பாஜக தலைவர்கள் வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது…….???

இதற்கு முந்தைய –
“ஓதுவது சாத்தான் என்றாலும்
சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!”

என்கிற தலைப்பிலான இடுகையின் தொடர்ச்சியாகவே
இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த இடுகைக்கான பின்னூட்டங்களின் மீதான
கருத்துக்கள் வாசக நண்பர்கள் அனைவரையும் சென்றடைய
வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கத்தை
தனி இடுகையாகவே போடுகிறேன்.

அனைத்து பின்னூட்டங்களையும் காணும்போது –
இரண்டு விஷயங்களில் எனக்கு திருப்தி.

1) சாத்தான் என்று வர்ணிக்கப்பட்டதை அனைவருமே
ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே – சாத்தான்
தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒதுக்கப்பட வேண்டிய
ஒன்று…..என்பதை அனைவரும் ஏற்கிறோம்.

2) நண்பர் ஆக்குவனுடையதைத் தவிர மற்ற பின்னூட்டங்கள்
அனைத்துமே, பாஜகவின் தற்போதைய நிலை பற்றி
நான் கூறி இருப்பதை கிட்டத்தட்ட ஏற்கின்றன.

சில கருத்துக்கள் ஒரு படி மேலே கூட போகின்றன….
நண்பர் கண்பத் அவர்கள் தெளிவாகவே,
மோடி அரசு மீதிருந்த நம்பிக்கை நீர்த்துப் போய் விட்டது
என்று கூறுகிறார்.
என் ஆதங்கமும் அதுவே தான்.

திரு.ஆக்குவன் கூறுவது போல் –

வளர்ச்சியை எதிர்பார்த்தும்,
ஊழலற்ற நிர்வாகம் அமையும் என்று எதிர்பார்த்தும் –
மோடி/பாஜக அரசு
தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது சரியே.

ஆனால், விஷயம் அத்துடன் முடியவில்லை –
அதற்காக மட்டும் பாஜக
தேர்ந்தெடுக்கப்படவில்லை.
தேர்தலுக்கு முன் பாஜக பல வாக்குறுதிகளை முன்வைத்தது.
அவை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தும் தான்
பாஜகவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆனால், பாஜக -மோடி அரசு பல விஷயங்களில்
பின் வாங்குகிறது அல்லது நேர்மாறாக நடந்து கொள்கிறது.

தேர்தலுக்கு முந்தைய திரு மோடியின் திருச்சி கூட்டத்திற்கு
நான் நேரில் சென்றிருந்தேன்.
பாஜக பதவிக்கு வந்தால் –
பதினைந்தே நாட்களில் தமிழக மீனவர் பிரச்சினை
முடிவுக்கு வரும் என்று உறுதியாகக் கூறினார்.

மீனவர் பிரச்சினைக்கென்றே, மீன்வளத்துறைக்கென்றே –
தனி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார்
என்று உறுதி
கூறினார்.

எங்கே போயிற்று இந்த வாக்குறுதி….?

தமிழர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று வாக்குறுதி
கொடுத்தார். ஆனால், சுப்ரமணியன்சுவாமி வழியில்
சென்று தான் மோடி தமிழர் பிரச்சினையை தீர்க்கப்போகிறார்
என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.

இது தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி….

சுப்ரமணியன்சுவாமியும், சேஷாத்ரி சாரியும் தான் –
தமிழக மீனவர் பிரச்சினையையும், இலங்கைத் தமிழர்
பிரச்சினையையும் கையாளப் போகிறார்கள்
என்று தேர்தலுக்கு முன்னரே கூறி இருந்தால் –
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியே ஏற்பட்டிருக்காது…..!!

வைகோவும், தமிழருவி மணியனும், டாக்டர் ராமதாசும்,
ஏன் விஜய்காந்தும் கூட தலை தெறிக்க ஓடி இருப்பார்கள்.
திரு.பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பி.ஆகி இருப்பாரா ….?

மீனவர் பிரச்சினையையும், இலங்கைத் தமிழர்
பிரச்சினையையும், கச்சத்தீவு பிரச்சினையையும்
தீர்க்க
சுப்ரமணியன்சுவாமி வழியை பின்பற்றுவது என்பது
பச்சை துரோகம். இந்த துரோகத்திற்கு
முக்கிய காரணகர்த்தர்கள் தமிழக பாஜக தலைவர்கள்.

இதே அளவிற்கு முக்கியமானது டெல்டா மாவட்டங்களில்
மீத்தேன் எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதும்,
காவிரி நீர் நிர்வாக ஆணையம் அமைப்பதும் ……
இவை மாநில பிரச்சினைகள்.

இதையெல்லாம் தகுந்த முறையில் திரு மோடியின்
கவனத்திற்கு கொண்டு செல்லாதது, தமிழக பாஜக தலைமையின்
கடைந்தெடுத்த சுயநலத்தனம்.
தமிழ்நாட்டின் பாஜக தலைவர் பதவியை யார் பிடிப்பது
என்பதில் தான் கடந்த 2 மாதங்களாக
அவர்கள் அனைவருமே ஈடுபட்டிருக்கிறார்கள்.
இன்னும் அகில இந்திய அளவில் எவ்வளவோ பிரச்சினைகளில் ஏமாற்றம் … தடுமாற்றம் …..பெரிய பட்டியலே போடலாம்…..!!

 

மேற்கூறிய பிரச்சினைகளைப் பற்றி பாஜக
தமிழகத் தலைவர்களும் சரி, அகில இந்திய தலைமையும் சரி –
இப்போது யாராவது வாயைத் திறக்கிறார்களா ….?

அவர்கள் வாயில் என்ன
கொழுக்கட்டையா அடைக்கப்பட்டிருக்கிறது ..?
பிரச்சினைகளைப் பற்றி பேசுவதையே தவிர்ப்பதேன் ….?

