மந்திரிகுமாரர்களும் – ஆசை வலைகளும் ….!!!

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து இன்னும் 100 நாட்கள்
ஆகவில்லை ….அதற்குள் சில புகார்கள் ..
.

முதலில் வந்தது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் குமாரர் பங்கஜ் சிங் பற்றியது.

வெளிவந்த தகவல் – அல்லது வதந்தி – என்ன ..?
போலீஸ் அதிகாரி ஒருவரின் பதவி உயர்வு / மாற்றல்
சம்பந்தமாக அனுகூலம் செய்து தருவதற்கு
மந்திரி மகன் – பங்கஜ் சிங் பணம் பெற்றார் என்பதே.

இதன் தொடர்பாக கிடைத்த இன்னுமொரு
பின்னணித் தகவல்-

பிரதமர் மோடி அவர்களே ராஜ்நாத் சிங் மற்றும் அவரது மகன் பங்கஜ் சிங் இருவரையுமே தன் அறைக்கு வரவழைத்து, தந்தையின் முன்னிலையிலேயே மகனைக்
கண்டித்தார் என்றும், பங்கஜ் சிங் வாங்கிய பணத்தை
உடனடியாகத் திருப்பித்தர வேண்டுமென்றும்,
இனி இத்தகைய செயல்கள் எதிலும் அவர் ஈடுபடக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினார் என்றும் தெரிய வருகிறது.

மேலும், உத்திரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில்
போட்டியிட பங்கஜ் சிங் கோரியிருந்த அனுமதியை
நிராகரித்ததாகவும் தெரிகிறது.

(வெளியில், திரு. ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடையே
பேசும்போது – பாஜக வைச் சேர்ந்த சிலரே தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினரைப் பற்றியும் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகிறார்கள் என்றும், தான் இது குறித்து
பிரதமரிடமும் முறையிட்டிருப்பதாகவும் கூறி சமாளித்தது புரிந்துக் கொள்ளக்கூடியது தான் ….)

ஒரு பின்னணியை இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். கடந்த வருடம், இதே மாதங்களில், மோடி அவர்கள் வெறும் குஜராத் முதலமைச்சர் மட்டுமே. அவரை டெல்லிக்கு
கொண்டு வர படாதபாடு பட்டவர்கள் ராஜ்நாத் சிங்கும்,
அருண் ஜெட்லியும் தான்.

மோடி அவர்களை தேர்தல் பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக நியமிப்பதற்கே தீவிர எதிர்ப்பு காட்டிய – எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் குழுவினரை மீறி, முதலில் பிரச்சார கமிட்டி தலைவராகவும், பின்னர் பாஜக வின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிப்பதற்கு ராஜ்நாத் சிங்கும், அருண் ஜெட்லியும் தான் முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தனர்.

எனவே, தனக்கு இத்தனை வேண்டப்பட்ட திரு ராஜ்நாத் சிங் அவர்களின் மகனிடமே பிரதமர் மோடி இவ்வளவு கண்டிப்பு காட்டியது பெரிய விஷயம்.
அதையும், ராஜ்நாத் சிங்கை எதிரே வைத்துக் கொண்டே
செய்தார் என்றால் – நிச்சயமாக அது வித்தியாசமான
செயல் தான்.

சென்ற வருடம் 10/06/2013 தேதியிட்ட விமரிசனம் இடுகையில் (“மோடி – வரலாமா ?”) எழுதப்பட்டிருந்த சில வரிகளை இங்கு நினைவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன் –

——-
இவர், குடும்பத்தினரையோ, உறவினர்களையோ –
அருகிலேயே அண்ட விடுவதில்லை.

