டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் “மாயவலை”யிலிருந்து வெளி வந்து விட்டதா பாஜக அரசு …..?

 

prime minister modi with tna leader sambanthan

தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தன் அவர்களும், அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும்,
வெள்ளியன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களையும், பின்னர் சனிக்கிழமை –
பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் சந்தித்திருக்கிறார்கள்.

( இந்த சந்திப்புக்கு முதலில் வித்திட்டவர்கள் யார் என்பது
வெளிப்படையாகக் கூறப்படா விட்டாலும்,
பிரதமர் மோடி அவர்களின் அலுவலகத்திலிருந்தே
முதல் அசைவு துவங்கியது
என்றும், இந்த சந்திப்பு
குறித்து ராஜபக்சே அதிருப்தி அடைந்திருக்கிறார்
என்பதும் தெரிய வருகிறது…)

பிரதமர் நரேந்திர மோடி, இவர்களைச் சந்தித்தபோது,
பிரதமருடன் இந்திய அரசைச் சேர்ந்தவர்கள் யார் யார்
உடன் இருந்தனர் என்பது இங்கு மிகவும் முக்கியமான விஷயம்.

prime minister with tna leaders

பிரதமருடன் இருந்தவர்கள் – பிரதமரின் முதன்மைச் செயலர் திரு நிருபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் திருமதி சுஜாதா சிங் ( இவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது ) இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆகியோர் மட்டுமே.

சந்திப்புக்குப்பிறகு, பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் –

“தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் கூறிய பிரச்னைகளை, பிரதமர் கவனத்துடன் கேட்டார்.
ஒன்றுபட்ட இலங்கையில், சம உரிமை, கவுரவம்,
சுய மரியாதை ஆகியவற்றுடன் தமிழர்கள் வசிப்பதற்கு
அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என,
பிரதமர்கூறினார்.

இது தொடர்பாக சம்பந்தபட்ட அனைத்து
தரப்பினரும் பேச்சு நடத்தி, 13வது சட்ட திருத்தத்தில்
கூறப்பட்டுள்ளதன்படியும், அதற்கு மேலும்,
பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்
என்றும் பிரதமர் கூறினார் -“

-என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய ஒரு நிகழ்வுக்குப் பிறகு,
இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறையும்,
செயல்பாடுகளும் –
இந்த வெளிப்படையான அறிவிப்பின் தொடர்ச்சியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய அரசு – டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின்
ஆலோசனையை ஒதுக்கத் துவங்குகிறது என்பதன் அறிகுறியாக மற்றொரு முக்கிய செயல்பாடும் அமைந்திருக்கிறது.

இலங்கையில் இருக்கும் இந்திய தூதர அலுவலகத்திற்கு,
இதுவரை இல்லாத விதத்தில் – அண்மையில்,
புதிதாக, ராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த
ஒரு மூத்த ராணுவ அதிகாரி –
லெப். கேர்ணல் குரிந்தர் எஸ். கிளேயர் என்பவர் –
ஆலோசகராக அனுப்பப்பட்டுள்ளார்….

இதுவரை – முந்திய காங்கிரஸ் அரசின் இலங்கை குறித்த
அணுகுமுறையிலேயே சென்று கொண்டிருந்த
பாஜக அரசு – இப்போது புதிய பாதையில் பயணிக்கத்
துவங்கி இருப்பதாகத் தோன்றுகிறது….!!

இலங்கையின், ராஜபக்சேயின் – சுயரூபத்தை
மோடி அரசு புரிந்துக்கொள்ள ஆரம்பித்து விட்டதோ –
என்கிற மகிழ்வுணர்வை ஏற்படுத்துகின்றன
இந்த நடவடிக்கைகள்.

இருண்ட பாதையில் –
மெல்லிய ஒளிக்கீற்று தெரிவது போல் இருக்கிறது ……

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் “மாயவலை”யிலிருந்து வெளி வந்து விட்டதா பாஜக அரசு …..?

 1. sakthy சொல்கிறார்:

  இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தை ஆட்சிப் பிடியில் இருந்து அகற்ற முடியாத நிலையில் இராணுவ அச்சுறுத்தலில் இருந்தும் சித்திரவதைகளில் இருந்தும் விடுபட முடியாத நிலையில் இருக்கும் தமிழர்களுக்கு ஓரளவு விடிவாவது கிட்டும், இந்த ஒளிக்கீற்றை மகிழ்வுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
  அங்குள்ள மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு இறைவனைப் பிரார்த்திப்போம். நீதி தர்மம் ஒரு நாள் வெல்லும்.
  பொய் ஒரு நாளும் வென்றதாக வரலாறு இல்லை. சுவாமியின் போலி அரசியல் விரைவில் நிச்சயம் அம்பலமாகும்.

 2. mani Rajendran சொல்கிறார்:

  Its an excellent news! Hope Thiru Modi and his government will evaluate the past and present situation in SriLanka and make the right decision for the future of Tamils in SriLanka.

 3. Srini சொல்கிறார்:

  sir, good to see u happy. but did u check when this was happening, where was our man?

 4. reader சொல்கிறார்:

  சுவாமி/அரசாங்க அதிகாரிகள்/பிராமணர்/RSS/தமிழை-வெறுக்கும் லாபிகள் அவ்வளவு எளிதில் மோதியை சுதந்திரமாக யோசித்துச் செயல்பட விடும் என நம்பவில்லை.

  https://www.facebook.com/ajax/sharer/?s=22&appid=25554907596&p%5B0%5D=1484264832&p%5B1%5D=10202715494996879&profile_id=1484264832&share_source_type=unknown&__av=1057361634

  இப்படி ஏதாவது நடந்தால்தான் உண்டு.

 5. chandraa சொல்கிறார்:

  while paying due regards to the views of KMJI this is one of ARAI VEKKATTU VIMARSANAMS

 6. விசு சொல்கிறார்:

  ஓ – வாங்க சார்.
  மர்மமாய் வந்து மாயமாய் மறைந்த அந்த ‘அரைவேக்காடு’
  பின்னூட்ட ஆசாமி நீங்க தானா ?
  எங்கே அப்புறம் ஆளையே காணொம் ?

 7. chandraa சொல்கிறார்:

  VISU JI I AM CHANDRAA ONLY… RIGHT FROM MY BIRTH I DO NOT DISAPPEAR I DO NOT USE ANY NAME WHILE EXPRESSING MY VIEWS…. THANK YOU FOR GIVING ME AN OPPRTUNITY TO CLARIFY MY STAND.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.