கமல்ஹாசனின் குற்றச்சாட்டு – சில கேள்விகள் …..!!!

முதலில் இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தி –

—————

vaaliba_raja_audio_launch_news

எந்த அரசும் சினிமாவுக்கு உதவி செய்யல; இசை வெளியீட்டு
விழாவில் கமல் பேச்சு

சந்தானம் நடிக்கும் ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சென்னை தேவி தியேட்டரில் நடைபெற்றது. பாடல்களை கமல்
வெளியிட, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த்
பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கமல் பேசும்போது,
‘’ சினிமா என்பது விசித்திரமான உலகம். இங்கு ஏராளமான
திறமை சாலிகள் இருக்காங்க. அதே நேரம் நான் வியந்த பல
திறமைசாலிகளில் பலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று
தெரியவில்லை.
………
சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை……..
நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை.
இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்
தான் சொல்கிறேன். ’’ என்று பேசினார்…..

(முதல் வார்த்தையைச் சொல்லி விட்டு, எப்படிப் புரிந்து
கொள்ளப்படுமோ என்று பயந்து போய், “இந்த அரசை மட்டும்
சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து
அரசாங்கத்தையும் தான் சொல்கிறேன்” என்கிறார்.
இந்தியாவில் இருப்பது 15 அரசாங்கம் அல்ல –
29 மாநில அரசுகள், யூனியன் ஆட்சிப் பிரதேசங்கள்,
மற்றும் மத்திய அரசு என்பது கமலுக்குத் தெரியாதா என்ன ?
சொன்ன பிறகு ஏற்பட்ட பதட்டம் – 15 அரசு என்று சொல்கிறார்…)

———————–
இந்த செய்திக்கு விளக்கமாக முதலில் சில தகவல்கள்…..

The 11th Chennai International Film Festival took
place in Chennai, Tamil Nadu, India from 12 to 19

December 2013.
The event was organised by the Indo Cine Appreciation
Foundation (ICAF) with support from
the Government of Tamil Nadu.
The festival was curated by actress-director
Suhasini Maniratnam and inaugurated by Kamal Haasan
and Aamir Khan.

(http://en.wikipedia.org/wiki/11th_Chennai_International
Film_Festival )

இந்த விழாவினை நடத்திட தமிழக அரசின் சார்பில் 25 லட்சம்
ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா,
வழங்கினார். தமிழக அரசிடமிருந்து இவரது சொந்த அண்ணன் மகள்
திருமதி சுஹாசினி தான் இந்த உதவியைப் பெற்று, தன் சித்தப்பா
கமலஹாசனை வைத்துதான் விழாவைத் துவக்கினார்.

விழா நடைபெற்று 6 மாதங்கள் கூட ஆகவில்லை. வசதியாக மறந்து
விட்டார்…அதற்குள் கமல் குற்றம் சாட்டுகிறார். எந்த அரசும்
சினிமாத்துறைக்கு எந்த உதவியையும் செய்யவில்லையென்று.

ஒன்றிரண்டு ஆண்டுகள் முன்னர், கமலஹாசனே முதல்வரை
நேரில் சந்தித்து, இது போன்ற வேறு ஒரு நிகழ்ச்சிக்கு 50 லட்சம்
ரூபாய் நன்கொடை பெற்றது நினைவில் இருக்கிறது.
(எந்த நிகழ்ச்சி என்று சரியாக நினைவில்லை)

சில மாதங்கள் முன்னர், இந்திய சினிமாவின் 100வது ஆண்டு
விழா கொண்டாட்டங்கள் சென்னையில் நடைபெற தமிழ்நாடு
அரசு 10 கோடி ரூபாய் கொடுத்தது நினைவில் இருக்கிறது.
(இதிலும் கமல்ஹாசன் கலந்து கொண்டு பரிசும் பெற்றார் )

ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசும் ,
அனைத்து மாநில அரசுகளும் , சிறந்த படங்களுக்கு என்று
தனியாக தேர்வுகள் நடத்தி சிறந்த படங்கள், இயக்குநர்கள், நடிகர்கள்,
நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முதலிய சகலருக்கும்
பணத்தொகையுடன் கூடிய பரிசுகளை அளிக்கின்றன.

