கோர்ட்டுக்குப் போகும் கொள்ளைக்காரர்கள் கூட்டம் …..!!

 

medicines

நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள்
கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள்.
ஏமாற்றப்படுகிறார்கள்.

விவரம் புரியாமல் –
கேட்கும் வழி தெரியாமல் –
வாய்மூடி, மௌனமாக தினம் தினம்
செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக்
காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ
எதுவுமே செய்வதில்லை.

காரணம் –
அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில்
பங்கு இருக்கிறது
என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

– மக்களுக்கு மிகவும் தேவைப்படும்
உயிர் காக்கும் மருந்துகள். மருந்துகளை யாரும்
ஆடம்பரம் என்று எந்த வகையிலும்
சொல்லிவிட முடியாது. அவசியம் ஏற்பட்டாலொழிய
யாரும் மருந்துப் பொருட்களை வாங்குவதில்லை.

அத்தகைய, அத்தியாவசியமான மருந்துகள்
மக்களுக்கு நியாயமான முறையில், தரத்தில்,
விலையில் -கிடைப்பதை உறுதி செய்வது

ஒரு ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தின்
கடமை இல்லையா ?

மருந்து தயாரிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட
கூட்டத்தின், குழுவினரின்,
– ஏகபோக உரிமையாகி விட்டது.

சாதாரணமாக சந்தையில் எந்தப் பொருளாக இருந்தாலும்,
அதன் விலையை நிர்ணயிக்கும்
விஷயங்கள் என்னென்ன ?

1) மூலப்பொருட்களின் விலை,
(cost of raw materials)

2) உற்பத்திச்செலவு,(cost of
production/manufacturing)

3) போக்குவரத்து செலவு ( transportation)

4) லாப சதவீதம் (profit percentage )

இவை குறித்த தகவல்கள் யாவும் வெளிப்படையாகத்
தெரிய வேண்டும். கத்தரிக்காய், வெங்காயம்,
உருளைக்கிழங்கு போன்ற -சாதாரண
விவசாயப்பொருட்களுக்கு கூட –

உற்பத்தியாகும் இடத்தில் என்ன விலை,
விற்பனைக்கூடத்திற்கு கொண்டு செல்ல
ஆகும் செலவு எவ்வளவு,
மொத்த விற்பனைகூடத்தில் என்ன விலை,
சில்லரையில் எந்த விலைக்கு விற்கப்படுகின்றது –

என்று விலா வாரியாக வெளிப்படையாகச் செய்திகள்
அறிவிக்கப்படும்போது —

மருந்துகள் தயாரிப்பில் – ஒவ்வொன்றையும்
தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களின்
வெளிப்படையான, புரியும்படியான பெயர் என்ன
(அட்டையில் அச்சடித்திருக்கும் புரியாத பெயர்களை
விடுங்கள் ),

அதன் விலை என்ன,
உற்பத்திச் செலவுகள்,
போக்குவரத்துச்செலவுகள் என்ன,
லாப சதவீதம் என்ன –
என்பது யாருக்காவது தெரியுமா ?
எந்த மருந்து உற்பத்தியாளராவது
தெரியப்படுத்துகின்றார்களா ?

மருந்து கம்பெனிகள் 500 % வரை கொள்ளை லாபம்
அடிப்பது வெளியில் தெரிகிறதா …?

மொத்த விற்பனை கூடத்தில் (wholesale market)
10 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம், சில்லரை
வண்டிக்காரரிடம் 15 ரூபாய்க்கு விற்கப்பட்டால், அதன்
நியாயம் நமக்குப் புரிகிறது.

ஆனால் ஒரு மருந்துப் பொருளின் உற்பத்தி விலை
50 காசுகளாக இருக்கும்போது,
அதன் விற்பனை விலை 50 ரூபாய்கள்
என்று கொள்ளை விலை கூறினால் –

இதைத் தடுக்க வேண்டிய
பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு இல்லையா ?