தேர்தலுக்கு முன் பாஜக தலைவர்கள் மீனவர் பிரச்சினை குறித்து
சென்னை கடற்கரை மீனவர் குப்பங்களில் நிகழ்த்திய
நாடகங்களின் புகைப்படங்கள் கீழே –

bjp fish-3

bjp fish-1

bjp fish-2

இந்த நாடகங்களினூடே திரு இல.கணேசன் கூறியவை –

“நரேந்திரமோடி பிரதமரானதும் மீனவர்களுக்காக
தனித்துறை ஏற்படுத்தப்படும். மற்ற கட்சியினர் வாக்குறுதிகளைக் கொடுப்பதோடு சரி. பாஜகவால் மட்டும்தான் செயல்படுத்த முடியும்.

நாங்கள் கடலை தெய்வமாகக் கருதுகிறோம். கடல் மீது
சத்தியம் செய்து சொல்கிறேன், பாஜக ஆட்சிக்கு வந்தால்,
மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். “

கடல் மீது செய்த சத்தியம் தானே ….
கடல் வந்து கணேசனை கேட்கவா போகிறது …..
என்கிற தைரியமா…..!!

 

என் இடுகையை மீண்டும் அதே வார்த்தைகளுடன் தான்
முடிக்கிறேன் –

“மாற்றங்களை எதிர்பார்த்தோம் –
ஆனால்……. வருத்தம் தரும்

ஏமாற்றங்கள் தான் தொடர்கின்றன….”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

34 Responses to பாஜக தலைவர்கள் வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது…….???

 1. Ganpat சொல்கிறார்:

  கா மை ஜி..நீங்கள் சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறேன்.நிச்சயமாக ஏதோ ஒரு vacuum உருவாகி உள்ளது.இது நல்லதிற்கில்லை.யானை குட்டிபோடும் என எதிர்பார்த்திருக்கும் நமக்கு இன்றைய சேதி “செப்டெம்பரில் மோடி அமரிக்கா பயணம்”மோடிஜி உங்களுக்கு ஒரு வேண்டுகோள்:உங்களுக்கும் சோனியாவிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது.இம்முறை நீங்கள் செயலில் தோற்றால் மக்கள் தயக்கமின்றி 2019 இல் சோனியாவை தேர்ந்தெடுப்பார்கள்.ஆனால் அந்த முறையும் அவர் (சோனியா) செயலில் தோற்றால் (தோற்றால் என்ன, நிச்சயம் தோற்பார்) 2024 தேர்தலில் மக்கள் உங்களை நிச்சயம் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.இதை நினைவில் கொண்டு செயல் படவும்.உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு உங்கள் தலையீடு அதிகம் தேவைப்படுகிறது.Please set the house in order before taking up overseas trip,

  • todayandme சொல்கிறார்:

   பிரதமர் ஆகிவிட்டால் உலகநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளத்தான் வேண்டும். அது ஒரு ப்ரோட்டோகால் ஆகவோ டெவலப்மெண்ட்க்காகவோ இருக்கலாம். அதில் குறை ஏதும் கூற இயலாது. ஆனானப்பட்ட அமெரிக்காவே, முன்பு அனுமதி மறுத்த அமெரிக்காவே வருந்தி அழைக்கும் போது (அழைக்கும் நிலையில் இருக்கும்போது – பரமசிவன் கழுத்துப் பாம்பு) போய்த்தான் ஆகவேண்டும். ஆனால் வழக்கம்போல் தானே பரமசிவனாக ஒரு வெட்டி பந்தா!

   /// சோனியாவிற்கும் மோடிக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது ////
   பெரும்பாலான ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கக்கூடிய பெரும்பாலான இந்திய மக்களுக்கு இரண்டு முக்கிய ஒற்றுமைகள் உள்ளன. நடந்ததை வசதியாக மறந்துவிடுவது, பணத்துக்கு ஓட்டு.

   நண்பர் கண்பத், தாங்கள் கூறுவது மோடி காதில் போய்ச் சென்றால், அதன்படி செயல்பட்டால் தேவலைதான். ஆனால் போகுமா?

 2. இராம.சுப்பையா சொல்கிறார்:

  திரு காவிரிமைந்தன் அவர்களுக்கு வணக்கம்.

  // சுப்ரமணியன்சுவாமியும், சேஷாத்ரி சாரியும் தான் –
  தமிழக மீனவர் பிரச்சினையையும், இலங்கைத் தமிழர்
  பிரச்சினையையும் கையாளப் போகிறார்கள்
  என்று தேர்தலுக்கு முன்னரே கூறி இருந்தால் –
  தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியே ஏற்பட்டிருக்காது…..!!

  வைகோவும், தமிழருவி மணியனும், டாக்டர் ராமதாசும்,
  ஏன் விஜய்காந்தும் கூட தலை தெறிக்க ஓடி இருப்பார்கள்.
  திரு.பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பி.ஆகி இருப்பாரா ….? //

  நீங்கள் கூறுவது சத்தியமான உண்மை. பொன்ரா.வின்
  பொய்யான, போலியான வாக்குறுதிகளின் அடிப்படையில்
  அமைந்த கூட்டணி அது. வைகோ அவர்கள் வெற்றி
  பெறாததும் நன்மைக்கே. இல்லையேல், துரியோதனன்
  கூட்டத்தில் சிக்கிய கர்ணன் போல் அவரும் இந்த
  சூதில் சம்பந்தப்பட்டிருப்பார்.

  திரு. கண்பத் அவர்கள் கூறியது போல்
  // நிச்சயமாக ஏதோ ஒரு vacuum உருவாகி உள்ளது.
  இது நல்லதிற்கில்லை.//

  உடனடியாக மோடி அவர்கள் விழித்துக் கொண்டால் அது
  அவருக்கும் நாட்டிற்கும் நல்லது.
  நன்றி.

  இராம.சுப்பையா

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  சற்று நேரம் முன்பாக தொலைக்காட்சி செய்தியை
  பார்த்து விட்டு, இலங்கை, பாதுகாப்பு இலாகா
  வலைத்தளத்திலும் பார்த்தேன்.

