என்ன ஆயிற்று நரேந்திர மோடியின் நிர்வாகத்திறமைக்கு …?

 

திரு. நரேந்திர மோடி பாராளுமன்ற பாஜக உறுப்பினர்களின்
தலைவராக ( பிரதமராக ) தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆற்றிய உரை,
பிறகு பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி
தெரிவிக்கும்போது ஆற்றிய பதிலுரை – ஆகியவை மிகுந்த
நம்பிக்கையை அளித்தன.

அவர் பிரதமராக பதவியேற்றதும் எடுத்த முதல் கட்ட
நடவடிக்கைகள், அமைச்சர்களுக்கு அளித்த அறிவுரைகள்,
துறைச்செயலாளர்களுடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டு
கொடுத்த ஆணைகள் – மோடியின் தலைமையிலான அரசைப்பற்றி
மிகுந்த நம்பிக்கையை கொடுத்தன.

ஆனால் ……..

வரிசையாக நிகழும் ஒவ்வொரு செயல்களும், அவற்றிற்கு
பாஜக அரசின் தரப்பில் அளிக்கப்படும் வியாக்கியானங்களும்
வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கின்றன.
மோடி அவர்களே —– நீங்களும் அவ்வளவு தானா ….?
என்கிற அளவிற்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றன.

1) அமைச்சர்கள் ஆளாளுக்கு தங்கள் இஷ்டப்படி தோன்றியதை
எல்லாம் பேசுகிறார்கள். காணாததைக் கண்டது போல் … என்று
சொல்வார்களே அது போல்…! அமைச்சரவைக்கு கூட்டுப்பொறுப்பு
இருக்கிறது என்பதையே அறியாதது போல் பேசுகிறார்கள்.

2) தேவையில்லாமல் இந்தி சுற்றறிக்கையை பிறப்பித்து,
நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்கள் நடக்கின்றன…
இந்த சுற்றறிக்கைக்கு இப்போது அவசியம் என்ன என்று கேட்டால்,
நாங்கள் புதிதாக ஒன்றும் செய்யவில்லை. முந்திய காங்கிரஸ்
அரசில் உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழி துறையானது
கடந்த 2014 மார்ச் 10-ந் தேதியன்று இந்தியை பயன்படுத்துவது
தொடர்பாக ஏற்கெனவே ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
அதையே தான் இப்போது மீண்டும் உள்துறை அமைச்சகம் மே
27ந்தேதி மீண்டும் சுற்றறிக்கையாக அனுப்பியது. நாங்கள் புதிதாக
ஒன்றும் செய்யவில்லை என்று பதில் வருகிறது.

காங்கிரஸ் அரசு மார்ச் 10ந்தேதி அனுப்பிய
சுற்றறிக்கையை மீண்டும் இப்போது பாஜக அரசு மே 27ந்தேதி
அனுப்ப வேண்டிய அவசியம் என்ன வந்தது ..?

தொடர்ந்து கிளம்பிய அமளிக்குப் பிறகு, ட்விட்டர், ஃபேஸ்புக்,
ப்ளாக்குகள் ஆகியவற்றில் இந்தியை கண்டிப்பாக பயன்படுத்த
வேண்டும் என்கிற உத்திரவு இந்தி பேசும் மாநிலங்களுக்கு
மட்டும் தான் என்று விளக்கம் வருகிறது. என்ன மடத்தனமான
வியாக்கியானம் இது …? சமூக வலைத்தளங்களான ட்விட்டர்,
ஃபேஸ்புக், ப்ளாக்குகள் ஆகியவற்றிற்கு இந்தி பேசும் மாநிலம்,
இந்தி பேசாத மாநிலம் என்கிற பிரிவினைக் கொள்கை எப்படி
பொருந்தும். உலகம் முழுவதும் பார்க்கும் வலைத்தளங்களல்லவா
இவை …?

