கச்சத்தீவு – பாஜகவுக்கு ஒரு கட்டாயம்……!

 

கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.
இந்த தடவை வேறு உருவத்தில்…

உச்சநீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) இது குறித்து ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போது பல்லாவரத்தைச் சேர்ந்த பிஷர் மேன் கேர் என் கிற மீனவர் அமைப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது.

மத்திய அரசின் சார்பில், (வெளியுறவுத்துறையின் சார்பில்), ஆஜரான வழக்கறிஞர் – இந்திய – இலங்கை இடையிலான கடல் எல்லைப் பகுதி என்பது முடிந்துபோன விஷயம் என்றும், கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் பாரம்பரிய மீன்பிடி உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை என்றும் –

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் முன்வைக்கப்பட்ட அதே வாதத்தை மீண்டும் நீதிமன்றத்தின் முன்வைத்திருக்கிறார். ஆட்சி மாறினாலும், (மத்தியில் காங்கிரஸ் போய் பாஜக வந்தாலும்) –

காட்சி ஒரு சிறிதும் மாறவில்லை என்பது மிகவும் வருத்தம் தரும் விஷயம்.

ஆனால் -மத்திய அரசின் வக்கீல் புதிய அரசை கலந்து ஆலோசனை செய்த பிறகு இதைச்செய்தாரா அல்லது பழைய குறிப்புக்களின் அடிப்படையில் தன் வாதத்தை முன்வைத்தாரா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
நியாயமாக, புதிய அரசிடம் கலந்தாலோசனை செய்த பிறகு தான் அவர் தன் வாதத்தை முன்வைத்திருக்க வேண்டும்….
ஆனால் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை...

எப்படி இருந்தாலும் சரி –

கச்சத்தீவு சட்டவிரோதமாக இந்திரா காந்தியால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட அநியாயத்தை சரி செய்யவும்,
தமிழக மீனவர்களுக்கு நியாயம் வழங்கவும் –
திமிர் பிடித்து அலையும் கொலைகார ராஜபக்சேக்கு
ஒரு பாடம் புகட்டவும் –

நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும், முக்கியமாக தமிழக பாஜக தலைமைக்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே தமிழகத்தைப் பொறுத்த வரையில் பாஜக வின் எதிர்காலம் அமையும்.

கச்சத்தீவைப் பொருத்த வரையில் நம் பக்கத்தில் உள்ள நியாயங்களை ஏற்கெனவே சிலதருணங்களில் இந்த
விமரிசனம் வலைத்தளத்திலேயே நாம் விவாதித்திருக்கிறோம்.

Katchatheevu-1kachatheevu-2

 

அவற்றைப் பார்க்காத நண்பர்களுக்காகவும்,
நாமே சில விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்,

பழைய இடுகையிலிருந்து சில பகுதிகள் கீழே –

———————-

( ஏற்கெனவே விமரிசனம் வலைத்தளத்தில்
மார்ச் 12, 2013 அன்று – வெளிவந்த –

“விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு –
விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்கு !”
என் கிற இடுகையின் ஒரு பகுதி)

———————————————

“நான் இதை முற்றிலும் வேறான
கோணத்தில் பார்க்கிறேன்.
நம்பிக்கையுடன் பார்க்கிறேன்.
இன்றில்லா விட்டாலும் எதிர்காலத்தில் –
கச்சத்தீவும், மீனவர் பிரச்சினையும் நிச்சயமாகத்
தீர்க்கப்படக் கூடியவை தான்.

இரண்டு வழிகள் உண்டு.

– துணிச்சலான, தமிழகம் சொல்லும் நியாயத்தை உணர்ந்து, ஏற்று, செயல்படக்கூடிய மத்திய அரசு இருந்தால் – 24 மணி நேரத்தில் இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வரலாம்.
எப்படி ?