நம் நாட்டில், மருந்துப் பொருட்களின்
தயாரிப்பாளர்கள் / உற்பத்தியாளர்கள்
எண்ணிக்கையில் மிகச்சிலர் தான்.

அவர்கள் தங்களுக்குள்
கூட்டணி அமைத்துக்கொண்டு எல்லாருமே
விலையை கொள்ளை லாபத்திற்கு
உயர்த்தி அறிவித்தால்,
இதைக் கண்டு பிடிக்க, தடுக்க
சாமான்ய மக்களால் முடியுமா ?

மருந்து தயாரிப்பாளர்கள்,
மருத்துவ மனைகள்,
மருத்துவர்கள்,
விற்பனைப்பிரதிநிதிகள்,
இவர்கள் தங்களுக்குள் கூட்டணி
அமைத்துக்கொண்டு –

அரசியல்வாதிகளையும் கைக்குள்
போட்டுக்கொண்டு பொதுமக்களைக் கொள்ளை
அடிக்கிறார்களே
இதை யார் தடுப்பது ? எப்படித் தடுப்பது ?

மருந்து தயாரிப்பு நிறுவனங்களும்,
விற்பனைப் பிரதிநிதிகளும
(medical representatives ) தொடர்ந்து
மருத்துவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டே
இருக்கிறார்களே –
இதன் பொருள் என்ன ?

குறிப்பிட்ட மருந்துப் பொருட்களின்
விற்பனை அளவைப் பொறுத்து சம்பந்தப்பட்ட
மருத்துவர்களுக்கு
கமிஷன் போவது அரசாங்கத்துக்கோ,
அரசியல்வாதிகளுக்கோ தெரியாதா ?

50 காசு மாத்திரையை 50 ரூபாய்க்கு விற்கும்
இந்த அநியாயத்தை, பகல் கொள்ளையைத்
தடுத்து நிறுத்தவே முடியாதா ?

இந்தியாவில் உள்நாட்டில் மட்டும், ஆண்டுக்கு,
79,000 கோடி ரூபாய்க்கு மேல் ஆங்கில முறை
மருந்துப் பொருட்கள் விற்பனையாகின்றன.

( இதைத் தவிர, சுமார் 50,000 கோடி ரூபாய் அளவிற்கு
வெளிநாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.
அவற்றை எந்த விலைக்காவது விற்றுத்
தொலைக்கட்டும் – நமக்கு கவலை இல்லை ..!)

Drug Prices Control Order 1995
என்று ஒரு உத்திரவை மத்திய அரசு வெளியிட்டதால்
யாருக்குப் பயன்…?

உயிர் காக்கும் மருந்துகளின் பட்டியலில், கூடுதலாக
சில மருந்துகளின் பெயரைச் சேர்த்து அவர்களின்
விலையையும் கட்டுப்படுத்தி, மத்திய அரசு
அண்மையில் ஒரு உத்திரவு வெளியிட்டது.
சேர்க்கப்பட்ட மருந்துகள் – காச நோய்( டிபி ),
ஆஸ்த்துமா, மலேரியா போன்ற நோய்களுக்கானவை.

இது அநியாயம் என்று கூறி, இந்த உத்திரவை
செல்லாது என்று அறிவிக்கக் கோரி – அகில இந்திய
மருந்து தயாரிப்பாளர் சங்கம் மும்பை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு போட்டிருக்கிறது. வழக்கு அடுத்த வாரம்
விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த விலைக்குறைப்பே ஒரு கண்துடைப்பு.
சும்மா பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காக
அவ்வப்போது மத்திய அரசும், மருந்து தயாரிப்பாளர்களும் கூட்டாகச் சேர்ந்து போடும் ஒரு நாடகம்.

விலைக்கட்டுப்பாடு செய்யப்பட்ட மருந்துகள்
பட்டியல் என்று ஒன்றை அரசாங்கம் வெளியிடுவதால்
மக்களுக்கு உண்மையான பயன் கிடைப்பதில்லை..
அதிலிருந்து தப்ப, அதை ஏமாற்ற, மாற்று வழிகளை
மருந்து தயாரிப்பாளர்கள்
உடனுக்குடனே கண்டுபிடித்து விடுகிறார்கள்..