இந்தி மொழியைத் திணிக்கும் வேலையை விட்டு விட்டு
விலைவாசியைக் குறைப்பது மற்றும் நாட்டின் வளர்ச்சி
குறித்த வேலைகளைப் பார்க்கின்ற வழியைப் பாருங்கள் என்று –
திமுக தலைவர் கருணாநிதி கூட , நரேந்திர மோடிக்கு அறிவுரை
கூறுகின்ற அளவிற்கு ஒரு நிலையை ஏற்படுத்துவானேன்…?

ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினர் சிலரின் இந்தி பற்று ( அல்லது
வெறி..? ) வெளிப்படையாகவே தெரிகிறது.
பாஜக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் சரியாக வரவில்லை
என்பதற்காக (அருண் ஜெட்லி, ரவிஷங்கர் பிரசாத், திருமதி
நிர்மலா சீதாராமனைத் தவிர ) மக்கள் அத்தனை பேரையும்
இந்தி பேசச்சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா …?

3) பாராளுமன்றம் இன்னும் முறையாகக் கூடாத நிலையில்,
ரெயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் எல்லாம் வரவிருக்கிற
நிலையில், மக்கள் பல நல்ல அறிவிப்புக்களை
எதிர்பார்த்திருக்கிற நிலையில் —
ஒரேயடியாக 14.2 % அளவிற்கு ரயில் கட்டணங்களை உயர்த்தும்
செயலை அறிவுகெட்டத்தனம் என்பதா இல்லை
பைத்தியக்காரத்தனம் என்பதா …?

new railway minister

ரெயில் மந்திரி மீண்டும் கூறுகிறார் – நான் புதிதாக எதையும்
தீர்மானிக்கவில்லை. ஏற்கெனவே காங்கிரஸ் அரசு முடிவு
செய்து நிறுத்தி வைத்திருந்த உத்திரவில் தான் நான் கையெழுத்து
போட்டேனென்று…
காங்கிரஸ் செய்த அதே காரியங்களை மீண்டும் செய்வதற்காகவா
மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள் ….?
உங்களுக்கு என்று அறிவோ, தெளிவோ இல்லையா …?
மக்கள் இதை தாங்குவார்களா -..?
நல்ல திட்டங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு
இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறோமே என்று யோசிக்க கூட
துப்பில்லையா …?

முதலில் பல வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து –
செயல்படுத்தத் துவங்கி விட்டு, பின்னர் மக்கள் தாங்கும்
அளவிற்கு 5 அல்லது 6%
உயர்வை அறிவிக்க முடியாதா……?

இத்தனையும் நடக்கிறது –
பிரதமர் மோடி இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை.
எதற்கும் அவரிடமிருந்து ரீ-ஆக் ஷனே இல்லை…!

என்ன ஆயிற்று ….? எங்கே போயிற்று மோடி அவர்களின்
நிர்வாகத் திறமை அனைத்தும் …..?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to என்ன ஆயிற்று நரேந்திர மோடியின் நிர்வாகத்திறமைக்கு …?

 1. todayandme சொல்கிறார்:

  // 1) அமைச்சர்கள் ஆளாளுக்கு தங்கள் இஷ்டப்படி தோன்றியதை
  எல்லாம் பேசுகிறார்கள். காணாததைக் கண்டது போல் … என்று
  சொல்வார்களே அது போல்…! அமைச்சரவைக்கு கூட்டுப்பொறுப்பு
  இருக்கிறது என்பதையே அறியாதது போல் பேசுகிறார்கள்..//

  அமைச்சர்கள் பேசிவிட்டுப்போகட்டும், எல்லாரும் இந்தியை மட்டும் வைத்துக்கொண்டு என்னவேண்டுமானாலும் பேசலாம், ஏனென்றால் இந்தியா என்று பெயர் இருப்பதே ‘இந்தி’யால் தான் என்ற எண்ணம் உடையவர்கள்.