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் –
ஜூன் 28, 1974 அன்று கையொப்பமிடப்பட்ட
கச்சத்தீவு பற்றிய இந்திய-இலங்கை உடன்படிக்கை
பிரிவுகள் 5 மற்றும் 6 -ன் படி –

“பாரம்பரியமாக இரு நாட்டையும் சேர்ந்த
மீனவர்கள் அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும் அவர்கள் தொடர்ந்து, எந்தவித கட்டுப்பாடும் இன்றி அனுபவிப்பார்கள். கச்சத்தீவு பகுதிக்கு அவர்களது மீன்பிடி படகுகள் சென்று வர இலங்கை அரசிடமிருந்து எந்தவித விசாவோ, அனுமதியோ தேவையிலை” என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளையும் சேர்ந்த மீனவர்கள்,
இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்
இந்நாள் வரை பாரம்பரியமாக அனுபவித்து வந்த
அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிப்பார்கள்.
-முக்கியமாக, இந்த சலுகை இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் உண்டு என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

( மத்திய அரசின் வழக்கறிஞர் கூறும் –
இந்திய மீனவர்களுக்கு பாரம்பரியமாக மீன் பிடிக்கும்
உரிமை இல்லை என்கிற விஷயம், அவரது அபாரமான மூளையில், அன்னை சோனியா காந்தியை மகிழ்விக்கவென்றே உதித்த அற்புதக் கற்பனையாக இருக்கும்…)

(Article 5 – Subject to the foregoing,
Indian fishermen and pilgrims will enjoy
access to visit Kachchativu as hitherto,
and
will not be required by Sri Lanka
to obtain travel documents or visas
for these purposes.

Article 6 -The vessels of Sri Lanka
and India will enjoy in each other’s waters
such rights as they have traditionally
enjoyed therein.)

கச்சத்தீவு உடன்படிக்கை பற்றிய அறிக்கையை இந்திய
பாராளுமன்றத்தில் வெளியிட்ட அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங் கூட –

“மீனவர்கள் இதுவரை மீன்பிடித்து வந்த இடங்களில்
தொடர்ந்து தங்கள் தொழிலை செய்ய எந்த தடங்கலும் இருக்காது” என்று உறுதி அளித்துள்ளார்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் -நமது மீனவர்கள் கச்சத்தீவு அருகே செல்வதோ, மீன் பிடிப்பதோ – எல்லை தாண்டுவதாகும் என்று இலங்கை எப்படி முடிவு செய்யலாம் ?

இந்திய அரசு காங்கிரஸ் தலைமையின்
சொந்த விருப்பங்களுக்கிணங்க, சும்மா இருப்பதால் தானே இலங்கை வாலாட்டுகிறது. இதை அடக்க வழியா இல்லை ?

முதலில், இந்திய அரசு தன் கௌரவத்தையும்,
உரிமையையும் நிலை நாட்டவும், இந்திய(தமிழக ?)
மீனவர்கள் நலனை பாதுகாக்கவும் உறுதி எடுத்துக்
கொள்ள வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்தப்படியே, இந்திய மீனவர்களுக்கு
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிமை இருக்கிறது
என்பதை மத்திய அரசு முதலில்
இலங்கையிடம் வெளிப்படையாக அறிவித்து,

இலங்கை கடற்படையினராலோ, மீனவராலோ
அங்கு வரும் தமிழக மீனவர்களுக்கு எந்த வித
அச்சுறுத்தலோ, துன்புறுத்தலோ – நிகழக் கூடாது
என்பதையும் வலியுறுத்திக் கூற வேண்டும்.

இந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு
இந்திய கடற்படைக்கு உத்திரவு இடப்பட்டுள்ளது
என்றும் இலங்கை கடற்படை விதிமீறினால்,
இந்தியக் கடற்படை பொறுத்துக் கொள்ளாது என்றும்
இலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதை உறுதி செய்ய –
கச்சத்தீவு அருகே இந்திய கடலோர காவல்படையின்
கப்பல்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு, அங்கு
மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களின் பாதுகாப்பு
உறுதி செய்யப்பட வேண்டும்.