தமிழக அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று, குறைந்த
பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல தமிழ்ப்படங்களுக்கு ஒவ்வொரு
ஆண்டும் பண உதவியும் செய்கிறது.

இவையெல்லாவற்றையும் மறந்து கமல்ஹாசன் பேசுவதெப்படி ..?
உண்மையில் கமல் எத்தகைய உதவி வேண்டும் என்கிறார் …?
தனது நியாயமான கோரிக்கைகள் எதையாவது மத்திய, மாநில
அரசுகளின் முன் வைத்திருக்கிறாரா ..?

நான் கமலிடம் இங்கு சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன் ….

1) சினிமாத் துறைக்கு இதைவிட அதிகமாக அரசாங்கம்
என்ன செய்ய வேண்டும்….? ஏன் -எதற்காக செய்ய வேண்டும் ..?

2)மற்ற துறைகளை விட சினிமாத்துறை எந்த விதத்தில் சிறந்தது ?
எந்த விதத்தில் அது விசேஷ உதவிக்கு தகுதியான்து ?

3) இன்றைக்கும் கூட, நவீன வசதிகள் எதுவும் இல்லாத
குக்கிராமங்களில், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு,
இரவு பகல் எப்போதாக இருந்தாலும் சளைக்காமல், அலுக்காமல்
பிரசவம் பார்க்கிறாரே ஒரு மருத்துவச்சி -அவரை விட,

– ரணம் புழுத்து நெளியும் இறுதிகட்ட நோயாளிகளுக்கு,
கேன்சர் ஆஸ்பத்திரியில், முகம் சுளிக்காமல், புண்ணைத் துடைத்து,
பணி புரிகிறாரே – அந்த செவிலியரை விட,

– கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரும் – கண் மூடாமல்,
துப்பாக்கியைக் கையில் பிடித்துக்கொண்டே காஷ்மீர் எல்லையில்
பணியில் ஈடுபட்டிருக்கிறாரே – அந்த ராணுவ வீரரை விட –

உங்களைப் போன்ற சினிமா நடிகர்கள், இந்த சமுதாயத்திற்கு என்ன
சேவை செய்து கிழித்து விட்டீர்கள் – ஸ்பெஷலாக கவனிக்க …?

4) ஒரு ரிக் ஷா ஓட்டியோ, காய்கறிவண்டி தள்ளிக்கொண்டு
வீதி வீதியாக வருபவரோ, ஒரு மூட்டை சுமப்பவரோ,
ஒரு முடிதிருத்துபவரோ, தையல்காரரோ, ஒரு பள்ளி ஆசிரியரோ –
இந்த சினிமாக்காரர்களை விட நிச்சயமாக இந்த சமுதாயத்திற்கு
அதிகமாக உதவியாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம்
செய்யாமல் சினிமாக்காரர்களுக்கு அரசு ஏன் விசேஷ சேவை
செய்ய வேண்டும் ….?

5) பெரும்பாலான சினிமாக்கள் சமூகத்தின் நலனில் சிறிதும்
அக்கரையின்றி தான் எடுக்கப்படுகின்றன…. 2 மணி நேர படத்தில்,
ஒன்றரை மணி நேரம் ஹீரோவும், அவனது நண்பர் கூட்டமும்
சாராயக்கடையில் கூத்தடிப்பதாகத் தான் இன்றைய தினம்
படங்கள் வருகின்றன. நாலு சண்டை, அரைகுறை ஆடைகளோடு
கூச்சலுடன் கன்னா பின்னாவென்று இரண்டு குத்துப்பாட்டு,
சாராயக்கடை அசிங்கங்கள் – இவற்றை கலை என்று சொல்லி
அவர்கள் காசு சம்பாதிக்க – அரசு உதவி வேறு வேண்டுமா …?

6) ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில்
பிழைப்பு நடத்தும் நீங்கள் என்றைக்காவது தமிழ்த் திரைப்படங்களின்
இத்தகைய போக்கை கண்டித்திருக்கிறீர்களா ?
அரசைக் குறைகூறத் தெரிந்த உங்களுக்கு இன்றைய
திரைப்படங்களின் அவலமான போக்கை கண்டிக்க ஏன்
தோன்றவில்லை ?

