திரு.ராம கோபாலன் அவர்கள் கூறுவது சரியா…….?

rameswaram temple

 

 

திரு ராம கோபாலன் அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள
சில கருத்துக்கள் கீழே

————

தமிழ்நாட்டில், கோவில்களுக்கென்று 4 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இருக்கின்றன. 43,000 கோவில்கள் இருக்கின்றன. ஏராளமான வீட்டு மனைகள் இருக்கின்றன. காடுகள், தோப்புகள்,
துரவுகள் இருக்கின்றன. இத்தனை இருந்தும் இங்கு பக்தர்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது ? பக்கத்தில் இருக்கிற திருப்பதியில் ஒரு பக்தர் நடத்தப்படும் விதத்தையும், இங்குள்ள கோவில்களில்
ஒரு பக்தர் நடத்தப்படும் விதத்தையும் பாருங்கள்.
இதற்கு என்ன காரணம் ?
அநியாயமான துறையாக இருக்கிறது அறநிலையத் துறை –
முதலில் அறநிலையத்துறையை ஒழித்தாக வேண்டும்.

————-

திருப்பதியைப் பற்றி ராம கோபாலன் அவர்கள் கூறுவது எந்த அளவிற்கு சரி ….?
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல்
இங்கிருப்பவர்களுக்கு வேண்டுமானால் திருப்பதி
உயர்வாகத் தெரியலாம். அங்கே உள்ளூர்வாசிகளை
கேட்டால் தெரியும் … திருப்பதி நிர்வாகத்தைப்
பற்றிய உண்மைகள் …..!!!!

இது ஒரு பக்கம் இருக்க –

கோவில்கள் பற்றி நான் கூற விரும்புவது –

தமிழ் நாட்டைப் பொருத்தவரை –
மிகப்பெரும்பாலான மக்கள் –
ஆன்மீக உணர்வும், தெய்வ நம்பிக்கையும்
உள்ளவர்கள்.

மக்களின் தெய்வ நம்பிக்கையை தவறாகப்
பயன்படுத்தி, அதிலும் லாபம் சம்பாதிக்க என்றே
ஒரு கூட்டம் இருக்கிறது.
அறங்காவலர் பதவி  அரசியல்வாதிகளின்
பிழைப்புக்கான பதவியாகி விட்டது.

பெரும்பாலான மக்கள் –
வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி ,
சாதாரண மக்களாக இருந்தாலும் கூட சரி –
வெவ்வேறு தருணங்களில் கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பிரசித்தி
பெற்ற கோவில்களில் இத்தகைய காணிக்கைகள் வந்து
குவிவதைப் பார்க்கிறோம்.

சில சமயங்களில் பணமாகவும், பல நேரங்களில்
பொருட்களாகவும், நகைகளாகவும், சில சமயங்களில் கால்நடைகளாக/பிராணிகளாக கூட இவை காணிக்கையாக குவிகின்றன.

விழாக்காலங்களில் உண்டியல்கள் நிரம்பி வழிகின்றன.  கால்நடைகள் ஏலத்திற்கு விடப்பட்டு, பணமாக மாற்றப்படுவதைப்போல்,
நகைகளும் மற்ற பொருட்களும் கூட ஒரு முறை
கடவுளின் திருவுருவத்திற்கு அணிவிக்கப்பட்ட பிறகு
ஏலத்தில் விடப்பட்டு, பணமாக்கப்பட்டு கோவில் நிதியில் சேர்க்கப்படலாம். கடவுளுக்கு படைக்கப்பட்டவை என்பதால் இவை அனைத்தும் அசல் விலையை விட அதிகமாகவே
ஏலத்தில் எடுக்கப்படும்.

ஓரளவிற்கு மேல் நகைகளை சேர்த்துக்கொண்டே போனால், அவை போலிகளாக மாற்றப்படும் வாய்ப்புகள் தான் பெருகும்.
கோவிலுக்கு அதனால் எந்த பயனும் இருக்காது.

வழக்கமாக கோவில் பராமரிப்புக்கு தேவைப்படும்
நிதியைத் தாண்டி, மிகுதியாக உள்ள பணம்
கோவிலிலும், அதைச்சுற்றி உள்ள பகுதிகளிலும்,
பக்தர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க
பயன்படுத்தப்பட வேண்டும்.