இதையும் மீறி இலங்கை கடற்படை தொந்திரவு
கொடுக்குமேயானால், கச்சத்தீவு பற்றிய ஒப்பந்த
விதிகளை இலங்கை மீறுவதை காரணம் காட்டியே,
இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஒரு தரப்பாக ரத்து செய்து  கச்சத்தீவை நிரந்தரமாகத் தன் பொறுப்பில்
ஏற்க வேண்டும்.

(ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படியே கூட,
இரு நாடுகளிடையே சில விதிகளுக்கு உட்பட்டு
ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு,

பிற்காலத்தில் எதாவது ஒரு தரப்பினர் அந்த
விதிமுறைகளின்படி நடக்கவோ, ஏற்கவோ மறுத்தால்,

அந்த காரணங்களுக்காகவே ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை எதிர் தரப்பினருக்கு கிடைக்கிறது.)

அடுத்த வழி – நீதிமன்ற வழி !!

உச்சநீதிமன்றத்தில்( சுப்ரீம் கோர்ட் )
நீண்ட காலமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்
கச்சத்தீவு பற்றிய வழக்கை, தொடர்ந்து நிகழும் மீனவர்
படுகொலைகளை காரணம் காட்டி, அவசர வழக்காக
விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைக்க வேண்டும்.

அடிப்படையிலேயே – இந்திய -இலங்கை அரசுகளால்
செய்து கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் சட்டரீதியாக செல்லத்தக்கது அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்.

உண்மையில் கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லத்தக்கதா ?

இந்திய மண்ணில் ஒரு அங்குல நிலத்தைக் கூட
அண்டை அயல் நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க
வேண்டுமானால், எல்லைகளை மாற்ற அரசியல் சட்ட
திருத்தம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் ஏற்றுக்
கொள்ளப்பட வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்த விவகாரத்தில் –
இந்த நடைமுறை பின்பற்றப்படவே இல்லை !

சம்பந்தப்பட்ட மாநிலமான தமிழ் நாட்டையும்
கலந்து ஆலோசிக்காமல் –
பாராளுமன்றத்தின் அனுமதியையும் கோராமல் –
இந்தியப் பிரதமர் இந்திரா அம்மையார் தன்னிச்சையாக
இலங்கையுடன் ஜூன் 28, 1974 அன்று ஒப்பந்தத்தில்
கையெழுத்து போட்டு விட்டு –

பின்னர் பாராளுமன்றத்திற்கு அதனை ஒரு தகவலாக
மட்டுமே தந்தார்- அதையும் வெளியுறவுத் துறை அமைச்சராக
இருந்த ஸ்வரண் சிங்கின் ஒரு அறிக்கை மூலமாக.

முறைப்படி பாராளுமன்ற அங்கீகரிப்பிற்காக ஒப்பந்தம்   முன்வைக்கப்படவே இல்லை !

அதிமுக்கியமான விஷயம் –
இப்படி ஒரு ஒப்பந்தம் போடவே இந்திய அரசுக்கு
அதிகாரமோ, உரிமையோ இல்லை.

ஒப்பந்தத்தின் வாசகங்களே தவறானவை.
கச்சத்தீவு இரண்டு நாடுகளுக்கிடையே உள்ள
பிரச்சினைக்குரிய ஒரு பகுதியாக ஒப்பந்தத்தில்
சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுவே தவறு.

கச்சத்தீவு – எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல்,  ராமநாதபுரம் ஜமீனின் – இந்தியாவின் –
ஒரு பகுதியாகத்தான் இருந்தது என்பது
கீழே காணப்படும் விவரங்களிலிருந்து புரியும் –

In 1947 one Mr.Mohammed had taken lease
of the island of Katcha Theevu which was
registered in the Sub-Registrar’s office of
Indian town
of Rameswaram (Ref: Reg.No. 278/1948.)

After India attained independence,
the Indian State of Madras by way of
Government Order No: 2093 dated 11.8.1949

declared that Katcha Theevu as barren land
under Rameswaram revenue village
Survey Number: 1250 in an area of
285 acres and 20 cents.

Thus for centuries Katcha Theevu was
under the Princely state of Ramnad
in British India, and under Government of
Madras in Independent India.

