இந்திய-இலங்கை உறவைத்தீர்மானிக்கப் போகும் “மஹாபுருஷ்” இவர்கள் தானோ …..?

BJP_General_Secretary_meets_Secretary_Defence

“பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ்  கடந்த திங்கட்கிழமை (ஜூலை.04)
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களை சந்தித்தார்.

அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருதரப்பு
உறவுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.”

(இலங்கை, பாதுகாப்பு அமைச்சரவை வலைத்தளத்தில்
வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வமான செய்தியும்
புகைப்படமும் )
—————–

இந்திய ஊடகங்கள் எதிலும் வெளிவராத மேற்படி
புகைப்படமும், செய்தியும் – இலங்கை பாதுகாப்பு
அமைச்சகத்தின் வெப்சைட்டில் ( ஆமாம் –
அதே தளத்தில் தான் – அதே இடத்தில் தான் ….!)
நேற்று வெளியாகி இருக்கிறது.

இதற்கு என்ன அர்த்தம் ……?
இவர்கள் யாரை ஏளனம் செய்கிறார்கள் ….?
அவமதிக்கப்பட்டது தமிழக முதல்வர் மட்டுமல்ல –
இந்தியப் பிரதமர் கூடத்தான் என்பதை
பாஜக உணராதது ஏன்…?

அவமதிப்பு கார்ட்டூன் வெளியானது வெள்ளியன்று.
அதற்கடுத்த திங்கள் – இவர்கள் சந்திக்கிறார்கள்…..!

முதலில் சுப்பிரமணியன் சுவாமியும்.
சேஷாத்ரி சாரியும் ….

இப்போது – RSS-லிருந்து அண்மையில் பாஜக வுக்கு
இறக்குமதி செய்யப்பட்டு, நேரடியாக அகில இந்திய
செயலாளராக நியமிக்கப்பட்ட ராம் மாதவ்
( இவர் கர்னாடகாவைச் சேர்ந்தவர் )

பாஜக வைச் சேர்ந்த இவர்கள் வரிசையாக,
ஒவ்வொருவராக இலங்கை சென்று – ராஜபக்சே
சகோதரர்களை தவடையைப் பிடித்து கொஞ்சி விட்டு
வருவது ஏன் ….? அதற்கான அவசியம் என்ன …?

இவர்கள் தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பாராளுமன்ற உறுப்பினர்களா ? — இல்லை.

மத்திய அரசில் எதாவது பதவியில்
இருக்கிறார்களா …..? – இல்லை.

பின் எந்த தகுதியில்,
எந்த அதிகாரத்தில் இவர்கள் இரு நாட்டு உறவைப்பற்றி இலங்கை பாதுகாப்பு அமைச்சருடன், ஜனாதிபதியுடன் – அவருடைய அலுவலகத்திற்குச் சென்று பேசுகிறார்கள் …?

இது போல் பாஜக வில் யார் வேண்டுமானாலும்,
எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போய்
அதிகாரபூர்வமாக பேச்சு வார்த்தை நடத்தலாமா …?
அந்த நாடும் அதை வரவேற்குமா …? ஏற்குமா …?

தனி மெஜாரிடி இருக்கிறது – இன்னும் ஐந்து வருட
காலத்திற்கு தான் என்ன வேண்டுமானாலும்
செய்யலாம் – யாரும் தங்களை “ஆட்ட”வோ,
அசைக்கவோ முடியாது என்கிற தைரியமா ….?

தெரிந்தே தவறு செய்கிறது பாஜக…….

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

இந்திய-இலங்கை உறவைத்தீர்மானிக்கப் போகும் “மஹாபுருஷ்” இவர்கள் தானோ …..? க்கு 9 பதில்கள்

  1. Srinivasanmurugesan சொல்கிறார்:

    ஆம்….. தெரிந்தே தவறு செய்கிறது திரு.மோடி அரசு.
    எனக்கு இன்னும் புரியவில்லை ஏன் மிகப் பெரிய வலிமையான இந்தியாவின் காங்கிரஸ் மற்றும் பிஜெபி அரசுகள் சுண்டைக்காய் இலங்கையிடம் பணிவுடன் நடந்து கொள்கின்றன.அதன் ரகசியம் தான் என்ன?இந்த இரு கட்சிகளுக்கும் தமிழகம் தந்த பாடங்கள் போதவில்லையா?
    எனது பயம் எல்லாம் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்குமே என்பதுதான்.

    • M. Syed சொல்கிறார்:

      திரு.Srinivasanmurugesan

      //// எனக்கு இன்னும் புரியவில்லை ஏன் மிகப் பெரிய வலிமையான இந்தியாவின் காங்கிரஸ் மற்றும் பிஜெபி அரசுகள் சுண்டைக்காய் இலங்கையிடம் பணிவுடன் நடந்து கொள்கின்றன.அதன் ரகசியம் தான் என்ன? /////