  நான் மேலே இடுகையில் சாடியது முற்றிலும்
  சரியாகி விட்டது.

  வடி கட்டிய
  அயோக்கியத்தனம் –
  பொறுக்கித்தனம் –
  திமிர்த்தனம்.

  இந்த நாய்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று,
  டெல்லியில் ராஜ உபசாரம் செய்தது நமது
  நரேந்திர மோடியின் … மன்னிக்கவும்
  சுப்ரமணியன் சுவாமியின் புதிய அரசு.

  உண்மையிலேயே கௌரவமான மனிதராக இருந்தால்
  நரேந்திர மோடி அவர்கள் வெளிப்படையாக
  இதைக் கண்டிப்பதோடு, சுப்ரமணியன் சுவாமியை
  உடனடியாக வெளியே துரத்த வேண்டும்.

  சென்னையில் இருக்கும் இலங்கை தூதரக
  அலுவலகம் உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும்.

  தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில், ஸ்பெஷல் பெடிஷன்
  போட்டு, நீண்ட காலமாக காத்திருக்கும் கச்சத்தீவு வழக்கை
  அவசரமாக விசாரிக்க வேண்டுகோள் வைக்க வேண்டும்.

  இந்த விஷயம் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டும் –
  மத்திய அரசிடமிருந்து கச்சத்தீவு குறித்து சரியான உறுதிமொழி கிடைக்கும் வரை தமிழகம் ஓயக்கூடாது.

  வேறு என்ன செய்யலாம் …..
  நீங்கள் தான் சொல்லுங்களேன்….

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • todayandme சொல்கிறார்:

   சு.சா. தமிழ் பாரம்பரியத்தில் வந்த, தமிழனை வெறுக்கும்-தமிழனை அழிக்க நினைக்கும் பட்டுப்போன மரம். அதில் இரும்பைப் பூட்டி தமிழினத்தை அழிக்க உபகரணமாக்குகிறார்கள் – அந்த கோடாலிக்காம்பும் மனவிருப்பத்தோடு இசைந்துகொடுக்கிறார்.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  வெட்ககேடு, இங்கு எல்லோரும் அரசியல்வா(வியா)திகள்…சந்தர்பவாதிகள் மட்டுமே. அமெரிக்கா போவது மட்டுமே முக்கிய நிகழ்வாகவும், சாதனையாகவும் கருதப்படுகிறது.

 5. M. Syed சொல்கிறார்:

  திரு காவிரிமைந்தன் அவர்களுக்கு

  தங்களைப் போன்றவர்களை பார்த்து பரிதாபப்படத்தான் தோன்றுகிறது. இண்ணுமா நண்பரே பிஜேபியை நம்புகிறேர்கள். காங்கிரஸ் ஆனாலும் பிஜேபி ஆனாலும் இலங்கையை பொருத்தவரை ஒன்றுதான். தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை என்ன சொன்னாலும் நம்ம இந்தியா ஆமாம் சாமிதான் போடவேண்டும் அதுதான் நம்ம இந்தியாவின் தலைவிதி. இல்லைஎன்றால் இலங்கை சீனாவின் ஆதரவு நாடாகினால் இந்தியாவுக்கு தான் பெரிய ஆபத்து. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு நாமம் தான். என்னா காங்கிரஸ்காரன் கொஞ்சம் பயந்து பயந்து செய்தான் பிஜேபி நேரடியாக தமிழனுக்கு துரோகம் செய்வான். அய்யா இல.கணேசன் கையில் மீனை பிடிக்கும் போதே தமிழன் ( மீனவர்கள்) சுதாரிக்கவேன்டாமா!!! ஆரம்பத்திலிருந்தே இது நாடகம் என்று தெரிந்ததனால் எங்களுக்கு பெரிதாக ஒன்றும் ஏமாற்றம் இல்லை. வைகோ மற்றும் ராமதாஸ் மற்றும் (புரோக்கர்) த அ ம வுக்கும் நன்றாக தெரியும் மோடியினால் ஒன்றும நடக்காது என்று தற்போது ஏமாந்த மாதிரி நடிக்கிறார்கள். அவர்களுக்கு தேவை எம் பி பதவி என்னசெய்ய வைகோ தேர்தலில் தோற்றுவிட்டார். அதுவும் இலங்கை விவகாரத்தை கவனிக்க சுனா.சானா நம்ம தமிழர்கள் ( மீனவர்கள்) கதி அதோ கதிதான். ஐந்து வருடத்திற்கு நாம் வருதபடுவதை தவிர வேறு வழி இல்லை..

  நன்றி
  அன்புடன் எம். செய்யது
  துபாய்

 6. Aakuvan சொல்கிறார்:

  Dear KM ji, would like to know your source, as I find the following information in your blog are not verified news.

  1) Modi ji said in Trichy Meeting that he will resolve TN fishermen issue in 15 days
  2) Swamy and Chari are dealing TN fishermen issue on behalf of Indian Govt.
  3) Srilanka Defence website news confirming your assertion

  Your response to these will answer questions and lead the debate constructively and openly.

  Warm Regards
  -AaKuvan

  • todayandme சொல்கிறார்:

   1&2. இதைத்தான் பெரும்பான்மை மக்களின் புவர்மெமரிலாஸ் என்பார்கள்.
   3. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு?

   • Aakuvan சொல்கிறார்:

    Memory Loss? For Whom?
    Alas! Our people are caught in the web of “Illusion” with many news traders.

    I asked these questions to dig out the facts and not to scratch the memory.

    I’m also surpised on the silence by KMji. Trust, he appreciates the context of my comment.

    Here you go…..

    1. Modi ji never promised that he will resolve TN fishermen issue in 15 days in Trichy meet – refer narendramodi.in for full text of his speech.
    2. Swami and Chari visited SL on different issue and nothing related to Fishermen. They are not stakeholders in any kind.
    3. SL Defence website news ( issue) was about the puerile behaviour of portraying news and nothing related to SL fishermen issue(ofcourse the article was on fishermen issue).

