ஏய்ப்பதற்கென்றே பிறந்திருப்பவர்கள் ……!!

binani cement factory

விற்பனை வரி என்பது ஒரு பொருளை விற்கும்போது
செலுத்தப்பட வேண்டிய வரி. ஆனால் அந்த வரியை
விற்பவர் செலுத்துவதில்லை. அந்த பொருளை வாங்குபவர்
அதாவது consumer தான் அதைச் செலுத்துகிறார்.
பொருளை விற்பவர், அந்த வரியை, அரசு நிர்ணயித்திருக்கும்
விகிதத்தில் வாங்கிக்கொண்டு, விற்பனை முடிவடைந்தவுடன்
உபயோகிப்பாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட அந்த வரித்தொகையை
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும். இது தான் நடைமுறை.
சிமெண்டை பொறுத்த வரை விற்பனை வரி மாநில அரசுக்கு
செலுத்தப்பட வேண்டும்.

பினானி சிமெண்ட் கம்பெனி என்று ஒரு சிமெண்ட் உற்பத்தி
செய்யும் கம்பெனி. இந்தியா, சீனா, துபாய் போன்ற இடங்களில்
அதற்கு சிமெண்ட் தொழிற்சாலைகள் இருக்கின்றன. தனிப்பட்ட
ஒரு வட இந்திய குடும்பத்திற்கு சொந்தமானது. இந்தியாவில்
ராஜ்ஸ்தானில் அதற்கு 2 தொழிற்சாலைகள் இருக்கின்றன.

2008ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரையிலான
காலகட்டத்தில், சிமெண்ட் மூட்டை விற்ற வகையில்,
இந்த கம்பெனி வசூலித்த விற்பனை வரி
சுமார் 150 கோடி ரூபாய். இந்த பணத்தை அவ்வப்போது
விற்பனை முடிந்தவுடனேயே ராஜஸ்தான் மாநில அரசுக்கு
செலுத்தி இருக்க வேண்டும் – 3 ஆண்டுகள் தொடர்ந்து
செலுத்தவே இல்லை.
இந்த சிமெண்ட் கம்பெனியின் அதிபர் பிரஜ் பினானி என்பவர்,
அப்போதைய ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வராக இருந்த கெஹ்லோட்டிற்கு
என்ன உறவோ, இருவருக்கும் என்ன கொடுக்கல் வாங்கலோ
நமக்குத் தெரியாது. ஆனால் ராஜஸ்தான்
அரசு இந்த மோசடியை நீண்ட காலம் – கண்டுகொள்ளவே இல்லை..!

முதலமைச்சர் கெஹ்லோட், காங்கிரஸ் தலைவி திருமதி
சோனியா காந்தியின் முக்கிய சீடர்களில் ஒருவர் என்பது
தெரிந்ததே ! ஒரு வேளை இந்த பிரஜ் பினானி “அன்னை”க்கு
வேண்டப்பட்டவரோ என்னவோ – அதுவும் நமக்குத் தெரியாது.

2013-ல் –  ராஜஸ்தான் அரசு ,
மெல்ல கதையை துவங்கியது.

விற்பனை வரி 150 கோடி ரூபாய் பாக்கியில் பாதித்தொகையை,
அதாவது 75 கோடியை உடனடியாக செலுத்தும்படியும்,
மீதியை 10 (?) தவணைகளில் செலுத்தும்படியும் ராஜஸ்தான் அரசு
உத்தரவு போட்டிருக்கிறது….!!

வசூலிக்கப்பட்ட விற்பனை
வரியை உடனடியாக அரசாங்க கஜானாவில் செலுத்தாமல்
3 ஆண்டுகள் ஏமாற்றியதற்காக இந்த ஆள் மீது கிரிமினல் வழக்கு
தொடர்ந்து, அபராதத்துடன் வரி பாக்கியை வசூல் செய்வதற்கு
பதிலாக,

-சுலப தவணைகள் … என்று, தானாகவே முன்வந்து
கருணை காட்டி இருக்கிறது கெஹ்லோட் அரசு.
(அநேகமாக இந்த முடிவிற்கு கூட காரணம்,
மாநிலத்தில் தேர்தல் நிகழவிருந்ததாலும், ஒரு வேளை அரசு
மாறினால், சம்பந்தப்பட்ட தொழிலதிபரோடு, மற்றவர்களுக்கும் பிரச்சினை  ஏற்படலாம் என்பதாலும் இருக்கலாம் …!).