  ஆட்சிநிர்வாகம் என்ற முறையில் அமைச்சர்களைக் கட்டுப்படுத்தவேண்டிய பிரதம அமைச்சர் அல்லது கட்சியினர் என்ற முறையில் தொண்டர்களைக் கட்டுப்படுத்த கட்சித்தலைமைக்கு அந்த ஆற்றல் இல்லாததுபோலத்தான் தெரிகிறது.

  //2) தேவையில்லாமல் இந்தி சுற்றறிக்கையை பிறப்பித்து,
  நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.//

  இன்றைக்கு உள்ள நிலைமைக்கு இந்தி தெரிந்தால் நல்லது, மற்ற மாநிலங்களுக்குச் செல்லவேண்டுமானால் இந்தி தெரிந்து கொள்ள வேண்டும், சென்னையில் வாழவேண்டுமானால்இ ந்தி தெரிந்தே ஆக வேண்டும் .

  (குறிப்பாக OMR மற்றும் SEZ ஏரியா ) பேருந்து/ரயில்களில் பயணம் செய்யவேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு 10 நிமிடம் உட்கார்ந்துபார்த்தால் தெரியும்-தமிழன் தமிழ் பேசுவதில்லை, உடைந்த ஆங்கிலத்தில் உதார் விடுகிறான். 90சதவீதம் பேச்சுக்குரல்களில் தமிழோ ஆங்கிலமோ நிச்சயம் இல்லை.

  அந்த அளவுக்கு வந்தாரை வாழவைக்கும் தமிழகம் . தமிழர் நாம்.

  நிலைமை இவ்வாறிருக்க,

  நாட்டில் என்பதை விட, தமிழ்நாட்டில் என்று சொல்லலாம். ஏனென்றால் மற்ற மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு இந்த அளவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தத்தம் மாநிலமொழிகளுடனே ஆட்சிமொழியாகிய இந்தியையும் சகோதரமொழியாகப் பாவிக்கும் பரந்த எண்ணம் மற்ற மாநிலத்தவருக்கு உண்டு. தமிழருக்குத்தான் இந்தி எதிர்ப்பு என்ற பாய்சனையும் குறுகிய மனப்பான்மையை ஊட்டிவளர்த்த முக உண்டு.

 2. ரங்கராஜன் ராஜகோபாலன் சொல்கிறார்:

  பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கொடுத்தது அவர்களுக்கு
  பொறுப்பை கொடுப்பதற்கு பதிலாக மிதப்பைக்
  கொடுத்திருக்கிறது. இது நம்முடைய தவறு தான் என்று
  தோன்றுகிறது.

 3. ஸ்ரீநிவாசன் சொல்கிறார்:

  ரயில் கட்டண உயர்வை முழுமையைாக திரும்பப் பெற்றால் மிக நல்லது. முடியாத பட்சத்தில், ஏசி அல்லாத பெட்டிகளுக்கான கட்டணத்தையும், சரக்கு ரயில் கட்டணத்தையைும் திரும்பப் பெறவோ / குறைக்கவோ செய்தால் மட்டுமே விலைவாசி உயர்விலிருந்தும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான பாதிப்பிலிருந்தும் ஓரளவு தப்பிக்க முடியும்.

 4. Sankara N. Thiagarajan சொல்கிறார்:

  இந்தி மொழி தெரிந்தால் தான் “சென்னையில்” வாழ முடியும் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. மற்ற தென் மாநிலத்தில் ஒன்றும் செய்வதில்லை என்பதால் நாம் (தமிழ்நாடு) அதை எதிர்க்கக்கூடாதா? எந்த மொழியையும் திணிக்க அனுமதி அளிக்ககூடாது.இந்தி மொழி பேசும் மாநிலங்களின் (உ.பி, ம.பி, பீகார், …)அவல நிலையை சீராக்க மோடி அரசாங்கம் முனைவதை விட்டு விட்டு இந்த ஆர்.எஸ்,எஸ்ஸின் கையாள் போல செயல்படுவதைத்தவிர்த்தால் நல்லது.

