2g – 214 கோடி வழக்கு – ஸ்டாலினையும் “உள்ளே” இழுக்கிறாரா ராஜா ……..?

 

ஒரு மாதம் முன்பாக firstpost ஆங்கில செய்தித்தளத்தில்
வந்த ஒரு செய்தி இது –

sadiq Batcha states “That around one year back
(2010), Mr.Shahid Balwa came to Chennai and had a
meeting with Mr. Stalin, Deputy CM at his residence
and at that time, Mr. A Raja was present there.”

இன்று வெளிவந்துள்ள ஒரு தமிழ் வார இதழில் வெளிவந்துள்ள தகவல் இது –

“கலைஞர் டிவிக்கு பணம் வந்தது உண்மை.
அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் யார் ..?
யார் மூலமாக பணம் கைமாறியது ?
அப்போது பேச்சு வார்த்தைகள் நடத்தியவர்கள் யார் ?
நேரடி சந்திப்புகள் யார் யாருக்கு நடந்தது …?
-இந்த கேள்விகளுக்கு விடை தேடி அமலாக்கியத்துறை
புறப்பட்டுள்ளது.

இறந்து போன சாதிக் பாட்சாவின் வாக்குமூலத்தை தவிரவும் வேறு ஒரு வலுவான ஒரு சாட்சி அவர்களுக்கு சிக்கி விட்டதாக  தகவல்கள் சொல்கின்றன.

ஷாகித் பால்வா மூன்று முறை சென்னைக்கு வந்து ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகள் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2010 மார்ச் வரை நடந்துள்ளது. இரண்டு முறை காலை விமானத்திலும், ஒரு முறை மதிய விமானத்திலும் பால்வா சென்னை வந்துள்ளார். மூன்று முறையும் செனடாப் சாலையில் உள்ள ஸ்டாலின் வீடு வரைக்கும் வந்து அடையாளம் காட்டிய இந்த நபர் – செத்துபோன சாதிக் பாட்சாவின் அலுவலகத்தில், அவரோடு சேர்ந்து பணியாற்றிய ஒருவர். இவர் ராஜாவையும் நன்றாக அறிந்தவர்…!

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், சாதிக் பாட்சா சிபிஐ யிடம் வாக்குமூலம் கொடுக்கும்போது அதில் ஸ்டாலின் பெயரையும் சேர்க்கச்சொல்லி சொன்னவர் 2ஜி வழக்கில் முக்கிய  குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்…( ?…) என்றும்,
அந்த விஷயமும் இந்த புதிய சாட்சிக்கு தெரியும் என்றும் தகவல் வெளிவந்திருக்கிறது.

இதற்கு தொடர்பு உள்ள இன்னொரு விஷயமாக –
ஒன்றேகால் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வாட்சும்,
25 லட்ச ரூபாய் மதிப்புள்ள இன்னொரு வாட்சும் கை மாறி இருக்கிறது என்னும் தகவலும் வந்திருக்கிறது.

கொஞ்சம் யோசித்தால் –
வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிக்கியவர்,
தான் மட்டும் சிக்கினால் வெளியே வருவது கடினம் என்பதால்,

செல்வாக்குள்ள மற்ற நபருக்கு இதில் உள்ள தொடர்பையும் சாதிக் பாட்சாவின் வாக்குமூலம் வழியாக ஒரு மூலையில் பதிவு செய்து வைத்தால் வைத்தால், பின்னர் உதவும் என்கிற மாதிரியான சாமர்த்தியமான முன்யோசனையுடன் செயல்பட்டிருப்பது தெரிகிறது.

ராஜா தொடர்புடைய 2ஜி ஊழலால் தான் திமுகவின் பெயர் இந்த அளவிற்கு கெட்டுப்போனது என்கிற உண்மை அகில இந்தியாவிற்கும் தெரியும்
என்கிற பின்னணியில் –

பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தீர்மானித்தது முழுக்க முழுக்க ஸ்டாலின் தான் என்கிற பின்னணியில் –

கட்சியின் பாதிப்புக்கு பெரிதும் காரணமானவர் என்று தெரிந்திருந்தும், ராஜா ஏன் ஒரு வேட்பாளராக
ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்டார் ?
ஸ்டாலினால் – ராஜாவை ஏன் தவிர்க்க முடியவில்லை..?
அப்படி ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அழுத்தம் என்ன ….?
என்கிற கேள்விகள் தாமாகவே எழுகின்றன….