கோவில் நிலங்களில் இருந்தும்,
கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்களிலிருந்தும்
கிடைக்க வேண்டிய வருமானங்கள் உரிய முறையில் வசூலிக்கப்பட வேண்டும்.
கோவில் சொத்துக்கள் சுரண்டல்களிலிருந்து
பாதுகாக்கப்பட வேண்டும்.

உபரி வருவாய்/நிதி வசதிகளைக் கொண்டு
கோவிலைச்சுற்றி உள்ள கிராமங்களில்/நகரங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் –
இலவச மருத்துவ மனைகள், பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் போன்றவை நிறுவப்பட்டு நன்கு பராமரிக்கப்பட வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது மேடையோடு நின்று விடாமல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இவை நடக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் …? முதல் காரியமாக கோவில் நிர்வாகத்தை அரசியல்வாதிகளின்
பிடிகளிலிருந்து மீட்க வேண்டும்.

கோவில் அறங்காவலர்களாக ( டிரஸ்டிகளாக)
அரசியல்வாதிகளும், தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களும் நியமிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

உள்ளூரைச் சேர்ந்த,
அரசியலுக்கு சற்றும் சம்பந்தமில்லாத,
சமூக நலனில் அக்கரை உடைய,
பல காலமாக மக்களுக்கு அறிமுகமான –
நேர்மையான, நிரூபிக்கப்பட்ட நல்ல மனிதர்களை,
முக்கியமாக உள்ளூர் மக்களின்
நம்பிக்கையை பெற்ற நாணயமான மனிதர்களை
கோவில் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

சுயநலவாதிகளின் பிடிகளிலிருந்து கோவில்களின்
நிர்வாகம் விடுவிக்கப்படாத வரையில் –
அறநிலையத்துறை இருந்தாலும் சரி –
ஒழிந்தாலும் சரி – விமோசனம் இல்லை....

திரு ராமகோபாலன் அவர்களின் கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திரு.ராம கோபாலன் அவர்கள் கூறுவது சரியா…….?

 1. kinarruthavalai சொல்கிறார்:

  இதெல்லாம் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் பட்ட கதை. என்றைக்கு திராவிட கட்சிகள் அரியணை ஏறியதோ அன்றே மடிந்தன இந்தத் தத்துவங்கள். நீங்கள் விருப்பப் பட்டது போல நடக்க வேண்டுமானால் ஒரு பிரளயம் வந்தால்தான் உண்டு.

 2. Sanmath AK சொல்கிறார்:

  In the name of regularizing and in the name of “making way for everyone” dravidian parties ruined and still ruining the properties of Tamil Nadu temples…….. almost all big properties of all temples and adheenams are in the hands of dravidian parties…… what do u think can be done here….. even if something exists on its own like Chidambaram, these guys will try to fish in troubled waters…… i think “சிவன் சொத்து குல நாசம்” will not work to these people….. only that god could do something here………

 3. natchander சொல்கிறார்:

  km sir the enomous money inthe temples hundis huge jewelleries all should be earmarked fo the pliftment of poor people. nehru told YOU CANNOT TALK OF GOD TO A STARVING PERSON GIVE HIM FOOD FIRST. i know of many incidents when hundi collections of variou temples are utilised for vip visits … one a.cprotested and resigned the post. but the system continues. indian population is increasin by GEOMETRICAL PROGRESSION. better all these wealth of temples be usedfor good schmes under strict supervison. karumuthu kannan the industrialist from madurai looks after the affairs of adurai meenakshi amman temple in the best way. but such people are rare……..

 4. gopalasamy சொல்கிறார்:

  In temples also, there is rich – poor difference. The surplus money from the rich temples should be utilized for poor temples. The temples should be divided by zonal wise. The surplus money has to be distributed among the temples, which are having min 100 years of history. But the important thing, the temple lands are with dravidian party people, Even again god plays 64 or 65 thirvilaiyaadal also, these lands could not be recovered from them. The shops owned by the temples are given for very less rent, which might not be even one in tenth of market value. When the food bill needs 1,30,000 crores subsidiary for an year, what can be done done with surplus fund of the temples.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.