ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!

 

lava-1

இரண்டு நாட்கள் முன்னதாக – பல்லடத்தில்,
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
அவர்கள் பேசியதிலிருந்து சில பகுதிகள் –

————–

தேர்தலுக்கு முன் பாஜக –

பொருளாதார கொள்கையில்
மாற்றம் கொண்டு வருவோம் –

விலைவாசியை குறைப்போம் –

ரூபாய் மதிப்பை உயர்த்துவோம் –

என்று பல வாக்குறுதிகளை அளித்தது. இன்று எதாவது மாறி இருக்கிறதா …?

நான் இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 5.7
சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகக் குறையும் என்று சொன்னேன். அதையே தான் பட்ஜெட்டில் மோடி அரசும் சொல்லி இருக்கிறது.

தங்கம் இறக்குமதியால் அந்நிய செலாவணி இழப்பு ஏற்படுவதால் கட்டுப்பாடுகளை விதித்தோம். அதன் விளைவாக 85,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மிச்சமானது.

கட்டுப்பாடுகளை நீக்குவோம் என்று சொல்லி பதவிக்கு வரும் முன்பு சொன்னவர்கள் இன்று நீக்க முடியாது, கட்டுப்பாடுகள் அவசியம் என்று சொல்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்தால் டீசல், பெட்ரோல் விலையைக் குறைப்போம் என்றார்கள். இன்று அதே விலை பாலிசி தொடர்கிறது.

ரெயில் கட்டண உயர்வை
நாங்கள் கொண்டு வர முயன்றபோது எதிர்த்தார்கள்.
இப்போது அவர்களே 14 % உயர்த்தி விட்டார்கள்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில்,
மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று
நாங்கள் சொன்னோம். இன்று அவர்களும் அதையே
சொல்கிறார்கள்.

பொதுத்துறை பங்குகள் விற்பனைக்கு காங்கிரஸ் அரசு
43,000 கோடி இலக்கு வைத்திருந்தபோது அதை பாஜக
கடுமையாக எதிர்த்தது. இன்று அவர்களே அதைவிட
கூடுதலாக 63,000 கோடி இலக்கு வைத்திருக்கிறார்கள்.

இன்சூரன்ஸ் துறையில் நாங்கள் அந்நிய முதலீட்டை
அதிகரிக்க முயன்றபோது எதிர்த்தவர்கள் – இப்போது
அவர்களே 49 % அளவிற்கு உயர்த்தி இருக்கிறார்கள்.

பொருள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) நாங்கள்
கொண்டு வந்தபோது எதிர்த்த பாஜக, இப்போது
அவர்களே டிசம்பருக்குள் கொண்டு வருவோம்
என்கிறார்கள்.

2013-ல் மொத்தம் 675 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். இப்போது 6 மாதத்திற்குள்ளகவே அதைவிட அதிகம் பேர் கைது செய்யப்பட்டு விட்டார்கள்.

—————-

சொல்வது யார் என்பதை மறந்து விட்டு –
சொல்லப்பட்டதை மட்டும் படித்துப் பார்த்தால்,
சொல்லி இருப்பது அனைத்தும்
அனேகமாக உண்மை தானே …..?

இதைத் தவிர – ப.சி.அவர்கள் சொல்லாமல் விட்ட


-இன்னும் பல விஷயங்கள் நம்மை உறுத்திக்கொண்டே 
இருக்கின்றன……

காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு பயந்து கொண்டே மத்திய அரசு ராஜபக்சே அரசை ஆதரித்தது.
இன்று மத்திய அரசு வெளிப்படையாகவே ஆதரிக்கிறது.
ஐநா விசாரணையை இந்தியா ஏற்காது என்று
வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது.

பாஜக அரசின் – இலங்கையுடனான
வெளியுறவுக்கொள்கையை –
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தீர்மானிக்கிறார்…..!!!

அன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர்
விடுவிக்கப்பட்டார்கள். இன்று மீனவர்கள் மட்டும்
விடுவிக்கப்படுகிறார்கள்.
அவர்களது படகுகளை இலங்கையே
பிடித்து வைத்துக்கொள்கிறது..யார் கொடுத்த தைரியம் இது ? சுப்ரமணியன் சுவாமி துணையா ….?