இவ்வாறு சந்தேகத்திற்கே இடமில்லாமல், தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை –
அரசியல் சட்டப்படி அதற்குரிய அதிகாரம் இல்லாமலே
இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த அந்நாளைய
இந்திய அரசின் செயல் சட்ட விரோதமானது.

இந்த உண்மையை தகுந்த ஆதாரங்களுடன்,
சிறந்த வழக்கறிஞர்களின் துணையோடு நிச்சயமாக
உச்ச நீதி மன்றத்தில் நிரூபித்து, கச்சத்தீவு ஒப்பந்தத்தை  ரத்து செய்யும் ஆணையை உச்சநீதிமன்றத்திலிருந்து பெற முடியும்.

எனவே -நிச்சயமாக, கச்சத்தீவு முடிந்து போன கதை அல்ல. அதற்குரிய நேரமும்,அதனை செய்து முடிக்கத்தகுதியுள்ளவர்களும்
இன்னும் வரவில்லை – அவ்வளவே !

—————————————-

பின் குறிப்பு –

“நேரமும் வந்து விட்டது. செய்து முடிக்கத் தகுதியுள்ளவர்களும் வந்து விட்டோம்” என்று கூறி பாஜக இதை ஒரு சவாலாகவே ஏற்று செய்து முடிக்க வேண்டும்.

தமிழக பாஜகவிற்கும், முக்கியமாக அதன் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மத்திய அமைச்சருமான – திரு.பொன்.ராதாகிருஷ்ணனுக்கு – இதில் பெரும் பங்கும், பொறுப்பும், கடமையும் இருக்கிறது.

தமிழக மீனவர்களின் உரிமையை மீட்போம் என்று
தான் கூறியது சும்மா தேர்தலின் போது போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போன வார்த்தை அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு.

கச்சத்தீவு விவகாரத்தை வெற்றிகரமாக முடித்தால்,
தமிழக மக்களின் மனதில் பாஜக விற்கு நிரந்தரமான ஒரு இடம் கிடைக்கும். இந்த வாய்ப்பை பாஜக சரியாகப் பயன்படுத்த தவறினால் – அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு தமிழகத்தில் இந்த ஒரு சீட்டு கூட கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to கச்சத்தீவு – பாஜகவுக்கு ஒரு கட்டாயம்……!

 1. kinarruthavalai சொல்கிறார்:

  எனக்கென்னவோ ப ஜ க என்னதான் நல்லவற்றை தமிழர்களுக்கு செய்தாலும் நம் தமிழக மக்கள் ப ஜ கவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். நமக்கு இலவசங்களே உயிர்நாடி. அதை ஏதாவது வகையில் பாஜக வழங்கினால் மக்கள் யோசிக்கலாம். இதே பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூட அதை நினைத்துப் பார்ப்பார்களா என்பதும் சந்தேகமே. மன்னிக்கவும் negative ஆக தவிர மற்றபடி நேர்மையாக நம் மக்களைப் பற்றி நினைக்க எனக்கு மனம் வரவில்லை.

  • reader சொல்கிறார்:

   நம்ம மக்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் பாஜக அரசு அப்படியென்ன தமிழக மக்களுக்கு செய்துவிட்டார்கள் என்பதை விளக்கவும்.
   பின்னர் தமிழ் மக்கள் ஆதரவளிப்பார்களா இல்லையா என்பதைப் பற்றிப் பேசலாம்.
   ஓஹோ, இப்படி ஒரு சந்தேகம் இருப்பதால்தான் ஒன்னும் செய்யாமல் இருக்கிறார்களோ?

   சொம்பை எடுத்துக்கொண்டு ஓரமாகச் சென்று அமரவும்.

