“கேடி” பிரதர்ஸ் – இது … சட்டத்தை வளைத்து, மிதித்து, துவைத்து, தொங்கப்போட்டவர்கள் – அதே சட்டத்தால் ……………..டும் படலம் ……

இருபது ஆண்டுகளுக்கு முன் கடை கடையாக வீடியோ கேஸட் விற்றவர்கள் இன்று 20,000 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகள்..!

இது எப்படி நிகழ்ந்தது …?
அவர்களது சொந்த உழைப்பையும், நேர்மையையும்,
புத்திசாலித்தனத்தையும் மட்டும் துணையாகக் கொண்டா…?

பல ஆண்டுகள் மத்திய வர்த்தக மந்திரியாக இருந்த தந்தைக்கும் – பல தடவை மாநில முதலமைச்சராக இருந்த தாத்தாவுக்கும் – இதில் எத்தனை சதவீதம் பங்கு ……?

maran-kalaignar
எல்லாருக்கும் கிடைத்து விடுமா இந்த வாய்ப்பு ….?
ஆனால் கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக்
கொண்டவர்கள் என்கிற பெருமை இவர்களையே சாரும்.

இவர்கள் இந்த அளவிற்கு முன்னேறவும்,
பணத்தை மலைபோல் குவிக்கவும்
இன்னும் துணையாக இருந்தவை யாவை ….?

ஒருவேளை இவைகளை / இவர்களைக் கேட்டால்
தெரிய வருமோ ….???

-துவக்க காலங்களில், தாத்தாவின் ஆட்சியில் – “பூமாலை” கேஸட் வாங்காததால் நீலப்படம் (blue film ) விற்றதாக வழக்கு போடப்பட்ட கேசட் கடைக்காரர்கள்……?

-ரஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பான்டர் ஒன்றை புருனே சுல்தான் தனக்கு வேண்டப்பட்ட மேக்கனம் பாட்டியா என்கிற தொழில் அதிபருக்கு பரிசாகக் கொடுக்க,
அதனைப் பயன்படுத்தத் தெரியாத பாட்டியாவிடமிருந்து சகோதரர்கள் ஏமாற்றி பிடுங்கிக் கொண்ட கதை தெரிந்தவர்கள்….?

-அறிவாலயத்தில் சன் டிவி யை குடியமர்த்தும் பொருட்டு,
ஏற்கெனவே அங்கு அலுவலகம் வைத்திருந்து,
மிரட்டி காலி செய்ய வைக்கப்பட்ட
அந்நாள் வேலூர் எம்.எல்.ஏ. காந்தியை …….?

-சென்னையில் -எஸ்.சி.வி.யை நிலைநிறுத்த போட்டியாக இருந்ததால் துரத்தியடிக்கப்பட்ட ஹாத்வே கேபிள்காரர்களை ..?

– தனக்குப் போட்டியாக செய்திப் பிரிவை துவக்கியதால்
லைசென்சு பிடுங்கப்பட்ட அந்நாள் விஜய் டிவி இயக்குநர்களை ….?

– அதே காரணத்தால் ராஜ் டிவியின் தெலுங்கு பிரிவான ‘விசா’ டிவியை (சின்ன கேடி பதவியிலிருந்தபோது )
2  ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்திருந்த
சமயத்தில் இயக்குநராக இருந்தவரை …..?

– ஆனானப்பட்ட டாட்ட நிறுவனமே, DTH பிரிவை
(டாட்டா ஸ்கை) துவங்கியபோது அவர்களுக்கு தரப்பட்ட தொல்லையை சமாளித்தவர்களை …….?

-84 எப் எம் ரேடியோக்களுக்கு விண்ணப்பித்து, அதில்
67ஐ பெற்ற மாயத்தைச் செய்ய உதவியவர்களை …..?

-‘இந்து’ செய்தித்தாளின் பங்குகளைத் தானே விற்க மறுத்தோம் – குடும்பத்து மாப்பிள்ளையாகவே வந்து விட்டால் என்று பயந்தவர்களை …..?

– தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று மொத்தம்
20 சேனல்களுக்கு மேல் பெற்ற மாயம் தெரிந்தவர்களை …..?

– தினகரன் நாளிதழ் (செய்தி அலுவலகத்தையே ..)
விற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானவர்களை ……?

– அதில் பணிபுரிய நேர்ந்த பாவத்தால் – உயிரை விட்ட
3 பேர்களின் குடும்பத்தினரை ……?

– சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தங்கள் படத்தை
விற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான
பாவப்பட்ட ஜென்மங்களான அந்த படத்தயாரிப்பாளர்களை …..?

– தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும், இவர்கள் நிறுவனத்திற்கு போட்டியாக இருந்ததால், கேபிள்கள் வெட்டுப்பட்ட அந்த அப்பாவி கேபிள் காரர்களை ….?

இன்னமும் எழுதினால் இடுகை நீண்டு விடும்.
விஷயத்திற்கு வருவோம்..

இவர்களது நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட லைசென்சை
மத்திய அரசு ரத்து செய்த காரணங்களையும், அதனைத்
தொடர்ந்து இவர்கள் கோர்ட்டுக்குப் போன போது நிகழ்ந்த
விசாரணை விவரங்களையும், தமிழ் செய்தித்தாள்கள்
முழுமையாக வெளியிடாததால், சில முக்கியமான
விஷயங்கள் மக்களிடம் போய்ச்சேரவில்லை.

எனவே – விஷயத்தை சரியான பரிமாணத்தில் புரிந்துகொள்ள வசதியாக, சில முக்கியமான செய்திகளை மட்டும் சுருக்கமாக
கீழே தருகிறேன்.

————-

கடந்த 20ந்தேதியிட்டு, 26ந்தேதியன்று, கல் கேபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ( எஸ்.சி.வி.யின் மூல நிறுவனம்) நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது.

அதில் –
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு
காரணங்களுக்காக ‘கல்’ கேபிள்ஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று தெரிவித்திருப்பதால், அவர்களது லைசென்சு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என்றும்,

15 நாட்களுக்குப் பிறகு அவர்களது கேபிள் சேவை
வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது என்கிற இந்த செய்தி அவர்களது சேனலில் “ஸ்குரொலிங்” முறையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகத் துவங்கி,
தொடர்ந்து 15 நாட்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

இதை எதிர்த்து, 27ந்தேதியே சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய கல் கேபிள்ஸ் நிறுவனம் – முக்கியமாக –
இரண்டு விஷயங்களை முன்வைத்து -உத்திரவுக்கு
நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று கோரியது.

1) மத்திய அரசு, ரத்து செய்து உத்திரவு பிறப்பிக்கும் முன்னர் உரிய முறையில் முன்னறிவிப்பு நோட்டீஸ் ஏதும் அனுப்பவில்லை
2) என்ன காரணத்துக்காக ரத்து செய்கிறோம் என்பதையும் குறிப்பிடவில்லை.

அவர்களது தரப்பில் மேலும் – “இப்படி எந்த காரணத்தையும் சொல்லாமல் உரிமத்தை ரத்து செய்தால், நாங்கள் அந்த தவறை எப்படி சரி செய்ய முடியும் அல்லது எதை வைத்து நாங்கள் தீர்வை எட்ட முடியும் ? அப்பீலுக்கு எப்படிப் போக முடியும் ? மேலும் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது ‘உரிமம் ரத்தாகி விட்டது’ என்று செய்தி போடச்சொல்கிறார்களே – அது எப்படி முடியும் ?
எனவே, கோர்ட் இந்த உத்திரவுக்கு முழுமையாகத் தடை
விதிக்க வேண்டும் என்று வாதாடப்பட்டது.

மத்திய அரசின் தரப்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர் –

தொழில்நுட்பக் காரணங்களுக்காக லைசென்சு வழங்கவில்லை என்றால் மட்டும் தான் அதற்கான காரணத்தை விவரமாகச் சொல்ல முடியும். மாறாக பாதுகாப்பு காரணங்களுக்காக என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிடுவதால் –
அதில் யாரும், எந்த விளக்கமும் கேட்க முடியாது –
என்று வாதிட்டார்.

பின்னர், அது தொடர்பான விவரங்கள் மக்கள் நலன் சார்ந்து ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதை நீதிபதி அவர்கள் பார்க்க விரும்பினால், சிறப்பு அனுமதி பெற்று தங்களுக்கு மட்டும் பிரத்யேகமாகக் காண்பிக்கிறோம். அதற்கு அனுமதி
வழங்க வேண்டும். அத்துடன் அந்த விவரங்களை
உள்துறை அமைச்சகம் எங்களுக்கு செவ்வாய்க்கிழமை
(செப்டம்பர், 2-ந்தேதி ) அனுப்பி வைப்பதாகச் சொல்லி
இருக்கிறது. எனவே செவ்வாய்க்கிழமை வரை எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் ” என்று கேட்டிருக்கின்றனர்.