எல்லையில் குண்டு வெடிக்கும்போது பாகிஸ்தானுடன்
பேச்சு வார்த்தை நடத்த மாட்டோம் என்று சொன்னார்கள்
இன்று தினமும் குண்டு வெடித்துக் கொண்டு தான்
இருக்கிறது. பேச்சு வார்த்தைகள் மட்டுமல்ல –
புடவைகள் பரிமாற்றமே நடந்தது….!!

சீன இறக்குமதிகள் நிற்கும் என்று எதிர்பார்த்தோம்.
இறக்குமதிகள் தொடர பேச்சு வார்த்தை நடக்கிறது.

இதோ வழக்கு -அதோ கைது – என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் “றன் சகோதரர்கள்” பாஜக கூடாரத்திலேயே ‘துண்டு’ போட்டு இடம் பிடித்து விட்டதாக செய்திகள் வருகின்றன.

மரபணு மாற்றப்பட்ட விதைகள் அனுமதிக்கப்பட
மாட்டா என்று தேர்தலுக்கு முன் பாஜக வாக்குறுதி
கொடுத்தது. இப்போது மரபணு மாற்ற விதைகளின்
திறந்தவெளி பரிசோதனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது.

டெல்டா மாவட்டங்களில் ‘மீத்தேன்’ வாயு எடுக்க
அனுமதி மறுக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்
சொன்னது. முன்பு கொடுக்கப்பட்ட அனுமதி
இன்னமும் தொடர்கிறது. விவசாயிகளின் தொடர்ந்த
போராட்டங்களுக்கு பதிலே இல்லை.

—–

மாற்றங்களை எதிர்பார்த்தோம் –
ஆனால்……. வருத்தம் தரும்

ஏமாற்றங்கள் தான் தொடர்கின்றன….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!

 1. ரிஷி சொல்கிறார்:

  எதிர்பார்த்ததுதானே…

 2. Aakuvan சொல்கிறார்:

  Dear KM ji, for you and readers, I pose the following question which will help to understand my point.
  You have to chose the following shortlisted candidates as a leader of a group

  Candidate A – associated with crooked/corrupted politicians, takes decision basis astrology,has 2 wives,chain smoker, drinks liquor minimum 8-10 pegs per day

  Candidate B – Thrown out of office last 2 times due to misconduct, sleeps till noon, drug addict, consumes alchohol daily

  Candidate C – Decorated hero- won a war for his country, does not smoke, does not drink, believer of God, no extra-marital affairs

  Now knowing who you will select, the candidates are

  A – Roosevelt
  B – Chrchill
  C – Hitler

  You got the point?

  BJP has been elected for following reasons:
  – there will be a development
  – there will be no corruption

  The majority will “trust” the decision made by “good” people as they beleive it will implement it truly, sincerely with all integrity and responsibility.

  I can challenge anyone on each and every point but for lack of space/time…

  “Satan” recites “Vedam” – nothing wrong in the “Vedam”. Yes.

  But, the “Satan’s” interpretation of “Vedam” is what we need to look into!

  With Regards
  -AaKuvan

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Friend AaKuvan,

   I appreciate the way you think –
   and putting up your point of view.

   Before myself getting into your points –
   let me wait for comments from other
   friends also …!!
   (Hope Mr.Ganpat is seeing this ….!)

   With all best wishes,
   Kavirimainthan

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  நண்பர் காமை, நீங்கள் தவிர்த்து விடுவீர்களோ, விட்டீர்களோ என்று எண்ணினேன். எழுதிவிட்டீர்கள். எனது எண்ணத்திற்காக மன்னிக்கவும். ஆட்சி மாறியதாக தெரியவில்லை, ஆள் மட்டுமே மாறியதாக தெரிகிறது. மேலும், தற்போது நிறைய நாட்டாமைகள் உருவாகிவிட்டார்கள் போல தெரிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள், நடக்கிறார்கள். தலைமை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. 60 நாட்கள் குறித்து கருத்து கேட்கிறார்கள் ? என்ன சொல்ல ? நாட்டில் உணவு இல்லாமல் உறங்க செல்பவர்கள் கோடியில், இவர்களுக்கு உணவு சரியில்லை என்ற கவலை. அவர் இந்துவோ, முஸ்லிமோ..எதிர்ப்பு தெரிவிக்க இதுவா முறை ?. விடியலுக்கான நேரம் வந்து விட்டது என்றார்கள், இன்னும் விடியவேயில்லை. அரசாங்கம் எல்லாம் பெரு நிறுவனங்களுக்கு மட்டும் தான், மக்களுக்கல்ல…