20 – 30 சதவீத லாபத்திற்கு
மேல் எந்த மருந்துப் பொருளின் விலையும்
நிர்ணயிக்கப்படக்கூடாது
என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் –
விலையைத் தொடர்ந்து கண்காணித்தால் –
இவர்களை வழிக்குக் கொண்டு வர முடியாதா என்ன ?

கரும்புக்கு சட்டம் கொண்டு வரலாம் –
நெல்லுக்கு சட்டம் கொண்டு வரலாம் –
மருந்துக்கு கொண்டு வர முடியாதா என்ன ?

எந்த நொண்டிக் காரணத்தையாவது சொல்லி
இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று
கூறுவார்களேயானால் –
மருந்து உற்பத்தியை –
அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும்.

generic drugs- முறையை மத்திய அரசு
மக்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்த முடியாதா ?

டாக்டர்கள், மருந்துகளை ( while prescribing
medicines ) எழுதிக்கொடுக்கும்போது,
பிராண்டு பெயர்களை (brand -company name of
the medicine ) எழுதாமல், ஜெனெரிக் பெயர்களை
(generic name of the drugs )
எழுத வேண்டும் என்று சட்டம் கொண்டு வர
அரசுக்கு உரிமை இருக்கிறது. இதை வலியுறுத்தி
ஒரு சட்டம் கொண்டு வரலாம்.

மக்களின் நலனைக் கருதி – எவ்வளவோ பொருட்களை
உற்பத்தி செய்வதை / விற்பனையை
நாட்டுடைமை ஆக்கவில்லையா ?
அது போல் மக்களின் நலன் கருதியே
மருந்து உற்பத்தியையும் நாட்டுடைமை ஆக்கலாம்.

ஜெனெரிக் மருந்துகளை உற்பத்தி செய்வதை
விற்பனை செய்வதை ஊக்குவிக்கலாம். ஏன் – அரசே,
பொதுத்துறை நிறுவனங்களின் மூலம்
(Public Sector Undertakings )
இத்தகைய மருந்துகளின் உற்பத்தியில் ஈடுபடலாம்.

மனமிருந்தால் மார்க்கம் நிச்சயம் உண்டு.
மக்களுக்கு மிக மிக அத்தியாவசியமான இத்தகைய
மருந்துகளின் விலையை, சாதாரண மக்களின்
வாங்கும் சக்திக்கு உட்பட்ட நிலையில் இருக்குமாறு
பார்த்துக் கொள்வது அரசின் கடமை.

அரசாங்கம் இருப்பது –
கொள்ளையடிக்கும் மருந்து தயாரிப்பாளர் கூட்டத்திற்காகவா –
அல்லது இந்த நாட்டின்
சாதாரண குடிமக்களுக்காகவா….??

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to கோர்ட்டுக்குப் போகும் கொள்ளைக்காரர்கள் கூட்டம் …..!!

 1. Dr.R.Phillips சொல்கிறார்:

  Dear Mr.Kavirimainthan,

  Wonderful article. I appreciate and admire your
  interest on social problems.
  Though there are some exceptions in the field, by and large
  people are of the nature like what you have said in the article.
  Though I am a Doctor by profession, I fully support your points of view.
  I wish you all the best.

 2. Sriram சொல்கிறார்:

  தூங்கும் அரசாங்கத்தை எழுபலாம். தூங்குவது போல் நடிக்கும் அரசாங்கத்தை எழுப்ப முடியாது.
  திருடநாய் பார்த்து திரிந்திநால் தான் உண்டு.

