துக்ளக் கார்ட்டூனும், கலைஞரும் – கட்ஜூவும் ……

பொதுவாக – எப்போதும் புத்திசாலித்தனமாகவும்,
தந்திரமாகவும் பேசுபவர் தான் கலைஞர்.
அபூர்வமாக எங்கேயாவது அசட்டுத்தனமாகப் பேசி
வழுக்கி விழுந்து விட்டாலும் கூட, எதுவும் நடவாவது போல் எழுந்து நின்று தட்டி விட்டுக்கொண்டே
ஒன்றுமே நடக்காதது போல் நகர்ந்து போகக்கூடியவர்…..

கவுண்டமணியாரின் “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” மாதிரி தான் ….

ஆனால் ஜஸ்டிஸ் கட்ஜூவிடம் மட்டும் எசகுபிசகாக
மாட்டிக்கொண்டு விழிக்கிறார்.

முதலில் ஜஸ்டிஸ் கட்ஜூ – நீதிபதி அசோக்குமார் நியமனம் விஷயமாகப் பேசும்போது “தமிழகத்தில் இன்னொரு கட்சி” என்று திமுக வை பெயர் சொல்லாமல் போனபோதே கலைஞர் கண்டு கொள்ளாமல் போயிருக்க வேண்டும்.

அநாவசியமாக “ காங்கிரஸ் போட்ட பிச்சையாக பிரஸ்
கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து கொண்டே காங்கிரஸ் கூட்டணியையே ஏசும் நன்றி கெட்ட மனிதர்”
என்று கட்ஜுவை ஏசி, வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ள ஆரம்பித்தார்.

விடுவாரா கட்ஜூ. அடுத்ததாக, பெயர் சொல்லியே கேட்டார் – “கருணாநிதி தன் சொத்து விவரங்களை வெளிவிடுவாரா ?”

அப்போதாவது கலைஞர் பேசாமல் போயிருக்க வேண்டும்.
விதி …….. யாரை விட்டது….!!

இந்திரனை விட்டதா …
சந்திரனை விட்டதா …
இப்போது கலைஞரை மட்டும் விட்டு விட …..!!!

“என் கோபாலபுரம் வீடு தான் என் ஒரே சொத்து.
அதுவும் எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு –
பொதுமக்கள் பயன்படுத்தும் இலவச மருத்துவ மனை
ஆகப்போகிறது” என்றார்.

இது குறித்து இந்த வார துக்ளக் இதழில் வெளிவந்த
ஒரு அருமையான அட்டைப்பட கார்ட்டூன் கீழே –

thuglaq -karunanihi cartoon-2

அத்தோடு நிற்காமல், அடுத்த இரண்டு மாதங்களில்
தானாகவே முடிவுக்கு வரப்போகிற
பிரஸ் கவுன்சில்
தலைவர் பதவியிலிருந்து கட்ஜூவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்கு “பெட்டிஷன்” வேறு கொடுத்தார்.

மதுவருந்திய மந்திக்கு தேளும் கொட்டினால்
எப்படி இருக்கும் …?

இப்போது ஜஸ்டிஸ் கட்ஜு அவர்கள் தன் முகநூல்
வழியாக கலைஞருக்கு கீழ்க்கண்ட   கேள்விக்கணைகளை வீசி இருக்கிறார்…..

Since Mr. Karunanidhi has chosen to
attack me
I demand that he first disclose:-

1) His entire movable and immovable assets
including bank balances, any foreign account
holdings and assets in foreign countries.

2) What are his assets before joining politics
and what is it today?

3) What are the movable and immovable assets
of each of his two wives?

4) what are the assets movable and immovable
of each of his children i.e. M.K. Muthu, M.K.
Alagiri, M.K. Stalin and Kanimozhi?

5) What are the assets of the spouses of each
of his children?

6) What are the assets movable and immovable
of each of his grandchildren?

7) What are the assets movable and immovable
of each of the maran brothers?

8) What are the movable and immovable assets
of the spouses of the maran brothers?

9) What are the assets movable and immovable
of the children of the maran brothers ?

10) In which companies do your family members,
including your wives, children, children’s
spouses, your grand children, grandchildren
spouses, own shares?

11) In which companies do the maran brothers,
their spouses and their children own shares?

12) What is the market value of the
aforementioned shares of yourself,

your family members, maran brothers and
their family members?

Let Mr. Karunanidhi first answer these
questions which I have posed to him
before making any unsolicited comments
against me.

பார்ப்போம் – அடுத்து கவுண்டமணியாரிடமிருந்து –
so sorry -கலைஞரிடமிருந்து எத்தகைய
எதிர்க்கணை கிளம்புகிறது என்று …..!!!