அரசியல்வாதிகளில் இவர் ஒரு விசித்திரம் –
தானும் சாப்பிடுவதில்லை – மற்றவர்களையும்
சாப்பிட விடுவதில்லை !!
——————–

அரசிலும், அமைச்சரவையிலும், நம்பர்-2 வாக அறியப்பட்ட, தான் டெல்லிக்கு வர முக்கிய காரணகர்த்தாவாக இருந்த ராஜ்நாத் சிங் அவர்களிடமே – பிரதமர் மோடி இவ்விதம் நடந்து கொள்ள முடியும் என்றால் -அது நிச்சயம் வரவேற்கத் தகுந்த ஒரு செயல் தான்.

நம்பர்-2 என்று கருதப்பட்ட ராஜ்நாத் சிங் இந்த நிகழ்வு
காரணமாக கட்சியிலும், ஆட்சியிலும், வலு குறைந்தவர்
ஆகிறார்.

மோடி அவர்களை கேள்வி கேட்கக்கூடிய அல்லது
அழுத்தம் கொடுக்கக்கூடிய வேறு பலமுள்ள தலைவர்கள் யாரும் இப்போது கட்சியிலும், ஆட்சியிலும் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று …!!

கர்னாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கவுடா
அவர்களைப் பொருத்த வரையில் –

நடந்த நிகழ்ச்சிகளையும், வெளியிடப்பட்டிருக்கும்
தகவல்கள், ஆவணங்களையும் பார்க்கும்போது சில
விஷயங்கள் மிகத் தெளிவாகவே புரிகின்றன.

மே-8 அன்று தான் கவுடா அவர்களின் மகனுக்கும் –
அந்தப் பெண்ணுக்கும் முதல் அறிமுகம் ஏற்படுகிறது.
ஜூன் 6ந்தேதி இருவரும் வீட்டில் தனிமையில் சந்தித்ததாகவும், உறவு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு மாத காலத்தில், அதுவும் மந்திரி மகன் என்று தெரிந்து, பழகி, கொள்ளும் உறவு எத்தகைய உறவாக இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். அந்தப் பெண் – தொடர்புகளை நிரூபிக்க புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டதும், தொலைபேசி
உரையாடல்களை பதிவு செய்து வைத்திருப்பதும் –
அவரது நோக்கத்தையும் தெளிவு படுத்துகின்றன.

மந்திரி மகனின் முகத்தில் பொறுக்கித்தனத்தை விட,
அசட்டுத்தனம் தான் அதிகம் தெரிகிறது.
வலை வீசப்பட்டது. விளைவுகளை யோசியாமல் தவறு செய்து விட்டேன் என்று ஆரம்பத்திலேயே உண்மையைச் சொல்லி இருக்க வேண்டும்.

அந்தப் பெண்ணை தெரியவே தெரியாது – பார்த்ததே இல்லை என்று கவுடாவின் மகன் சொன்னது வடிகட்டிய முட்டாள்தனம்.
என் மகன் அப்படிச் செய்திருக்கவே மாட்டான் –
என் பெயரையும், புகழையும் கெடுக்க சதி நடக்கிறது
என்று மந்திரி கூறுவது அதைவிட மடத்தனம்.

நடந்திருப்பது உண்மை என்பது நிதரிசனமாகத் தெரிகிறது. தவறான நபருடன் தொடர்பு கொண்டதும்,
பின் விளைவுகளை யோசிக்காமல் –
சபலத்திற்கு ஆட்பட்டதும் மந்திரி மகனின் தவறு.

சட்டபூர்வமாக தொடரக்கூடிய நடவடிக்கைகளை –
அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆக வேண்டும்.

அமைச்சர் தவறு செய்யா விட்டாலும்,
மகன் செய்த தவறுக்கான தண்டனையாக அவரும் சேர்ந்து அவமானத்தை அனுபவிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

இது தொடர்பாக நடக்கும் விசாரணைகளில் அமைச்சர் கவுடா எந்த விதத்திலும் தலையிடக்கூடாது. மத்திய மந்திரி என்கிற செல்வாக்கைப் பயன்படுத்தவும் கூடாது.