  இரயில் கட்டண உயர்வினை ஆதரிக்கிறேன். காரணங்கள்:
  1. நமது இந்திய மக்களுக்கு நல்ல தரமான சேவையினைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கசக்கும்.
  2. எல்லாமே அரசாங்கம் இலவசமாக கொடுக்க வேண்டும்.
  3. பதினைந்து வருடங்களுக்கு முன் வருமானம் என்ன? இன்று என்ன? ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு அதிகமாக கட்டணம் இருந்தாலும் வாய் பேசாமல் செலுத்த முடிகிறதல்லவா?
  4. இரயில் வசதிகளை மேல் நாட்டில் உள்ளது போல இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு வருடமும் கட்டணம் அதிகரிக்க வேண்டும். அப்போது தான் தரமான இரயில் பயணம் சாத்தியம்.

  அன்புடன்\
  சங்கர நா. தியாகராஜன்.
  ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து.

  • todayandme சொல்கிறார்:

   திரு சங்கர நா. தியாகராஜன்,

   ஆங்கிலம் – புல் ப்ரொபசனல் ப்ரொபிசியன்சி அளவிற்கு தெரிந்திருக்கிறது
   ஆனாலும்
   இந்தி-லிமிட்டெட் வர்க்கிங் ப்ரொபிசியன்சி அளவிற்காவது தெரிந்திருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எப்படி வந்தது உங்களுக்கு.

   தாய்மொழி தமிழ் மட்டும் போதும், இந்தி தேவையில்லை என்று இருந்திருக்கலாமே.

   இந்தித் திணிப்பை எதிர்க்கலாம், இந்தியையே எதிர்க்கத் தேவையில்லை.

   ——-

   திரைகடலோடியும் திரவியம் தேடும் தமிழனுக்கு கொஞ்சூண்டாவது மற்ற மொழிகள் தெரிந்திருக்கவேண்டும், அதைக்கற்றுக் கொள்ளவேண்டும் என்ற தாகம் வேண்டும். அதுவும் ஒரு மொழி தானே. தாகம் இருப்பவர்களையும் வென்னீர் ஊற்றி அணைத்த கட்சிகளை வளர்த்த தமிழர் நாம்.

   இன்றைக்கு தமிழன் வெளிமாநிலம் செல்லவேண்டாம், அன்றாடங்காய்ச்சி வேலைமுதல் அய்-பேடில் கலக்கும் வேலைவரை பிழைப்புக்காக வெளிமாநிலத்திலிருந்து இங்கு வரும் மற்ற மாநிலத்தவரை வேலை வாங்குவதற்காகவாவது, அட்லீஸ்ட் அவர்களுடன் தினசரி வாழ்க்கையில் கலந்து பழகவாவது இந்தி அவசியம் தேவை. ஏனென்றால் தமிழனைத் தவிர மற்ற மாநிலத்தவர் அனைவருக்கும் இந்தி தெரிந்திருக்கிறது. கன்னடம்-தெலுங்கு-மலையாளம்-குஜராத்தி-பஞ்சாபி போன்ற மற்ற எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்வதை விட இந்தி ஒன்றை மட்டும் அடிசனலாகக் கற்றுக்கொள்வதால் என்ன குறைந்துவிடும்.

   பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வதாலேயே கலாசார-நாகரிக-பண்பாட்டுப் பரவல் ஏற்படும்.

   தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அட்மிசனுக்கு ஏன் இவ்வளவு டிமாண்ட். விரும்பும் மொழிகள், விரும்பும் பாடங்கள், விரும்பும் வசதிகள்.
   அரசுப்பள்ளிகளில் ஒரு விருப்பப் பாடவகுப்பாக பேச்சு வழக்கு இந்தி அல்லது பேச்சு வழக்கு ஆங்கிலம் வைத்தால் இனிவரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்காவது உபயோகப்படும்.