இன்று நீங்கள் கலந்து கொண்டிருக்கும் விழாவில்,
படத்தின் பெயர் என்ன …? (வாலிப ராஜா…..!)
அந்தப்படம் சமூகத்திற்கு தரப்போகும் செய்தி என்ன ….?
செய்யப்போகும் சேவை என்ன ….?
என்ன…? என்ன….?

7) உங்கள் படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளில் –
பாப்கார்ன் என்ன விலைக்கு விற்கப்படுகிறது தெரியுமா …?
கோக்…? மற்ற குளிர்பானங்கள் …? காப்பி/தேநீர் ….?
ஏன் வெறும் தண்ணீர் பாட்டில் என்ன விலை தெரியுமா …?
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் –
திருட்டு சிடியில் படம் பார்க்காதே – தியேட்டரில் சினிமா பார்
என்று மக்களுக்கு புத்தி சொல்கிறீர்களே – தியேட்டரில் ஏன்
இந்த விலை விற்கிறது என்று யாரையாவது, எப்போதாவது
கேட்டிருக்கிறீர்களா …? கண்டித்திருக்கிறீர்களா ….?

8) உங்கள் புதிய திரைப்படத்தை வெளியிடும் முன்னர் ஒவ்வொரு
முறையும் எதாவது பிரச்சினையையும் பரபரப்பையும் கிளப்பி இலவச
ஆதாயம்-விளம்பரம் பெறும் நீங்கள் விஸ்வரூபம் – 2ஆம் பகுதியை
முடித்து 7 மாதங்களாகியும் இன்னும் வெளியிடாமல்
வைத்திருப்பதன் காரணமென்ன …?
“தகுந்த சூழ்நிலை” இன்னும் உருவாகவில்லையா அல்லது
உருவாக்க திட்டம் இன்னும் தயாராகவில்லையா ….?

9) இவ்வளவு அனுபவமும், திரைப்படத்துறையில்
விஷய ஞானமும் உள்ள நீங்கள் – ஆண்டுக்கு இரண்டு,
நல்ல தரமான, குறைந்த பட்ஜெட் படங்களை
எடுத்து வெளியிட்டால் என்ன ? எது தடுக்கிறது ?
ஏன் – உங்கள் எல்லா படங்களிலுமே நீங்கள் தான் நாயகனாக
நடிக்க வேண்டுமா..?

10) வெளியில், பொது நிகழ்ச்சிகளில் இளையராஜாவை இவ்வளவு
சிலாகித்துப் பேசும் நீங்கள் – உங்கள் படங்களில் அவரைப்
பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் …? உங்கள் படத்தின் “தரத்”திற்கு
அவர் பொருத்தமற்றவர் என்பதாலா ….?

11) அண்மையில் நீங்கள் ஒரு விளம்பரத்தில் சொல்லி
இருந்தீர்கள். “நான் உரிய நேரத்தில், ஒழுங்காக வரி கட்டுகிறேன்.
மக்கள் அனைவரும் ஒழுங்காக வருமான வரி கட்ட
வேண்டும். நான் ஒரு பைசா கூட வரி பாக்கி வைக்கவில்லை
என்பதில் பெருமை கொள்கிறேன்”.

ரொம்ப சந்தோஷம். ஆனால் இதே போல் கொஞ்சம்
வெளிப்படையாக கடந்த ஆண்டு உங்களுக்கு வந்த வருமானம்
எவ்வளவு….? கட்டிய வருமான வரி எவ்வளவு ?
ஒரு படத்திற்கு எவ்வளவு கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் ..? –
போன்ற விவரங்களையும் சொல்ல முடியுமா ….?

நாங்கள் எல்லாம் சொல்கிறோமே எங்கள் வருமானத்தை
வெளிப்படையாக…! நீங்கள் ஏன் சொல்ல மாட்டேனென்கிறீர்கள் ..?

