செத்துப்போன சாதிக் பாட்சா, ஷாஹித் பால்வாவுடன், மு.க.ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு …?

 

2ஜி விவகாரமே அநேகமாக மறக்கப்பட்ட நிலையில்
செத்துப்போன சாதிக் பாட்சாவை (ஆ.ராசாவின் நண்பர்.. )
யாருக்கு நினைவிருக்கப்போகிறது…?

sadiq basha

அண்மையில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது ..
(tamil.oneindia.in/news/india/2g-case-
stalin-named-first-time)
கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் வந்தது தொடர்பான
அமலாக்கத் துறையின் வழக்கில் முதல் தடவையாக
மு.க.ஸ்டாலின் பெயர் வந்திருப்பதாக…!

அமலாக்கத் துறைக்கு சாதிக் பாட்சா செத்துபோவதற்கு
ஒரு வாரம் முன்னதாக, தன் கைப்பட எழுதிக்
கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில், ஒரு முறை
ஷாஹித் பால்வா சென்னை வந்தபோது,
துணைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில்
சந்தித்தாரென்றும், தானும் ஷாஹித் பால்வாவுடன்
சென்றிருந்ததாகவும் ஆனால் தான் வீட்டிற்கு வெளியிலேயே
நின்று விட்டதாகவும் கூறி இருக்கிறார்.

ஸ்டாலினிடமிருந்து இந்த செய்திக்கு எந்தவித ரீ-ஆக் ஷனும்
இல்லை. ஆனால், திமுக தலைமை நிலைய செயலர்
டி.கே.எஸ். இளங்கோவன் –

“இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகத்
தெரிவதில்லை. மு.க.ஸ்டாலினோ, ஷாகித் பல்வாவோ
தாங்கள் நேரில் சந்தித்துக் கொண்டதாக எங்கேயும்
கூறவில்லை. இது குறித்து வாக்குமூலம் அளித்ததாகக்
கூறப்படும் சாதிக் பாட்ஷாவும் தற்போது உயிருடன் இல்லை.
‘கலைஞர் டிவி’க்கும் ஸ்டாலினுக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை. எனவே ஷாகித் பல்வாவோ
மற்றவர்களோ சந்திக்கவேண்டிய அவசியமும் இல்லை”
என்று மறுத்திருக்கிறார்.

சம்பந்தப்பட்டவர் மௌனமாக இருக்கும்பொது, திமுக
தலைமைநிலையச் செயலாளர் இதற்கு அவசரமாக
மறுப்பு கொடுப்பது ஏன்..?
இதுவும் கட்சி விவகாரமா என்ன ..?

இது தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன….

திருமதி தயாளு அம்மாள் பாவம் 80 வயது ஆன பெண்மணி.
சரியாக எழுத, படிக்க தெரியாதவர்.60 சதவீத பங்குடன்,
மேஜர் ஷேர்ஹோல்டராக இவ்வளவு பெரிய
தொலைக்காட்சி பிசினஸ் எல்லாம் அவர் செய்திருக்க
வாய்ப்பு இல்லை. எனவே -வேறு யாரோ அவரது
பெயரை பினாமியாக இந்த தொழிலுக்கு பயன்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.

வியாபாரத்தில், நிதி ஆதாயங்களுக்காக – கணவர்,
மனைவியின் பெயரையோ, மகன் தாயின் பெயரையோ
பயன்படுத்திக்கொள்வது சகஜம் தான்.

எனவே கலைஞர் டிவி விவகாரத்தில் திருமதி தயாளு
அம்மாள், கணவர் அல்லது மகனின் பினாமியாக
செயல்பட்டிருக்கலாம்.

ஆனால், இருவருமே இத்தனைக்காலம் இதுகுறித்து
வாயே திறக்காமல், வயதான பெண்மணி கோர்ட்டின்
முன்னால் குற்றம் சாட்டப்பட்டு நிற்பதற்கு காரணமாகி
இருக்கிறார்கள்.இது, அவர் -ஒரு அரசியல்வாதியை
கணவராகவோ, மகனாகவோ – பெற்றதன் விளைவு
போலும் .

வயாதான காலத்தில், உடல்நிலை சரியில்லாத
நிலையிலும், மனைவியோ, தாயோ – தன் பொருட்டு
கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டு நிற்பதைக்
கண்டும் வாய்திறக்காமல் இருக்கிறார்களே –
கல்நெஞ்சக்காரர்கள்…!

