அதிசயமான கடற்கரை விமான தளம் ஒன்று…..

 

நாம் விமானங்களில் பறந்திருக்கிறோம். விமான
நிலையங்களில் மிக அருகில் நின்று விமானங்களின் முழு
வடிவையும் பார்த்திருக்கிறோம். ஆனால், நம் தலைக்கு
மேல் 20-25 அடி உயரத்தில் விமானம் பறப்பதை நேரடியாக
அதன் கீழ் நின்று அனுபவித்திருப்போமா …?
அந்த மிக பலத்த ஒலியையும், அது விட்டுச்செல்லும்
பலத்த காற்றின் வேகத்தையும் அனுபவித்திருப்போமா ..?

கடல் மார்க்கமாக வந்து, நேரடியாக தரையில் இறங்கும்
விமானங்கள்..! ஓடுதளத்திற்கும் (runway ) கடல்
நீருக்கும் இடையே மிகச்சிறிய, சுமார் 50 -100  அடி
அகலத்திற்கான ஒரு கடற்கரை. அந்த கடற்கரையில்
விமானங்கள் மேலே கிளம்பும்போதும், கீழே
இறங்கும்போதும், தலைக்கு மேலே சுமார்
20-25 அடி உயரத்திற்குள்ளாகவே பறக்கின்றன.
(கீழேயுள்ள புகைப்படங்களைப் பார்த்தால் விளங்கும் ..)

பலத்த ஓசையுடன், போயிங் விமானங்கள் பறக்கும்போது
எழும் மிகவேகமான காற்று (மணிக்கு 100 மைல் வேகம் )
கடற்கரையில் நிற்கும் மக்களை நிலைகுலையச் செய்து
சாய்த்து விடுமாம். சில சமயங்களில் அங்கு நிற்பவர்களை
தூக்கிச் சென்று கடல் நீரில் எறியும் அளவிற்கு வேகம்
கொண்டதாம் இந்த காற்று. இந்த காற்றையும், அதன்
சீற்றத்தையும் அனுபவிக்கவும், தரையிலிருந்து மிக
வேகமாகப் பறக்கும் விமானங்களின் கீழ் நின்று வேடிக்கை
பார்க்கவும் என்றே டூரிஸ்டுகள் வரும் ஒரு இடம்
பிரின்சஸ் ஜூலியானா விமான நிலையம்..

இங்கே உள்ள ஓட்டல்களில் விமானங்கள் கிளம்பும் மற்றும்
தரையிறங்கும் நேரங்களை அவ்வப்போது போர்டுகளில்
எழுதி வைத்து விடுகிறார்களாம். சரியாக அந்த நேரங்களில்
மக்கள் கடற்கரையில் வந்து கூடி விடுகிறார்களாம்.

பசிபிக் கடலில், கேரிபீன் தீவுகளில் ஒன்று செயிண்ட்
மார்டென். சுமார் 87 சதுர கிலோமீட்டர் பரப்பளவேயுள்ள
இந்த தீவின் வடக்குப் பகுதி பிரெஞ்சு நாட்டிற்கும்,
தென் பகுதி நெதர்லாந்து நாட்டிற்கும் சொந்தம் என்பது
இதில் இன்னொரு விசேஷம். மொத்த மக்கள் தொகை –
பிரெஞ்சுப் பகுதியில் 36,000 பேரும், நெதர்லாந்து
பகுதியில் 41,000 பேரும் ஆக மொத்தம் சுமார் 77,000
பேர் மட்டுமே. வந்து போகும் டூரிஸ்டுகள் எக்கச்சக்கம்…!

மேலே விவரித்திருக்கும் அற்புதமான காட்சிகளை
ஒரு செய்தி சானலில் பார்த்தேன் (abcnews ).
பிறகு வலைத்தளத்தில் தேடினேன். அற்புதமான
புகைப்படங்கள் கிடைத்தன. கீழே உங்களுக்காக ….

 

sa-1sa-2sa-3sa-4sa-5sa-6sa-7sa-8sa-9sa-10sa-11sa-12sa-spl1_22_07_11_9_26_41

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அதிசயமான கடற்கரை விமான தளம் ஒன்று…..

 1. ரங்கராஜன் ராஜகோபாலன் சொல்கிறார்:

  அற்புதமான ரசனை சார் உங்களுக்கு.
  பாராட்டுக்களும், நன்றியும்.

 2. T.N.Balasubramanian சொல்கிறார்:

  மூன்று நாட்களுக்கு முன்புதான் இந்த இடங்களுக்கு சென்று வந்தேன் . பார்க்கவேண்டிய இடம்தான் .
  சிறிய திருத்தம் : இவை அமைந்திருப்பது வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் – வட பசிபிக்கில் இல்லை .
  விமானம் கிளம்பும் போது, கடற்கரை முடிவில் இருந்து கிளம்பவேண்டும் . அப்போது ஜெட்டில் இருந்து வரும் exhaust அழுத்தம் பக்கத்தில் இருப்பவர்களை கடற்கரை நீர் பக்கம் தள்ளும் .மணல் வாரி அடிக்கும் .

  ரமணியன் ( TNBalasubramanian )

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி திரு ரமணீயன்.

   உம்ம்… கொடுத்து வைத்தவர் நீங்கள்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. D. Chandramouli சொல்கிறார்:

  Breath-taking pictures. Wish we could be there!

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.