அதன் விடையாக, ஏற்கெனவே எழுந்த கேள்வி தான் இது ….

80 வயதைக் கடந்த, இத்தகைய ணப்பரிமாற்றங்களுக்கு
சற்றும் பொருத்தமில்லாத ஒரு குடும்பப் பெண்மணி
இது போன்ற நடவடிக்கைகளில் எப்படி ஈடுபட்டிருப்பார் …?

karunanidhi-stalin

கேள்வி வட்டம் சுருங்குகிறது…..
தந்தையா …? தனயனா….? அல்லது இருவருமேயா …?

‘தக தகத்ததாய சூரியனா’ லேயே அடையாளம் காட்டப்படும் சூழ்நிலை வந்து விட்டதா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to 2g – 214 கோடி வழக்கு – ஸ்டாலினையும் “உள்ளே” இழுக்கிறாரா ராஜா ……..?

 1. Ganpat சொல்கிறார்:

  “விடா கண்டன் கொடா கண்டன்” என்றால் நீங்கதான் கா.மை.ஜி..நான்தான் குற்றவாளி என்று ஸ்டாலினே ஒப்புகொண்டால் கூட அவரை கைது செய்ய அரசு தயங்கும்.இதுதான் நிதர்சனம்.இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே.இதில் விலக்கே இல்லை.எனவே யாராலும் இன்னொருவரை கைது செய்ய முடியாது.

 2. ரங்கராஜன் ராஜகோபாலன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  ஸ்டாலின் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை லண்டன்
  சென்று மருத்துவ பரிசோதனை பெற்று வருகிறாரே,
  அவருக்கு என்ன நோய் என்று யாரும் சொல்ல
  மாட்டேன் எங்கிறார்களே ஏன் அப்படி ?
  வியாதி எதாவது இருந்தால் ஓபனாக சொல்ல வேண்டியது
  தானே ? உங்களுக்கு இது பற்றி எதாவது தெரியுமா ?

 3. எழில் சொல்கிறார்:

  ஒருவரின் நோய் அவருடைய தனிப்பட்ட பிரச்சனை. அதை நாம் பொதுவெளியில் ஆய்வு செய்வது நாகரீகமற்றது என்பது எனது தாழ்மையான எண்ணம்.

 4. chandraa சொல்கிறார்:

  stalin is s a dull headed…shortsighted shorttempered biased man.vaiko sarathkumar kushboo bagyaraj and may others made their exit from dmk because of stalin. he cannot tolerate the rise of kanimozhi also. a man of high inferiority complex he cannot lead the party dmk is already a sinking ship.

 5. natchanderandraa சொல்கிறார்:

  among the present political leaders communist leaders vaiko congress leaders thiruma krishnaswamy all could speak converse in English except STALIN AND VIJAYAKANTH…. t.r baalu only helped stalin when he went to dellhi to see p.m and others…. even karuna is definitely better than stalin his son in an English conversation. alagiri knows only abcd engappan thaadi….
  good father good sons

 6. gopalasamy சொல்கிறார்:

  Sri Ezhil, when one wants to become chief minister of tamilnadu, people are having the right to know about him. Nobody knows about the purpose of stalin’s London visits. When stalin was going to Honkonk, he commented about Jaya’s kodanadu visit!

 7. Ganpat சொல்கிறார்:

  எழில்..தகுந்த மருத்துவ சான்றிதழ் இன்றி ஒருவர் பியூன் வேலையில் கூட சேர முடியாது என்று இருக்கையில் மாநிலத்தின் முதலமைச்சராக வர ஆசைப் படும் ஒருவரின் உடல் நிலையை பற்றி அறிய/விவாதிக்க வாக்காளர்களாகிய நமக்கு எல்லா உரிமையும் உண்டு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் ரங்கராஜன்/ எழில் / கண்பத்,

   ஸ்டாலின் எதற்காக அடிக்கடி லண்டன் போகிறார் என்பது
   எனக்கும் தெரியாது. மருத்துவ பரிசோதனைக்காக
   என்று கூறப்படுகிறது.

   ஆறு மாதத்திற்கு ஒரு தடவை, அதுவும் லண்டனுக்குப்போய்
   என்றால், அது ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை இயற்கையாகவே ஏற்படுத்துகிறது. சென்னையில்,
   இந்தியாவில் இல்லாத மருத்துவ வசதிகளா …? எதற்காக
   அடிக்கடி லண்டனுக்கு …? அது நோயின் விசேஷ தன்மை
   காரணமாகவா அல்லது ரகசியம் காக்கவா …?

