கமல்ஹாசனின் சகோதரர் சாரு அண்ணா …..

 

கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன். இருவருக்கும்
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வயது வித்தியாசம்…!
கமலின்
சிறு வயதில் (களத்தூர் கண்ணம்மாவில் ஜெமினி-சாவித்திரி
தம்பதிகளின் மகனாக கமல் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து )
அவரை கவனித்துக்கொண்டது, சிறு பையனாக இருந்த கமலின்
திரையுலக வாழ்க்கைக்கு துணையாக இருந்தது சாருஹாசன் தான்.
அப்போது சாருஹாசன் வக்கீலாகத் தொழில் செய்து வந்தார்.

 

charuhassan srinivasan family foto

துவக்கத்தில் கமல் திரையுலகிற்கு வர சாரு அண்ணா துணையாக
இருந்தாலென்றால், 30 ஆண்டுகள் வக்கீலாகத் தொழில் புரிந்த
பிறகு சாருஹாசன் சினிமா நடிகராக திரைத்துறையில் நுழைய
தம்பியின் தொடர்புகள் காரணமாக இருந்தன என்று வைத்துக்
கொள்ளலாம். வக்கீல் தொழிலில் சாரு அண்ணா எந்த அளவிற்கு
பிரகாசமாக இருந்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் –
திரையுலகைப் பொருத்த வரையில், சாருஹாசன் ஒரு அற்புதமான,
தனித்திறமையுள்ள குணசித்திர நடிகர். மிகவும் இயல்பாக
நடிக்கக்கூடிய அவரின் குரல், வித்தியாசமானது – எனக்கு மிகவும்
பிடிக்கும். கமல்ஹாசனின் அண்ணா என்றில்லாமல், தனியாகவே
அவர் மீது எனக்கு ஒரு பிடித்தம் உண்டு.

சாருஹாசன் அவர்களின் குணாதிசயங்கள் பற்றி ஏற்கெனவே
ஓரளவு தெரியும் தான். இருந்தாலும், அண்மையில் அவர்
எழுத்துக்களைப் படிக்க நேர்ந்தபோது, அவரை இன்னும் நன்றாகப்
புரிந்து கொள்ள முடிந்தது.

தற்போதைய வயது – 84
நடிப்பது நின்று விட்டது. கிட்டத்தட்ட ஓய்வு தான்.
ஓரளவு எழுத மட்டும் செய்கிறார்.
அவரது எழுத்தில் – கிண்டல், நக்கல், அடாவடி, உண்மை,
அந்தக்காலத்து திரையுலக, அரசியல் சமாச்சாரங்கள் – எல்லாம்
அடங்கி இருக்கிறது. அவர் துவக்க காலத்தில் திமுக வக்கீலாக
இருந்தவர். பெரியார் வாசம் உண்டு. தன்னை சீர்திருத்தவாதி
என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நடப்பு நிலையை,
யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் – இன்னும் 60 ஆண்டுகளுக்கு
முந்தைய சமுதாயத்தையே மனதில் வைத்துக் கொண்டு பேசிக்
கொண்டிருக்கிறார்.

தன்னை நாத்திகர் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொள்பவர்.
கமலஹாசனைப் போலவே இவருக்கும் –
திருமணத்திலோ, குடும்பவாழ்க்கையிலோ – நம்பிக்கை கிடையாது.
திருமண பந்தம் தேவையற்ற ஒன்று என்பது அவர் நம்பிக்கை.
பெருங்குடிகாரர் – ஆனால், அதை மறைக்க முயற்சிக்கவில்லை.
மாறாக அவரே அடிக்கடி வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறார்.

சாரு அண்ணாவுடன் – அவரது லட்சியங்கள், பிடிப்பு, நடப்பு பற்றி
விவாதிக்க, சண்டை பிடிக்க எனக்கு நிறைய காரணங்கள்
இருக்கின்றன. இருந்தாலும், வாதிக்கக் கூடிய வயதிலும்
நிலையிலும் அவர் இல்லை என்பதால் – அதையெல்லாம்
ஒதுக்கி வைத்து விட்டு, அவரது எழுத்துக்களை, அவற்றில்
பொதிந்துள்ள உண்மைகளை, அவரது நக்கலை, கிண்டலை
ரசிக்கவே விரும்புகிறேன்.