    Let’s gets the facts correctly. Else, any arguement is directionless and will throw up only allegation.

    Correct me, if I’m overlooking something.

    I think demntia is much more a diease than memory loss!

    Warm Regards
    AaKuvan

    • டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார்:

     Hi everybody –

     Feel my absence….?

     Then,
     Be satisfied by dealing with
     Dr.Subramanian Swamy- THE JUNIOR-
     mr.aakkuvan….

 7. aamadmi சொல்கிறார்:

  We look for overnight magic (a.k.a. instant justice).
  And we claim to be educated. LOL.
  Or is it just a ploy to get frenzied visitors to this page?
  The famed 10 minute fame. [I believe this is the case.]

  OK.
  1) Congress will not do.
  2) BJP cannot.
  3) Communists are hopeless.
  4) AamAdmi did not start well.
  So whom do we choose for 2019 and beyond?

  No, I dont care for anything. I only care for traffic to my blog.
  Kaveri Maindan sir, this is a fabulous technique.

  • todayandme சொல்கிறார்:

   இது சரியாய் இல்லையே – சரியானது என்று தவறானதை நம்பிவிட்டோமே தேர்ந்தெடுத்துவிட்டோமே வருந்துவது – மனிதத் தன்மை

   இப்பொழுதாவது தங்களைச் சரிப்படுத்திக்கொள்ளமாட்டார்களா என ஏங்குவது – மன்னிக்கும் தன்மை

   ஓட்டுப்போடும் உரிமை இருந்தும் ஒன்றும்செய்ய இயலாமல் தவிப்பது – மனிதத் தன்மை

   தன்னேரில்லாத் தமிழினம் வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது – தன்மானத் தன்மை

   இவற்றை வெளிப்படுத்தி, ஒத்த சிந்தனையாளர்கள் எங்களுக்குள்ளாகப் புலம்பி ஆற்றிக்கொள்கிறோம் (மாற்றுக்கருத்துக்களும் பின்னூட்டத்தில் தடையில்லை) – இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில்

   ஆனால் இதையும் கூடாது என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் அதற்கு தனக்குத் தகுந்தாற்போல் வணிகக்கண்ணாடி போட்டுக்கொண்டு இந்த பிளாக்கை பார்க்கும் aamaadmi ! உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
   “உங்களுக்கு என்று ஒரு பிளாக் இருக்கும் பட்சத்தில் அதன் ட்ராபிக்கைப் பற்றிக் கவலைப்பட்டு உருப்படியாய் முன்னேறும் வழியைப் பாருங்கள்.

   அடுத்தவர் ப்ளாக்கின் ட்ராபிக்கைப் பார்த்து வயிறெரியவேண்டாம்.

   கா.மை அவர்களின் ப்ளாக் உண்மையாகவே ட்ராபிக்கினால் வளரவில்லை, அதன் உண்மைத் தன்மையால் ட்ராபிக் ஆகியிருக்கிறது.

   🙂

   ஆமாம், நீங்கள் ஏன் இந்த ட்ராபிக்கில் சிக்கிக்கொண்டுள்ளீர்கள், ஏதாவது ப்ரீயான ரூட் இருந்தால் அதில் உங்கள் பயணத்தைத் தொடரலாமே.”

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பரே (today and me ),

    நான் வலைக்கு வந்து பின்னூட்டங்களைப்
    பார்த்தவுடன் அசந்து விட்டேன் ….

    நீங்கள் யாரோ, எந்த ஊரில் இருக்கிறீர்களோ,
    என்ன செய்கிறீர்களோ – உங்கள் பின்னணி
    எதுவுமே எனக்குத் தெரியாது.

    ஆனால், என்னை, என் எழுத்துக்களை,
    இந்த வலைத்தளத்தை – மிக அருமையாகப்
    புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    இவ்வளவு பொறுமையாக,
    இவ்வளவு அழகாக -விளக்கமாக
    நான் கூட பதில் சொல்லி இருப்பேனா – தெரியாது.

    எல்லாவற்றிற்கும் சேர்த்து மீண்டும் ஒரு நன்றி.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே, (ஆம் ஆத்மி … )

   நான் வலைக்கு வந்து இந்த பின்னூட்டங்களை எல்லாம் பார்க்கும்முன்னரே, நண்பர்
   today and me மிக அருமையாக, என்னை விட
   சிறப்பாக பதில் சொல்லி இருக்கிறார். எனவே நான்
   மேற்கொண்டு விளக்க ஏதுமில்லை.

   ஆம் ஆத்மி என்கிற புனைப்பெயரே உங்களின் பார்வை
   எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை சொல்லாமல்
   சொல்லுகிறது.

   பொய் சொல்கிற வயதையும், அவசியத்தையும்
   நான் தாண்டி வந்து விட்டேன்.
   என் தேவைகள் மிக மிகக்குறைவு.
   பரபரப்புக்கு ஆசைப்பட
   நான் இளைஞனோ, அரசியல்வாதியோ,
   வியாபாரியோ இல்லை …
   என் மனதிற்கு, மனசாட்சிக்கு சரி-தவறு என்று
   தோன்றுவதைத்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

   படிப்பவர்களுக்கு சுவையாக இருக்க வேண்டும்
   என்பதற்காக, அடிப்படை உண்மையை மாற்றாமல்,
   சிதைக்காமல் – செய்திகளுக்கும், கருத்துகளுக்கும்
   சிறிது ஒப்பனையும், அலங்காரமும் செய்து எழுதுகிறேன்.
   என் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கும் இது புரியும்.