ராஜ்நாத் சிங் அவர்களிடம் பிரதமர் காட்டிய கண்டிப்பும்,
உறுதியும், கவுடா விஷயத்திலும் காட்டப்படும் –
இந்த வழக்கில் தலையீடு எதுவும் இருக்காது என்கிற
நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to மந்திரிகுமாரர்களும் – ஆசை வலைகளும் ….!!!

 1. Ganpat சொல்கிறார்:

  //மந்திரி மகனின் முகத்தில் பொறுக்கித்தனத்தை விட,
  அசட்டுத்தனம் தான் அதிகம் தெரிகிறது. // ✔✔✔✔

 2. Ganpat சொல்கிறார்:

  மோடிஜி இப்போ முனைந்திருப்பது புலி ஆடு புல்லுக்கட்டு ஆகிய மூன்றையும், ஒரு சமயத்தில் ஒன்றைத்தான் எடுத்து செல்லவேண்டும் என்ற விதிக்கு உட்பட்டு, ஆற்றின் அக்கரைக்கு ஒரு படகில் எடுத்துப்போகும் முயற்சி.அவர் வெற்றி பெற்றால் நமக்கு நல்லது.

 3. chandraa சொல்கிறார்:

  judging a person from his facial expressions may not be correct k.m ji. all tricksters adopt all techniques…. I.GATE founder PANNESH MOORTHY was removed from hie previous employer//// for his alleged improper conduct…. towards his junior female staffs…..

 4. reader சொல்கிறார்:

  சரிங்க… செப்டம்பர் 20ந் தேதி அம்மாவுக்கு ஆப்பு…, மன்னிக்கவும் தீர்ப்பு வரப் போகுதே. எனி கமென்ட்ஸ்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மன்னிக்கவும் நண்பரே (ரீடர்)…

   உங்கள் கோணமும், என் பார்வையும்
   மாறுபடுவதால் – உங்கள் விருப்பத்தை என்னால்
   நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. chandraa சொல்கிறார்:

  nothing k.m.ji i have found visuji being the firstto offer remarks mostly supporting you……. hence my posting… take it easy pl.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சந்திரா,

   உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

   நண்பர் ‘விசு’வை நான் தனிப்பட அறிவேன்.
   துடிப்புமிக்க, தேசபக்தியுள்ள இளைஞர் அவர்.
   வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற
   வேட்கை உடையவர். அவர் வெற்றி பெற
   வேண்டுமென்று நான் மனதார வேண்டுகிறேன் –
   வாழ்த்துகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. T.Rajendran சொல்கிறார்:

  தாங்கள் பதிவிட்டபடி மோடி அவர்களின் நடப்பு இருக்குமானால் நாம் நம்பிக்கையின் முதல்படியினைத் தொடுகிறோம் எனக் கொள்ளலாம்!

 7. gopalasamy சொல்கிறார்:

  Almost all politicians and most (!) of the actress are in same boat.

 8. ramanans சொல்கிறார்:

  வழக்கம் போல மிக அருமையான பதிவு. ”நெருப்பில்லாமல் புகையுமா?” சொல்மொழி தான் என் நினைவுக்கு வருகிறது.

  மோடி பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தி உங்களுக்கு… ஆனால்.. நம்பினால் நம்புங்கள்… இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கேட்க, படிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது.

  சுட்டி : http://ramanans.wordpress.com/2014/08/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ரமணன்,

   படித்தேன். சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
   மறுபிறப்பு பற்றி முன்பொரு தடவை நாம்
   நிறைய எழுதியது /பேசியது நினைவில் வருகிறது.

   இருக்கும் அல்லது இருக்காது என்று நம்மால்
   நிரூபிக்க முடியாத பல விஷயங்களில்
   மறு பிறப்பு பற்றிய நம்பிக்கையும் ஒன்று.

   பொதுவாக – எனக்கு மறுபிறப்பு மீது நம்பிக்கை உண்டு.
   எதிர்வரும் தலைமுறையினர், இது குறித்து தீவிரமாக
   ஆராய நிறைய வாய்ப்புக்கள் உண்டு என்றும் நான்
   நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.