வழக்கம் போல் – நான் ரசிக்கும் விஷயங்களை இங்கு பதிவு
செய்வதன் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு தெரியாத சுவையான பல
விஷயங்கள் இவற்றில் இருக்கின்றன.
(இவை ஒரு இடுகையில் முடியாமல் போகலாம் –
பின்னர், மீண்டும் வருகிறேன் )

இனி சாருஹாசன் அவர்களின் சொற்களில் –

———————–

நான் ஒரு தீவிர எம்ஜிஆர் சினிமா ரசிகன் அல்ல. ஆனாலும்
மனிதாபிமானம் அற்றவனல்ல! என்னிடம் உள்ள ஒரு
அறிவாற்றாமை……… ஒருவரிடம் தோன்றும் நல்லவைகளை
மட்டும் மனதில் கொண்டு தீயவைகளை மன்னித்துவிடுவேன்.

ஆனால் மறப்பதில்லை….!
மன்னிப்பது நன்மைதரும் குணம்….!!
மறப்பது முட்டாள்தனம்….!!!

தீயவைகளை மூளையின் கடைசி பக்கத்தில் சில குறிப்புகளாக
வைத்துக் கொள்வேன். தேவை வரும்போது என்னை உஷார்
படுத்திக்கொள்ள எடுத்து பார்ப்பேன். அதையே நினைத்து
வருந்ததுவது ஒரு தேவையற்ற சுமையாகும்.

பின்னால் நான் சென்னை வந்தபிறகும் நடிகனான பிறகும் அவரை
(எம்ஜிஆரை) சந்தித்ததே இல்லை. பரமக்குடியில் அவரை ஒரு
பொதுக்கூட்டத்தில் சந்திக்குமுன்,
ஒரு தயாரிப்பாளர் ஒரு இயக்குனரையும் அழைத்துக் கொண்டு
என்னையும் எம்ஜிஆர் அவர்களின் நெருங்கிய நண்பரான வக்கீல்
வி.பி இராமன் அவர்களையும் நீதிமன்றத்திலிருந்து வக்கீல்
உடையுடன் தோட்டத்துக்கு கூட்டிப் போனார்.

என்னை யார் என்று மக்கள் திலகத்துக்கு அறிமுகமில்லை.
அது கேபியின் “அவளொரு தொடர்கதை” வெளிவந்த முதல் வாரம்.

எம் ஜி ஆர் இயக்குனரிடம் கேட்டார் “கே பாலசந்தர் படம் வசூல்
எப்படியிருக்கு?” என்று.

அதற்கு அந்த இயக்குனர் “படம் படு மோசமாம்…….
தியேட்டரெல்லாம் காலியாயிருக்காம்!” என்று விளக்கம் கூற
கேட்டுகொண்ட தலைவர். அவர்களை வெளியே அனுப்பிவிட்டு
அட்வகேட் வி.பி. ராமனிடம் சொன்னார்.

“பாருங்க என்னை திருப்திபடுத்துவதாக நினைத்து பொய்
சொல்கிறான் இந்த டைரெக்டர்.
பாலு படம்தான் கடந்த பத்து ஆண்டுகளில் பெரிய வசூல்
சாதனையாம். இந்த மாதிரி டைரெக்டரெல்லாம் கூட்டிட்டு
வந்துடராங்க!

அது நடந்தபோது என்னை யாரென்று எம்ஜிஆருக்கு தெரியாது –
நான் அறிமுகப்படுத்த படவுமில்லை.