   தொடர்ந்து விமரிசனம் வலைத்தளத்திற்கு
   வந்து கொண்டிருக்கும் நீண்ட நாள்
   நண்பர்களுக்கு இந்த வலைத்தளத்தின் உண்மையும்,
   நேர்மையும் புரியும். திடீரென்று வந்து குதித்து
   குறிப்பாக ஒன்றிரண்டு பதிவுகளைப் பார்த்து
   இப்படி எல்லாம் பின்னூட்டம் போடுகிறவர்களைப்
   பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது.

   நேர்மையான முறையில் – சொல்லப்பட்டிருக்கும்
   விஷயங்களைப் பற்றி விவாதிக்க
   தகுந்த காரணங்களோ, நியாயமோ
   இல்லாதவர்கள் தான் எதிர்மறையாக இப்படி எல்லாம்
   எழுதுகிறார்களோ என்று தோன்றுகிறது.

   இந்த நாள் வரை இந்த வலைத்தளத்தின் traffic-ஐ
   குறித்து நானோ வேறு யாருமோ பேசியதில்லை.

   முதல் முறையாக நீங்களும், நண்பர் ஆக்குவனும்
   பேசுகிறீர்கள். எனவே –
   உங்கள் நோக்கம் ஓரளவு எனக்குப் புரிகிறது.
   மற்ற நண்பர்களுக்கும் புரியுமென்று நினைக்கிறேன்.

   பாஜக விற்கு எதிராக நான் எழுதியது பிடிக்கவில்லை
   என்றால் – நேரடியாக உங்கள் கருத்துக்களை
   தாராளமாகத் தெரிவிக்கலாம்.

   நியாயமான, நேர்மையான முறையில் எதிர்க்கருத்துக்களை
   எடுத்துக்கூற இந்த வலைத்தளத்தில் எப்போதுமே
   இடம் உண்டு.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. ramanujam சொல்கிறார்:

  அன்பின் ஐயா வணக்கம்!
  தங்கள் பதிவைக் கண்டேன் ! பத்து தினங்களுக்கு முன் ,என் வலையில் நான்
  எழுதிய கவிதை, இதோ……!
  பழையகள்ளு புதியமொந்தை ஆன தென்றே –இன்று
  பாராள வந்தோரின் செயலும் ஒன்றே
  பிழையை நீக்கி நன்மைதர முயலவில்லை-எதிர்த்து
  பேசுதற்கும் நாதியுண்டா! அதுதான் தொல்லை

  வாக்குறுதி தந்த தெல்லாம் வெற்றுச் சொல்லே-ஏழை
  வாழ்வதற்கு யார்வரினும் வாழியே இல்லே
  நாக்குறுதி இல்லாதார் நாடகம் தானே-இங்கே
  நடக்கிறது நாள்தோறும் வருந்தல் வீணே

  ஆளுக்கொரு கருத்தென்று அமைச்சர் சொல்ல-மோடி
  அரசாங்கக் கட்டுப்பாடும் தளரும் மெல்ல
  நாளுக்கொரு விளக்கமதில் ! நன்மையல்ல ஐயா –சற்று
  நாவடக்கம் வேண்டும்! ஆய்வீர்! மெய்யா

  விலைவாசி குறைவதற்கு ஏற்றவழி காண்பீர் –நாட்டில்
  வீணாகும் நதிநீரை தடுக்கவழி பூண்பீர்!
  தலையாய திட்டங்களை முன்னெடுத்து வருவீர் –மொழித்
  தகராறு தலைதூக்கா உறுதிமொழி தருவீர்!

  புலவர் சா இராமாநுசம்

 9. Thiruvengadam சொல்கிறார்:

  Leave alone the bilateral talks. What is the trouble in deploying Our Coast Guard vessels thro out the Day both as guide to our People not to pass the limit & threat to Srilankan to face the consequences if they exceed their limit . As noted in yesterdays blog by them later with drawn & followed apology, there is truth that all suffering Fisher man are not owners of Boats and act as per their Boss wishes just for livelihood.

 10. Aakuvan சொல்கிறார்:

  Dear KM ji, awaiting your response!

  As a rejoinder to Aamadmi’s comments, is this blog site fantasizing and confines to alleged/biased news and mollifies it’s readers by getting knee jerk reactions ( Ganpat, Syed, RamSubbiah et al)?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஆக்குவன்,

   1)நான் ஏற்கெனவே என் இடுகையில் கூறி இருக்கிறேன்.
   திரு நரேந்திர மோடியின் திருச்சி கூட்டத்திற்கு
   நான் நேரில் சென்றிருந்தேன் – அங்கே அவர்
   இவ்வாறு கூறினாரென்று.

   2) சுப்ரமணியன் சுவாமியும், சேஷாத்ரி சாரியும்
   பத்து நாட்களுக்கு முன் இலங்கை சென்றதையும்
   அங்கு அவர்கள் பேசியதையும் பற்றிய செய்திகளை
   எல்லாம் நீங்கள் படிக்கவே இல்லையா …?

   3) இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரவை
   வலைத்தளத்தின் நேற்றைய கட்டுரை – செய்கைகளைக்குப்
   பிறகும் உங்களுக்கு இந்த சந்தேகமா ….?

   உங்களுக்கு ஒரு விஷயம் – வருத்தத்துடன்
   தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என் இடுகைகளை
   தொடர்ந்து படித்து வருபவர்களுக்குத் தெரியும்.
   செய்திகளை நான் என்றைக்கும் உண்டாக்குவதோ –
   திரித்துக் கூறுவதோ இல்லை. ( I neither create
   or fabricate news….)
   அந்த அடிப்படைச் செய்திகளின் மீதான என் கருத்துக்கள்
   தான் இடுகைகளாக அமையும்.

   ஒன்று உங்களுக்காவது விஷயங்கள் முழுமையாகத்
   தெரிந்திருக்க வேண்டும். அல்லது இடுகையில்
   சொல்லப்படுவதையாவது நம்ப வேண்டும்.

