கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!!

 

கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஸ்பெக்டரம் பங்காக
சுமார் 214 கோடி ரூபாய் பணம் வந்த விதம், மற்றும் அது திரும்ப
போன விதம் பற்றி தவணை முறையில் பலமுறை, பல
ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் மூலம் ஓரளவு தெரிந்து
கொண்டோம்.

kalaignar tv

கிடைத்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப்
பார்க்கும்போது தான் – எவ்வளவு அழகாகத் திட்டம்
போட்டு வாங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
ராஜா மாட்டிக்கொண்டதும், சிபிஐ கிரிமினல் வழக்கு பதிந்து
விசாரணையை சீரியஸாக முடுக்கி விடுகிறது என்பது தெரிய
வந்ததும், அவசர அவசரமாக அந்தப்பணம் திரும்பக்
கொடுக்கப்படுகிறது. அதாவது திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதாக
ரெக்கார்டு தயார் செய்யப்படுகிறது.

அதுவும் மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டம் போட்டுத்தான்
செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், என்ன தான் மறைக்க
முயன்றாலும், சில அடிப்படை விஷயங்கள், காலம் கடந்து
விட்டதால் மறைக்கப்பட முடியாமல் நடந்ததென்ன என்பதை
சுலபமாக விளக்குகின்றன.

முழுக்கதை கீழே – ( இதில் என் பங்கு ஒன்றுமில்லை….!
பல இடங்களில் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டி இங்கு
தொகுத்ததைத் தவிர …!! )

————————

அமலாக்கத்துறை அலுவலகம் (Enforcement Directorate)
மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் –

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராஜாவின் மூலம்
பலன் அடைந்தவர்களின் ஒரு பகுதி லாபம் – சுமார் 214 கோடி,
கலைஞர் தொலைக்காட்சிக்கு மறைமுகமாக பல கம்பெனிகள்
மூலம் சென்றடைந்திருக்கிறது.

ஸ்வான் டெலிகாம் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு
யூஏஎஸ் எல் எனப்படும் சேவைக்கான லைசென்ஸ் வழங்குவதற்காக
கொடுக்கப்பட்ட சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தான்
இந்த 214 கோடி. இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனதின்
பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தவர்கள் என்கிற முறையில்
அதன் சொந்தக்காரர்களாக இயங்குபவர்கள் தான் சாஹித் பல்வா
குழுவினர். டைனமிக் ரியலிடி என்கிற நிறுவனமும் இவர்களது
டிபிஆரெல் குழுமத்துக்குச் சொந்தமானது.

இந்த டைனமிக் ரியலிடி – குசேகான் என்கிற காய்கனி கொள்முதல்
செய்து விற்கிற (காய்கறி விற்கிற நிறுவனம்) நிறுவனத்திற்கு
200 கோடியைக் கொடுத்துள்ளது. இந்த காய்கனி குசேகான்
நிறுவனம், தனக்கு வந்த பணத்தை அப்படியே சினியுக் பிலிம்ஸ்
என்கிற நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறது… சினியுக் நிறுவனம்
அதை அப்படியே கலைஞர் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டது….!!
நேரடியாகக் கொடுத்தால் வெளிப்படையாகத் தெரியும் என்பதால்,
இரண்டு மூன்று கம்பெனிகள் வழியாக குழப்ப ட்ரான்ஸ்வர்.

இந்த மொத்த பணப்பரிமாற்றமும் டிசம்பர் 2008-ல் துவங்கி
ஆகஸ்ட் 2009 க்கு உட்பட்ட ஒன்பது மாதங்களில் நடந்து
முடிந்திருக்கிறது.

ராஜா மீது சிபிஐ விசாரணை தீவிரமாகிறது என்பது தெரிய
வந்ததும், அதாவது டிசம்பர் 2010 -ல் இந்த 214 கோடி
பணப்பரிமாற்றத்தை சட்டபூர்வமாக்கும்
முயற்சியாக, முன்தேதியிட்ட (19/12/2008) வெற்று
வெள்ளைதாளில் கலைஞர் டிவியின் 37 % சதவீத பங்குகளை
வாங்குவதற்காக இந்த நிறுவனங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகை
இது என்று பத்திரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
(முன்தேதியிட்ட முத்திரைத்தாள்கள் கிடைக்காததால், வெற்று
வெள்ளைத்தாளில் பத்திரம் தயார் பண்ணி இருக்கிறார்கள்.)
214 கோடி ரூபாய்க்கு வெறும் வெள்ளைத்தாளில் பத்திரம் …..!!

