நாறுகிறது புலனாய்வு – பிரதமர் மோடி மிக அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு இடம் …..

நான் கீழே கொடுத்திருப்பது அத்தனையும் செய்திகள் –
செய்திகள் – செய்திகள் மட்டுமே….

என்னுடைய கருத்துக்கள் எதுவுமே இந்த இடுகையில்
இல்லை. எல்லாமே வெவ்வேறு இடங்களிலிருந்து
திரட்டப்பட்ட வேலியே பயிரை மேயும்
அதிர்ச்சி தரும் தகவல்களே.

டெல்லியில் –தற்போதைய புலனாய்வுத்துறை தலைவரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்திருப்பவர்கள் பட்டியல்
கிடைத்திருக்கிறது —

– மொய்ன் அக்தர் குரேஷி என்கிற meat exporter கடந்த
15 மாதங்களில் 90 தடவைகள் போய்ப் பார்த்திருக்கிறார்.

(இந்த குரேஷியின் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித்துறை ரெய்டு நிகழ்த்தியது.
வருமானத்தை மறைத்தது மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் சம்பந்தமாக இவர் மீது தீவிர விசாரணை நடந்து வருகிறது.)

– இந்த குரேஷி, சின்ஹாவிற்கு முன்னதாக புலனாய்வுத்துறை தலைவர் பதவியில் இருந்த ஏ.பி.சிங்கிற்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். ஏ.பி.சிங் தான் தற்போதைய தலைவரை குரேஷிக்கு அறிமுகம் செய்து வைத்தாராம்.

ஊழலில் தனக்கு ஒத்துழைக்கும் மூத்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலருக்கும் வெளிநாடுகளில் பணப்பரிமாற்றம்
செய்யவும், பதுக்கவும், இந்த குரேஷி தான்
முக்கிய friend, phylosopher and guide.

இந்த குரேஷி சம்பந்தமாக நடந்து வரும் விசாரணை
விவரங்களை தங்கள் இலாகாவுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வருமான வரி இலாகாவிடம் புலனாய்வுத்துறை தலைவர் அதிகாரபூர்வமாகவே கேட்டுக் கொண்டுள்ளார் …..
(எதற்காக என்று தெரிகிறதா …?)

இந்த குரேஷியின் அலுவலகம் இயங்கி வரும் இடம்
ஒரு வாடகைக்கு குடி இருக்கும் இடம்.

இந்த இடத்திற்குச் சொந்தமானவர் – ஆவணங்களின்படி – முன்னாள் புலனாய்வுத்தலைவர் ஏ.பி.சிங்கின் மாமியார்….!!!

குரேஷி – மே 2013 க்கும் டிசம்பர் 2013க்கும்
இடைப்பட்ட காலத்தில் -16 தடவைகளும்,
ஜனவரி 2014லிருந்து ஆகஸ்டு 2014க்கு
இடைப்பட்ட காலத்தில் 74 முறைகளும்
புலனாய்வுத் தலைவரின் இல்லத்திற்கு வருகை
புரிந்திருக்கிறாராம்.

-2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரிலையன்ஸ்
நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பலமுறை
புலனாய்வுத்துறை தலைவரை அவரது இல்லத்தில் சென்று பார்த்திருக்கிறாராம்.

– குரேஷியின் அலுவலகத்தில் நிகழ்ந்த வருமான வரித்துறை இலாகாவின் ரெய்டின் போது கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரின்
மூலம், புலனாய்வுத்துறை முன்னாள் தலைவர் ஏ.பி.சிங்
மற்றும் குரேஷிக்கு இடையில் உள்ள ‘நட்புறவு’
தெரிய வந்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஏ.பி.சிங்,
அவரது மனைவி, மற்றும் லண்டனில் உள்ள மகள் ஆகியோருக்கு வருமான வரி இலாகா கடந்த ஜூன் 10ந்தேதி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. விசாரணை தொடர்ந்து வருகிறது.

இதில் வெட்கப்பட வேண்டிய இன்னுமொரு விஷயம் –
வருமான வரி இலாகாவின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலனாய்வுத்துறை இயக்குனர் ஏ.பி.சிங் –


பதவி ஓய்விற்குப் பின்னர், UPSC உறுப்பினராக நியமிக்கப்பட்டு இன்னமும், இப்போதும் – அதே பதவியில் தொடர்கிறார்….

———————————————————————

இந்த இரண்டு தேசபக்தர்களின் நியமனமும்
திருமதி சோனியா காந்தி அவர்களின் பரிபாலனத்தில்,
அவரது விசேஷ பரிந்துரைகளின்படி செய்யப்பட்டதாம்.

-கீழே இருப்பவர் பெயர் திருவாளர் ஏ.பி.சிங் –
மன்மோகன் சிங் அரசில் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை கண்டுபிடிக்கும் பொறுப்பு இவரிடம் தான் கொடுக்கப்பட்டிருந்தது.

a.p.singh

-கீழே இருப்பவர் பெயர் – திருவாளர் ரஞ்சித் சின்ஹா –
2 ஜி வழக்கிலும், முக்கியமாக கேடி பிரதர்ஸ் வழக்கிலும்
தீவிரமாக, அசராமல் தொடர்ந்து ஒன்றரை வருடங்கள்
மலேசியாவில் துப்புத் துலக்கி விட்டு – கடைசியில்
ஒன்றும் கிடைக்கவில்லை என்று சொன்னவர் இவர் தான்.

Ranjit-Sinha-

இந்த தேசபக்தர்களுக்கு “உரிய” மரியாதை
உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே
நமது ஒரே ஆசை, விருப்பம், வேண்டுகோள் -எல்லாமே..!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to நாறுகிறது புலனாய்வு – பிரதமர் மோடி மிக அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு இடம் …..

 1. S.Ramachandran சொல்கிறார்:

  sudachchuda kalakkitteenga kaavirimainthan.

 2. gopalasamy சொல்கிறார்:

  Whether there is any link between mr. Ranjith sinha and Bihar fodder scandal?

 3. Ganpat சொல்கிறார்:

  Dear KA.MAI.
  I request you to send this report to PMO via the email link for whatever it is worth
  Very good report.

 4. srinivasanmurugesan சொல்கிறார்:

  மிகவும் அவசியமான பதிவு.திரு.மோடி அவர்கள் உடன் நடவடிக்கை எடுத்து இவர்களையும் இவருடன் தொடர்புடைய அனைவரையும் திகார் ஜெயிலுக்கு அனுப்புவதுடன் சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்ய வேண்டும். அப்பெழுதுதான் மீண்டும் இத் தவறுகள் செய்ய அஞ்சுவார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.