AK-47 துப்பாக்கி கொண்டு வந்திருந்தால்….?

 

ஒரு விசித்திரமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின்
மதுரைக் கிளையின் முன் வந்திருக்கிறது.

ak-47 photos

chinese-crackers

சிவகாசியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் “இங்கு
சீனப்பட்டாசுகள் நிறைய இறக்குமதி செய்யப்பட்டு
கொண்டு வரப்பட்டுள்ளன. கீழே விழுந்தாலே வெடிக்கும்
அளவிற்கு மிகவும் ஆபத்தான,( இந்தியாவில்
தடைசெய்யப்பட்டுள்ள ) ‘பொட்டாசியம் க்ளோரைடு’
என்னும் வேதிப்பொருளைக் கொண்டு அந்த பட்டாசுகள்
தயாரிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பட்டாசுகளை
துறைமுகங்கள், பட்டாசு கோடவுன்கள் ஆகியவற்றில்
தீவிரமாக சோதனை நடத்தி கண்டு பிடித்து உடனடியாக
அழிக்க உத்திரவிட வேண்டும்” என்று அவர் நீதிமன்றத்தின்
முன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்தியாவில் சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்ய
யாருக்கும் அனுமதி/லைசென்சு கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த பட்டாசுகள் எப்படி உள்ளே
நுழைந்தன…?

கலர் கலராக, விதம் விதமான டிசைன்களில்,
மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்துடன்
தயாரிக்கப்பட்டிருக்கும்
இந்த சீனப்பட்டாசுகள் மிகவும் சப்தத்தோடும்,
பலவித வர்ண ஜாலங்களுடனும் வெடிப்பதோடு,
அதிக உயரத்திற்கும் செல்கின்றன. நம்ம ஊர் பட்டாசுகளின்
விலையில் பாதி விலைக்கு இவை கிடைக்கின்றன.

எனவே இவை அனுமதியின்றியே, கள்ளத்தனமாக
கண்டெயினர்களில் சீனாவிலிருந்து நேரடியாக, இந்தியா
முழுவதும் உள்ள துறைமுகங்கள் மூலமாக கொண்டு
வரப்படுகின்றன.
க்ளோரைடு பயன்படுத்தப்படுவதாலும், சீனாவில் ஆட்கூலி
மிகவும் குறைவு என்பதாலும், இவை மலிவு விலையில்
கிடைக்கின்றன.

சரி – இறக்குமதி செய்ய அனுமதியில்லாத இந்த
பட்டாசுகள் கண்டெயினர்களில், இந்திய துறைமுகங்களில்,
சுங்க அதிகாரிகளின் பார்வையினூடே தானே வருகின்றன –
அது எப்படி சாத்தியமாகிறது…?

இத்தனைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் 2013
அக்டோபரில் – சுமார் 600 கண்டெய்னர்களில்
சீனாவிலிருந்து தடைசெய்யப்பட்ட பட்டாசுகள்
கள்ளத்தனமாக இந்திய துறைமுகங்களான காண்ட்லா,
மும்பை, கொல்கத்தா மற்றும் தூத்துக்குடி வழியாக
உள்ளே கொண்டு வரப்படக்கூடும் என்று எச்சரிக்கை
சுற்றறிக்கை வேறு விட்டிருக்கிறது….!!

வெட்கம் சிறிதும் இல்லாமல் சுங்கத்துறை இதற்கு
விளக்கம் கூறுகிறது –

2012-ல் வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள்
இது குறித்து சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம்
அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், அது எங்களுக்கு
மிகவும் காலதாமதமாகத் தான் கிடைத்தது. அதனால்
தான் எச்சரிக்கையாக இருக்க முடியவில்லை…!

அரசியல்வாதிகளுக்கு நாங்கள் ஒரு சிறிதும்
சளைத்தவரில்லை என்று நிரூபிக்கும் அந்த மானங்கெட்ட
சுங்கத்துறை அதிகாரிகளைக் கேட்கிறேன் –

-” உங்களுக்கு தேசப்பற்று தான் இல்லை,
நீங்கள் வாங்கும் கொழுத்த சம்பளத்திற்கு கொஞ்சமாவது
வேலை செய்ய வேண்டும் என்கிற உணர்வும் இல்லை –
குறைந்த பட்சம் – இந்த பட்டாசுகளால் எப்பேற்பட்ட
விபத்துக்கள் ஏற்படக்கூடும், எவ்வளவு உயிர்கள் நாசமாகக்
கூடும் என்கிற முன் யோசனை கூடவா இல்லை…?

வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரியிடமிருந்து
சுற்றறிக்கை வந்தால் தான் நீங்கள் சோதனை போடுவீர்களா?
இறக்குமதி செய்யப்படும் அத்தனை கண்டெய்னர்களையும்
முழுவதுமாக சோதனை செய்வது உங்கள்
பொறுப்பில்லையா ? பிறகு உங்களுக்கு மாதாமாதம்
எதற்காக சம்பளம் கொடுக்கப்படுகிறது ..?
ஸ்மக்ளர்களுக்கு சேவை செய்யவா..?”

இத்தோடு நில்லாமல், சுங்கத்துறை சார்பாக கோர்ட்டில்
ஆஜரான வக்கீல் – அராஜகமாக காரணம் வேறு கூறுகிறார்-

‘தற்போது தூத்துக்குடியில் உள்ள ஸ்கேனர் மூலம் ஒரு
நாளைக்கு 20 கண்டெய்னர்களை தான் ஸ்கேன் செய்ய
முடியும் – நாங்கள் என்ன செய்வது’ என்று ….

கோடிக்கணக்கில் வருமானம் வரும் சுங்கத்துறையால்,
போதுமான அளவு ஸ்கேனர்கள் வாங்க முடியவில்லையா ?
துறைமுகத்திற்கு ஏற்றாற்போல், வேலைத்தேவைக்கு
ஏற்றாற்போல் ஸ்கேனர்களை வாங்குவதை யார்தடுத்தது..?
நாட்டின், நாட்டு மக்களின் பாதுகாப்பை விட
வேறு எது முக்கியம் …?
ஒருவேளை அதிக ஸ்கேனர்கள் இருந்தால், இதுபோன்ற
தகிடுதத்தங்கள் செய்ய முடியாதே என்கிற காரணத்திற்காகவே
வாங்கவில்லையா ?

சரி ஸ்கேனர் இல்லையென்றால் தான் என்ன,
கண்டெய்னர்களை வேறு வகையில் சோதனை போட
முடியாதா ?
சுங்கத்துறைக்கு சம்பந்தமே இல்லாத நானே சொல்வேனே
பலவகை சோதனை முறைகளை ..!
அவை சுங்க அதிகாரிகளுக்குத் தெரியாதா ..?

கண்டெய்னர் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்பதை
வெளியிலிருந்து பார்த்தாலே தெரியுமே ? யார்
விலாசத்திற்கு வந்திருக்கிறது என்பதும் தெரியுமே ..!
ஷிப்பிங் டாக்குமெண்ட்ஸை பார்த்தாலே,
சந்தேகத்திற்குரியதா இல்லையா என்பது தெரியுமே ?

சீனாவிலிருந்து என்றால் முற்றாகச் சோதனை செய்ய
வேண்டாமா ? ஒருவேளை … சீன கண்டெய்னர்களை
சோதனை செய்ய வேண்டாமென்றே உங்களுக்கு
உத்திரவு ஆகி இருக்கிறதா …?

டெலிவரி எடுக்க வருபவர்களை கொண்டு
துறைமுகத்திலேயே கண்டெயினரைத் திறக்க வைத்து
சோதனை போட முடியாதா ?

சோதனை போட ஸ்கேனர் இல்லை என்று சாக்கு சொல்லும்
நீங்கள் ஒரு வேளை கண்டெயினரில் தீவிரவாதிகளுக்காக
ஏகே -47 துப்பாக்கிகள் வந்திருந்தால் …
அதன் காரணமாக அப்பாவி மக்கள் உயிர் இழந்திருந்தால் –
இந்த நாட்டின் மக்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்…?

இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் சாதாரண
குற்றவாளிகளல்ல – தேசத்துரோகிகள்…

இவற்றை கள்ளத்தனமாக இறக்குமதி
செய்தவர்கள் யார் …?
இவர்களுக்கு மத்திய அரசு லைசென்சு
எப்படி கிடைத்தது ?
எதை இறக்குமதி செய்ய என்று சொல்லி லைசென்சு வாங்கி
இருக்கிறார்கள் ?
அவற்றை கொள்முதல் செய்து அனைத்து
இடங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பியது யார் …?
எந்தெந்த துறைமுகங்களில், எப்போது, எந்த நாளில்
இவை வந்திறங்கின …? அந்த துறைமுகங்களில்,
அத்தகைய நாட்களில் –
சுங்கத்துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் யார் யார் ..?
அந்த கண்டெய்னர்களை டெலிவரி எடுத்து,
பார்சல்களைப் பிரித்து விநியோகம் செய்தவர்கள் யார் யார் …?

சுற்றறிக்கை விட்டதுடன் மத்திய
அரசின் பொறுப்பு தீர்ந்து விட்டதா ?
என்ன தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது …?
விளைவுகள் எப்படி கண்காணிக்கப்பட்டது …?

மார்க்கெட்டில் சீனப்பட்டாசுகள் நடமாடுவது
மத்திய, மாநில அதிகாரிகள்
யார் கவனத்திற்கும் வரவில்லையா ?
ஏன் இந்த அலட்சியம்…?

இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பணத்தாசை
காரணமாகவே இதில் ஈடுபட்டிருந்தாலும் கூட,
அவர்கள் செய்தது எப்பேற்பட்ட தேசத்துரோகம் ..
எந்த அளவிற்கு பாதகமான பின்விளைவுகளை
ஏற்படுத்தக்கூடியது …
என்பதை கருத்தில் கொண்டு இந்த வழக்கை மிக ஆழமாக
விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது தீவிரமாக
நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

இந்த வழக்கிற்கும், அதன் மீது எடுக்கப்படும் முடிவுகளுக்கும்
பொதுமக்களின் பாதுகாப்பையும், நலனையும் கருதி
நிறைய publicity கொடுக்கப்பட வேண்டும்.
நான் இந்த இடுகையை எழுதுவதற்கு அதுவும் ஒரு காரணம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to AK-47 துப்பாக்கி கொண்டு வந்திருந்தால்….?

 1. ரிஷி சொல்கிறார்:

  கவலைப்படத்தக்க அம்சமே!

  நாட்டில் பாதுகாப்புக்காக வருடந்தோறும் பட்ஜெட்டில் லட்சக்கணக்கான கோடிகளை ஒதுக்குகிறார்கள். வெறுமனே துப்பாக்கிகளையும், ஏவுகணைகளையும் வாங்கி வைத்துவிட்டால் போதுமென்று நினைக்கிறார்கள் போல.

  தொட்டியில் ஒரு பக்கம் ஓட்டை வழியாக தண்ணீர் புடுங்கிக் கொண்டு செல்கிறது. அதை அடைக்காமல் மேலும் மேலும் தண்ணீரை ஊற்றி நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். மடச்சாம்பிராணிகள்!

 2. ரிஷி சொல்கிறார்:

  //2012-ல் வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள்
  இது குறித்து சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம்
  அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், அது எங்களுக்கு
  மிகவும் காலதாமதமாகத் தான் கிடைத்தது. அதனால்
  தான் எச்சரிக்கையாக இருக்க முடியவில்லை…!//

  எச்சரிக்கை என்பது கடையில் போய் வாங்கி வரும் ஒரு பொருள் என சுங்கத்துறையினர் நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது தேவைப்பட்டால் வாங்கிக்கொள்ளலாம் என. யாராவது அவர்களுக்கு வகுப்பெடுத்தால் நல்லது. (ஜட்டியுடன் நிற்கவைத்து முட்டிக்கு முட்டி தட்டி………. அந்த வகுப்பு 🙂

 3. nparamasivam1951 சொல்கிறார்:

  வெட்கமாக உள்ளது. வெளியே கூறினால் மற்ற நாடுகள் நம்மை கை கொட்டி சிரிக்கும். நடவடிக்கை வேண்டாம் எனும் போது எத்தனை ஸ்கானர் வாங்கி தான் என்ன பயன்?