(இதில் ஒரே ஒரு ஆறுதல் – மு.க.முத்துவின் சொத்துக்கள்
பற்றிய விவரங்களை மட்டும் உடனே கொடுத்து விடலாம்…..!)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to துக்ளக் கார்ட்டூனும், கலைஞரும் – கட்ஜூவும் ……

 1. N.Paramasivam சொல்கிறார்:

  //– மு.க.முத்துவின் சொத்துக்கள்
  பற்றிய விவரங்களை மட்டும் உடனே கொடுத்து விடலாம்// அதுவும் முடியாத ஒன்று. இப்போது. பல வருடங்களுக்கு முன்பு தான் அவருடன் பிணக்கு. பின் இருவரும் இணைந்து……….ஆகவே தான் மு.க.முத்து பெயரையும் கட்ஜு சேர்த்துள்ளார்.

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  பாவம் ஆப்பசைத்த குரங்கின் நிலை தான் தலீவருக்கு!!!!!

 3. sakthy சொல்கிறார்:

  விதி …….. யாரை விட்டது….!!

  இந்திரனை விட்டதா …
  சந்திரனை விட்டதா …
  இப்போது கலைஞரை மட்டும் விட்டு விட …..!!!

  இப்போது தான் விதி விளையாட ஆரம்பித்ததா? உண்மைகளை வெளியிட்டு வந்த ஒரு இணையத்தளத்தை,தனக்கு எதிராக உண்மைகளை வெளியிட்டதற்காக,தன் கட்சி ஆதரவாளரான ஒரு நீதிபதியை வைத்து, அந்த இணையத்தளத்திற்கு தடை போட்டார் மாண்புமிகு தலைவர்?. வெளியே சொல்லப்படா விட்டாலும் அது உண்மையாகி, நீதி தவறி விட்டதை நீதியே சொல்லியது.
  இன்று அவருக்குத் துணை போக அந்த நீதிபதி கூட வரப் போவதில்லை.
  நீதி தர்மம் நின்று கொல்லுமா?

 4. sakthy சொல்கிறார்:

  ஐயா, ஊடகச் செய்திகளை விமர்சிக்கும் நீங்கள் நீதிமன்றத் தீர்ப்புகளையும் விமர்சிக்கலாமே. நீதி தடுமாறுகிறது-இல்லை நீதிபதிகள் தடுமாறுகிறார்கள். அப்பாவியாய் தனித்து நிற்கும் காவல்துறை அதிகாரி உமா மகேஸ்வரிக்கு நடக்கும் நீதிமறுப்புக்கு ,நீதிபதிகளின் தன்னிச்சையான செயலை விமர்சிக்கலாமே.

  • தெனாலி சொல்கிறார்:

   @sakthy
   நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டு ஜெயில் தண்டனை கொடுத்தால் நீங்க பதிவருக்கு பதிலாக “உள்ளே” இருக்க தயார்னா சொல்லுக உடனே ஆரம்பித்துவிடுவார்!

   • sakthy சொல்கிறார்:

    நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனம் செய்யுங்கள் என்ற கருத்தில் சொல்லவில்லை நண்பரே,நேரடியாகப் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையில் தான் அந்தக் கருத்து .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சக்தி,

   எனக்கு சரி – தவறு என்று நிச்சயமாகத் தெரியும் விஷயங்களைப்
   பற்றித்தான் நான் எழுதுகிறேன். அரசியலை விமரிசிப்பதற்கு
   இந்த நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

   ஆனால் – அரசியல் செய்திகளை விமரிசிப்பது போல்
   நீதிமன்ற நடவடிக்கைகளை விமரிசிக்க முடியாதே…. தீர்ப்புக்களுக்கு
   உள்நோக்கம் கண்டுபிடிப்பது – சட்டப்படி தவறு….

   நீங்கள் இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்வீர்கள் என்று
   நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • sakthy சொல்கிறார்:

    ஐயா தப்பான எண்ணத்துடன் அந்தக் கருத்தை முன் வைக்கவில்லை. பல வழக்குகளில் நீதி தடுமாறியது. அரசியல்,பதவியில் இருக்கும் ஆட்சி காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டது எனலாம். இது ஊடகங்களில் வந்த செய்தி. அந்த தாக்கமே என் கருத்தாக இருந்தது. நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்காமல்,கருத்தை வெளியிடுவதில் தப்பு இருக்கிறதா தெரியவில்லை.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் சக்தி,

     தீர்ப்பை சரி-தவறு என்று சொல்லலாம். அது தவறில்லை.
     ஆனால் அந்த தீர்ப்புக்கு உள்நோக்கம் கண்டு விமரிசிப்பது தவறு –
     அது – நீதிமன்ற அவமதிப்பாகி விடும்.
     இது மிகவும் நுணுக்கமான விஷயம்.

