தயாநிதி மாறன் கிரிமினல் வழக்கு – சம்பந்தப்பட்ட கோப்புகள் தொலைந்தன…!!!

dayanithi and raja

முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் திருவாளர்
தயாநிதி மாறன் மீது 2 வழக்குகள் இருந்தன.

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மலேசியா நிறுவனத்துடன்
நிகழ்ந்த பேரங்கள் பற்றியது ஒன்று. இதில்
மலேசியாவிலிருந்து வழக்கு விசாரணைக்கு தேவையான
தகவல்களைப் பெற முடியவில்லை என்று சிபிஐ புலனாய்வு
நிறுவனமே கூறி வழக்கை துவங்காமலேயே முடித்து வைக்க
நடந்த முயற்சிகள் ஒரு புறம்.

2வது -2007-ல் தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு
அமைச்சராக இருந்தபோது, அடையாறு போட் க்ளப்
ஏரியாவிலுள்ள தன் வீட்டில் BSNL சார்பில் ஒரு ரகசிய
எக்ஸ்சேஞ்சை நிறுவி, அங்கிருந்து தரைக்கு கீழே
ரகசிய பைபர் ஆப்டிகல் கேபிள்கள் மூலம், சில கிலோமீட்டர்
தொலைவிலிருந்த சன் நெட்வொர்க் நிறுவனத்துடன்
323 இணைப்புகள் கொடுக்கப்பட்டு, சட்டவிரோதமாக அரசு
வசதிகளை தனியார் நிறுவனம் (அவரது சொந்த
சகோதரருடையது) பயன்படுத்தி சுமார் 440 கோடி ரூபாய்
அளவிற்கு அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தினார்
என்பதான குற்றச்சாட்டு.

இந்த ஊழலை முதன்முதலில் வெளிக்கொண்டு வந்தவர்
சென்னை பிரிவு BSNL நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த
சி.கே.மதிவாணன் என்கிற ஊழியர். இந்த ஊழலில்
சம்பந்தப்பட்டவர்களின் செல்வாக்கு காரணமாக –
பல கொடுமைகளை சந்திக்க நேர்ந்த அவரது பென்ஷன்
கூட நிறுத்தி வைக்கப்பட்டது என்பதெல்லாம் முன்னரே
வெளிவந்த செய்திகள்.

2010-ல் வெளிக்கிளம்பிய இந்த விவகாரம், பல்வேறு
முனைகளில் பலத்த விவாதங்களைக் கிளப்பியும்,
காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் பின்புலம் காரணமாக
சிபிஐ நடவடிக்கை தாமதப்பட்டது.

இறுதியாக, ஒருவழியாக, 2011-ல் வழக்கு ஒன்று
பதிவு செய்யப்பட்டு, விசாரணை துவங்கியது.
வழக்கு பதிவு செய்யப்பட்டதே தவிர, முன்னேற்றம்
எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள்
லேசுப்பட்டவர்களா என்ன ? அவர்களது அரசியல்
செல்வாக்கும், பணபலமும் எத்தகையது என்பது அனைவரும்
அறிந்தது தானே ..!

குற்றம் நிகழ்ந்தது 2007-ல். வழக்கு பதிவு செய்யப்பட்டது
2011-ல். 7வருடங்களுக்குப் பிறகு இப்போது  ( 2014 ) திடீரென்று
ஒரு செய்தி வந்திருக்கிறது.

கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்
(4 மற்றும் 5 ஜூன்) நான்கு அதிகாரிகளைக் கொண்ட
சிபிஐ டீம் ஒன்று சென்னை வந்திருக்கிறது. சென்னையில்
முகாமிட்டு, சன் டிவியில் vice-president ஆகவும்
CEO ஆகவும் பணியாற்றிய, முன்னாள் ஊழியர்
(ஹன்ஸ்ராஜ்) சாக்சேனாவையும், சரத்குமாரையும்
(தற்போது கலைஞர் டிவி தொடர்பான 2ஜி வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டிருப்பவர் ) பல மணி நேரம் விசாரணை
செய்ததாம்.

சாக்சேனாவும் சரி, சரத்குமாரும் சரி
மாறன் சகோதரர்களிடம் ஏற்கெனவே அவர்கள் பட்டபாடும்,
குற்றம் சாட்டப்பட்டிருப்பவரின் அரசியல் பின்புலமும்-
பண பலமும் அவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத நினைவாக
நிலைத்து இருக்குமே. என்னவென்று சாட்சி சொல்லி
இருக்க முடியும் …?

இத்தகைய கேபிள் தொடர்பு சம்பந்தப்பட்ட வேலைகளை
எல்லாம் டெக்னிகல் டீம் தான் கவனித்து வந்தது
என்றும், தங்களுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது
என்றும் கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இத்தனை
விசாரணைகளும் சென்ற வாரம் நடந்திருக்கின்றன.
மிக முக்கியமான நபர்கள் சம்பந்தப்பட்ட
வழக்கு விசாரணை இது.
ஆனாலும், தமிழ் செய்தித்தாள்கள் எதிலும்
இந்த விவரங்கள் வெளிவந்ததாகத்
தெரியவில்லை…வெளிவராமல் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்..!

இதையெல்லாம் தூக்கியடிக்கக்கூடிய வகையில்
கடைசியாக ஒரு ஒன்லைன் செய்தி வெளியாகி இருக்கிறது –
அமைச்சர் தம்பி வீட்டில் ஆப்டிகல் கேபிள் மூலம் BSNL
கனெக் ஷன் கொடுக்கப்பட்டது சம்பந்தமான கோப்புகள்
(connected BSNL files ) காணாமல் போய்
விட்டனவாம் ….!!