 4. kinarruthavalai சொல்கிறார்:

  என்றைக்குமே திருத்தப்பட முடியாத ஜென்மங்கள்தான் இந்த சுங்கத் துறை அதிகாரிகள். இன்னமும் விமான நிலையங்களில் வீக்காக வரும் மக்களை கண்டுபிடித்து கசக்கிப் பிழிவதில் வல்லவர்கள். திருட்டு வல்லூரகளை பாதுகாப்பாக வெளியில் கொண்டு சேர்ப்பதில் திறமையானவர்கள். ஜட்டியுடன் இல்லை ஜட்டி இல்லாமல் நிற்க வைத்தாலும் இவர்கள் அவமானப் பட மாட்டார்கள். அதற்கும் ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொண்டு பல்லை இளிப்பான்கள். மோடி பல விஷயங்களில் தலையிட தேவை உள்ளது.

 5. venkat சொல்கிறார்:

  sivakasi people who defeated vaiko deserve this one

 6. GOPALASAMY சொல்கிறார்:

  I request you to follow up this matter, as this is very serious one.
  I have a doubt. Whether people in power (politicians/officers) are reading your blog or not?
  in 1980s, customs people harassed us so badly. Now there is an improvement.

 7. Sanmath சொல்கிறார்:

  I am from Trading & Logistics sector. The attitude of C&CE is something which increases your BP. They apply their skills to harass you, then slowly make you feel that – “lets pay something to come out”. They speak in a different tone – “anyway through some means these things will enter the country. In that case why should I lose something coming to me”.

  This can be changed from the very beginning of primary education, incepting in children’s mind with patriotism and create an attitude to protect the nation at any cost. National interest should be the top priority. Changes cannot be done now with the present officials. Even if some strict Commsr takes position, that particular commsr is not going to be there for long. Eradicating corruption here is not easy. But many monitoring(not controlling) govt agencies can be made, so that these people will be pretty careful, because they are being monitored.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Sanmath,

   I fully agree with you reg. moulding of children in their young age.
   Parents as well as teachers have a great role in this.

   At the same time, we cannot allow the existing corrupt system /people
   to continue anylonger like this. Time has come – either they will have to
   change themself or will be forced out.

   I hope it is only a question of time ..!

   with best wishes,
   Kavirimainthan

 8. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  150 ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்; 18 ஆண்டுகள் ஆகிறது; இன்னும் அவருக்கு, வேலை கொடுக்கவில்லை; அபராதமும் விதிக்கவில்லை. கீழ்நிலையில் உள்ளோருக்கு மட்டும் தான் சட்டம், நீதி எல்லாம். மேல் தட்டு ரகமான ராஜன் போன்ற சுங்கத் துறை அதிகாரிகளிடம் , நீதி வெல்லுமா பணம் தான் வெல்லும்.மக்களின் எழுச்சியே இதற்க்கு பதில் சொல்லும்.

 9. Ganpat சொல்கிறார்:

  உங்களுக்கு எப்படித்தான் இந்த விஷயமெல்லாம் சிக்குகிறதோ?பேசாமல் மோடிஜி, “இன்றைய ஊழல்” என்ற பிரிவை ஏற்படுத்தி அதற்கு உங்களையே தலைவராகவும் போட்டுவிடலாம்.நிற்க..
  உங்கள் பதிவை பார்த்து திகிலடைந்த தூத்துக்குடி சுங்க ஆய்வாளர் ஒருவர் இன்று சந்தேகத்திற்கு உள்ளான கன்டெய்னர் ஒன்றை திறக்க ஆணையிட, அதை பெற்றுப்போக வந்தவர் வேர்க்க விறு விறுக்க நிற்க,திறக்கப்பட்ட கன்டெய்னர் முழுக்க கட்டு கட்டாக நம் நாட்டு ஆயிரம் ரூபா நோட்டுக்கள்..”சரி சரி மூடு ! ஏதோ பட்டாஸ் கடத்தப்படுகிறது என சொன்னார்கள்!”என்று அவர் அப்பால் சென்றதாக கேள்வி. 😉

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நீங்கள் அளிக்கும் கௌரவத்திற்கு நன்றி கண்பத்.