   செய்திகளின் அடிப்படையில் அமைவது தான் என்
   இடுகைகளும், அதன் மீதான விவாதங்களும்….
   நீங்கள் அடிப்படைச் செய்தியையே நம்பவில்லை
   என்றால் – உங்களுடன் நான் விவாதம் நடத்துவதால்
   என்ன பலன் விளையப்போகிறது….?

   நான் பாஜக வை கண்டித்து எழுதியது உங்களுக்கு
   பிடிக்கவில்லை என்றால், தாராளமாக அதை
   வெளிப்படையாகவே நீங்கள் இங்கு கூறலாம்.
   அந்த உரிமை இந்த வலைத்தளத்தில் அனைவருக்கும்
   உண்டு.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. Ganpat சொல்கிறார்:

  Aakuvan,
  The queries you have posed to Kaviri Maindan would be clarified by him.
  But I wish to tell you that none here tries to mollify others or get mollified by others.
  We are a free group interested in our Nations’s welfare and growth and approaching any issue
  in an unbiased manner.We also know that the problems faced by us can not be solved overnight but all we want to see is semblance of some action for the common man to understand and appreciate.
  We are hungry for decades.Let the new cook serve atleast upma first and then take his time to prepare the seven course lunch as promised.
  Hope I have made myself clear.
  Thanks
  PS: As the traffic was heavy,I was delayed.Sorry.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   நான் மற்ற பின்னூட்டங்களுக்கான பதில்களை
   எழுதிவிட்டு வந்து பார்க்கிறேன் – உங்கள் மறுமொழி
   வந்து நிற்கிறது…..!!

   உங்கள் பாணியில் மிகப்பிரமாதமாகவே
   சொல்லி விட்டீர்கள். நன்றி என்பதை விட நான்
   வேறு என்ன சொல்லி விட முடியும் …!

   அதே தான் – நாம் “உப்புமா”வுக்காக பசியோடு
   காத்திருக்கிறோம். அறுசுவை உணவு கிடைக்கும்போது
   ( கிடைத்தால் …..) கிடைக்கட்டும்.

   இப்போதைக்கு ‘உள்ளூர் -உள்நாட்டு பிரச்சினைகள்’
   மிக அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்பது தான்
   நமது எதிர்பார்ப்பு.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • AaKuvan சொல்கிறார்:

    Dear KM ji, clarifications first!

    1. Where did I question about your/this blog credibility? Tagging me with Aamadmi comments is wrong. I only added a rejoinder to get a response from you/readers on the allegation mentioned in Aamadmi’s comment.
    2. This “traffic” problem chasing me for some time. I will be happy to see the “traffic” of this site grow as I feel part of this. In a sense , our comments will also be seen by many, right? FYI, I also did active blogging earlier!

    Coming to the issue, KM ji has not seen my comment ( reply) to Todayandme stating the information is wrong. When facts on wrong, I’m surprised that we speak of non issue. Please read my comment again and if not a response,you can do soul searching.
    1. Modi NEVER promised 15 days resln
    2. Swamy and Chary DID NOT discuss on fishermen issue. There were 2 more members in this delegation (Swapan Das Gupta, M D Nalapat). It was about terrorism and UNHRC
    3. News you mentioned was NOT related to fishermen issue

    Also, conveniently, I’m tagged as BJP supporter ( since I defend) which is not fair. With this yard stick, are you all non-BJP supporters? Like you all, I expect Modi Govt will do excellent job ( already many signs have emerged). You can tag me as whatever you can!

    Dear Ganpat, you understand the problem better…u need “upma” before 7 course meal, fine! You have jus’ ordered..Modi is given a Test match mandate and expected a T20 performance ( read somewhere). This holds good here.

    Warm Regards
    AaKuvan

    • todayandme சொல்கிறார்:

     என்னடா கா.மை.க்குப் பதிலாக இவரது ரிப்ளை என்று பார்க்கவேண்டாம்.

     இந்தப் பின்னூட்டத்தின் பின்னூட்டத்தை, நான் விமரிசனம் வலைப்பூவிற்குத் கொடுக்கவேண்டிய மலர்க்கொத்தை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுக்க ஆக்குவனால் எனக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்கிறேன்.

     CLARIFICATIONS
     1. ப்ளாக்கின் நம்பகத்தன்மையைப் பற்றி நீங்கள் வினவவில்லை. ஆனால் யாருடன் உங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு கேட்கிறீர்கள் என்பது நிச்சயம் குறிக்கப்படவேண்டிய ஒன்று. Aamaadmi உடன் ரீஜாய்ண்டர் ஆக நின்று கேட்பவை எல்லாம் அவருடைய எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே அமையக்கூடும் – அமைகிறது என்பதில் சந்தேகமில்லை.

     2. நீங்களும் ப்ளாக்கரா? இப்பொழுதும் எழுதுகிறீர்களா? மிகவும் மகிழ்ச்சி. ட்ராபிக் என்பதை ஒரு அளவுகோலாகப் பார்க்கும்போது அது எழுத்தாளனைத் துரத்தும். ஆனால் உண்மை, நேர்மையை அளவுகோலாகக் கொண்டு எழுதும்போது ட்ராபிக் எழுத்தாளனைத் துரத்தும். அது கா.மை. அவர்களின் விமர்சனம் தளத்திற்குக் கிடைத்திருக்கிறதைப் பார்க்கும்பொழுது உண்மையையும் நேர்மையும் தேடுகிறவர்களும் விரும்புகிறவர்களும் இருக்கிறார்கள் என அறிய மகிழ்ச்சி.

     Issue:
     1. வாயால் சொல்லுவதெல்லாம் வாக்குறுதி ஆகிவிடுமா? பொதுக்கூட்டத்தில் பேசிமுடித்தபிறகு ப்ரெஸ்ரிலீஸ் ஆக எதை ப்ரெஸில் கொடுத்து பத்திரிகைகளில் வெளியாகிறதோ-எது எலக்சன் மேனிஃபெஸ்டோ ஆக இணைத்தில் இருக்கிறதோ அதுதான் வாக்குறுதியா? (வாக்கு என்பது வாயால் பேசுவது இல்லையா? எனக்கு தமிழில் கொஞ்சம் தகராறு என நினைக்கிறேன்)

     2 & 3. ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!! இடுகை-1ல் எனது பின்னூட்டம். தாங்கள் படிக்கவில்லையென்றால் மீண்டும் இணைத்திருக்கிறேன்.