 3. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  அரசு நினைத்தால் இதை செய்யலாமே ..
  டாக்டர்கள், மருந்துகளை ( while prescribingmedicines ) எழுதிக்கொடுக்கும்போது,
  பிராண்டு பெயர்களை (brand -company name ofthe medicine ) எழுதாமல், ஜெனெரிக் பெயர்களை(generic name of the drugs )எழுத வேண்டும் என்று சட்டம் கொண்டு வர
  அரசுக்கு உரிமை இருக்கிறது. இதை வலியுறுத்திஒரு சட்டம் கொண்டு வரலாமே .

 4. Aakuvan சொல்கிறார்:

  Dear All, there is a mobile Application called Healthcart Plus (im not a stakeholder in any sense nor promoting) which gives you a alternate medicine by a different brand(competitor) with a low price. It also gives you the availability of the drug in your locality. We can use this and save money.
  Now there raise a question,if a private party can do this, why not Govt? – the answer is Govt. cannot function this way. It’s upto we citizens to be updated and aware of what is available and we need to take this information across public. Any Govt ( here, health Ministry) can only be a facilitator-in this case,giving all brands available(with same drug composition), with price and disclaimers.

  Doctors, Medical Companies( Rep) and Drug Manufactures form a cartel. It can be broken if we take smarter initiatives rather than exercising controls. More controls/laws will only suppress the progress!

  -AaKuvan

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Friend (Aakuvan ),

   Thank you for the information given by you.
   Even I was not aware about this. Hope,
   atleast those who visit this blog will
   hereafter make use of the application.

   With all best wishes,
   Kavirimainthan

 5. thumbiNerkuppai Thumbi சொல்கிறார்:

  “அம்மா” மருந்தகங்களில் இது போன்ற தகவல்களை வைத்துக்கொண்டு மலிவான generic மருந்துகளை விற்கலாமே. அரசே உரிமையாளர் என்பதால் தம் கமிஷனைப் பார்க்காமல் சரியான மலிவான மருந்தை
  விற்பனை செய்யலாம். தம் விற்பனை குறைகிறது என்று நினைக்கும் தனியார் கடைகளும் இது போல் மாறுமே

 6. ரிஷி சொல்கிறார்:

  இள வயதில் இருந்தே எவ்வித கெட்ட பழக்கங்களும் இன்றி, நல்ல சத்தான ஆகாரங்களை சாப்பிட்டு, உடலை நன்கு பேணி வளர்ந்திருந்தால் மிகப்பெரிய நோய்களோ, உடல் குறைபாடுகளோ ஏற்படுவதில்லை. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். எரிகிற கொள்ளியைப் பிடுங்கினால் கொதிக்கிறது தானே அடங்கும் எனச் சொல்வார்கள். அதுபோல இயன்றவரை மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து நம் உடலை நாமே சிறப்பாக பேணினால் மருத்துவ செலவுகளைப் பெருமளவில் குறைக்கலாம். மருந்து விலைகளைப் பற்றி அரசிடம் நாம் கோருவது நம் உரிமை. நம் உடலும் நம்மிடம் ஒரு விஷயத்தைக் கோருகிறது. அது விழிப்புணர்வு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரிஷி,

   அநியாயத்திற்கு தத்துவம் பேசுகிறீர்களே –
   உங்கள் வயதுக்கு இது அடுக்குமா ….?

   “இள வயதில் – சத்தான ஆகாரங்களைச் சாப்பிட்டு ……”

   -எங்கள் வீட்டில் நான் சிறுவனாக இருந்தபோது
   மொத்தம் 11 பேர்கள் ….
   என் அப்பா ஒருவர் தான் சம்பாதிப்பாளர் …..
   அப்புறம் எங்கே போவது சத்துக்கு ….?
   அந்த தலைமுறைகளில் அநேகமாக எல்லா
   குடும்பங்களிலும் இதே நிலை தான்.

   Ofcourse – இன்று நிலைமை மாறி
   இருக்கிறது. குடும்பங்கள் சிறியதாக
   இருக்கின்றன. நீங்கள் கூறுகிற மாதிரி
   யோசிக்கலாம் – ஆனால் பெரும்பாலான
   இளைஞர்கள் junk food அடிமைகள்.

   கருத்துக்கு நன்றி ரிஷி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.