இதில் இன்னொரு வீக் பாயிண்ட் – கலைஞர் டிவியின் மொத்த
மூலதனமே சுமார் 10 கோடி தான். இதன் 37% பங்குகளை
வாங்க இந்த நிறுவனங்கள் 214 கோடி அட்வான்ஸ் கொடுத்ததாக
ரெக்கார்டு தயார் செய்யப்பட்டிருக்கிறது….!

ராஜாவை சிபிஐ விசாரணக்கு அழைத்தவுடன் – அதாவது,
23/12/2010 முதல், பணத்தை திரும்பக்கொடுக்கும்
process துவங்கி இருக்கிறது. மொத்தத் தொகையும் ஒரு
மாத கால அவகாசத்திற்குள், சில தவணைகளில், திரும்பக்
கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜா 02/02/2011 அன்று கைது
செய்யப்பட்டார். அதற்குள் முழு பணமும் திரும்பக் கொடுக்கப்பட்டு
இருக்கிறது.

சரி – திரும்பக் கொடுக்க கலைஞர் டிவிக்கு இவ்வளவு பணம்
திடீரென்று கிடைத்தது எப்படி …..?

இந்தியா சிமெண்ட்ஸ் (BCCI புகழ் திருவாளர் சீனிவாசன்)
5 ஆண்டுகள் தொடர்ந்து கலைஞர் டிவியில் விளம்பரம் செய்ய
அட்வான்சாக கொடுத்த தொகை வகையில் -60 கோடி.

அடுத்து சாராய அதிபர் விஜய் மால்யாவின் யுனைடட் ஸ்பிரிட்ஸ்
நிறுவனத்திற்கு இதே போல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து
கலைஞர் டிவியில் விளம்பரம் செய்ய அட்வான்சாக கொடுத்த
தொகை வகையில் – 65 கோடி.

அடுத்து அமிர்தம் (மாறன் சகோதரர்களின் சித்தப்பா ) பிலிம்ஸ்
ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்த
அட்வான்ஸ் பணம் வகையில் – 83 கோடியும்,

ஜெமினி இண்டஸ்ட்ரீஸ் அண்ட் இமேஜிங் நிறுவனம் சார்பில்
கிடைத்த – 45 கோடியும்.

ஆக மொத்தம் – பணம் வாங்கியது கலைஞர் டிவியின் 37%
பங்குகளை விற்பதற்கான அட்வான்ஸ் தொகையே என்றும்,
விற்பனை பேரம் சரிவராததால், அட்வான்ஸ் தொகை முழுவதும்,
வட்டியுடன் திரும்பக் கொடுக்கப்பட்டு விட்டது என்பது
கலைஞர் டிவியின் வாதம்.

இந்த வாதத்தில் உள்ள இன்னொரு ஓட்டை என்னவென்றால் –
வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்கு வட்டி கொடுத்திருந்தால்,
அதற்கான வருமானவரியை (அதாவது TDS ) கழித்துக் கொண்டு
மீதியைத்தான் அந்த நிறுவனத்திற்கு கொடுத்திருக்க வேண்டும்.
அந்த வரியும் வருமான வரி அலுவலகத்திற்கு உரிய statement
-உடன் உரிய காலத்தில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். அது
செய்யப்படவில்லை.

இதில் உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் –

214 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அதற்குரிய
ஆவணங்கள் எதையும் முறைப்படி தயாரிக்கவில்லை. இவ்வளவு
பெரிய தொகைக்கு ஈடாக செக்யூரிடி எதுவும் பெறப்படவில்லை.
10 கோடி முதலில் செயல்படும் ஒரு நிறுவனத்தில் 214 கோடி
ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்…..

பணம் கொடுத்த ஒரு நிறுவனத்திற்கும், இவ்வளவு பெரிய
தொகையை கடன் கொடுக்க அருகதை இல்லை. காய்கனி
கொள்முதல் செய்யும் ஒரு நிறுவனம் 214 கோடி ரூபாய்
பெற்று, கடன் கொடுத்தது என்பது நம்பத்தக்கதாக இல்லை.

பணம் கொடுப்பது என்பது இந்த நிறுவன ஆவணங்களின்
(Memorandum of Understanding) ஒரு நோக்கமாகப்
பதிவு செய்யப்படவும் இல்லை….!!

உம்ம் …..“கடலில் தூக்கிப் போட்டாலும், கட்டுமரமாகப்
பயன்படக்கூடிய”வர்கள் … சமூகத்திற்கு செய்யும் தொண்டு இது…!