   மன்னிக்கவும் எழில். நாம் அவருக்கு எத்தகைய உபாதை –
   அது ஏன் வந்தது என்பதைப்பற்றி எல்லாம் நிச்சயம்
   விவாதிக்கப் போவதில்லை. சாதாரணமாக எல்லாருக்கும்
   வரக்கூடிய உடல் பிரச்சினை தான் என்றால் யாரும் கண்டு
   கொள்ளப்போவதும் இல்லை.

   ஆனால் தொடர்ச்சியாக அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று
   சிகிச்சை பெறுகிறார் என்றால்
   அவருக்கு என்ன பிரச்சினை என்று ஓரளவாவது
   தெரிந்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது என்றே
   (நண்பர் கண்பத் சொல்வது போல்) நானும் கருதுகிறேன்.

   முக்கியமாக, அவரே தனக்கு என்ன பிரச்சினை என்றும்,
   ஏன் லண்டன் போகிறார் என்பதையும் வெளிப்படையாக
   கூறி இருந்தால், இத்தகைய பேச்சுக்களுக்கோ, யூகங்களுக்கோ
   இடம் இருந்திருக்காது. நாளையே அவர் அரசாங்கத்தில்
   பொறுப்பேற்றால், இந்த செலவுகள் எல்லாம் – மக்களின்
   பொறுப்பு தானே …? அப்படியானால், அதை தெரிந்துகொள்ள
   மக்களுக்கு உரிமை உண்டு தானே …?

   அவருடைய மாமன் மறைந்த முரசொலி மாறன் அவர்கள்
   சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும்,
   சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை அமெரிக்காவிலேயே
   தொடர்ந்த அவரது மருத்துவ சிகிச்சையை அரசாங்க செலவில்
   செய்ய வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக,

   கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று,
   இலாகா இல்லாத மத்திய அமைச்சராக அவர் பதவியில் தொடர
   திரு வாஜ்பாய் அவர்களின் பெருந்தன்மையோடு அனுமதித்தது
   இன்னும் நினைவில் இருக்கிறது.

   நாம் நாகரிகம் காக்க வேண்டியது அவசியம் தான்.
   அதே சமயம், நம் தலையில் இத்தகைய அரசியல்வாதிகள்
   யாரும் மிளகாய் அரைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும்
   அவசியம் தானே …?
   (நண்பர் எழில் – என் விளக்கம் உங்களுக்கு ஏற்புடையதாக
   இருக்கும் என்று நம்புகிறேன் … )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • எழில் சொல்கிறார்:

    //நாம் நாகரிகம் காக்க வேண்டியது அவசியம் தான்.
    அதே சமயம், நம் தலையில் இத்தகைய அரசியல்வாதிகள்
    யாரும் மிளகாய் அரைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும்
    அவசியம் தானே …?//

    இந்த வரியில் உள்ள உண்மையின் நிதர்சனத்தால் நீங்கள் சொல்லவதை ஏற்று கொள்கிறேன். பொதுவாக ஒருவரின் மருத்துவ கோப்பை இன்னொருவர் ஆராய்வதே நாகரீகமற்றது, ஏன் சட்டப்படி தண்டிக்க பட கூடியது என்ற அடிப்படையில் தான் என் கருத்தை எழுதினேன், ஆனால் உங்கள் விளக்கத்தில் உள்ள உண்மைகளை புறந்தள்ள முடியாது. சகோதரர் Ganpat, Sri gopalasamy ஆகியோரின் கருத்துக்களுக்கு நன்றி. Point Taken!

 8. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  ஸ்டாலினால் ராஜாவை ஏன் தவிர்க்க முடியவில்லை..?
  குற்றவாளிகளால், குற்றவாளிகளுக்காகச் செயல்படும் அரசுகள்தான் இவைகள், குற்றவாளிகளின் கையில் சிக்கித் தவிப்பது கூட தெரியாமல் மக்கள் இதை சகித்துக் கொண்டிருக்கிறார்களே அதுதான் ஏன் என்று புரியவில்லை!வேறு வழியே இல்லாததானாலா..

 9. D. Chandramouli சொல்கிறார்:

  We also didn’t know about Sonia Gandhi’s visits to USA earlier. Some might say she never occupied a position in the government, and therefore, she was outside the purview of public scrutiny as regards her health.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.