கருணாநிதியிடம் சிக்கிய “அய்யோ பாவம்” ஷண்முகநாதன் ….!

கலைஞர் கருணாநிதியிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, செயலாளராகப் பணியாற்றி வரும் திரு ஷண்முகநாதன் அவர்களின் இல்லத் திருமணம், கடந்த ஞாயிறு அன்று கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

திருமணத்தில் கலைஞர் பேசிய பேச்சின் ஒரு பகுதி –

karunanithi and shanmuganathan

“சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய
அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட,
என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர்.
வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்.”

தமிழுக்கு ஏற்றம் தருவோம் –

தொடர்ந்து கருணாநிதி பேசியபோது,
“நான் நடத்தி முடித்தது தமிழ்த் திருமணம்.
மணமக்கள் பெயர் விக்ரம், நிஷாந்தி.

முடிந்தவரை தமிழுக்கு ஏற்றம் தரும் அளவுக்கு நாம்
நடந்துகொள்ள வேண்டும். இப்போது விட்டுவிட்டால்
தமிழைக் காப்பாற்ற, தமிழுக்கு நேரும் ஆபத்துக்களை
தடுத்து நிறுத்த யாருமே இருக்க மாட்டார்கள். எதிர்காலத்திலே தமிழ் இருக்குமா என்ற கேள்வியோடு,
இன்றைக்கும் நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் அப்படிப்பட்ட புயல் இந்தியாவிலே வீசி,
அது தென்னகத்திலே தவழ்ந்து, தமிழகத்திலும் புயலாக
மாறியிருக்கிறது, அந்தப் புயலைத் தடுத்து நிறுத்த சண்முகநாதனுக்கு ஒன்றைச் சொல்கிறேன்.
விக்ரம் என்ற மணமகன் பெயரையும்,
நிஷாந்தி என்ற மணமகள் பெயரையும், கூடுமான வரை
தமிழ்ப் பெயர்களாக மாற்றி, தமிழுக்குப் பெருமை தேடித் தாருங்கள்” என்றார்.

இதையடுத்து, ‘நீங்களே தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’ என்று கருணாநிதியிடம் சண்முகநாதன் கூறினார்.

“நல்ல பெயர்களாக சிந்திப்பதற்கு எனக்கு சிறிது நேரம் வேண்டும். அந்தப் பெயர்களை வீட்டுக்குப் போன பிறகு நிச்சயமாகச் சொல்வேன், அந்தப் பெயர் முரசொலியில் வெளிவரும்” என்று கருணாநிதி
தெரிவித்தார்

————————-

இந்த செய்தியைப் படித்தவுடன் என் மனதில்,
ஷண்முகநாதன் இடத்தில் வைகைப்புயல் வடிவேலுவை
வைத்துப் பார்த்தேன்….
ஒரு வேளை அது வடிவேலுவாக இருந்தால் –
அவர் தன் மனதுக்குள் இப்படிப் புலம்பி இருப்பாரோ ….?

“அய்யா – அம்பது வருஷமா ஒங்கூட குடுத்தனம் பண்றேன். அதுக்கு இப்படி ஒரு கைங்கரியம் நீங்க பண்ணுவீங்கன்னு கனவுல கூட நான் நெனக்கல்லையே மவராசா….

ஊருல, ஒலகத்துல எவ்வளவோ பேர் இருக்காங்க ….
ஒங்க வூட்டுல இல்லாத மக்களா, ஆளுகளா – பேருகளா ….?

ஒங்க பேரன் உதயநிதி இருக்காக ….
அவங்க பொஞ்சாதி கிருத்திகா இருக்காக ….
அவங்க கம்பேனி “ரெட் ஜெயண்ட் ” இருக்கு…..

ஒங்க மக கனிமொழி அம்மாவோட மகன் “ஆதித்யா” இருக்காக…

ஒங்க பேரன் மாறன் கம்பேனிங்க –
” சன் பிக்சர்ஸ்” இருக்கு….
தொலைக்காட்சிக –
“சன் டிவி” இருக்கு –
“கே டிவி” இருக்கு –
“ஆதித்யா டிவி” இருக்கு –
“சன் ம்யூஸிக்” இருக்கு –
“சன் நியூஸ்” இருக்கு –

மதுரைப் பேரன் துரையோட –

“க்ளோவ்டு நைன்” சினிமா கம்பெனி இருக்கு –

ஒங்க எல்லைக்குள்ள இன்னும் என்னென்னவோ இருக்குக … எல்லாத்தையும் விட்டூட்டு இப்படி எங்குடும்பத்துக்குள்ள பூந்து
இப்படி குத்து வெட்டு உண்டு பண்றீங்களே என் ராசா …..