அதையடுத்து, நீதிபதி அவர்கள் வழக்கை 2ந்தேதிக்கு
ஒத்தி வைத்து விட்டு, ‘உரிமம் ரத்து செய்யப்பட்ட
விவகாரத்தை செய்தியாக வெளியிட வேண்டும்’
என்கிற மத்திய அரசின் உத்திரவுக்கு மட்டும் தடை விதித்தார்.

——————-

எத்தனையோ பேரின் வீழ்ச்சியாலும்,
எத்தனையோ குடும்பங்களின் கண்ணீராலும் –
உருவாக்கப்பட்ட இந்த சாம்ராஜ்யம் தகர்க்கப்பட
யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்களே.

இல்லையேல் – வஞ்சகம், சூழ்ச்சி, அரசியல் செல்வாக்கு, லஞ்ச ஊழல் இவற்றால் பணம் சம்பாதிப்பவர்கள் தான்
வெற்றிகரமான வியாபாரிகள் என்று –
இந்த சமுதாயம் அங்கீகரிப்பது போல் ஆகி விடும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to “கேடி” பிரதர்ஸ் – இது … சட்டத்தை வளைத்து, மிதித்து, துவைத்து, தொங்கப்போட்டவர்கள் – அதே சட்டத்தால் ……………..டும் படலம் ……

 1. kinarruthavalai சொல்கிறார்:

  நீங்கள் இங்கே சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் பாதி விஷயங்கள் ஜெயலலிதா and coவையும் குறிப்பது போல உள்ளதே. வஞ்சகம், சூழ்ச்சி, அரசியல் செல்வாக்கு, லஞ்ச ஊழல் இவற்றால் பணம் சம்பாதிப்பவர்கள் தான்
  வெற்றிகரமான வியாபாரிகள் என்று –
  இந்த சமுதாயம் அங்கீகரிப்பது போல் ஆகி விடும்.
  ஆனால் இது எப்போதோ அங்கீகரிக்கப் பட்டு விட்டதே?

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  //யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்களே.//
  அரசியலுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையாளர் அனைவரும் வரவேற்க வேண்டிய உண்மை. தெய்வம் நின்று கேட்கும் என்பது உண்மை தான்.

 3. maasianna சொல்கிறார்:

  jaya tv also ?

 4. chandraa சொல்கிறார்:

  there are LOTS OF KEDI BROTHERS in tamilnadu who could expand the jewellery business… a new shop being opened every month in variousplaces. sun groups would arrangean extravagant advertisement to their picturesand run for many days… while good pictures could hardly get theatres.it was also true nithyananda was blackmailed to give ……crores… by sunt.v goondas… there are very many goondas throughout india and in tamilnadu who are noted for horrible crimes ifo……. ne begins to list the crimes many would faint and collapse…..

 5. k.goopaalan சொல்கிறார்:

  //சாம்ராஜ்யம் தகர்க்கப்பட
  யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்களே//

  நாட்டிலுள்ள ஒவ்வொரு நீதிபதியும் நமது சகாயம் போல் இருந்தால் இது கட்டாயம் சாத்தியம். தனி மனிதானாக இருந்து அண்ணனுக்கு வேட்டு வைத்தவர்.

  கோபாலன்

 6. Srini சொல்கிறார்:

  KM Sir, some more to add to the list… Spice jets and IPL team.

  Thatha.. unnaviradham iruparam… peran srilanka players thalaimayila IPL jeyipaaram…

 7. Ganpat சொல்கிறார்:

  முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறமா யோசிக்கலாம் அவரை எப்படி அழைப்பதென்று! 🙂

 8. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

 9. gopalasamy சொல்கிறார்:

  wHY NO TAMIL DAILIES AND MAGAZINES DID NOT REPORT THIS CORRECTLY?

 10. T.Rajendran சொல்கிறார்:

  பத்திரிகைகளைவிட விளக்கமானபதிவு.நன்றி!

 11. Dr k g palaniappan சொல்கிறார்:

  Most of our vernacular and English papers are utterly biased mainly for the advertisement revenue
  or political affiliation . For example The Hindu doesn’t cherish Modi sardar of Jayalalithaa,
  hence either it doesn’t!t report any good deeds from them of magnify errors disproportionately.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.