மோடி + இந்தி உரையாடல் + ராஜபக்சேயின் கடுப்பு + மத்திய அரசின் விரைவான நடவடிக்கைகள்…..

 

பயணத்தில் இருந்ததால் பல விஷயங்களைப் பகிர்ந்து
கொள்ள முடியவில்லை. நேற்றிரவு ஊர் திரும்பி
விட்டேன்…
பகிர்த்லைத் தொடர்வோம் …..
பயண விஷயங்கள் பற்றி பிற்பாடு வசதி வரும்போது
பார்த்துக் கொள்வோமே…!

n.m and rajapakse

லேட்டஸ்டாகத் தெரிய வந்த விஷயம் – பிரதமர்
மோடி, ஜனாதிபதி ராஜபக்சேயிடம் இந்தியில்
உரையாடியது….! இருவருக்குமே ஆங்கிலம் தெரியும்.
இருந்தாலும் மோடி வேண்டுமென்றே இந்தியைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார். ஷார்க் நாடுகள் அனைத்தின்
தலைவர்களிடமும் இந்தியிலேயே உரையாடி இருக்கிறார்.
இந்த செய்தி – நிதானமாக இப்போது தான்
வெளிவருகிறது. அதற்கான காரணத்தை யூகிக்க
முடிகிறது .. பிற்பாடு தனியாகப் பார்ப்போமே..!

இந்த உரையாடல் மொழி குறித்த சமாச்சாரங்கள்
தற்போது ஒரு டில்லி ஆங்கில தளத்தில் விவரமாக
வெளியாகியுள்ளது.

மற்றுமொரு ரசமான விஷயம் – உண்மையில்
ராஜபக்சே விருந்து நடக்கவே இல்லையாம்…கடைசி
நேரத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டதாம் …உண்மையான
காரணம் தெரியவில்லை. ஆனால் -பாதுகாப்பு பிரச்சினை
காரணமாகக் கூறப்பட்டதாம்.

இந்த விஷயங்கள் எல்லாம் ஏனோ செய்தித்தாள்களில்
வெளிவரவே இல்லை. செட்டிநாடு சிக்கனுடன் விருந்து
கொடுக்கப்பட்டது என்று தான் மறுநாள் செய்தியில் வந்தது.

மற்றபடி ராஜபக்சேயின் இந்தியப் பயணம் –
ரீ-ஆக் ஷன் குறித்து
ஜூனியர் விகடன் இதழில் ஒரு பெட்டிச் செய்தி
வெளிவந்திருக்கிறது. அதில் –

——–

“இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி
ராஜபக்சே சந்திப்பு பற்றி சிங்களப் பத்திரிகைகள்,
இணைய தளங்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன.
அதில், “மோடியை சந்தித்து விட்டு இலங்கை திரும்பிய
ராஜபக்சே வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாகத் தெரிய
வந்துள்ளது. ‘ஏதோ என்னை நட்புரீதியாகத்தான்
அழைத்தார் என்று நினைத்தேன். ஆனால், அவர் என்னை
மரியாதையாக நடத்தவில்லை. இதற்கு முன்னால்
இருந்த ஆட்சியாளர்கள் (ம.மோ.சிங் அரசு)எவ்வளவோ
பரவாயில்லை.

முதல் சந்திப்பிலேயே நம்மை இப்படி நடத்துகிறார்
என்றால், ஒரு வருடத்தில் இவர் நம்மை இருக்கும் இடம்
தெரியாமல் செய்து விடுவார். எந்த இந்தியரையும்
நாம் நம்பக்கூடாது’ என்று பொருமினாராம் ராஜபக்சே”
என்று சொல்லப்பட்டுள்ளது.”
——-

இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்பது
நமக்குத் தெரியவில்லை. ஆனால், உண்மையாக
இருந்தால் மிக்க மகிழ்ச்சி…!!!

இலங்கையிலிருந்து ஒரு நண்பர் அடிக்கடி பின்னூட்டங்கள்
எழுதுவார். அவரை இதுபற்றிய உண்மையான விவரங்கள்
தெரிந்தால் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

modi and amma

மற்றபடி தமிழக முதல்வர் ஜெ. அவர்கள், டில்லியில்
பிரதமரிடம் மோடியிடம் நேரில் கொடுத்த மனுவில்,
இலங்கையில் நடந்தது “இனப்படுகொலை”என்று கூறி
விட்டாராம்.
அதற்காக கடுமையான கண்டனங்களை அதிகாரபூர்வமாக,
ராஜபக்சேயின் செய்தித்தொடர்பாளர் கெஹேலியா
ரம்புக்வெல்லா நேற்றிரவு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் “பிரதமர் நரேந்திர மோடி
இதற்கெல்லாம் செவிசாய்க்காமல், நியாயத்தின் பக்கம்,
(அதாவது இலங்கையின் பக்கம்…!) நிற்பார் என்று
நம்புகிறோம்” – என்றும் கூறி இருக்கிறார்.

– நரேந்திர மோடி நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்
என்பது தானே நம் எல்லாருடைய விருப்பமும் ….!!!