அம்பது வருஷமா ஒங்ககூடவே இருக்கற
இந்த வெட்டிப்பயலுக்கு
இது தான் நீங்க செய்யற கைங்கறியமா ….என் ராசா……?”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to கருணாநிதியிடம் சிக்கிய “அய்யோ பாவம்” ஷண்முகநாதன் ….!

 1. R Subramanian சொல்கிறார்:

  Excellent article.

 2. johan paris சொல்கிறார்:

  இந்தப் பகல்வேசம் போடும் ஆசாமி காலம் பூராகவும் இதே கூத்தைப் போட்டு ஊரை ஏமாற்றி சொகுசாக வாழ்கிறார்.வெட்கம் கிலோ என்ன விலையெனக் கேட்பார்.
  ஸ்டாலின் தமிழ் பெயரோ? இவர் கருணாநிதி கூட தமிழில்லையாம்.
  தொண்டன் வைத்த குங்குமப் பொட்டு பஞ்சப் பொட்டு, பி டி பழனிவேல் ராஜன் வைத்த பொட்டு பரம்பரைப் பொட்டு என விளக்கம் கொடுத்து, மனைவியை சாயிபாபா காலில் விழவைத்து, துணைவியை வைத்தீஸ்வரர் கோவிலனுப்பி , பெரிய கோவிலுக்குள் பட்டுவேட்டி கட்டி மாற்றுப்பாதையால் சென்ற மாற்றுக் கொள்கையுடைய புதிய நாத்திகம் பேசும் சுயநலமி!
  இவரிடம் சிக்குண்ட சண்முகநாதன் பாவமோ பாவம்.
  இத்தனை நாளும் பாவங்களுக்குத் துணைபோன அவருக்கு இது வேண்டும்

 3. காசிம் சொல்கிறார்:

  very nice

 4. kinarruthavalai சொல்கிறார்:

  ஐயோ ஐயோ நல்ல காமெடி பீசு இந்தக் கருணாநிதி. எப்படி இந்த வயதிலும் அவருக்கு இப்படி காமெடி வருது?

 5. Ganpat சொல்கிறார்:

  அவசரமே இல்லை ..இன்னும் ஒரு வருடம் ஆற அமர சிந்தித்து மணமக்கள் மற்றும் அவர்களுக்குப்பிறக்கப்போகும் குழந்தை ஆகிய மூவருக்கும் நல்ல தமிழ் பெயர்களாக சூட்டுங்கள் தலீவா!!

 6. Aakuvan சொல்கிறார்:

  Dear KM, even “Karunanidhi” is not a tamil name. Karuna and Nidhi are Sanskrit. Tamil equivalent may be “Anbu Selvan”.

  Also, one more point to ponder. As per your report, when he was asked to name them ( couple) in Tamil, he could not think so immediately. it is ironic that it will take time to think of Tamil names instantly for a Tamil Pundit?!!!

 7. முருகேசன் சொல்கிறார்:

  பாவம் தமிழ் இனத்தலைவர். வயதாகிவிட்டதால் தமிழ் பெயர்கள் உடனடியாக சொல்ல முடியவில்லை. வைரமுத்துவிடம் பேசியதும் சொல்வார்.

 8. ரங்கராஜன் ராஜகோபாலன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  எப்போதும் seriousஆகவே இருக்கிறீர்களே என்று
  நினைத்தேன். உங்களுக்கு காமெடியும் நன்றாக வருகிறது.
  தொடர்ந்து காமெடியும் எழுதுங்கள்.
  இப்போதெல்லாம் சில சமயங்களில் கலைஞர்
  நல்ல காமெடியனாகி விடுகிறார். என்ன பேசுகிறொமென்று
  யோசிக்கவே மாட்டாரோ ?
  நன்றி.

 9. chandraa சொல்கிறார்:

  very few know why karuna had chosen kept shanmuganathan …. both belong to the same caste. i have seen younger generation commenting about the uninspiring face of shanmuganathan…. … one of the reasons for dmks defeat in recent elections . all dmk leaders look like………. all of them fail to inspire the audience…. .