     மீடியா- மக்களுக்காகக் குரைக்கவேண்டிய நாய்

     நாட்டின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் மீடியாவின் வெவ்வேறு அவதாரங்களான ரேடியோ, டிவி, பத்திரிகை, இணையம், 3ஜி-4ஜிசேவைகளை விளம்பரங்கள் என்னும் தீனியைப்போட்டு தன்வீட்டு வாசலில் கட்டிவைத்திருக்கும் நாயாக மாற்றியிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

     அந்தத் தீனியைச் சாப்பிட்டுக் கொழுத்துப்போயிருக்கும் அவை தங்கள் எஜமானாகப் பார்த்து யாரைக் குரைக்கச் சொல்வார்களோ அவர்களைக் குரைத்து, யாரைப்பார்த்து வாலைக் குழைக்கச் சொல்வார்களோ குழைக்கின்றன.

     கண்ணால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருப்பவர்கள் இதைப் பார்த்து “ஓஹோ, இவன் தான் திருடனா? இவ்வளவு நாள் இவனைப் போய் நல்லவன் என்று தப்பாக நினைத்தோமே என்று தப்புத்தப்பாகவும், இவன் இவ்வளவு நல்லவனா? இவ்வளவு நாள் இவனைப்போய் தவறாவனன் என்று கருதிவிட்டோமே என எக்குத்தப்பாகவும்” சிந்திக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

     என்ன? இந்த எதிர்மறைக் கருத்தை சொல்ல்லாமா கூடாதா என்று ஆராய்வதற்கு 6மாத அவகாசமும், நேரிடைக் (காரிய முன்னேற்றத்திற்கு) கருத்துக்கணிப்பிற்கு இதுநாள்வரை நடத்திய அரசாங்கமும் போதும் என நினைத்திருக்கிறது பாஜக அரசு.

     காங்கிரஸ் அரசைக் குறைகூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அவர்கள் செய்த குற்றங்குறைகளை நியாயப்படுத்தியும், அவற்றைவிட அதிகமாகவும், அவற்றையே சட்டத்தின்படியும் செய்ய இயலும் என்பதை நிருபித்திருக்கிறார்கள்.

     மேலும், தாங்கள் பாஜக ஆதரவாளர் அல்லாதபட்சத்தில்,

     இங்கு பின்னூட்டமிடுகிற அனைவரும் பாஜக அல்லாத கட்சிகளின் ஆதரவாளர் என்று தாங்கள் நினைக்கும்பட்சத்தில்

     தமிழனாய் பிறந்ததாலேயே தமிழரையும் தமிழையும் தமிழ்நாட்டையும் நேசித்து, வாழவைத்து, இந்திய நாட்டின் பெயரை, (அமெரிக்காவில் செப்டெம்பரில் வேண்டாம்), அட்லீஸ்ட் அண்டைநாடுகளில் உயர்த்தவாவது வேண்டாம்- மரியாதையை காப்பாற்றவாவது ஆளும்பாஜக ஆட்சி செய்யவேண்டும் என்ற எங்கள் எதிர்பார்ப்பில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

     (பரவாயில்லையே, பின்னூட்டத்தின் கடைசி பாராவில் கண்பத் அவர்களை கன்வின்ஸ் செய்துவிட்டீர்களே.)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் ஆக்குவன்,

     நான் நரேந்திர மோடி அவர்கள் பேசுவதை நேரடியாகக்
     கேட்டேன் என்று திரும்பத் திரும்ப சொல்கிறேன்.
     நீங்கள் பத்திரிகைச்செய்தியை தான் நம்புவேன் என்று
     சொல்கிறீர்கள். அப்படியானால் நான் பொய் சொல்கிறேன்
     என்று சொல்கிறீர்களா …?

     சுப்ரமணியன் சுவாமி மீனவர் பிரச்சினையைப் பற்றி,
     கச்சத்தீவு பற்றி பேசவில்லை என்று சொல்கிறீர்கள்.
     ஏசியன் ட்ரிப்யூனுக்கு
     அவர் கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் –

     Asian Tribune(AT): What do you think about
     the Indian fishermen problem?

     Dr. Subramaniam Swami: Well it is a micro
     problem. People in the past who were financed
     by the LTTE were looking for issues in relevance
     and the competition between Karunanidhi and
     Jeyalalitha who says that she can say it with
     more extreme language.

     The real reason is that the Indian side has
     exhausted all the fish, so they are forced
     to come to Sri Lankan waters
     . The fishermen
     in Sri Lanka especially in the North are
     objecting to them entering Sri Lankan waters.
     We think that both countries should do
     something to change the situation
     so that
     the Indian waters can also have good fish
     and sea food.

     Q: About Katchativu?

     A: Katchativu was given to Sri Lanka by
     virtue of a treaty and that treaty has the
     acceptance of the then ruling DMK and so
     now it can’t be reopened.
     There is no violation of the treaty by
     Sri Lanka and it should remain a part
     of Sri Lanka.

     அடுத்ததாக சுப்ரமணியன் சுவாமி சொன்னது பாஜக
     சொன்னதாக ஆகி விடுமா என்று கேட்டாலும் கேட்பீர்கள்.

     பாஜக வில் சுப்ரமணியன் சுவாமியின் பொசிஷன் என்ன …?
     Chairman of BJP’s Committee on
     Strategic Action

     ஆக இது பாஜக வின் கொள்கை என்று தானே அர்த்தம் …?