—————

– காவிரி ஒழுங்குமுறை ஆணையம்,
காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை
அமைப்பது குறித்தும்,

முல்லைப்பெரியாறு விவகாரத்தில், மத்திய அரசின்
பிரதிநிதியை அறிவிப்பது குறித்தும்,

– மத்திய அரசின் நீர்வளத்துறை ஆரம்பகட்ட
வேலைகளைத் துவக்கி விட்டது என்று செய்தி வந்திருப்பது
நீண்ட காலத்திற்குப்பிறகு மத்திய அரசிலிருந்து
தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள ஒரு நல்ல செய்தி.

கர்னாடகா அரசும், கேரள அரசும் வழக்கம்போல்
குறுக்கே நிற்கும். ஆனால் அதற்கெல்லாம் மசியாமல்,
மோடி அரசு தொடர்ந்து
இந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பாதையில்
முன்னோக்கிச் செல்ல வேண்டும்…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to மோடி + இந்தி உரையாடல் + ராஜபக்சேயின் கடுப்பு + மத்திய அரசின் விரைவான நடவடிக்கைகள்…..

 1. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  நெஞ்சில் பால் வார்க்கும் செய்திகள்! நன்றி!

 2. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  மோடி அரசு தொடர்ந்து இந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பாதையில்
  முன்னோக்கிச் செல்ல வேண்டும், செல்லுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் ..

 3. எழில் சொல்கிறார்:

  இந்த தளம் வெளிநாட்டிலுள்ள சிங்களவர்களால் நடத்த படுவதாக கூறப்படுகிறது.

  http://lankanewsweb.net/news/7729-modi-debased-me-at-swearing-in-president-rages

  (இதில் ஹிந்தி யை Hindu என்று குறிப்பிட்டிருப்பார்கள். Temple Trees என்பது ராஜபக்சேவின் மாளிகை பெயர். )

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தகவலுக்கு நன்றி எழில்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. GOPALASAMY சொல்கிறார்:

  Again Iam repeating, we have to talk with Rajapakshe only to address the Srilankan Tamils’ problem. There should be a joint mechanism comprising Central, State reprentatives and Srilankan representative. If we want to improve the conditions of Srilankan Tamils, we have to apply carrot and stick policy. All countries see their business interest only. If we think all world countries will join together and put rajapakshe behind the bars or will hang him, it is a day dream.
  Politicians may talk anything for votes. Sri. K.M ji, we are not having any vote bank policy.
  tamilnadu Govt should have a conducive relationship wil Srilanka to monitor the progress.
  Dravida Parties hate politics theory will not work for another country.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கோபாலசாமி,

   மன்னிக்கவும். இந்த விஷயத்தில் உங்கள் கருத்து
   எனக்கு ஏற்புடையதில்லை.

   நீங்கள் சரித்திரம் அறியாமல், அல்லது
   இலங்கைத் தமிழரின் அவல நிலை புரியாமல்
   பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

   இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின்
   வழிமுறைகளையே பாஜகவும் தொடர்வது
   அவசியமில்லை என்பது மட்டுமல்ல தவறு கூட.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • reader சொல்கிறார்:

   திரு.கோபாலசாமி,

   ஜெயலலிதா மோதியிடம் மனு கொடுத்ததில் என்ன தவறு? நடந்தது, நடந்து கொண்டிருப்பது இன ஒழிப்புதானே?

   திரும்பத் திரும்ப பதற்றத்துடன் ராஜபக்சேவிடம் பேசப் பரிந்துரைக்கிறீர்கள்?

   N. ராம் கூட மஹிந்தாவிடம் இவ்வளவு ஆதுரத்துடன் இருந்ததாகத் தெரியவில்லை,
   உங்களுக்கும் *லங்கா ரத்ன* விருது கிடைக்க வாழ்த்துகள்!

 5. GOPALASAMY சொல்கிறார்:

  I am also interested in Srilankan”s tamils’ welfare. May be my ideas or solutions not acceptable to majority of viewers. But please dont compare me with Ram. I have no respect for him. He is acting as a stooge for Sonia & co,

 6. todayandme சொல்கிறார்:

  சில விவரங்கள் கா.மை. அவர்களின் கூற்றை உறுதிப்படுத்துகின்றன.

  http://infotamil.ch/ta/view.php?204mOg8dacaJdYO24e2EE663022WoAceddcYAo0c30eeQMsEbe4d4Ydv4ca0YgO433

  //
  இலங்கைக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயம்.

  அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், இதுவரை புதுடெல்லியின் கருத்துகளை செவிமடுக்காத இலங்கை அரசாங்கத்தை, இனிமேலும் அவ்வாறு இழுத்தடிக்க நரேந்திர மோடி அரசு அனுமதிக்காது. ஏனென்றால், அது இந்தியாவின் பிராந்திய முதன்மை நிலைக்கு சவாலாக அமையும். அது இலங்கை அரசுக்கு பாதகமான விடயமாகவே இருக்கும். எனவே இந்தியா பிராந்தியத்தில் தனது முதன்மை நிலைக்கு சவாலான – அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எதையும் செய்ய இலஙகையை அனுமதிக்காது. இந்த வகையில் பார்த்தால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதுடெல்லிப் பயணம் நரேந்திர மோடியுடன் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்துள்ளதே தவிர, அதற்கப்பால் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கான பெரும் பாய்ச்சல் என்று கூறமுடியாது.