12) ஆமாம் – இரவு பகலாக கண்விழித்து பணிபுரியும்
மருத்துவர்களை விட, விஞ்ஞானிகளை விட, ராணுவ வீரர்களை
விட, ஸ்விட்சர்லாந்திலும், நியூசிலாந்திலும், இள வயது
ஹீரோயின்களை கட்டிப்பிடுத்துக் கொண்டு டூயட் பாடும் உங்கள்
உழைப்பு எந்த விதத்தில் உயர்ந்தது ?
எந்த விதத்தில் கடுமையானது …?

பின் உங்களைப் போன்ற நடிகர்களுக்கு மட்டும் ஏன்
கோடிகளில் சம்பளம் …..?

13) இத்தனை ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களிடமிருந்து
இவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறீர்களே … உங்களுக்கு
இத்தனை பணத்தையும், புகழையும் கொடுத்த இந்த மக்களுக்கு
நீங்கள் திரும்பக் கொடுத்திருப்பது என்ன …..?

(அதான் சினிமாவிற்கு இரண்டு வாரிசுகளைக்
கொடுத்திருக்கிறேனே என்று சொன்னாலும் சொல்வீர்கள் …)

ரொம்பப் பெரியதாக வேண்டாம் ….
உங்கள் அம்மா நினைவாக, அம்மா பெயரில் …
(பெண்டாட்டி பெயர் தான் வைக்க முடியாதே … !! )
பச்சைப் பிள்ளைகளுக்காக சின்னதாக ஒரு இலவச பள்ளிக்கூடம்… ?
சின்னதாக ஒரு இலவச ஆஸ்பத்திரி ….?
அட்லீஸ்ட் ஒரு இலவச திருமண மண்டபம் ….?
(திருமணத்தில் தான் நம்பிக்கை இல்லையோ..?)
சரி அட்லீஸ்ட் ஒரு முதியோர் காப்பகம் அல்லது
குழந்தைகள் காப்பகம் அல்லது
ஆதரவற்ற பெண்கள் காப்பகம் …?
இப்படி எதாவது ஒரு தானம் …. தர்மம் ….?

இவை ஒன்றுமே இல்லையா – சரி குறைந்த பட்சம்
உங்களுக்குப் பிடித்த கலைத்துறைக்காக –
நாடகங்கள் நடத்த ஒரு நல்ல மண்டபம்- அரங்கம் ….?

இன்னமும் கூட எழுதலாம் தான்.
ஆனால் அதிகம் எழுதவும் பயமாக இருக்கிறது.
நீங்கள்பாட்டுக்கு கோபித்துக் கொண்டு -எனக்கு இங்கு உரிய
மரியாதை இல்லை நான் இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறேன்
என்று சொல்லிவிட்டு போய் விட்டால் ….?
(இந்த நாட்டின் மீது அவ்வளவு பற்று ஆயிற்றே உங்களுக்கு …!)
பிறகு என் கதி என்ன ஆகும் ….!

பின்குறிப்பு – இந்த இடுகை எப்படியும் திருவாளர் கமல்ஹாசனின்
பார்வைக்கு செல்லும்.(அதற்கான ஏற்பாடும் உண்டு). நான் இங்கு
எழுப்பி இருக்கும் கேள்விகளில் பாதிக்காவது அவர்
வெளிப்படையாக, நேர்மையாக – பதில் சொல்லி விட்டால் –
இனி நான் எழுதுவதையே விட்டு விடுகிறேன்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to கமல்ஹாசனின் குற்றச்சாட்டு – சில கேள்விகள் …..!!!

 1. ரிஷி சொல்கிறார்:

  ஜனநாயகம் பற்றி ஒரு சில சினிமாக்காரர்கள் பேசும்போது ஏனோ அதைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ள எனக்குத் தோன்றுவதில்லை. கமல் பேசியிருப்பது பொருட்டாகவே தோன்றாததால் அதை பாராட்டவோ, விமர்சிக்கவோ வார்த்தைகள் இல்லை.

 2. ரிஷி சொல்கிறார்:

  ஒரே ஒரு விஷயம் மட்டும் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. கமல் ஒரு சிறந்த வியாபாரி ஆவார். அவர் இவ்வாறு பேசியிருப்பதைப் பார்க்கும்போது, கூடிய விரைவில் விஸ்வரூபம் பார்ட் 2 வெளிவரும் என்பது நன்கு தெரிகிறது.