எம்ஜிஆர் பல முறை கேபி-ஐ படம் செய்ய கேட்டு அவர்
செய்யவில்லை என்று கேள்வி. ஆனால் அவர்பேரில் என்றும்
எம்ஜிஆர் விரோதம் பாராட்டியதில்லை. மதுரை முத்து அவர்கள்
அந்த காலத்தில் மதுரையை ஒரு மன்னர்போல் ஆண்டவர்.
எனக்குத் தெரிந்தவர்…. “உலகம் சுற்றும் வாலிபன்” படம் தான்
உயிருடன் இருக்கும் வரை, வெளிவர விடமாட்டேன் என்று
கொக்கரித்தவர் ஆனல், பின்னால் எம் ஜி ஆர் அமைச்சரவையில்
ஒருவரானார்.

தி மு க பட்டரையில் வக்கீலென்ற முறையில் இருந்தபோது
“நடிகர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை என்று சொன்னவன் நான்.
ஒரு பத்திரிகையும் இதை “ரஜனி கமல் இருவரும்
சுயநலவாதிகளாம்” என்ற தலைப்பில் வெளியிட்டது.

என்னை தட்டி கேட்டவர்களுக்கு “நான் சொன்னது மொத்தத்தில்
நடிகர்கள்பற்றி இவர்களை தனியே குறிப்பிடவில்லை. நான்
உள்படத்தான் சொன்னேன்.” என்றேன்.

நான் நடிகனான பிறகு, அவர் (எம்ஜிஆர்) டாக்டர் பட்டம் பெற்ற
சமயம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து அளித்தார். நானும்
நடிகர் ஜெயசங்கர் அவர்களும் ஒன்றாக சென்றோம். ஜெய் 200
மேற்பட்ட படங்களும், நான் ஒன்றிரண்டு படங்களும் நடித்தவர்கள்.

ஏற்கெனவே முடிவு செய்தபடி நாங்கள் இருவரும்
அட்டென்டென்ஸுடன் தப்பி எம் சி சி கிளப் போவதாக முடிவு
செய்திருந்தோம்.

அந்த ஹாலில் எல்லா சினிமாக்காரர்களும் பெரிய வட்டாமாக
சுற்றி நின்றார்கள். எம்ஜிஆர் சுற்றி வந்து ஒவ்வொருவராக சந்தித்து
அறிமுகம் செய்து கொண்டார். ஐந்து பிரபல நடிகர்களும் அவர்
தொடர்ந்து அறிமுகத்துக்கு உதவினார்கள்.

நானும் ஜெய்யும் ஒரு சுற்று எதிரில் சுற்றினோம்.
அவரை தவிர்த்து தப்புவதற்கான் முயற்சியில் அதை செய்தோம்.

தலைவர் சாப்பாட்டு தட்டை கையிலெடுத்துக்கொண்டு ஒரு சுற்று
சுற்றி ஒரு நோட்டம்விட்டார். கருப்பு கண்ணாடி ஒரு சுற்று
சுற்றியது…… எங்களை தண்டியதும் திரும்பி எங்களை நோக்கி
நின்றது. அவர் பார்த்துவிட்டார் என்பதை ஜெய் புரிந்து கொண்டாரோ
இல்லையோ?…… நான் ஒரு சிறிய கும்பிடு போட்டேன்.

நான் இன்று நடிகனாயிற்றே. இன்னும் தேசீய விருதுகூட
பெறவில்லையே….?

இடது கையில் தட்டுடன் என்னை நோக்கி நடந்து வந்தார். வலது
கையை நீட்டினார்… நான் மரியதை நிமித்தம் இரண்டு கைகளாலும்
அவர் நீட்டிய கையை தொட்டேன்…. மேலொன்றும்…. கீழ்
ஒன்றுமாக…………..!

“எத்தனை நாளாச்சு?” என்றார் தமிழக முதலவர்.

“பதிமூன்று வருஷங்கள்…”

“ஏன் என்னை வந்து பாக்கல்லை?”

இன்னும் அவர் கை என் கைகளுக்கு இடையே இருந்தது….

“நீங்க ரொம்ப பிஸீ …. தொந்திரவு செய்யக்கூடாது என்று ……?”