     சுப்ரமணியன் சுவாமி சொன்னது பாஜக வின் கொள்கை
     அல்ல என்றால்
     – இது வரை பாஜக தலைமையிலிருந்தோ,
     தமிழக பாஜக தலைவர்களிடமிருந்தோ,
     மத்திய அரசிலிருந்தோ ( வெளியுறவுத்துறை அல்லது pmo )
     மறுப்பு எதாவது வெளிவந்திருக்கிறதா ….?

     இதற்கு மேல், இந்த பொருளில் விவாதம் நடத்த எனக்கு
     விருப்பமில்லை. “வாதம்” செய்பவர்களை நான் வரவேற்கிறேன்-
     ஊக்குவிக்கிறேன்.

     ஆனால் “விதண்டா வாதத்தை”
     வளர்க்க எனக்கு விருப்பமில்லை.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

  • todayandme சொல்கிறார்:

   லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திட்டீங்களே.

 12. Ganpat சொல்கிறார்:

  Dear AaKuvan,
  Once again I would like to stress that here the members are issue centric and not party or leaders centric.When we threw out Cong for their non performance and corruption we expected Modi would act right from the word GO This was based on the way in which he addressed hundreds of public meetings along the length and breadth of the nation for nine months before elections.The problem now id he has not spoken since elected but rest of his team who were silent all along have started speaking.unnecessarily.This leads to the doubt that whether Modi uses them as feelers to get the pulse of the people.If it is so it is deplorable.Still we know the gravity of the situation and the nature of the problems that the nation faces.So we would wait till Jan 2015 to see whether anything visible and useful emerges from Delhi.FYI Jaya has disappointed us already by spending three years doing nothing useful.Not even a no parking offense case has been filed against any of the top brass of DMK.The L & O of the state is at its worst.The so called ministers are dummies and do nothing except breaking the tables of assembly.We only pray that such calamity should not repeat at the center too.
  Thanks.

 13. AaKuvan சொல்கிறார்:

  Dear All, as KM ji said, I’m also tired defending non issues! ( not on fishermen issue, but others)

  However, wish to clarify and carry on….

  @Todayandme I referred narendramodi.in and not news site who cut & edit. If you are questioning the integrity of Modi ji’s personal website/news, fine, up to you. On Newstraders, I fully endorse you. Nowadays, news are twisted and biased. It’s upto people to digest it in right way

  @Ganpat I suggest you to refer article writtem by R Jagannathan ( @jaggi) by googling on Modi ji’s silence – it will give you the conetxt/perspective to your view point

  @KMji You believe what you saw/heard. If I ask you to check the youtube on full speech, @todayandme will again bounce on me. Modi ji does not give false commitments. I’m following him for last 8 years (including my experience working on a project in Gujarat).

  First you said Swamy, Chary and others are dealing the SL fishermen issue and you yourself digressed it by referring an interview to a magazine. The way to sensationalized the next day event ( the comment, SL Website etc) to your blog , was an attempt to link non issues. In fact, Swamy out of TN was the pre-condition for alliance( I heard).

  All I’m trying to put for you to ponder ( and readers) is that Modi ji is a visionary. He will not jeopardize this opportunity. It’s unfair to expect resolutions for as complex as SL issue in 15 days( where even a driver license will take 21 days). Changes are not perceivable to public as all changes are done within the government, the way it functions.

  It happens in blog comments to go to and forth as we speak in a non direct channel. This is not “vithanda vatham”. I agree to disagree with you on this. I will not hesitate to speak / comment when I see the contrary( I take the liberty from you).

  On Aug 15th, I expect the road map for next 5 years.

  Before that, I expect your next few blogs!!!

  Warm Regards,
  AaKuvan

 14. எழில் சொல்கிறார்:

  I think this is the write one…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ezil,

   somewhere some technical problem.
   I am unable to set right…
   please reload the correct video.

   thank you.

   with all best wishes,
   Kavirimainthan

 15. chandraa சொல்கிறார்:

  SWAMI IS A MUCH MISUNDERTSTOODMAN> even the srilankan tamils object our fishermens journey into the srilankan waters. we also hear the news that srilankan fishermen are arrested wby tamil nadu authorities when they trespass into our area…. we conveniently do not open our mouth when srilankan fishermen are arrested in our waters. karuna once told tht our fishermen are greedy. perhaps he may be correct….

 16. Ganpat சொல்கிறார்:

  நன்றி நண்பர் aakuvan!
  அறுபத்தாறு ஆகஸ்ட்15 களை கண்டு களித்த நமக்கு அறுபதேழாவதற்காக பத்து நாட்கள் காத்திருப்பதா கஷ்டம்?
  அறுபத்தேழிலிருந்து வசனம் கேட்டு வளர்ந்த நமக்கு ஒரு ஆறு மாத வசனங்களை
  பொறுத்துக்கொள்வதா கஷ்டம்.?
  அண்டை நாடுகளுக்கே நல்லது செய்ய நினைப்பவர் அன்னை நாட்டிற்கு செய்யாமலா போய் விடுவார் ?
  இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?
  காத்திருப்போம்!

 17. gopalasamy சொல்கிறார்:

  If anybody gives the details for the following, I will be grateful.
  1. how many Indian fishermen are in pakistan jail?
  2. how many indian fishermen are in srilanka jail?
  3. how many pakistan/ srilankan fishermen are in india jail?
  4, is this the only real threat to India now?
  i accept pudhu vasantham& Mr. Syed. Indian voters have to wait for a few more years.
  we hope sonia will come back and address all our problems.
  இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?
  காத்திருப்போம்

 18. chandraa சொல்கிறார்:

  dr.swamy had unearthed many scams…2g the latest case against sonia many people know that raja and kani had made desparate attempts with dr.swami requestinf not to be harsh on them wth regardtotheir 2g cases. kani had seen dr.swami many times even at his residence. but dr.swami stood firm… probbly dr.swamis bafflinf ntelligence…his honesty… straight forardness go against him.. an we were ruled by davidian partyforover thityfive years… … we do not give regard to a ……leader

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.