   —–

   தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லி மற்றோரை மாய்த்தவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு தமிழன்றி மற்ற மொழிகளையும் ஊட்டித்தானே வளர்த்தார்கள்.

   தமிழனை ஏன் எல்லோரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க? அவன்தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்.
   ———————————————————
   (1. நமது இந்திய மக்களுக்கு நல்ல தரமான சேவையினைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கசக்கும்)

   ஏற்கனவே இரயில் சேவையை என்ன கட்டணம் செலுத்தாமல் ஓசியாகவா அரசு கொடுத்துக்கொண்டிருக்கிறது.

   (2. எல்லாமே அரசாங்கம் இலவசமாக கொடுக்க வேண்டும். )

   வேண்டியதில்லை. அதிகசதவீத்த்தில் உள்ள நடுத்தர-கீழ் நடுத்தர- அடித்தர மக்கள் உபயோகப்படுத்தும் சேவையை அவர்கள் வருமானத்திற்கேற்றபடி நியமிப்பதுதான் அரசின் வேலை.

   (3. பதினைந்து வருடங்களுக்கு முன் வருமானம் என்ன? இன்று என்ன? ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு அதிகமாக கட்டணம் இருந்தாலும் வாய் பேசாமல் செலுத்த முடிகிறதல்லவா? )

   பதினைந்து வருடத்திற்கு இடையில் லாலுபிரசாத் யாதவ் என்ற அரசியல்வாதி கூட ரெயில்வேதுறையை லாபத்தில் நடத்தியதாக சான்றுகள் உள்ளனவே. அது எவ்வாறு? அமைச்சர்கள் தங்கள் அறிவு-நிர்வாகத் திறமையை கொள்ளையடிப்பதிலும் மக்களை வாட்டுவதிலும் காட்டாமல் அவர்களுக்கு நன்மைசெய்வதில் காட்டலாமே. திரைப்படங்கள் அதனால் தான் கள்ளசிடியில் பார்க்கப்படுகின்றன. குறைந்த கட்டணங்களில் சினிமா பார்க்க இயலுமானால் எவன்தான் தம்மாத்தூண்டு டிவி ஸ்கிரினில் பார்க்கவிரும்புவான்? தொழிலைக் கெடுப்பது உருவாக்குபவர்களேதான்

   (4. இரயில் வசதிகளை மேல் நாட்டில் உள்ளது போல இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு வருடமும் கட்டணம் அதிகரிக்க வேண்டும். அப்போது தான் தரமான இரயில் பயணம் சாத்தியம்.)

   நீங்கள் நெதர்லாந்திலேயே இருந்துவிடுங்கள், தமிழ் மற்றும் தமிழனின் முன்னேற்றத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம்.

 5. புது வசந்தம் சொல்கிறார்:

  நேர்மையான பதிவு. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும். இங்கு எல்லோரும் நாட்டாமை போல பேசுகிறார்கள். இரயில் கட்டணத்தில் உயர் வகுப்புகளை அதிகரிக்கலாம். ஆடம்பர பொருட்கள்/உயர்ரக கார்/மது/சிகரெட் வகைகள் மீது விலை அதிகரிக்கலாம். இந்தியாவின் பெருவாரியான மக்களை பாதிக்க கூடியவைகளை உடனடியாக செய்வதை தவிர்க்கலாம். அவர்களின் திட்டம் என்று கூற இவர்கள் எதற்கு? ஓட்டு போட்ட மக்களுக்கு தண்டனையா ? சமையல் எரிவாயு விலை வேறு கூடப்போகிறதாம்.
  அன்று இவர்கள் கூச்சலிட்டார்கள், ஆனால் இன்று ?. இது மாற்றம் இல்லை, வெறும் ஏமாற்றமே !.