   • kinarruthavalai சொல்கிறார்:

    நல்ல அறிவாளி. அப்படியே புல்லரிக்கிறது. 37 மேசை தட்டிகளை கொடுத்திருக்கிறீர்கள். அவர்களை வைத்து கேளுங்களேன். நான் சொம்போ? நாம் எதையும் செய்ய மாட்டோம் மற்றவர்கள் நமக்கு செய்யணும். (மீண்டும் ஆரம்பத்திலிருந்து படிக்கவும்)

    • reader சொல்கிறார்:

     **கொடுத்திருக்கிறீர்கள்**
     றார்கள்!

     **37 மேசை தட்டிகளை கொடுத்திருக்கிறீர்கள். அவர்களை வைத்து கேளுங்களேன்**
     அவை பதுமைகள். வாய் திறந்து பேசா.

     அதுக்குத்தான் குமரியிலிருந்து ஒரு சிங்கத்த அனுப்பியிருக்கிறோமே, அது குளச்சலில் வணிகத் துறைமுகமும், குலசேகரப் பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளமும் அமைச்சுத் தருதான்னு பாக்கலாம். அப்படி ஏதாவது நடந்தா அடுத்த தேர்தலில் 37 இல்லாட்டியும் மூணோ ஏழோ கொடுப்பதைப் பத்தி யோசிக்கலாம்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பரே (ரீடர்..)

    இன்னும் கொஞ்சம் நாகரீகமாக
    உங்கள் கருத்தைச் சொல்லலாமே – ப்ளீஸ் ..

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 2. Ganpat சொல்கிறார்:

  //அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு தமிழகத்தில் இந்த ஒரு சீட்டு கூட கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.// ஒரு சீட் கூட இல்லாமல் தனிப்பெரும் ஆட்சி அமைக்க முடியும் என பா.ஜ.க அறியும்.இனி நம் மாநிலம் அரசியல் அனாதைதான்.

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு. நன்றி.

 4. ரிஷி சொல்கிறார்:

  //இந்த வாய்ப்பை பாஜக சரியாகப் பயன்படுத்த தவறினால் – அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு தமிழகத்தில் இந்த ஒரு சீட்டு கூட கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.//

  இது காவிரி மைந்தன் அவர்களின் தனிப்பட்ட ஆதங்கமே.

  பிஜெபியின் அகில இந்திய தலைமைக்கு இலங்கையின் நட்பு லாபமா அல்லது தமிழக பிஜெபியினால் லாபமா எனப் பார்க்கும்போது, தமிழகத்தை மிக அழகாய் தண்ணீர் தெளித்து விடுவார்கள். 🙂 இந்த இடத்தில் ஆக்ட்சுவலி கோப ஸ்மைலி போடணும். ஆனால் இந்திய ஜனநாயகத்தின் கட்சி கட்டமைப்பு முறை பற்றி அறிந்த பின்னும் மாற்றங்களுக்கு அவர்களையே நம்பியிருக்கும் நம் மக்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது 🙂

 5. gopalasamy சொல்கிறார்:

  Why three cases? 1. jaya, 2. karuna, 3. fisherman care.
  Why not all the cases clubbed together? According to press reports, it is clear that documents are for our side. Then why the delay?

 6. reader சொல்கிறார்:

  முன்பே சொன்னதுதான். தமிழகம் தொடர்பான செயல்களில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது என்று. இன்னும் தமிழகம் தொடர்பான வெறுப்பு தில்லி பார்ப்பணீய அரசாங்க வர்க்கத்தினிடையே ஆழமாக உள்ளது.
  அதற்குத் தகுந்தாற்போல திராவிட சொம்புகளும் நடந்து வருவதால் ஒரு மாற்றமும் நிகழாது.

 7. ரிஷி சொல்கிறார்:

  //37 மேசை தட்டிகளை கொடுத்திருக்கிறீர்கள்.//

  புனை பெயர் அருமை 🙂

 8. Ganpat சொல்கிறார்:

  தமிழ் நாட்டில் வாழ்பவர்களுக்கு ஒரு பிரத்யேக வசதி உள்ளது.எதாவது ஒரு விவாதம் கை மீறி போகிறதென்றால் உடனே ஜாதியை இழுத்து அதை சமாளித்து விடலாம்.

 9. chandraa சொல்கிறார்:

  km sir let us for a change discuss….how a twenty years I.T pending case in the court can be directly settled with the I,T DEPARTMENT.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.