ஆனால், வேடிக்கை பாருங்கள். மாநில அரசின் இந்த உத்தரவை
எதிர்த்து, பினானி சிமெண்ட் கம்பெனி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தது. பெரிய தொகை, உடனடியாக கட்டுவது கடினம்
என்றெல்லாம் கூறி.

உயர்நீதிமன்றமும் –(ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் ஆயிற்றே)
கொஞ்சம் சலுகை காட்டி,
50 கோடியை முதலில் செலுத்துங்கள். மீதியை (100 கோடி)
12 மாத தவணைகளில் செலுத்துங்கள் என்று கூறியது.

பாவம் ஏழை சிமெண்ட் முதலாளி. எப்படி முடியும் அவரால் …?
உரிய காலத்தில், உயர்நீதிமன்ற உத்திரவுக்கு தடை பெற்று,
டில்லி உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறார்.

“ராஜஸ்தான் மாநில அரசு செய்வது கொடுமை.
எங்களுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திலும் நீதி கிடைக்கவில்லை.
உச்சநீதிமன்றம் தான் உரிய நீதி பரிபாலனம் செய்ய வேண்டு”மென்று.
( உண்மையான காரணம் ….? பணம் கட்டுவதை இன்னும்
இயன்ற வரையில் தாமதம் செய்யலாமே ..! .
சுப்ரீம் கோர்ட்டில்

அப்பீலுக்குப் போனால் இன்னும் 5 வருடமாவது ஆகாதா …?
அதுவரை 150 கோடி ரூபாயை வர்த்தகத்தில்
rotation-க்கு பயன்படுத்திக் கொள்ளலாமே …!)

 

banani-cement-bags-bachan

சிமெண்ட் முதலாளி ஆசையில் மண் விழுந்தது….!

சற்றும் எதிர்பாராத வகையில் –
“அமிதாப் பச்சன் படம் போட்டு விளம்பரம் செய்ய உங்களிடம்
காசு இருக்கிறது ( படம் பார்க்கவும்). விளம்பரத்திற்காக
கோடி கோடியாக செலவழிக்கிறீர்கள். வசூலித்த விற்பனை வரியை
ஒழுங்காகச் செலுத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை ?”
என்று கேட்ட உச்சநீதிமன்றம்,

” ராஜஸ்தான் உயர்நீதி மன்றம்
சொல்வதைச் செய்யுங்கள்” … என்று கூறி வழக்கை உடனடியாக
முடிவிற்கு கொண்டு வந்திருக்கிறது.

முதலாளி அய்யா பிரிஜ் பினானி என்ன செய்யப்போகிறார் என்பதை இனிமேல்  தான் பார்க்க வேண்டும். ( அதற்குள் மாநில அரசில் தேர்தல்
முடிந்து, திருமதி வசுந்தரா முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார்..)

சுப்ரீம் கோர்ட் வழக்குகள் சிலவற்றை  பார்த்துக்
கொண்டிருந்தபோது, எதேச்சையாக எனக்கு கிடைத்த விஷயம் இது.
இன்னும் இது போல் இந்தியாவில்
எங்கெங்கே எல்லாம் என்னென்னவெல்லாம் நடக்கிறதோ…?

நடந்ததோ …?

நம் நாட்டில், பிரிஜ் பினானிகளுக்கும்,
அவர்களைப் போன்ற பினாமிகளுக்கும்
பஞ்சமா என்ன ….?

