sanmath,

      Thank you for your comments.
      This matter has already gone into Mr.Modi’s mind – it seems.
      However, many in the north do not understand that
      tamils are different from malayalees….
      They consider all as Madrasis only….

      with best wishes,
      Kavirimainthan

  8. shiva சொல்கிறார்:

    NIce article. few points to consider. Swaminathan A AIyer had written that one of the main reasons for Modi’s victory was the migrant labourer’s from Bihar & UP working in Gujarat. They conveyed the difference between Gujarat & these states to their friends & relatives in their home states, leading to massive victory for Modi.
    He had also written an article somee time back reg assessment of states on the ease of doing business. Of course Gujarat is no 1, followed by TN.

    He’s compared both – in case of TN it takes minimum 6 months that too after many meetings and greasing all concerned. In case of Gj, he had quoted the experience of a businessman from Maharashtra. The industrialist applied for the licence and a meeting was fixed with concerned officials within next 15 days. A day before the meeting he got a call from the concerned ministry of Gj, seeking certain details. In the meeting the next day, he was offered 3 sites within GJ, meeting his requirements and advising him to choose one and also gave other support to enable him to get the clearances within a month!

    Long back – after Modi’s 2007 win, Swaminthan had written an article reg achievements in agriculture in Gj ( I am enclosing that article). May be such things like check-dams and 24×7 power supply should be immediately implemented in other states, especially TN.

    PS: 1,Swaminathan is the brother of you know who – the loud-mouthed Mani Shankar AIyer.
    So you can be sure that he’s unbiased.
    2, Is there no way we can attach a file?
    Agriculture – the reason for Modi’s Success
    When Narendra Modi won the 2007 state election in Gujarat , the media focused on Hindu-Muslim issues. Some journalists highlighted rapid

    industrial development that had made Gujarat India ’s fastest-growing state. I mentioned Gujarat ’s successful port-led development.

    However, an excellent new study suggests that the secret of Modi’s success lay in agriculture, an area completely neglected by political analysts. Ashok Gulati, Tushaar Shah and Ganga Sreedhar have written an IFPRI paper, ‘Agricultural Performance in Gujarat Since 2000’, which highlights something few people know — that Gujarat’s agricultural performance is by far the best in India.

    Between 2000-01 and 2007-08 agricultural value added grew at a phenomenal 9.6% per year (despite a major drought in 2002). This is more than double India ’s agricultural growth rate, and much faster than Punjab ’s farm growth in the green revolution heyday. Indeed, 9.6% agricultural growth is among the fastest rates recorded anywhere in the world. That drives home the magnitude of Gujarat ’s performance.

    Since the bulk of Gujarat ’s population is still rural, this mega-boom in agriculture must have created millions of satisfied voters. Hence it must have played a major role in Modi’s victory. Yet I did not see a single media analyst mention it.

    Gujarat is drought prone, with 70% of its area classified as semi-arid and arid. Although journalists focus on the Sardar Sarovar Project, its canal network is hopelessly incomplete, and currently irrigates only 0.1 million hectares. No less than 82% of irrigation in the state comes from tubewells, which have depleted groundwater. By the mid-1990s, groundwater extraction exceeded natural recharge in 31 talukas, and 90% of the safe extraction yield in another 12 talukas.

    In the 1990s, the state along with grass-roots organisations embarked on decentralised water harvesting. This included the building of check dams, village tanks, and bori-bunds (built with gunny sacks stuffed with mud). During the 2007 election campaign, the Congress slogan was ‘chak de, chak de Gujarat ’. I heard Modi say at a rally that his reply was “check dam, check dam Gujarat .” I did not realise at the time how significant this really was.

    The IFPRI study says that 10,700 check dams were built up to 2000, and helped drought-proof 32,000 hectares. That sounds a lot. But subsequently, under Modi, Gujarat has built ten times as many check dams! He could well say ‘chak de, check dam’. These have played a big role in the agricultural growth of Saurashtra and Kutch (aided, it must be said, by bountiful monsoons in the last five years). Better water availability has also increased milk and livestock production.

    Gujarat has promoted drip irrigation, badly needed to conserve water in semi-arid districts. Like other states, Gujarat offers subsidies and loans, but it also fast-tracks and simplifies procedures. Farmers contribute 5% initially. Then a state-owned company provides 50% as subsidy, and arranges a bank loan for the balance of 45%. One lakh acres have been covered by drip irrigation so far. Like the Sardar Sarovar Project, drip irrigation’s total irrigation potential is far higher.

    Research shows that rural roads are the most important investment for agriculture. Gujarat has one of the best rural road networks in India , and 98.7% of villages are connected by pukka roads.

    Modi’s Jyotigram scheme for power has provided regular, high-quality electricity to villages, greatly helping farming. Jyotigram provides separate electric feeders for domestic use and pump-sets. This permits the state to supply round-the-clock domestic supply, while limiting agricultural supply to eight hours a day (which is continuous and of constant voltage).