இதில் பரிதாபம் என்னவென்றால், வீட்டுப் பெண்களை
வழக்கில் சிக்கித்தவிக்க விட்டுவிட்டு, ஆண்கள் தங்களுக்கு
இதில் எந்த சம்பந்தமும் இல்லாதது போல்,

ஜம்பமாக உலா வருகிறார்கள். அந்த ஆண்களது சம்மதமோ,
சம்பந்தமோ இன்றியா இத்தனை பரிவர்த்தனைகளும்
நடந்திருக்கும்….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!!

 1. todayandme சொல்கிறார்:

  60 % பங்கு தயாளு அம்மாளுடையது.
  20 % பங்கு கனிமொழியுடையது.
  20 % பங்கு கலைஞர் தொலைக்காட்சியின் சியிஓ சரத்குமாருடையதாக இருந்தது தற்போது யாருடையது?

  இதில் தயாளு அம்மாள் அவர்களின் உண்மைப்பங்கு அல்லது அவரது கணவர் முக, மகன் ஸ்டாலின் அவர்களின் உண்மையற்ற பங்கு எவ்வளவு?

  வருவது தெரியும், போவது எப்படி என்று யாருக்குத் தெரியும்?
  (நான் குறிப்பிட்டிருப்பது 214.8 ஐ)

  வடிவேலு: இன்னுமாடா நம்பள இந்த ஊரு நம்புது?
  அல்லக்கை: அது அவன் விதி ! 🙂

  கைப்புள்ளகளக்கூட நம்பக்கூடாதுன்னு உறுதியாத் தெரியும், ஆனா அல்லக்கைகளை எப்ப நம்பலாம் எப்ப நம்பக்கூடாதுன்னு யாருக்குமே தெரியாது – அப்பேற்பட்ட அல்லக்கைகள்தான் இந்த கடலில் மிதக்கும் கட்டுமரங்கள்.

 2. Vicky சொல்கிறார்:

  Sir,

  I have a doubt. If I borrow a huge sum for constructing a building and in case I have not done it, why should I take money from others to repay my loan. I can’t understand why they did it this way.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear friend Vicky,

   A very good question – which I was putting to myself.
   I could not get any answer to this question from
   the material available in the public domain.

   However, I presume, the shareholders might have
   initially taken out and consumed the funds .

   Later, when the necessity to repay came, they must
   have found this route. However, this is also not
   convincing much. Probably we may get the details
   when the charge sheet is framed in this case.

   -with all best wishes,
   Kavirimainthan

   • M Nithil சொல்கிறார்:

    In the last 5 years or so the real estate value in and around Karaikal had increased many folds. The reason being some big names in the DMK had invested heavily. Also, in ‘savukku’ site they had mentioned with evidences that Rs. 50 crores worth of tea estate was registered in the name of MK’s family members or their associates.

    Are u not aware that ‘voltas building’ was transferred to Rasaathi Ammal.

 3. T.N.Balasubramanian சொல்கிறார்:

  தெளிவாக படைத்ததற்கு நன்றி ,காவிரி மைந்தன் .

  ரமணியன்

 4. gopalasamy சொல்கிறார்:

  So far karuna and his sons never gave any clear statement regarding this. Press is not having guts to question them directly.

 5. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  சமீப காலத்தில் உங்களால் எழுதப்பட்ட அனைத்து அரசியல் பதிவுகளையும் தாண்டி மணிமகுடமாய் இந்த பதிவு ஜொலிக்கின்றது. பாமரனுக்கும் புரியக்கூடிய வகையில்.

  பாவம் அவர்கள் குடும்பத்துப் பெண்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஜோதிஜி,

   உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

   உங்கள் இடுகை ஒன்றினை படித்துக்கொண்டிருந்தபோது,
   நேற்று உங்களைப்பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
   உங்களுக்கு இருக்கும் பணி/பொறுப்புகளுக்கிடையே எப்படி
   எழுத்தில் இவ்வளவு நேரம் உங்களால் செலவழிக்க முடிகிறது
   என்று. ஆர்வம் தான் காரணம் …. என்பது தெரிந்தாலும்
   அநியாய உழைப்பு உங்களுடையது…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. chandraa சொல்கிறார்:

  th irony is king fisher airlines from whom kalaignar t.v had obtained huge sum in settling the so called loan has to pay huge salary arrears due to its employees… and state bank of india Mumbai is the worst affected ….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.