காசே தான் கடவுளடா ….
துட்டு – பணம் – money ..money ..!!

பணம் பாதாளம் மட்டும் தான் என்றில்லை …
வேறேங்கெங்கோ எல்லாம் கூட பாயும் தானே…..!!

(எனக்கு இந்த செய்தி –
கொஞ்சம் கூட அதிர்ச்சியாக இல்லை…
உங்களுக்கு …..??? )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தயாநிதி மாறன் கிரிமினல் வழக்கு – சம்பந்தப்பட்ட கோப்புகள் தொலைந்தன…!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  கிணற்றை காணோம், குளங்களை காணோம், ஆறுகளை காணோம், நதிகளை காணோம்…மின்சாரத்தை காணோம்…இப்போ கோப்புகளை காணோம்..இதெல்லாம் பழகிருச்சு, சார்.

 2. Ganpat சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  நான் மோடி அவர்களை திறமையை /நேர்மையை அளக்க சில அளவுகோல்கள் வைத்துள்ளேன் அவற்றில் சில…
  மாறன் சகோதர்களை சிறை எடுப்பது.
  ராபர்ட் வோத்ராவை சிறைஎடுப்பது
  உச்ச நீதி மன்ற ஆணைப்படி கர்நாடக அரசை நம் மாநிலத்திற்கு காவிரி நீர் தர வைப்பது,
  முல்லைப்பெரியார் அணை உயரத்தை அதிகரிக்க நம் மாநில அரசிற்கு தார்மீக ஆதரவு கொடுப்பது
  ஸ்விஸ் வங்கி கருப்பு பண கணக்கு விவரங்களை வெளியிடுவது..
  மேற்கண்ட அனைத்தும் வரும் ஜனவரி முதல் தேதிக்குள் முடிக்கப்படவேண்டும்.
  இதையே செய்ய இயலவில்லையெனில் பாகிஸ்தான்,இலங்கை பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

 3. kinarruthavalai-Asokaraj சொல்கிறார்:

  ஆனாலும், தமிழ் செய்தித்தாள்கள் எதிலும் இந்த விவரங்கள் வெளிவந்ததாகத்
  தெரியவில்லை…வெளிவராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..!
  என்னமோ மீடியாக்கள் தான் தங்கள் தோல்விக்கு காரணம் என்று உளறிக் கொண்டிருக்கிறார் தானைத் தலைவர். நீங்கள் என்னடாவென்றால்….இதெல்லாம் நானும் எதிர் பார்த்ததுதான்.

  • RajaRamMohanRoy சொல்கிறார்:

   மீடியாக்கள் தான் தங்கள் தோல்விக்கு காரணம்
   its a Tricky statement
   1) Media hyped the no of seats, so we have wrong impression.
   2) Media dont predict “Zero” result.
   3) cannot blame like earlier days”vaaza mattaai, sottral aditha…etc” because it will again reflect in MLA elections, power of Commern Man now slowly awakened.
   4) Most of the Media’s are partially or fully supporting parties for advt..etc. so it is like “Naan addipathu pola adikkiren, nee azuvathu maariKOODA nadika thevai-illay”

 4. GOPALASAMY சொல்கிறார்:

  Jaya also tried to take action against kalanidhi. at that time he escaped to Finland. later jaya could not take action against him.
  All the five points raised by Sri. Ganpath are valid. we are waiting.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நேற்றிரவு வெளியாகியுள்ள தகவல்கள்-

  சிபிஐ அதிகாரிகளின் தொடர்ந்த விசாரணகளுக்குப் பிறகு சாக்சேனா தனக்குத் தெரிந்த சில விவரங்களை
  சிபிஐ யிடம் வெளியிட்டு இருப்பதோடு, மாறன் சகோதரர்களுக்கு எதிராக இந்த வழக்கில் சாட்சி சொல்லவும் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

  அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி
  மாறன் சகோதரர்களுக்கு சிபிஐ யிடமிருந்து சம்மன் போவதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

  anticipated bail கிடைக்கும்வரை ஸ்விஸ்ஸுக்கு
  விடுமுறையில் (..!) பறந்து விடுவார்கள் என
  எதிர்பார்க்கலாம்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 6. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  கிளி பறந்து விட்டதாக சொல்ல படுகிறது …

 7. nparamasivam1951 சொல்கிறார்:

  என்ன தான் நடக்கிறது என புரியவில்லை.

 8. இளங்கோவன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் அய்யா,

  “சிரங்கு பிடித்தவர் கை சும்மா இருக்காது” என்று
  ஒரு சிரங்கு பிடித்த சொறியாளி சொல்கிறாரே –
  அது பற்றி உங்கள் கருத்து என்ன ?

  இளங்கோவன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் இளங்கோவன்,

   அவரைப்பற்றி நீங்களே தான் சொல்லி விட்டீர்களே..
   அதற்கு மேல் நானென்ன சொல்ல..!

   தன் சொந்த அனுபவத்தைச் சொல்கிறார் என்று
   வேண்டுமானால் சொல்லலாம்..!

   காவிரி ஆணையம் பற்றிய ஒரு நல்ல முடிவு
   தான் பதவியில் இல்லாதபோது வந்துவிடக்கூடாதே
   என்று துடிக்கிறார்..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.