டெல்லியில் நடக்கும் சதுரங்க (வேட்டை …?) ஆட்டம் …..!!!

delhi photo

டெல்லி மாநிலத்திற்கான சட்டமன்றம் தொங்கலில்
வைக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு, புதிய தேர்தலுக்கு உத்திரவு இட வேண்டும் அல்லது இருக்கிற கட்சிகள் எதாவது ஆட்சியமைக்கும் சாத்தியக்கூறு இருக்கிறதா என்று ஆராய வேண்டும்.

இந்த நிலையில் – ஆட்சிப் பொறுப்பை ஏற்க முயற்சி
செய்யுமாறு பாஜக சட்டமன்றத் தலைவருக்கு அழைப்பு
விடுக்க, மத்திய அரசின்(ஜனாதிபதியின்) அனுமதியைக்
கோரி இருக்கிறார் லெ.கவர்னர் ஜங்.

ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் இரண்டையும் சேர்ந்த தலைவர்கள் இது ‘ஜனநாயகப் படுகொலை’ – மெஜாரிடி இல்லாத பாஜக வை ஏன் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் ..? இது குதிரை பேரத்திற்கு வழி ஏற்படுத்தும் என்று கூறி எதிர்க்கிறார்கள். அரசியல் சட்டமே தெரியாத கவர்னர் என்று ஆளாளுக்கு கவர்னரை சாடுகிறார்கள்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில், 3 காலி இடங்கள் இருப்பதால் இப்போதைய மொத்த எண்ணிக்கை -67.
எனவே 34 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர்கள் ஆட்சியை தைரியமாக அமைக்கலாம். அது இல்லாதவர்கள் – ‘தில்’ இருந்தால் “மைனாரிடி அரசு” அமைக்க முயற்சி செய்யலாம்.
(மறைந்த பிரதமர் நரசிம்ம ராவ், மத்தியிலேயே 5 ஆண்டுகள் மைனாரிடி அரசு நடத்தி “சாதனைகள்” புரிந்தது நினைவிருக்கலாம்….!).

பாஜக வுக்கு 27 (+1 சுயேச்சை) உறுப்பினர்களே இருப்பதால் – அதை அரசு அமைக்க அழைக்ககூடாது – உடனடியாக சட்டமன்ற தேர்தலுக்கு உத்திரவிட வேண்டுமென்று காட்டமாக கூறுகின்றன ‘ஆப்’ பும், காங்கிரசும்.

கொஞ்சம் யோசித்தால் – இவர்கள் இவ்வளவு கதற வேண்டிய அவசியமே இல்லை என்கிற மறைந்திருக்கும் உண்மை புலப்படும் .
28 உறுப்பினர்களையே கொண்ட பாஜக
ஆட்சியமைத்தால் தானென்ன ….?
முதல் கூட்டத்திலேயே –

சபாநாயகர் தேர்வின்போதே – ‘
ஆப்’பும், காங்கிரசும் சேர்ந்து பாஜக வுக்கு எதிராக ஓட்டளித்தால் –

தானாகவே தீர்கிறது பிரச்சினை …!
ஆட்சி கவிழ்கிறது – புதிய தேர்தல் தானாகவே வருகிறது….!!

இதை விட்டு விட்டு, கவர்னரை கன்னா பின்னாவென்று
திட்டுவதும், ஜனநாயகப் படுகொலை என்று குறை கூறுவதும் ஏன்…ஏன்….. ஏன் ….?

உண்மையான காரணம் – டெல்லி சட்டமன்றத்தில் உள்ள பாஜக, ஆப், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுமே தங்கள் நிஜத்தைக் காட்டாமல் வேடம் போடுவது தான்.

67 பேர் உள்ள சட்டமன்றத்தில், 28 பேரை மட்டும்
வைத்துக்கொண்டு எப்படி ஆட்சி அமைக்கப்போகிறோம்
என்பதை வெளிப்படையாக சொல்லாமல் –
பாஜக மற்ற கட்சிகளை ‘வெறி’யேற்றுகிறது….