 4. todayandme சொல்கிறார்:

  மீடியா- மக்களுக்காகக் குரைக்கவேண்டிய நாய்

  நாட்டின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் மீடியாவின் வெவ்வேறு அவதாரங்களான ரேடியோ, டிவி, பத்திரிகை, இணையம், 3ஜி-4ஜிசேவைகளை விளம்பரங்கள் என்னும் தீனியைப்போட்டு தன்வீட்டு வாசலில் கட்டிவைத்திருக்கும் நாயாக மாற்றியிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

  அந்தத் தீனியைச் சாப்பிட்டுக் கொழுத்துப்போயிருக்கும் அவை தங்கள் எஜமானாகப் பார்த்து யாரைக் குரைக்கச் சொல்வார்களோ அவர்களைக் குரைத்து, யாரைப்பார்த்து வாலைக் குழைக்கச் சொல்வார்களோ குழைக்கின்றன.

  கண்ணால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருப்பவர்கள் இதைப் பார்த்து “ஓஹோ, இவன் தான் திருடனா? இவ்வளவு நாள் இவனைப் போய் நல்லவன் என்று தப்பாக நினைத்தோமே என்று தப்புத்தப்பாகவும், இவன் இவ்வளவு நல்லவனா? இவ்வளவு நாள் இவனைப்போய் தவறாவனன் என்று கருதிவிட்டோமே என எக்குத்தப்பாகவும்” சிந்திக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

  என்ன? இந்த எதிர்மறைக் கருத்தை சொல்ல்லாமா கூடாதா என்று ஆராய்வதற்கு 6மாத அவகாசமும், நேரிடைக் (காரிய முன்னேற்றத்திற்கு) கருத்துக்கணிப்பிற்கு இதுநாள்வரை நடத்திய அரசாங்கமும் போதும் என நினைத்திருக்கிறது பாஜக அரசு.

  காங்கிரஸ் அரசைக் குறைகூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அவர்கள் செய்த குற்றங்குறைகளை நியாயப்படுத்தியும், அவற்றைவிட அதிகமாகவும், அவற்றையே சட்டத்தின்படியும் செய்ய இயலும் என்பதை நிருபித்திருக்கிறார்கள்.

  பின் குறிப்பு :
  1. நந்தன்நிலகேனியுடன் ஆலோசனை நடத்தியபின், ஆதார் அட்டையின் மூலம் நாட்டுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகளை முன்னிறுத்தி, அந்த அட்டை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை வெற்றிகரமாகப் பின்வாங்கி, இப்போது மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே!

  இந்த ஆலோசனையின்மூலம் கிடைத்த தெளிவு முன்னர் இல்லாமையினாலேயே வாக்குறுதி தந்தார்களா? அல்லது ஆலோசனையின் மூலம் கிடைத்த ….. யினாலேயே வாக்குறுதியைப் பின்வாங்கிவிட்டார்களா?

  2. வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டிருந்த பணங்களை பத்திரப்படுத்திவிட்டாகிவிட்டதா? அல்லது அதற்கும் 6மாத அவகாசம் வேண்டுமா? இன்னும் அவற்றை இந்தியாவுக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் ஏதும் நடந்தமாதிரி தெரியவில்லையே? (பாஜக தலைவர்கள் மட்டும் இல்லை-காங்கிரஸ் தலைவர்களும்தான்.)

  என் குறிப்பு :
  காங்கிரசும் பாஜகவும் வேறுவேறு என்று நினைத்திருந்தேன் கொஞ்ச நாள்.

  பாஜக காங்கிரசின் பினாமி என்று கூட நினைத்திருந்தேன், பார்லிமெண்டில் பணமூட்டையைக் கொட்டியபோது மட்டுமல்ல; பார்லிமெண்டில் எதிர்க்கட்சியாக 12 வருடங்களில் எந்தக் குப்பையையும் உருப்படியாகக் கொட்டாதபோது.

  இப்போது காங்கிரஸ்தான் பாஜக-வின் பினாமி என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

  ஏனென்றால்
  காங்கிரஸ் அரசைக் குறைகூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அவர்கள் செய்த குற்றங்குறைகளை நியாயப்படுத்தியும், அவற்றைவிட அதிகமாகவும், அவற்றையே சட்டத்தின்படியும் செய்ய இயலும் என்பதை நிருபித்திருக்கிறார்கள்.