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  தன் வாழ்வாதார தேவையெனில் புலம் பெயர்ந்த மனிதன் தனக்கு தேவையான மொழியை கற்று கொள்வான். வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் எத்தனையோ தொழிலாளர்கள் தங்களுக்கான தொடர்பு மொழியை (அரபி மொழி உட்பட) அங்கேயே கற்று கொள்கிறார்கள்.
  இந்தி படித்துதான் தெரிய வேண்டியதில்லை. வேண்டுமானால் எம் செம்மொழி தமிழ் மொழியை வடநாட்டவர் கற்று கொள்ளட்டுமே. நங்கள் எங்கள் வலைதலத்தில் (தமிழக அரசு) தமிழ் மட்டுமே உபயோகிப்போம். என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசியுங்கள். ஒவ்வொன்றயும் மொழி பெயர்த்து வேலை ஆரம்பிக்கவே ஐந்து வருடம் ஓடி விடும். மொழி பெயர்ப்பு செய்ய ஒரு துறை உண்டாகும்.

  • BC சொல்கிறார்:

   சரியாக கூறினீர்கள் புது வசந்தம்.புலம் பெயர்ந்த தமிழன் தன் வாழ்வாதார தேவையெனில் தனக்கு தேவையான மொழியை கற்று கொள்வான் என்பதே மிவும் சரியானது. சிங்களம் கற்று கொள்ள மாட்டோம் என்ற இலங்கை தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களாக மாறிய பின் நோர்வே மொழி,பிரான்சு மொழி,கொலன்ட் மொழி எல்லாம் தமிழை விட சிறப்புற கற்று கொண்டனர்.

 7. D. Chandramouli சொல்கிறார்:

  Dear KM,
  Voters depended on Modi’s wise leadership. It is a great disappointment that his government is raking up an unnecessary and a foolish controversy re Hindi. There are countless other priorities that the government should focus on. I read that the bureaucrats from Non-Hindi regions are brushing up their dictionary on how to draft notes in Hindi. Secondly, the Railway Ministry must have come up with some innovative ideas (like raising money by utilizing Railway properties for private ads, etc), instead of making a hefty increase in rail fares. Worse still, the Railways have not even cared to tell the public on how they would improve the safety and security of the traveling public. Just raising fares without a word on improvements tantamount to treating the passengers shabbily.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  என் கருத்து –

  1) இந்தி பிரச்சினையை இப்போது கிளப்பியது மிகப்பெரிய
  தவறு. செய்வதற்கு ஆயிரம் இருக்கும்போது, இது தேவையே
  இல்லாத ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா. இந்தியும், ஆங்கிலமும்
  மத்திய ஆட்சி மொழிகளாக இதற்கு முன்பிருந்தது போலவே
  தொடரும் என்று உறுதியளித்து விட்டு, இந்தப்
  பிரச்சினையை இந்தி வெறியர்கள் மீண்டும் கிளப்பாமல்
  இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும்.

  2) மத்திய அமைச்சர்கள் தலைக்குத் தலை நாட்டாமை
  செய்வதையும் பிரதமர் கண்டிக்க வேண்டும்.

  3) ரெயில்வேயில் – முதலில் வளர்ச்சித் திட்டங்களையும்,
  பயணிகளுக்கான அதிகரித்த வசதிகளையும் அறிவிக்க வேண்டும்.
  அவற்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
  மக்கள் வளர்ச்சியை தங்கள் கண்களால் பார்க்க வேண்டும்.
  அதன் பின்னர் சிறிய அளவுகளில் (5 அல்லது 6 சதவீத்ம்)
  கட்டண உயர்வுகளை அறிவிக்கலாம்.
  (கட்டணங்களை உயர்த்தாமலே ரெயில்வே துறையின்
  வருமானங்களை அதிகரிக்க, அற்புதமான பல வழிகள்
  இருக்கின்றன. நிபுணர்களின் உதவியுடன் அவற்றை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் )

  4) தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைத்திருக்கிறது. நினைத்ததை
  எல்லாம் செய்யலாம் என்கிற மனப்பான்மையை முதலில்
  கைவிட வேண்டும். குறைந்த பட்சம் 6 மாத காலத்துக்காவது
  மக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த செயலிலும் மத்திய அரசு
  ஈடுபடக்கூடாது.