  எந்திரன் பார்ட் 2 வெளிவரலாம்; அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன; பட்ஜெட் திட்டமிடப்பட்டு விட்டது என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதன் மூலம் விரைவில் ‘ஐ’ படம் வெளியாவதும், லிங்கா சீக்கிரம் படப்பிடிப்பு முடிந்து போணியாவதற்கு ரெடியாகிவிடும் என்பதும் நன்கு தெரிகிறது. கிளையண்டுகளை (ரசிகர்களை) உயிர்ப்புடன் வைத்திருந்தால்தான் கம்பெனி சரக்கு விற்கும்.

 3. R.Sivakumar சொல்கிறார்:

  அன்பிற்குரிய அய்யா திரு.காவிரிமைந்தன் அவர்களுக்கு,

  ‘கமல்ஹாசனின் குற்றச்சாட்டு – சில கேள்விகள்’ என்ற உங்களின் பதிவைப் படித்தேன். எனது உடன்பாட்டிற்குரிய பதிவுகளையே தாங்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் எனக்கும் உங்களுக்கும் கருத்துக்களில் ஒத்த சிந்தனை இருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது எழுதிய இந்த பதிவிலும் நான் நூற்றுக்கு இருநூறு விழுக்காடு உடன்படுகிறேன்.

  கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர் திரைப்படத்தில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் கூட. தன்னை முற்போக்காளாராகக் கூறிக் கொள்ளும் இவர். அப்பட்டமான பிற்போக்குவாதி என்பதை இவரது பெரும்பாலான படங்களிலிருந்து நிரூபிக்க இயலும். நிற்க!

  தமிழ்ச்சமுதாயத்தை மிகப் பெரும் கேட்டிற்கு ஆளாக்கிய திரைப்படத்துறை குறித்து முன்னர் ஒரு முறை ‘ஜனசக்தி’ நாளேட்டில் பெரும் விவாதத்தையே முன் வைத்திருந்தேன். ‘திரைப்படத்துறையை ஒழித்தால் என்ன?’ என்பதுதான் அதன் சாராம்சம். திரைப்படத்துறையால் நிகழ்ந்த நன்மைகள் என்ன என்பதைத் தேடிப் பார்க்கும் நேரத்தில், அதனால் விளைந்த தீமைகள் கணக்கற்றவை.

  இன்றைய சமூகத்தின் அனைத்து அவலங்களுக்கும் முதல் சுழி தமிழ்த்திரைப்படத்துறை இட்டதுதான். கடந்த நாற்பது ஆண்டு கால திராவிட ஆட்சிகள் வழித்த ‘ஜொள்’தான் திரைத்துறை இந்த அளவிற்கு வளர்ந்ததற்கும், தமிழ் மக்களை சீரழித்ததற்கும் காரணமாகச் சொல்லமுடியும். குறிப்பாக, திரைப்படத்துறையையும், தனது குடும்பத்தையும், ஏன் தன்னையும் பிரித்தரியாத ‘செம்புலப் பெயனீராய்’ இருந்த காரணத்தால், கருணாநிதியின் ஆட்சி திரைப்படம்போல் இருந்ததையும் நாம் அறிவோம்.

  என்னைப் பொறுத்தவரை, எட்டு கோடி தமிழர்களின் வாழ்க்கை முக்கியமா? அல்லது திரைப்படத்துறையை நம்பியிருக்கும் 40 ஆயிரம் குடும்பங்கள் முக்கியமா என்று பார்த்தால் எட்டு கோடியின் எதிர்காலம் மட்டுமே எனது கண்ணுக்குத் தெரிகிறது. ‘திரைப்படச்சுருளை தீக்கு தின்னக் கொடுத்தால்தான் என்ன?’ அதனை முற்றுமாய் அழித்தொழித்தால்தான் என்ன? அல்லது கொஞ்ச காலத்திற்காவது திரைப்படத்துறை இயங்காமல் போகட்டும் என்று தமிழக அரசு கொள்கை வகுத்தால்தான் என்ன?