     சரி -நீங்கள் தனிப்பட்ட முறையில் எந்தவிதத்திலாவது
     பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா …?
     என்னிடம் சொல்லக்கூடியது என்றால் –
     just ஒரு தகவலுக்காக – தனிப்பட
     எனக்கு kavirimainthan@gmail.com என்கிற
     விலாசத்திற்கு மெயில் அனுப்புங்களேன்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • sakthy சொல்கிறார்:

      ஐயா,நன்றி.
      நீதி என்னை நடுத் தெருவில் நிறுத்தியது. ஆயிரக்கணக்கான குற்றமற்றவர்கள் தண்டனை பெற்றதும்,சிறையில் இருப்பது பற்றியும் படித்திருக்கிறேன்.தூக்கில் தொங்கியது பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். அவற்றை நம்ப முடியாது உண்மையாக இருக்குமா என்ற சந்தேகக் கேள்விதான் என்னுள் இருந்தது. அன்றுதான் அவை எல்லாம் உண்மை என உணர்ந்தேன்.
      நான் வெளி நாட்டில் இருப்பதால், சிறிது தாமதமாக ஆனால் நிச்சயமாக அறியத் தருகிறேன்.

 5. Ganpat சொல்கிறார்:

  என்னவோ கருணா வின் சொத்து விவரம் இந்தியாவில் யாருக்கும் தெரியாதது போலவும்,அதை கட்ஜு கண்டுபிடித்து கேட்பது போலவும் உடனே கருணா நடுங்கி விடபோவது போலவும்..நம்ம ஆசைக்கு ஒரு அளவே இல்லை.! 🙂

  • todayandme சொல்கிறார்:

   சொத்துவிவரம் பற்றி நான் ஒன்னும் சொல்லப்போறதில்லை. எவ்வளவு தூரம் உண்மை அறிய தினமலர் செய்திக்கு வந்த பின்னூட்டத்தில் என்னைக் கவர்ந்த ஒன்றை நண்பர்கள் பார்வைக்கு வெட்டி ஒட்டியிருக்கிறேன்.
   —————————————————————-
   http://www.dinamalar.com/news_detail.asp?id=1042891
   Thiyagarajan – Seattle,யூ.எஸ்.ஏ

   1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி. 2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி. 3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 2 கோடி. 4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு 4 கோடி. 5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு 2 கோடி. 6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு 5 கோடி. 7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு 2 கோடி. 8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி. 9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி. 10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி. 11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – 2 கோடி. 12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – 2 கோடி. 13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – 100 கோடி. 14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – 10 கோடி. 15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – 2 கோடி. 16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி” அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி. 17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – 5 கோடி. 18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – 100 கோடி. 19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி. 20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 4 கோடி. 21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 80 கோடி. 22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 120 கோடி. 23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – 108 கோடி. 24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்” மதிப்பு – 48 கோடி. 25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம். 26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி. 27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை. 28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை. 29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை 30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை 31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்” மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார். 32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை. 33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை. 34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி. 35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 60 லட்சம் 36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி. 37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – 2 கோடி. 38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – 5 கோடி. 39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – 40 லட்சம். 40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம். 41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – 1 கோடி. 42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 2 கோடி. 43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – 2 கோடி. 44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – 60 லட்சம். 45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 20 லட்சம். 46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம். 47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம். 48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – 5 கோடி. 49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம். 50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – 2.5 கோடி. 51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு – ரூ 3 கோடி. 52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – 3 கோடி. 53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 1 கோடி. 54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – 2 கோடி. 55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை. 56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்” மதிப்பு – தெரியவில்லை. 57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்” என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – 1 கோடி. 58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது. 59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்” என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – 20 கோடி. 60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 30 கோடி. 61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது. 62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 90 கோடி. 63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை 64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை தாத்தா ஓர் உத்தமர். கூடிய விரைவில் அவர் வெளியிடப்போகும் சொத்துக்கள் விவரத்தில் இன்னும் ஒரு நூறு சொத்துக்கள் பற்றி அறிந்தால் மூர்ச்சை ஆகி விடுவார் கட்ஜு

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அநியாயத்திற்கு உழைத்திருக்கிறாரே…..!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • todayandme சொல்கிறார்:

     சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
     ‘அநியாயத்திற்கு’ என்பதைச் சொன்னேன்.

    • Ganpat சொல்கிறார்:

     கா.மை..ஜி’
     இந்த பின்னூட்டத்தை போட்டவர் நியாயத்திற்கு தான் உழைத்துள்ளார்.
     இதன் நாயகன்தான் அநியாயத்திற்கு உழைத்துள்ளார்.