“ அப்படியில்லை… வந்து பாக்கணும்….!”
என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

அதற்குப்பிறகு, நானும் ஜெய்யும் எம் சி சி யில் இரணடாவது
ரவுண்டு போடும்போது ஜெய் கேட்டார்….

“என்னண்ணா? தலைவருக்கு நீங்க அவ்வளவு குளோஸோ?”

மூன்றாவது ரவுண்டில்தான் சொன்னேன்………….

“என்ன ஜெய்? புரியல்லையா? 250 பட கதாநாயகனை
(ஜெயசங்கரை) கண்டுக்காமே என்னை கைகுலுக்கியது ஏன்?”

———
ஒரு பழமொழி
“மூத்தவள் பதிவிரதை”…….?
இது – மக்கள் திலகம் MODUS OPERANDI …!

—————-
அதற்குப் பின்னால், சாருஹாசனே தன் சொல்லுக்கு
விளக்கமும் தருகிறார் –
“Modus Operandi” means – not just usual but an
intelligent way of doing it.
மூத்தவள் பதிவிரதை என்றால் இளையவள் விபசாரி என்பது
பொருள்…

————–
அதாவது ஜெயசங்கரை மட்டம் தட்டுவதற்காகவே,
எம்ஜிஆர் மெனக்கெட்டு சாருஹாசனைத் தேடிவந்து பேசிவிட்டு,
பக்கத்திலிருந்த ஜெயசங்கரை சட்டை செய்யாம்ல் சென்றார….
என்பது பொருள்…!!

————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to கமல்ஹாசனின் சகோதரர் சாரு அண்ணா …..

 1. எஸ்.இளங்கோவன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார் ஒரு சந்தேகம்.
  அண்ணன் தம்பி இரண்டு பேரும் நாத்திகர்கள்.
  இரண்டு பேருக்கும் திருமணம் மற்றும் குடும்ப வாழ்வில்
  நம்பிக்கை இல்லை.
  அண்ணனைப் பார்த்து தம்பி இப்படி ஆனாரா ?
  இல்லை தம்பியால் அண்ணன் அப்படி ஆனாரா ?

 2. chandraa சொல்கிறார்:

  let kamal be an atheist if he really thinks. but he has no decency even to avoid highly controversial views about hinduism…on deepawali day. he wore a thick black shirt deliberately… talked about periars ideals .. you know he does not know about periar even… kamal is astrong vaishnavite… deloberately cheating all posing as an atheist. it is good to see his daughter sruthi acts with very minimum dress in all movies….. he is just an actor…. that is all.

 3. chandraa சொல்கிறார்:

  this useless kamal deliberately hadincluded a brahmin lady character who cheats her husband… in the film iswaroopam….. his living together with another actress gouthami is to be condemned. if big actors do like this the fans would obviously follow such acts.. he had followed ..attended all functions of karuna had no guts to say no to karuna…. he tries to talk all subjects fails miserably…. even young directors fans know kamals limitations…. his speech in any function is hardly understood by the audience.,,, his speech in cine functions are a topic for laughter…joke in channels by the aspiring actors….

 4. chandraa சொல்கிறார்:

  and everybody knowas what was his role in manmathan ambu…copy man…. i bet you. just like kannadasan he would openly support hinduism after some years…..

  • எஸ்.இளங்கோவன் சொல்கிறார்:

   சந்திரா,

   தயவுசெய்து கமலஹாசனை – கண்ணதாசனுடன் ஒப்பிட
   வேண்டாம். கண்ணதாசன் எவ்வளவோ உயர்வானவர்.
   வெளிப்படையானவர். வெகுளி. தான் செய்யும் தவறுகள்
   அத்தனையையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர்.
   ஒரு உண்மையான மனிதர் கண்ணதாசன்.
   கமலஹாசன் ஒரு போலி மனிதர். உள்ளும் புறமும் 24 மணி நேரமும் நடிகர்.

 5. chandraa சொல்கிறார்:

  yes sir. I am not comparing him with kannadasan… whose contribution is immense. kamal could never answer anu point raised by thiru kaveri manian…. in his latest posting….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.