  இப்பின்னூட்டத்தின் மீது திரு.கண்பத் அவர்களின் கருத்தை ஆறுமாதத்தில் எதிர்பார்க்கிறேன்

  ////

  ப.சி. பேசிட்டாரே! தேர்தலின் போது வாலைச்சுருட்டிக்கொண்டு இருந்துவிட்டு இப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தகுதியான வால் தாம்தான் என்று தலைக்குக் காட்டுகிறாரோ?

  ////

 5. senthil kumar சொல்கிறார்:

  ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியை நீக்கி விட்டு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளை புகுத்த போகிறார்களாம், மிடில் கிளாஸ் மற்றும் ஏழை மக்கள் எல்லாரும் ஆப்பிர்க்காவை பார்த்து போக வேண்டியதுதான்.

 6. Barari Naseem சொல்கிறார்:

  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தங்களின் நக்கீர தனத்தின் நிலைபாட்டிற்கு வாழ்த்துகள்.தொடருங்கள்.

 7. AaKuvan சொல்கிறார்:

  Dear TodayandMe and Rishi,

  If you are referring to me ( as KM ji replied to my comment) , you have a prejudiced opinion.

  I’m reading KMji’s blogs for quite some time ( and other bloggers too) and I comment only in this site as I find this ( blogger and readers) to be fair, receptive and open.

  I’m not here to spam or do any Search Engine Optimization and bla bla! Nor I have given any link
  in my comments. My credentials are there with the owner.

  If you agree with KM ji’s blog( and title), respond to “Vedam” not “Satan”!

  Warm Regards
  AaKuvan

  • ரிஷி சொல்கிறார்:

   அன்புள்ள ஆகுவன்,
   கா.மை அவர்கள் அந்த ஸ்பாம் கமெண்ட்டினை நீக்கி விட்டதால் எங்களது மறுமொழிகள் எல்லாம் அந்த thread ல் இருந்து மாறி இங்கு line-up ஆகிவிட்டது. அதான் குழப்பம். வேறொன்றுமில்லை. நாங்கள் உங்கள் மறுமொழியைக் குறிப்பிடவில்லை. அந்த ஸ்பாம் கமெண்ட்டை நீங்கள் பார்த்திருக்கவில்லை என நினைக்கிறேன்.

  • kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஆக்குவன்,

   வருந்துகிறேன் – அவசரப்பட்டு விட்டீர்களே….!!

   இதே இடுகைக்கு கீழ்க்கண்ட ஒரு பின்னூட்டம் வந்திருந்தது.
   நேற்று முழுவதும் அது தளத்திலேயே இருந்தது..

   —————-

   Urządzenia fitness – siłownie plenerowe i ścieżki zdrowia commented on ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!

   Hi! This is my 1st comment here so I just wanted to give
   a quick shout out and say I truly enjoy reading your articles.
   Can you suggest any other blogs/websites/forums that go over the same
   subjects? Thanks a ton!

   ———–
   இதற்கு நான் விவரமாக பதிலளித்திருந்தேன்.
   அதைத்தான் TodayandMe and Rishi
   இருவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

   அவர்களின் பின்னூட்டங்களைக் கண்ட பிறகு, நான்
   அந்த மறுமொழியையும், அதற்கான என் பதிலையும்
   தளத்திலிருந்து நீக்கி விட்டேன்.

   இது தான் உங்களை தவறான கருத்துக்கு
   அழைத்துச் சென்றிருக்கிறது….!

   —————-

   போகட்டும் விடுங்கள்.

   இந்த விமரிசனம் வலைத்தளத்தைப் பற்றியும்,
   அதன் வாசக நண்பர்களைப் பற்றியும் நீங்கள்
   கொண்டிருக்கும் உயர்வான எண்ணங்களுக்கு நன்றி.

   அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள
   அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • AaKuvan சொல்கிறார்:

    Dear KM ji/Rishi/Todayandme, I’m not online always and hence could not infer the sequence unfolded. What I saw was a reply to my comment. As said before, my intention was to clarify and not hurt! That’s where I started my reply with “If” …..this only helps to bond more virtually!

    • todayandme சொல்கிறார்:

     If I haven’t seen the ‘If’ of yours, I would have been confused. So, thank you for the ‘If clause’.

     Don’t worry. We won’t get hurt on what we really didn’t intend.

     ‘Urządzenia’ இவரையே தப்பா நினைக்காத கா.மை.ஜி உங்களைப்போயா? No chance.