நமக்குத் தெரிந்து திரு.ஸ்டாலின் அவர்கள், சட்டமன்ற
உறுப்பினராக இருப்பதைத்தவிர வேறு எத்தகைய தொழிலோ,
உத்தியோகமோ செய்வதாகத் தெரியவில்லை.
ஆனாலும் கார்-பங்களா என்று மிக வசதியாகவே
வாழ்வதாகத் தெரிகிறது. அவரது மகனும்
கல்லூரிப் படிப்பை முடித்தவுடனேயே, பங்களா,
வெளிநாட்டுக் கார்கள் சகிதம் பல கோடி ரூபாய்
முதலீட்டுடன் மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளராக
துவக்கத்திலேயே உருவெடுத்து விட்டார்.

ஆமாம் – இவர்களுக்கு, இதெல்லாம் எப்படி
சாத்தியமாகிறது…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to செத்துப்போன சாதிக் பாட்சா, ஷாஹித் பால்வாவுடன், மு.க.ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு …?

 1. Ganpat சொல்கிறார்:

  ஹி ஹி ஹி அதுதான் இந்தியா.இந்த கேள்வியை நாம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு கேட்டாலும் விடை கிடைக்காது..

 2. ராஜகோபாலன் ரங்கராஜன் சொல்கிறார்:

  தன் தாய் மீது அபாண்டமாக வழக்கு போடப்பட்டு இருக்கிறது என்று கூட ஸ்டாலின் இது வரை சொல்லவில்லை. எதாவது சொன்னால் தன் மீதும்
  வழக்கு பாயுமோ என்கிற பயம். தந்தை பெயரில் நடக்கும் கலைஞர் டிவியுடன் ஸ்டாலின் எப்படி எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருக்க முடியும் ?
  அதே போல் அவர் மகனுக்கு 25 வயதில் சினிமா கம்பெனி
  துவங்க கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வரும் ?

  தயாளு அம்மாளுக்கு கலஞர் டிவியில் 60 % ஷேர் போட பணம் எங்கிருந்து வந்திருக்க முடியும் ? அவர் என்ன வியாபாரம் செய்கிறாரா- சினிமா கதை வசனம் எழுதி சம்பாதிக்கிறாரா ? அந்தப்பணம் முழுவதும் கலைஞருடையதாகத் தான் இருக்க முடியும். அதில் ஸ்டாலின் பங்கும் இருக்கலாம்.

  இவர்கள் காசுக்காக எதையும் செய்வார்கள்.
  பெண்டாட்டியையும் பெற்ற தாயையும் கூட கோர்ட்டில் நிறுத்துவார்கள்.
  மனசாட்சி என்பதே இல்லாதவர்கள்.

 3. Ganpat சொல்கிறார்:

  கேடிகளுக்கு, தாத்தா ,பாட்டி,தாய்,தந்தை,மகன்,மகள்,அண்ணன், தம்பி அக்கா,தங்கை உற்றார் உறவினர் மற்றும் நண்பர் எல்லாம்..கோடிகளே!!

 4. ravikumar சொல்கிறார்:

  once i met a person 8 years back he was owning shop and independent house at virugampakkam
  one mla had given black moneyrs 20 lac to him & he gave it to one leading cinema producer and director. they cheated him hence he has to sell his property to repay to that MLA.
  during that meeting he told me that cinema & politic people would cheat their own family for the sake of self welfare
  I recalled many instance and it was true .this issue is one among them

 5. johan paris சொல்கிறார்:

  ஆமாம் – இவர்களுக்கு, இதெல்லாம் எப்படி
  சாத்தியமாகிறது…?
  ஆமாம் -இவர்கள் உறவுகளோ? இவர்களோ அரசியலில் உள்ளார்கள்.
  போதாதா? அத்துடன் காசிக்காக எதுவும் செய்வார்கள்….பச்சையாகச் சொல்ல விரும்பவில்லை.

 6. GOPALASAMY சொல்கிறார்:

  Somebody estimates DMK property is worh about 40,000 crores. stalin will become the “owner” of that. Comple DMK party is under stalin control. BUt he does not give a single statement about 215 crore transaction. Udhayanidhi:s film Manmadha Ambu might be 100 crore project and it falied miserably. By god’s grace DMK is routed out in LS polls and BJP got majority. Otherwise again these people will start their ugly business. What about Ramesh, Stalin’s friend?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   You are right Mr.Gopalasamy.

   Now only Stalin’s real picture is slowly coming out …
   All these days – people were not serious about him
   and were concentrating only on his Father.

   with best wishes,
   Kavirimainthan

 7. GOPALASAMY சொல்கிறார்:

  rajathi Rjai’s comment in bad taste. pl. delete it.

 8. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  காசுக்காக எதையும் செய்வார்கள்.
  பெண்டாட்டியையும் பெற்ற தாயையும் கூட கோர்ட்டில் நிறுத்துவார்கள்….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.