எத்தனை ‘body’ வந்தது…..???

 

சில சமயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் கிடைத்தால்
கொன்று போடலாமா என்கிற அளவிற்கு கோபமும்,
ஆத்திரமும் வருகிறது.

நேற்று மாலை முகலிவாக்கத்தில் 13 அடுக்கு மாடி கட்டிடம்
இடிந்து விழுந்த விபத்து நடந்ததையொட்டி நிகழ்ந்த சிலவற்றை
தான் சொல்கிறேன்.

சென்னையில், மாலையில் 4 மணியளவில் பயங்கரமாக இருள்
சூழ்ந்து கொண்டது. கார், ஸ்கூட்டரில் போகிறவர்கள் எல்லாம்
‘லைட்’ போட்டுக்கொண்டு போகும் அளவிற்கு சிறிது நேரம்
இருண்டது. பலதடவை தொடர்ச்சியாக இடி இடித்துக்கொண்டே
இருந்தது. எந்த நேரமும் பக்கத்தில் எங்காவது கூட விழலாமென்று
நினைத்தேன்.

மழை நின்ற பிறகு, ஆறரை மணியளவில் ‘சன் செய்தி’யில்
திகிலூட்டும் பின்னணி ஓசையுடன் தொடர்ந்து ஸ்லைடுகளாக
போட ஆரம்பித்தார்கள். முகலிவாக்கம் அடுக்குமாடி கட்டிடம்
இடிந்து விழுந்ததைப் பற்றி. தொடர்ந்து 7-8 நிமிடங்களுக்கு
ஸ்லைடுகள் மட்டுமே…

“நூற்றுக்கணக்கானவர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம்”
“13 மாடி கட்டிடம் அப்படியே நொறுங்கி விழுந்தது”
“தரைத்தளம் மண்ணுக்குள் புதைந்தது”
“சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போக்குவரத்தே
ஸ்தம்பித்துப் போயிருக்கிறது”

என் நண்பர் ஒருவர் அந்த ஸ்பாட்டில் இருந்தார். உடனடியாக
அவருடன் தொலைபேசியில் பேசி நான் சில விவரங்களை
அறிந்துகொண்டேன். சூழ்நிலை என்ன என்பது ஓரளவு விளங்கியது.

தொலைக்காட்சி நிலையத்திலிருந்து 20 நிமிடங்களுக்குள்
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போய் விடலாம். நிருபர்கள்
காமிராவுடன் அங்கு சென்றடைந்து, விவரங்களை ஓரளவாவது
தெரிந்து கொண்டு தகுந்த முறையில் செய்தியை ஒளிபரப்பி
இருக்கலாம்….

இதைத் தொடர்ந்து, 7 மணிக்குள்ளாகவே -விவாதம், பட்டிமன்றம்
எல்லாம் துவங்கி விட்டது – எப்படி விழுந்தது, எதனால்
விழுந்திருக்கலாம் யாருடைய தவறு என்றெல்லாம்.

தொடர்ந்து, செய்தி ஒளிபரப்பில் அந்த இடம் காட்டப்பட்டது.
செய்தியாளர் அங்கிருப்பவர்கள் சிலரிடம் சில கேள்விகளைக்
கேட்கிறார்.
அவர்கள், ‘மழை ஆரம்பித்தவுடன் வெளியில் வேலை செய்து
கொண்டு இருந்தவர்கள் சிலர் – மழையில் நனைவதை தவிர்க்க
அடித்தளத்தில் போய் நின்று கொண்டார்கள்.
மழை பெய்து கொண்டே இருந்தபோது திடீரென்று இடி இடித்தது.
கட்டிடம் அப்படியே இடிந்து சரிந்து விழுந்து விட்டது’ – என்கிற
வகையில் பதில் சொல்கிறார்கள்.

ஆனால், செய்தியாளர் திரும்பத் திரும்ப, அஸ்திவாரம் சரியாக
இல்லை அல்லவா ? மண் பரிசோதனை சரியாகச் செய்யவில்லை
அல்லவா ? என்றெல்லாம் இவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம்
அவர்களுக்குள் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்குள் அவர்களது செய்தி ‘டீம்’லிருந்து ஒருவர் கேட்கிறார் –

“எத்தனை ‘body’ வந்தது …? என்று.

ஒருவர் சொல்கிறார் ‘காயம் பட்டவர்கள் 10-15 பேரை தூக்கிக்
கொண்டு வந்தார்கள். ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்
கொண்டு போய் விட்டார்கள் – இன்னமும் உள்ளே
தேடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று.

விடவில்லை இந்த ‘டீம்’ ஆள் …?
” இன்னமும்ஒரு ‘body’ கூடவா கிடைக்கவில்லை” …?

தொலைக்காட்சியில் ( சன் செய்தியிலும், கலைஞர் செய்தியிலும்
மட்டும் ) பட்டிமன்றம் நடக்கிறது.
cmda அலுவலகத்தினர் சரியாக மண் பரிசோதனை செய்யாமல்
(காசு வாங்கிக்கொண்டு ..?) அனுமதி கொடுத்து விட்டார்கள் என்று
ஒரு க்ரூப்.