  இரா.சிவக்குமார்
  மதுரை

 4. முருகேசன் சொல்கிறார்:

  நான் இங்கு
  எழுப்பி இருக்கும் கேள்விகளில் பாதிக்காவது அவர்
  வெளிப்படையாக, நேர்மையாக – பதில் சொல்லி விட்டால் –
  இனி நான் எழுதுவதையே விட்டு விடுகிறேன்….

  சபாஷ். திரு.காவிரிமைந்தன் அய்யா,

 5. kinarruthavalai சொல்கிறார்:

  அரசியல்வியாதிகள் மக்களுக்கு அறிவு வளராமல் இருக்க எப்படி எல்லாம் பாடுபடுகிறார்களோ அப்படியேதான் இந்த சினிமாக் காரர்களும். மக்களின் உனர்ச்சிகளை மழுங்க வைப்பதில் மன்னர்கள். சில நடிகர்கள் வந்தோமா நடித்தோமா போனோமா என்றிருப்பார்கள். உதாரணம் ரஜினி. பேசாமலே மக்களை அடி முட்டாளாக்குவதில்…. சீமான் வேறு வகையில், கமல் இந்த வகையில். பொதுவாக இவர்களுக்கும் வீணாப் போன மீன்களை விற்கும் வியாபாரிகளுக்கும் வித்தியாசமே இல்லை. அதிலும் கமலின் பேச்சில் முழுக்க முழுக்க ஒரு செயற்கை தன்மை இருப்பது out of boxஇல் இருந்து கவனிப்பவர்களுக்கு மட்டுமே பிடிபடும்.

 6. kalakarthik சொல்கிறார்:

  100% சரியான வார்த்தைகள்.

 7. ரங்கராஜன் ராஜகோபாலன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  மிக அழுத்தமான, ஆழமான வாதங்களை முன் வைத்திருக்கிறீர்கள்.
  மிகவும் அவசியமான ஒரு கட்டுரை.
  unfortunately, நன்கு படித்த இளைஞர்கள், நடுத்தர வயதினர் பலர் கூட கமல் ரசிகர்களாக இருக்கிறார்கள். நடிகர்களை, தியேட்டர்களில் ரசிப்பதோடு உதறி விடுங்கள்; அவர்கள் உங்களை தொடர்ந்து ஆக்கிரமிக்க விடாதீர்கள் என்கிற பலத்த குரல் உங்களின் மூலம் எழுகிறது. உங்கள்
  எழுத்தை வார்த்தைக்கு வார்த்தை ஆமோதிக்கிறேன். நிச்சயம் நீங்கள்
  தொடர்ந்து எழுதுவீர்கள். கமல் உங்களை எழுத வைப்பார் …..!!! ???. நன்றி.

 8. kaarigan kisco சொல்கிறார்:

  கமலஹாசன் போன்ற அதி மேதாவிகள் என்னைத்தைப் பேசுகிறோம் என்று தெரியாமலேயே வார்த்தைகளை வீசிவிடுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. அதிலும் கமலஹாசன் ஒரு கை தேர்ந்த செயற்கையான நடிகர். அவர் பேச்சிலிருக்கும் 100% அபத்தத்தை சரியாக சுட்டிக்காட்டி சூடு போடுவதுபோல ஆணித்தரமான கேள்விகளைக் கேட்டிருப்பதற்கு ஒரு மிகப் பெரிய சபாஷ். பாராட்டுக்கள் காவிரி மைந்தன். இவர்கள் ஊர் ஊராக நாடு நாடுகளாக சுற்றுவதையும் நடிகைகளின் அங்கங்களை வளைத்துப் பிடித்து இன்ன பிற காதல் களியாட்டங்கள் புரிவதை பார்க்க நாம் நம் பணத்தை செலவு செய்து இவர்களை பணக்காரர்கள் ஆக்க வேண்டுமாம். என்ன ஒரு சமூக சிந்தனை!

 9. chandraa சொல்கிறார்:

  excellent article by k.manian. I doubt whether the actor could answer even a single point. thelatest SIN is sivakarthikeyan….

 10. mani Rajendran சொல்கிறார்:

  Thiru KM,

  Excellent!