   இந்த நாட்டை வளப்படுத்தும், சீர்படுத்தும் பணியில்
   என் பங்களிப்பும், (அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கூட) இருக்க வேண்டும் என்பது என் அவா.

   அரசுப் பணியில் இருந்ததாலும்,
   கட்சி அரசியலில் பிடிப்பு இல்லாததாலும் –
   அரசியலில் இல்லை.

   ஆனாலும், உடலில் வலு இருந்த வரையில்,
   நான் எந்த இடத்தில் இருந்தாலும் –
   என்னைச்சுற்றி இருந்த மக்களிடையே
   என்னால் இயன்ற சமுதாயப் பணிகளில் மனப்பூர்வமாக ஈடுபட்டிருந்தேன்.

   தீவிரமாகப் பணிபுரிந்த காலம் முடிந்து விட்டது –
   அழைப்பு வந்தவுடன் போக வேண்டியது தான்…

   அது வரை எதாவது நம்மால் இயன்றதை செய்வோமே
   என்று நினைத்ததன் விளைவு தான் இந்த எழுத்துக்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கண்பத், (எல்லா நண்பர்களுக்கும் சேர்த்து தான் ..)

    உங்களுக்கு இந்தி தெரியுமா…?
    இந்தியில் பேசினால் புரிந்து கொள்வீர்களா …?

    பாஜக பாராளுமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட
    அன்று, பாராளுமன்ற மத்திய மண்டபத்தின் படிகளில்
    தன் தலையை வைத்து வணங்கி உள்ளே வந்ததும்,

    அதன் பிறகு அன்று தலைவராக ஏற்புரை ஆற்றியதும்,

    பிறகு நேற்று, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்
    போது லோக்சபாவில் பதில் உரை ஆற்றியபோதும் –
    மோடி செய்தது, பேசியது எல்லாமே really fantastic…!

    நீண்ட காலங்களாக, என் கனவில் இருந்தவை எல்லாம் அவர் பேச்சில் வந்தன. நீண்ட நாட்களுக்குப் பிறகு
    நம் நாட்டு அரசியலைப்பற்றி ஒரு நம்பிக்கை வருகிறது.

    எல்லாரையும் அரவணைத்துக் கொண்டு ஒன்றாக முன்னேறுவோம்
    (சப்கே சாத் – விகாஸ் ) என்று அவர் கூறியது
    எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
    மனதில் மிக்க மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன் – இருக்கிறேன்.

    அவர் கூறியவற்றில் நூறு சதவீதம் உண்மை இருக்கிறது.
    நம்மால் முடியும். பாரதம் நிச்சயம் உலகின் முன்னணி
    நாடுகளில் ஒன்றாக ஆகும்.

    அன்னை சோனியா குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது
    மோடியை ‘மவுத் கா சௌதாகர்'( மரண வியாபாரி)
    என்று வர்ணித்தார் .. அது ‘அன்னை’க்கே பொருந்தக்கூடிய
    வார்த்தை. இலங்கையில் அவர் அதைத்தான் செய்தார்.

    என் பார்வையில் – மோடி ஒரு ‘ஸ்வப்னோன் கா சௌதாகர்’ (கனவுகளை விற்பவர் … )

    அவரது கனவுகள் – நிறைவேறக்கூடிய கனவுகளே…
    – It is only question of time…!
    (ஆனால் ஒரு சர்வாதிகாரியால் மட்டுமே
    நிறைவேற்றப்படக்கூடிய கனவுகள் அவை …!)

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    பின்குறிப்பு – ஒரே ஒரு குறை. தமிழ்நாட்டில்
    பெரும்பாலானோருக்கு இந்தி தெரியாது. நேரடியாக
    இந்த உரையை கேட்கும்போது ஏற்படும் உணர்வு,
    மொழி பெயர்ப்பை கேட்கும்போதோ, செய்தித்தாள்களில்
    படிக்கும்போதோ ஏற்பட வாய்ப்பு குறைவு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.