போரூர் ஏரியிலிருந்து தண்ணீர் வடிந்துபோகும் வழியாக இருந்த
இடத்தில் குப்பையையும், மண்ணையும் கொட்டி மேடாக்கி விட்டு,
அடுக்கு மாடி கட்டி விட்டார்கள் என்று இன்னொரு க்ரூப்.

கட்டிடத்தொழிலாளிகளுக்கு தனியாக குடியிருப்பு கொடுக்காமல்,
அடித்தளத்திலேயே தங்க விட்டிருந்தார்கள். எனவே, இறப்பு அதிகமாக
இருக்கும் என்று இன்னொரு க்ரூப்.

மனிதநேயம் சற்றும் இல்லாத பதர்களே –
எத்தனை பிணம் விழும் …?
எந்த அளவிற்கு செய்தியை பரபரப்பாக்க முடியும் ..?
யார் யார் மேல் குறை சொல்லலாம் ..?
என்று யோசித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே..

இன்னும் உதவிக்கு ஆட்களை திரட்டுவோம்.
கான்க்ரீட் பாளங்களை அறுக்கத் தெரிந்தவர்களை,
அதற்கான – வெல்டிங், கட்டிங் – இயந்திரம் உள்ளவர்களை
உதவிக்கு கூப்பிடுவோம்.
மனித சங்கிலி அமைத்து உடைந்து விழுந்திருக்கும் பாளங்களை
முதலில் அப்புறப் படுத்தி உள்ளே செல்ல வழி செய்வோம்.
அங்கே பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தேநீர், குடிதண்ணீர்
ஏற்பாடு செய்வோம்.
இன்னமும் உள்ளே சிக்கி இருப்பவர்களை கண்டறியக்கூடிய
சாதனங்கள் -ஸ்கேனர்கள், அனுபவம் உள்ள நபர்களை
தொலைக்காட்சி மூலம் உதவிக்கு அழைப்போம் என்றெல்லாம்
உங்களால் யோசிக்க முடியாதா ?

உள்ளே இன்னமும் சிக்கி இருப்பவர்களை வெளியே
மீட்டுக் கொண்டு வந்து விட்டு, அதன் பிறகு, இருக்கவே இருக்கிறது
உங்கள் தொலைக்காட்சி – உங்கள் பட்டிமன்றத்தை 2 நாட்கள்
கழித்து வைத்துக் கொள்ளக்கூடாதா …?

மனிதநேயமற்ற மகாபாவிகளே…….

d-1d-2d-3 mf-1

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to எத்தனை ‘body’ வந்தது…..???

 1. Dr.S.Phillips சொல்கிறார்:

  Mr.Kavirimainthan,

  ivargal Yellaam pinam thinni kazhugugal…

 2. visujjm சொல்கிறார்:

  Anaithum kaasaka parpavargal indha ulagathil adhigamaga vaalgindraargal ela sari aga … Kaayam pattavargal gunam adaya venduvom ayya …

 3. kinarruthavalai சொல்கிறார்:

  அய்யோ கொல்றாங்கோ ஐயோ கொல்றாங்கோ தொலைகாட்சி நிலையத்தைப் பற்றி சொல்லுகிறீர்களா? அதில் ஒன்று, 2 ஜி மேட்டரில் அழிந்து போக வேண்டியது. இன்னும் கொஞ்சம் உயிர் ஒட்டிக் கொண்டு அடுத்தவன் உயிர் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கும் விரைவில் ஐயோ பாவம் நிலைமை வராமலா போய்விடும்?

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  இருக்கும் கொஞ்ச மனிதநேயமும் இவர்களால் மரணிக்கபடுகிறது,

 5. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  இவர்களைப்பற்றி எழுதுவது மிகுந்த கால தாமதம்.
  இவர்கள் எதையும்,எவரையும்,எப்படியும் காசாக்கத்தான் பார்ப்பார்கள்.
  ஏனெனில் அவர்கள் வந்த வழி அப்படி

 6. kalakarthik சொல்கிறார்:

  அதிலும் இறந்த எல்லோரும் வட நாட்டவர்கள் என்று ஒரு தொலைக் காட்சி கத்திக் கொண்டிருந்தது.யாரோ சாகுங்கள்.எங்களுக்கு சூடான, பரபரப்பான சந்தோஷமான நாள்.அவ்வளவுதான்.என்ன ஒரு மட்டமான வியாபாரம்

 7. Vicky சொல்கிறார்:

  Hello Sir,

  I have stopped watching these channels long back. However, in this matter, it is not only some channels but all the channels in India are doing the same thing (except ruling party supporting channels).

  I believe the responsibility of the Media is to present news without bias. Also, in today’s world, everybody forgets everything in a day or two. At least this kind of discussion and exposing will help people listen to it when they are ready to listen. All media persons are limiting themselves only with telecasting (without even a sense what to relay and what not to relay). In the way they sometime helped terrorists and criminals to escape (remember 26/11 tragedy).

  Sorry for differing in this matter.

  SALUTE TO THE RESCUE TEAM!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.