  அதேவேளை, இந்திரா காந்தியின் பாணியில், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கான விசேட தூதுவர் ஒருவரை நியமிப்பது குறித்து நரேந்திர மோடி ஆலாசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அத்தகையதொரு தூதுவர் நியமிக்கப்படுவாரேயோனால், அது இலங்கைக்காக நெருக்குவாரங்களையே அதிகப்படுத்தும். அத்தகைய முடிவை நரேந்திர மோடி எடுத்தால், அது நிச்சயம் இலங்கைக்கான தோல்வியாக இருக்குமே தவிர, இந்தியாவுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சியின் வெற்றியாக அமையாது.//

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே (today and me .. )

   -நீங்கள் கொடுத்திருப்பது நான் பார்க்காத,
   அதி முக்கியமான தகவல்.

   மிக்க நன்றி. நல்ல விளைவுகளுக்காக
   வேண்டுவோம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. todayandme சொல்கிறார்:

  இன்று ஜூன் 8, 2014 வெளிவந்திருக்கும் செய்தியைப் பாருங்கள்.

  http://www.dailynews.lk/?q=political/sl-make-objections-indian-govt

  நண்பர்கள் இந்தச் செய்தியை Strongly objecting to ………… of ‘genocide’ of Tamil civilians during the final phase of the conflict, ……….. மறுக்கஇயலுமா? அல்லது மறக்கத்தான் கூடுமா?

  நேற்று எத்தனை தமிழக மீனவர்கள்.
  இன்று 41 தமிழக மீனவர்கள்.
  இவர்கள் இந்தியர்கள் இல்லையா? இந்தப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு காணவேண்டாவா?

  தரவு: http://tamil.news.lk/news/sri-lanka/item/1246-41
  இந்தச் செய்தியில் இன்று இந்தியாவில் இலங்கை மீனவர்கள் 84பேரும் அவர்தம் படகுகளும் பிடிபட்டதாகவும் உள்ளது. ஆனால் அதுபற்றிய செய்தி இந்தியத் தரவுகளில் காணோம். உண்மை நிலையே இவ்வாறுதானா அல்லது இந்திய அரசைப்பற்றி அங்குள்ளவர்களிடம் தவறான தகவல்களைப் பரப்ப இலங்கை ஊடகங்கள் முயல்கின்றனவா?

 8. Ganpat சொல்கிறார்:

  I agree with Mr.Gopalsamy’s views.Modi can not take a எடுத்தேன் கவிழ்த்தேன் appraoch here.Nor we can declare a war on SL just like that.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr. Ganpat,

   I wish to once again repeat part of my reply
   given to Mr.Gopalasamy on this issue –

   ” இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின்
   வழிமுறைகளையே பாஜகவும் தொடர்வது
   அவசியமில்லை என்பது மட்டுமல்ல தவறு கூட. ”

   thank you.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. thumbi சொல்கிறார்:

  நான் அப்போதே பின்னூட்டம் இட்டது இதைத் தான் : pl see: http://lankawoods.blogspot.in/2014/05/blog-post_8228.html
  மகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி – இலங்கைத் தமிழர்களுக்காக கூறியவை என்ன? இதோ தகவல்கள்

  Wednesday, 28 May 2014

  இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது.

  * தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் படையினரை இயன்றளவு விரைவில் வெளியேற்றி, உடனடியாக அந்தப் பொறுப்புக்களை பொலிஸாரிடம் கையளிக்க வேண்டும்.

  * பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபையிடம் கையளிக்கும் பணிகளை உடன் ஆரம்பிக்கவேண்டும்.

  * ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். – இந்த நான்கு விடயங்களையுமே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, திட்டவட்டமாகவும் தெளிவாகவும், நேரடியாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷவிடம் எடுத்துக் கூறினார் என புதுடில்லி ராஜதந்திர வட்டாரங்கள் தகவல் தந்தன.

  நேற்று இந்தியப் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி நேரடிச் சந்திப்பு சுமார் 20 நிமிட நேரமே நீடித்தது. எனினும், எந்த இழுபறியுமின்றி எடுத்த எடுப்பிலேயே நேரடியாக விடயத்தைக் கையாளும் ஓர் இறுக்க நிலையே அந்த இருபது நிமிட நேரமும் நீடித்தது என நம்பகரமாக அறியவந்தது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பரே.

   நான் அப்போது இந்த தளத்தைப் பார்க்கவில்லை.
   பின்னர் தான் பார்த்தேன். பின் விளைவுகளைப்
   பார்க்கும்போது, இது சரியான செய்தியாகத்
   தான் இருக்குமென்று தோன்றுகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.