உண்மையில், 3 கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்குமே புதிய தேர்தலைச் சந்திக்க விருப்பமில்லை. மீண்டும் வருவோம் என்பது நிச்சயமில்லாத சூழ்நிலையில் இருப்பதை மடத்தனமாக
விடுவதற்கு யாரும் தயாரில்லை. ஆம் ஆத்மி கட்சியும் சரி – காங்கிரஸ் கட்சியும் சரி – வெளியில் குரல் கொடுக்கின்றனவே
தவிர சட்டமன்றத்துக்குள்ளே – ஆட்சியைக் கவிழ்க்க எந்தவித முயற்சியும் எடுக்காது. தலைமை சொன்னாலும், அவற்றின் உறுப்பினர்கள் அதற்குத் தயாரில்லை. தப்பித் தவறி எதாவது ஓட்டெடுப்பு வருமானால் – ஒன்று வெளிநடப்பு செய்வார்கள்
அல்லது மட்டம் போட்டு விடுவார்கள்.

எனவே, பாஜக ‘குதிரை பேரம்’ எதுவும் செய்ய வேண்டிய
அவசியம் எதுவும் இல்லாமலே “மைனாரிடி” அரசாகவே
இப்போதைக்கு காலம் தள்ள முடியும். சில மாதங்கள்
ஆட்சியில் இருந்து, டெல்லி மக்களுக்கு ‘உருப்படியாக’ எதாவது செய்து காட்டிவிட்டு, பின்னர் தேர்தலை சந்தித்தால் ஜெயிப்பது சுலபமாக இருக்கும் என்பது பாஜக தலைமையின் எண்ணம்.

எனவே தான், எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தி “குதிரை பேரமா” அல்லது “மைனாரிடி” அரசா என்று வெளிப்படையாக எதையும் கூறாமல் – எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயார் என்று பாஜக வேடிக்கை காட்டுகிறது.

எனவே டெல்லியில் நடப்பது எதுவும்
பெரிய “போராட்டம்” அல்ல.
எந்த கட்சியும் தங்கள் உண்மை நிலையை காட்டிக்
கொள்ளாமல் ஆடும் வெறும் ஆட்டமே –
“சதுரங்கம்” ஆட்டமே….

“ஓசி” ஆட்டம் தானே – நாமும் தான்
வேடிக்கை பார்ப்போமே….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to டெல்லியில் நடக்கும் சதுரங்க (வேட்டை …?) ஆட்டம் …..!!!

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  பி.ஜே.பி. அவர்கள் உறுப்பினர்களுடன் SAD ஒரு உறுப்பினரும், சுயேச்சை ஒரு உறுப்பினரும், “ஆப்” இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு உறுப்பினரையும் சேர்த்து சிறிது துணிவுடன் உள்ளார்கள். துணிவுக்கு காரணம், மாற்றுக் கட்சி உறுப்பினர் சிலர் “நமது எஸ்.எஸ்.ராஜேந்திரன்” போன்று வாக்கெடுப்பு அன்று வயிற்றுப்போக்கு வர இருப்பதால். ஆம். சதுரங்க ஆட்டம் ஆரம்பம். ரசிப்போம்.

 2. எம்.ராஜ்குமார் சொல்கிறார்:

  நீங்கள் சொல்லுவதும் நல்ல ஐடியா தான்.
  ஓட்டெடுப்பு அறிவிக்கும்போதெல்லாம்,
  பாத்ரூமுக்கு வருகிறவர்களுக்கு “பாத்ரூம்”
  அலவன்ஸ் ஒன்றை பாத்ரூமிலேயே ஏற்பாடு
  பண்ணி விட்டால் போதும் ஏகப்பட்ட எமெலேக்கள்
  அங்கே தான் இருப்பார்கள்.

 3. S.Ramachandran சொல்கிறார்:

  -//டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய
  கேஜ்ரிவால்: குதிரை பேரம் மூலம் ஒரு எம்.எல்.ஏ-க்கு
  ரூ.20 கோடி வரை பணம் அளித்து தங்கள் கட்சியின் பலத்தை அதிகரித்துக் கொண்டால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்.//-

  “அதெப்படி கரெக்டா அமௌண்ட் சொல்றீங்க கெஜ்ரிவால் ?
  பேச்சு வார்த்தை முடிஞ்சு போச்சுதா ?”

  • nparamasivam1951 சொல்கிறார்:

   இப்போது மதிப்பு இருபது கோடியிலிருந்து நான்கு கொடியாக கெஜ்ரிவால் குறைத்துள்ள தாக பத்திரிக்கை குறிப்பு கூறுகிறது.

 4. D. Chandramouli சொல்கிறார்:

  I don’t understand why it took so many months for the Lt. Governor to decide on inviting BJP, the party that had the highest number of seats. Now, either way, BJP would reap the benefits of AAP’s immaturity while in power. I guess the only good thing that might happen in the case of re-election is that the Congress would get a severe beating, and they deserve it.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.