      வெரி சிம்பிள் நம்ம இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தான நாடு ஏது என்று கேட்டால் உடனே அனைவரும் சொல்லக்கககூடியது பாக்கிஸ்தான் தான் என்று. அப்படித்தான் நம்மை பழக்கி வைத்துள்ளார்கள்.எதார்த்தத்தில் பாக்கிஸ்தான் ஒரு சுண்டக்காய் நாடு. அது ஒரு பொருட்டே அல்ல. உண்மையிலே நமக்கு மிகவும் ஆபத்தான நாடு சீனா தான் ஆனால் நம்ம அரசியல்வாதிகளும் ஆள்பவர்களும் பத்திரிக்கைகளும் நமக்கு சொல்வதில்லை. நமக்கு வடக்கே பாக்கிஸ்தான் கிழக்கே பங்களாதேஷ் தெற்கே இலங்கை என்று மூன்று பக்கமும் சீனாவின் நட்பு நாடுகள் உள்ளன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சண்டை என்று வந்தால் இந்த மூன்று தரப்பு நாடுகளும் சீனாவுக்கு இடம் கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அப்படிதான் அவர்கள் ஒப்பந்தமும் செய்துள்ளார்கள். மேலும் இந்த மூன்று நாடுகளுக்கும் பல உதவிகளை சீனா செய்து கொடுக்கின்றது. இதை நான் சொல்லவில்லை முன்னாள் பாதுகாப்பு மந்திரி திரு சார்ச் பெர்னாண்டஸ் கூறியது. இப்போது புரிகிறதா ஏன் இந்தியா சுண்டக்காய் நாடு இலங்கையை கண்டு பயப்பபடுகிறது என்று. ஒரு நாளும் இந்தியா ( மத்தியில் எந்த கட்சி இருந்தாலும் ) தமிழனுக்கு ஒருபோதும் ஆதரவாக இருக்காது. தமிழனை பலி கொடுக்க கூட தயக்காது.

      அன்புடன் எம். செய்யது
      துபாய்.

  2. புது வசந்தம் சொல்கிறார்:

    தமிழர்கள் தானே நாம், இந்தியர்கள் வேறு என்று முடிவு செய்து விட்டார்கள். கடந்த வாரம் நடந்த சம்பவத்திற்கு சும்மா ஒரு கண்டனம் சொல்லியாச்சு, பின் வாசல் வழியாக யாரையோ சமரசம் செய்ய அனுப்பியாச்சு, அவ்வளவுதான். அரசு ஆளுனர் மக்கள் பணத்தில் சுற்றி பார்த்தார் என்று வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இங்கு இவர் யார் ?, யார் பணத்தில் எந்த அதிகாரத்தில் பயணம் செய்கிறார் ?. தமிழில் ஓன்று சொல்வார்கள் “கொடுமை, கொடுமை என கோவிலுக்கு போனால் அங்கு…”, நம்ம நிலைமை இப்படியே தான் தொடரும் போல…ஆசை காட்டி மோசம்…

  3. todayandme சொல்கிறார்:

    இப்போதும் காங்கிரஸ்தான் பாஜக-வின் பினாமி என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

    ஏனென்றால்
    காங்கிரஸ் அரசைக் குறைகூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அவர்கள் செய்த குற்றங்குறைகளை நியாயப்படுத்தியும், அவற்றைவிட அதிகமாகவும், அவற்றையே சட்டத்தின்படியும் செய்ய இயலும் என்பதை நிருபித்திருக்கிறார்கள்.

    ——————
    ஆமாம், இதுகுறித்து இந்தியாவில் செய்திகள்தாம் வெளிவரவில்லை, இதற்குப்பிறகு தமிழக பாஜக எம்பி கருத்துகந்தசாமி தமிழர்களுக்கு என்ன கருத்து சொல்லப்போகிறார்?

    தமிழன் தமிழனுக்குச் செய்யும் துரோகத்தையே தாங்குகிறோம், இதைத் தாங்கமாட்டோமா. என்ன கொடுமை சரவணா இது.

  4. எழில் சொல்கிறார்:

    இதை விட கொடூரம் நவநீதம் பிள்ளையால் இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஐநா குழுவினருக்கு இந்திய அரசு விசா கொடுக்க மறுத்தது. இதற்கான காரணத்தை இன்று வரை எந்த பாஜக அரசியல்வாதியும் விளக்கவில்லை.

    சோனியா காந்தி அரசு ஆவது, (தன் கணவர் கொல்லப்பட்டதால்) தனிப்பட்ட பழி தீர்க்கும் செயலாக தமிழரை கொன்று குவித்தது என்று பார்த்தாலும், இவர்கள் ஏன் தமிழருக்கு கிடைக்க இருக்கும் சொற்ப நீதியையும் குலைக்கும் வகையில் செயல் பட வேண்டும்? ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்றுவதில் இவர்களுக்கு என்ன அக்கறை? இல்லை மேலே ஐயா சொல்வது போல் சுப்பிரமணிய சுவாமி போன்ற எந்த பதவியில் இல்லாதவர்கள் தான் இலங்கை தொடர்பான கொள்கைகளை வகுக்கிறார்களா?

  5. கொச்சின் தேவாஸ் சொல்கிறார்:

    திரு.காவேரி மைந்தன் மற்றும் இலங்கை விசயமாக பின்னுாட்டம் இடுபவர்கள் அனைவருமே இந்தியா இலங்கையிடம் எந்த விதமாக நடந்துகொள்வது என்பதைப்
    பற்றி எழுதமாட்டேன் என்கிறீர்கள்.
    இலங்கை மீது போர் தொடுக்கச் சொல்கிறீர்களா?வேறு என்னதான் யோசனை கைவசம் இருக்கிறது?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவாஸ்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் கொச்சின் தேவதாஸ்,

      நீங்கள் இந்த வலைத்தளத்திற்கு தொடர்ந்து வரக்கூடியவர் ஆயிற்றே…
      நீங்கள் இந்த கேள்வியைக் கேட்கலாமா ….?

      தயவு செய்து சிரமம் பார்க்காமல் –

      “கச்சத்தீவு – பாஜகவுக்கு ஒரு கட்டாயம்……!
      Posted on ஜூலை 4, 2014 ”

      இடுகையை ஒரு முறை படித்துப் பாருங்களேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. gopalasamy சொல்கிறார்:

    The only solution is to annexe Srilanka and make it as 30th and 31st state of India.
    Cross border terrorism is only from Pakistan; Not from any other country.
    With china one day we may come to compromise. But it is difficult to come to any terms with pakistan as the reason for hatredness is different. I hapen to see it daily.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.