 10. visujjm சொல்கிறார்:

  சிரிக்க சிந்திக்க மட்டும் இல்லாது சற்று வாழ்வின் நன்னெறிகளையும் கற்று தரும் அற்புதமூர்த்தி .., நான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவன்,. வாழ்த்துக்கள் ! ஐயா வளர்க தங்கள் பதிவு வாசிப்பபோர்களின் எண்ண்ணிக்கை…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   விசு,

   நான் மிகச் சாதாரணமானவன்.
   களத்தில் இறங்கி வேறு எதையும் செய்ய – சக்தியற்றவன்.
   ஏதோ என்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறேன்.
   அவ்வளவே. உங்கள் நல்ல எண்ணங்களுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. chollukireen சொல்கிறார்:

  ஷண்முகத்தையே முதலில் மாற்றச் சொல்லவில்லையா ? அன்புடன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பரே,

   பாவம் -வயதானவர் என்று ஷண்முகநாதனை விட்டு
   விட்டாரோ என்னவோ ….!
   ஒரு வேளை சொன்னால் – எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிற நேரத்தில் -இருக்கிற ஒரே துணை ஷண்முகநாதனும்
   ஓடி விட்டால் என்ன செய்வது என்றும் யோசித்திருக்கலாம்..!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • reader சொல்கிறார்:

    // எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிற நேரத்தில் -இருக்கிற ஒரே துணை ஷண்முகநாதனும்
    ஓடி விட்டால் என்ன செய்வது என்றும் யோசித்திருக்கலாம்..!//

    சில வருடங்களுக்கு முன்னால் இம்சை தாளாமல் அவரும் ஓடினாரே. பத்து நாள் பொருத்துப் பார்த்த தலை, ‘அவன் வர்ரானா இல்லையானு கேளு. அரசு பைலை தூக்கிட்டு போயிட்டானு கமிஷனர்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுப்பேன்னு அவங்கிட்ட சொல்லு’ என்றதும் பதவிசா பணிக்குத் திரும்பினாரே.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பரே ( ரீடர் ..)

     திரு.ஷண்முகநாதன் கோபித்துக் கொண்டு போனதும்,
     பின்னர் திரும்ப வந்ததும் –
     உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு
     ஞாபகத்திற்கு வந்தது.
     ஆனால் நீங்கள் சொல்லி இருக்கும்
     சுவையான பின்னணி கதை இதுவரை
     எனக்குத் தெரியாது…..quite interesting…!!

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 12. rathnavelnatarajan சொல்கிறார்:

  ஆஹா. அருமை.

 13. gopalasamy சொல்கிறார்:

  Dayalu ammal name also can be changed. But she should remember her names.

 14. Aar Aar சொல்கிறார்:

  Is Shanmuganathan the sorry fellow?
  He started as a low grade steno clerk. He belongs to same caste as Karunanidhi. With that he became his personal PA for so many years.
  Have you seen his house. Only Maran’s house comes close to it.

  One small info about his earnings:
  When Karunanidhi was the CM, Shanmuganathan handles his meeting schedule. Anyone to meet Karunanidhi for business dealings have to pay Shanmuganathan minimum 25000Rs just for fixing up the 3-5 min schedule. Rate goes up for bigger transactions. In a day, atleast 10 business people will meet him in Gopalapuram house in the morning and 30 people in secretariat and another 10 in CIT house in the evening. This was going on for 10 years when KK was CM.

  This is just a small sample of his earning potential.

  • Ganpat சொல்கிறார்:

   Aar Aar you are partially right..yes Shanmuganathan would have collected 25K per meet. But at the end of the day he would have to pay his boss 24.5K per meet and can only take 500 to himself..His boss was making money left right centre top bottom front and back 🙂 🙂

  • vijay சொல்கிறார்:

   That is a small part of the earning; just to move up a file to MK, he was charging 500 Rs in 1980s; moved up to 5000 Rs an then all the way to 50 K in 2012. On a daily basis, he was making 250,000 Rs. Have you seen is house?

 15. devaraj சொல்கிறார்:

  காமெடியாக இருந்தாலும் உண்மையில் இது ஒரு சீரியஸான மேட்டர் தான். பாருங்களேன் இந்த தலைவர்களை, ஊருக்கு தான் உபதேசம். வகையாக மாட்டிக்கொண்ட சீடப்பிள்ளைகளிடம் தன் சட்டாம்பிள்ளைதனம் எல்லாவற்றையும் காட்ட வேண்டியது. கலைஞர் என்றில்லை எல்லா தலைகளூமே இப்படித்தான்.

 16. chandraa சொல்கிறார்:

  km sir let us for a change discuss whether the prolonged I.T case for over twenty years can be settled directly with I.T. dept instead of in the court we can also discuss what is the necessity of giving extension to the retired ia s officers …..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.