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

ஏய்ப்பதற்கென்றே பிறந்திருப்பவர்கள் ……!! க்கு 10 பதில்கள்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அவர்கள் சாம்ராஜ்யம்.

  2. Ganpat சொல்கிறார்:

    கா.மை உள்ளிட்ட நண்பர்களுக்கு வணக்கம்.
    நம் மாநிலத்தில் திருமங்கலம் பார்முலா என்று ஒரு அசிங்கம் சில ஆண்டுகளுக்கு முன் உலாவந்தது.அதாவது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஒட்டு பெறுவது.இதை நடத்தி காட்டியது தி.மு.க.
    இதைபோல தமிழ்நாடு பார்முலா என்றும் ஒன்று 1991ஆண்டு முதல் அரங்கேறி வருகிறது.அதாவது இரண்டு கட்சிகள்; இரண்டிற்கும் மிக சக்தி வாய்ந்த தலைமை.இவர்கள் இருவரும் கொள்ளை அடிப்பதிலும் ஊழல் செய்வதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.வெளிப்படையாக இருவரும் பூனையும் எலியும் போல ..முதல்வர் ஐந்து ஆண்டு ஆட்சி செய்துவிட்டு அடுத்த தேர்தலில் இரண்டாவது நபர் வருவதற்கு வழி வகுப்பார்.இது இரண்டாவது ஆட்சியிலும் தொடரும்.இவ்வாராக இது வரை இரண்டு முறை சுழற்சி முடிந்து இப்போ மூன்றாவது நடக்கிறது.எந்த ஒரு மூன்றாவது கட்சியும் உள்ளே வர வாய்ப்பு இல்லை.
    இதே பார்முலா மத்திய அரசிலும் ஆரம்பிக்கப்போகிறதோ எனும் சந்தேகம் எனக்கு வருகிறது.இருப்பினும் இம்மாதம் பத்தாம் தேதிவரை பார்த்து, “வரவு செலவு திட்டம்” எப்படி உள்ளது எனக்காண ஆவலாக உள்ளேன்.அது பிசு பிசுத்தால் நமக்கு நல்லதல்ல!.
    மற்றபடி ஊழல் நம் நாட்டில் இன்னும் அதிவேகமாக பரவும் வாய்ப்பு அதிகம்.அதைத்தாங்க நமக்கு மிகுந்த மனோதிடம் தேவை.நான் பலமுறை சொன்னது போல இப்பொழுதுள்ள இறையாண்மை சட்டம்,இந்திய குற்றவியல் சட்டம், தேர்தல் விதிமுறைகள் மாறாமல் அப்படியே உள்ளவரை நம்மால் ஒரு துரும்பைக்கூட அசைக்கமுடியாது..

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக கண்பத்.
      எங்கே கொஞ்ச நாட்களாக காணோம் …?
      எதாவது சுற்றுப்பயணமா …?

      மோடி அரசு குறித்து – கொஞ்ச நாட்களுக்கு முன்னர் –
      “அவசரப்பட வேண்டாமே – ஒரு ஆறு மாதமாவது
      பொறுத்துப் பார்க்ககலாமே …..?”
      என்று எழுதி இருந்ததாக ஞாபகம்.
      இப்போது நீங்களே பொறுமை இழந்து விட்டது போல் தெரிகிறதே ….!

      நான் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க சித்தமாக இருக்கிறேன் …!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • ரிஷி சொல்கிறார்:

        வோடபோன் நிறுவனம் இந்தியாவுக்கு தரவேண்டிய இருபதாயிரம் கோடி வரி பாக்கியை இன்னும் நிலுவையில் வைத்துள்ளது. முதலீட்டு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வோடபோன் தப்பிக்கவே அதிக வாய்ப்புள்ளது. அபராதம் எனும் வகையில் யானைக்கு கொசு கடித்தாற்போல சிறு தொகையைக் கட்டிவிட்டு தப்பிவிடும். அவ்வகையில் 150 கோடி மோசடி மிக சிறிய தொகையாகத்தான் தெரிகிறது!!!

