இமயத்தின் அடிவாரத்தில் ….

சென்ற ஜூன் மாதம் நான் எழுதியிருந்த இடுகையின்
ஒரு பகுதி கீழே –

கங்கைக்கு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு தோற்றம் !
பளிங்கு போன்ற, சிலீரென்று உடம்பை உறைய வைக்கும்
வேகமாக ஓடும் நீர் – பத்ரிநாத்தில்.

அலெக்நந்தா, மந்தாகினி, பாகீரதி – அனைத்து
உபநதிகளின் நீரையும் ஏற்றுக்கொண்டு படு சீற்றத்துடன்
மலையிலிருந்து இறங்கி வேகமாக பாதாளத்தில் ஓடும்
கங்கையின் தோற்றம் ரிஷிகேஷில் –

அழகும், பிரமிப்பும், பயமும் ஒருசேர உருவாக்குவது.
நான் பலமுறை சென்று ரசித்த இடங்கள் இவை.
எத்தனை தடவை சென்றாலும் அலுக்காத
இடங்கள் !!

நான்கு-ஐந்து நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சிகளில்
துவங்கிய காட்சிகள் “இமயத்தின் சுனாமி” என்று
தலைப்பிடப்பட்டு இன்னும் தொடர்ந்து கொண்டே
இருக்கின்றன.

துவக்க நாட்களில், இவற்றில் ஒரு முக்கியமான,
அதிர்ச்சி தரும் காட்சியை கிட்டத்தட்ட அனைவருமே
பார்த்திருப்பீர்கள். ஆற்றின் குறுக்கே,
மிகப்பெரிய அளவிலான – சிவன் அமர்ந்து
தியானம் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற
தோற்றத்திலான – சிலை ஒன்று. அதன் மீது முட்டி
மோதிக்கொண்டு சிலையையே சாய்த்து விடுவது போல்
படு பயங்கரமான வேகத்தில் ஓடும் கங்கையாற்றின்
வெள்ளம். எந்த நேரத்தில் சிலை தள்ளிச் சாய்க்கப்பட்டு
விடுமோ என்கிற திகிலை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.

அதற்கு மேல் சிலைக்கு என்ன நிகழ்ந்தது
என்பதை எந்த தொலைக்காட்சியும் காட்டவில்லை.

இந்த சிலை அமைக்கப்பட்டிருந்த இடம் -ரிஷிகேஷ்.
பரமார்த் நிகேதன் என்கிற மிக பிரம்மாண்டமான
ஆசிரமம் ஒன்றின் சார்பில் அமைக்கப்பட்ட சிலை இது.
தினமும் மாலையில் இதன் அருகே “கங்கா ஆர்த்தி”
என்கிற – கங்கை ஆற்றிற்கு சூரிய அஸ்தமன சமயத்தில்
பாடல்களுடன் கூடிய – ஆரத்தி எடுக்கும் நிகழ்வு நடைபெறும்.

இந்த ஆசிரமத்தின் சார்பில் மிகச்சமீபத்தில் தான்
உலக அளவில், பல நாடுகளிலிருந்து – “யோகா”வில்
ஆர்வமுடைய பலர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான
“international Yoga Festival” நடைபெற்றது.
இதே சிவன் சிலை முன்பாக, விசேஷ மேடைகள்
அமைக்கப்பட்டு, பல யோகா, மற்றும் பாடல் நிகழ்ச்சிகள்
நடைபெற்றன. நம்ம ஊர் ட்ரம் “சிவமணி” கூட
ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

– அதே இடம் இன்று எப்படி இருக்கிறது ?
————–

அதைக்காண வேண்டும் என்கிற ஆவலுடன் தான் இன்று
ரிஷிகேஷ் வந்தேன்.
சிவன் குடியிருந்த இடம் – இன்று
வெற்றிடமாக இருக்கிறது. அந்த இடத்தின் கம்பீரம் அகன்று
விட்டது. ஏமாற்றமாக இருந்தாலும், பரமார்த்த நிகேதன் ஆசிரம
வாசிகளின் உற்சாகத்தைப் பார்த்தால், அதைவிட இன்னும்
சிறப்பாக இந்த இடம் உருப்பெரும் என்கிற நம்பிக்கை வருகிறது.

முதலில் சென்ற வருடம் இமயச்சுனாமிக்கு முன்னும் பின்னும்
சிவன் சிலை இருந்த இடம் பற்றிய படங்களும் –

பிறகு அதே இடத்தின் இன்றைய புகைப்படங்களும் கீழே –

 

 

ro-2ro-4ro-5

 

ro-1

rishi-last-2

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

 

some more from paramartha nikethan ashram –

??????????????????????????????????????????????????????????????

 

???????????????????????????????

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இமயத்தின் அடிவாரத்தில் ….

 1. துளசி கோபால் சொல்கிறார்:

  படங்கள் வெகு அழகு!!!

  நாங்கள் பரமார்த் நிகேதன் சென்றாலும், அந்த கங்கையில் அமர்ந்திருந்த சிவனைப் பார்க்காமல் திரும்பி இருந்தோம். நம்ம வழிகாட்டி சிவனைப் பற்றிச் சொல்லவில்லை:(

  ஆனால் ஹரித்வாரில் கங்கைக்குள்ளே நின்றிருக்கும் சிவனை பலமுறை பார்த்தோம்.

  புதிய சிவன் வந்தாச்சா?

  ரிஷிகேஷில் கங்கை உண்மையாகவே பளீர்தான். என் செல்லங்களின் அஸ்தியை அங்கேதான் கரைத்தேன்………… த்ரிவேணி சங்கமத்தில் .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி திருமதி துளசி கோபால்,

   உங்கள் தளம் அருமையான தகவல்களை
   உள்ளடக்கியதாகவும், மிகவும் எளிமையான
   நடையிலும் இருக்கிறது. உண்மையில் நீங்கள்
   இன்னும் நிறைய பாராட்டுகளுக்கு உரியவர்.
   ஊருக்கு திரும்பிய பிறகு துளசி தளத்தை
   இன்னும் விவரமாகப் பார்க்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   பி.கு. ஆமாம் அதுஎன்ன “செல்லங்களின்
   அஸ்தி”.. சொல்லலாம் என்றால் சொல்லவும்.

   சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை, குறிப்பாக
   தமிழ் நாட்டவர்களின் வாழ்க்கை சூழ்நிலைகளைப்
   பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்களா ?
   தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதுவரை
   எழுதவில்லை என்றால் இப்போது எழுதலாமே.

 2. GOPALASAMY சொல்கிறார்:

  Nice photos. I never had an oppotunity to visit these areas. Now, I think< health will not cooperate. Thanks for the information and lively photos.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.