  5) விலைவாசியைக் குறைப்பது, உற்பத்தியை அதிகரிப்பது,
  பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது
  ஆகியவற்றிற்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  இவை நியாயமான எதிர்பார்ப்புகள் தானே நண்பர்களே….?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 9. chandraa சொல்கிறார்:

  railway fare increase… let us support the present govt.. , half heartedly… but the circular regarding hindi should be scrapped by the central govt. venksaiah naidu took his oath in english only when he took over the minister post.. now he talks differently. let the govt concentrat welfare measures… and other useful things.

 10. gopalasamy சொல்கிறார்:

  In british period, railway acquired lot of lands for future development. This lands were sold out and profit was shown in a particular minister’s period. Railway dept is white elephant. Overstaffed. Not modernised. Fare increase unavoidable.
  Regarding hindi: I studied in govt school in tamil medium. Even after 30 years of experience in middle east, i dont know Hindi. It is a handicap. I could not mix with other states and pakistani people. Still in tamilnadu govt schools, hindi is not taught. But lower middle class parents also putting their wards in matriculation school where hindi is optional. Govt policy is that poor students should not be allowed to learn hindi. In other south indian states there is no such animosity.
  We should not develop this.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Mr. Gopalasamy,

   I am sorry to say this – you are not correct.

   Even if you have not studied Hindi in School,
   Who stopped you from learning Hindi
   thereafter ….?

   I myself taught my wife to speak and understand
   Hindi when she came to North India –
   (for the first time in her life when I had a
   transfer to U.P. ). She was fine within 6 months.

   My two and half year old daughter was
   much more quicker and she was conversing
   in Hindi within 2 months.

   You might have heard – ‘Necessity is the Mother
   of Invention’. So when necessity comes,
   people are required only just to put efforts .
   Some may need more efforts – that’s all…

   I never say hindi should not be taught in schools.
   After Mothertongue and English as the first and
   second languages,
   People should have the option to read any
   language of their choice as 3rd language.

   I am only against imposition of HINDI as the
   ONLY OFFICIAL LANGUAGE of Government of India.

   Including all Hindi speaking States,
   hardly 41 % of Indians know Hindi.
   How and why the remaining 59%
   people…should be forced to learn that language …?

   Learning Hindi in our own interest
   and imposing Hindi as the ONLY
   OFFICIAL language of Central Govt. are two different
   things. I oppose only the second part….!

   -with all best wishes,
   Kavirimainthan

   p.S. – You will be surprised to know that
   I know Hindi very well and I have absolutely
   nothing against learning Hindi as a language
   of our liking.

 11. gopalasamy சொல்கிறார்:

  I accept your view. I am not having interest to learn any language. Even in arabic, i know only maximum 20 words. when i go to Bangalore also, i am in trouble as i dont know kannada. My daughter uses to write articles in Rajasthan pathrika. What i want to record is, that in Tamilnadu, govt school students only are not given opportunity to learn hindi.

 12. Tbr Joseph சொல்கிறார்:

  மோடி திறமைசாலி என்று யார் சொன்னது? சுமார் இருபது ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த குஜராத் ஒரு விஷயத்தில் கூட நாட்டின் முதல் மாகாணம் அல்ல என்பதுதான் தெரிந்த விஷயமாயிற்றே? இவரிடமிருந்து இதை விட பெரிதாக எதையும் எதிர்பார்த்தால் அது நம்முடைய குற்றமே!

 13. chandraa சொல்கிறார்:

  the rulers should understand that the rapidly increasing population of india would soon be biggest threat that india is going to face. sanjay Gandhi had raised this issue ven before thirty five years…. alas.. the today ploticians… intellectuals… the govt are not seized of tis population menace.. let us pray that the present govt will take up this issue….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.