    This has facilitated a switch to high-value crops like mango, banana and wheat, which need assured water. Constant voltage has protected farmers from damage to pump-sets earlier caused by fluctuating voltage. Continuous power for non-agricultural uses has spurred diversification into non-farm activities, vital for rural growth.
    The irrigated area has expanded at the rate of 4.4% per year. The fastest growth in crops has been in wheat, followed by cotton and fruits and vegetables.

    Private seed companies have brought in new technology for several crops, ranging from bajra to castor, but above all in Bt cotton. More than 20 Bt cotton varieties are now produced by 30 seed companies. In his election campaign, Modi waxed eloquent about Gujarat ’s success in cotton.

    He declared that Gujarat was now famous in China as the producer and exporter of Bt cotton, and he said this was a source of Gujarati pride. (Let me add that this is a great improvement on his earlier notion of Hindu pride, exemplified in his ‘gaurav yatra’ after Godhra).

    Gujarat has only 26% of India ’s cotton area, but 35.5% of its production, thanks to high yields.
    Rising world prices have also helped, and been buttressed by a huge jump in the minimum, support price for cotton.

    New institutional arrangements like contract farming have helped improve marketing. Gujarat ’s famous dairy co-operatives (everybody loves Amul) have provided a stable basis for milk and livestock development. But the private sector is emerging as an important player too. Corporates have entered agro-exports, agro-processing, organised food retail, and rural infrastructure development.

    Vimal Dairy and Vadilal Industries have entered the dairy sector. Agrocel has taken up organic farming of cotton and sesame seeds. Atreyas Agro and Godrej Agrovel plan contract cultivation of jatropha and palm oil respectively. Food retail chains like Food Bazaar, Reliance Fresh and Spencer have sprung up in Gujarat ’s cities, sourcing produce from farmers directly.

    The state has helped catalyse production, notably in water harvesting. It has worked with NGOs and companies to bring the best technology to farmers. Gujarat Agricultural University has been split into four separate universities, helping strengthen R&D.

    Can this be replicated in other states? Much of it can. Jyotigram looks least likely to be replicated because it abandons the free-but-unreliable rural power that politicians regard as vote-winners in most states. Many states also prefer large irrigation projects to small water-harvesting ones, since bigger projects translate into bigger kickbacks. Yet Modi’s electoral success points to a new way of winning rural votes. Others should sit up and take notice.

  9. shiva சொல்கிறார்:

    2 more points :

    1. As you have rightly pointed out – for a corrupt-free govt., top-down (ie clean leaders) is very important.
    2. Understand after he took over as CM of Gj, one of his secrateries brought Modi’s younger brother (who is a state govt employee) with him for discussions. Modi bluntly conveyed that such junior officers should not be brought for discussions with the CM.
    Talk of nepotism or absolute opposite of that!
    No wonder one of the first acts of the new govt was to advise ministers to shun engagiing their relatives as personal staff

  10. Gopalasamy சொல்கிறார்:

    Thanks Mr. Shiva. A detailed and valuable information. I also use to read Sri. Swaminathan’s article in TOI. But it is new information that he is brother of Mani. Again I am repeating Modi rebuilt Gujarath after earth quake. Nobody appreciated it. In TN, DMK and ADMK are concentrating about freebies only.

  11. Ramesh Babu சொல்கிறார்:

    Drinking water and sewarage system was part funded by ADB(Asian development bank) and a friend of mine was representing ADB. Mr Modi was chairing the meeting when the plans were discussed. It involved several pumping stations and my friend raised the issue and recommended for gravity system to save recurring expenses(pumping and other costs) and maintenance issues. Mr Modi immediately ordered for a review. During next meeting the sewarage system with gravity flow showed tunneling at some places at depths of over 10 metres. Mr Modi approved the system at higher tunneling cost added. Even minority area was cleared (after several rounds of meetings and explanations with the representatives of the concerned area) for laying the pipe line (all were given alternate place till the completion of the pipe line work and all returned to their original place with better facilities).

    Gujarat is the only state enforcing prohibition. Electricity is not free to farmers but subsidised and 365days/24hrs supply ensured to all.

    You need knowledgable, talented, competant and committed people at the helm of affairs.

    Government main role is formulation and enforcement of rules and regulations.

    Tax is a matter of concern for everyone. Government looks for more revenue and people yearn for low taxes. I remember reading that a king will be called cruel fellow if he imposes more than 1/7 portion of income as taxes.

  12. senthil kumar சொல்கிறார்:

    இதை கூறுவதற்கு மன்னிக்கவும்,

    இதே செய்தி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ளது,
    இங்கிருந்து அங்கா, அங்கிருந்து இங்கா….????

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே,

      இது செய்தி தானே..!
      இரண்டுக்குமே மூலம் வேறு.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.