        ஒரு நாடு எவ்வகையில் நன்முறையில் நிர்வகிக்கப்பட முடியும் என்பதற்கு, பொருளாதாரத்தில் அது என்ன மாதிரியான, யாருக்கு சாதகமான கொள்கைகளைக் கொண்டுள்ளது என்பதை பொருத்தே தீர்மானிக்க முடியும். அந்த வகையில் காங்கிற்கும், பிஜெபிக்கும் கொள்கை அடிப்படையில் எந்த வேறுபாடுமில்லை.

      • Ganpat சொல்கிறார்:

        நன்றி.கா.மை.ஜி..உடல் நலக்குறைவுதான் காரணம்.
        உண்மை. நான் ஆறுமாதம் காத்திருக்க நினைத்தேன்.இருக்கவும் இருப்பேன்..ஆனால் நடுவில் வரும் பட்ஜெட் ஆட்சியை எடை போடபெருமளவிற்கு உதவும் என்றும் நினைக்கிறேன்.

  3. ரங்கராஜன் ராஜகோபாலன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன் சார்,

    ராஜஸ்தானில் நம்மூர் ஆசாமி ஒருத்தர் கூட மாட்டினார்
    என்று சொன்னார்களே, அதையும் கொஞ்சம் எழுதுங்களேன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      இதே கெஹ்லோட் – காங்கிரஸ் ஆட்சியில், ராஜஸ்தானில்,
      108 ஆம்புலன்ஸ் காண்ட் ராக்ட் எடுத்து சில கோடி ரூபாய்கள்
      போலி பில் தயாரித்து, அரசை மோசடி செய்ததாக சில
      காங்கிரஸ்காரர்களின் மேலேயே ஒரு குற்றச்சாட்டு (எப்.ஐ.ஆர்)
      அண்மையில் ராஜஸ்தான் போலீசால் பதிவு செய்யப்பட்டு
      விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் குற்றம்
      சாட்டப்பட்டவர்களில் நமது சிவகங்கை செல்வனும் ஒருவர்….
      இந்த செய்தி அண்மையில் தமிழ் செய்தித்தாள்களில் கூட
      வெளிவந்தது. அதனால் தான் நான் எழுதவில்லை…

      இதே போல் “அன்னை”யின் மருமகன் வாத்ரா மீதும் ஒரு
      விசாரணை துவங்கி இருக்கிறது. சூரிய மின்சக்தி உற்பத்தி
      செய்ய ராஜஸ்தான் அரசு (கெஹ்லோட் காலம்) தேர்ந்தெடுத்த
      இடங்களை தன் செல்வாக்கின் மூலம் முதலிலேயே தெரிந்து கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை தன் ரியல் எஸ்டேட் கம்பெனி மூலம் வாங்கி பிற்பாடு பெரும் லாபத்தில் விற்றதாக அடிப்படைக் குற்றச்சாட்டு. விசாரணை துவக்க நிலையில் இருக்கிறது.

      கெஹ்லோட் அரசு வந்தாரை எல்லாம் (காங்கிரஸ் வாரிசுகளாக இருந்தால்..) வாழ வைக்கும் அரசாக இருந்ததாகத் தெரிகிறது….!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. gopalasamy சொல்கிறார்:

    Last year you wrote about solar corporation corruption. ( son in law matter) . What happened to that?

  5. ரிஷி சொல்கிறார்:

    கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது; ஆகவே தமிழக மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என மோடி அரசு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. சொல்வதற்கு ஒன்றுமில்லை. வாழ்க மோடி அரசு!

  6. chandraa சொல்கிறார்:

    very few will admit that tamil nadu fishermen tamil nadu auto drivers tamil nadu school management people are not easily satisfied these people want more…more…more…. let us remember that srilankan tamil fishermen are deadly against fishig by tamil nadu fishermen in their territory. probably vaiko seeman kolathur nedu a…b…c…d… all would support only EELAM TAMILS not other tamils living in srilanka.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.