     And, Aakuvan! I join with Kaa.mai to welcome you here.

 8. Ganpat சொல்கிறார்:

  கா.மை உள்ளிட்ட நண்பர்களுக்கு வணக்கம்.

  2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை காங்.நேரிடையாகவும் திரைக்குப்பின்னும் நடத்திய “ஆச்சி”யின் லட்சணத்தைப்பார்த்து மனம் வெம்பி இருந்த நாம் (வாக்காளர்கள்) இவர்களை நீக்கியே ஆகவேண்டும் என்ற ஒரு முடிவிற்கு வந்தோம்.அந்நேரம் இவர்களுக்கு சரியான மாற்று யாராக இருக்கும் என ஆராய்ந்தபோது ஒரு விஷயம் தெளிவாகியது.நாம் தேர்வு செய்யபோவது கட்சியை அல்ல பிரதமர் பதவிக்கு சரியான ஒரு நபரை!

  இந்த அடிப்படையில் “எங்களுக்கு வாக்களித்தால் மோடி அவர்களே நாட்டின் பிரதமர்” என்ற தெளிவான கொள்கையுடன் நம்மிடம் வந்து ஒட்டு கேட்டது பா.ஜ.க மட்டுமே.மோடி பேச்சில் இருந்த தெளிவு, முதிர்ச்சி ஆகியவை நமக்கு மகிழ்வை அளித்தன.எல்லாரும் எதிர்பார்த்தபடி மோடி தனிப்பெரும் பெரும்பான்மையில் அரசு அமைத்தார்.

  ஆனால் அதற்குப்பிறகு அவர் மிக குறைவாகவே பேசினார்; பேசுகிறார்.
  பல கேள்விகளுக்கு (க.மை ஜி எழுப்பியது) சரியான பதில் இல்லை.சீரழிந்து கொண்டிருக்கும் பலதுறைகளை அவர் அதிரடியாக சீர் செய்வார் என்ற நம் எத்ரிபார்ப்பு சற்று நீர்த்து விட்டது, உண்மை.ஆனாலும் நம்பிக்கை முற்றிலுமாக அழிந்து விடவில்லை.நான் முன்பே சொன்னது போல இவருக்கு குறைந்த பட்சம் ஒரு ஆறு மாத காலமாவது அவகாசம் கொடுப்பது நல்லது.ஏனெனில் இவரை தேர்தெடுத்ததின் மூலம் நாம் எதையும் இழக்கவில்லை.ஆனால் எதாவது பெற வேண்டும் என்ற நம் நியாமான ஆசைக்கு பங்கம் வந்து விடக்கூடாது.

  ஆனால் என் பயம் இதற்கும் மேலே..திரு மோடியும் தோல்வி என்றால் நமக்கு வேறு கதி என்ன? வேறு யார் இருக்கிறார்கள்?

  “இனி தாடி வைத்த எவரையும் பிரதமராக்க மாட்டோம்” என்ற மூர்க்க முடிவுக்கு இந்தியர்கள் வரும் முன்……….

  நாங்கள் உடனே உணரும்படி,

  ஏதாவது நல்லது செய்யுங்கள் மோடி ஜி!

 9. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  நான் மோடியை மட்டும் தனித்துவமானவராக நினைத்தேன். காங்கிரசும் பாஜகவும் வேறுவேறு என்று நினைக்க வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.

 10. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  மக்களுக்கு இருந்தது ஒரே வாய்ப்பு. மோடி நல்லது செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் corruption இல்லாமல் இருப்பார். நல்லதோ கெட்டதோ, அவர் என்ன சரி என்று நினைக்கிறாரோ, அதை தைரியமாகச் செய்வார். ‘நாம் எதிர்பார்ப்பதையெல்லாம் உடனே சரி செய்வார் என்று எண்ணுவது அவ்வளவு சரியல்ல. அவரைவிட்டால் நமக்கு இந்த காங்கிரஸ் கும்பல்தான் இருந்தது. அவர்களுக்கு ஆட்சியில் ‘நீடித்திருக்கணும் (ஊழல் செய்வதற்காக) என்ற எண்ணம் தவிர வேறு Agenda இல்லை. மக்கள் எடுத்த முடிவு சரிதான். காத்திருப்போம். மோடியால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலவில்லை என்றால் அடுத்த தேவதூதன் வருவதற்காகக் காத்திருக்கவேண்டியதுதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.