   • Ganpat சொல்கிறார்:

    ஏற்கனவே இதில் வரும் 56ஆவது சொத்து பொய் என தலிவர் நிரூபித்து விட்டார்.தயா சைபர் 9 மாடியாம்.

   • AaKuvan சொல்கிறார்:

    Dear TodayandMe, please send me a calculator or post the total….God Save you!

   • ரிஷி சொல்கிறார்:

    இந்த மறுமொழியைப் பார்த்துவிட்டு கருணாநிதி அவர்கள் “நம்ம பரம்பரைக்கு இம்புட்டு சொத்து இருக்கா?” என வியந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்களுக்கே எம்புட்டு கிடக்குதுன்னு கணக்கு வழக்கு தெரிந்திருக்காது. அவர்களது ஆடிட்டர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

 6. kinarruthavalai சொல்கிறார்:

  இவர்கள் பேசுவதை பார்த்து நாம்தான் பிரஷரை ஏற்றிக் கொள்கிறோம். அவர்கள் ஜாலியாக ஒன்றாக சேர்ந்து தண்ணியடித்துக் கொண்டு நம்மை பார்த்து அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் நாம கொள்ளையடிப்போம் என்று பாடிக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் கற்பனையில் பார்க்கிறேன்.

 7. gopalasamy சொல்கிறார்:

  indha selvam podume! veru selvam vendumaa?

 8. Sanmath AK சொல்கிறார்:

  Justice has not included MK.Tamilarasu and MK.Selvi…… Anyway nothing prospective for the country is going to happen…… Let us keep speaking, at some point something may hit somebody to do something for a better nation……..

 9. todayandme சொல்கிறார்:

  // விதி …….. யாரை விட்டது….!! // எல்லாத்தும் விதிவிலக்குன்னு ஒன்னு இருக்குல்ல. இல்லைன்னா ஒரு பரிகாரமா மஞ்சளுக்குப் பதிலா சிவப்பு, பச்சை, நீலத்துண்டுக்கு மாறிடலாம், கலருக்கா பஞ்சம். கொள்கை-புண்ணாக்கெல்லாம் தொண்டனுக்குத்தானே. 🙂

  காங்கிரஸ் போட்ட பிச்சையாக பிரஸ் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து கொண்டே காங்கிரஸ் கூட்டணியையே ஏசும் நன்றி கெட்ட மனிதர்” என்று கட்ஜுவை ஏசி……….
  இவர் கூட்டணியில இருந்த ஞாபகத்துல காங்கிரசுக்கு தூசிதட்டிவிடுறதா காங்கிரசுக்கு நன்றியோடு இருப்பதா நெனச்சு உளறிட்டார். (இதையே காரணமாகக் காட்டி எனக்கு அம்னீசியா! சொத்துன்னு ஒன்னு எனக்கு இருக்குதா? எனக்கு எல்லாம் மறந்துபோச்சேன்னு சொல்லி தப்பிச்சுப்பார்) 😦

  அரசியல் சாணக்கியருக்கு கவுண்டமணின்னு பட்டங்குடுக்குறதெல்லாம் ரொம்ப ஓவர். குப்புறவிழுந்தாலும் எப்படி எழுந்திருச்சு வராருன்னு பாருங்க. :-)) :-))

 10. Dr.S.Phillips சொல்கிறார்:

  Dear Kavirimainthan,

  I am unable to send this marumozhi
  to your latest blog on Jeyakanthan.
  I don’t know what the problem is.

  You are lucky to have an interesting
  past. Whenever you write your own
  experiences, we are able to travel
  alongwith you with your flash back.

  Involvement with
  Mr.Jeyakanthan at such an young age
  gives an interesting account.
  Nice article.

  Dr.S.Phillips

 11. chandraa சொல்கிறார்:

  very few know that jusice shiny is an ardent adirer of justice katj. ofcourse two g spectrum case will not deviate from its rightful path……

 12. chandraa சொல்கிறார்:

  there are lacs of undertrials suffering in jails. for want of justice. many may be innocent. as C.J OF SUPREME COURT had pointed out the courts should function throughout the year… advocates of this holy land would not allow this to happen… many ordinary offenders learn crimes in custody only. after having undergone brutal sexual assault etc. women convicts are not spared by their own genders. i have heard people from other countries whispering abou the horrible state of affairs of INDIAN JUDICIAL SYSTEM. SHAKTI JI i hope would be slightly satisfied now..

 13. T.Rajendran சொல்கிறார்:

  சிறப்பான பதிவு!

 14. chandraa சொல்கிறார்:

  thanks rajendran ji. i should have also added to tell that the indian judicial system also possesses eminent judges thoroughly honest… brilliant lawyers… lawers who has concrn for the poor…. but…….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.