முட்டாள் மத்திய மந்திரி…..

 

மத்திய மந்திரியாக இருந்தால் முட்டாள் என்று
சொல்லக்கூடாதோ..?
சிரத்தைக் கொய்து விடுவார்களோ ..?
மந்திரிப் பதவிக்கு அருகதையற்ற முட்டாளை –
முட்டாள் என்று சொல்லாமல் வேறு
எப்படிச் சொல்வது …?

aAnant kumar

அனந்தகுமார் என்று ஒரு உளருவாய்
மத்திய ரசாயன உர மந்திரி –
கர்னாடகாவைச் சேர்ந்தவர்.
அவர் தன் வேலையை பார்த்துக் கொண்டு போகாமல் –
திரும்பத் திரும்ப –
காவிரி பிரச்சினையில் வாய்க்கு வந்தபடி எல்லாம்
பேசிக்கொண்டு திரிகிறார்….

சனிக்கிழமை பங்களூரில் பேசும்போது, சுப்ரீம் கோர்ட்டில்
கர்னாடகாவின் மேல்முறையீட்டு மனு பரிசீலனையில்
இருக்கும்போது பிரதமரை முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு
தான் வலியுறுத்தினாலும், எத்தனை கடிதங்கள்
எழுதினாலும் – பிரதமரால், சட்டப்படி காவிரி ஆணையம்
அமைக்கவே முடியாது. முதல்வர் ஜெயலலிதா
செய்வது வெற்று அரசியல் என்று கூறி இருக்கிறார்.

அப்படி சட்டப்படி காவிரி ஆணையம் அமைக்க முடியாது
என்பது இந்த முட்டாள் மந்திரிக்கு தெரியும் என்றால்,
கர்னாடகா முதல்வரையும், வெங்காய நாயுடுவையும்,
மற்ற அனைத்து கட்சித் தலைவர்களையும்
அழைத்துக்கொண்டு, டெல்லிக்கு
காவடி எடுத்து,பிரதமரை சந்தித்தது ஏன் ..?
வெத்து அரசியல் தானே …?

தமிழக முதல்வர் மனு கொடுத்ததும், பின்னர் பேச்சு
வார்த்தை நடத்தியதும் – பிரதமர் மோடியிடம்.
பிரதமருக்கும், முதல்வருக்கும் இடையே
நிகழ்ந்த பேச்சு வார்த்தையில் எத்தகைய செய்திகள்
பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது அவர்கள் இருவருக்கும்
மட்டுமே தெரிந்த விஷயம்.பிரதமர் இந்த பிரச்சினை குறித்து
இதுவரை வாய் திறந்து எதுவும் கூறவில்லை.

இந்த நிலையில், பிரதமர் என்கிற தலை இருக்க
அனந்தகுமார் என்கிற வால் ஆடுவது ஏன் ..?
பிரதமர் இந்த முட்டாளை –
வாலைச்சுருட்டிக்கொண்டு வாளாயிருக்கும்படி
அறிவுறுத்த வேண்டும். இல்லையேல் அந்த வால் ஒட்ட
நறுக்கப்பட வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to முட்டாள் மத்திய மந்திரி…..

 1. Sanmath சொல்கிறார்:

  Dear KM

  We have to accept one reality that TN has sent only one MP and Karnataka has sent 16 MPs to support the central government. So such shoutings cannot be stopped. One pacifying thing is that Central gov will act on Supreme Court’s verdict. TN govt should be vigilant so that the present case in SC is not dragged by Karnataka. We can hope only this while having 37 slaves.

 2. GOPALASAMY சொல்கிறார்:

  if there is a dispute between two states, a central minister can not talk whatever he wants, Ananthakumar’s irreseponsible, silly behaviour to be condemned. Jaya is a shrewd politician and she will get the supreme court order favourably.

 3. ரங்கராஜன் ராஜகோபாலன் சொல்கிறார்:

  தமிழ் அமைச்சர்கள் பொன்ராதாகிருஷ்ணனும்,
  திருமதி நிர்மலா சீதாராமனும்,
  ‘மத்திய அரசு பாரபட்சமின்றி, சட்டம் சொல்வதைச்
  செய்யுமென்று’ மிக கவனமாகவும்,
  பொறுப்புடனும் பதில் சொல்கிறார்கள்.
  ஆனால் கர்னாடகாவைச் சேர்ந்த பிஜேபி அமைச்சர்கள்
  தாங்கள் மத்திய அமைச்சர்கள், அனைவருக்கும்
  பொதுவானவர்கள் என்பதை மறந்து விட்டு,
  வெறித்தனமாகப் பேசுகிறார்கள். இது நிச்சயம்
  கண்டிக்கத்தக்கது.நீங்கள் எழுதியிருப்பது மிகச் சரி.
  அனந்தகுமார் அடக்கப்பட வேண்டும்.

 4. Ganpat சொல்கிறார்:

  Anathakumar is nobody for us.I am not happy with Modi .He should have controlled his(Ananth) talking..

 5. todayandme சொல்கிறார்:

  // பிரதமர் இந்த பிரச்சினை குறித்து இதுவரை வாய் திறந்து எதுவும் கூறவில்லை. //
  இது குறித்து மட்டுமில்லை, தமிழகத்திற்கான வேறெந்தப் பிரச்சினையைக் குறித்தும் எதுவும் கூறியதாகத் தெரியவில்லை.

  \\ பிரதமர் இந்த முட்டாளை – வாலைச்சுருட்டிக்கொண்டு வாளாயிருக்கும்படி அறிவுறுத்த வேண்டும். \\

  இந்த முட்டாளை மட்டுமல்ல, வேறெந்த தன் கட்சியோ அல்லது மற்றெந்தக் கட்சி முட்டாளையோ வாலைச்சுருட்டிக்கொண்டு இருக்கும்படி அறிவுறுத்த அவர் இதுவரை பழகவில்லை என்பதை பலமுறை தமிழக பாஜக நிர்வாகிகள், பல்வேறு மாநில பாஜக நிர்வாகிகள் (கூட்டணி தேர்வு முதல், தம் கட்சிக்கு ஆதரவு அளிக்கவேண்டிய விஜபிக்கள் முதல் தலையாய காவிரி / முல்லைப்பெரியார் நீர் பிரச்சினை, எரிபொருள்நுகர்வு/சிவில்சப்ளைஸ் பங்கீடு வரை தேர்தலுக்கு முன்னதிருந்தே பிரதமராக இருக்கும் இன்றுவரை) நமக்கு அறிவுறுத்தியுறுக்கிறார்கள்.
  சொந்தக் கட்சியினரைக் கண்டிக்கமுடியாத பிரதமரின் நிலையைப் பார்த்தால் நாம்தான் வாளாயிருக்கவேண்டும் போல.

 6. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  சொந்தக் கட்சியினரைக் கண்டிக்கமுடியாத பிரதமரின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது., பிரதமர் இந்த முட்டாளை வாலைச்சுருட்டிக்கொண்டு வாளாயிருக்கும்படி
  அறிவுறுத்த வேண்டும். இல்லையேல் அந்த வால் ஒட்ட நறுக்கப்படும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.