 11. ravikumar சொல்கிறார்:

  fantastic questions he would not answer. As u said he did nothing for the society

 12. gopalasamy சொல்கிறார்:

  Even, so called forward thinking Gnani was not ready to answer, when questions raised.
  We need not give importance to persons who are always thinking about sex.
  Kamalahasan is a hypocrite. Any sensible person can not watch his TV interviews.
  Rajani and Kamalahassan both are businessmen without any policy. Their only aim is money. Both are fooling Tamilnadu. MGR and Sivaji also did not act as heros after 57 years. . We feel very much insulted when Modi visited Rajani.
  Without any historical evidence, kamalahassan insulted hinduu religion in his Dasavatharam film.
  I appreciate Prakash raj who is producing some sensible films.

 13. R Subramanian சொல்கிறார்:

  Your article should make Kamalahasan introspect. Very good article.

  RS

 14. Srini சொல்கிறார்:

  dear sir, please bring this post to the attention of kamal. even if he didn’t respond, atleast let him read. he is one of the most selfish actors in the film industry.

  all the best
  srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Srini and also other friends,

   I have already sent this blog with a covering letter to
   thiru Kamal hassan with a request to offer his remarks /clarifications
   on the points raised. I am placing below the copy of letter
   wrote to thiru Kamal hassan for the information of all of you.

   copy of the mail sent –

   திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு,

   வணக்கம். இத்துடன் இணத்துள்ள –
   ” கமல்ஹாசனின் குற்றச்சாட்டு – சில கேள்விகள் …..!!!”
   என்கிற தலைப்பில் “விமரிசனம்” என்கிற வலைத்தளத்தில்
   ( http://www.vimarisanam.wordpress.com )
   வெளிவந்துள்ள, உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு இடுகையை நீங்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

   இதில் எழுப்பப்பட்டுள்ள சில வினாக்களுக்கு பதில் சொல்வது
   உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும் என்பதை நான் நன்கு
   அறிவேன். இருந்தாலும், பொதுவாழ்வு என்று வந்து விட்டால் சில நிகழ்வுகளை சந்திக்கத் தயாராகத்தானே
   இருக்க வேண்டும். மற்றும், நீங்கள் “வாலிப ராஜா” விழாவில்
   கிளப்பிய ஒரு பிரச்சினையின் விளைவு தானே இந்த இடுகையும்
   இத்தனை கேள்விகளும் ….

   நீங்கள் சந்திக்காத செய்தியாளர்களா …
   நீங்கள் சந்திக்காத ஊடகத்துறையா … (மீடியா…) எனவே,
   இதனைக் கையாள்வது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்க முடியாது…!

   எனவே, சிறிது தர்மசங்கடமாக இருந்தாலும் கூட, நீங்கள்
   இதில் எழுப்பப்பட்டுள்ள வினாக்களைப் பற்றி உங்கள்
   விளக்கத்தை அளிக்க வேண்டுமென்பது என்/எங்களின் விருப்பம்.
   (தயவுசெய்து, இந்த வலைத்தளத்திற்கு சென்று,
   அதில் எழுதப்பட்டுள்ள மறுமொழிகளை – பின்னூட்டங்களையும் பார்த்தால், மக்களின் மன நிலையும் உங்களுக்குப் புரியும்….)

   நீங்கள் உங்கள் தரப்பில் எத்தகைய விளக்கம் அளித்தாலும்,
   அதை உடனடியாக அதே தளத்தில் மகிழ்வுடன் வெளியிடச்
   சித்தமாக இருக்கிறேன். நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   ————————————————————————

 15. vanavan nathan சொல்கிறார்:

  ethu ponra nattukku thevaillatha vanga pechcha nama pesi namba tharatha korachukka ventame sakothara

 16. காசிம் சொல்கிறார்:

  பதிவிலும், பின்னோட்டங்களிலும் உச்சபட்ச காழ்ப்புணர்ச்சி அப்பட்டமாக தெரிகிறது

  • kinarruthavalai சொல்கிறார்:

   காசிம் சார், கமல் என்ன நமக்கு மாமனா மச்சானா அவரை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற? தப்பென்றால் தப்புதானே? அவர் ஒரு பொது மேடையில் தைரியமாக எதை வேண்டுமானாலும் பேசலாம். நாம் ஏதாவது கருத்து சொன்னால் காழ்ப்புணர்ச்சியா? அவர் விஸ்வரூபம் எப்படியாவது ஓடவேண்டும் என்பதற்காக ஆடிய ஆட்டத்தில், ஒரு மடத் தமிழன் உடனே அவரை முதல் அமைச்சராயிடுங்க தலைவா என்றானே, அப்புறம் ஒருத்தன் இந்தாருங்கள் பிளாங் செக் என்றானே. இவர்களை எல்லாம் இன்றைக்கு அவர் நினைவு வைத்திருப்பாரா? அவர்களை நீங்களை ஏதாவது சொன்னீர்களா? கண்டித்திருக்கிறீர்களா? அல்லது அப்படி சொன்னதே நீங்கதானா.

 17. barari சொல்கிறார்:

  மக்களை ஒழுக்க கேட்டிற்கு வழி நடத்தி செல்லும் இந்த நடிகர்களை ஏதோ தேவேந்திரன் போல் நினைத்து இவர்கள் கட்டவுட்டிற்கு பாலாபிஷேஹம் செய்யும் அடி முட்டாள் ரசிக வெறியர்களையும் கொஞ்சம் சாடினால் மிக நல்லது என்று எண்ணுகிறேன்.நடிகர்களின் இந்த நிலைக்கு ஆதார புருஷர்கள் இந்த ரசிகர்கள்தான்.

 18. இர்ஷாத் ஜத்தி சொல்கிறார்:

  தொடரட்டும் இந்த விமர்சனங்கள். கமலிமிருந்து பதில் வருதா பார்ப்போம் .

 19. visujjm சொல்கிறார்:

  After virumandi movie kalathoor kannamma hero just upload utube video “drunk & speak” adha enga keka enga solli puriya vaika… Cinema a rang a link naaku rmba suthamungoooooooooo

 20. Sanmath சொல்கிறார்:

  Dear KM,

  First of all, I love cinema…..It is a fantastic medium for entertainment……..That is it…….Lets see these actors in screens and forget them……….These actors are being given importance in TN more than they deserve and every action of them is connected with politics……..

  A fantastic platform like VIMARISANAM, which speaks many public issues shall not discuss about these emotional traders.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Sanmath,

   I entirely agree with you with regard to the fact that Cinema is a
   wonderrful media and I am a great lover of good films.

   ஆனால், சினிமா நடிகர்களை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு
   ஆடுவதும், அவர்களது ‘கட் அவுட்’களுக்கு பால் அபிஷேகம் செய்வதும்
   எனக்கு பார்க்க சகிக்கவில்லை. என்னால் இவற்றை
   ஜீரணிக்க முடியவில்லை. ஒரு நல்ல சிற்பி, ஒரு நல்ல ஓவியர்,
   ஒரு நல்ல இசைக்கலைஞர் என்கிற மாதிரி ஒரு நல்ல நடிகர்
   என்கிற அளவிற்கு தான் அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட
   வேண்டும். அவர்களது அரசியல் அபிலாஷைகளுக்கு எல்லாம்
   சினிமா ஒரு மூலமாக இருக்கக்கூடாது. இது சரி தானே நண்பரே…..?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 21. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  பலரின் குரல் ஒலிப்பது காவிரி மைந்தன் கட்டுரையில்…

 22. sandiyar KARAN சொல்கிறார்:

  கமல்ஹாசனிடம் காவிரிமைந்தன் கேட்கும் கேள்விகளுக்கு வைகைமைந்தன் சண்டியர்கரனின் பதில்கள்……… http://www.sandiyarkaran.com/2014/07/Replytokavirimainthan.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தாங்கள் மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு
   விளக்கங்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
   சண்டியர் கரன்…

  • kinarruthavalai சொல்கிறார்:

   என்ன இது? இது போல எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க? ஏன் நீங்க அவருக்கு இங்கே நிஜ வாழ்க்கையிலும் டப்பிங் கொடுத்து கா மைந்தன் சார் சொன்னதை நிஜமாக்க ரொம்ப சிரமப் பட்டிருக்கிறீர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.